Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

உடல் எடை குறைப்பு - 1

Active member
Staff member
Joined
Apr 22, 2024
Messages
115
உடல் எடை குறைப்பு

உடல் எடை எல்லோருக்கும் அவரவரின் உடல் வாகு பொருத்து மாறுப்படும் ஒன்று. சிலருக்கு ஒல்லி வாகு, சிலருக்கு எடை கூடிய உடல் வாகு. எனக்கு சிறு வயதிலிருந்தே என் உயருத்திற்குக்கேற்ற உடல் வாகு தான். எல்லாம் கல்லூரி முடிக்கும் வரை. அது வரை சைகிள் ஓட்டி திட்டமாக இருந்த என் உடல், பின் வேலை கிடைக்கும் வரை 6 மாதம் வீட்டில் இருந்ததில் எடை கூடத் துவங்கியது.

திருமணம் வரையும் சில சில கிலோக்கள் கூடி 57/58 கிலோ என இருந்தேன். என் உயரமும் குறைவு (155 செண்டிமீட்டர்). அதனால் இதுவே கூடுதல் எடை தான். பின் கொரனா காலமும் வர, ஆபீஸ் செல்லுவதும் நின்று வீட்டில் இருந்தே வேலை செய்ததில் மீண்டும் கூடத் துவங்கியது. 2020 பின் மாதங்களில் 60 கிலோ வை எட்டி விட்டேன். அப்போதும் சரி போகட்டும் என விட்டு விட்டேன். சென்ற வருடம் காதில் ஒரு அறுவை சிகிச்சை முடிந்து அம்மா வீட்டில் இருந்த போது, வீட்டில் இருந்த வெயிட் மிஷினில் எடை பார்க்க அது கூறியதோ 65 கிலோ!

தூக்கிவாரிப் போடாத குறையாக மீண்டும் மீண்டும் நின்று சரிபார்க்க, மிஷின் பொய் சொல்லுமா என்ன? அதே 64/65 தான் காட்டியது. என் வாழ்க்கையில் அவ்வளவு எடை நான் எட்டியதே இல்லை! அப்போது தான் நெற்றி பொட்டில் அறைந்தது போல் உரைத்தது – இது ஆபத்தான எடை நமக்கு. இது சரிப்பட்டு வராது என நான் மேற்கொண்ட எடை குறைப்பு முயற்சிகளை தான் பகிர போகிறேன். பின்வருபவற்றை செய்து 3-4 மாதங்களில் என்னால் 7-8 கிலோ வரை எடை குறைக்க முடிந்தது!

முதலில் நான் முடிவு செய்தது தின்பண்டங்களை குறைக்க வேண்டும் என. மேலும், இஷ்டப்படி சாப்பிடும் உணவுகளின் அளவையும் குறைக்க வேண்டும் என. ஆனால், எவ்வளவு குறைக்க வேண்டும், எதை உண்ணூவதை தவிர்க்க வேண்டும் என யோசித்த போது தான், அலுவகத்தில் சில சலுகைகள்(பாயிண்ட்ஸ்) இருக்க, அதை நாம் சில செயலிகளில் உபயோகிக்கலாம் என மெயில் வர, நான் தேர்வு செய்த செயலி ஹெல்திபை மீ (Healthify me) என்ற பிரப்பலமான செயலி.

அதில் என் தற்போதைய எடை, எவ்வவளவு எடை குறைக்க வேண்டுமோ எல்லாம் குடுத்தால், ஒரு டைய்ட் சார்ட்(Diet chart) போன்று குடுக்கும். ஆனால், நான் அதை உபயோகிக்கவில்லை. என்னால் அந்த டைய்ட் சார்ட்டை எவ்வளவு நாட்கள் தொடர முடியும் என தோன்றியதே முழு காரணம் அதை தொடராமல் இருக்க.

தினமும் நாம் சாப்பிடும் உணவுகளிலேயே உடல் எடை குறைக்க வேண்டும் என விரும்பினேன்.

அதனால், நான் தினமும் சாப்பிடும் உணவுகளை அங்கே குடுத்தால் எவ்வளவு கலோரிஸ்(Calories) அதில் உள்ளது என சொல்லிவிடும். அது மிகவும் உதவியாக இருந்தது எனக்கு. ஒரு நாளைக்கு 1100 கலோரிஸ் தான் நான் எடுத்துக் கொண்டது.

இட்லி, தோசை போன்று நாம் தினமும் சாப்பிடும் அதே உணவு தான். ஆனால் அளவு குறைத்து, காலை 11 மணிக்கு எதாவது பழங்கள் உண்ணும் பழக்கத்தை கொண்டு வந்தேன். பழம் இல்லையென்றால், டீ, காபி தான். எந்த ஸ்னாக்ஸும் கிடையாது.

சாதத்தின் அளவு பெரும் பகுதி குறைத்து, வெள்ளரிக்காய் போன்று நார்ச்சத்து அதிகம் உள்ள காய்களை கூட சேர்ப்பது. மாலை தான் மிகவும் கடினம், இரண்டு பிஸ்கட்ஸ் டீ அல்லது காபி அவ்வளவு தான்.

முக்கியமாக நான் மாற்றியது இரவு உணவு சாப்பிடும் நேரத்தை. 8 மணிக்கு மேல் தான் எப்போது இரவு உணவை எடுத்துக் கொள்வது. அதை 6.30-7.30 மணிக்குள் மாற்றினேன்.

அதன்பின் மீண்டும் காலை 8 மணி அளவில் தான் காபி அருந்துவேன். நடுவே பசித்தாலும் வெறும் தண்ணீர் தான். முதலில் கஷ்டமாக இருந்தது, உறங்கும் நேரம் மீண்டும் பசிக்கத் துவங்கும். ஆனால், போகப் போகப் சரியாகியது.

மினிமம் 12 மணி நேரம் இடைவேளை விட்டேன் இரவு உணவுக்கும் காலை காபிக்கும்! அதை நீட்டிக்க முடிந்தால் மேலும் நீட்டித்தேன்.

இந்த கலோரிஸ் செக் செய்து சாப்பிட்டு, இரவு உணவை சீக்கிரம் எடுத்துக் கொண்டது நன்றாகவே வேலை செய்தது. கூடவே சிறிது உடற்பயிற்சியும் செய்ய மூன்று/நான்கு மாதத்திற்குள் 6-8 கிலோ என்னால் எளிதாக குறைக்க முடிந்தது.

நான் முழுவதுமாக வாயை கட்டி இந்த எடையை குறைத்தேன் என்றால் அது சுத்த பொய்! நானும் வாரம் ஒரு வேளை பிடித்த உணவுகளை உண்டே இது சாத்தியம் ஆயிற்று.

இந்த எடை குறைப்பை பற்றி முதல் பகுதி இப்போது முடிக்கிறேன். இந்த எடை குறைப்பை என்னால் மெயிண்டெயின் செய்ய முடிந்ததா? வேறு என்ன எல்லாம் ஒரு பெண்ணாக எனக்கு கடினமாக இருந்தது? எல்லாம் சீக்கிரமே இரண்டாம் பகுதியில் பதிவு செய்கிறேன்.

Author: Sinduja
Article Title: உடல் எடை குறைப்பு - 1
Source URL: Kathaiaruvi-https://kathaiaruvi.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

SK.

New member
Joined
May 10, 2024
Messages
4

👌
 
Top