Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

பிழைக்க தெரியாதவள்

  • Thread Author
பிழைக்க தெரியாதவள்!

தன் முன் அமர்ந்திருந்த முப்பதின் தொடக்கத்தில் இருந்த அந்த பெண்ணையும், அந்த பெண் பக்கத்தில் அமர்ந்திருந்த பத்து வயது மதிக்கத்தக்க சிறுப்பெண்ணையே சிறிது நேரம், ஆராயும் நோக்கத்துடன் பார்த்து கொண்டு இருந்த ஐம்பத்தின் முடிவில் இருந்த அந்த வழக்கறிஞர்.. சரஸ்வதி..

“உங்க கணவரிடம் இருந்து உங்களுக்கு விவாகரத்து வேண்டும் என்றால், அதற்க்கு ஒரு வலுவான காரணம் இருக்க வேண்டும்..” என்ற கேள்விக்கு,

எதிரில் அமர்ந்த பெண்ணான சங்கீதாவிடம் பதில் இல்லை.. ஏதாவது காரணம் கூறுவார் என்று சிறிது நேரம் அமைதியாக இருந்த வழக்கறிஞர் சரஸ்வதி..

பின் அவரே.. “குடிப்பழக்கம் இருக்கிறதா..?” என்று கேட்க..

உடனே சங்கீதாவிடம் இருந்து. “அய்யோ.. இல்லை.” என்ற பதில் வந்தது..

“பெண் பழக்கம்.” என்று கேட்ட கேள்விக்குமே.. சங்கீதா பதறி போய்.. தான் “இல்லை..” என்று சொன்னாள்.

அடுத்து சிறு பெண்ணை பார்த்த வாறு மெல்லிய குரலில் சங்கீதாவிடம்..”உங்க கிட்ட செக்ஸ் ரொம்ப கடினமா..” என்ற அந்த வக்கீல் அம்மாவை அந்த வார்த்தையை முடிக்க கூட விடாது.

“இல்லே மேடம்.” என்று விவாகரத்திற்க்கு காரணமாக பெண்கள் சொல்லும் எந்த ஒரு விசயமும் இல்லாது எனக்கு விவாகரத்து வேண்டும் என்று கேட்கும் சங்கீதாவிடம்..
“என்ன காரணம் என்று நீங்களே.. சொல்லிவிடுங்க..” என்று கூறி விட்டார்.
உடனே சங்கீதாவிடம் இருந்து “அவர் வேலைக்கு போனது இல்லை..” என்று சொன்ன சங்கீதாவை வக்கீலம்மா கூர்ந்து கவனித்தார்..

கழுத்தில், காதில். கையில் என்று பொன்னகையாக மின்னியது.. உடுத்தி இருந்த அந்த புடவையின் விலை அதிகம் தான்.. அதே ரகத்தில் புடவைகளை உடுத்தும் வக்கீலம்மாவுக்கு அதன் விலை தெரியும்..

உழைத்து ஒடாக தேய்ந்த உடம்பும் இல்லை.. பார்த்த உடனே வசதியாக வாழும் பெண் என்று சொல்லி விடுவார்கள்.. சங்கீதா என் பெண் என்று சொன்ன மிஷாவுமே எந்த வசதி குறைவும் இல்லாது வளமாக வளரும் பெண் போல் தான் தெரிந்தாள்..

பின்..என்று யோசிக்கும் போதே சங்கீதா தன் மீது ஆராய்ந்த வக்கீலம்மாவின் பார்வைக்கு பதிலாய்.

“எனக்கு திருமணம் முடிந்து இந்த பன்னிரெண்டு வருடத்தில், என் தேவைகள் அனைத்தும் நிறை வேற்றுவது என் மாமனார் என் மூத்தார் பணத்தில் இருந்து தான்..

சுருக்கமாக சொல்லனும் என்றால், என் தலையில் சூடும் பூவில் இருந்து, நான் மாதந்தோரம் உபயோக்கிக்கும் பேட் வரை அவங்க காசில் தான் வாங்கி கொண்டு இருக்கிறேன்.

நல்ல வசதியான வாழ்வு.. இது வரை என்னையும், என் மகளையும் சீ என்ற ஒரு வார்த்தை கூட என் மாமியார் வீட்டில் நான் கேட்டது கிடையாது.. என் கணவர் என் மீதும் என் பெண் மீதும் அவ்வளவு பாசம்.. ஆனால் எனக்கு இதையும் தான்டி என் மனது சுயமரியாதை வேண்டும் என்று கேட்குது.” என்று தன் விவாகரத்திற்க்கு உண்டான காரணமாக சங்கீதா இந்த காரணத்தை கூற.

வக்கீல் சரஸ்வதி.. சங்கீதாவிடம். “ஒரு நிமிடம்..” என்று அனுமதி வாங்கி கொண்டு தன் பேசியில் வெளி நாட்டில் படித்து கொண்டு இருக்கும் தன் மகளை அழைத்தார்.

அழைத்த அழைப்பு ஏற்க்கப்பட்டதும்..”ராகவி உன் செலவுக்கு அங்கு பார்ட்டைம் ஜாப் செய்துக்கிறேன்.. நீங்க பணம் அனுப்ப தேவையில்லை என்று சொன்னலே.”

அதற்க்கு பேசியில் அந்த பக்கம் இருந்த ராகவி.. “அது தான் வேண்டாம். நான் சம்பதிப்பது எல்லாம் உனக்கு தான் என்று பக்க பக்கமாக வசனம் பேசினிங்கலே..” என்று குறைப்பட்டு கொண்ட மகளிடம்..
“பார்ட் டைம் ஜாப் செய்..” என்று இப்போது ஒரே வார்த்தையில் பதில் அளித்து விட்டு பேசியை வைத்தவர்..

இப்போது சங்கீதாவை பார்த்து.. “ம் பைல் செய்து விடுகிறேன்.. அவர் ஒத்து கொண்டால் சுலபம்.. இல்லை என்றால், கொஞ்சம் நாள் ஆகும்..” என்று கூறியவர்.
ஜீவனம்சம். பற்றி கேட்டார் வக்கீல் .. அதற்க்கு உண்டான பதில் தெரிந்தே.. வக்கீல் நினைத்தது போல் தான்..

சங்கீதா..” வேண்டாம்..” என்று விட்டார்..
பின் உன் வாழ்க்கைக்கு என்ன செய்வாய் என்று மற்ற பெண்களாக இருந்து இருந்தால், சரஸ்வதி கேட்டு இருப்பார் தான்.. ஆனால் சங்கீதாவிடம் அதை கேட்கவில்லை..
வசதி துறந்து வெளி வருகிறாள் என்றால்,ஏதாவது சுய வேலை வைத்து இருப்பாள் என்று கணித்து இருந்தார்.. அது உண்மையே..
வக்கீல்..”இப்போ நீங்க எங்கு இருக்கிங்க..?” என்று கேட்டதற்க்கு..
“கணவன் வீட்டில் தான்.. இனி தான் நான் பேசனும்.” என்றதும்..

“நீங்க சொல்வது பார்த்தால் உங்க புகுந்த வீடு நல்ல மாதிரி என்று தான் தோனுது. பேசி அவரையும் இங்கு அழைத்து வர பாருங்க..” என்று கூறிய சரஸ்வதி..
அவரும் ஒரு பெண்ணுக்கு தாய் என்ற முறையில்..”குழந்தை..அபிப்பிராயம்.. ஏன்னா முடிவு எடுக்கும் வயது இல்லை என்றாலும், புரிந்து கொள்ளும் வயது தான்..”
தங்கள் பேச்சையே கவனித்து கொண்டு இருந்த மிஷாவை காட்டி கேட்டதற்க்கு..



சங்கீதா..“அவளுக்காகவும் தான் நான் இந்த முடிவு எடுத்தேன் மேடம்.. நீங்க சொன்னது போல அவரை அழைத்து வர பார்க்கிறேன்..” என்று மகளோடு சங்கீதா சென்று விட்டார்.

இந்த வக்கீல் தொழிலுக்கு வந்து .. அதுவும் விவாகரத்து என்று வரும் போது அதற்க்கு காரணம் பல வற்றை பார்த்து இருக்கிறார். அந்த அனுபவம் வாய்ந்த வக்கீல்..ஆனால் இந்த காரணம் புதியதாக அவருக்கு தோன்றியது.

அதையே தான் சங்கீதாவின் தாய் வீடும் கூறியது.. மகளோடு அங்கு சென்ற சங்கீதாவுக்கு எப்போதும் தாய் வீட்டில் ஏக வரவேற்ப்பு தான்..
காரணம் பல.. அதில் சிலது.. மத்தியதரம் வர்க்கத்தை சேர்ந்த அவளின் தாய் வீட்டில் , ஸ்வீட் வாங்கினால் கூட எந்த கடையில் விலை குறைவு என்று பார்த்து தான் வாங்குவார்கள்..
ஆனால் சங்கீதா தன் புகுந்த வீட்டில்.. “ நாளைக்கு நான் அம்மா வீட்டிற்க்கு செல்கிறேன்..” என்று பொதுவாக சொல்லி விட்டால், போதும்..

அன்று இரவு அவளின் மாமனாரோ.. இல்லை அவளின் மூத்தாரோ.. இல்லை இரண்டு பேருமே. தரம் வாய்ந்த கடையில் தான் இனிப்பு காரம் என்று மூன்று நான்கு வகைகள் வாங்கி வந்து தந்து விடுவார்கள்..
“அம்மா வீட்டிற்க்கு கொண்டு போம்மா..” என்று சொல்லி.. இதில் மாமியார் காஞ்சிபுரம் கோயில் சென்ற போது அப்படியே பட்டு புடவை வாங்கி வந்தது நிறைய இருக்கு என்று அதில் இருந்து அம்மாவுக்கும் அண்ணிக்கும் என்று கொடுத்து விடுவர். அதனாலேயா இல்லை தன் மீது உண்மையாக பாசம் இருக்கிறதா..? என்பது தெரியாது..

நான் அம்மா வீட்டிற்க்கு சென்றாலே.. என்னை அன்போடு தான் வரவேற்ப்பார்கள்..
அன்று வக்கீலை பார்த்து விட்டு சங்கீதா நேராக தன் தாய் வீடு தான் சென்றாள்.. எப்போதும் காரில் வந்து இறங்கும் மகள் இன்று நடந்து வந்ததை பார்த்து ஒரு வித யோசனையுடனே.
“வா கீதா.வா மிஷா.. என்று மகளையும், பேத்தியையும் அழைத்த தாய் கோமதியின் குரலில், மகிழ்ச்சியோடு, யோசனையே அதிகம் தெரிந்தது.

மதியம் சாப்பிட்ட பின், எப்போதும் தன் அறையில் ஒய்வு எடுக்கும் சங்கீதாவின் அண்ணி சரண்யா.. மாமியாரின் குரலுக்கு அறையில் இருந்து வந்து பார்த்தவளின் கண்கள் முதலில் நாத்தனாரின் இரு கைக்கு சென்று பின்..முகத்தை பார்த்து.
“வா கீதா.” என்று வர வேற்ற அண்ணியின் குரலிலுமே, அம்மாவை போலவே யோசனை தான்..

பக்கத்து தெருவில் தைய்யல் கடை வைத்திருக்கும் சங்கீதாவின் அண்ணன் முருகன் மனைவி அழைத்து உங்க தங்கை வந்து இருக்காங்க..” என்ற செய்தியில் முருகனுமே வீட்டிற்க்கு வந்தவன்.
“வாம்மா என்ன சொல்லாமல் கொல்லாமல் வந்து இருக்க..”

சங்கீதா காலையில் இருந்து வெளியில் அலைந்து கொண்டு இருந்ததால், மகளுக்கும் தனக்கும் கழிப்பறைக்கு சென்றால் தான் உண்டு என்ற நிலையில் சென்ற போது முருகனிடம் தாயும் தாரமும் சொன்ன செய்தியில் தங்கையிடம் கேட்டான்..
சங்கீதாவோ.. “நானும் பாப்பாவும் இன்னும் சாப்பிடலேண்ணா சாப்பிட்டு விட்டு சொல்றேன்..” என்றதும் தாய் கோமதி பதறி தான் போனார்..

அண்ணனும் அம்மா மனைவி இருவரையும் முறைத்து வைக்க. பின் இருப்பதை வைத்து மகள் பேத்தி பசியாறிய பின். அனைவரிடமும் சங்கீதா மெல்ல விசயத்தை கூறினாள்.
அவள் சொன்ன விசயத்தை கேட்டு ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொண்டனர்.. முருகன்.. “என்ன கீதா விளையாடுறியா..?” என்று நம்ப முடியாத பாவனை தான் அவன் முகத்திலும் குரலிலும்..
திருமணம் முடிந்து இத்தனை வருடங்களில், ஒரு நாள் கூட கணவன் வீட்டில் பிரச்சனை என்று வந்தது கிடையாது.. ஏதாவது பிரச்சனை இருந்தால் தானே சொல்ல.
அது போல் சங்கீதா கணவன் சுதாகரனும் சரி.. அவ்வளவு நல்ல மனிதன்.. மனைவி குழந்தையின் மீது உயிரே வைத்து இருக்கிறார்.

மாமியார் வீட்டில் இருந்து எடுத்து கொண்டு வா என்று சொல்லாது.. மாமியார் வீட்டிற்க்கு கொடுத்து விடும் சம்மந்தி.. இப்படி அனைத்திலுமே ஒரு குறை இல்லாத போது..
“நான் என் கணவனை விவாகரத்து செய்ய போகிறேன்..” என்று சொன்னால், தன்னை பைத்தியம் போல் தானே பார்ப்பார்கள்..
அதுவும் நான் விவாகரத்து செய்ய காரணத்தை சொன்ன போது, தன் நிலையை வக்கீல் புரிந்து கொண்டது போல் அவளின் அம்மா வீடு புரிந்து கொள்ளவில்லை.
கடைசியாக. “நானே இரண்டு பெண் பிள்ளைகளை வைத்து கஷ்டப்படுகிறேன்.. என்னை நம்பி எந்த முடிவும் எடுக்காதே..” என்று விட்டான் அண்ணன்.
அம்மாவும்.. “நான் உன் அண்ணனை சார்ந்து தான் இருக்கிறேன்..அவனை மீறி எதுவும் செய்ய முடியாது..

“நீங்கள் செய்த திருமணம்.. அதை முறித்து கொள்ள போகிறேன்.விசயம் உங்களுக்கு தெரிய வேண்டும்.. அதனால் சொல்ல வந்தேன்.. அவ்வளவு தான்.. உங்களிடம் நான் எதையும் எதிர் பார்க்கவில்லை.” என்று விட்டாள்..

உடனே..அண்ணி.. “அப்போ ஜீவானம்சாம் நிறைய வாங்க போறியா ..?”என்று கேட்டவளுக்கு. ஒன்றும் சொல்லாது தன் மகளின் கை பிடித்து பேருந்து நிலையம் வரை நடந்து வந்தவளுக்கு மூச்சு வாங்கியது..

நடை. திருமணம் முன்.. இது என்ன நடை மூன்று நான்கு கிலோ மீட்டர் கூட நடந்து சென்று இருக்கிறாள்..

திருமணத்திற்க்கு பின்.. பக்கத்து தெருவில் இருக்கும் கோயிலுக்கு போக கூட கார்.. முன் நடந்து பழகிய எனக்கே.. இப்படி என்றால், மகள்..அவளை பார்க்க. மிஷாவுக்குமே முடியவில்லை என்று அவள் முகம் சொன்னது..
ஆனால் இனி இதை பழகி கொள்ள தான் வேண்டும்.. ஆரம்பம் சிரமாக தான் இருக்கும்.. பின் பழகி விடும்..
மகளின் களைப்பை போக்க பேருந்து நிலையம் அருகில் தள்ளு வண்டியில் கரும்பு ஜூஸை வாங்கி கொடுத்தாள்..
அந்த தள்ளு வண்டியை ஒரு மாதிரி பார்த்து கொண்டே தான் மிஷா அந்த ஜூஸை வாங்கி பருக ஆரம்பித்தது.. பின் அந்த ஜூஸ் காலி ஆகும் வரை க்ளாஸை அவள் உதட்டில் இருந்து எடுக்காது பருகி முடித்து விட்டாள்..
அவர்கள் செல்ல வேண்டிய பேருந்தும் வர.. மகளோடு ஏறினாள்.. நேரம் மூன்று மணி என்பதால் கூட்டல் இல்லாது காலியாக இருக்க, ஏறுவது சிரமம் இல்லாது மகளோடு ஏறி ஜன்னல் ஒரத்தில் மகளை அமர வைத்து தானும் அமர்ந்து கொண்டதும், நடத்துனர் இவள் அருகில் வர.
அவள் போக வேண்டிய இடமான. அடையார் நிறுத்தத்திற்க்கு இரண்டு டிக்கெட் வாங்கி கொண்டவளின் மீது காற்று வீச. முகத்தில் வீழ்ந்த முடியை நகர்த்தி விட்டு ஜன்னல் வழியே பார்த்து கொண்டு வந்தவளுக்கு பழைய நியாபகங்கள்.

கல்லூரி.. அது ஒரு அழகான காலம்.. வீட்டில் எவ்வளவு பிரச்சனை இருந்தாலுமே, கல்லூரிக்குள் நுழைந்து விட்டால் போதும், அனைவரும் எனக்கு நானே ராஜா ராணி தான்..
அதுவும் இது போல் பொது பேருந்து பயணத்தின் போது ஒற்ற வயதுடைய தோழமையும் கிடைத்து விட்டால், அந்த பேருந்து பயணமும் சந்தோஷம் கொண்டாட்டம் தான்.
யார் பார்க்கிறார்கள்..? யார் பார்க்கவில்லை..? என்ற எந்த கவலையும் இல்லாத பருவம் அது… தன் கணவன் சுதாகரனை பார்க்க இந்த பேருந்து பயணம் தான் உதவியது..

உதவியது என்றால், சுதாகரன் பேருந்தில் வருவானா.? இல்லை.. அவளுக்கு தெரிந்து இது வரை பேருந்தில் அவன் ஏறி இருக்க மாட்டான்..
இந்த பேருந்தின் பயணத்தின் போது கிடைத்த தோழியின் திருமணத்திற்க்கு சென்ற போது தான் அவள் சுதாகரனை.. தவறு தவறு சுதாகரன் இவளை பார்த்தது.
அன்று அந்த திருமணத்திற்க்கு செல்ல. அம்மா அண்ணாவிடம் அனுமதி வாங்க அவள் பட்ட பாடு..
“முதலில் அவ்வளவு தூரம்.. தனியாக வயது பெண்ணை எப்படி அனுப்ப முடியாது.” என்ற அம்மா தடை செய்ய பார்க்க..
“இன்னொரு தோழியின் அம்மா வருகிறார்கள்..” என்றதும் அம்மா அமைதியாகி விட. அண்ணன்.. “நாள் முழுவதும் தைத்து கொண்டு தான் இருக்கேன்.. ஆனால் அதில் பாதி பேர் கடன் சொல்லிட்டு போயிடுறாங்க.. மொய் எழுத பணம் இல்லை..” என்று தடை செய்தார்..

இதற்க்கு சங்கீதாவிடம் மாற்று வழி இல்லை என்றாலும், அவள் அம்மாவிடம் இருந்தது. புத்தம் புதிய சில்வர் டிபன் பாக்ஸை பேன்ஸி ஸ்டோரில் கிப்ட் ராப் சுற்றி அழகாக எடுத்து வந்து தந்து விட்டார்..

அப்போது எல்லாம் புதுப்புடவை கட்டினாலே, தன்னால் கண்ணாடி முன் அதிக நேரம் நின்று விடுவாள்.. அதுவும் அவள் அண்ணன் தைத்து கொடுத்த அந்த ரவிக்கை அவளின் உடலுக்கு கச்சிதமாக இருக்க… தன்னிடம் இருந்த சின்ன சின்ன நகைகள் இரண்டை போட்டு கொண்டு, மீதியை கவரிங் அணிந்து கொண்டு தன் தோழிகயோடு திருமணத்திற்க்கு சென்று..

அங்கு வந்த மற்ற தோழிகளோடு மட்டும் அல்லாது தோழிக்கு தோழி என்ற வகையில் கூட பேசி கலாட்டா செய்து சாப்பிட்டு விட்டு வீடு வர இரவு பத்து மணி கடந்து விட்டது.

அதன் பின் ஒரு மாதம் எப்போதும் போல் தான் அவள் கல்லூரி வாழ்க்கை பேருந்து கலாட்டா. கல்லூரி மகிழ்ச்சி என்று சென்றது.. இடையில் படிப்பு முடிய இன்னும் ஒரு மாதம் தான்.. அதையுமே பேசி கொண்டு நாட்கள் சென்றது..
அன்று எப்போதும் போல் கல்லூரி முடிந்து வீட்டிற்க்கு வந்த சங்கீதாவை அவள் அன்னை கோமதி..
“சீக்கிரம் வாடி.. இன்னைக்கு என்ன இவ்வளவு லேட்..”என்று கை பிடித்து இழுத்து சென்ற அம்மாவின் பின் சென்றவள்..

ஹாலில் மாட்டி இருந்த நேரம் காட்டியில் நேரத்தை பார்த்தாள்.. அது எப்போதும் அவள் வரும் நேரத்தை விட அன்று ஐந்து நிமிடம் சீக்கிரம் தான் வந்திருந்தாள்..
பின் தான் கவனித்தாள்.. அந்த நேரம் தன் அண்ணன் வீட்டில் இருந்ததை.. அடுத்து இரண்டு தெரு தள்ளி இருக்கும் அவளின் அத்தையும், ஒரு சில உறவுகள் இருப்பதையும் பார்த்து.
அண்ணாவுக்கு பெண் பார்க்க வந்து இருக்கிறார்கள் என்று தான் முதலில் நினைத்தாள். பின் தான் அண்ணன் சொன்ன..
“இன்னும் கொஞ்ச நேரத்தில் மாப்பிள்ளை வீட்டவர்கள் வர்றாங்கலாம்.. ரெடியாகிட்டு வா..” என்று..

தந்தை இல்லாத வீடு.. அண்ணனின் வருமானத்தில் தான் குடும்பம் நடத்துவது.. அதனால் பெரும் பாலும் சங்கீதா அண்ணன் பேச்சை கேட்டு நடந்து கொள்வாள்..
அதே போல் அண்ணன் சொன்னது போல தன்னை சிங்காரித்து கொண்டாலுமே, திடிர் என்ன…? இது வரை தன் திருமண பேச்சையே வீட்டில் எடுத்தது கிடையாதே.. இருபது வயது தான்.

இன்னும் கேட்டால் அம்மா தான் படித்து வேலைக்கு போய்.. அதுல நகை சேர்த்த பின் தான் தனக்கு திருமணம் என்று அம்மா சொல்லி கேட்டு இருக்கிறாள். இப்போது என்ன திடிர் என்று திருமண பேச்சு..? ஏன்..?
பதிலாக மாப்பிள்ளை வீட்டவர்கள் வந்து விட்டார்கள் என்று இவளை அழைத்து பெண் பார்க்கும் படலம் முடிந்து.. அப்போதே தட்டை மாற்றி ஒரு சின்ன நிச்சயதார்த்தம் போலவே அன்றே அனைத்தும் முடித்த பின் தான் மாப்பிள்ளை வீட்டவர்கள் சென்றது.
மாப்பிள்ளை வீட்டவர்கள் இருந்த போது அவர்கள் சொந்தம் பேசிய பேச்சின் மூலம் சங்கீதா அறிந்து கொண்ட விசயம்..

போன மாதம் நான் சென்ற திருமணத்தில் என்னை பார்த்த சுதாகரனுக்கு என்னை மிகவும் பிடித்து போக. அவன் வீட்டில் இந்த பெண்ணை எனக்கு திருமணம் செய்து வைங்க என்று சென்னை ஐஜியாக இருக்கும் அவன் தந்தை தட்சணாமூர்த்தியிடம் சொல்ல..

அவனின் ஆசையை நிறைவேற்ற தந்தை மட்டும் அல்லாது அண்ணன் கலெக்ட்டர் செல்வரத்தினமும்..உடனே பெண்ணை பற்றி விசாரிக்கிறேன் என்று விசாரித்ததோடு.. இதோ நிச்சயமும் செய்து விட்டு சென்று விட்டனர்.
இந்த திடிர் திருமண விசயத்தில் குழப்பத்தில் இருந்த சங்கீதாவும், சுதாகரன் தன் மீது இருக்கும் விருப்பத்தை தெரிந்த பின்..
அவளுமே ஆவளோடு தன் திருமணத்தை எதிர் பார்த்தாள் தான்.. ஆனாலும் சில சமயம் அவ்வளவு பெரிய இடம். எப்படி தன்னை திருமணம் செய்ய ஒத்து கொண்டார்கள்.. ஏதாவது பிரச்சனை இருக்குமோ என்ற பயம் மனதில் இருந்தாலுமே..

திருமணம் வரை. தினம் தினம் கல்லூரி வாசலில் தனக்காக காத்து கொண்டு இருந்த சுதாகரனை பார்த்ததும்… அந்த பயம் எல்லாம் பறந்து விடும்..
திருமணம் முன்னவே கார் பயணங்கள்.. ஏகப்பட்ட கிப்ட்.சினிமா பார்க்க மால் என்று தினம் தினம் ஒவ்வொரு இடமாக அழைத்து சென்றது..

சங்கீதா முதலில் தயங்கினாலும்.. பின் சுதாகரனின் அந்த காதலில், அதுவும் தன்னை தீண்டாது பார்வையினால் மட்டுமே தன்னை தொடரும் அந்த பார்வைக்கு சங்கீதா சுதாகரனுக்கு அடிமையாகி தான் போனாள்..
திருமணம் முன்னவே இப்படி என்றால், திருமணத்திற்க்கு பின்.. பெண் கணவனிடம் மொத்தமாக வீழ்ந்து கிடந்தாள்..

பெரிய இடம் தன்னை எப்படி நடத்துவார்கள் என்று புகுந்த இடத்தை பற்றிய பயம் கூட திருமணத்திற்க்கு பின் மறைந்து போனது..
அனைத்து வேலைகளுக்கும் வேலையாட்கள். அதனால் விடியலில் எழுந்து கொள்ளும் வேலை இல்லை.. இவரின் அண்ணன் வேலைக்கு செல்வதால், அண்ணி அவர் மட்டும் காலையில் எழுந்து கொள்வார்.. அவருக்குமே எழுந்தாலும் பெரியதாக வேலை ஒன்றும் இருக்காது.
வேலையாள் செய்து வைத்ததை கணவருக்கு கொடுப்பது. வழி அனுப்பி வைப்பது.. அடுத்து நான்கு வயது பெண் குழந்தையை பள்ளிக்கு அனுப்பி வைப்பது.. அது தான்..
மாமனாருக்கு கால நேரம் தெரியாத வேலை.. அதனால் மாமியார்.. மாமனார் நேரத்தை பொறுத்து எழுந்து கொள்வார்.

சங்கீதாவுக்கு காலை எழும் வேலை எதுவும் கிடையாது.. இரவு கூடல் முடிந்து உறங்கிய பின் விடியலிலும்,, ஒரு கூடல் அறங்கேறிய பின் தான் அவள் படுக்கையை விட்டு எழுவது.
அப்போதும் கணவன்.”இப்போ நீ வெளியில் போய் என்ன செய்ய போற..?” என்று போகாது தடுத்து நிறுத்திய நாட்களும் உண்டு…
திருமண வாழ்க்கை இவ்வளவு மகிழ்ச்சி தருமா..? இல்லை நமக்கு மட்டும் இந்த அதிர்ஷ்ட்டமா..? என்று நினைத்து நினைத்து பூரித்து போகும் அளவுக்கு தான்.. அவளின் ஒரு மாதம் திருமண நாள் நிறைவு பெற்றது..
சுதாகரின் அண்ணன்.. “என்ன செலப்பரேட் இன்னைக்கு.?” என்று கேட்டதுமே.. சுதாகரன் அன்றைய நிகழ்வை சொல்ல.

“ஏன்சாய்..” என்று சொன்னதோடு அவன் கையில் கத்தையாக பணத்தையும் அள்ளி கொடுத்து விட்டு சென்ற போது தான் சங்கீதாவின் மனதில் ஒன்று தோன்றியது..
தன் கணவர் என்ன செய்கிறார்..? என்பது.. அதாவது எங்கு வேலைக்கு போகிறார் என்பது தான்..
திருமணம் முன் மாப்பிள்ளை பற்றி விசாரித்ததில் எம்.பி,ஏ படித்து இருக்கிறார்.. அவ்வளவு தான்.. வேலை பற்றி சொன்னதாக அவளுக்கு நியாபகம் கிடையாது..
இவளும் அவனில் இருந்த மயக்கத்தில், அதை பற்றி கேட்கவில்லை.. அன்று கேட்டாள்.. “நீங்க என்ன வேலை பார்க்கிறிங்க..?” என்று..

அதற்க்கு சிரித்து கொண்டே. “அது என்ன தேவைக்கு..?” என்று சொல்லி எப்போதும் போல் நன்றாக உடை அணிந்து கொண்டு செல்பவனையே அதிர்ச்சியோடு பார்த்திருந்தாள் சங்கீதா..

பின் தான் அவளுக்கு தெரிய வந்தது.. கணவன் இது வரை வேலைக்கே சென்றது கிடையாது என்று..
வயது இருபத்தி ஐந்து ஆகிறது. இருபத்திரெண்டில் படிப்பு முடிந்து விடும்.. அப்போ இந்த மூன்று ஆண்டுகளாக அவன் என்ன செய்தான்..
தினம் நண்பர்களோடு சினிமா.. சுற்றுலா.. ஏன் சில சமயம் வெளி நாட்டு பயணம் கூட செய்து உள்ளனாம்.. அது சுதாகரனே சொல்லி கேட்டது..
இதற்க்கு எல்லாம் பணம்.. அப்பா ..அண்ணன்.. தான் சம்பதிக்கிறாங்கலே.. என்று சுதாகரன் சொன்னது..மெயின் ரோட்டில் இருக்கும் கடைகளின் வாடகை.
ஒரு நாள்..”அந்த கடையில் ஒன்றை நாம எடுத்து ஏதாவது செய்யலாமே..?” இரவில் கூடல் முடிந்து கேட்ட போது..
“எனக்கு அதுல எல்லாம் இன்ரெஸ்ட் இல்ல கீது.. ஒரு நாள்..”எனக்கு தையல் ரொம்ப நல்லா தெரியும்.. நான் வேணா ஒரு கடை எடுத்து நடத்தட்டுமா..?”
“அப்பா அண்ணா எவ்வளவு உயர் பதவியில் இருக்காங்க.. நீ தையல்.. நல்லா இருக்காது கீது..” என்று சொல்லி அதற்க்கும் முட்டு கட்டை போட்டாகி விட்டது..

கணவனுக்கு எப்படியோ.. அவர் அண்ணன் அப்பா என்று வாங்கி கொள்வது.. ஆனால் இவளுக்கு. சின்ன சின்ன விசயங்கள் கூட இவளின் மனதை அவ்வளவு தைத்து விடும்..

அவள் குழந்தை உண்டாகிய போது மாதந்திர செக்கபில் இருந்து.. அவளுக்கு பிரசவம் பார்த்த செலவு கூட அவனின் அண்ணன் அப்பாவுடையது எனும் போது.. அன்றைய நாள் அவள் தாயான மகிழ்வை கூட அவளாள் முழுமையாக அனுபவிக்க முடியாமல் போய் விட்டது..
அம்மா வீட்டில் பார்க்க அவர்கள் சாதாரண மருத்துவமனையில் பார்ப்பாகள் என்று ஒத்து கொள்ளவில்லை..

பின் நடந்தது குழந்தைக்கு தேவையான ஹக்கீஸில் இருந்து விளையாட்டு சாமன் வரை மகளின் சிறு குழந்தை பருவம் சென்றது..அதுவும் ஒரு நாள் மூத்தார் பெண் ஏதோ ஒரு பொருள் வைத்திருக்க மிஷா அது வேண்டும் என்று அடம்பிடித்தாள்..
“உனக்கு வேறு வாங்கிக்கலாம் என்று சங்கீதா சொன்னாள்..
அதற்க்கு அவளின் ஒரவத்தி..”எப்படி இருந்தாலும், அதுவும் அவள் பெரியப்பா தானே வாங்கி கொண்டு வர போகிறார். இதையே இவள் வைத்து கொள்ளட்டும்.” என்று சொல்லி அவரின் மகளின் கையில் இருந்த பொருளை வாங்கி மிஷாவின் கையில் கொடுத்து விட்டார்.. அவரும் அந்த வார்த்தையை சொல்ல வேண்டும் என்று சொல்லவில்லை.. சாதாரணமாக தான் சொன்னார்..
சாதாரண பேச்சு என்றாலே நடப்பது தானே பேசுவது.. எப்போதும் சங்கீதாவை மட்டுமே காயம் படுத்தும் நிகழ்வுகள் அன்று மகளின் மனதையும் காயம் படுத்தி விட்டது போல..
ஏனோ அவ்வளவு அடம் பிடித்த மிஷா அந்த பொருளை தொடாது விட்டதோடு.. அன்றில் இருந்து அவள் விளையாட்டு பொருள் மீது கை வைத்ததே கிடையாது..
மகளின் பள்ளி படிப்பும் ..அவரின் அண்ணன் மகள் படிக்கும் பள்ளியில் தான் மிஷாவையும் சேர்த்தது. சேர்க்க சொன்னது அவரின் அண்ணன்.. பீஸ்சும் அவரே கட்டி விடுவார்..
கணவனிடம் தினம் தினம் இவள் சொல்லி பார்த்து விட்டாள்.. அதை அவன் காதில் போட்டு கொள்வதே இல்லை..

இது இல்லாது எது வாங்கினாலுமே அதாவது மாமனார் ஏதாவது வீட்டு பெண்களுக்கு வாங்கினால், மூன்றாக தான் வாங்குவார்.. அது புடவையாக இருந்தாலும் சரி.. நகையே ஆனாலும் சரி.. அதே போல் தான் மூத்தாரும்.. இவரும் அது போல் வாங்கி இருந்தால், சங்கீதா அணிந்து கொள்வதில் தயக்கம் காட்டி இருக்க மாட்டாள்.ஆனால் இங்கு அனைத்துமே ஒரு வழி பாதையாக வாங்குவதில் மட்டுமே இருக்க.

அந்த விலை உயர்ந்த புடவையாகட்டும், நகையாகட்டும் அணியும் போது ஏதோ போல் அவள் உணர்ந்ததை எல்லாம் வார்த்தைகளால் எழுதி விட முடியாது.
இருந்தும் நகைகளை அணிந்து கொள்வாள். புடவைகளை உடுத்தி கொள்வாள்.. ஏன் என்றால் அவள் வாழும் வீடு அப்படி பட்டது. வரும் உறவினர்களும் அப்படி பட்டவர்கள்.. இவர்கள் கலந்து கொள்ளும் .. திருமணம் போன்ற இடமும் அப்படி பட்டது..
அனைத்துமே பொறுத்து இந்த பன்னிரெண்டு வருடங்களாக வாழ்ந்தாள் தான் மகளுக்காக. ஆனால் அந்த மகளே.. எதுவும் கேட்காது வாங்கி கொடுத்தாலுமே வாங்காது. இருப்பவளின் நடவடிக்கையில் சங்கீதா யோசிக்க ஆரம்பித்தாள்.. மகளின் காரணம் தாய் அவளுக்கு புரிந்தது தான்.. ஏன் என்றால் அவளுமே அந்த நிலையில் தானே இருக்கிறாள்..
சென்ற மாதம் தான் பெண் பூப்பெய்தாள்.. அன்று கேட்டாள்.. இனி பெரியப்பா .” எனக்கும் சேர்த்து பேட் வாங்கி தரனும் லேம்மா..நான் வேணா முன் எல்லாம் வேஸ்ட் காட்டான் யூஸ் பண்ணுவாங்கலே அது போல செய்யட்டுமா.?” மகளின் அந்த பேச்சில் முடிவு எடுத்து விட்டாள்..
சுதாகரன் மனைவியாக.. அந்த வீட்டின் மருமகளாக அவள் தனித்து செயல் பட முடியாது.. இதோ எடுத்த முடிவை செயலாக்க லாயரை பார்த்து விட்டு வந்தாகி விட்டது.. அம்மா வீட்டிற்க்கும் தெரியப்படுத்தி விட்டது.
இனி புகுந்த வீடு.. சோர்ந்து வீடு வந்த தாயையும் மகளையும் புகுந்த வீடே எதிர் கொண்டது..

விசயம் தெரிந்து விட்டதா. அம்மா சொல்லி இருப்பார்களா. அண்ணனா ..? என்று யோசிக்க விசயம் தெரிந்தது தான் சென்று அந்த லாயரின் அசிஸ்டெண்ட் தன் மூத்தாருக்கு தெரிந்தவன்.. அவன் மூலம் வீட்டிற்க்கு விசயம் தெரிந்து விட்டதில், சங்கீதாவுக்கு சொல்லும் வேலை மிச்சம் என்பது போல் தான் நினைத்தாள்..

ஆள் ஆளுக்கு இங்கு என்ன குறை..? ஏன் இந்த முடிவு..? காரணம் சொன்னியாம் நாங்க செலவு செய்வதை சொல்லி காண்பித்து இருக்கோமா..? என்று பல கேள்விகள். ஒன்றுக்கும் சங்கீதா வாய் திறக்கவில்லை.
ஆனால் சுதாகரன் வாய் திறந்து கூறினான்.” நான் அவளுக்கு சொகுசான வாழ்க்கையை தான் கொடுத்தேன்.. சுயமரியாதையான வாழ்க்கையை கொடுக்கவில்லை.. இனி அந்த சுயமரியாதையை என்னால் மீட்டு தர முடியுமா என்று தெரியவில்லை..

இது வரை வேலைக்கு போ என்று சொல்வதை தான் நான் கேட்கவில்லை. இப்போது அவள் கேட்கும் இந்த விவாகரத்தையாவது நான் கொடுத்து விடுகிறேன்.” என்று
முடிந்தது சுதாகரன் சங்கீதாவுக்கும் உண்டான திருமண வாழ்வு ஒரு முடிவுக்கு வந்தது.. சண்டை இல்லை. கூச்சல் கிடையாது.. அவள் மீது அவன் பழி சுமத்தவில்லை.. அவன் மீது இவள் குற்றம் குறை சொல்லவில்லை.. இருந்தும் இருவருக்கும் இடையே விவாகரத்து என்று நீதிமன்றம் சொல்லி விட.
இதோ சங்கீதா அவள் திருமண உறவில் இருந்து விடுப்பட்டு.. இப்போது குரோம்பேட்டையில் பின் வீடு முன் கடை என்று வாடகை எடுத்து உள்ளாள்..

ஏன் குரோம்பேட்டை அவள் தேர்ந்தெடுத்தாள் என்றால், மாமியார் வீடும் அருகில் இல்லாது அம்மா வீடும் அருகில் இல்லாது பொதுவாக ஒரு இடம் எனும் போது குரோம்பேட்டை தான் சரியாக இருக்கும் என்று சங்கீதா முடிவு செய்ததால்..

வீடு கடை சரி.. வீட்டுக்கு வாடகை.. அந்த கடையில் என்ன செய்வாள்.. இது தானே கேள்வி.. அவள் பட்டம் பெற்று இருந்தாலும். அந்த படிப்பை வைத்து இது வரை வேலை செய்யாத காரணத்தினால், வேலை என்பது அவளுக்கு கிடைப்பது எளிதல்ல.

எங்கும் முன் அனுபவம் என்று கேட்கும் காலத்தில், அண்ணன் தையல் கடை என்பதால், தைப்பது என்பது அவளின் சிறு வயது முதலே தெரியும்.. இன்னும் கேட்டால் பெண்கள் உடை அவள் அண்ணனோடு இவள் அழகாக தைத்து கொடுப்பாள்..
அண்ணன் அவர்கள் கேட்டது செய்து கொடுப்பான்.. பெண்ணவளோ.. இந்த டிசைனுக்கு இந்த நெக் நல்லா இருக்கும்.. கழுத்து சுத்தி இந்த துணி வெட்டி தைத்தால் இன்னும் அழகாக இருக்கும் என்று இவளே பார்த்து தைத்து கொடுப்பாள்.
திருமணம் முடிந்த பின் வீட்டவர்களுக்கு அதாவது ஒரகத்தி மாமியார் தனக்கு மூத்தார் பெண் தன் பெண் என்று அழகாக தைத்து கொடுப்பாள்..

ஆரி ஒர்க் க்ளாஸ் சென்று அதையும் கற்று செய்து கொடுத்து இருக்கிறாள். அதை பார்த்து மாமியார் உறவு முறை ஒரகத்தி உறவு முறை என்று நல்லா இருக்கு. எங்களுக்கும் செய்து தர்றியாமா.?. அதற்க்கு உண்டான பணத்தை கூட கொடுத்து விடுகிறோம்.. என்று சொன்னதற்க்கு மாமியார் அதற்க்கு ஒத்து கொள்ளவில்லை..

அதனால் வீட்டவர்களுக்கு செய்து கொடுத்த ப்ளாவுஸை டிநகரில் இருக்கும் ஒரு கடையில் கொடுத்து.. “இது போல் செய்து கொடுங்க என்று ஒரு உறவு முறை கொடுக்க. அவர்கள் தன் வேலையை பார்த்து அப்படி பாராட்டினார்கலாம்..
எங்களிடம் நிறைய கஸ்ட்டமர்கள் இருக்கிறார்கள்.. எங்களுக்கு செய்து கொடுக்க முடியுமா என்று கேட்டாங்க என்று உறவு முறை சொல்ல. இதோ அந்த கைத்தொழில் தான் அவளுக்கு இன்று கை கொடுக்கிறது.. தன் தாய் வீட்டில் தனக்கு போட்ட அந்த பத்து சவரனை வைத்து தான். வீடு கடை எடுத்து அதற்க்கு தேவையான பொருட்களை வாங்கி போட்டது..

பின் அருகில் இருந்த பள்ளியில் மிஷாவை எட்டாம் வகுப்பு சேர்த்து என்று அனைத்தும் பார்த்தது.
ஆரம்பத்தில் தைய்யல் வேலை மட்டும் இல்லை.. அவளுக்கும் வளைந்து குனிந்து வேலை செய்வதே கடினமாக தான் இருந்தது.
ஒரு இரும்பையே உபயோகிக்காது வைத்து இருந்தால், துரும்பு பிடித்து விடும்.. நம் உடம்பில் இருக்கும் எலும்பு.. சதை வேலை செய்யாது திடிர் என்று அதற்க்கு வேலை கொடுத்தால் ஆரம்பத்தில் கொஞ்சம் கடினமாக தானே இருக்கும்.
அந்த கடினம் தான் தாய் மகள் இருவருக்குமே இருந்தது.. பின் போக போக வேலை மட்டும் அல்லாது அவளின் தொழில் கூட சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது..

முதலில் தயங்கி துணியை கொடுத்தவர்கள் இப்போது இவளே..
“அவசரம் என்றால் முடியாது.. இந்த ஆரி ஒர்க் வேலை வேறு இருக்கு..” என்று டிநகரில் முதலில் கேட்ட அந்த ஆரி ஒர்க் வேலையையும் செய்து கொடுப்பதால் முடியாது என்று சொன்னால் கூட..
“சரி இந்த வேலை எல்லாம் முடித்த பின்னவே தைத்து கொடுங்க. ஆனா நீங்க தான் தைக்கனும்..” என்று சொல்லி கொடுத்து விட்டு செல்பவர்கள் தான் இப்போது அதிகம்..

அதோடு டி நகரில் கமிஷனுக்கு செய்து கொடுத்து வந்த அந்த ஆரி ஒர்க் வேலையை.. இவள் செய்வதை பார்த்து தன்னிடம் துணி தைக்க கொடுக்கும் பெண்களே.
“நல்லா இருக்கே..” என்று புதிய பட்டு புடவைக்கு மட்டும் அல்லாது தங்களுடைய பழைய பட்டு புடவைகளுக்கும் ஜாக்கெட் எடுத்து தைத்து கொடுக்க சொல்ல.
இப்போது நேரிடையாக இவளே செய்வதால் வருமானம் நிறையவே வருகிறது..
இதோ தினம் காலையில் எழுந்து வீட்டு வேலைகள் செய்து பெண்ணை அனுப்பி விட்டு கடையில் உட்கார்ந்தால் என்றால் மதியம் வரை தைப்பது. பின் சாப்பிட்டு அரை மணி நேரம் ஒய்வுக்கு பின் ஆரி ஒர்க் என்று அவள் வேலை நன்றாகவே நடந்து கொண்டு இருக்கிறது.

அண்ணன் பெண் பெரிய மனிஷி ஆனதற்க்கு அண்ணன் அண்ணி கூப்பிட.மகளோடு சென்றால்.. ஒரு பட்டு புடவை தானே ஆரி ஒர்க செய்த ஜாக்கெட்.. அரை பவுனில் கம்பளை வாங்கி கொண்டு..
தன்னை நிறைய நகைகள்.. புட்டு புடவையில் பார்த்த அம்மா அண்ணன் அண்ணி மட்டும் அல்லாது வந்த உறவு முறைகள் அனைவரும் தன் இந்த சாதாரண தோற்றத்தை பார்த்து சொன்ன ஒரே வார்த்தை.
“நான் பிழைக்க தெரியாதவள் என்று.” நீங்கள் சொல்லுங்கள் நான் பிழைக்க தெரியாதவளா.?
 
Well-known member
Joined
May 11, 2024
Messages
243
ஊர் அப்படி தான் சொல்லும், கூட வாழும் போது இல்லாத சுயமரியாதை பிரிஞ்சா தான் கிடைக்குமென்றால் பிழைக்க தெரியாதவளாவே இருக்கலாம்
 
Administrator
Staff member
Joined
May 9, 2024
Messages
1,101
ஊர் அப்படி தான் சொல்லும், கூட வாழும் போது இல்லாத சுயமரியாதை பிரிஞ்சா தான் கிடைக்குமென்றால் பிழைக்க தெரியாதவளாவே இருக்கலாம்
சுயமரியாதை விட்டு வாழ்வதற்கு பிழைக்க தெரியாதவளளாகவே இருந்து விடலாம்
 
New member
Joined
Jun 2, 2024
Messages
5
ஊர் ஆயிரம் சொல்லும், நம்ம சுய மரியாதையை இழக்கும் போது வரும் வலி யாருக்கும் தெரியாது
 
Administrator
Staff member
Joined
May 9, 2024
Messages
1,101
ஊர் ஆயிரம் சொல்லும், நம்ம சுய மரியாதையை இழக்கும் போது வரும் வலி யாருக்கும் தெரியாது
உண்மை தான்
 
Top