Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Kadhalin Nyayangal -1

  • Thread Author
அத்தியாயம்….1

முகூர்த்தம் காலை ஒன்பது பத்தரை என்பதால் அர்ச்சனா விடியல் காலையில் எழ வைக்காது ஆறு மணிக்கே அவளை எழுப்பினார் தேவகி..

“பப்பூ எழுந்துக்கோ ப்யூட்டிஷன் வந்துட்டாங்க…” என்று அன்னை அழைத்ததில் தூக்க கலக்கதில் இருந்தவள்…

“ அம்மா…” என்று அழைத்து விட்டு மீண்டும் தூங்க முயன்றவளை.. “ என்னடா எழுந்துக்க… எப்போவும் நான் எழுப்பாம எழுந்துப்ப… இன்னைக்கு கல்யாணத்தை வெச்சிட்டு இப்படி தூங்கி வழியற..” என்ற அன்னையின் பேச்சில் அடித்து பிடித்து எழுந்து அமர்ந்து விட்டாள் அர்ச்சனா..

“ ஆமா..” என்பது போல் அன்னையை பார்த்தாள்.. அன்னை பக்கத்தில் நின்றுக் கொண்டு இருந்த அந்த ப்யூட்டிஷனும் அவளின் அசிஸ்டண்டும் அர்ச்சனாவின் இந்த பேச்சில் சிரித்து விட்டனர்..

அர்ச்சனா இப்போது பதிலுக்கு அவர்களை பார்த்து சிரிப்பதா…? வேண்டாமா…? “ என்று முழித்துக் கொண்டு இருந்தவள் பின் சிரித்து விட்டு..

“ அரை மணி நேரத்தில் வந்துடுறேன் …” என்று சொல்லி குளியல் அறை நோக்கி ஓடினாள்..

அவள் சொன்னது போல் அரை மணி நேரத்திற்க்குள் வந்தவளிடம்.. “ இங்கேயே பண்ணிடலாமா…?” என்று அந்த அழகு நிலைய பெண் கேட்டாள்.

“ம்..” என்று சுற்றி முற்றி பார்த்த அர்ச்சனாவுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.. இது அனைத்தும் அவளுக்கு புதியது போல் தோன்றியது..

வசதி மிகுந்த வாழ்க்கை என்பது அவளின் பன்னிரெண்டாம் வயதிலேயே ஒரு முடிவுக்கு வந்து விட்டதால், இது போல் அழகு நிலையம் என்பது எப்போவாவது.. அதாவது புருவம் திருத்தம் மட்டுமே அங்கு செல்வது..

அதுவும் தன் வீடு பக்கத்தில் இருப்பதில் செல்வாள்.... இது போல் வி.ஐ.பிக்களுக்கு மட்டுமே பிரத்தியோகமாக அழகு படுத்தும் இந்த பெண்களிடம் அவள் ..

“ இங்கு செய்…” என்று சொல்ல கூட முடியாது குழம்பி நின்றவளை காப்பாற்றும் பொருட்டு… அஷ்வத்தின் அண்ணி சுதா வந்து அர்ச்சனாவுக்கு கை கொடுத்தாள்.

அந்த கல்யாண மண்டபத்தில் பெண்ணுக்கு என்று கொடுக்கப்பட்ட அறையே மூன்று அறைகள் கொண்டது போல் இருந்தது.. முன் ஒரு சிட் அவுட் போல் அடுத்து படுக்கை அறை.. அதற்க்கு அடுத்து அந்த அறை முழுவதும் கண்ணாடி பதிப்பக்கப்பட்டது போல் ஒரு அறை..

சுதா அந்த அழகு நிலைய பெண்களிடம்.. “ என்ன புதுசா உங்களுக்கு தெரியாத.. எங்கு செய்வது என்று…?” என்று ஒரு ஆளுமையுடன் அந்த அழகு நிலைய பெண்களிடம் கேட்டு விட்டு அர்ச்சனாவிடம்..

“ நீ அங்கு போ பப்பூ.. நான் இதை எல்லாம் எடுத்துட்டு வர்றேன்..” என்று சுதா அர்ச்சனாவை கண்ணாடி பதித்த அந்த அறைக்கு அனுப்பி விட்டு, அவள் உடுத்த வேண்டிய ஆடை நகைகள் என்று அனைத்தும் எடுத்துக் கொண்டு அவளும் அந்த அறைக்கு சென்றாள்..

அந்த அழகு நிலைய பெண்களின் கை வண்ணத்தில் ஏற்கனவே பேரழகியான அர்ச்சனா இன்னும் அழகு கூட சும்மா ஜொலித்தாள்.. என்று தான் சொல்ல வேண்டும்..

அதுவும் அஷ்வத் அவளுக்கு என்று வாங்கி கொடுத்த அந்த புடவை.. அதற்க்கு தகுந்தார் போல் ஏற்ற நகைகள் .. அவ்வளவு அழகாகவும் அவளுக்கு பொருத்தமாகவும் இருந்தது..

அப்போது தான் அங்கு வந்த வைஷாலி.. “ அச்சு சும்மா கலக்குற போ.. யார் செலக்ட் செய்தது எங்க மச்சினது ஆச்சே... அவருக்கு இதில் எவ்வளவு எக்ஸ்பிரியன்ஸ் என்று அவள் அதை அஷ்வத் விளம்பரத்தில் இருப்பதால், மாடல் பெண்களுக்கு சில சமயம் அவர்களுக்கு ஏற்றது போல ..

“ இந்த புடவை கலர் இவர்களுக்கு செட்டாகல..” என்றும்.. அதே போல் அவன் மேக்கப்புக்கும் ஆலோசனை வழங்குவான் ..

ஆனால் வைஷாலியின் அந்த பேச்சு அர்ச்சனாவுக்கு வேறு மாதிரி அர்த்தத்தை கொடுத்து விட்டது.. நேற்று இரவு ஒரு மணி வரை பேசியில் அஷ்வத் பேசிக் கொண்டு இருந்தான்.

பேச்சு என்றால் காதல் பேச்சு எல்லாம் கிடையாது… “ நீ உங்க அம்மா வீட்டில் எப்படி இருந்தியோ அப்படியே இருக்கலாம்..

“ பயப்படாதே…”

“ வேலைக்கு போகனும் என்று நினைத்தால் போ…” என்று சொன்னவன் பின் ஏதோ நியாபகத்திற்க்கு வந்தது போல்..

“ நீ மேல படிக்கனும் என்று ஆசைப்பட்டாலும், படி பொம்மா.. இன்னும் உனக்கு வயசு இருக்கு…” என்று இது போலான பேச்சுக்கள் தான்..

ஆனாலும் அந்த பேச்சே அர்ச்சனாவுக்கு இது வரை இருந்த மனக்குழப்பம் கொஞ்சம் தீர்ந்தது போல் ஆனது…

இது வரை அஷ்வத் அர்ச்சனாவிடம் பேசியதிலேயே நேற்று பேசியது தான் அதிகம்... அவர்கள் வீட்டில் இருந்த அந்த ஒரு வாரமும் தினம் பேசிக்கு அழைப்பான் தான்..

“ சாப்பிட்டியா…?” என்று கேட்பான்..

அதற்க்கு அர்ச்சனா.. “ம்..” என்ற சொல்லுக்கு, அஷ்வத்திடம் இருந்து ஒரு நிமிடம் எந்த பேச்சும் வராது பின் அவனே..

“ வேறு ஏதாவது..” என்று அவன் பேசியை வைப்பது போலான பேச்சில் அர்ச்சனா..

“ ஒண்ணும் இல்ல..” என்ற வார்த்தையாடல்கள் தான் அந்த ஒரு வாரமும் நடைப்பெற்றது…

அன்று திருமணத்திற்க்கு ஜவுளி எடுக்கும் போது பெண்ணுக்கு தங்கை இருந்தால் , அதுவும் அவள் சிறிய பெண்ணாக இருந்தால், ஒரு குழந்தை என்று நினைத்து பேசுவார்களே அது போல் தான் பேசினான்..

நேற்று தான் வருங்கால தங்கள் வாழ்க்கை திருமணத்திற்க்கு பின்.. என்ற பேச்சு.. அந்தரங்கமான பேச்சுக்கள் இல்லை என்றாலும், அதுவும் தேவையான பேச்சு தானே..

அதுவும் நீண்ட நேரமான அந்த பேச்சு உரையாடலில் கொஞ்சம் கிடைத்த நிம்மதியை வைஷாலி அஷ்வத்துக்கு ஏற்கனவே பழக்கபட்டது தானே என்ற வார்த்தை அர்ச்சனாவை ஏதேதோ யோசிக்க வைத்து, இது வரை தெளிந்த முகத்துடன் இருந்தவள்… குழப்பமான மனநிலையில் திருமண மேடை நோக்கி சென்றாள்..

அதுவும் அவளின் முகத்துக்கு நேராக வந்து மோதிய கேமிராக்களின் அந்த வெளிச்சம்… அனைவரும் தன்னையே பார்த்திருப்பது என்று அனைத்தும் சேர அவள் இன்னும் இன்னும் சோர்ந்து தான் போய் விட்டாள்.

அஷ்வத்தின் பக்கத்தில் சுதா தான் அர்ச்சனாவை அமர வைத்தாள்… அஷ்வத் அர்ச்சனாவை அவள் மேடை நோக்கி வரும் போதே பார்த்துக் கொண்டு இருக்க.. அவளோ ஏன் தலை நிமிர்வேன்னா என்பது போல் தலை குனிந்து வந்தவளின் முகத்தில் காணப்பட்ட அளவுக்கு அதிகமாக அந்த கலைப்பில்..

தன் பக்கத்தில் அர்ச்சனா அமர்ந்ததும்.. அவளின் காது அருகில்.. “ சாரிடா பொம்மா நேத்து ரொம்ப நேரம் பேசினதால் லேட் நையிட் தூங்கினியா அதனால் தான் டல்லா தெரியிறியா…?…?” என்று கேட்க..

அப்போது தான் அர்ச்சனா அவனை பார்த்தாள்.. பார்த்தவளின் கண்ணுக்கு அஷ்வத்தின் அந்த தோற்றம் ஒரு வகையில் அவளை ஈர்த்தது என்று தான் சொல்ல வேண்டும்..

அந்த ஈர்ப்பில் அவனுக்கு பதில் கொடுக்காது அவனையே பார்த்திருக்க.. அஷ்வத் தான்..

“ பொம்மா.. பொம்மா…” என்ற அழைப்பில் அவனை பார்த்து… “ இந்த ட்ரஸ் உங்களுக்கு ரொம்ப நல்லா இருக்கு…” என்று முதல் முறை அர்ச்சனா தன் மனதில் தோன்றியதை அவனிடம் வெளிப்படையாக சொல்லி விட்டாள்.

ஒரு நிமிடம் அஷ்வத் அர்ச்சனா என்ன சொன்னால் என்று யோசித்து பின் புரிந்ததும் முதன் முதலாக அஷ்வத் அழகாக வெட்கப்பட்டான்..

இருந்தும் அதை மறைத்து ஒன்றும் சொல்லாது இருந்தாலுமே, மனதிற்க்குள் ஆயிரம் மின்னல் பாய்வது போல் ஒரு உணர்வு… எத்தனையோ பெண்கள் அவனிடம்..

“ அழகு.. ஹன்சம்.. யூ ஆர் ஹாட்.. என்பது போல் சொல்லி இருக்கிறார்கள்…

இவன் பார்முலாக .. “ தேங்ஸ்..” என்று சொல்லுவான்.. ஒரு சில பெண்களிடம் அதையும் சொல்ல மாட்டான்… ஆனால் முதல் முறை தன்னை அழகு என்று கூட சொல்லவில்லை.. இந்த ட்ரஸில் நீங்க அழகா இருக்கிங்க என்ற அந்த வார்த்தை அவனுக்கு அப்படி ஒரு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது…

பின் முதலில் தான் கேட்க நினைத்த… “ என்ன பொம்மா டல்லா இருக்க.. நேத்து ரொம்ப நேரம் பேசினேன்னே அதனால…” என்று கேட்டவனுக்கு ..

“ இல்லை.. காலையில் எழுந்து தலைக்கு குளித்தேன்..அது தான்..” என்று அர்ச்சனா சொன்னதுமே..

“ அதுக்கு தான் நான் இந்த முகூர்த்தம் வைக்க சொன்னேன்..” என்று சொன்னவன் பின்.. “ சரி இன்னும் கொஞ்ச நேரம் தான்… இந்த சடங்கு எல்லாம் முடிந்ததும் நம்ம வீட்டில் ரெஸ்ட் எடு.. உன்னை யாரும் டிஸ்ட்டப் பண்ணாமே நான் பார்த்துக்குறேன்..” என்று அவன் சொன்னதுமே.. அவள் தலையாட்ட.. அந்த ஆட்டலில் அவள் ஜிமிக்கியும் ஆட.. கூட இவன் மனதும் ஆடி தான் போனது..

இவை அனைத்தும் அங்கு இருக்கும் இருக்கையில் அமர்ந்து மூர்த்தி குடும்பத்தினர் பார்த்துக் கொண்டு தான் இருந்தனர்..

அதுவும் அர்ச்சனா அஸ்வத்திடம் என்னவோ சொல்ல அதை கேட்ட அஷ்வத் வெட்கப்பட அதை அர்ச்சனா பார்க்கவில்லை என்றாலுமே, முதல் வரிசையில் அமர்ந்திருந்த மூர்த்தின் குடும்பத்தினர் கண்ணுக்கு அவன் வெட்கம் நன்றாகவே தெரிந்தது..

அடுத்து அடுத்து அவர்கள் பேசிக் கொண்டே ஐய்யர் சொன்னதையும் செய்யும் போது பார்க்க அப்படி ஒரு பாந்தமாக இருந்தது…

இதை பார்த்த மற்றவர்களுக்கு எப்படி இருந்ததோ.. விஷ்வநாத மூர்த்திக்கும், சங்கரம்பாளுக்கும் மனது நிறைந்து போயிற்று… மனதார வாழ்த்தி வயிறார சாப்பிட்ட சென்றனர்..

ஒரு வாரம் கழித்து தான் ரிசப்ஷன் என்பதால் ஒரு மணிக்கே கல்யாணம் வைப்போகம் அனைத்தும் நல்ல விதமாகவே நடந்து முடிந்தது…

பெண்ணும் மாப்பிள்ளையும் முதல் மாப்பிள்ளை வீடு சென்று பின் பெண் வீடு சென்றனர்.. முறைப்படி முதல் இரவு பெண் வீட்டில் தான் நடைப்பெறும்.. ஆனால் அஷ்வத் இதில் மட்டும் சீனிவாசனிடம்..

“ எங்க வீட்டிலேயே இருக்கட்டுமே மாமா…” என்று மிக தன்மையாக தான் முதலிலேயே கேட்டு விட்டதால்,..

அனைத்தும் யோசித்து பார்த்து சீனிவாசன் .. “ சரி…” என்று ஒத்துக் கொண்டார்…

அதன் படி அஷ்வத் வீட்டில் முதல் இரவுக்கான ஏற்பாடு நடைப்பெற்றுக் கொண்டு இருக்க.. அர்ச்சனாவை அதற்க்கு தயாராக்கும் பணியில் இரு மூத்த மருமகள்களும் ஈடுப்பட்டு கொண்டு இருந்தனர்..

வைரம் பதித்த மெல்லிய நெக்லஸ் அதற்க்கு ஏற்றது போல் கம்மல் மோதிரம் வளையல் என்று அனைத்தும் அளவில் சிறியதாக இருந்தாலும், பார்க்க கண்ணை பரித்தது…

அதை பத்மஜா தன் இரு மருமகள்களிடம் கொடுத்து போட்டு விடு… “ என்று சொன்னதுமே..

வைஷாலி.. “ அது எதுக்கு நாம போடனும்… அப்புறம் அஷ்வத்துக்கு தான் வேலை அதிகம் ஆயிடும்… அவரும் எவ்வளவு தான் கழட்டுவார்…” என்ற பேச்சில் பத்மஜாவுக்கு கூச்சம் அதிகமாக..

“அய்யோ…” என்பது போல் தலையில் அடித்து கொண்டே சென்று விட்டார்..

சுதா தான்.. “ என்ன வைஷி அத்தை முன் இது போல் எல்லாம் பேசிட்டு பார்.. அத்தை ஓடி போயிட்டாங்க…” என்று அங்காலயித்திக் கொள்ள…

அதற்க்கு வைஷாலி… “ அத்தைக்கு பழைய நியாபகம் வந்து இருக்கும்.. இப்போ நேரா அவங்க நம்ம மாமாவை பார்க்க போய் இருப்பாங்க.. நீங்க வேணா போய் பாருங்க…” என்று எப்போதும் துடுக்காக பேசும் வைஷாலி தன் பேச்சை குறைக்காது பேசிக் கொண்டு இருக்க..

இதை எல்லாம் கேட்டுக் கொண்டு இருந்த அர்ச்சனாவுக்கு தான் ஒரு மாதிரியாக ஆனது.. அதுவும் வைஷாலி அவளின் பேச்சை தன்னிடம் திருப்ப அவள் இன்னும் அலண்டு தான் போய் விட்டாள்..

“ பார்த்து அச்சு… பயப்படாதே… அஷ்வத் இன்னைக்கே என்றால் நீ வேண்டாம் எல்லாம் சொல்லாதே.. இப்போ ஒரு சில பெண்கள் பழகலாம்.. ஒருத்தருக்கு ஒருத்தர் புரிந்துக் கொள்ளலாம் என்று பேசிட்டு இருக்கிறாங்க.

நீ அது போல் எல்லாம் யோசிக்காதே… மனது புரிந்து பின் உடம்பு உணர்ந்தால் என்ன.. உடம்பு உணர்ந்த பின் மனதை புரிந்தால் என்ன…?

எப்படியும் நீயும் அஷ்வத்தும் தான் வாழ்க்கை முழுவதும் ஒண்ணா இருக்க போறிங்க.. இதுல எந்த மாற்றமும் இல்லேன்னா இன்றே வாழ ஆரம்பித்து விடுவதில் என்ன தவறு இருக்கு…?” என்று வைஷாலி சொல்ல.. இந்த பேச்சுக்கு மட்டும் சுதா அவளை தடுக்காது அமைதி காத்தாள்..

அவளுக்கு அந்த எண்ணம் தான்.. அதுவும் அத்தை இந்த ஒரு வார காலமாக இதே பேச்சு தான்.. “ அது என்ன அவன் அச்சுவை எப்போ பார் சின்ன பெண் சின்ன பெண் என்று சொல்லிட்டு இருக்குறது.. இதோ அடுத்த வாரம் அவன் ரூமுக்கு அவளை அனுப்பினா தொட்டில் கட்டி தூங்க வைப்பானா…?” என்று தன் ஆதங்கத்தை அவ்வப் போது தன் இருமருகள்களிடம் கொட்டி தீர்த்துக் கொண்டு இருந்ததால், அர்ச்சனாவுக்கு இப்போது இந்த ஆலோசனை அவசியம் தான் என்று அமைதி காத்து நின்றாள்.

பாவம் அவள் வாழ ஆரம்பிக்கலாம் என்று கேட்டால்.. ஆரம்பித்து விடு என்று சொன்ன வைஷாலி.. “ நீ தூங்கும்மா… நான் லேப் டாப்பில் வேலை செய்வது உனக்கு டிஸ்டப்பா இல்லையே…” என்று பத்மஜா சொன்னது போல் தூளி கட்டி தூங்க வைக்காது தலையை தடவி கொடுத்து தூங்க சொல்லும் கணவனை இழுத்து போர்த்திக் கொள் என்று சொல்லி இருக்க வேண்டுமோ…

***************************************************************

சிறு பதிவும் தான் நாளை பெரிய பதிவாக தருகிறேன் வாசகர்களே…




















 
Member
Joined
May 11, 2024
Messages
91
அருமை 👌👌👌👌, அஷ்வத் ❤அர்ச்சனா திருமணம் அழகாக நிறைவு பெற்றது ஆனால் அஷ்வத் அம்மா சொன்னது போல் அவளை தூங்கு என்று சொல்வதற்கு முன் அவளிடம் பேசி இருக்கலாம் இனி 🤔🤔🤔🌺🌺🌺
 
Administrator
Staff member
Joined
May 9, 2024
Messages
689
அருமை 👌👌👌👌, அஷ்வத் ❤அர்ச்சனா திருமணம் அழகாக நிறைவு பெற்றது ஆனால் அஷ்வத் அம்மா சொன்னது போல் அவளை தூங்கு என்று சொல்வதற்கு முன் அவளிடம் பேசி இருக்கலாம் இனி 🤔🤔🤔🌺🌺🌺
நன்றி பா தொடர்ந்து படித்து கருத்துகள் சொல்லவும்
 
Top