Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Kadhalin Nyayangal -11

  • Thread Author
அத்தியாயம்….11

இது வரையில் தன் மனதில் அழுத்திக் கொண்டு இருந்த பாரத்தை அஷ்வத் யாரிடம் கூறியது கிடையாது… அதாவது தன் பாரத்தை தானே சுமந்து சுமந்து அதன் அழுத்தம் அவனை பாடாய் படுத்திக் கொண்டு இருந்தது…

பத்து வருடம் நீண்ட பத்து வருடம் தனக்குள் … “எப்படி அப்பாவே அப்படி நினைக்கலாம்” என்று நினைத்தாலே அவனுக்கு அப்படி இருக்கும்…

அப்பாவின் பேச்சையே தாங்க முடியாது அந்த காவல் நிலையத்தை விட்டு வெளி வந்துவனுக்கு, அங்கு தன் அன்னை இருப்பதை பார்த்து கண்கள் கரித்துக் கொண்டு வந்தன..

யார் சொன்னது.. ஆண்கள் அழக்கூடாது..அதுவும் வீரம் உள்ள ஆண் அழக்கூடாது என்று.. ஏன் வீரனுக்கு மனது கிடையாதா…? அதில் வருத்தம் வராதா.. .? அந்த வருத்தம் அளவுக்கு மீறினால் கண்களில் தான் கண்ணீர் வராதா…?

வரும்… கஷ்டத்துக்கு ஏழை பணக்காரன் என்ற பேதம் கிடையாது.. கண்ணீருக்கும் கோழை..வீரன் என்று தெரியாது.. என்ன ஒன்று கோழை அனைவரின் முன்னும் தன் பலவீனத்தை காட்டி விடுவான்..

வீரன் காட்ட வேண்டிய இடத்தில் காட்டப்பட வேண்டிய இடத்தில் காட்டுவான்.. அஷ்வத் கோழை கிடையாது… அதனால் தந்தையின் பேச்சை கேட்டு அவரிடம் அடுத்து பேசாது கோபமாக வெளி வந்தவனுக்கு, தன் அன்னையை பார்த்ததும் தன்னால் கண்ணீர் வந்த்து..

“மாம்…” என்று அழைத்துக் கொண்டே அருகில் சென்றவனின் காதில் நெருப்பு துண்டாய்… “நீ எப்படிடா என் வயித்துல வந்து பிறந்த…? இவனுங்களை வளர்த்தது போல தானேடா உன்னையும் ஒழுக்காம வளர்த்தேன்.. உன் புத்தி ஏன்டா இப்படி போயிடுச்சி…” என்ற தாயின் பேச்சில் வந்த கண்ணீர் தன்னால் நின்று விட்டது..

அதாவது ஒருவரின் கண்ணீர் ஆறுதல் பேச்சால் மட்டும் நிற்க்காது.. அதற்க்கு நேர் மாறான பேச்சால், மனது இன்னும் ரணப்படுத்தினாலும் நிற்க்கும் என்று அஷ்வத் அன்று அனுபவ ரீதியாக உணர்ந்தான் என்று சொல்லலாம்…

ஆறுதல் தேடிய அன்னையையும் ஒரு அன்னிய பார்வை பார்த்து விட்டு, கிடைத்த காரை பிடித்து வந்து இறங்கிய இடம் தான் டெல்லி..

அவர்களுக்கு அங்கும் ஒரு பங்களா உண்டு… அவர்களை தான் துறந்தான்.. அவர்களின் பணத்தையோ சொத்தையோ துறக்கவில்லை..

அதை பற்றி தந்தை கேட்ட போது.. “இது பரம்பரை சொத்து…” என்று ஒரே வார்த்தையில் முடித்தான்.

“ எங்க அப்பா என் கிட்ட கொடுக்கும் போது இவ்வளவு கிடையாது..” என்று வீர ராகவன் சொன்னதற்க்கு..

“ என் கிட்ட கொடுத்து பாருங்க.. நீங்க முப்பது வருடம் பெருக்கியதை நான் மூன்றே வருட்த்தில் பெருக்கி காட்டுக்கிறேன்.” என்று சொன்னவனின் பேச்சையே கெட்டியாக பிடித்துக் கொண்ட வீர ராகவன்..

“ நான் என்ன வேண்டாம் என்றா சொல்றேன்.. இப்போவே சென்னை வா… உன் கிட்ட பொறுப்பை ஒப்படைத்து விடுகிறேன்.” என்று வீர ராகவன் டெல்லி வந்த போது தந்தை, மகன் ஒரு ஓட்டலில் சந்தித்துக் கொண்ட போது பேசியது இது..

ஆம் அவர்களின் சந்திப்பு எப்போதும் இது போல் பொது வெளியில் மட்டும் தான் நடக்கும்.. அதே போல் டெல்லி வந்த வீர ராகவன்..

“ அஷ்வத் நான் உன் கிட்ட பேசனும்..” என்று தந்தை மகனிடம் முன் அனுமதி கேட்டது காலையில்.. மகனோ தன்னை பார்க்க நேரம் கொடுத்தது மாலை ஐந்து மணி அளவில்…

“******* ஒட்டலில் ஐந்து மணிக்கு பார்க்கலாம்.” என்று சொல்லி விட்டு, அஷ்வத் பேசியை அணைத்தும் வீர ராகவன் அந்த பேசியையே பார்த்து இருந்தார்.

இது அந்த சம்பவம் நடந்து இரண்டு வருடம் கடந்த நிலையில்..

அப்போது மாஸ்ட்டர் டிகிரி படித்து முடித்து இருந்தான்.. டெல்லியிலேயே… தொழில் பற்றி பேச தான் நினைத்தார்.. இதை வைத்து தன் மகனை சென்னைக்கு இழுத்து விட திட்டம் தீட்டி இருந்தார் வீர ராகவன்..

சொன்ன நேரத்துக்கு அஷ்வத் வந்து விட்டான்.. வீர ராகவரோ சொன்ன நேரத்திற்க்கு முன் வந்து மகனுக்காக காத்துக் கொண்டு இருக்க..

தந்தையை பார்த்த வாறே அவர் முன் இருக்கையில் அமர்ந்த அஷ்வத்.. என்ன ஏது என்று கேட்காது அவரையே தான் பார்த்துக் கொண்டு இருந்தான்.. அவரே முதலில் பேசட்டும் என்று…

வீர ராகவன் வாய் திறவாது இருக்க எழ பார்த்தவனை கை பிடித்து தடுத்து நிறுத்தியவர்..

“படிப்பு தான் முடிச்சிட்டலே.. அப்புறம் என்ன இங்கு வேலை..?” என்று வீர ராகவன் கேட்டதற்க்கு..

“அது தான் சொல்லிட்டிங்களே.. அப்புறம் என்ன வேலை என்று.. இனி எனக்கு இங்கு தான் வேலை…”

“எங்கு வேலைக்கு போக போற…?”

“நான் வேலைக்கு போக போறேன்னு உங்க கிட்ட நான் சொல்லவே இல்லையே..?” என்று சொன்ன அஷ்வத்..

“ஓ போனவன் போனவன் தான். இருப்பதை நம்ம மத்த பசங்களுக்கு கொடுத்துடலாம் என்று ஏதாவது திட்டம் இருக்கா…?” என்ற அவன் கேள்விக்கு..

வீர ராகவன் பதில் அளிக்காது முறைத்து பார்த்தவர் பின்..

“அப்பா அம்மா வேண்டாம்.. அவங்க சொத்து மட்டும் வேண்டுமோ..?” என்ற வீர ராகவன் பேச்சின் தொடர்ச்சி தான் இந்த சொத்து பரம்பரை சொத்து என்று அஷ்வத்தை சொல்ல வைத்த்து..

வீர ராகவரோ இதை வைத்தே தன் மகனை தன்னிடம் அழைத்துக் கொள்ளலாம் என்று அவர் நினைக்க.. அவனோ.. வெட்டியது என்றால் கூட ஒரு சமயம் துளிர் விடலாம். இது எரிந்தது என்று நினைத்தவன்..

“ நான் தொழில் செய்ய போறேன்.. அதுக்கு இவ்வளவு பணம் வேண்டும்…” என்று கேட்க எல்லாம் இல்லை ..கொடுத்து தான் ஆக வேண்டும் என்று திட்ட வட்டமாக சொல்லி விட்டான்..

அவரும் கொடுத்து விட்டார்.. ஏன் என்றால் அஷ்வத் சொன்னது போல பரம்பரை சொத்து.. பேரனுக்கு பங்கு உண்டு..அதிலும் ஒரு சில சொத்துக்கள் இந்த இந்த தொழில் இந்த பேரனுக்கு என்று வீர ராகவனின் தந்தை உயிலே எழுதி விட்ட பின் ..இவர் பேச என்ன இருக்கிறது..

அஷ்வத் கேட்ட பணத்தை கொடுத்து விட்டார் தான்.. ஆனால் அவன் தொடங்கிய தொழிலை பார்த்து.. “அவனுக்கு ஏத்தது போல பார்த்துக்கிட்டான் பார்த்தியா…?” என்று தான் மனைவி மீது பாய்ந்தார்..

அஷ்வத் சொன்னது போல் அவர் முப்பது ஆண்டுகளில் வளர்ந்த வளர்ச்சியை அவன் மூன்றே ஆண்டுகளில் எட்டி விட்டான்..

தன் தந்தையின் தொழிலையும் அவன் விட்டு வைக்க வில்லை.. அதையும் அவன் தன் மேற்பார்வையின் கீழ் தான் பார்த்துக் கொண்டான்.

அனைத்தும் சரியாக இருக்க.. சரிந்தது அவன் மனதோடு அவனின் வாழ்க்கையும் தான்.. தாஷாவிடம் தன்னை மட்டும் பகிர்ந்தவன் முதன் முதலில் தன் மனதையும் பகிர்ந்தான்..

பின் அவனே.. “நீயும் நினைக்கலாம் தாஷ்.. அந்த ப்ரீத்திக்கு ஓகே சொல்லி இருந்தால் நல்லா இருந்து இருக்கும் என்று…” என்று அஷ்வத் கேட்டதற்க்கு,

இல்லை என்பது போல் தலையாட்டிய தாஷா … “ நீ அந்த பெண்ணுக்கு ஓகே சொல்லி இருந்தா தான் நீ ஒரு முட்டாள் அஷ்…” என்று சொல்லிய தாஷா பின் ஏதோ நினைத்தவளாய்..

“காமம் அழகு பார்த்து வர்றது.. அழகா இருக்கிறவங்கல பார்த்தா அந்த எண்ணம் மட்டும் தான் வருமான்னு நீ கேட்கலாம்.. அப்படின்னும் நான் சொல்ல மாட்டேன்.

நான் சொல்வது என் அனுபவத்தை வைத்து தானே இருக்கும்..

சரி நான் சாதரணமா ஒரு பையன் அழகா இருக்கும் பெண்ணை பார்த்தா பார்க்க தோனும்… அழகா இருக்கும் பெண்ணை எல்லோரும் லவ் பண்றாங்களா…? “ என்று கேட்டவள்..

பின் அவளே.. “ கிடையாது தானே…?” என்று சொன்னவள் பின்…

“ ஒரு சில கணவன் மனைவியை பார்த்து சொல்லுவாங்க… அவங்க சரியான ஜோடி கிடையாது… அந்த பெண் எவ்வளவு அழகா இருக்காள்.. அந்த பெண்ணுக்கு அவன் ஏத்தவன் கிடையாது.. என்றும்..

ஒரு சில ஜோடியை பார்த்து பையன் அழகா இருக்கான்.. பெண் என்ன இப்படி..? இதில் பெண் அழகில் கம்மியாகவும், ஆண் கொஞ்சமே அதிகம் ஆகிட்டா போதும் அந்த ஜோடியை தான் வெச்சி செய்வாங்க…

ஒரு சில ஜோடி மட்டும் தான் சரியான மேச் என்று சொல்வாங்க.. ஆனா அவங்களில் சிலர் வாழ்க்கையில் தோத்து விவாகரத்து வரை போவதும்..

சரியான ஜோடி இல்லை என்று சொன்னவர்கள் கடைசி வரை மனம் பொருந்தி வாழ்ந்தவர்கள் தான் அதிகம் அஷ்.. காதல்.. அழகு.. வசதி.. சாதி எல்லம் பார்த்து வராது … அப்படி வந்தால் அது காதலே இல்லை அஷ்..

நட்பை தந்த உன்னிடம் அவள் காதலை எதிர் பார்த்ததே தப்பு… ஒரு சிலரிடம் நட்பு மட்டுமே தோன்றும்.. ஒரு சிலரிடம்…” அடுத்து வார்த்தை பேசாது படுக்கையை காட்டி.

“இது மட்டும் தான் தோன்றும்… என் மனசுல அவள் மீது காதல் இல்லை.. இல்லை என்று சொல்லிட்ட அவ்வளவு தான்.. ஆனால் அடுத்து நடந்தது தான்…” என்று சொல்லி அஷ்வத்தின் தோளை பற்றியவளின் கை பற்றிய அஷ்வத்..

“நீ ரொம்ப ரொம்ப நல்ல பெண் தாஷ்.. நிஜமா எனக்கு உன்னை கல்யாணம் செய்துக்கனும் என்று தோனல… நான் என்ன செய்ய…?” என்று அஷ்வத்தின் கேள்வியில்..

“அத அப்படியே விடு அஷ்...வேண்டாம் .. இதில் உன் மீது தப்பு எதுவும் கிடையாது… “ என்று சொன்ன தாஷா..

பின் சிரிப்புடன்.. “ ஒரு பெண்ணை பார்த்து நாள் உனக்கே தோன்றும் அஷ்.. தோன்றும் கண்டிப்பா தோன்றும்.. என்ற அவளின் அந்த வார்த்தை கூடிய விரைவில் பலிக்க போகிறது என்று தெரியாது தான் சொன்னவள் அவனை அணைத்து விடுவித்து..
“ நாளை சென்னை போகிறேன் அஷ்.. நீயும் வர்றியா…?” என்று தாஷாவின் கேள்விக்கு..
“கண்டிப்பா…” என்று சொல்லி சிரித்தவனின் முகத்தில் பழைய சோகம் மறைந்து ஒரு வெளிச்சம் வந்து போயின..
“ தாஷா சென்னை வந்துட்டாங்க மனோஜ் சார்.” என்று அந்த விளம்பர கம்பெனியின் முதலாலாளி அழைத்து சொல்லவும்..

மனோஜிடம் இருந்து.. “ம்.” என்ற பதில் மட்டுமே வந்தன.

அந்த விளம்பர கம்பெனியின் முதலாளியோ.. “அவங்க தான் வேண்டும் என்று அப்படி அடம் பிடிச்சி பணத்தை தண்ணீரா செலவழிச்சார்.. இப்போ தாஷா மேடம் வந்துட்டாங்கன்னு சொன்னா.. ஒரு மகிழ்ச்சி இல்லை..” என்று நினைத்த அந்த முதலாளிக்கு என்ன தெரியும்..

காலையில் எழுந்ததுமே பார்த்ததே அஷ்வத்தும் தாஷாவும் கை கோர்த்து விமான நிலையத்தில் இருந்து வெளி வந்த புகைப்படத்தை தான் செய்தி தாளில் பார்த்தது என்றும்…

பார்த்ததும் அவனுக்கு அப்படி பற்றிக் கொண்டு வந்தன.. அப்படி என்ன இருக்கு அவன் கிட்ட.. அதுவும் பெண்கள் தானே அவன் மீது விழும் அளவுக்கு, என்று நினைத்துக் கொண்டே செய்தி தாளில் இருந்த புகைப்படத்தை தான் பார்த்தானே தவிர.. அதில் இடம் பெற்ற செய்தியை அவன் படித்து பார்க்கவில்லை..

மனோஜ் இந்த செய்தி தாளை கீழ் தளத்தில் இருக்கும் செய்தி தாளில் பார்த்தது.. அந்த வீட்டில் ஒவ்வொரு தளத்தின் முன் அறையிலும் வரும் அனைத்து செய்தி தாள்களின் பிரதியை வைத்து விடுவர்..

கீழ் தளத்தில் அந்த புகைப்படத்தை மனோஜ் பார்த்துக் கொண்டு இருக்கும் அதே வேளயில், அவன் மனைவி ஸ்ருதி அதில் இடம் பெற்ற செய்தியை படித்து விட்டு கோபத்தில் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க தொம் தொம் என்று தன் கணவன் அருகில் நடந்து வரும் போதே மனோஜ் தலை நிமிராமலேயே வருவது தன் மனைவி வருகிறாள் என்று தெரிந்துக் கொண்டான்.

மனதில் இது போல் சின்ன யானை போல் பூமி அதிர நடந்தால் அது இவளாய் தானே இருக்கும்.. எப்படி உடம்பை வளர்த்து வெச்சி இருக்கா பார்…

வேறு பெண்ணிடம் இருந்து வந்து இவளை தொடும் போது அய்யோ அவர்களுக்கும் இவர்களுக்கும் தான் எவ்வளவு வித்தியாசம்.. அவர்களை ஒரே கை பிடியில் அணைத்து விடலாம்..

ஆனால் இவளை அணைக்க என் இரு கை கூட பத்த மாட்டேங்குது என்ன செய்ய… இவள் செத்து இவள் அக்கா உயிரோடு இருந்து இருந்தா நன்றாக இருந்து இருக்கும்…

இவள் அக்காவும் அந்த அஷ்வத்தின் பின்னாடியே தானே நாய் மாதிரி சுத்திட்டு இருந்தா… சொந்த மாமா பையன் நான் அவள் கண்ணுக்கு தெரிஞ்சேனா…? அவளுக்கும் அவன் தான் வேண்டும்..

இதோ இவள் பார்க்கவே நான் கோடி கணக்கில் கொட்டி கொடுக்கிறேன்.. ஆனால் இவன் நோகாம நோம்பு கும்பிடுவது போல எல்லாம் ஈசியா கிடச்சிடுது… தாஷாவை நினைத்து புலம்பியவன்..

என்னவோ இப்போ இந்த அச்சு கூட, அவன் பேரை கேட்டாலே… ஏதோ போல் ஆகிடுறா… எல்லோரும் அவனை திட்ட இவள் வாயில் இருந்து மட்டும் ஒரு வார்த்தையும் தப்பா அவனை பத்தி வந்தது கிடையாது…

விசாரித்து விட்டாச்சி.. சமீபத்தில் அர்ச்சனா அஷ்சத்தை எங்காவது பார்த்தாளா…? என்று.. இல்லை என்ற தகவல் தான் அவனுக்கு வந்தது…

இது போல் சொத்தை தான் என் தலையில் விடியனும் என்று இருக்கும் போல… எல்லா வற்றையும் விட கொடுமை, அவள் எதிரில் அவள் முகத்தையே பார்ப்பது போல் இருப்பது தான் கொடுமையிலும் கொடுமை..

இந்த கொடுமைக்கு எல்லாம் ஒரு விடிவு கட்டுறேன்… செய்தி தாளில் இருந்த படத்தில் இருக்கும் தாஷாவின் வரி வடிவத்தை தன் விரல் கொண்டு தடவியவன்.. ஒரு நாள் உன்னை..

ஒவ்வொரு நாளும் அச்சு என்பது போல் என்று அவன் ஒன்று நினைத்து தான் திட்டம் தீட்டினான்… மனோஜ் நினைத்தது போல் தான் கொடுமைக்கு ஒரு விடிவு கிட்டியது தான்..

அது அவனுக்கு எதிர் பதமாகவும், அஷ்வத்துக்கு சாதகமாகவும் முடிந்தது தான் கொடுமை.. அந்த கொடுமையும் மனோஜே ஏற்படுத்திக் கொடுத்தான் என்பது தான் மனோஜூக்கு ஏற்க முடியாததாக போய் விட்டது..

மனோஜ் அஷ்வத் சென்னை வந்து இருக்கிறான்.. அதுவும் தாஷாவுடன் என்று அவன் பல கணக்கு போட… அதற்க்கு இடையூறாக அங்கு வந்த ஸ்ருதி தன் கையில் இருந்த செய்தி தாளை அவன் முன் இருந்த டீப்பாவின் மீது போட்டு..

“இது என்ன மனோஜ் அத்தான்.” என்று மூக்கு விரைப்புடம் கேட்ட மனைவியின் முகத்தை இதற்க்கு மேலும் தன்னால் பார்க்க முடியாது என்று அவள் போட்ட செய்திதாளில் கவனத்தை செலுத்துவது போல அதை விரித்து பார்த்து..

“என்ன டார்லிங்… என் டார்லிங்குக்கு என்ன கோபம். பாரு முகம் எல்லாம் ரெட்டிஷ்ஷா ஆயிடுச்சி… இந்த கோபம் நல்லது இல்ல.. டாக்டர் என்ன சொல்லி இருக்கார்..நீ ரொம்ப கோபப்பட கூடாது என்று சொல்லி இருக்கார் தானே…” என்று தன் மனைவியை சமாதானப்படுத்திக் கொண்டு இருந்த மனோஜின் மனமோ இது எல்லாம் இன்னும் கொஞ்ச நாள் தான்.

இது போல் கஷ்டப்பட்டு கொஞ்சாது இஷ்டப்பட்டு கொஞ்ச உன் இடத்துக்கு அச்சு வர போறா… என்ன ஒண்ணு அப்போவும் நீ எங்களுக்கு இடையே தூணா நிற்ப..

கிடைக்கும் சந்தர்ப்பத்திலோ.. சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொண்டோ அவளை கொஞ்ச வேண்டியது தான்…” என்று நினைத்து அவன் பெரும் மூச்சு விடும் போது தான் ஸ்ருதி ஏன் கோபமாக வந்தாள் என்று அந்த செய்திதாளை பார்த்தான்.

அப்போதும் அவன் கண்ணுக்கு பளிச் என்று தெரிந்த்து.. அஷ்வத்தும் தாஷாவும் பின்னி பிணைந்து இருக்கும் படமே…

இதை பார்த்து நான் கோபப்பட்டேன் அது சரி.. இவள் ஏன் கோபப்படுறா.. இவளும்… என்று நினைத்தவன் உடனே..சேச்சே.. அவ்வளவு அழகா இருந்த இவள் அக்காவையே கழட்டி விட்டவன் அவன்.இவளையா திரும்பி கூட பார்க்க மாட்டான்… என்று மனதில் அப்படி மனதுக்குள் மட்டமாக நினைத்த மனோஜ்..

“ இதை பார்த்து நீ ஏன் டார்லிங் கோபப்படுற…? உன் புருஷன் நான் ராமன் உனக்கு தெரியாதா…?” என்று மைய்யலுடன் தன் மனைவியை தன் தோள் மீது சாய்த்துக் கொண்டான்.

“அது எனக்கு தெரியும் அத்தான்.. நான் அந்த படத்தை பார்த்து கோபப்படல… அதில் போட்டு இருப்பதை படிச்சி தான் கோபப்பட்டேன்.” என்று கொஞ்சி பேசுவதாக நினைத்து, ஸ்ருதி தன் முகத்தை அஷ்ட கோணலாக்கி பேசியதில், நடிப்புக்கு என்றாலும் அவள் முகத்தை பார்ப்பதை தவிர்த்து விட்டு..

“ என் டார்லிங்கை கோபம் படுத்துவதை போல அதில் என்ன போட்டு இருக்கு.” என்று சொல்லி அந்த செய்தி தாளில் இருப்பதை மனோஜ் படித்து விட்டு..

“ இதில் கோப்ப்பட என்ன இருக்கு டார்லிங்..?” என்று மனோஜ் கேட்க..

“ம் அதில் ஒண்ணும் இல்லையா…? ஒண்ணும் இல்லையா..?” என்று கேட்டவள்..

அப்போது தான் அங்கு வந்த தன் பெரிய மாமா மனோஜின் அப்பாவை பார்த்து..

“பாருங்க மாமா அத்தானை அந்த தாஷாவை வெச்சி தம்ம இப்போ கன்செக்ஷன் செய்யிற பில்டிங்குக்கு விளம்பர செய்ய போறாராம்..” என்று ஸ்ருதி தன் கணவன் மீது குற்ற பத்திரிக்கை வாசித்தாள்.

இந்த விளம்பரம் பற்றி சத்திய மூர்த்திக்கு முன்பே தெரியும் தான்.. அவரும் இதை பற்றி கேட்டதற்க்கு மனோஜ்..

“அப்பா இப்போ டாப்பஸ்ட் மாடல் தாஷா தான்.. இவளை வெச்சி நாம புதுசா கட்டுற அந்த அடுக்கு மாடி குடியிருப்பை விளம்பரம் கொடுத்தா.. நாம சொன்ன விலைக்கு புக் பண்ணிட்டு போயிட்டா இருப்பாங்க..

நம்ம கிட்ட புக் செய்யிற பெரும் பாலோர் ஐடி கம்பெனியில் வேலை பார்க்கிறவங்க.. அவங்களுக்கு இது போல் ஷோ காட்டினா தான் நல்லது… தாஷாவோட பேன்ஸ் ரொம்ப பேர் ஐடி கம்பெனியில் வேலை பார்க்கிறவங்க..

நம்ம பர்சனல் லைப்பை பிசினசில் கொண்டு வர கூடாது என்று நீங்க தான் எனக்கு சொல்லி இருக்கிங்க.. இப்போ நீங்களே..” என்று தன் பேச்சை முடிக்காது நிறுத்தினான் மனோஜ்..

சத்தியமூர்த்தியும்.. “ நீ சொல்வதும் சரி தான்.” என்று அப்போதே அதை ஒத்துக் கொண்டதால், தன் மகன் தன்னிடம் சொன்னதையே சத்திய மூர்த்தி தன் மருமகளிடம் சொன்னவர்…

“ என் மகன் உன்னை தவிர யாரையும் பார்ப்பது இல்ல.. அது உனக்கு தெரியும் தானே…” என்று தன் தங்கை மகளை கிண்டல் செய்தார்..

அதில் நாணி கோணி ஸ்ருதி நாணத்தில் நெளிய அதை ஒரு பார்வை பார்த்துக் கொண்டே மனோஜ்..

“ நான் என் டார்லிங் முகத்தை மட்டுமே பார்த்துக் கொண்டு இருக்க தான் இன்னும் பேபி கூட வரல போல..” என்று மனோஜ் மிக எதார்த்தமாக சொல்வது போல் தன் தந்தையிடம் சொன்னான்.

அதை கேட்ட சத்திய மூர்த்திக்கும் கொஞ்சம் வேதனை தான்.. ஒரே மகன். அவனுடைய குழந்தையை கொஞ்ச அவர் ஆசையாக காத்திருக்க..

வருடம் ஐந்து கடந்த பின்னும் அவரின் ஆசை தான் இன்னும் நிறை வேறவில்லை.. ஆனால் அதற்க்கு மாறாக தன் மருமகள் பெருத்துக் கொண்டு போவதை பார்த்த தன் மனைவி தன்னிடம் சொன்ன..

“ குழந்தை பிறப்பதற்க்கு இந்த குண்டு கூட தடையா இருக்கும்.. என்று எங்க அம்மா என் கிட்ட சொல்லி இருக்காங்க… ஸ்ருதி இது போல் ஊத்திட்டே போறாளே..” என்று இரவில் தன் மனைவி தன்னிடம் சொல்லி ஆதாங்கப்பட்டது இப்போது அவரின் நியாபகத்துக்கு வந்தது…

இது வரை குழந்தை இல்லை என்று மனோஜூம், ஸ்ருதியும் அவர்கள் மருத்துவமனை சென்றது கிடையாது.. செல்.. என்று சத்திய மூர்த்தியும் சரி .. அவர் மனைவி தெய்வானையும் சரி சொன்னது கிடையாது.. சொல்லலாம் என்று நினைக்கும் போது எல்லாம் ஸ்ருதி ஏதாவது நினைத்துக் கொள்வாளோ.. இல்லை தன் தங்கையும், தன் மச்சானும் தவறாக நினைத்து விடுவார்களோ என்று நினைத்து அதை சொல்லாது விட்டு விட்டனர்..

ஆனால் போன வருடம் திருமணம் செய்த தன் தம்பி சுந்தர மூர்த்தியின் பெரிய மகள் நிஷா போன வாரம்.. அம்மா வீட்டுக்கு அழைத்து..

“ விசேஷம்…” என்று சொன்னதில் இருந்து கணவன் மனைவி இருவருக்கும் இருந்த அந்த குழந்தை ஆசை இன்னும் கூடியது..

என்ன தான் தம்பி.. கூட்டு குடும்பம் என்றாலுமே, தன்னோடு சின்னவன்.. இப்போது தான் திருமணம் செய்து கொடுத்த பெண் மூலம் ஒரு குழந்தை வர போகிறது என்று நினைக்கும் போது, தன்னால் ஒரு பொறாமை உணர்வு எழுவதை அவரால் தடுக்க முடியவில்லை…

அதன் உந்துதலில் இப்போது தன் மகன் பேசிய பேச்சிலும், சத்தியமூர்த்தி ஸ்ருதியை பார்த்து…

“நீயும் அவனும் டாக்டர பாருங்க…” என்று மட்டும் சத்திய மூர்த்தி சொல்லி இருந்தால் கூட பரவாயில்லை.. கூடவே…

“இப்போ கல்யாணம் ஆன நிஷா கூட உண்டாகி இருக்கா…” என்ற வார்த்தையும் கூட சேர்த்து சொல்ல..அது பலமாக ஸ்ருதியை தாக்கியது..

ஸ்ருதி தன் கணவன் ஏதாவது சொல்லுவான் என்று அவன் முகத்தை பார்க்க.. தன் அப்பா இது போல் சொல்ல வேண்டும் என்று தானே அவன் மறைமுகமாக குழந்தை என்ற வார்த்தையையே சொன்னான்..

அவன் ஏன் தன் மனைவியை பார்க்கிறான்.. தன் அப்பாவையே பார்த்திருந்தவன் , அவர் சொன்ன அனைத்துக்கும்..

“சரி.. சரி…” என்பது போல் தலையாட்டினான்.

தங்கள் அறைக்கு வந்ததும் ஸ்ருதி ..மனோஜிடம்..

“என்னங்க மாமா இப்படி சொல்றார்.. நீங்க ஒண்ணும் சொல்லாம இருக்கிங்க…?” என்று ஒரு ஆதாங்கத்துடன் கேட்டாள்.

“டார்லிங்.. நான் இதை எப்படி சொல்வது என்று தெரியல..” என்று தான் என்ன சொல்ல வேண்டும் என்று நினைத்தோமோ அதை சொல்லி விட வேண்டும்.. ஆனால் ஸ்ருதி தன்னை தவறாகவும் நினைத்து விட கூடாது…

அதாவது ஸ்ருதி மனைவி என்று வேண்டும்.. அப்போது தான் அவளின் மொத்த சொத்தும் தனக்கு வந்து சேரும்.. அதே சமயம் அர்ச்சனாவும் தனக்கு மனைவியாக வரவேண்டும் என்று நினைத்து தான் இவ்வளவு நாளாகவும் காயை நகர்த்திக் கொண்டு வந்தது..

அது இப்போது முடிவு கட்டத்தை நெருங்கி கொண்டு இருக்கும் வேளயில், தன் ஒரு செயலிலும் தன்னை காட்டி கொடுத்து விட கூடாது என்பதில் மனோஜ் மிக கவனமாக இருந்தான்.

அதனால் தன் பேச்சை ஆரம்பித்து விட்டு தயங்குவது போல் நிறுத்தியதில்.. அவன் எதிர் பார்த்த்து போலவே ஸ்ருதி…

“ என்ன அத்தான் ஏதோ பேச வந்துட்டு நிறுத்திட்டிங்க…” என்று தன் கணவின் கை பற்றி வாடிய தன் கணவன் முகத்தை கவலையுடன் பார்த்த வாறு கேட்டாள்.

ஆம் ஸ்ருதிக்கு தன் கணவனின் முகம் கொஞ்சம் கசங்கி இருந்தாலும் தாளாது.. அந்த அளவுக்கு ஸ்ருதிக்கு மனோஜ் மீது காதல்..ஆம் காதல் தான் அவள் தான் தன் தாய் தந்தையிடம்..

“ எனக்கு மனோஜ் அத்தானை கல்யாணம் செய்து வைங்க…” என்று கேட்டது…

அவள் கேட்டதும், துளசி ராமும், வைதேகியும் உடனே அதற்க்குண்டான வேலையில் இறங்கி விட்டனர்.. இந்த காதலால் ஒரு பெண்ணை நான் பறிகொடுத்தது போதும். இவள் ஆசையை நிறை வேற்ற வேண்டும் என்று நிமைத்தாலும், கூடவே துளசி ராமுக்கு கொஞ்சம் பயமும் இருந்தது..

ஆம் பயம் தான்.. மனோஜ் பார்க்க நன்றாகவே இருந்தான்.. தன் பெண்… மனோஜ் வேண்டாம் என்று மறுத்து விடுவானோ என்று நினைத்து தான் மனைவியிடம்..

“முதலில் நீ போய் உன் அண்ணியிடம் பேசு.” என்று அனுப்பி வைத்தது…

பெரியவர்கள் எண்ணம் என்ன என்று தெரிந்துக் கொள்ள அனுப்பி வைத்த துளசி ராமுக்கு மனோஜே..

“ நானே பெண் கேட்கனும் என்று நினைத்தேன்..” என்ற அந்த பேச்சில் அக மகிழ்ந்து தான்.. அனைத்தும் பெரியதாக செய்து முடித்தார்..

இதோ இன்னும் இன்னும் கூட மனோஜூக்காக பார்த்த இடத்தில் எல்லாம் தன் மகள் பேருக்கு வாங்காது தன் மருமகன் பெயரிலேயே வாங்கி போட்டு குவித்துக் கொண்டு இருக்கிறார்.

ஸ்ருதிக்கும் மனோஜூக்கும் தன் மீது விருப்பம் என்று தெரிந்ததில் அவள் காதல் பல மடங்கு பெருகியது என்று தான் சொல்ல வேண்டும்..

தன் வீட்டில் கூட அவனுக்கு கொஞ்சம் அசவுகரியம் வந்து விட்டால் போதும்..

தன் அப்பா அம்மாவை விளாசி தள்ளி விடுவாள். அப்படி எங்கும் எங்கேயும் தன் கணவனை விட்டு கொடுக்காது பார்த்துக் கொள்ளும் ஸ்ருதி..

இன்று கணவனின் வாடிய முகத்தில் பதைத்து போய் என்ன ..? என்று கேட்டதற்க்கு,

ஏதோ சொல்ல வருவது போல் பேச்சை ஆரம்பித்து விட்டு…” வேண்டாம் டார்லிங்/… எனக்கே அந்த பேச்சை கேட்க வருத்தமா இருந்தது… உனக்கு...வேண்டாம் வேண்டாம்.” என்று மனோஜ் சொல்லவும்..

“ அத்தான் என்ன சொல்லுங்க.. உங்க மனசு சங்கடம் படுவது போல் என்ன பேசுனாங்க…? யாரு பேசுனாங்க.. ?சொல்லுங்க சொல்லுங்க..” என்று கோபத்துடன் வினாவ..

“ போன வாரம் நம்ம ஆபிஸ் ஸ்டாப் ஒருத்தருக்கு குழந்தை பிறந்தது… எல்லோருக்கும் ஸ்வீட் கொடுக்கும் போது அந்த ஸ்டாப் எனக்கும் கொடுத்தான்.. நான் இது போல ஸ்வீட் எல்லாம் சாப்பிட மாட்டேன்லே..

அதனால அதை வெச்சிட்டு போன்னு. சொல்லிட்டு . நான் அதை தொடவே இல்ல.. அதை அவன் வெளியில் போய் சொல்லி இருக்கான் போல..

அதுக்கு இன்னொருத்தன்.. இதுக்கு நீ ஏன் கவலை படுற.. நம்மால முடியாததை நம்ம கிட்ட வேலை செய்யிறவன் செஞ்சு முடிச்சிட்டானே என்ற பொறாமையில் தான் அந்த ஸ்வீட்டை எடுத்து இருக்க மாட்டார்..

இந்த பக்கம் இவர் சொத்து சேர்க்கிறார்.. அந்த பக்கம் இவர் அப்பா இவருக்கு சொத்து சேர்த்து வெச்சிட்டு இருக்கார்..போதாதுக்கு இவன் மாமனார் பார்த்த இடத்தில் எல்லாம் வாங்கி போட்டுட்டு இருக்கார்.. ஆனா என்ன பிரயோசனம்… வக்கு இருந்தா தானே வாரிசு வர்றதுக்கு…” என்று மனோஜ் தன் பேச்சை முடிக்க கூட இல்லை..

கோபத்தோடு தங்கள் அறையை விட்டு போக பார்த்த ஸ்ருதியின் கை பற்றி தடுத்து நிறுத்திய மனோஜ்..

“எத்தனை பேர திட்டுவ டார்லிங்.. எத்தனை பேர.. எனக்கு தெரியும் இது கேட்டா உன் மனசு எவ்வளவு வேதனை படும் என்று எனக்கு தெரியும்.. அது தான் இரண்டு வருஷமாவே இது போல் பேச்சு என் காதில் விழுந்துட்டு தான் இருக்கு… என் கஷ்டத்தோட போகட்டும் என்று தான் உன் கிட்ட எதுவும் சொல்லலே…” என்று சொன்ன கணவனின் மார்பின் மீது சாய்ந்துக் கொண்ட ஸ்ருதி..

“நான் ரொம்ப ரொம்ப லக்கிங்க.. அதான் எனக்கு நீங்க கணவனா கிடச்சி இருக்கிங்க…” என்று சொன்ன மனைவியின் தலையை கோதிய வாறே..

“ இது போல பேச்சு கேட்டு எனக்கு இப்போ என் மீது சந்தேகமா இருக்கு டார்லிங்.” என்று சொன்ன கணவனின் வாயை மூடிய ஸ்ருதி..

“கணவன் ஆண்மை அற்றவனா..? இல்லையான்னு…? ஒரு மனைவிய தவிர வேறு ஒருவனுக்கும் தெரியாது.. நீங்க ஆம்பிளை இல்லை என்றால் வேறு யாரும் இல்லை என்று தான் நான் சொல்வேன்.” என்று ஸ்ருதி ஆவேசத்துடன் சொன்னாள்.

பின் ஏன் சொல்ல மாட்டாள்.. இது போலான விசயத்தை அனைத்தும் கற்றவன் ஆச்சே மனோஜ்.. அதில் ஒரு சில வித்தகைகளை தன் மனைவியிடமும் காண்பித்ததில் தான் ஸ்ருதியின் இந்த பேச்சுக்கு காரணம்..

பின் ஏதோ முடிவு செய்தவளாக…

“ நான் செக்கப்புக்கு போறேன் அத்தான்.. எனக்கு நம்பிக்கை இருக்கு.. நாம யாருக்கும் துரோகம் செய்யல.. நமக்கு கூடிய சீக்கிரமே குழந்தை பிறக்கும் பாருங்களே…” என்று சொல்லி.. நாளையே ஒரு பெண் மருத்துவரின் பெயரை சொல்லி முன் பதிவு வாங்க சொன்னவளிடம்..

“நாளைக்கு முக்கியமான மீட்டிங் இருக்குடா… என்னால வர முடியாது டா..” என்று தான் எதிர் பார்த்த நன் நாள் வந்து விட்ட மகிழ்ச்சியில் மனைவியை எப்போதையும் விட கூடுதலாகவே மனோஜ் கொஞ்சினான்.

தன் கணவனின் கொஞ்சலில் முகம் எல்லாம் மகிழ்ச்சியில் பொங்க… “நான் எனக்கு தான் வாங்க சொன்னேன்… உங்களுக்கு இல்ல… அது தான் நான் சொல்லிட்டேன்ல.. உங்களுக்கு சோதனையே தேவையில்லை..” என்று அந்த வார்த்தை சொல்லி விட்டு அந்த அறையை விட்டு ஓடி விட்டாள்.

கடவுளே.. அவ்வளவு வேலை எனக்கு இருக்க.. இவளை கொஞ்சுவது தான் எனக்கு வேலையிலேயே ரொம்ப கடினமான வேலையடா.. என்று நினைத்து..

இன்று தாஷாவை பார்க்க வேண்டும் என்ற அந்த நினைப்பே இன்னும் கூடுதல் மகிழ்ச்சி தர… தன் ஆபிசுக்கு கிளம்பினான்.


“தாஷ் நான் சொன்னது எல்லாம் நியாபகத்தில் இருக்கு தானே…?” என்று அவளின் பத்திரத்தை உறுதி படுத்த அஷ்வத் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டு இருந்தான்..

“அஷ் அவன் எல்லாம் ஒரு விசயமே இல்ல… அதுவும் இல்லேம்மா என்னை தான் எதுவும் செய்ய சொல்லலையே...

அவன் பேசுவதை ரெக்கார்ட் செய்ய சொல்லி இருக்கிங்க.. அதை நான் பார்த்துக்குறேன் அஷ்…” என்று சொல்லி விட்டு..

“ஒகே..” என்று சொல்லி அந்த நட்சத்திர ஓட்டலில் இருந்து தாஷா கிளம்பி அந்த ***விளம்பர கம்பெனியை சென்றடைந்தாள்.

அந்த நட்சத்திர ஓட்டலை விட்டு வெளி வந்த போது அந்த ஓட்டலின் வர வேற்ப்பு பகுதியில் தொழில் முறையாக ஒருவரை பார்க்க காத்துக் கொண்டு இருந்த வீர ராகவன் கண்களில் தாஷா மாட்டினாள்

காலையில் செய்தி தாளை பார்க்காது இருந்த வீர ராகவனுக்கு அப்போது தான் அஷ்வத் சென்னை வந்து இருக்கிறானா.. என்று யோசனையுடன் வர வேற்ப்பு பெண்ணிடம்..

“ மிஸ்டர் அஷ்வத் அவர் ரூமில் இருக்கிறாரா…?” என்று கேட்டார். ஏன் என்றால் அஷ்வத் சென்னை வந்தால் எப்போதும் தங்குவது இந்த ஓட்டலில் தான்.. அங்கு அவனுக்கு என்று எப்போதும் ஒரு அறை காத்துக் கொண்டு இருக்கும். அதன் தொட்ட வீர ராகவன் எந்த வித தயக்கமும் இல்லாது கேட்டது…

அதே போல் அந்த வர வேற்ப்பு பெண்ணுக்கும், வீர ராகவனையும் தெரியும்.. வீர ராகவனின் மகன் அஷ்வத் என்பதும் தெரியும்...

ஆனாலும் அவர் தாஷாவோடு அவர் அறையில் இருக்கும் போது, தான் என்ன பதில் சொல்வது.. இருவரும் வி.ஐ.பிக்கள் அப்படி இருக்க.. அதுவும் மகனை பற்றி என்று சங்கடத்துடன் என்ன சொல்வது என்று அந்த வர வேற்ப்பு பெண் தயங்க..

வீர ராகவன்… “அந்த மாடல் தாஷா வெளியில் போயிட்டாங்க…” என்று வீர ராகவன் சொன்ன உடனே அந்த வர வேற்ப்பு பெண்..

“ மிஸ்டர் அஷ்வத் சார் அவர் ரூமில் தான் சார் இருக்கிறார்… “ என்று அந்த பெண்ணின் வேலையான சிரித்த முகத்தில் இன்முகத்துடன் உரைத்தாள்.

ஒரு தந்தை அந்த பெண் சென்று விட்டாள் என்று சொல்லும் அளவுக்கு தான் இருக்கிறோம் என்று நொந்துக் கொண்டே தான் வீர ராகவன் அஷ்வத் அறையின் முன் வந்து நின்று காலிங் பெல்லை அழுத்தியது..

அதே சமயம் அர்ச்சனா அஷ்வத்தை பற்றி யாருக்கும் சந்தேகம் வராது விசாரித்த வரையில் , அவன் சென்னை வந்தால் தங்கும் ஓட்டலில் இருந்து தங்கும் அறையின் எண் வரை தெரிந்துக் கொண்டு..

வீர ராகவனாவது வர வேற்ப்பு பெண்ணிடம் கேட்டுக் கொண்டு சென்றார்… அர்ச்சனா நேராக அஷ்வத்தை பார்த்து பேசி..

“ இனி இது போல் இருக்காதிங்க.. நான் உண்மையை சொல்றேன்.” என்று நினைத்து அவன் அறைக்கு சென்றவளாளேயே இன்னும் அவன் பெயர் கெட காரணமாக இருக்க போகிறோம் என்று தெரியாது அவனை பார்க்க அவன் அறைக்கு முன் வந்து நின்றாள்.


































 
Top