Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Kadhalin Nyayangal-16

  • Thread Author
அத்தியாயம்…16

அர்ச்சனாவின் கைய் பேசியில் பதிவு செய்யாத எண்ணில் இருந்து அழைப்பு வருவதை பார்த்து … அதை ஏற்கலாமா…? வேண்டாமா…?” என்று அவன் யோசித்துக் கொண்டு இருக்கும் போதே… இருவரில் ஒருவன் அந்த கை பேசியில் இருக்கும் எண்ணை பார்த்து விட்டு..

“ இது அஷ்வத்தோட நம்பர்…” என்று ஒரு வித பதட்டதுடன் தான் அவன் சொன்னான்.

ஏனோ அவனுக்கு இது பிடிக்கவில்லை.. அஷ்வத் பெரிய அளவில் இருப்பவன்.. இன்று சோஷியல் மீடியாவில் அஷ்வத்தோடு இருக்கும் பெண்ணை எங்கேயோ பார்த்து இருக்கிறோமே என்று யோசனை செய்யும் போது.. தான் அவனுக்கு அர்ச்சனாவை எங்கு பார்த்தோம் என்பது நியாபகத்தில் வந்தது..

கூடவே அந்த மருத்துவனும் இருக்க தன் சந்தேகத்தை தெளிவு படுத்திக் கொள்ள கேட்டவனுக்கு பதில் அவனுக்கு சாதகமாக தான் இருந்தது..

அந்த மருத்துவனும்.. “ஆமாம் டா.. இது நம்ம சஞ்சய் ஆபிசில் பார்த்த பெண் தான்டா…” என்று சொல்ல…

துடப்பக்கட்டைக்கு பெயர் சஞ்சய்.. அதாங்க அந்த ஹெட்டின் பெயர் தான் சஞ்சய்…

“ இது போல பெண் இருந்தா சஞ்சய் விட்டு வைக்க மாட்டானே…” என்று அந்த மருத்துவன் தன் தாடையை தடவிய வாறு வினாவினான்.

“ ஒரு சமயம் தெரிந்து இருக்காதோ…?” என்று மீண்டும் அந்த மருத்துவனே சொல்ல..

“சரி தெளிவு படுத்திக் கொள்ளலாம். சஞ்சய் ஆபிஸ் பக்கத்தில் தானே இருக்கோம் காரை விரட்டினால், பத்து நிமிடத்தில் போய் சேர்ந்து விடலாம்..” என்று முதலில் தன் பேசியில் அஷ்வத்தோடு அர்ச்சனாவை பார்த்தவன் சொல்லவும், மருத்துவனோடு சஞ்சய் அலுவலகத்தில் வந்து அடைந்தனர்..

அந்த மருத்துவன் சொன்னது போல தான் சஞ்ய்க்கு தெரியாது.. “ நிஜமா எனக்கு இந்த பெண் இப்படி என்று தெரியாதுடா..” என்று அதிர்வோடு தான் சஞ்சய் சொன்னான்..

பின் இந்த அதிர்வு இருக்காதா.. இந்த மூன்று சுத்தி போட்ட கரும்போக்குகளும் வீக் என்ட் ஆனால்.. பெண்களோடு தான் செலவழிப்பர்..

மூன்று பேரும் நாற்பதை தொட இருக்கும் ஆண்கள் தான்.. குடும்பத்திற்க்கு செய்ய வேண்டியதை அனைத்தும் செய்து முடித்து விட்டோம்.. மனைவி குழந்தைகளோடு பிஸி.. மேலும் வயதும் முப்பத்தி ஐந்தை எட்டியதால் ஏனோ இவர்களுக்கு மனைவிகள் சுகப்படவில்லை..

அதனால் வீக் என்ட் ஏதாவது ஒரு காரணங்கள் சொல்லி அதற்க்கு என்று இருக்கும் இடத்தில், அதற்க்கு என்று இருக்கும் பெண்களோடு கிளம்பி விடுவர்..

வீக் என்ட் தான் இது போல்… ஆனால் வீக் முழுவதும் அதாவது அலுவலகத்தில் தன் திறமைகளை வேலையில் மட்டுமே காட்டும் அக்மார்க் குடும்ப தலைவர்கள்..

அதனால் இவர்களின் பார்வை நல்ல பெண்களிடம் எப்போதும் போகாது… அதனால் அர்ச்சனாவை அடையாளம் காணவில்லையே என்று சஞ்சய் சொல்லும் போது கூட அர்ச்சனாவை முதலில் இனம் கண்டு கொண்டவன்..

“ நான் உன் ஆபிசில் பார்த்த பெண்ணா தெரிய தான் கேட்டேன்.. வேறு ஒன்றும் இல்லை..” என்று அந்த மருத்துவரையும் கூட்டிகொண்டு அங்கு இருந்து செல்ல தான் பார்த்தான்.

ஆனால் சஞ்சய்.. “ இருடா.. அப்போ நல்ல விதமா பார்த்து இருப்பிங்க.. இப்போ நம்ம ஹாங்கிலில் பார்க்கலாம்.” என்று சொல்லி அவர்களை நிற்க வைத்து அர்ச்சனாவை அழைத்தான்..

அப்போது கூட அவன் நண்பன்.. “அஷ்வத் பற்றியும் உனக்கு தெரியாது.. அவன் குடும்ப பேக்கிரவுண்ட் பத்தியும் உனக்கு தெரியாது… நாம் எல்லாம் ஒரு வீடு ஒரு கார் கொஞ்சம் பேங்க் பேலன்ஸ் இது தான் செட்டில் என்று நினச்சிட்டு இப்போ செய்துட்டு இருக்கோம்..

ஆனா அவங்க லெவலே வேறு.. இது பெரிய இடம் கிடையாது… ரொம்ப ரொம்ப பெரிய இடம் வேண்டாம்.” என்று அப்போதும் சஞ்சயின் நடவடிக்கையை தடுக்க தான் பார்த்தான்.

அப்போதும் சஞ்சய் விடாது.. “ நான் என்னடா அவன் பெண்டாட்டியவா பார்க்கிறேன்.. சும்மா சும்மா பயந்துகிட்டு...அதோடு நான் என் ஆபிஸ் விசயமாகவும் தான் அவளை கூப்பிடுறேன்..

இவள் மூலமா அந்த அஷ்வத்தை பார்த்து எங்க ஆபிசுக்கு விளம்பம்ர செய்தா சும்மா என் வேல்யூவே அப்புறம் வேறா ஆகிடும்…” என்று சஞ்சய் சொல்லி தான் இத்தனையும் நடந்தது..

அர்ச்சனா மயங்கி விழுந்ததுமே மருத்துவனும் இப்போது பின் வாங்கினான்.. வேண்டாம் பிரச்சனை என்று தான்.. ஆனால் சஞ்சய் விடாது போக இதோ இப்போது அர்ச்சனாவின் பேசியில் அஷ்வத்தின் எண்ணை பார்த்ததும் கண்டுக் கொண்டான்.. சஞ்சயின் நண்பன்..

அந்த நண்பனின் சகோதரன் சிறிய அளவில் கன்செக்ஷன் நடத்தி வருகிறார்… அவர் மூலம் தான் இவனுக்கு அஷ்வத்தின் பின் பலம் தெரியும்..

அது போலவே அஷ்வத்தின் பர்சனல் எண்ணும் தான். அது ஒரு பேன்ஸி எண்.. பார்த்ததும் மனதில் படியும் படி இருந்ததால் அவனுக்கு தெரிந்து விட்டு..

அவன் ஒதுங்கி கொள்ள அப்போதும் நான் விடுவேனா என்பது போல் தான் சஞ்சய் அர்ச்சனாவின் பேசியை இயக்கினான்.. அதுவும் ஸ்பீக்கரில் போட்டு நண்பர்களும் கேட்கும் படியே..

சஞ்சய் பேசியை இயக்கி நிமிடம்..

அஷ்வத்… “ பொம்மா பொம்மா.. யூ ஆல்ரைட் ..” என்று பட படப்புடன் விசாரித்தான்.

சஞ்சய் தன் நண்பர்களை கிண்டலாக ஒரு பார்வை பார்த்து … “ பார்த்தியா…?” என்பது போல் சைகையில் வினாவியவன்..

“ நான் அர்ச்சனாவோட ஹெட் பேசுறேன்.. அவள் கொஞ்சம் மயங்கி விட்டா.. என் பிரண்ட் டாக்டர் தான்.. அவன் தான் அவளை பார்த்துட்டு சும்மா அதிர்ச்சியில் தான் மயங்கி இருக்கா வேறு ஒன்றும் இல்லை…” என்று சஞ்சய் பேச பேச..

அந்த பக்கத்தில் இருந்து கேட்டுக் கொண்டு இருந்த அஷ்வத்துக்கு சஞ்சயின் மனநிலை தெளிவாக விளங்கியது.. கல்சர் என்ன தான் பறந்து விரிந்தாலும், ஒரு பெண்ணை வயது சிறியவளாக ஆனாலுமே.. அவன் பேசிய அவள் இவள் என்ற இது போல் வார்த்தைகள் இவன் பேச காரணம் என்ன என்று அறிந்தவனாக..

சஞ்சயை அடுத்து பேச விட்டாது… “ மூடு வாயை மூடு.. இல்ல ஒரே அடியா மூட வெச்சிடுவேன்.. என்ன…? என்ன நினச்சி அர்ச்சனாவை மரியாதை இல்லாம பேசுற.. தொலச்சிடுவேன்.. இருக்க இடம் தெரியாம ஆகிடுவேன் ஜாக்கிரதை…” என்று உச்சக்கட்ட கோபத்தில் கத்தியவன்..

பின்.. “ முதல்ல அங்கு இருக்கும் லேடிஸ் ஸ்டாப்பை கூப்பிடு.. கூப்பிடு..” என்று சொன்ன அந்த ஆளுமையான குரலில், தன்னால் அர்ச்சனாவுக்கு உதவிக்கு என்று அழைத்த பெண்ணிடம் பேசியை கொடுத்து விட்டான்.

மருத்துவரும் இன்னொரு நண்பனும்.. “ நாங்க சொன்னேம் தானே…” என்று மெல்ல முனு முனுக்க .. சஞ்சயின் காதில் அது எல்லாம் விழவில்லை.. அஷ்வத்தின் இந்த குரல் தன்னை இதோடு விட போவது இல்லையோ.. என்று அவன் உள்மனது எடுத்து உரைத்தது..

அர்ச்சனாவின் கை பேசி அந்த பெண்ணிடம் மாறியதும்.. அஷ்வத்… “ அர்ச்சனா எப்படி இருக்கா…?” என்று தான் முதலில் கேட்டான்.

“ம் நல்லா இருக்காங்க சார்…” அஷ்வத்தின் குரலில் அந்த பெண்ணின் பேச்சில் மரியாதை தன்னால் வந்தது…

“ம்…” என்று சொன்ன அஷ்வத் பின் ஆழ்ந்த மூச்சை விட்டவனாக..

“ அவள் பக்கத்தில் யார் யார்…? இருக்காங்க…?” என்று கேட்க.

அந்த பெண் “ எங்க ஹெட் தான் சார் எனக்கு தெரியும்.. இரண்டு பேர் அவர் பிரண்ஸ்…” என்று அந்த பெண் விளக்கம் கொடுக்கவும்..

மீண்டும் அஷ்வத் ஏதோ யோசித்தவனாக… “ அர்ச்சனா கிட்ட அவனுங்க வந்தாங்களா.. இல்ல அர்ச்சனாவை அவங்க இருக்கும் இடத்துக்கு கூப்பிட்டாங்களா…?” என்ற கேள்வியில் ஒரு நிமியிடம் தயங்கிய அந்த பெண்..

“ அவங்க தான் சார் அர்ச்சனாவை அழச்சது…” என்று சொன்னவள் கூடவே அஷ்வத் கேட்காத கேள்வியுமான…

“ அர்ச்சனாவையும்,, அந்த அஷ்வத்தையும் சேர்த்து சோஷியல் மீடியாவில் வந்ததுலே சார்.. அதை பார்த்து தான் கூப்பிட்டு இருப்பாங்க என்று நினைக்கிறேன்.” என்று பேசியில் பேசுவது அஷ்வத் தான் என்று தெரியாமலேயே சொன்னாள்.

அஷ்வத்.. “ நான் அஷ்வத் தான் பேசுறேன்…” என்ற பேசியில் கேட்டதும் உண்மை தானா என்பது போல் பெயர் எதாவது பதிவு ஆகி இருக்கிறதா… என்று சந்தேகத்துடன் பார்த்து விட்டு.. அதில் பெயர் இல்லாத போதும்..

பேசுவது அஷ்வத் தானோ என்ற பயத்திலேயே அந்த பெண்… “ சா..ர்… சார்…” என்று திக்கி திணறி அடுத்து பேச முடியாது தடுமாறி போனாள்.

அஷ்வத் அதை பற்றி எல்லாம் கவலை படாதவனாக.. “ இப்போ என் பிரண்ட் வருவா.. அது வரை நீங்க அவள் பக்கத்திலேயே இருங்க...

நல்லா கவனிங்க நீங்க அவ பக்கத்திலேயே இருக்கனும்.. அந்த மூன்று பேர் அவள் பக்கத்தில் போகாம பார்த்துக்கோங்க.. வேணும் என்றால் இன்னும் இரு பெண்கள் வேண்டும் ஆனாலும் கூட அழச்சிக்கோங்க.. . ஆ இன்னொன்னும் நீங்க பேசிட்டு இருக்குறது அவள் செல் தான்.. எந்த காரணத்தை தொட்டும் அதை அவ கிட்ட கொடுத்துடாதிங்க…

உங்க யார் செல்லும் அவள் கிட்ட போக கூடாது… கவனம்..நான் உங்க பிரான்ச் மேனஜர் கிட்ட பேசுறேன்..” என்று சொல்லி பேசியை அணைக்கவும் அர்ச்சனாவுக்கு மயக்கம் தெளியவும் சரியாக இருந்தது…

மயக்கம் தெளிந்ததும் தன் பக்கத்தில் அந்த ஹெட் இல்லாது பெண் ஊழியரை பார்த்ததும் தன்னால் ஒரு நிம்மதி உண்டாயிற்று..

ஆனால் அடுத்த நிமிடமே தனக்கு எதனால் மயக்கம் வந்தது என்பது நியாபகத்தில் வந்த நொடி, அவளின் அந்த நிம்மதி மாயமாக போய் விட்டது..

பர பரப்பாக.. “ என் செல் எங்கேப்பா எங்கே…” என்று அந்த பெண்ணிடம் கேட்டுக் கொண்டே தன் பக்கத்தில் இருக்கிறதா… என்று சுழல பார்த்துக் கொண்டே கேட்டாள்.

அஷ்வத் சொன்னதுமே அந்த பெண் அர்ச்சனாவின் பேசியை மறைத்து விட்டதால்.. “ நான் பார்க்கல அர்ச்சனா…” என்று சொன்னாள்..

“ அப்படியா…” என்று கேட்டவள் பின் அஷ்வத் எதிர் பார்த்தது போலவே..

“ உன் செல் கொடேன்…” என்று தன் கையை அவள் பக்கம் நீட்டினாள்.

“ என் இடத்தில் இருக்குப்பா…” என்று அந்த பெண் உண்மையை தான் சொன்னாள்..

சஞ்சய்யின் நண்பன் வெளி வந்து ஒரு குரல் கொடுக்கவும், என்னவோ ஏதோ என்று தான் அந்த பெண் ஓடி வந்தது.. அவளும் சோஷியல் மீடியாவில் அந்த புகைப்படத்தை பார்த்தாள் தானே..

அதோடு அர்ச்சனா சஞ்சயின் அறைக்குள் நுழைந்தது முதல் அவள் பார்வை அந்த பக்கமே தான் இருந்தது.. அர்ச்சனா கல்லூரி படிப்பு முடித்து விட்டு கேம்பஸ் மூலம் இதோ இந்த வேலையில் அமர்ந்து விட்டாள்..

அவளுக்கு இன்னும் வெளி உலகம் முழுமையாக தெரியவில்லை என்று தான் சொல்ல வேண்டும்… வீட்டு அரசியல் தங்கள் நிலை தாழ்ந்ததில் தெரிந்துக் கொண்டவள்..

வெளி உலகில் இன்னும் பார்வையின் வேறு பாடுகள் தெரியாது தான் இருக்கிறாள். ஆனால் அந்த பெண்ணுக்கு சஞ்சயின் பார்வையின் வேறு பாடுகள் தெரியும் அளவுக்கு பக்குப்பபட்ட இருபத்தி எட்டு வயது முடிவடைந்து வேலைக்கு என்று வெளி உலகத்தை பார்த்து ஆறு வருடங்கள் கடந்து விட்டதால், சஞ்சய் எதற்க்கு அர்ச்சனாவை அழைத்து இருப்பான் என்று ஒரளவுக்கு அவளாள் யூகிக்க முடிந்தது..

அப்படி அந்த அறையையே பார்த்துக் கொண்டு இருக்கும் போது ஒருவன் குரல் கொடுக்கவும்.. என்னவோ ஏதோ என்று பயந்து தான் அந்த பெண் செல்லை கூட எடுக்காது ஓடி வந்தது..

அதனால் உண்மையையே.. “ என் டேபுலில் தான் இருக்கு…” என்று சொல்லி விட்டாள்.

“ போய் எடுத்துட்டு வர்றிங்களா…?” என்று தயங்கி தயங்கி அர்ச்சனா கேட்கவும்..

அந்த பென் எந்த ஒளிவும் மறைவும் இன்றி சொல்லி விட்டாள்.. நம்ம ஹெட் அந்த அளவுக்கு எல்லாம் நல்லவன் கிடையாது.. இப்போ அஷ்வத் சார் என் கிட்ட பேசினார்..

அவர் பிரண்ட் வரும் வரை உன்னை விட்டு எங்கேயும் போக கூடாது என்று ஸ்டீட்டா எனக்கு சொல்லிட்டார்…” என்று விளக்கி சொல்லியதில், அவள் பேச்சான அஷ்வத் என்ற அந்த பெயரில் அர்ச்சனாவுக்கு கொஞ்சம் தைரியம் வர பெற்றது …

அதனால் தாகம் எடுத்ததில் … “ தண்ணீர்.” என்று அவள் சைகை செய்ய அந்த பெண் தண்ணீரை கொடுக்க..அர்ச்சனா தண்ணீர் குடித்து முடிக்கும் போது அந்த இடத்திற்க்கு தாஷா வந்தடைந்தாள்.

ஆம் அஷ்வத் பிரண்ட் என்று சொன்னது தாஷாவை தான்.. அவன் இருக்கும் இடத்திற்க்கும் அர்ச்சனா வேலை பார்க்கும் அலுவலகத்திற்கும் தூரம் அதிகம்.. அர்ச்சனா பக்கத்தில் உடனே தனக்கு வேண்டியவர்கள் இருக்க வேண்டும் என்று அஷ்வத் நினைத்த உடன் தாஷா தான் அவனின் நினைவுக்கு வந்தாள்.

ஏன் என்றால் தாஷா சென்ற அந்த விளம்பர கம்பெனியும் அர்ச்சனா வேலை பார்க்கும் அலுவலகமும் பக்கம் பக்கம் தான்.. அதனால் அஷ்வத் தாஷாவை அழைக்க நினைத்த நொடி.. தாஷா அஷ்வத்தை அழைத்து விட்டாள்…

“ அஷ்..என்ன இது சோஷியல் மீடியாவில்..” என்று அதிர்ந்து போய் கேட்க..

அஷ்வத்தோ… “ உனக்கு விளக்கமா சொல்ல நேரம் இல்ல தாஷ்.. இப்போ நீ **********கம்பெனிக்கு போ அங்கு அர்ச்சனா இருப்பா.. நீ சேபா அவளை கூட்டிட்டு.***** ஆஸ்பத்திரிக்கு வந்து விடு..நான் அங்கு வந்து விடுகிறேன்.” என்று சொல்லி பேசி விட்டு அதற்க்கு மேல் ஒன்றும் சொல்லாது பேசியை அணைத்து விட்டான்.

தாஷாவுக்கு தான் அஷ்வத்தின் இந்த பதட்டமும் துடி துடிப்பும் புதியதாக இருந்தது…எப்போதும் எந்த சூழ்நிலையிலும் அஷ்வத் பதட்டப்பட்டு அவள் பார்த்ததே கிடையாது..

முதல் முறை இந்த துடிப்பை அவன் பேச்சில் பார்க்கிறாள்.. அதே போல் தான் முதல் முறை அவன் கண்ணில் தான் பார்க்க ஏங்கிய அந்த அன்பு..அன்பா காதலா.. என்று பிரித்தெடுக்க முடியாத அந்த பார்வை..

அஷ்வத்தின் கண்ணில் இன்று தாஷா கண்டாள்… மனோஜ் அவசர அவசரமாக யாரிடமும் எதுவும் சொல்லாது சென்றதில், அந்த விளம்பர கம்பெனி முதலாளிக்கே கோபம் வந்து விட்டது…

“ இனி வரட்டும்…” என்று பல்லை கடித்த அந்த முதலாளி தாஷாவிடம் தன்மையாக..

“ ஸாரி மேடம்…” என்று மன்னிப்பு வேண்ட..

“ இட்ஸ் ஆல்ரைட்…” என்று சொல்லி விட்டு வெளி வந்தவள் பழக்க தோஷத்தில் எப்போதும் போல் தன் பேசியை திறந்தாள்..

அவள் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பவள்.. அவளுக்கு பாலோஸ் நிறைய பேர்.. இவளும் கமெண்ட் செய்வாள்… வந்த கமெண்ட்க்கு பதில் கொடுக்க வேண்டியதற்க்கு பதிலும் கொடுப்பாள்.

அதனால் தாஷாவுக்கு எப்போதும் தன்னால் பேசியின் துணையை தான் நாடுவாள். அன்றும் அந்த விளம்பர கம்பெனியில் இருந்து தன் கார் பார்க்கிங்குக்கு வரும் போதே தன் பேசியை திறந்து பார்த்தவளுக்கு முதலில் வந்து விழுந்த செய்தியே..

“ அஷ்வத் உங்க கை மீறி போய் விட்டார் போல…” என்ற கருத்துக்கு கீழே அஷ்வத் அர்ச்சனாவை அணைத்து இருக்கும் போட்டோவை போட்டு இருக்க..

தாஷாவுக்கு அதில் வந்த செய்திகள் எல்லாம் ஒன்றும் இல்லை.. இது போல் நிறையவே அவள் பார்த்து இருக்கிறாள். அதனால் அதில் எல்லாம் அவள் பாதிப்புக்கு உள்ளாகவில்லை..

அவளை பாதித்தது.. அந்த போட்டோவை பெரிது படுத்த படுத்த அஷ்வத்தின் கண்ணில் தான் பார்க்க ஆசைப்பட்ட அந்த நேசமான பார்வையில்.. ஏதோ இழந்தது போல் உணர்ந்தாள்.

அஷ்வத் தன்னை பார்க்கும் பார்வையில் அக்கறை இருக்கும்… ஒரு சில சமயம் பாவம் போல் ஒரு பார்வை பார்ப்பான்.. மத்த சமயத்தில் மோக பார்வை பார்த்து இருக்கிறான்.

ஆனால் இது போல் ஒரு நேச பார்வை முதன் முதலில் அஷ்வத்தின் கண்ணில் தாஷா பார்க்கிறாள்.. என்ன ஒன்று அந்த பார்வை தன்னை பார்த்து வீசாது வேறு ஒரு பெண்ணின் மீது வீசியது தான் தாஷாவின் மனதை என்னவோ செய்தது..

தெரியும் அவளுக்கு தெரியும்.. அஷ்வத் தன்னிடம் எந்த முறையில் பழகுகிறான் என்று தெரியும்.. அவன் தன்னிடம் ஆசை வார்த்தை பேசியது கிடையாது.. தான் மட்டுமே அவனிடம் ஆசை வைத்தது.. அதற்க்கும் ஒரு முற்று புள்ளி வைக்க வேண்டிய காலம் வந்து விட்டது என்று எண்ணியவளாக தன் காரை எடுத்துக் கொண்டு அஷ்வத் சொன்ன அந்த**** ஆபிசில் முன் நிறுத்தும் போது அஷ்வத்திடம் இருந்து பேசியில் ஒரு செய்தி வந்தது..

அதில்… “ அவள் கை பேசி பக்கத்தில் இருக்கும் பெண்ணிடம் இருக்கும் மறக்காம வாங்கிட்டு வா.. எந்த காரணம் தொட்டும் நீ அவளிடம் அதை கொடுத்து விடாதே.. பார்த்து அவள் ரொம்ப பயந்து இருப்பா..

நான் இப்போ அந்த ஆஸ்பிட்டலுக்கு தான் வந்து கொண்டு இருக்கிறேன்…” என்ற செய்தி வந்து விழுந்தன..

காரை ஓட்டிக் கொண்டே டைப் செய்து இருப்பான் போல… பிழையும் முடிவு பெறாமலும் சொல்ல வேண்டியதை சொல்லி இருந்தது மூலம் தெரிந்து கொண்டாள் தாஷா..

ம் என்று ஒரு பெரும் மூச்சு விட்டுக் கொண்டு தன்னை சரிப்படுத்திக் கொண்டு அந்த அலுவலகத்துக்குள் நுழைந்ததுமே… ஒருவர் வந்து தன்னை அழைத்துக் கொண்டு அர்ச்சனா இடத்திற்க்கு சென்றார்..

அந்த இடத்திற்க்கு வந்ததும் அவர் சென்று விட.. அர்ச்சனா பக்கத்தில் இருந்த பெண் அர்ச்சனா பார்க்காது வாறு தாஷாவிடம் பேசியை கொடுத்து விட்டு..

தன் பக்கத்தில் தாஷாவை பார்த்த அதிர்ச்சி..அதுவும் தாஷாவில் உள்ளங்கையை பிடித்து அந்த பேசியை தான் கொடுத்து இருக்கிறோம் என்ற அந்த பிரம்மிபிலேயே அந்த பெண் அந்த இடத்தை விட்டு அகன்றாள்.

இப்போது அந்த இடத்தில் தாஷா அர்ச்சனா மட்டுமே இருந்தனர்.. அர்ச்சனாவுக்கு தாஷாவை தெரியும்.. அதனால் மெல்ல ஒரு புன்னகை சிந்தினாள்…

தாஷா அர்ச்சனாவின் புன்னகைக்கு பதில் புன்னகை சிந்த வேண்டும் என்ற நிலையில் எல்லாம் அவள் இல்லை..

அவளின் கலைந்த அந்த தோற்றம்.. முகற்றில் தண்ணீர் தெளித்து பின் அதை துடைத்து இருக்கிறாள் என்பதை அவளின் ஸ்டிக்கர் பொட்டு இடம் மாறி இருந்ததிலேயே தெரிந்தது தாஷாவுக்கு..

எந்த வித அலங்காரமும் இல்லாது.. பளிச் என்று இருந்தாள். அதுவும் அவள் சிரிக்கும் போது .. பல் வரிசையை காட்டாது தான் சிரித்தாள்.. அதுவும் மிக கலைப்பான புன்னகை.. அந்த புன்னகையையே அவளுக்கு அழகு சேர்க்கும் போது மனம் விட்டி சிரித்தால் இவள் எப்படி இருப்பாள்…?

கூடுதலாக அவ்ள் முகத்தில் குழந்தையின் சாயல் இன்னும் மிச்சம் இருந்தது.. தானும் அழகு தான் ஆனால்.. . தான் சந்தித்த ஆட்களின் மூலம் நான் தெரிந்துக் கொண்டதில் இன்னும் முகத்தில் குழந்தை சாயல் என்னுடைய பதினெட்டாவது வயதிலேயே போன பின் இப்போது எங்கு தேடி கண்டு பிடிப்பதாம்..

கூட இதையும் நினைத்தாள்.. ஆண்கள் எப்படி இருந்தாலும், தனக்கு வரும் துணை மட்டும் ஒன்றும் தெரியாத அப்பாவியாக இருக்க வேண்டும் என்று தான் நினைக்கிறார்கள்.. இதில் அஷ்வத்தும் விதி விலக்கு இல்லை போலவும் என்று நினைத்து அர்ச்சனாவுக்கு பதில் புன்னகையாக விரக்தி புன்னகை மட்டுமே அவளாள் சிந்த முடிந்தது…

“ போகலாமா…” என்று தாஷா அர்ச்சனாவை பார்த்து கேட்டாள்.

“ம்..” என்று சொல்லி விட்டு எழ பார்த்தவள் எழ முடியாது தடு மாறி போகவும்..

அவள் கையை பிடித்துக் கொண்ட தாஷா… நிற்க உதவி செய்த வாறே… “ சாப்பிட்டியா…?” என்று கேட்டாள்.

“ம்..” இல்லை என்பது போல் தலையாட்டிய அர்ச்சனாவிடம்..

“காலையில் இருந்தேவா…” என்றி தாஷா வினாவினாள்.

“ம் என்று சொன்னவள்..

“ அம்மா சாப்பிட தான் சொன்னாங்க.. நான் அஷ்வத் மாமாவை பார்க்கும் அந்த பயத்தில் சாப்பிட முடியாம அந்த ஓட்டலுக்கு போயிட்டேன்..” என்று இது வரை சாதரணமாக சொல்லிக் கொண்டு வந்தவள்.. அந்த ஓட்டல் என்று சொன்னதுமே.. பயம் மனதில் தன்னால் வந்தது..

இந்நேரம் தன் வீட்டுக்கு தெரிந்து இருக்கும்.. குறிப்பா தன் மாமா வீட்டுக்கு தெரிந்து இருக்கும்.. என்னை நம்புவாங்களா…? என்று நினைக்கும் போதே அர்ச்சனாவின் கண்கள் தன்னால் கலங்கி தான் போய் விட்டது..

தாஷாஅர்ச்சனாவின் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தவள் அவளின் முகத்தில் தெரிந்த கலகத்தில்..

“ பயப்படாதே.. சரியா ஆயிடும்.. அஷ்வத் சரி செஞ்சுடுவார்.” என்று தாஷா அர்ச்சனாவுக்கு தைரியம் அளித்தாள்.

என்ன தான் அர்ச்சனாவின் மீது லேசாக மிக மிக லேசாக பொறாமை பட்டாலுமே, இது போலான விசயத்தில் பெண்கள் மனது என்ன பாடு படும் என்று உணர்ந்ததால் அவளுக்கு தன்னால் தைரியம் வழங்கினாள்.

தனக்கு இது எல்லாம் ஒரு விசயமே கிடையாது.. இன்னும் கேட்டால் இது எல்லாம் ஒரு பாப்புலாரிட்டி போல் தான்..ஆனால் அர்ச்சனாவுக்கு..

இவர்கள் பேசிக் கொண்டே கார் பார்ங்கிங் வரை வந்து விட்டனர்..

அர்ச்சனா பயந்த வாறு.. “ எங்கு..?” என்று கேட்டாள்.

வீட்டில் என்ன சொல்வது..? ஏன் அங்கு போன..என்று கேட்டால் என்ன சொல்வது என்று பயம்.. அந்த பயத்தில் கேட்க..

தாஷா அர்ச்சனாவின் கை மீது கை வைத்து… “ உன்னை அஷ் ****** ஆஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு வர சொன்னார்.. அவர் அங்கு வந்துட்டார்..” என்று சொல்லிக் கொண்டே தாஷா தன் காரை இயக்கினாள்.

தாஷா சொன்ன இப்போது தன் வீட்டுக்கு போக தேவையில்லை என்றதும்.. அதுவும் இப்போது அஷ்வத்தை தான் நாம் பார்க்க போகிறோம் என்பதிலும்.. கொஞ்சம் பயம் தெளிந்தவளாய் காரில் நிமிர்ந்து அமர்ந்தாள்.

தாஷாவின் கார் ***** அந்த ஆஸ்பிட்டலின் நுழை வாயிலை அடையும் போது அஷ்வத்தும் இவர்களுக்காக அங்கு காத்துக் கொண்டு இருந்தான்..

வெளியில் யாரும் தெரியாது வர.. இது போல் முகத்தை பாதி மறைக்கும் கண் க்ளாஸ்.. மீதியை மறைக்க கேப்.. அவனின் இந்த வேடம் தாஷாவுக்கு தெரியும்..

அதனால் தாஷாவின் கால்கள் தன்னால் அஷ்வத் இருக்கும் பக்கம் சென்றது.. தாஷாவை பின் தொடர்ந்து அர்ச்சனாவின் கால்கள் சென்றது..

அர்ச்சனா அஷ்வத்தை எல்லாம் கவனிக்கவில்லை.. கவனித்து இருந்தாலுமே கண்டு கொண்டு இருப்பாளா என்பது சந்தேகமே..

தாஷாவை பார்த்ததும் அஷ்வத் அங்கு இருக்கும் ஒரு அறைக்குள் நுழைந்தான்.. அந்த ஆஸ்பிட்டல் அஷ்வத்தின் நண்பனுடையது தான்…

அதனால் அவனுக்கு தனிமை கொடுக்க அந்த அறையை அவனுடைய நண்பன் அஷ்வத்துக்கு கொடுக்க..அஷ்வத் சென்ற அறைக்குள் தாஷாவும் நுழைய, தாஷாவை பின் பற்றி அர்ச்சனா சென்றாள்.

அஷ்வத் அந்த அறைக்குள் நுழைந்ததுமே தன் க்ளாஸ் கேப் கழட்டி விட.. அர்ச்சனா அந்த அறைக்குள் நுழையும் போதே தாஷாவிடம்..

“ அஷ்வத் மாமா இப்போ வருவாங்களா…?” என்று ஒரு எதிர் பார்ப்புடன் கேட்டுக் கொண்டே தான் நுழைந்தாள்.

“ பொம்மா நான் உனக்கு முன்னாடியே வந்துட்டேன்.” என்று அஷ்வத் குரல் கேட்டதும், அர்ச்சனாவுக்கு என்ன தோன்றியதோ.. இது வரை மனதில் இருந்த பட படப்பு ஏதோ மறைவது போல்..

முதலில் அந்த போட்டோவை பற்றி பார்க்க தான் பேசியை கேட்டது.. பின் ஏனோ அதை நினைக்கவே பயந்து எங்கோ ஒளிந்துக் கொண்டால் நன்றாக இருக்கும் என்று அவள் மனது அடித்து கூற..

“ அஷ்வத் மாமா…” என்று குரல் உடைய அழுதுக் கொண்டே ஓடி வந்து அவள் ஒளியும் பகுதியாக அஷ்வத்தின் நெஞ்சத்தில் தன் முகத்தை பதித்துக் கொண்டாள்.

என்னை திட்டாதிங்க… இந்த இரண்டு பேரை ஹக் பண்ணவே இவ்வளவு டைப் பண்ண வேண்டி இருந்துடுச்சி.. நாளைக்கு ஒரு ஐந்து பக்கத்துக்கு அஷ்வத் அர்ச்சனா பேசுவது போல வெச்சி விடலாம்..ஓகேவா.. வாசகர்களே…




















 
Active member
Joined
May 11, 2024
Messages
122
அருமை 👌👌👌👌, இனி எல்லாம் அஷ்வத் பார்த்துக்குவான் என்ற நபிக்கையில் அர்ச்சனா அவனிடம் அடைக்கலம் ஆகிவிட்டாள் 🌺🌺🌺
 
Administrator
Staff member
Joined
May 9, 2024
Messages
813
அருமை 👌👌👌👌, இனி எல்லாம் அஷ்வத் பார்த்துக்குவான் என்ற நபிக்கையில் அர்ச்சனா அவனிடம் அடைக்கலம் ஆகிவிட்டாள் 🌺🌺🌺
ஆமாம் பா. தொடர்ந்து படித்து கருத்துகள் சொல்லவும் பா.. நன்றி🙏💕
 
Top