அத்தியாயம்…6
அஷ்வத் தன் திட்டம் என்ன என்று ஆரம்பிக்கும் முன்பே… அவளிடம் “ தாஷா இதை எனக்கு நீ செய்து கொடுத்தால், நான் உன்னை திருமணம் செய்துக் கொள்வேன்.. என்று நினைத்தால் …” என்று சொன்னவன் அடுத்து பேசாது அமைதியாகி இருக்க…
“ நீ அந்த அளவுக்கு லேசு பட்டவன் இல்லை என்று எனக்கு தெரியும்.. அதே போல தான் நான் அந்த அளவுக்கு சீப்பானவள் இல்லை என்பதும் உனக்கு தெரியும்..
அப்படி இருந்தும் நீ இதை என் கிட்ட சொல்றேன்னா ஒண்ணு விசயம் ரொம்ப பெருசா இருக்கனும்.. இல்ல நீ இது போல ஏதாவது ஒரு விசயத்தில் மாட்டி இருக்கனும்..” என்று தாஷா கேட்க..
இப்போதும் அஷ்வத் தாஷாவின் கேள்விக்கு பதி அளிக்கவில்லை.. ஆம் இப்போது தான் தாஷாவுக்கு அஷ்வத்தின் குடும்ப பின்னணி நன்கு தெரியும்.. அவன் ஏதோ ஒரு வகையில் தன் குடும்பத்தாலேயே மனதளவில் பாதிப்பட்டு இருக்கிறான்.. என்பது அவனுடன் பழகிய இந்த ஒரு வருடத்தில் அவள் புரிந்துக் கொண்டது..
ஆம் புரிந்துக் கொண்டது தான். அவன் தன் குடும்பத்தை பற்றியோ தன் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றியோ தன்னிடம் அவன் பகிர்ந்துக் கொண்டது கிடையாது..
இவள் சொல்லி இருக்கிறாள். தன் குடும்பத்தினரின் பணத்தாசை.. தன் அழகு அந்த ஆசைக்கு தூபம் போட்டது.. பின் தான் சந்தித்த பிரச்சனைகள் என்று எல்லாம் சொல்லி இருக்கிறாள் தான்..
அது என்னவோ தாஷாவுக்கு அஷ்வத்திடம் பழகும் போது மட்டும் வெறும் படுக்கைக்கு மட்டுமான ஒரு கம்பெனி என்று அவளாள் உணர முடியவில்லை.. அது வரை அவள் மீது ஆசைப்பட்டு அழைத்து , தன் விருப்பமின்மையை தெரிவித்த பின்னும், தன் வீட்டு ஆட்களின் மூலம் தன்னை அனுகியவர்களிடம் மட்டுமே படுக்கையை பகிந்திருந்த தாஷா, முதன் முதல் தான் விரும்பி இருந்தது இவனிடமே…
அதனால் தாஷாவுக்கு அஷவத் மிக ஸ்பெஷலே.. அஷ்வத்துக்கு தான் அப்படி இல்லை என்று அவளுக்குமே தெரியும் தான்.. ஆனாலும் அவனுக்காக எதுவும் செய்ய அவள் தயாராய் இருக்க..
அவன் சொன்னதோ.. “ அந்த விளம்பரக்கு நீ ஒத்துக் கொள் என்பதே…”
“இது தானா..? இது மட்டும் தானா..?” என்று தாஷா கேட்டாள்.
“ஆம் இது மட்டும் தான்.. நீ வேறு என்ன எதிர் பார்த்த..?” என்று அஷ்வத் கேட்டான்..
அதற்க்கு தாஷா எந்த ஒளிவும் மறைவும் இல்லாது.. “இல்ல அந்த மூர்த்தி க்ரூப்பின் இப்போதைய சேர்மேன்.. மனோஜை ஒரு முறை பார்ட்டியில் பார்த்தேன்.. அப்போ அவன் பார்த்த பார்வையும் சரியில்லை.. பேச்சும் சரியில்லை..
உனக்கும் அந்த மூர்த்தி க்ரூப்புக்கும் என்ன பிரச்சனை என்று தெரியலேன்னாலும், ஏதோ பிரச்சனை என்ற வகையில் தெரியும்.. அதனால் அன்றே அவனிடம் இருந்து நாசுக்கா விலகிட்டேன்..
இப்போ அவன் ***** விளம்பர கம்பெனி மூலம் என்னை அனுகுவது கூட.. உன்னை எதிலாவது மாட்டி விடவோ என்று தான் எனக்கு தோனுது…” என்று தாஷா அஷ்வத்திடம் தான் நினைப்பதை விளக்கி கூரினாள்..
“வெல்.. நீ சொல்வது போலவும் இருக்கலாம்.. இல்லேன்னா உனக்காவும் கூட இருக்கலாம்.” என்ற அஷ்வத்தின் பேச்சில்..
தாஷா… “எனக்கு புரியல…” என்று சொன்னாள்..
“ உனக்காக என்றால் உன் அழகுக்காக. அவன் எல்லாம் தூணுக்கு சேலை கட்டி இருந்தாலே உரசி பார்த்துட்டு போற ஜென்மம். உன்னை போல அழகு பெண்களை விட்டு வைப்பானா..?” என்று அஷ்வத் பேச்சுக்கு தாஷாவின் பக்கத்தில் இருந்து எந்த பதிலும் வராது போக..
“தாஷா..தாஷா…” என்று அழைத்தும் , அந்த பக்கம் இருந்து பதில் இல்லாது போகவும், அஷ்வத் பேசியை அணைக்கும் வேளயில்..
தாஷா… “ தேங்க்ஸ்…” என்று சொன்னாள்..
அஷ்வத்துக்கு தாஷா எதுக்கு தாங்க்ஸ் என்று சொல்கிறாள் என்று புரியவில்லை.. அதனால் எதற்க்கு என்று கேட்கவில்லை என்றாலுமே அவன் அமைதியாக இருந்தான்.
தாஷா பின் சொன்ன… “நீங்க என்னை அழகுன்னு சொன்னிங்களே அதுக்கு…” என்ற அவளின் பதிலை கேட்டு சிரித்தவன்.
“ஊரே சொல்லும் நீ அழகுன்னு.. “ என்று அஷ்வத் சொல்லவும்..
“ஊரு என்ன ஊரு.. இந்த உலகமே சொன்னாலும், நீ சொல்ற இந்த அழகு தான் எனக்கு மகிழ்ச்சி தருது அஷ்…” என்று தாஷா உணர்ச்சி மிகுந்த குரலில் சொன்னாள்.
இப்போது அஷ்வத் அமைதி காத்து இருக்க.. தாஷா.. “ நான் உன் கிட்ட அட்வாண்டெஜ் எடுத்துக்க மாட்டேன் அஷ்.. எனக்கு தெரியும்.. உன் மனதில் நான் நுழையலேன்னு…
எல்லோரும் என்னை மணக்க கேட்க.. இன்னும் கேட்டா கல்யாணம் ஆனவங்க கூட நான் என் மனைவியை டைவஸ் செய்துடுறேன் நாம கல்யாணம் செய்துக்கலாமா..? ஒரு நாள் இரவில் அவங்க இந்த முடிவை எடுத்து என் கிட்ட கேட்டு இருக்காங்க..
பல நாள் இரவு உன்னோடு இருந்தும், உனக்கு என்னை கல்யாணம் செய்துக்குற அளவுக்கு பிடிக்கலேன்னு எனும் போது..
நான் ஆம்பிளையா என்ன..? உன்னை கடத்திட்டு வந்து கல்யாணம் செய்துக் கொள்ள,. இல்ல ரேப்..” என்று சொல்ல வந்தவள் பின் அவளே சிரித்துக் கொண்டாள்..
“நம்ம இரண்டு பேர் கிட்டேயும் அது இல்ல.. புதுசா இழக்க என்ன இருக்குன்னு.. உடல் உறவில் திருமணம் என்றால், இந்நேரம் நீங்க எத்தனை திருமணம் செய்து இருக்கனும்.. நான் எத்தனை திருமணம் செய்து இருக்கனும்…” என்று சொல்லியவளின் குரலில் முன்பு இருந்த மகிழ்ச்சி இல்லை..அதில் விரக்த்தியின் சாயலே..
இதற்க்கு அஷ்வத் என்ன என்று சொல்வான் அமைதி மட்டுமே காத்தான். பின் தாஷாவே..
“நான் பார் பேச வேண்டியதை விட்டு என்ன என்னவோ பேசிட்டு இருக்கேன்.” என்று சொன்னவள்..
“நான் என்ன செய்யனும் அஷ்..” என்று கேட்டாள்.
அதற்க்கு அஷ்வத் “அது தான் முதல்லேயே சொல்லி விட்டேனே.. அந்த விளம்பரத்தை செய்..”
“அவ்வளவு தானா..?” என்ற தாஷாவின் கேள்விக்கு..
அஷ்வத்.. “ வேறு என்ன எதிர் பார்த்த…?” என்று கேட்டான்..
தாஷா தயங்கி தயங்கி.. “ அவன் கூட…” என்று அதற்க்கு மேல் பேச முடியாது தாஷா அமைதியாகி விட..
“நீயும் நானும் சுத்தமானவங்க இல்ல தான்.. ஆனா அதுக்கு என்று அவன் கிட்ட அது போல இருன்னு நான் சொல்வேனா..?” என்ற அஷ்வத்தின் கேள்விக்கு,
தாஷா…” இல்லை..” என்று சொன்னவள் .. பின் அவளே
“அப்போ எதுக்கு அந்த விளம்பரத்தை செய்ய சொன்ன அஷ்..” என்ற தாஷாவின் கேள்விக்கு அஷ்வத் பதில் அளிக்கவில்லை..
ஆனால் ஒன்று மட்டும் சொன்னான்..
“ உனக்கு எந்த பிரச்சனையும் வராது.. ஆனா நீ ரொம்ப உஷாரா இரு.. அதுவும் அவன் உன்னிடம் பேசும் போது கவனமா இரு. முடிஞ்சா அவன் உன்னிடம் பேசுவதை ரெக்கார்ட் செய்ய முடிந்தால் செய்..” என்று அஷ்வத் சொன்னதுமே..
“முடிந்தால் என்ன அஷ் முடிச்சி காட்டுறேன்…” என்று சொன்னாள்..
அஷ்வத் மனோஜூக்கு கட்டம் கட்டி தூக்க ரெடியாக இங்கு அவனோ.. அவன் வீட்டில் தன் மனைவியை சமாதானம் செய்துக் கொண்டு இருந்தான்.
ஸ்ருதி… “ சதாபிஷேகம் அன்னைக்கு அந்த கலசத்தை என்னை தூக்க சொன்ன போதே ஒரு மாதிரியாகி விட்டது.. இப்போ உங்க பாட்டி இப்படி சொல்றாங்க…” என்று கண்ணில் நீர் தளும்ப தன் கணவனின் மார்பில் சாய்ந்துக் கொண்டும் அழுது கொண்டும் இருப்பவளை சமாதானம் படுத்திக் கொண்டு இருந்தான் மனோஜ்..
“டாலி நமக்கு கல்யாணம் ஆகி ஐந்து வருடம் ஆகி விட்டது… குழந்தைய பத்தி பேசுறது இயற்க்கை தானே டாலி..
நான் கேட்டேன்னா உன் கிட்ட நமக்கு உடனடியா குழந்தை வேண்டும் என்று.. எனக்கு நீ தான் பேபி டாலி.. ஆனா பெரியவங்களுக்கு கல்யாணம் அடுத்து குழந்தை அது தானே எதிர் பார்த்தாங்க.. அதுவும் இல்லாம அவங்க எனக்கு மட்டும் பாட்டி இல்ல டாலி உனக்கும் அவங்க தான் பாட்டி…” என்று சொல்லி அவளுடன் கூடி விட்டு ஸ்ருதி உறங்கியதும், அப்பாடா என்று அவளை விட்டு தள்ளி படுத்தவன் தன் கை பேசியில் சதாபிஷேகம் அன்று அர்ச்சனாவை வித விதமாக அவளுக்கே தெரியாது எடுத்த படத்தை பெரிது படுத்தி பார்த்தவனுக்கு தூக்கம் கெட்டது தான் மிச்சம்..
அதுவும் ஒரு காலத்தில் டீன் ஏஜில் இவள் தன்னிடம் மயங்கியள் என்பதை சுகமாக நினைவு கூர்ந்தவனுக்கு, அப்போது எல்லாம் அவளை தான் பார்க்கும் போது எல்லாம் அவள் கண்கள் பட படக்க, தன்னை பார்ப்பதும் கீழே குனிவதுமாக இருப்பதும், தான் அவள் அருகில் செல்லும் போதே சிவந்த அவள் கன்னம் இன்னும் சிவக்க..அதை பார்க்கும் போதே அவனுக்கு போதை கொள்ளுமே..
ஆனால் சிவந்த அவள் கன்னத்தை தன் பல் கொண்டு இன்னும் சிவக்க வைக்கலாம் என்று நினைத்தால், அவள் அருகில் தான் சென்றாலே அவள் ஓட்டம் பிடித்து விடுவாள்…
அவளிடம் காதலை சொல்லவில்லை..காதல் இருந்தால் தானே சொல்ல.. ஆனால் அவளை திருமணம் செய்வதில் அப்போது அவனுக்குமே விருப்பம் தான்… அவள் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் வரை அவனுக்கு அது தான் எண்ணமாக இருந்தது…
என்று துளசிராமின் சொத்து கணக்கு வழக்கை பார்க்க நேர்ந்ததோ…
“,மனோஜ் என் ஆடிட்டர் பிரச்சனை பண்றான் நீ உன் கம்பெனி ஆடிட்டரை அனுப்பி வைக்கிறியா..?” என்று கேட்டதற்க்கு..
“இதுல என்ன மாமா இருக்கு ரவிய அனுப்பி வைக்கிறேன்.” என்று சொன்னவன் தன் கம்பெனியின் ஆடிட்டரும், தன் நண்பனுமான ரவியை தன் மாமனுக்கு உதவும் மாறு அனுப்பி வைத்தான்..
பின் அதை மறந்தவனாக தன் வேலையில் மூழ்கி போனவனை ஒரு வாரம் கழித்து சந்தித்த ரவி.. மனோஜிடம்..
“உன் மாமாவுக்கு ஒரு பெண் இருக்காளே…” என்று கேடடதற்க்கு,
“ ம் ஆமாம் பெரிய மாமாவுக்கும் ஒரு பெண் இருக்கு.. சின்ன மாமாவுக்கும் ஒரு பெண் இருக்கு.” என்று மனோஜ் சின்ன மாமாவுக்கும் ஒரு பெண் இருக்கு என்று சொல்லும் போதே மனோஜ் குரலே ரவிக்கு காட்டி கொடுத்து விட்டது…
“ எனக்கு இது போல ஒரு ஆப்ஷன் வந்தா என் தேர்வு பெரிய மாமா பெண்ணா தான் இருக்கும்.” என்ற ரவியின் பேச்சில் மனோஜ் அவனை பார்த்தான்.
“என்ன புரியலையா…? என்ன சொத்துடா.. என்ன சொத்து தோண்டா தோண்டா சும்மா சுரங்கத்தில் இருந்து அள்ளுவது போல அது பாட்டுக்கு வந்துட்டே இருக்கு..
நிஜமா சொல்றேன் உங்க பெரிய அத்தை அவங்க பெண்ணை உனக்கு கட்டி கொடுக்கிறேன் என்று சொன்னா கண்ணை மூடி ஒத்துக் கொள்.. அது தான் புத்திசாலி…
உங்க சின்ன அத்தை பெண்ணை நானும் பார்த்து இருக்கேன். நல்ல அழகு தான்.. அது ஒத்துக் கொள்ள வேண்டியது.. சின்ன வயசு டீன் ஏஜ் வேற இன்னும் அழகா தான் தெரிவா..
இருபத்தி ஐந்து வயதில் ஒரு குழந்தை பிறந்து இந்த அழகு இருக்குமான்னு பார்… ஏன் நம்ம கூட படிச்ச அந்த கல்பனாவை நம்ம ஸ்கூலே பார்க்குமே.. ஏன் நாம கூட தான் பார்த்தோம்..
ஆனா இப்போ ஒரே குழந்தை பிறந்துட்டு கொடி இடை இப்போ இந்த கோடியில் இருந்து அந்த கோடிக்கு சும்மா விரிந்து போய் இல்ல..
அப்போ அவளை பார்த்த நாம என்ன பேசிட்டோம்… இவளையாடா ஒரு காலத்தில் அப்படி பார்த்து வைத்தோம் என்று..
அதே தான் இப்போ நீ அழகுக்கு முக்கியத்துவம் கொடுத்துட்டு, பின் அதுவும் போய் போன்டி ஆனவரை உன் மாமனாருன்னு ஊர் உலகத்துக்கு சொல்லிட்டு, அசிங்கப்படனுமா..?
இல்ல கோடிஸ்வரனுக்கு ஒரே மருமகனாக ஆகி பெருமை படனுமா..? நீயே முடிவு செய்…” என்று ஏதோ கிருஷ்ணர் அர்ஜூனனுக்கு உபதேசம் செய்தது போல பேசி விட்டு அங்கிருந்த பழரசத்தை குடித்து விட்டு சென்று விட்டான்..
மூன்று நாள் யோசித்தவனுக்கு பதிலாய் ஸ்ருதி என்று முடிவு செய்த போது அன்று மாலையே அவனின் பெரிய அத்தை வைதேகி …
“ ஒரு பெண் தான் அல்ப ஆயுசுல போயிடுச்சி.. என் இன்னொரு பெண்ணாவது நல்லா என் கண் பார்வையில் இருக்க நினைக்கிறேன் அண்ணி…” என்று சொல்லி தெய்வானை கையை பிடித்துக் கொண்டவரின் கையின் தன் கை வைத்த தெய்வானை..
“கவலை படாதே வைதேகி.. நம்ம ஸ்ருதிக்கு ஏத்த நல்ல மாப்பிள்ளை தான் கிடைப்பான்.. அவள் ரொம்ப நல்லா இருப்பா பாரேன்..” என்று சொல்லி தெய்வானையும் தன் நாத்தனார் வைதேகி முகத்தை பார்த்தார்..
வைதேகி பேச்சை ஆரம்பிக்கும் போதே தெய்வானைக்கு வைதேகி எதற்க்கு வந்து இருக்கிறார் என்று தெரிந்து விட்டது.. தெய்வானை தெரிந்தும் தெரியாதது போல பேசிய பேச்சில் வைதேகி..
“அது தான் உங்க வீட்டுக்கு என் பெண்ணை கொடுக்க நினைக்கிறேன் அண்ணி…” என்று வெளிப்படையாக கேட்டு விட்டார்..
அப்போது தான் வீட்டுக்கு வந்த மனோஜின் காதிலும் பெரிய அத்தையின் பேச்சு காதில் விழுந்தது..
தெய்வானை பதில் அளிக்கும் முன் நம் மனோஜ்…. “நானே உங்க கிட்ட இதை பத்தி பேசனும் என்று நினைத்தேன் அத்த.. நீங்க உங்க மருமகனுக்கு அந்த கஷ்டத்தையும் கொடுக்காது நீங்களே இந்த பேச்சை ஆரம்பித்ததில் சந்தோஷம்..” என்று சொல்ல..
பின் என்ன அடுத்து அடுத்து பேசியதில் கல்யாண நாளும் குறித்து விட்டனர்.. அர்ச்சனாவுக்கு தான் இது எப்படி என்று யோசித்து யோசித்து ஒரு முடிவுக்கு வர முடியாது, எப்போதும் மனோஜை பார்த்தாலே வெட்கத்தில் ஓடுபவள்..
இப்போது அவளே அவன் முன் வந்து நின்று..
“அத்தான் நான் கேள்வி பட்டது உண்மையா…?” என்ற அர்ச்சனாவின் கேள்விக்கு மனோஜூம் ..
“என்ன கேள்வி பட்ட…?” என்று கேட்காமல்.
“ ஆமாம்…” என்ற அவனின் பதிலில் அர்ச்சனாவுக்கு அடுத்து என்ன பேச என்ன கேட்க என்று கூட தெரியாது முழித்திருந்தாள் பதினேழே வயதான அந்த பேதை..
“அ..த்..தான்.. அ..த்தா..”
அத்தானை கூட ஒழுங்காக சொல்ல முடியாது அர்ர்சனா திணறும் வேலையும் மனோஜ் பேசிய பேச்சில் அர்ச்சனா தெளிவானாள்..
ஆம் மயக்கத்தை உண்டக்கியவனே தன் பேச்சால் அதை தெளியவும் வைத்து விட்டான்.
“அத்தான் தான் அச்சூ.. உனக்கு நான் அத்தான் தான்.. அத்தை மகன் என்ற முறையில் அத்தானாக இருந்த நான் இப்போ உன் அக்கா ஸ்ருதிய கல்யாணம் செய்வதிலும் உனக்கு அத்தானா மாற போறேன்.” என்று அதோடு விடாது..
இவள் ஏதாவது உலறி கொட்டி விட கூடாதே என்ற எச்சரிக்கையில்… “ நீ என்னை பார்த்ததை நான் பெருசாவே எடுத்துக்கல அச்சூ.. . உன் டீன் ஏஜூக்கு அழகான பையனை அப்படி தான் பார்க்க தூண்டும்.. அதுவும் அத்தை பையன் எனும் போது.. கூடவே உன் வீட்டு கஷ்டம்.. நான் உன்னை கல்யாணம் செய்தா வசதியா இருக்கலாம்.. அப்படி எல்லாம் கூட நினச்சி இருக்கலாம்.. நீ கவலை படாதே இதை எல்லாம் நான் பெருசாவும் எடுத்துக்கல.. யார் கிட்டேயும் சொல்லவும் மாட்டேன்.. என்ன புரியுதா…?” என்ற அவன் பேச்சு அர்ச்சனாவுக்கு எச்சரிக்கை விடுவது போல் தான் இருந்தது...
அதாவது எதை பற்றியும் வாய் திறக்க கூடாது… திறந்தால் நான் இப்படி சொல்லி விடுவேன் என்று.. அதற்க்கு அடுத்து அர்ச்சனா எதுவும் பேசவும் இல்லை ..அவன் எதிரில் நிற்கவும் இல்லை..
அன்று மட்டும் கிடையாது.. இதோ இன்று வரையிலுமே அர்ச்சனா மனோஜ் எதிரில் நிற்பது இல்லை பார்ப்பதும் இல்லை..
அப்போது மனொஜூக்கு அது பெரியதாக தெரியவில்லை. இன்னும் கேட்டால் நல்ல வேல இவள் பிரச்சனை செய்யவில்லை.. என்று நினைத்தவன்.
எப்படி செய்வா…? நம்ம மிரட்டல் அப்படி இல்ல.. என்று அவனுக்கு அவனே பாராட்டு பத்திரம் வாசித்துக் கொண்டவன்.. தன் பெரிய அத்தை மகள் ஸ்ருதியை கை பிடித்து திருமண வாழ்க்கையை ஆரம்பித்து விட்டான்.
ஆனால் அவ்வ போது அர்ச்சானா வீட்டுக்கு வரும் போது எல்லாம் .. மனோஜின் மனம் என்ன அழகு… என்ன அழகு என்று எண்ணாது இருக்காது..
முதலில் அர்ச்சனாவை தன் மனைவியோடு ஒப்பிட்டு பார்க்க தான் அவளை பார்த்தான். அர்ச்சனா தன்னை கண்டு கொள்ளாது இருப்பதை பார்த்ததும், ஒரு காலத்தில் என்னை பார்த்தவள் தானே..
இப்போ என்ன என்று பார்த்தவன் ரவி சொன்னது போல இவளின் அழகு டீன் ஏஜில் தோன்றும் அழகு கிடையாது. உண்மையில் அர்ச்சனா அழகு மட்டும் கிடையாது பேரழகு என்பது இதோ இந்த ஐந்து வருடத்தில் அவனுக்கு உணர்த்தி விட்டது..
அதுவும் ஆறு மாதம் முன் தன் தாய் தந்தையின் முப்பதாவது வருடம் திருமண விழாவை அனைவரையும் அழைத்து கொண்டாடியது மூர்த்தி க்ரூப்..
அந்த விழாவுக்கு அனைவரும் வந்தனர்.. பெரிய பெரிய தொழில் அதிபர்கள்… போன தலை முறை தொழில் செய்பவர்கள்..அடுத்து இன்றைய இளைய தலை முறையினர் தந்தையின் தொழிலை எடுத்தும் இளைஞர்கள் அனைவரும் வந்தனர்..
வந்த இளைஞர்கள் பார்வை மொத்தமும் அர்ச்சனவிடன் மட்டுமே இருந்தது.. எப்போதும் அர்ச்சனா அழகு தான்.. அன்று முதல் முறை புடவையில் அதுவும் தன் அப்பா தங்கை மகளுக்கு என்று வாங்கி கொடுத்த புடவையில் ஜொலிக்க.. அன்று தான் அவள் முழு அழகும் அனைவருக்கும் தெரிந்ததோ என்னவோ..
அதுவும் ஒரு தொழில் அதிபரின் மகன் தன்னிடமே…
“ நாளை உங்க வீட்டுக்கு பெண் கேட்டு வரட்டுமா…?” என்ற கேள்விக்கு, முதலில் தன் சித்தப்பா மகள்.. மிஷா என்று நினைத்துக் கொண்டவன்.
“ ரமேஷ் அப்பா கிட்டேயும். சித்தப்பா கிட்டேயும் கேட்டு சொல்றேன்.. அப்புறம் பெண் கேட்டு வாங்க.. உங்களை பத்தி என் பேமிலிக்கு நல்லா தெரியும்.. அதனால ஜாதகம் பொருத்தம் இருந்தா கண்டிப்பா கொடுத்துடுவாங்க…” என்ற மானோஜின் பேச்சுக்கு அந்த ரமேஷ் சொன்ன..
“அப்படியே உங்க சின்ன மாமா கிட்டேயும் சொல்லிடுங்க மனோஜ்..” என்ற ரமேஷின் பேச்சில் இப்போது மனோஜ் குழம்பி போய் அவனை பார்த்தான்..
“ உங்க குடும்பம் தான் எல்லாம் அந்த வீட்டுக்கு செய்யிறிங்கன்னு நான் விசாரித்ததில் தெரிந்தது.. இருந்தும் பெண்ணோட அப்பா கிட்ட கேட்கனும் தானே..” என்ற போது தான் அவன் மிஷாவை கேட்கவில்லை.. அர்ச்சனாவை கேட்கிறான் என்று புரிந்தது..
இது தன் வீட்டு காதுக்கு போகவே கூடாது என்ற முடிவோடு “அவளுக்கு இப்போது செய்யிற ஐடியா என் சின்ன மாமாவுக்கு கிடையாது..”
அப்போதும் அந்த ரமேஷ் விடாது… “ எப்போ சொல்லுங்க.. நான் ஒரு வருடமோ இரண்டு வருடம் ஆனாலும் வெயிட் பண்றேன்..” என்ற அவனின் பேச்சு தன்னிடமும், பார்வை அர்ச்சனாவிடமும் இருப்பதை பார்த்து , அவனுக்கு வயிறு எரிந்து தான் போய் விட்டது…
“இல்ல ஒன்று இரண்டு வருடம் எல்லாம் இல்லை ..குறைந்தது ஐந்து வருடமாவது ஆகும்..” என்று மனோஜ் சொல்லி இவன் இது பற்றி இனி வாய் திறக்க கூடாது என்றி இவன் நினைத்தான்..
ஆனால் அந்த ரமேஷ் அப்போதும் விடாது.. “ஏன் செலவு செய்ய முடியாதுன்னு கல்யாணம் தள்ளி வைக்க நினைக்கிறாங்களா…? அது பத்தி எல்லாம் கவலை வேண்டாம் என்று உங்க மாமா கிட்ட சொல்லுங்க.
எல்லாம் நாங்களே பார்த்துக் கொள்கிறோம்… எங்களுக்கே சிட்டியில் மூன்று கல்யாண மண்டபம் இருக்கு.. அதிலேயே வைத்துக் கொள்ளலாம்.. இரண்டு ஓட்டல் இருக்கு அங்கேயே சாப்பாட்டுக்கு அரெண்ஜ் செய்து விடலாம்.” என்று அவன் அடுக்கிய அடக்களில் அர்ச்சனாவின் அழகு மட்டும் கிடையாது அவளின் பெருமையும் தெரிய வர..
பின் மனோஜ்.. “அவள் தம்பியை அவள் தான் படிக்க வைக்கிறா… இப்போ தான் அவன் பத்தாவது படிக்கிறான்.. அவன் டாக்டருக்கு படிக்க ஆசைப்படுறான்.. நல்லாவும் படிப்பான்.. உங்களுக்கு ஏதாவது மெடிக்கல் காலேஜ் இருக்கா…?” என்று மனோஜ் கேட்டான்..
அதன் பின் தான் ரமேஷ் அடுத்து எதுவும் பேசாது போய் விட்டதே… மனோஜூக்கு அப்போது தான் அர்ச்சனாவை தான் தவற விட்டது எவ்வளவு முட்டாள் தனம் என்பதே அவனுக்கு புரிந்தது..
அவனின் அந்த புரிதலை இன்னும் தெளிவாக்க அவனின் நண்பன் அந்த ஆடிட்டர் ரவி..
“என்னடா அந்த பொண்ணு இன்னும் அழகா ஆயிட்டா… வந்தவன் கண் எல்லாம் அவ மேல தான்டா…” என்ற சொன்னவனின் கண்ணும் அர்ச்சனா மேல் தான் இருந்தது…
அப்போது மனோஜ் அர்ச்சனாவை பார்த்தான்.. தன் அன்னையுடன் பேசிக் கொண்டு இருந்த தன் மனைவி ஸ்ருதியையும் பார்த்தான்.
இரண்டு மூன்று முறை மாறி மாறி பார்த்ததில், ஏதோ ஒரு முடிவு கட்டி திட்டம் இட ஆரம்பித்து, அந்த திட்டம் செயல் படுத்தி இதோ ஐந்து மாதம் கடந்து விட்டது..
இன்னும் கொஞ்ச நாளில் அவன் தீட்டிய திட்டத்தின் வெற்றி அவனுக்கு கிடைத்து விடும்..
பார்க்கலாம் கெட்டவன் திட்டம் பலிக்குமா..? கேடு கெட்டவன் திட்டம் பலிக்கமா…? என்று..
**************************************************************
மன்னிக்கவும் வாசகர்களே இக்கதையில் மனோஜூக்கும் ஸ்ருதிக்கும் திருமணம் முடிந்து மூன்று வருடம் கடந்து விட்டது என்று சொல்லி இருப்பேன்..அதை ஐந்தாக மாற்றிக் கொள்ளவும்..