அத்தியாயம் பன்னிரெண்டு
அந்த புதியவனை பார்த்து ப்ரியங்கா பேசாமல் இருந்தது சில நிமிடங்களே…. அதற்க்குள் அவனை அறிந்துக் கொண்டதற்க்கான புன்னகையோடு அவனிடம் சொன்னாள், “எஸ்…. அவரை தான் தேடுறேன்” என்று!
அவள் கூறியவுடன் அந்த புதியவனும் அவள் அமர்ந்திருந்த கல் பெஞ்சிலேயே சிறிது இடைவேளி விட்டு உட்கார்ந்தான். அவனின் முகத்தையே ஆவளாக பார்த்துக் கொண்டிருந்த ப்ரியங்காவிடம் திரும்பி பேசினான்.
“நான் முதல்ல என்னை இன்டர்ட்யூஸ் பண்ணிக்கறேன். என்னோட பெயர் ராம். நானும் ராஜீவ்வும் ஒரே ஸ்கூல்ல தான் படிச்சோம். நானும் இதே ஏரியா தான். ஸோ, இன்னும் நல்ல ப்ரெண்ட்ஸா இருக்கோம். தென், ராஜீவ் இன்னிக்கு வர மாட்டான். அவனுக்கு எதோ முக்கியமான வேலை இருக்காம்.
நேத்தே சொல்லிட்டான் வர மாட்டேன்னு” அவன் பேசி முடிக்க கூட இல்லை…. அதற்க்குள் நம் முந்திரிக் கோட்டை, முந்திக் கொண்டு பேச ஆரம்பித்தாள். தன்னை பற்றியை ஒரு அறிமுக படலத்தை முடித்து, அவனை தனக்கு எப்படி தெரிய வந்தது என்றும் கூறினாள்.
“ஆமா, நானும் பார்த்திருக்கேன் உங்களை…. நீங்க ராஜ்வ்வோட சேர்ந்து வாலிபால் விளையாடுவிங்களே இந்த கரவுன்ட்ல?? நான் உங்களை ‘பைய்யா’னு கூப்பிடலாமா?”
கண்களில் ஆர்வத்தோடு கேட்ட ப்ரியங்காவை பார்த்து, புறுவத்தை உயர்த்தினான் ராம். ஆனால், உடனே தலையசைத்து ஆமோத்தும் பதிலளித்தான். “கண்டிப்பா கூப்பிடுமா! யார் வேண்டாம்னு சொன்னா?
ஆனா நீ வெறும் ராஜீவ்வை மட்டும் தான் பார்த்தேனு நினைச்சேன்… என்னை கூட தெரியுது உனக்கு?”
அவனின் இந்த நேரடி தாக்குதலில் ப்ரியங்கா திரு திருவென முழித்தாள். மனதிற்க்குள் ஆயிரம் எண்ணங்கள் ஓடியது…. “எல்லோருக்கும் தெரியற மாதிரியா நாம பார்த்திருக்கோம்?
ஆனா, பார்க்க வேண்டியவன் பார்த்த மாதிரியே தெரியலையே? கடவுளே!!! இது எல்லாம் எப்போ தான் முடியுமோ தெரியலை….”
அவள் முழிப்பதை பார்த்து சிரிக்க ஆரம்பித்தான் ராம். அந்த சிரிப்பில் நினைவுகளிலிருந்து மீண்டு வந்தாள் ப்ரியங்கா. அவனை ஒரு சங்கடமான பார்வை பார்த்து, “நான் ராஜீவ்வை பார்க்கிறேன்னு உங்களுக்கு எப்படி பைய்யா தெரியும்?” என்று கேட்டாள்.
ஒரு இளகிய முகத்துடன், “எப்படி தெரியுமா? நீ இந்த கரவுன்ட் உள்ள வந்ததிலிருந்து வெளிய திரும்பி போறவரைக்கும் அவனை மட்டும் தானேமா பார்க்குற? அப்புறம் எப்படி தெரியாம இருக்கும்?” என்று பதிலுக்கு திருப்பி கேட்டான்.
ஒரு அசட்டு புன்னகை முகத்தில் படற தலை குனிந்தாள் ப்ரியங்கா. அவளின் குனிந்த தலையை பார்த்து மனதில் இத்தனை நாள் வைத்திருந்த கேள்வியை கேட்டான் ராம்.
“ராஜீவ்வை நீ லவ் பண்ணுறியா ப்ரியங்கா?”
ஒரு சில அமைதியான நிமிடங்கள் கழிந்தது…. ப்ரியங்கா நிமிர்ந்து அவனை பார்த்து, “எனக்கு தெரியல பைய்யா!! என்னால கரக்டா ஒரு முடிவுக்கு வர முடியல, இந்த விஷயத்துல…. ஆனா, அவரை ஒரு நாள் கூட பார்க்காம இருக்க முடியல… அது தான் ஏன்னு எனக்கு நானே கேட்டுகறேன்”
அவளின் பதிலை கேட்டு, கை தட்டினான் ராம். “அப்போ இது கண்டிப்பா லவ் தான்…. ராஜீவ்வுக்கு உன்னை மாதிரி ஒரு பொண்ணு தான்மா சரி வருவா! யூ போத் வில் மேக் அ கிரேட் கப்பூள்”
அவனின் பதிலை கேட்டு சந்தோஷம் முகத்தில் குடி புகுந்தாலும், தன் எண்ணத்தில் இருந்த குழப்பம் தீர்ந்தது என்று நினைக்கவில்லை ப்ரியங்கா. இன்னும் அவளுக்கு தெளிவு படுத்திக்க வேண்டியது இருந்தது. அவளின்னுள்ளேயே, தெளிவு படுத்திக்க வேண்டியது இருந்தது, நிறைய விஷயங்கள்….
இந்த பையன் இல்லைனா வேற பையன் என்ற ரகம் இல்லை ப்ரியங்கா… அதனாலோ என்னவோ ராஜீவ் தான் தன் வாழ்க்கை என்று சட்டென்று முடிவேடுக்க அவளால் முடியவில்லை.
ஏன்னென்றால் இருவருக்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தன…. இருவரும் திருமணம் செய்யும் போது, இரு குடும்பங்களும் இணையும் வேளையில் நிறைய வேறுப்பாட்டை உணரலாம்.
அந்த ஒரு காரணத்திற்க்காகவே ப்ரியங்கா திண்டாடினாள். இதேல்லாம் மனதில ஓடிய நேரத்தில், ராம் அவளிடம், “சரி அப்புறமா பார்க்கலாம் சிஸ்…! என்ன ஹெல்ப் வேணும்னாலும் கேளுமா… என்னால முடிஞ்சா கண்டிப்பா செஞ்சு தரேன். ஓகே? பை!” என்று விடைப்பெற்று சென்றான்.
போகும் அவனையே பார்த்து, சிறிது நேரம் உட்கார்ந்து இருந்தாள் ப்ரியங்கா. பிறகு, கிளம்பி வீட்டுக்கு சென்று விட்டாள். அன்று இருந்த மூட் அவுட்டில், ஜாகிங் எல்லாம் செய்யவில்லை.
வீட்டுக்கு வந்தவுடன் படுக்கை அறையில் போய் புகுந்து கொண்டாள். அன்று வார விடுமுறை தினம் என்பதால், மதுவும் அந்த அறையில் தான் இருந்தாள். இவளின் வாடிய முகத்தை பார்த்து, புருவம் தானாக சுருங்கியது.
“ஹே… என்னாச்சு?? ஏன்டி இப்ப்டி முகத்தை தூக்கி வைச்சுருக்க?” என வினவினாள் ப்ரியங்காவின் உயிர் தோழி! அவளை பார்த்து, பெட்டில் பக்கத்தில் தட்டி அவளை உட்காரும் படி கூறினாள் ப்ரியங்கா.
“என்னவோ பெருசா சொல்ல போறனு தெரியுது…. சீக்கிரமா சொல்லு!” மதுவின் சொல்படி கேட்டு, முதல் முறையாக ப்ரியங்கா எந்த விஷயத்தையும் சுத்தி வளைக்காமல், நேரடியாக அன்று நடந்ததை கூறினாள்.
தான் ராஜீவ்வை பார்க்காமல் தவித்தது, ராம் வந்தது, அவனிடம் பேசியது, அவன் விடைபெற்றது உட்பட எல்லாவற்றையும் கூறினாள். கேட்ட மதுவிற்க்கு ராமின் மேல் கோபமாக வந்தது.
‘இவனுக்கு என்ன தெரியும்னு ரெண்டு பேரும் நல்ல கப்பூள்னு எல்லாம் சொல்லிருக்கான்… நானே இவ எங்கடா அந்த மாதிரி எதாவது சொல்லிடுவாளோ, பயப்பட்டுடு இருக்கேன். இதுல இவன் வேற….’
மனதில் ராம்மை திட்டியபடியே ப்ரியங்காவை பார்த்தாள் மது. ப்ரியங்கா வாய்க்கு வாய், வார்த்தைக்கு வார்த்தை, ‘ராம் பைய்யா’ என வினவியது எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல், ஆனது.
அந்த கோபத்தில் ப்ரியங்காவை பார்த்து, “எல்லாம் ஓகே! ஆனா, எல்லாரையும் அண்ணா, இல்லனா பைய்யானு கூப்பிடுற. பட், ராஜீவ் அண்ணாவை மட்டும் கூப்புட மாட்ற. ஏன்?” என்று வினவினாள்.
மதுவிடம் எல்லாவற்றையும் சொல்லிய பிறகு, லேசான மனதுடன் இருந்தாள் ப்ரியங்கா. இதனாலேயே அவள் இப்படி கேள்வி கேட்டவுடன் அவளின் குறும்புத்தனம் தலை தூக்கியது!
அந்த குறும்புத்தனமே மதுவை மேலும் கடுப்பேத்தும் விடையை கூறவும் வைத்தது! அப்படி ப்ரியங்கா என்ன கூறினாள் என்று பார்ப்போமா?
“அவரை பார்த்தா எனக்கு அண்ணானு கூப்பிட நேச்சுரலா வரமாட்டேங்குது” முகத்தில் ஒரு புன்னகையோடு, சமீபத்தில் தன் மனம் கவர்ந்த பாடலில், வரும் ஹீரோயின் கூறுவதையே அவளும் கூறினாள்.
இதை கேட்டு, தலையில் அடித்துக் கொண்டு அவளை முறைத்தாள் மது. திட்டவும் மறக்கவில்லை! “பெரியயயயய காஜல் அகர்வால்னு நினைப்பு!!! போடி… ரொம்ப ஓவரா போற… அவ்வளவு தான் என்னால சொல்ல முடியும்”
மதுவின் சலித்த குரலை கேட்க ப்ரியங்கா அங்கே இல்லை…. கனவில் ராஜீவ்வுடன் டூயட் பாட சென்று விட்டாள் நம் ஹீரோயின்.
அன்று முழுவதும் ஒரு வித நிலையில்லா தன்மையில் இருந்தாள் ப்ரியங்கா. அடுத்த நாள் ராஜீவ்வை பார்க்க செல்லும் வரை அது தொடர்ந்தது என்னவோ உண்மை. இது எல்லாம் எங்கே போய் முடியுமோ என்று பயந்தாள் மது.
பெற்றோரை பிரிந்து தனியாக இருக்கும் இந்த நேரத்தில், அவளை பார்த்துக் கொள்ள வேண்டியது தன்னுடைய கடமையாகவே கருதினாள் அந்த உத்தமபுத்திரி! இருந்தாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை அவளால். அடுத்த நாள், விடிவதற்க்குள் மைதானத்தில் இருந்தாள் ப்ரியங்கா. காதல் படுத்தும் பாடு அப்படி….
அவளை நிறைய நேரம் காக்க வைக்காமல், அவளின் நாயகனும் வந்தான். அவன் ஓடும் போது, அவனை பார்த்தப்படியே வழக்கமாக அமரும் கல் பெஞ்சில் அமர்ந்து இருந்தாள் ப்ரியங்கா.
இந்த முறை இவள் பார்ப்பதை ராஜீவ்வும் கவனித்தான். இவளை கடந்து போகும் போது, “ஹாய்! உங்க வீடு இந்த ஏரியால தான் இருக்கா?” என்று கேட்டான். அவன் கேட்டது என்னவோ ‘தெரிந்த பெண் ஆகிற்றே, தினமும் பார்த்து பேசாமல் போகிறோமே, இரண்டு வார்த்தை பேசுவோம்’ என்ற நிலையில் தான்.
ஆனால், ப்ரியங்காவிற்க்கு தன் கண்களையும் காதுகளையும் நம்பவே முடியவில்லை…. ராஜீவ் தன்னோடு பேசுகிறானா? அதுவும் ஜாகிங்கை நிறுத்திவிட்டு பேசுகிறானா? அதிலேயே அவள் மனம் நின்றது. மூளையும் சுத்தமாக வேலை செய்யவில்லை….
இவள் அதிர்ந்து நிற்பதை பார்த்து, ராஜீவ்வுக்கு குழப்பமாக இருந்தது. ‘ஏன் இந்த பொண்ணு அப்படியே ஷாக் ஆகி நிக்குது? வீடு இந்த ஏரியால இருக்கான்னு தான கேட்டேன்?’
என்ன தாப்பாக கேட்டு விட்டோம் என்றே ராஜீவ்வின் நினைப்பு இருந்தது. மற்றப்படி அவள் தன்னை விரும்புவாள், அதனால் தான் அதிர்ந்து நிற்க்கிறாள் என துளியும் யோசிக்கவில்லை.
சிறிது நேரத்திலேயே தெளிந்த ப்ரியங்கா, அவனுக்கு சிரித்த முகத்துடனேயே பதில் அளித்தாள். “ஆமா ரா…சார்! இங்க பக்கத்துல இருக்கும்..” என்று தான் இருக்கும் அப்பார்ட்மென்டின் பெயரை கூறி, “அங்க தான் சார் இருக்கேன்” என்று கூறினாள்.
“ஓகே.. குட்” என்று தன் ஜாகிங்கை மீண்டும் தொடர்ந்தான் ராஜீவ். அவன் சென்றவுடன் அந்த இடத்திலேயே துள்ளி குதிக்க ஆரம்பித்தாள் ப்ரியங்கா. மிகவும் சந்தோஷமாக உணர்ந்தாள்.
தன்னையும் மதித்து ராஜீவ் பேசிவிட்டான் என்றே அவள் மனம் குதுகளப்பட்டது…. அதே நினைப்புடன் ராம் வந்தவுடன் அவனிடம் கையை ஆட்டி விட்டு வீட்டிற்க்கு புறப்பட்டாள் அவள்.
வீட்டில் வேறு மது பயந்துக் கொண்டு இருந்தாள். ‘இவ ஒவ்வொரு நாளும் ஜாகிங் போயிட்டு வரற்து நமக்கு தான் பயமா இருக்கு! வந்து என்ன எல்லாம் நடந்ததுனு சொல்ல போறாளோ நினைச்சாளே திக்குத் திக்குனு இருக்கு… ஆனா மது உன்னோட நிலைமை இவ்வளவு மோசமா ஆகிடுச்சே’ என்று தனக்கு தானே புலம்பிக் கொண்டாள்.
அவள் பயந்தது சரியே என்பது போல, ப்ரியங்காவும் வந்து, “மதுதுதுதுது!!!!” என்று உற்சாகமாக கத்திக் கொண்டே வந்தாள். ‘என்ன இவ்ளோ சந்தோஷமா வரா? அண்ணா கிட்ட பரப்போஸ் பண்ணிடாளா???’
மது பயந்த அளவுக்கு இல்லை என்றாலும், அவள் கூறிய விஷயம் மதுவின் வயிற்றில் புளியை கரைத்து, குழம்பு வைத்தது!!!
“இன்னிக்கு என்னாச்சு தெரியுமா? ராஜீவ்வே வந்து என்கிட்ட ‘உங்க வீடு இங்க தான் இருக்கானு’ கேட்டாரு. எனக்கு பேச்சே வரலை. அப்புறமா நான் நம்மளோட அப்பார்மென்ட் பெயரை சொன்னேன். தென், திரும்பி ஜாகிங் பண்ண போயிட்டாரு”
ப்ரியங்கா கூறக் கூற, மதுவின் முகம் மோசமாக மாறியது. அவள் ஏதோ நினைக்கிறாள் என்று ப்ரியங்காவிற்க்கும் புரிந்தது. என்னவென்று கேட்டாள் மதுவிடம்.
மது உடனே ஒரு கடுப்பான குரலில், “இல்ல, சும்மாவே நீ ரொம்ப பண்ணுவ… இதுல அண்ணா வேற உன்கிட்ட பேசிட்டாறா? இனிமேல், உன்னை கைல புடிக்க முடியாதுனு நினைச்சேன்.”
அவள் கூறியதை கேட்டு, ‘ஹா…ஹா’ என்று சிரித்தாள் ப்ரியங்கா. அடுத்த நாள் தனக்கு, இருக்கும் ஆப்பை பற்றி அறியாமல். அறிந்திருந்தால் மைதானத்திற்க்கு போயிருக்கவே மாட்டாள் அவள்.
அப்படி அவளை புறட்டி போட்ட விஷயம் நடந்தது அடுத்த நாள் அதிகாலையில்….
அடுத்த நாள் எப்பொழுதும் போல கிளம்பினாள் ப்ரியங்கா. மனதில் இன்றும் தன்னுடன் ராஜீவ் பேசுவானா? என்ற யோசனை ஓடியது. மைதானத்தில் இவள் சென்றவுடன் ராஜீவ் வந்திருக்கானா என்று கண்களால் ஒரு நிமிடம் அலசினாள்.
அவனை காணாதவுடன், ‘சார் இன்னும் வரலை போல. நாம அதுக்குள்ள ஜாகிங் முடிச்சிடுவோம்’ என்று தன் ஓட்டத்தை ஆரம்பித்தாள்.
அவள் ஓடிக் கொண்டு இருக்கும் போது, ஒரு பெண் அவளை வழி மறைத்து நின்றாள். அவளை சுற்றிக் கொண்டு ப்ரியங்கா ஓட முயன்றதும், “உன்கிட்ட பேச தான் நிக்கறேன். நில்லு” என்று அதட்டலாக தமிழில் வந்தது குரல். ப்ரியங்காவிற்க்கு அவள் எதோ சொல்கிறாள் என்று மட்டும் புரிந்தது.
அதனால், அந்த பெண்ணிடம் திரும்பி, தனக்கு தமிழ் தெரியாது என்றும், மீண்டும் ஆங்கிலத்தில் கூறும்படியும் வலியுறித்தினாள்.
அவள் ‘தமிழ் தெரியாது’ என்றவுடன் எதிர்பக்கம் இருந்த பெண்ணிடம் ஒரு இகழ்ச்சி புன்னகை தோன்றி மறைந்தது. பின் தான் கூறியதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தாள் அந்த பெயர் அறியாத பெண். அப்போழுது தான் அந்த பெண்ணை நோட்டம் விட்டாள் ப்ரியங்கா.
பார்ப்பதற்க்கு தன் வயதை ஒத்த பெண்ணாகவே தோன்றினாள். ரொம்ப அழகாக தான் இருந்தாள்…. படித்த பெண் போலவும் இருந்தாள். பின், ஏன் ஒரு மாதிரி பேசிகிறாள் என்று புரியாமல் நோக்கினாள் ப்ரியங்கா!!
அந்த பெண் தான் சந்தியா!!! ஆம், இப்போழுது அர்ஜுனின் மனைவியாக இருக்கும் சந்தியா தான் அவள்…. இவள் நோட்டம் விடுவதை பார்த்து, கைகளை சொடுக்கி ப்ரியங்காவின் கவனத்தை தன் பக்கம் திருப்பினாள் சந்தியா.
ப்ரியங்காவும் அவளை அலட்சியமாக பார்க்க ஆரம்பித்தாள். சந்தியா ஒரு வெறுப்புற்ற குரலில் ப்ரியங்காவிடம் பேசினாள், இல்லை இல்லை திட்டினாள் என்றே கூற வேண்டும்!!
“ஹலோ! நீ தான் ராஜீவ்வை பார்க்குற பொண்ணா? ஹ்ம்ம்ம், அவனை பார்ப்பதுக்கே இந்த கரவுன்ட்டுக்கு வரேன்னு கேள்விப்பட்டேன்…. என்ன லவ்வா?”
இதை கேட்ட ப்ரியங்காவிற்க்கு என்ன பதில் கூறுவது என்றே தெரியவில்லை. தன்னுடைய ஃப்ளீங்ஸ் தனக்கே சரியாக புரியாத போது, அவளிடம் என்னவென்று கூறுவது??? அதனால், அமைதியாக இருந்தாள். ஆனால், சந்தியா அமைதியாக இல்லை…
“நீ உன்னோட மனசுல என்ன தான் நினைச்சிட்டு இருக்க? டெய்லி கரக்டா ராஜீவ் வர நேரத்துக்கு வருவியாமே? ராஜீவ் யாருன்னு தெரியுமா? எனக்கும் ராஜீவ்வுக்கும் என்ன ரிலேஷன்ஷிப் தெரியுமா?”
இதற்க்கு அவளையும் அறியாமல், ப்ரியங்காவின் மனதிற்க்குள் ஒரு வித பயம் பரவியது…. சந்தியா கேட்ட தோரணையில், தானாகவே தலை இடது வலமாக அசைந்தது.
இதை பார்த்து இன்னும் எகத்தாளமாக சிரித்தாள் சந்தியா. “நானும் ராஜீவ்வும் சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்க போறோம்…. இதுல நீ வேற ஏதாவது மனசுல ஆசைய வளர்த்துக்க போற!!! அதனால, உன்னை வார்ன் பண்ண தான் இங்க வந்தேன்.”
ப்ரியாங்காவுக்கு கைகள் எல்லாம் ஜில்லென்று ஆகியது…. மனது படப்படவென அடித்துக் கொண்டது!!! மூளை சந்தியாவின், ‘நானும் ராஜீவ்வும் சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்க போறோம்’ என்ற வரியிலேயே நின்றது. மேலே யோசிக்க கூட முடியவில்லை.
“நான் சொன்னது உனக்கு புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். சோ, பெட்டர் ஸ்டே அவே! ஓகே?” கூறிவிட்டு சந்தியா திரும்பிச் சென்றாள். ஆனால், என்ன தோன்றியதோ திரும்பி ப்ரியங்காவிடம் வந்து, “நான் ஏதாவது உன்னை ஹேர்ட் பண்ணற மாதிரி பேசி இருந்தேன்னா, சாரி…. பட், ஒண்ணு மட்டும் ஞாபகம் வெச்சுக்கோ! ஹீ இஸ் மைன்!” என்றாள்.
இதை எல்லாம் கேட்ட ப்ரியங்காவிற்க்கு ஒன்று மட்டும் நன்கு விளங்கியது… தான் ராஜீவ்வை முழுமையாக காதலிக்கிறோம், என்பது தான் அது!
தன் தோழி மது கேட்ட போது உணராத காதல், ராம் பைய்யா கேட்ட போது உணராத காதல், இன்னொரு பெண் தானும் ராஜீவ்வும் கூடிய விரைவில் திருமணம் செய்யப் போகிறோம், அதனால் நீ ஒதுங்கு என்று கூறியப் போது, புது தட்டில் தெரியும் முகம் போல, பளிச்சென்று தெரிந்தது.
ஆனால், இது எல்லாம் அவள் உணர்ந்து திரும்ப சந்தியாவிடம் பேசலாம் எனும் முன், சந்தியா கரவுன்டின் வெளியே தன் ஸ்கூட்டியை எடுத்து சென்றுவிட்டாள். ஆக, அவள் சொன்னது அனைத்தும் உண்மையே!
தன்னை வார்ன் செய்யவே இங்கே வந்திருக்கிறாள்…. வேலை முடிந்தவுடன் ராஜீவ்வை பார்க்காமல் கூட சென்றுவிட்டாள்…. ராஜீவ்!!! அவனை எப்படி மறக்கமுடியும்??? தன்னால் முடியுமா? சரியாக அப்போழுது தான் ராஜீவ் மைதானத்தின் உள்ளே வந்துக் கொண்டிருந்தான்.
அவனை பார்த்ததும், தன் சக்தி, கட்டுப்பாடு எல்லாம் இழந்தது போல, அழ ஆரம்பித்தாள் ப்ரியங்கா. எவ்வளவு ஆசைப்பட்டேன்…. இவன் எனக்கு இல்லை என்று தெரியும் போது தானா, என்னோட காதல் எனக்கு புரிய வேண்டும்?? என்ன கொடுமை!!
ப்ரியங்கா எப்போழுதும் சட்டென்று அழ மாட்டாள். அதுவும், வீட்டில் அல்லாமல், வெளி இடங்களில் அவள் அழுததே இல்லை எனலாம். அப்படிப்பட்டவள் தன் கண்ணீரை துடைக்க கூட தெம்பின்றி அழலானாள்!!!
இதை ராஜீவ்வும் கவனித்தான்… அவன் கவனிக்கிறான் என்று தெரிந்தவுடன், கண்ணீரும் ஓட்டமுமாக கரவுன்டை விட்டு, ஓடினாள் ப்ரியங்கா. வீட்டிற்க்கு எப்படி வந்து சேர்ந்தாள் என அவளுக்கே தெரியாது!
வந்து சேர்ந்தவள், ஓவென அழ திகைத்து நிற்பது, மதுவின் முறையாற்று….. ஆனால், இந்த பிரச்சனையை சொன்னவுடன் அதற்க்கு ஒரு விடிவும் சொன்னது அவளே…. என்ன விடிவும் சொன்னாள்?