Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Kangal Verkindrana...14

  • Thread Author
அத்தியாயம் பதினான்கு

ப்ரியங்கா கூறியதை கேட்டதும் ராஜீவ்விற்க்கு சிறிது நேரம் ஒன்றுமே விளங்கவில்லை….

‘லூசா இருப்பாளோ??? இவ நிஜமா தான் சொல்றாளா? இல்ல நம்மள கலாய்க்கிறாளா?’ என்றே அவன் நினைத்தான். நினைத்ததை கேட்கவும் செய்தான். ப்ரியங்காவோ, ‘நான் சொல்வது எல்லாம் உண்மை! உண்மையை தவிர வேற்றொன்றும் இல்லை!!’ என்பது போல், கண்களில் கூற்மையுடன் தலையசைத்தாள்.

பார்த்த ராஜீவ்விற்க்கு தான் கோபம் டன் கணக்கில் வந்தது. எதுவும் பதில் கூறாமல், திரும்பி மதுவையும் முறைத்துவிட்டு, நடக்க ஆரம்பித்தான். ஆனால், ப்ரியங்கா விடுவாளா என்ன?

அவன் முன் திரும்ப வந்து, “என்னாச்சு? எனக்கு ஒரு ரிப்ளை கூட சொல்லாம போறீங்க?” இதை அவள் கேட்டது ஆங்கிலத்தில்! அதையே பிடித்துக் கொண்டான் ராஜீவ். “ஏன் இப்போ தமிழ்ல பேசல?

உன்னால நான் பேசுற லாங்க்வேஜ் கூட புரிஞ்சிக்க முடியல! எப்படி நம்ம ரெண்டு பேருக்கும் ஒத்துப் போகும்? இதையெல்லாம் நீ யோசிக்கவே மாட்டியா???? இங்க பாரு! நீ எப்போ கேட்டாலும் என்னோட பதில் ‘நோ’ தான்…. சோ டோன்ட் டிஸ்டெர்ப் மீ! ஓகே?”

சொல்லிவிட்டு இரண்டடி எடுத்து வைத்தவன், அவள் புறம் திரும்பி, “தென், இனிமே உன்ன இந்த கரவுன்ட்ல நான் பார்க்க கூடாது!!! புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்”

அவன் சென்ற திக்கயே பார்த்து கொண்டிருந்த ப்ரியங்காவிற்க்கு மனதின் ஓரம் வலித்தாலும், “இதை எதிர்பார்த்ததே…..” என்று தன்னையே தேற்றிக் கொண்டாள்.

மீண்டும் தன்னுடைய உற்சாகத்தை வரவழைத்து, அவனிடம் சென்றாள். ராஜீவ் ஜாகிங் சென்றுக் கொண்டிருந்த வேகத்திற்க்கு ஈடுக் கொடுத்து ஓடினாள் ப்ரியங்கா. மதுவால் இதை எல்லாம் தூரத்தில் இருந்து வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது!

கூட ஜாகிங் செய்ய அரம்பித்த ப்ரியங்கா, ராஜீவ்வை பார்த்து தன்னுடைய கைகளை ஆட்டி, “ஏ.சி.பி. சார்… என்ன பேசிட்டு இருக்கும் போதே வந்துட்டீங்க??”

எந்த பதிலும் அந்த பக்கம் இருந்து இல்லை என்றவுடன், “ஹோ… கோபமா இருக்கீங்களா? உங்கள இன்னும் கோபமாக்குற மாதிரி ஒரு விஷயம் சொல்ல போறேன்” குதூகலக் குரலில் கூறினாள்.

இதற்க்கும் எவ்வித ரெஸ்ப்பான்ஸும் இல்லை…. ஆனால், ப்ரியங்கா பேசிக் கொண்டே போனாள், அவள் பாட்டிற்க்கு. “நான் எப்போவும் போல, இங்க ஜாகிங் பண்ண வர தான் போறேன். இந்த கரவுன்ட் பப்ளிக் ப்ராப்பர்ட்டி! அதனால, இங்க யார் வேணும்னாலும் வரலாம்! ஜாகிங் பண்ணலாம், எக்ஸர்சைஸ் பண்ணலாம், லவ் கூட பண்ணலாம்!

எதுக்கு இப்போ மட்டும் முறைக்கறீங்க? கண்டிப்பா பண்ணலாம்…. நோ டென்ஷன் சரியா? சோ, மீட் யூ டுமாரோ… பை!!” என்று சொல்லி கையசைத்துவிட்டு, அவன் மேலும் திட்டுவதற்க்கு வழியில்லாமல் செய்து, மதுவிடம் விரைந்தாள் ப்ரியங்கா.

இவள் போனவுடன் மழை இல்லை புயல் வந்து சென்றது போல, உணர்ந்தான் ராஜீவ். பெரும் சேதாரத்திற்க்கு உள்ளாகியது அவன் நெஞ்சம்! காரணம் இது வரை அவனிடம் யாரும் காதல் சொல்லியது இல்லை. முதன் முதன்லாக ‘ஐ லவ் யூ’ என்று தைரியமாக ஒரு பெண் கூறியது அவனுக்கு புதிதாக இருந்தது.

அவனிடம் நட்பாக தோழமையாக பழகுவர், ஏன் சிலப் பெண்கள் கோபமாக அவனிடம் சண்டைக்கு கூட சென்றது உண்டு. ஆனால், லவ், ப்ரப்போஸ் எல்லாம் இல்லை! சந்தியாவும் இதுவரை அந்த மூன்று மந்திர வார்த்தைகளை சொன்னதில்லை!

பல வழிகளில், தன் மனதில் தன்னை அறியாமலே ப்ரியங்காவை பற்றி நினைத்துக் கொண்டிருந்தான் ராஜீவ். அன்று முழுக்க அந்த நினைப்பு இருந்தது. அந்த நினைப்பு ஈவ்னிங் தன் வீட்டில் சந்தியாவை பார்க்கும் வரை தொடர்ந்தது…..

****************************************************************************************************அங்கே, மதுவின் பாடு தான் திண்டாட்டம் ஆகியது வழக்கம் போல!

ப்ரியங்கா தன்னுடைய காதலை ராஜீவ்விடம் சொல்லியது அவளுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும், அவளால் முழுமையாக அதில் பங்கெடுக்க முடியவில்லை. காரணம் ராஜீவ்வின் நிராகரிப்பு.

அவ்வளவு எளிதில் ராஜீவ் ப்ரியங்காவை ஏற்றுக் கொள்ள மாட்டான் என மது நினைத்தாள். ஆனால், கவலைப் பட வேண்டியவளோ சந்தோஷமாக தன் பெற்றோருடன் பேசிக் கொண்டிருந்தாள்.

ப்ரியங்காவின் விளையாட்டுத்தனமும், வெகுளித்தனமும் அவளை மேலும் வருந்தியது. பெற்றோருடன் பேசி முடித்து வந்தவளிடம் தன் ஆதங்கத்தை கொட்டினாள் ப்ரியங்கா. கேட்ட ப்ரியங்காவின் முகம் சலனம் இல்லாமல் பதிலளித்தது.

“அதுக்கு தான் ராமண்ணா இருக்காரே! அவர் பார்த்துப்பார் எல்லாத்தையும்… எனக்கு ஹெப் பண்ணுறேனு சொல்லிருக்கார் தெரியுமா?”

“ப்ரியா! அவர் யார் என்ன, எதுவுமே உனக்கு தெரியாது. அப்புறம் எப்படி அவரோட பழகுற? நீ ஒண்ணும் அந்த ராம் கிட்ட எல்லாம் ஹெப்புக்கு போக வேண்டாம் சொல்லிட்டேன்.”

“நீ அவர பார்க்கல ப்ரியா! அதனால தான் இப்படி எல்லாம் பேசுற. அவர் நிஜமாலுமே நல்ல டைப். அது மட்டும் இல்லை… என்னோட உள் மனசு சொல்லுது அவர் தான் எங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைப்பாருனு!”

மதுவால் மேலும் எதையும் விவாதிக்க முடியவில்லை! ஆனால், ப்ரியங்கா கூறியவற்றில் ஒன்று மட்டும் உண்மை. ராம் தான் அவர்கள் இருவரையும் சேர்த்து வைத்தான்….. ஆனால், சேர்த்து வைத்த விதம் தான் தவறாகியது!!!

****************************************************************************************************

மாலையில் வீடு திரும்பும் போதே பார்த்துவிட்டான் ராஜீவ். சந்தியாவின் தந்தையும், தன்னுடைய தாய் மாமனுமான சேகரின் காரை.

பார்த்த நிமிடத்தில் புரிந்தும் போனது, என்ன நடக்க போகும் என்று. ‘இன்னிக்கு ஆப்பு கண்ஃபார்ம்’ என்று தன்னுள்ளேயே பேசியபடி உள்ளே சென்றான் ராஜீவ்.

அவன் எதிர்பார்ப்பை துளியும் பொய்யாக்காமல், அவன் மொத்த குடும்பமும் உட்கார்ந்து இருந்தது ஹாலில்! அதில் நடுநாயகமாக சந்தியா!!! சந்தியாவை ராஜீவ் பார்த்தான் என்பதைவிட முறைத்தான் என்பதே சரியாகும். அந்த அளவிற்க்கு கோபம் கொப்பளித்தது கண்களில்….

“பாவி… பத்த வெச்சுட்டா நல்லா!” உள்ளுக்குள் புகைந்தாலும் வெளியில் எதையும் காட்டிக் கொள்ளாமல், அனைவரையும் வரவேற்றான் இன்முகத்துடன்...! மேலும் யாரிடமும் பேசாமல் நேராக தன்னுடைய அறைக்கு சென்றான் ராஜீவ்.

ஆனால், அறையிலேயே எவ்வளவு நேரம் இருக்க முடியும்? மீண்டும் கீழே வந்தான், முகத்தை நார்மலாக வைக்க கஷ்டப்பட்டு. அவன் கவலைப்பட்டது சரியே என்பது போல, ராஜீவ்வை பார்த்ததும், கேள்விக் கனைகள், பறக்க தொடங்கின…..

“யார் ராஜ் அந்த ப்ரியங்கா? அவளுக்காக என்னை திட்டுவியா நீ? அவ என்ன அவ்ளோ முக்கியமா உனுக்கு?” இது யார் கூறி இருப்பார், என்று நான் சொல்ல வேண்டியது இல்லை!! அதே அதே, சந்தியாவே தான்….

அடுத்து அவளை பெற்றவர். “என்ன ராஜ் இது? சந்தியா என்னென்னவோ சொல்றா? இது எல்லாம் உண்மையா?” சேகரன் குரலே அப்படி இல்லை என கூறு, என்று வற்புறுத்தியது. எல்லார் முகத்தையும் ஒரு முறை பார்த்தான் ராஜீவ்.

“நான் சொல்றதை ஃபர்ஸ்ட் கேளுங்க! நான் ஒண்ணும் அந்த பொண்ணை சப்போர்ட் பண்ணலை! என்ன நடந்ததுனா…” பேசிக் கொண்டே இருந்தவன், மீண்டும் யோசனையில் மூழ்கினான். ‘ப்ரியங்கா என்னை பார்க்கறானு தெரிஞ்சதுக்கே, அவளை திட்டினா சந்தியா!

இதுல இப்போ அவ லவ் பண்றதை வேற சொன்னேன்னா…. வேற வினையே வேண்டாம்.’

‘அப்புறம் ரெண்டு பேரும் சேர்ந்து, கரவுண்டுல எல்லார் முன்னாடியும், மறுபடியும் சண்டை போட்டு, என்னோட இமேஜை மொத்தமா டேமேஜ் பண்ணிடுவாங்க! அதனால சந்தியா விஷயத்தை சொல்லாம, இப்போதைக்கு எப்படியோ சமாளிப்போம்.’

ராஜீவ் மனதில் எடுத்த முடிவுடன், மீண்டும் சேகரின் பக்கம் திரும்பி, “இவ ஏதோ தெரியாம அந்த பொண்ணை திட்டிட்டா மாமா. அந்த பொண்ணு அத பெரிய விஷயமா என்கிட்ட வந்து சொன்னா. அதனால, அவ முன்னாடி கொஞ்சம் திட்டுற மாதிரி சீன் போட்டேன்.

அவ்வளவு தான்…. உடனே, அப்பா அம்மானு எல்லாரையும் கூட்டிட்டு வந்துருவியே?”

சேகரிடம் ஆரம்பித்தாலும் சந்தியாவிடம் தான் முடித்தான், ராஜீவ். இதை கேட்டு, எல்லோர் முகமும் சிரிப்பை போர்த்தியது, சந்தியா உட்பட, நிஷாவை தவிர! அவளுக்கு தெரியாதா? தன்னுடைய அண்ணன் எதையோ மறைக்கிறான் என்று.

பிறகு கேட்டு கொள்ளலாம் என்று விட்டு விட்டாள். குரங்கு போய், வாலு வந்துச்சாம் டும்டும்டும், என்ற கதையாக, ப்ரியங்காவின் விஷயத்தை மறந்து, ராஜீவ்-சந்தியாவின் திருமணத்தை பற்றி பேச துவங்கினர்.

ஐய்யோ! என்றானது ராஜீவ்விற்க்கு…. இதை எல்லாம் பார்த்து சும்மா உட்கார்ந்து இருக்கும் தன் தாத்தாவை முறைத்தான் ராஜீவ். அவர் இவன் முறைப்பை பார்த்து கண்ணடித்தார்!

நிஷா ஹை-பை குடுத்தாள் தாத்தாவிற்க்கு. ராஜீவ் பொறுமை இழந்து கடைசியில் அவனே பேச வேண்டியதாக போயிற்று. “நானும் எத்தனை வாட்டி சொல்றது உங்ககிட்ட? எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லைனு!

புரிஞ்சிக்கவே மாட்டிங்களா யாரும்? ப்ளீஸ், நானே நல்ல மாப்பிள்ளையா பார்த்…”

“போதும் ராஜ். இதுக்கு மேல ஒண்ணும் சொல்ல வேண்டாம்! இது பாட்டியோட ஆசை! நீங்க சின்ன வயசுல இருக்கும் போதே இந்த கல்யாணத்த முடிவு பண்ணிட்டோம்!”

சேகரனின் குரலில் இப்போது அதட்டல் இருந்தது! அதற்க்கெல்லாம் பயப்படுவானா ராஜீவ்?? மீண்டும் பேச வாயெடுக்கும் முன், அவன் தாத்தா குறுக்கிட்டு, விவாதத்தை முடித்தார்.

“எதுக்கு இப்போவே ரெண்டு பேரும் சண்டை போடுறீங்க? முதல்ல சந்தியா படிச்சு முடிக்கட்டும். அதுக்கு இன்னும் ரெண்டு, மூணு மாசம் இருக்கு! அப்புறம் பார்த்துக்கலாம் இந்த விஷயத்தை!”

இந்த குரலை மீறி யாரும் பேசவில்லை. ஆகையால், சிறிது நேரம் பேசிவிட்டு, அவர்களின் வீட்டிற்க்கு சென்றனர், சந்தியாவின் குடும்பத்தினர். அவர்கள் போனதும் முதல், வேளையாக நடந்தது அனைத்தையும் தன் வீட்டினருடன் பகிர்ந்தான் ராஜீவ்.

இதுவே அவன்!! சந்தியாவிடம் மறைத்த விஷயத்தை, வீட்டில், யாரிடமும் சொல்லாமல் இருக்க முடியவில்லை அவனால்! அதானாலேயே அவனை முழுதாக நம்பினர் அவன் பெற்றோர்! நிஷாவுக்கும் இப்போது தான் அவன் பொய் கூறியதன் அர்த்தம் புரிந்தது.

முதலில் ரியாக்ட் செய்தது அவன் தாத்தா தான்!! “சூப்பர்டா ராஜீவ்! உனுக்காக ரெண்டு பொண்ணு வெயிட்டிங்… யாராவது ஒருத்தர கை காட்டு. தாத்தா நடத்தி வைக்கிறேன் கல்யாணத்தை!”

“தாத்தா நீங்க வேற டென்ஷன் பண்ணாதீங்க, சொல்லிட்டேன்!!!” ராஜீவ்வின் கோபமான முகத்தை பார்த்து அவர் ஏதோ சொல்ல வரும் முன், அவன் அப்பா ராஜேந்திரன் பேசினார்.

“அப்பா, கொஞ்ச நேரம் காமெடி பண்ணாம இருங்க. ராஜீவ், நீ சொல்லு. அந்த பொண்ணுகிட்ட ஒழுங்கா சொல்லிட்டியா? அவ உன்னை திரும்ப டிஸ்டெர்ப் பண்ணுவாளா?”

“தெரியலப்பா! நான் முடிவா சொல்லிட்டேன் முடியாதுனு. ஆனா அவ ஒத்துக்கற மாதிரி தெரியல! நானே என்ன பண்ணறது தெரியாம இருக்கேன். இதுல சந்தியாவும் மாமாவும் வேற!! பட், ஒன் திங். அப்பா, அம்மா இன்னிக்கு சொல்றது தான்!

நான் கண்டிப்பா சந்தியாவை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்! திஸ் இஸ் ஃபைனல்!! ஓகே வா?”

“ஏன்டா சும்மா சும்மா, சந்தியாவ கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்ற?” தெரியாதது போலவெ, கேட்டார் கீதா, ராஜீவ்வின் அம்மா! ஒவ்வொரு முறையும் அவர் இதை கேட்பதும் ராஜீவ் திரும்பத் திரும்ப ஒரே பதிலை கூறுவதும் இன்றளவும் நடந்துக் கொண்டிருக்கிறது அவர்கள் வீட்டில்.

“என்னால, சொந்ததுக்குள்ள கல்யாணம் பண்ண முடியாதுமா. போதுமா? அதுமட்டும் இல்ல. சந்தியா என் கூடவே வளர்ந்த பொண்ணு! அவள போய் எப்படிமா கல்யாணம் பண்ண முடியும்? ப்ளீஸ் இதை பத்தி பேசாதீங்கமா, இனிமேல்! எனக்கு ரொம்ப எரிச்சலா வருது….”

மகன் இப்படி கூறியவுடன் அவனை நினைத்து பெருமைப்படுவதா, இல்லை கஷ்டப்படுவதா என குழம்பிப் போனார், கீதா! வழக்கம் போல், ராஜேந்திரனும் ஈஷ்வர் தாத்தாவும் தான் அவரை சமாதனப்படுத்தினர்.

இவனின் மறுப்பை பார்த்தே, கீதா பெரிதாக சந்தியா மருமகளாக வருவதை பற்றி, எந்தவித எதிர்பார்பும் வைத்துக் கொள்ளவில்லை. ஆனால், நிஷாவிற்க்கு இப்போது ஒரு எதிர்பார்ப்பு உதித்தது மனதில்!

அதை அப்படியே தன் சகோதரனிடம், கொட்டினாள் படுக்க செல்லும் முன். அனைவரும் படுக்க ஆய்த்தாமாகி அவரவர் அறைக்கு சென்றவுடன், நிஷா ராஜீவ்வின் அறைக்கு சென்றாள். உள்ளே நுழைந்தவுடன், அவனிடம் பேச வேண்டும் என்றாள்.

ராஜீவ்வும் அவள் முன் அமரவும், தன் மனதில் உதித்த கேள்வியை கேட்டாள் தன் தமயனிடம்!

“ராஜ், ஏன் நீ ரெண்டு பேரையுமே கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு பிடிவாதமா இருக்க? என்ன ரீஸன் ஒழுங்கா சொல்லு!”

“இப்போ தான் கொஞ்ச நேரம் முன்னாடி படிச்சு படிச்சு சொன்னேன்! தெரியாத மாதிரி கேக்கற?” ராஜீவ்வின் குரலில் கோபமும் எகத்தாளமும் சரிசமமாக ஒளித்தது.

“ஏன்டா, இந்த சில்லி ரீஸன்காகவா நீ ரெண்டு பேரையும் வேண்டாம்னு சொல்ற? உனுக்கே கொஞ்சம் ஓவரா இல்ல? உன்னை சொல்லி தப்பில்ல! ஒண்ணுக்கு ரெண்டு பொண்ணா உன் பின்னாடி சுத்தறாங்கல? நீ இதுவும் சொல்லுவ இன்னமும் சொல்லுவ… என்னை மாதிரி யாருமே பின்னாடி வராம கஷ்டப்பட்டா தான் உனக்கு அதோட அருமை தெரியும்!”

“என்ன கஷ்டப்படுற இப்போ? லூசு மாதிரி பேசுறதை ஃபர்ஸ்ட் நிறுத்து”

“என்ன கஷ்டப்படுறேனா? வீட்டுக்கு வெளிய பெருசா ‘ராஜீவ் குமார், ஐ.பி.ஸ், ஏ.சி.பி.’னு போர்ட் வெச்சிட்ட. அதை பார்த்தே ஏரியால எல்லா பசங்களும் ஓடுறாங்க. இதுல காலேஜ்லையும் நீ ஏ.சி.பி.னு தெரிஞ்சு போச்சு! அப்புறம் எங்க பின்னாடி வரற்து???ஹ்ம்ம்… என்னோட கஷ்டம் எல்லாம் உனக்கு புரியாது!

சரி உன்னோட விஷயத்துக்கு வா! நான் பேசுறேன்டா அப்பா, அம்மாகிட்ட! உனக்கு அந்த ப்ரியங்காவை பிடிச்சு இருந்தா அவளையே கல்யாணம் பண்ணிக்கோ! உன்னை பிடிச்சு இருக்குனு வரவங்கள தூக்கி ஏறியாதடா ராஜ்! ரொம்ப தப்பு…”

“அம்மா தாயே! உன்னோட சொற்பொழிவுக்கு ரொம்ப தேங்க்ஸ்! எனக்கு தெரியும் என்ன பண்ணனும்னு. இப்போ போய் தூங்கு! குட் நைட்.”

ராஜீவ் கூறியவுடன் கோபமாக தன்னுடைய ரூம்மிற்க்கு வந்த நிஷாவுக்கு, எப்படி அவனுக்கு சொல்லி புரியவைப்பது என்று தெரியவில்லை… அவளுக்கு ராஜீவ் சந்தியா அல்லது ப்ரியங்காவை திருமணம் செய்ய வேண்டும். அவ்வளவு தான்…. யோசிப்போம், ஒரு ஐடியா வராமயா போயிடும், என்று யோசித்துக் கொண்டே உறங்கினாள்.

அன்று அவளுக்கு தெரியவில்லை. ப்ரியங்காவே யோசித்து வாய்ப்பை உருவாக்கிப்பாள் என. ஆனால் ப்ரியங்கா செய்தது அதுவே!!!

அடுத்த நாள் காலையில், முன் தினம் கூறியது போல, சரியாக ஆறு மணிக்கு தன்னுடைய அட்டென்டன்ஸை கொடுத்தாள் மைதானத்தில்! காதலி என்றால், இவளை போலவன்றோ இருக்க வேண்டும்!!

வழக்கம் போல், கொஞ்சம் ஜாகிங், நிறைய சைட் அடித்து முடித்தவுடன் ராம்மிற்க்காக காத்திருந்தாள். அவன் வந்தவுடன் அவன் மொபைல் நம்பரை வாங்கிக் கொண்டு, வீட்டிற்க்கு கிளம்பினாள். ராஜீவ் உள்ளே வந்ததும் அவளை பார்த்ததுடன் சரி… அதுக்குப்பின் அவளின் பக்கம் கூட திரும்பவில்லை!

வீட்டிற்க்கு வந்த ப்ரியங்கா முதலில் அழைத்தது ராமை தான்! அவனிடம் பேசி ராஜீவ் மறுநாள் ஒரு தனியார் கிளப் நடத்தும், மரக்கன்று நடும் விழாவில் கலந்து கொள்வதை அறிந்தாள்.

கேட்டவுடன் முடிவு செய்தாள் தானும் அங்கு செல்ல வேண்டும் என. அடுத்த நாள் போகவும் செய்தாள் சரியான நேரத்தில். ராஜீவ்விற்க்கு தான் இவளை பார்த்தது ஆச்சரியமாக போயிற்று. ‘இவ தெரிஞ்சு வந்தாளா? இல்லை தெரியாம வந்தாளா?’

சிந்தனை ஓடிக்கொண்டிருக்கும் போது, சிந்தனையின் நாயகியே வந்து நின்றாள் அவன் முன். “என்ன யோசிறீங்க? நான் நீங்க வருவவீங்கனு தெரிஞ்சு தான் வந்தேன்!”

“எப்படி தெரியும் நான் இங்க வருவேன்னு?”

ராஜீவ்வின் கேள்விக்கு சிரித்தப்படி, பதிலளித்தாள் ப்ரியங்கா! “அது ஸஸ்பென்ஸ்…. நீங்க ‘ஐ லவ் யூ’ சொல்லுங்க உடனே சொல்றேன்! என்ன சொல்றீங்களா?”

ராஜீவ் முறைத்து சென்றுவிட்டான் இதை கேட்டு. அவனுக்கு இவள் பேசியதை யாரும் கேட்காமல் இருக்க வேண்டுமே என்று கவலையாகி போயிற்று…. அவன் கவலை அவனுக்கு!

‘பப்ளிக்ல எப்படி பேசனும்னு கூட தெரியல! இவ எல்லாம் லவ் பண்ண வந்துட்டா!’ திட்டியபடி சென்றான் அலுவகத்திற்க்கு.

ஆனால், அவன் கூறியபடி தான் என்ன செய்கிறோம் என்றே அறியாமல் செய்துக் கொண்டிருந்தாள் ப்ரியங்கா! இல்லை என்றால், ராம்மை முழுமையாக நம்பி இருக்க மாட்டாள்.

காதல் வந்தால், புத்தி மழுகிவிடும் என்று கூறியது யாருக்கு ஒத்து போனதோ இல்லையோ…. ப்ரியங்காவிற்க்கு நன்றாகவே ஒத்துப் போனது! அப்படி தான் ராஜீவ்வை பார்த்து வந்த இரவு, ராம் இவளை அழைத்து ராஜீவ்வை மடக்க ஒரு நல்ல ப்ளான் இருப்பதாக கூறியவுடன் யோசிக்காமல், அந்த ப்ளானுக்கு ஓகே சொன்னாள் ப்ரியங்கா.

ராம்மின் சதி வலையில் தான் விழுவதை அறியாமல், விளையாட்டு போல் இருந்தாள் அவள். ஆனால், விளையாட்டு வினையாகியது முடிவில்!!!
 
Top