Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Kangal Verkindrana - 15

  • Thread Author
அத்தியாயம் - 15

அன்றைக்கு தன் கலாபக் காதலனை, பார்த்து இரண்டு வார்த்தை பேசியதால் கொஞ்சம் சந்தோஷமம் நிறைய குழப்பமுமாக மிதந்து கொண்டிருந்தாள் ப்ரியங்கா. இப்படியே, எத்தனை நாள் பார்த்துக் கொண்டும், பேசி கொண்டும் மட்டுமே இருக்க முடியும்??

இன்னும் சில மாதங்களில் தன் வீட்டிலும் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்து விடுவார்கள்… அதற்க்கு முன் தன் வீட்டில் ராஜீவ்வை பற்றி சொல்ல வேண்டும்!! அதுக்கு அவன் ஃபர்ஸ்ட் லவ் பண்ண வேண்டும்! எப்படி அவளின் உணர்வுகளை அவனுக்கு புரியவைப்பது??

இதுவே சில நாட்களாக, அவள் மனதில் ஓடிக் கொண்டிருந்த விஷயம். அவளை சொல்லியும் தப்பில்லை! ராஜீவ்வை ஒத்துக்கொள்ள வைப்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல என்று அவளுக்கும் தெரியும். அதனாலேயே, மிகவும் டென்ஷனாக இருந்தாள் ப்ரியங்கா.

அந்த நேரத்தில் தான் கரக்டாக ராம், அவளுக்கு தொலைப்பேசியில் அழைத்தான். ராமின் பெயரை பார்த்ததும் அவசரமாக எடுத்து, “ஹாய், அண்ணா! எப்படி இருக்கீங்க?” என்றாள் உற்சாகத்துடன். அப்பொது தான் ராம் தன்னிடம் ஒரு நல்ல ஐடியா, இருப்பதாக கூற, நம் காதல் கண்மணிக்கு, ஒரு க்ளாஸ் பூஸ்ட் குடித்தது போல, முகமே பளிச்சென்று ஆகியது.

“சூப்பர் பைய்யா! என்ன ப்ளான்னு சொல்லுங்க?”

“நாளைக்கு நம்ம ரெண்டு பேரும் ராஜீவ்வை பார்த்து பேசலாம். நான் பேசுனா, ராஜீவ் கண்டிப்பா ஒத்துப்பான்னு தோணுது…”

“பட் அண்ணா, நீங்க இதுல இன்வால்வ் ஆகலைனு தான சொன்னீங்க?”

“எஸ்! முதல்ல அப்படி தான் நினைச்சேன். ஆனா, இப்போ இதுல சந்தியா வேற உள்ள வரா. சோ, எப்படியாவது ராஜீவ்வை உன்னோட சேர்த்து வைக்கனும்.

அதனால, தான் நான் வந்து பேசறேன்! அப்பயாவது ராஜ் அன்டர்ஸ்டான்ட் பண்ணிப்பான்னு நினைக்கிறேன். பாக்கலாம்… என்ன நடக்குதுனு!”

“ரொம்ப தாங்க்ஸ்ணா! சரி நாளைக்கு எங்க மீட் பண்ணலாம்?? நீங்களே ராஜீவ்வை கூட்டிட்டு வர்றீங்களா?”

“இல்லமா! நான் கூப்டேன்னா அவன் எங்க ஃப்ரெண்ஸ் எல்லாரையும் கூட்டிட்டு வந்துருவான்…. அப்புறம் ப்ளானே சொதப்பிடும்! அதனால நீயே கால் பண்ணு அவனுக்கு. அது தான் கரக்டா இருக்கும்”

“ஓகே அண்ணா! எங்க கூப்பிடனும் அவரை?”

“இங்க நம்ம ஏரியாவுக்கு கொஞ்சம் தள்ளி இருக்குற, அப்துல்லா பார்க்குக்கு அவனை கூப்பிடு. நீ கூப்பிட்டவுடனே அவன் வந்துர மாட்டான்! பட், நீ அவன் வர வரைக்கும் போக மாட்டேன்னு சொல்லி, அங்கயே இரு! அப்போ தான் உன்னோட லவ்வோட சீரியஸ்னஸ் அவனுக்கு புரியும்!

அவன் வந்தவுடனே எனக்கு ஒரு மேசேஜ் மட்டும் அனுப்பிடு! நானும் அங்க வந்துரேன்! ஓகே வா??”

“எல்லாம் ஓகேண்ணா! ஆனா, அவர் கடைசிவரைக்கும் அங்க வரலேனா, என்ன பண்றது?”

“கண்டிப்பா வருவான்! எனக்கு தெரியும் அவனுக்கும் உன்னை கொஞ்சம் பிடிச்சிருக்கு! இல்லனா, அவன் கண்டிப்பா வேற மாதிரி தான் இந்த விஷயத்தை ஹான்டில் பண்ணிருப்பான். அதனால, யூ டோன்ட் வொறி! பி ஹாப்பி….”

நக்கலும் சிரிப்புமாக முடித்த ராமின் குரலை கேட்டு, எல்லாம் சாதாரனமாக தோன்றியது ப்ரியங்காவிற்க்கு!!! எப்படியும் நாளை அவனை கண்டிப்பாக ‘ஐ லவ் யூ’ சொல்ல வைப்பது என சபதமே எடுத்தாள்.

ஆனால், தான் ‘சாரி’ என்ற வார்த்தையை மட்டுமே சொல்ல இருப்பது, அவளுக்கு தெரியவில்லை.

இந்த யோசனைக்கிடையில், அடுத்த நாள் வெகு சிறப்பாக உதித்தது. வழக்கம் போல், ப்ரியங்கா ஜாகிங் செல்லாமல், போர்வையை இழுத்து மூடி தூங்கவும், மதுவிற்க்கு பயம் எழுந்தது. என்ன பயமா? தோழிக்கு உடம்பு முடியவில்லையோ, என்ற பயம் தான்….

அதை உறிதிப்படுத்த ப்ரியங்காவின் போர்வையை விலக்கி, அவளின் கழுத்தில் கையை வைத்துப் பார்த்தாள் மது. இதனால், தூக்கத்தில் இருந்து கலைந்த ப்ரியங்கா தோழியை முறைத்து பார்த்து, “என்ன மது?” என்று எரிச்சலுற்ற குரலில் வினவினாள்.

“என்னவா? இன்னிக்கு நீ ஜாகிங் போலயா?” இந்த பதில் கேள்வியை கேட்டு, ப்ரியங்கா மேலும் எரிச்சலுற்றாள். “தூங்கிட்டு இருக்கறவுள எழுப்பி ஜாகிங் போலயானு கேக்குற? லூசா நீ??” பதிலே கூறாமல், மீண்டும் கேள்வியை கேட்டுவிட்டு போர்வையை இழுத்து மூடி, விட்ட தூக்கத்தை கன்டினியூ செய்தாள் ப்ரியங்கா.

“ஆமாடி, உனக்கு எல்லாம் ஃப்ரெண்டா இருக்கேன்ல? நான் லூசு தான்! எல்லாம் என்னோட தலையெழுத்து! ஆண்டவா, காலையிலேயே இவ என்ன செய்ய இருக்காளோ தெரியலையே??”

ஆம், ப்ரியங்காவை பற்றி முழுதும் தெரிந்ததாலோ என்னவோ, மது அவள் ஏதோ மனதில் வைத்து தான் இதை செய்கிறாள் என சந்தோகப்பட்டாள். அவளால், ஒரு நாள் கூட ராஜீவ்வை, பார்க்காமல் இருக்க முடியாது என்று நன்றாகவே தெரியும் மதுவிற்க்கு.

மேலும் இதை எல்லாம் யோசித்தப்படி அலுவகத்திற்க்கு கிளம்பிக் கொண்டிருந்தாள் மது. ஹ்ம்ம், மணி எழாகியது. அப்போதும் ப்ரியங்கா எழுந்தபாடில்லை. மது தான் திருப்பள்ளியெழுச்சி பாட ஆரம்பித்தாள். “ப்ரியா! டைம் என்னாச்சு தெரியுமா? எழுந்துருடி…. ஆபிஸ் கிளம்பறதுக்கு அப்புறம் லேட் ஆகிடும்!”

பெட்டில் எழுந்து உட்கார்ந்தபடி, ப்ரியங்கா மதுவை பார்க்காமல், எங்கோ பார்த்தப்படி, “நான் இன்னிக்கு ஆபிஸுக்கு வரலை…. நீ கிளம்பிப் போ. நான் பார்த்துக்கறேன்” என்றாள்.

அவள் வரவில்லை என்று கூறியவுடன், மதுவின் டவுட் கன்பார்ம் ஆகியது. கண்களில் கோபமுற ப்ரியங்காவை நோக்கி, “இப்போ எதுக்கு ஆபிஸுக்கு வரல நீ? என்ன தான் மனசுல நினைச்சுருக்க?” என்றாள் மது.

“ஒண்ணும் இல்ல… நீ கிளம்பு நான் பார்த்துக்கறேன்” நார்மலாக இருப்பது போல், காட்டிக் கொண்டு பாத்ரூமிற்க்குள் புகுந்துக் கொன்டாள் ப்ரியங்கா. அவள் வெளியே வர காத்திருந்து, அவளை நிறுத்தி மீண்டும் கேள்வியை கேட்டாள் மது. வேறு வழி இல்லாமல், ராஜீவ்வை பார்த்து பேசப் போவதை மட்டும் மேலோட்டமாக கூறினாள் ப்ரியங்கா.

அதை கேட்டு மிகவும் டென்ஷன் ஆனாள் மது…. “நான் அவ்வளவு சொல்லியும் நீ கேக்கல இல்ல… ராம்மோட சேர்ந்து என்னென்னவோ செய்யுற? இனிமே, என்கிட்ட எதுவும் சொல்லாத ராஜீவ்வண்ணாவை பத்தி…..“

தோழியின் சொல்லை கேட்டு பதறி, ப்ரியங்கா அவளை பார்வையால் கெஞ்சினாள். “ப்ளீஸ் மது! எனக்கு உன்னைவிட்டா வேற யார் இருக்கா? எப்படியாவது ராஜீவ்வுக்கு என்னோட லவ்வ புரிய வெச்சுட்டா போதும்னு இருக்கு! நீ வேற இப்படி சொன்னா நான் என்ன பண்ணுவேன்? ப்ளீஸ் ட்ரை டு அன்டர்ஸ்டான்ட் மீ!”

ப்ரியங்கா வற்புற்த்திய பிறகும், மதுவின் மனது இளகவில்லை! ஆனால், ப்ரியங்காவையும் விட்டுக் கொடுக்க மனமில்லாமல், இரண்டு பக்கமும் மனம் ஆடியது….

கடைசியாக, “என்னவோ பண்ணிக்கோ! ஆனா, திஸ் இஸ் லாஸ்ட்! இனிமே அந்த ராம்மோட சேர்ந்து, எந்த விஷயமும் பண்ணக் கூடாது, சொல்லிட்டேன்!” கூறிவிட்டு, அலுவகத்திற்க்கு வேகமாக கிளம்பினாள் மது.

அவளுக்கு இன்று, முக்கியமான வேலை இருப்பதால் அவளால் லீவ் எடுக்க முடியவில்லை.

இல்லையென்றால், அவளும் ப்ரியங்காவுடன் சேர்ந்தே பார்க்குக்கு சென்று இருப்பாள். இதையே, ப்ரியங்காவிடமும் கூறி அவளை ஜாக்கிரதையாக ராஜீவ்விடம் பேச சொல்லி, மனமே இல்லாமல், அலுவகத்திற்க்கு சென்றாள் மது!

****************************************************************************************************

ராஜீவ்விற்க்கு இங்கே ஒரு குழப்பமாக இருந்தது…. காலையில் ப்ரியங்கா ஜாகிங்கிற்க்கு வரவில்லையே! என்னவாக இருக்கும்? இதுவே அவன் மண்டையை உடைத்துக் கொண்டிருந்த கேள்வி.

ஒரு சமயம், “விட்டது தொல்லை” என்று இருப்பவன், அடுத்த நிமிடம், இல்லை இதில் வேறு ஏதோ விஷயம் இருக்கிறது, என்று எண்ணினான். ப்ரியங்காவை பார்த்தால், அப்படி சட்டென்று விடுபவள் போல், தோன்றவில்லை… அதனாலேயே, அவனுக்கு மிகவும் குழப்பமாக இருந்தது.

அவன் கணிப்பு சரியே என்பது போல, ப்ரியங்காவும் அவனுக்கு கால் செய்தாள் பத்து மணி அளவில்!! அப்போது ராஜீவ் இருந்தது அந்த அப்துல்லா பார்க்கின் சற்று அருகே தான், ஒரு விசாரனைக்காக!

முதலில் யாரோ கால் செய்கிறார் என்று எடுத்தவனுக்கு, பின் தான் தெரிந்தது அது ப்ரியங்கா என. “ஹலோ” ராஜீவ்வின் குரலை கேட்டவுடன், “ஹலோ, நான் தான் ப்ரியங்கா!” என்றாள் ப்ரியங்கா உற்சாகத்துடன். ராஜீவ்விற்க்கு உதித்த முதல் கேள்வி, எப்படி இவளுக்கு தன்னுடைய மொபைல் நம்பர் கிடைத்தது?

அதையே கேட்கவும் செய்தான். “ஹே, உனக்கு எப்படி என்னோட நம்பர் கிடைச்சுது?”

அவன் குரலில் இருந்த கோபத்தின் அளவு தெரிந்ததும், பயத்தை உள்ளேயே அடக்கி, அவனிடம் சாதாரணமாக பேச முயன்றாள் ப்ரியங்கா.

“அதெல்லாம் சொல்றேன், கண்டிப்பா. ஆனா, அதுக்கு நீங்க அப்புதுல்லா பார்க்குக்கு வரனும்! நான் அங்க தான் உங்களுக்காக வெயிட் பண்றேன். சீக்கரமா வாங்க…. ஓகே வா?”

“ஹே நீ சொன்னா நான் வரனுமா? அதெல்லாம் முடியாது! உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ! ஃபர்ஸ்ட் என்னோட நம்பர் உனக்கு யார் குடுத்தா, அது சொல்லு!”

அவன் மிரட்டவும் அதிசயமாக ப்ரியங்காவிற்க்கும் கோபம் வந்தது. அதனால், கோபம் கொப்பளிக்க, “நான் சொல்ல மாட்டேன்! நீங்களே இங்க வந்து தெரிஞ்சிக்கோங்க!”

“நான் அங்க வர மாட்டேன்…. இது ஃபிக்ஸ்ட்”

“அப்போ நானும் நீங்க வர வரைக்கும் இங்க இருந்து போக மாட்டேன்! இதுவும் ஃபிக்ஸ்ட்”

கோபத்தில் கத்திவிட்டு, போனை வைத்தாள் நம் நாயகி! அங்கே, ராஜீவ்விற்க்கு வந்த கோபத்தில் எதிரில் இவள் இருந்திருந்தால், தன் கண்களாலேயே ப்ரியங்காவை பஸ்பம் ஆக்கி, இருப்பான்! போனை வைத்தவுடன் தான் தோன்றியது ப்ரியங்காவிற்க்கு, கொஞ்சம் பொறுமையாக பேசியிருக்கலாமோ என்று!

ஆனால், துப்பிய வார்த்தைகளை அள்ளும் கலை இன்னும் கண்டுப்பிடிக்க படவில்லையே?? அதனால், அமைதியாக சுற்றும் முற்றும் பார்த்தாள். ஆங்காங்கே, சில காதல் ஜோடிகள் பேசிக் கொண்டும், கொஞ்சிக் கொண்டும் இருந்தன….

“நமக்கும் இருக்கே ஒண்ணு!!! இருக்குற எல்லா ரோமான்ஸ் படத்தையும் பார்த்தாலும், அவனுக்கு ரோமான்ஸ் வரவே வராது! கடவுளே, அவனை எப்படி மாத்துறதுனு எனக்கு ஒரு வழி சொல்லு!” மனதிற்க்குள்ளேயே தன் காதலனை வசைப்பாடியபடி, அவன் வரவில்லை என்று சொன்னதை ராம்மிற்க்கு ஒரு மேசேஜாக தட்டிவிட்டாள்.

மீண்டும் குனிந்து மொபைலை நோன்டிக் கொண்டிருந்த வேளை, ஒரு பறிச்சயப்பட்ட குரல் கேட்டது, அவளுக்கு. “ஹலோ, யாருக்காக வெயிட் பண்றீங்க?”

நிமிர்ந்து பார்த்தால், ஒரு பிரபல தமிழ் தொலைக்காட்சி தொகுப்பாளினி நின்றுக் கொண்டிருந்தாள். அந்த தொலைக்காட்சி இசை மற்றும் பாட்டுக்காக நடந்துக் கொண்டிருந்த ஒன்று. நதியா, என்ற அந்த தொகுப்பாளினியும் கொஞ்சம் பிரபலமான முகமே!! மது டிவியை போட்டால், அந்த தொலைக்காட்சியிலேயே குடியிருப்பதால், ப்ரியங்காவிற்க்கும் நதியாவை தெரிந்தருந்தது.

இதனால், ப்ரியங்காவும் நதியாவை பார்த்தவுடன் உற்சாகமடைந்தாள் என்றே சொல்ல வேண்டும். உடனே, எழுந்து நின்று நதியாவிடம் கைகளை குலுக்கினாள் ப்ரியங்கா. கூடவே, கொஞ்சம் பிட்டையும் போட்டாள், “ஹாய்! நான் உங்க ஷோஸ் எல்லாம் பார்த்திருக்கேன். வெரி நைஸ் எல்லாமே!” என்று.

அவ்வளவு தான் இது போதாதா, ஒரு தொகுப்பாளினிக்கு?? அவர்களுக்கே உரிய எக்ஸைட்மென்டுடன் பேச ஆரம்பித்தாள் நதியா. “ஹோ, ரொம்ப தாங்க்ஸ்! உங்களுக்கு தமிழ் தெரியாதா?”

“இல்ல, தெரியாது! என்னோட சொந்த ஊர் புனே!”

“ஹோ ஓகே, ஃபைன். நாங்க Valentine’s டேக்காக ஒரு ஸ்பெஷல் ஷோ பண்றோம். நீங்களும் பார்டிசிப்பேட் பண்றீங்களா, ப்ளீஸ்?”

அப்போது தான் நதியாவுடன் வந்ததிருந்த நபர்களையும் பார்த்தாள் ப்ரியங்கா. ஒரு காமேரா மேன்னும், இன்னும் ஒரு சில நபர்களும் அவளுடன் இருந்தனர். சரி என்ன காசா, பணமா டிவில தான வரப்போறோம், ஓகே என்றாள் ப்ரியங்கா.

அது தான் அவள் செய்த தவறாகிப் போனது!!! அவள் சொன்ன உடனே, கேமரா மேனும் நதியாவும் அவர்களுக்குள் பேசிக் கொன்டு, இவளிடம் டேக் போகலாமா, என்று கேட்டனர். இவள் சரி என்றவுடன், இவளுக்கும் நதியாவுக்குமான உரையாடல் தொடங்கியது!

“ஹாய் வியூவர்ஸ்!! இப்போ நம்மோட பேசுறதுக்கு ப்ரியங்கா இருக்காங்க. அவங்களுக்கு தமிழ் தெரியாததுனால நம்மகிட்ட இங்கிளிஷ்ல பேசுவாங்க! நான் தங்கிளிஷ்ல பேசுவேன்! அட்ஜஸ்ட் பண்ணிக் கொண்ங்க மக்களே! ஹாய், ப்ரியங்கா!! ஹௌ ஆர் யூ?”

ப்ரியங்காவும் சிரித்துக் கொண்டே, “ஐ ஆம் ஃபைன்” என்றாள்.

“ஓகே, நீங்க யாரையாவது லவ் பண்றீங்களா?”

இதற்க்கு யோசிக்காமல், ப்ரியங்காவின் தலை தானாக, மேலும் கீழுமாக ஆடியது…. “ஹோ! வாவ்…. சூப்பர்!உங்க லவ்வர் நேம் என்ன?”

“அதை நான் சொல்லக் கூடாது!! ப்ளீஸ்….” ப்ரியங்காவின் கெஞ்சலான குரலை கேட்டு நதியா அடுத்த கேள்விக்கு தாவினாள்.

“ஓகே! லீவ் இட். உங்க லவ்வர் தமிழ் பையனா, இல்ல ஹிந்தி பையனா? அதயாவது சொல்லுங்க!”

“தமிழ் பையன் தான்!” வெட்கச் சிரிப்புடன் முகமே சிவந்து விட, ப்ரியங்காவின் முகத்தை பார்க்க, நதியாவிற்க்கே ஆசையாக இருந்தது. “ஐய்யோ! எவ்ளோ அழகா வெட்கப்படுறீங்க? சூப்பர் போங்க! புனேலந்து வந்து, தமிழ் நாட்டுல வாழப் போறீங்க! ஆமா, இதெல்லாம் பார்க்காம உங்க லவ்வர், எங்க போனாரு? வேர் இஸ் ஹீ?”

இதை கேட்டவுடன், ஃபூஸ் போன பல்ப் போல், ஆனாள் ப்ரியங்கா! அவனுக்காக தானே காத்திருப்பது! இதை யார் இவர்களிடம் சொல்வது? “என்னாச்சு?? ஸ்விச் ஆப் பண்ண டிவி மாதிரி ஆகிடீங்க? அவருக்காக தான் வெயிட் பண்றீங்களா?”

“ஹ்ம்ம்… எஸ்!!” சோகமாக முகத்தை வைத்து திரும்பினாள் ப்ரியங்கா! திரும்பிய முகம் திரும்பியப்படியே இருந்தது…. கண்கள் தானாக விரிந்தது! முகம் ஆச்சரியம் + சந்தோஷத்தை பூசியது! இத்தனைக்கும் காரணம் ராஜீவ்.

ஆம், கம்பீரமாக காக்கி உடையில், ராஜீவ் தான் பார்க்கின் உள்ளே வந்து, இவர்களுக்கு சற்று தள்ளி நின்றிருந்தான். முதலில், வர வேண்டாம் என்று தான் நினைத்தான்…..

பின்பு, யார் ப்ரியங்காவிடம் இவனை பற்றி கூறுவது என்று அறிய வேண்டி, போவோம் என்று முடிவெடுத்தான். மேலும், ப்ரியங்காவிடம் முதலும் கடைசியுமாக தன்னை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று மிரட்டவே வந்திருந்தான். தூரத்திலேயே பார்த்து விட்டான், மீடியா ஆட்கள் இருப்பதை.

அதனால், சற்று தொலைவிலேயே வெயிட் பண்ணினான். இதற்க்கு நடுவில், ப்ரியங்கா ராஜீவ்வை கண்ணெடுக்காமல் பார்ப்பதை கவனித்து, நதியா கேமரா மேனிடம், “அது யார்டா? இப்படி பார்க்குறா?” என்று வினவினாள்.

“தெரியாதா? அவர் தான் அஸிஸ்டென்ட் கமிஷ்னர், ராஜீவ் குமார்! இந்த பொண்ணு ரொம்ப நேரமா, நோக்கறத பார்த்தா, இவர் தான் அந்த பொண்ணோட லவ்வரா இருப்பாருனு நினைக்கிறேன்!”

ப்ரியங்கா அதற்க்குள் ராஜீவ்விடம் விரைந்தாள், “ராஜ்” என்ற சொல்லுடன்! ராஜீவ்வும் இவளை நோக்கி வந்துக் கொண்டிருந்தான். அந்த சமயத்தில் தான், அந்த சம்பவம் நடந்தது!!

திடீரென்று துப்பாக்கி சூடும் சத்தம் கேட்டது! பார்க்கில் இருந்த எல்லோரும் பயந்து ஓட துவங்கினர்! அனிச்சை செயலாக, ப்ரியங்காவை இழுத்து ஒரு கல் பெஞ்சின் பின், மறைந்தான் ராஜீவ். ஆனால், அவனை நோக்கி சுடப்பட்ட துப்பாக்கியின் குண்டு, கேமரா மேனின் கையில் துளைத்தது, தான் பரிதாபம்.

கேமரா கீழே விழுந்தாலும், எல்லாவற்றையும் உள்வாங்கிக் கொண்டது. ராஜீவ் மறைந்திருந்து பார்த்ததில் தெரிந்தது, இரண்டு அல்லது மூன்று பேர் துப்பாக்கியால், சுட்டுக் கொண்டிருந்தனர்.

ப்ரியங்காவிற்க்கு ஒரு நிமிடம் என்ன நடந்தது என்றே புரியவில்லை…. புரிந்தவுடன் யார் சுடுவது என்று பார்த்தாள். அதிர்ந்தாள்…. முற்றிலுமாக அதிர்ந்தாள்! ஏன்னென்றால் கையில் துப்பாக்கியுடன் ராம் என்கிற ராமகிருஷ்ணன் அங்கே நின்றுக் கொண்டிருந்தான்!!!!
 
Top