அத்தியாயம் ஐந்து
ப்ரியங்காவின் வெளுத்து போன முகத்தை பார்த்து, ராஜீவ் ஒரு நிமிடம் தயங்கினான். ஆனால், மறுநிமிடம் அவனுடைய கோபமும் தலைக்கேறியது. இப்போ முகம் வெளுத்து என்ன ஆக போகுது?
யோசிக்க வேண்டிய நேரத்தில், யோசிச்சு இருக்கணும்! மனதிற்க்குள் அவளை வசைப்பாடிய படியே, தலையணையை எடுத்து, அவன் அறையில் உள்ள சோபாவில், படுக்க ஆயுத்தமானான்.
அப்பொழுது தான், சுய நினைவிற்க்கு வந்தாள் ப்ரியங்கா! அவன் சோபாவில், படுத்தால் அவன் ஆறடி உடலை குறுகி படுத்து, சிறமப்படுவான் என்பதால், அவனை பெட்டிலேயே படுக்க சொன்னால் ப்ரியங்கா.
ஆனால், அவனோ அதை மறுத்துவிட்டு சோபாவிலேயே படுத்தான். ப்ரியங்காவும் அவன் அருகிலேயே நின்று, பிடிவாதமாக அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
சிறிது நேரம் கழித்து, பாதிக்கண்களை திறந்து, ஓரக்கண்ணால் படுக்கையை பார்த்தான். அது காலியாக இருக்க எங்கே போனாள் இவள், என்ற கேள்வியுடன் உடனே எழுந்தான். ஆனால், அவன் மனைவி அவன் சோபாவின் அருகிலேயே நின்று அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.
“என்னை சைட் அடிக்கறியா?” சில நிமிடங்கள் முன்னால், இருந்த நிலை மாறி, இப்பொழுது முழுதும் குதூகல குரலில் அவனை பார்த்து கண்ணடித்து, கேட்டாள் ப்ரியங்கா. தமிழில், எதை கற்றாளோ இல்லையோ, காதல் சம்பந்தமாக அனைத்து வார்த்தைகளும் கற்றாள்.
அதுவும், இந்த “சைட் அடிப்பது” தினசரி பேசும் பேச்சில் வருவதாக உள்ளதால், இதை வைத்து அவனை வெறுப்பேற்றினாள். அவள் எதிர்பார்த்தது போல, ராஜீவ்வும் அவளை முறைத்தான்.
அவளுக்கு வேண்டியதும் இது தானே!! அவன் கிருஷ்ணாவையே நினைத்துக் கொண்டிருக்கக் கூடாது. அது அவனுக்கு மேலும் கோபத்தையும் குழப்பத்தையும் கொடுக்கும்.
அதற்க்கு தான் அவனை திசை மாற்ற, இப்படி பேசினாள். அந்த பேச்சுக்கும், அவளிடம் இருக்கும் திமிர் மற்றும் நக்கலே காரணம், என்று சரியாக தப்பாக யூகித்தான் ராஜீவ்.
“என்ன வேணும் உனக்கு? எதுக்கு இங்க நிக்கற?” குரலில் எரிச்சல் மிகவுர கேட்டான்.
“தென் இட்ஸ் அ ‘எஸ்’. நீ சைட் அடிச்ச? ரைட்?” ப்ரியங்கா விடுவதாக காணோம். ராஜீவ் கோபத்தின் எல்லைக்கே சென்றான். வார்த்தைகள் அவனை மீறி வந்தன.
“என்ன உனக்கு என்ன பெரிய ஐஷ்வர்யா ராய்னு நினைப்பா? இவளோட அழகுல மயங்கி, சைட் அடிச்சு நிக்கறோமாம்! இப்போ சொல்றேன் கேட்டுக்கோ! எனக்கு ஒரு தமிழ் பொண்ண கல்யாணம் பண்ணனும் தான் ஆசை.
நீ தான் அதை வந்து கெடுத்துட்ட…. என் கண்ணுக்கு நீ ஒன்னும் அழகாலாம் தெரியல்ல. எப்பவுமே மைதா மாவு தான் நீ…. தெரிந்சுக்கோ!!!”
இத்தனையும் தமிழ்லயா சொல்லிருப்பான்??? அப்புறம் கொஞ்ச நேரம் முன்னாடி மாதிரி, புரியாம, ‘திருப்பி சொல்லுனு’ சொல்லிருப்பா நம்ம ஹீரோயின்.
அதுக்காவே இங்கிளிஷ்ல சொன்னான் ராஜீவ். இந்த மாதிரி பதிலை சுத்தமாக எதிர்பார்க்காத ப்ரியங்கா, அவனை முறைத்து சிறிது நேரம் நின்றாள். பிறகு, தோளை குலுக்கி, ‘எனக்கு ஒன்னும் ப்ராபளம் இல்லப்பா!’ என்பது போல் ஒரு லுக் விட்டு, அவள் சோபாவில் படுத்துக் கொண்டாள்.
ராஜீவ்விற்க்கு ஒன்றும் புரியவில்லை! கடைசியில் அவள் நினைத்தது போல, சோபாவில் படுத்துக் கொண்டாளே? பிடிவாதம்… உடம்பு முழுக்க விளையாட்டுதனம், திமிர்!!
அவளை திட்டிய படியே, அவன் படுக்கையில் படுத்து, சிறிது நேரத்தில், தூங்கியும் விட்டான்! ஆனால், ப்ரியங்காவோ மௌனமாக கண்ணீர் வடித்தாள்.
‘என் கண்ணுக்கு நீ ஒன்னும் அழகாலாம் தெரியல்ல. எப்பவுமே மைதா மாவு தான் நீ…. தெரிந்சுக்கோ’ என்ற வார்த்தைகள் அவளை மிகவும் காயப்படுத்தி இருந்தன.
அவளுக்கு இன்னும் தெரியவில்லை, வடநாட்டு பெண்களை நம்மில் பாதிப் பேர், மைதா மாவுடன் தான் கம்பேர் பண்ணுவர் என்று. அவளுக்கு ‘மைதா மாவு’ என்ன எனபதே சரியாக புரியவில்லை!
அதுக்குப் பிறகு தானே கம்பேர் பண்ணுவது பற்றி யோசிப்பது! ஆனால், சில நிமிடங்கள் இதையே யோசித்து அழுத பிறகு, அவள் ஒரு முடிவுக்கு வந்தாள்.
என்ன முடிவென்றால், இனிமேல் அவன் சொல்லுவதை எல்லாம் வீணாக மனதில் போட்டுக் வருத்திக் கொள்ளாமல், அப்படியே தப்பி தவறி வாங்கினாலும், இந்த காதில் வாங்கி அந்த காதில் விடுவதே!
பின்னே இந்த குத்தல் பேச்சுகளையும், கோபத்தையும் எதிர்பார்த்தே திருமணம் செய்து, இப்போழுது அந்த பேச்சுகளை நினைத்து வருத்தப்படுவதற்க்கு ஒன்றும் இல்லை!
மேலும், அழவேண்டும் என்றால் தினமும் தான் அழ வேண்டும்!!! அதனாலே இந்த முடிவு! ஆனால் மனதின் ஓரத்தில் அந்த ‘மைதா மாவு’ மட்டும் ஒட்டிக் கொண்டது, நன்றாக!!
இதை எல்லாம் யோசித்த படியே தூங்கிப் போனாள். எப்பொழுது தூங்கினாள் அவளே அறியாள்! காலையில் விழித்து பார்த்தால், ராஜீவ்வை காணவில்லை.
ரூம்மில் மட்டும் இல்லை, வீட்டிலேயே இல்லை. இவள் விழித்தவுடன், அவன் கீழே இருப்பான் என்று நினைத்து, குளித்து விட்டு, ரெடியாகி மெதுவாக கீழே சென்றாள். ஆனால், எங்கே தேடினாலும் அவன் இல்லை!!
இவள் தேடுவதை பார்த்து, ராஜீவ்வின் அத்தை மேகலை, இவளிடம் வந்து, “யாரை தேடுர? உன்னோட ஹஸ்பெண்டையா?” என்று கேட்டார்.
மேகலை திருச்சி பக்கத்தில், ஒரு கிராமத்தில் வசித்து வருகிறார். அரசுப் பள்ளியில், வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.
கணவரை இழந்து விட்ட பின்னர், அவருடைய ஒரே மகன் பெங்களூரில் வசிப்பவன் கூப்பிட்டும் போக மனம் இல்லாமல், ஊரிலேயே இருப்பவர்!
நேற்றுலிருந்து ப்ரியங்கா கீதாவிடம் பேசினாளோ இல்லையோ, மேகலையிடம் நிறைய பேசினாள். அவருக்கும் இவளை பார்த்தவுடனே பிடித்து விட்டதால், முக்கியமாக ஆங்கிலத்தில் பேச முடிந்ததால், இவளிடம் நன்றாக பழகினார்!!
அவர் அப்படி கேட்டவுடன், “ஆமாம் பெரியம்மா!” என்றாள் ப்ரியங்கா தலையசைத்து! ‘பெரியம்மா’ என்று கூப்பிட அவர் தான் பழக்கி இருந்தார்.
“அவன் காலையிலேயே முக்கியமான வேலை இருக்குனு போயிட்டான் ப்ரியா! அவனுக்கு வேலைனு வந்தா எதுவும் கண்ணுல படாது! நீ வா, வந்து காபி சாப்பிடு!”
சொல்லிவிட்டு அவர் கிட்சனை நோக்கி சென்றார்! ‘வேலை’ என்றதும் தான் ப்ரியங்காவிற்க்கு கிருஷ்ணாவின் நினைப்பு வந்தது. ஆனால், இப்போழுது கிருஷ்ணாவை விட முன்னே செல்லும் பெரியம்மா முக்கியமாக பட, அவனைப் பற்றி நினைப்பதை விடுத்து, மேகலையின் பின்னே போனாள்.
அங்கே ஏற்கனவே, கீதா வேலை செய்து கொண்டு இருந்தார். நிஷாவும் தான்! இதை பார்த்தவுடன் குற்ற உணர்ச்சி பொங்கியது ப்ரியங்காவிற்க்கு.
இனிமேல், சீக்கிரம் எழ வேண்டும் என்ற முடிவுடன், அவள் அத்தையிடம் பேச முடிவெடுத்தாள். அவர் அவளிடம் பட்டும் படாமலும் பேசுவது, மனதை என்னவோ செய்தது.
அதனால், கீதாவிடம் சென்று, “நான் நா…. கூயிக்கா தமில் கத்துப்பேன் அத்த… சோ, நான்….” அவள் முடிக்கும் முன்பே, “ஐ லேர்ன் இங்கிளிஷ்!! நோ ப்ராபளம்!” அவள் அருமை அத்தை, சொல்லிச் சென்றார்.
முகத்தை தூக்கி வைத்து கொண்டு அவர் சொன்னவிதம் நிஷாவிற்க்கும், மேகலைக்கும், சிரிப்பை உண்டாக்கியது!
ஆனால், அவர் போன பக்கமே வாயை பிளந்து, பார்த்து கொண்டு இருந்தாள் ப்ரியங்கா…
மேகலை தான் அவளை, தனியாக கூப்பிட்டு, காபியை கையில் குடுத்து, “ஏன் பயப்படுற? அண்ணிக்கு உன்மேல கொஞ்சம் கோபம் தான்! ஆனா, நீ போய் பேசினா எல்லாம் சரியாகிடும். ரொம்ப நல்லவங்க டா…. டோன்ட் வொறி… சீயர் அப்!”
அவளை ஊக்குவித்து கீதாவிடம் பேசச் சொன்னார் மேகலை! அவர் பேச்சை கேட்டு ப்ரியங்காவும் காலையில், டிபன் முடிந்ததும், பேசப் போனாள்!!
*********************************************************************************************
சென்னையின் புறநகர் பகுதி ஒன்றில், ராஜீவ் அவனின் விசாரனையை கிருஷ்ணாவிடம் ஆரம்பித்து இருந்தான்.
அவன் அருகே அவனின் அஸிஸ்டென்ட் கவுதம் நின்று கொண்டிருந்தான். கிருஷ்ணாவின் பின் புறம் இரண்டு காவல்காரர்கள் நின்றிருந்தனர்.
“உன்கிட்ட ரொம்ப நேரம் பேசிட்டு இருக்க மாட்டேன்…. ஒழுங்கா யாரு உன்னை அனுப்பியதுனு சொல்லிடு! இல்லைனா நான் பேச மாட்டேன்! என்னோட கைல இருக்கற கன் தான் பேசும் தெரிஞ்சுக்கோ!
நீ அரெஸ்ட் ஆனது, எனக்கும் இங்க இருக்கரவங்களுக்கு மட்டும் தான் தெரியும்! சோ, நீ செத்தா கூட கண்டுபிடிக்க முடியாது யாராலையும்! சொல்லு யாரு உன்னை அனுப்புனா?”
ராஜீவ்வின் குரல் அழுத்தமாக, கிருஷ்ணாவிற்க்குள் ஊடுறுவியது…. அவன் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தான்.
அதற்க்குள் பொறுமை இழந்த ராஜீவ், அவன் நெத்தியின் மேல், துப்பாக்கியை வைத்து, “இப்போ சொல்ல போறியா? இல்ல….” என்று பயம் காட்டினான்.
துப்பாக்கி வேலை செய்தது! நன்றாகவே வேலை செய்தது….. “சொல்லிடுறேன்! சொல்லிடுறேன் சார்! ஷேக் தான் சார், என்னை அனுப்பினான். உனக்கு இருபது லட்சம் தரேன், எப்படியாவது ராஜீவ்வை போட்டுடு, அப்படினு சொன்னான் சார்!!”
கிருஷ்ணா சொன்னதை கேட்டு அங்கே இருந்த, அனைவரும் அதிர்ந்தனர். ஏன்னென்றால், ஷேக் ஒரு பக்கா கிரிமினல். செய்யாத குற்றமே கிடையாது. நாடு முழுக்க அவனை தேடிக் கொண்டிருந்தனர்.
இப்பொழுது, டெல்லி அருகே இருப்பதாக கேள்வி! ‘ஆனால், அவன் எதற்க்கு என்னை கொல்ல ஆள் அனுப்பனும்? அவன் கேசை நான் ஹேண்டில் பண்ணலியே!’ குழப்பமாக இருந்தது ராஜீவ்விற்க்கு.
மேலும் சில கேள்விகளை கிருஷ்ணாவிடம் கேட்டும் அவன் குழப்பம் தெளியவில்லை. “எதுக்கு இதுல ப்ரியங்காவை இழுத்த?” ராஜீவ் அடக்கப்பட்ட கோபத்துடன் கேட்டான்.
அதற்க்கு கிருஷ்ணா நடுக்கத்துடன் பதில் அளித்தான்!! அவன் பதிலை கேட்டு, அவனை ஓங்கி ஒரு உதை விட்டான் ராஜீவ். தூரப் போய் விழுந்தான் கிருஷ்ணா.
கவுதம்மிடம் அவனை கோர்ட்டிற்க்கு கூட்டிச் செல்ல சொல்லிவிட்டு, அவன் கமிஷ்னர் ராஜேஷ்ஷிற்க்கு போன் செய்து விஷயத்தை சொன்னான்.
மேலும் சில நிமிடங்கள் பேசிவிட்டு, அவன் மற்ற காவலர்களிடம் ஆணைகளை பிறபித்து, வீட்டை நோக்கி சென்றான்.
***********************************************************************************************
வீட்டில், அவன் அன்பு மனைவி, அவன் அம்மாவிடம் என்ன பேசினாள், என்று பார்போமா? இதோ, ப்ரியங்கா கீதாவின் அறை வாசலில், நின்றுக் கொண்டு, உள்ளே செல்ல அனுமதி வேண்டி கதவை தட்டினாள்.
ராஜேந்திரனும் அப்பொழுது அவரின் தந்தையுடன் இருந்ததால், கீதா மட்டுமே அறையில் இருந்தார். இவளை பார்த்ததும், ‘வா’ என்று தலையசைத்து விட்டு அவளையே முறைத்துக் கொண்டிருந்தார்.
ப்ரியங்காவிற்க்கு அவரின் முறைப்பை பார்த்ததும் சொல்ல வந்தது எல்லாம் மறந்தார் போல் தோன்றியது. சிறிதும் தயங்காமல், ‘ஐ லவ் யூ’ என்று ராஜீவ்விடம் சொல்லியவளா இந்த ப்ரியங்கா? எனக்கே சந்தேகமாக இருக்கு!!
மனதை கொஞ்சமல்ல ரொம்பவே திடப்படுத்தி, “நான் கொஞ்ச பேசணும்” விரல்களை சுருக்கி அவள் சொன்ன விதமே அழகாக இருந்ததால், கீதாவும் “சொல்லு! உட்காரு முதல்ல” என்றார்.
அவள் பெட்டில் உட்கார்ந்ததும், “முதல சாரி… தவுசன் டைம்ஸ் சாரி!” கை எடுத்து கும்பிட்டு சொன்னாள் இதை. அவள் மன்னிப்பு கேட்கும் போதே கூப்பிடாமலே, அழுகையும் சேர்ந்து வந்தது!
அதுலையே பாதி பிளாட் நம்ம கீதா மேம்! மீதியும், “எனக்… நான் வேனும்னு அப்படி பண்ணல…. தெரியாம பண்ணிட்டேன்…. சாரி அகெய்ன்! எனக்கு ராஜீவ்வை நிறைய புடிக்கும்!! ஐ லவ் ஹிம் அ லாட்… உங்களுக்கு பிடிச்ச மாதிரி நான் ட்ரை பண்ணுவேன்! சோ, என்னை மனிச்… மன்னிச்சிடுங்க அத்த… சாரி!”
கோர்வையாக இல்லாமல், திக்கித் திக்கித் தன் மனதில் இருப்பவற்றை கூறினாள்.
இப்படி கேட்ட பின்னால், அவராலும் தான் என்ன செய்ய முடியும்? மன்னிப்பதை தவிர!?
அதற்க்குப்பின் இருவரும் தமிழையும் ஆங்கிலத்தையும் கொலை பண்ணி, நிறைய பேசினர்.
நிஷா வந்து பார்த்து, “இது என்னடா? உலக மகா அதியசமா இருக்கு? அம்மா, ப்ரியா கிட்ட சிரிச்சு பேசறாங்க?” கண்ணை துடைத்து பார்த்து, நம்ப முடியாமல், எண்ணினாள்.
மேகலை தான் இதில் மிகவும் சந்தோஷப் பட்டார். ப்ரியங்கா அவரை கட்டி அணைத்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாள்.
ராஜீவ் வீட்டிற்க்குள் வந்தவுடன் கண்ட காட்சி இதுவே!
‘அத்தையையும் விட்டு வைக்கலையா இவ?’ பெருமூச்சுடன் எண்ணி அவன் ரூம்மிற்க்கு சென்றான்.
அவன் பின்னேயே வாள் பிடித்தாள் போல், ப்ரியங்காவும் வந்தாள். வந்தவள் சும்மா இல்லாமல், அவனிடம், “கிருஷ்ணா எதாவது இன்பர்மேஷன் ? வொய் இப்படி பண்ணான்? ஹ்ம்ம்ம்… டெல் மீ….” என்று பதற்றமுற்ற குரலில் கேட்டாள்.
ஆனால், ராஜீவ் அவள் முகத்தை சாதாரனமாக நோக்கிவிட்டு, பதில் கூறாமல், பாத்ரூம் உள்ளே சென்றான். ப்ரியங்கா மிகவும் டென்ஷன் ஆகி, நகத்தை கடித்து உட்கார்ந்திருந்தாள்.
அதற்க்குள் கீழே அவளை அழைத்தாள் நிஷா! என்ன ஆனாலும் சரி, இன்று எப்படியாவது, அவனிடம் பதிலை வாங்காமல், தூங்கக் கூடாது என்ற முடிவோடு இறங்கினாள்.
கீழே சில உறவினர்கள் கிளம்பினர். அவர்கள் சென்றப்பின்னர், ஹாலில் இருக்கும் சோபாவில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர் நிஷாவும் ப்ரியங்காவும்.
அப்பொழுது அங்கே வந்த ராஜீவ், அவர்களின் அருகே இருக்கும் சோபாவில் அமர்ந்து, நியூஸ் பேப்பர் படிக்க ஆரம்பித்தான்.
நாத்தனார்கள் இருவருமே அவனை கண்டுக் கொள்ளவில்லை. சிறிது நேரம் அவர்கள் தமிழில் பேசுவதை கேட்டு, ராஜீவ், “அவள தமிழ்ல பேச வேண்டாம்னு சொல்லு நிஷா! அவ இப்படி திக்கித் திக்கி பேசுறத பார்த்தா யாராவது திக்கு வாய்னு நினைச்சுக்க போறாங்க!”
ஏளனத்துடன் கூறினான் ராஜீவ். ப்ரியங்காவிற்க்கும் தமிழில் பேசும் போது, அப்படித் தான் பேச வந்தது. அதற்க்கு காரணம் அவள் யோசித்து, பேசுவதே.
ஆனால், ராஜீவ் கூறியதை கேட்டு ப்ரியங்கா, ‘திக்கு வாய்’ என்றால் என்னவாக இருக்கும் என்ற ஆராய்ச்சியில் இருந்தாள். அவளுக்கு ‘வாய்’ என்றால் என்னவென்று தெரியும்! ஆனால் ‘திக்கு வாய்’, ப்ச்ச், டோன்ட் நோ!!!
‘ஒரு வேல, லிப் க்ளாஸ் அதிகமா இருக்கோ? அதை தான் அப்படி சொல்றானா?’ என அப்பாவியாக யோசித்து, அவள் உதட்டை, கீழ் கண்ணால் சரிப் பார்த்தாள். அவள் அப்படி பார்த்ததை வைத்தே அவளுக்கு புரியவில்லை என்று புரிந்தது நிஷாவுக்கு!
“ஏன்டா இப்படி சொல்ற?? பாவம் ப்ரியா! பேசணும்னு ட்ரை பண்றாங்கல?? நீ எல்லாம்…. ” நிஷா கோபமாக கடித்து துப்பினாள் வார்த்தைகளை. ராஜீவ் இப்பொழுது கண்டுக் கொள்ளவில்லை!!
ப்ரியங்கா உடனே, ராஜீவ்வை ஓரக் கண்ணால், பார்த்துக் கொண்டே, நிஷாவிடம் விளக்கம் கேட்டாள். நிஷாவும் தயங்கி தயங்கி, ராஜீவ் கூறியதை மொழிபெயர்த்தாள்.
கேட்ட ப்ரியங்காவிற்க்கு கோபம் தான்…. ஆனால், அதை அடக்கி, அசால்ட்டான குரலில், “திக்கி திக்கி பேசலாம்! தப்பு இல்ல… ஆனா, பேசாமயே இருந்தா, ஊமைனு முடிவு பண்ணிடு வாங்க! சம்திங் இஸ் பெட்டர் தேன் நத்திங்” என்று கூறினாள் தூய ஆங்கிலத்தில்!
ராஜீவ்வின் முகமே சுருங்கி, கோபத்தில் கடுகடுவென ஆகியது, அவளின் பதிலை கேட்டு! அன்று முழுக்க அப்படி இருந்தது தான் குறிப்பிட வேண்டிய விஷயம்!!
இரவில், உறங்க போகும் முன் மீண்டும் முகமது கஜினியை போல, ப்ரியங்கா ராஜீவ்விடம் கிருஷ்ணாவை பற்றி கேட்டாள்.
“சொல்ல முடியாது… என்னோட வொர்க் பத்தி யார்கிட்டயும் பேச மாட்டேன்!” என்று அழுத்தமாக சொல்லிவிட்டு அவன் படுத்துக் கொண்டான். ஆனால், அவள் உறங்காமல், முன்தினம் போல், அவன் அருகிலேயே நின்றுக் கொண்டிருந்தாள்.
இதை பார்த்ததும், அவன் டென்ஷன் ஆகி, “போய் படு…. இப்படி எல்லாம் பண்ணா நான் சொல்லுவேண்ணு நினைச்சியா? போ… நான் சொல்ல மாட்டேன்” என்று கூறினான்.
“நானும் இதுல இன்வால்வ்டு! சோ கேக்கறேன்! டெல் மீ” ப்ரியங்காவின் குரலிலும், அவள் நின்ற விதத்திலும் பிடிவாதம், அப்பட்டமாக வெளிப்பட்டது!!
அவள் சொன்னது சரியாக பட்டதால், ஒரு பெருமூச்சுடன் எல்லாவற்றையும் சொன்னான் ராஜீவ், கூடவே யாரிடம் சொல்ல கூடாது என்று எக்ஸ்ட்ரா பிட்டிங் வேறு!!
கடைசியில், “இருந்தாலும் உனக்கு இவ்ளோ பிடிவாதம் இருக்கக் கூடாது!” என்று கோபத்துடன் முடித்தான்.
“என்னோட நேம் - மிஸஸ். ப்ரியங்கா ராஜீவ்! தாட் ‘ராஜீவ்’, அது தான் பிடிவாதமுக்கு ரீசன்!” கண்ணடித்துக் கூறினாள் ப்ரியங்கா!
ராஜீவ் தலையில் அடித்துக் கொண்டான்!!! அவன் வாழ்க்கை இப்படியே போய்விடுமா? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!