Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Meezhveno Muzhgiduveno - 11

  • Thread Author
அத்தியாயம் 11
இரவு முழுவடைந்து பகலவன் கண் சிமிட்டும் வேளயில் தான் மான்சி கண் அயர்ந்தாள்… சிறுது நேரம் கூட அவள் உறங்கி இருக்க மாட்டாள்… அதற்க்குள் சர்வேஷ்வரனின் பேசி அலாரம் “சர்வா..சர்வா..சர்வா..” என்று மூன்று முறை அழைத்ததில், அவனை தான்டி அதை எடுத்து உடனே அணைத்தவள்… அவன் அணைப்பில் இருந்து உடனே எல்லாம் வெளி வர முடியாது போக.. மெல்ல மெல்ல அவன் கையை தன் இடையை விட்டு விலக்கியள்.. நேரத்தை பார்த்த போது.
“அய்யோ..” என்றானது. என்ன இது. நேரம் எட்டு புது இடம்.. இவ்வளவு நேரம் தூங்கினால் என்ன நினைப்பார்கள் .. ஏற்கனவே என்று அந்த எண்ணம் வந்த போது தான்.. நேற்று அவனிடம் தான் நெகிழ்ந்து, கரைந்து உருகியது எல்லாம் அவளின் நியாபகத்தில் வந்து போனது. எப்படி? எப்படி.. தன்னை பற்றி நல்ல எண்ணம் இல்லாதவனிடம் நான் எப்படி அப்படி இருக்க முடிந்தது.. என் உடல் அவ்வளவு பலவீனமானதா..? இல்லை அவன் தொடுகை அவ்வளவு பலமானதா…? என்று எதேதோ மனது அது பாட்டுக்கு எண்ணம் போனாலும். தன்னால் தன் உடை இருக்கும் இடத்தை தேடி உடையை எடுத்துக் கொண்டு குளியல் அறைக்குள் சென்ற வேகத்தோடு குளித்து முடித்து விட்டு.. அது பக்கத்தில் இருந்த உடை மாற்றும் இடத்தில் உடையணிந்து வெளியில் வந்த போது சர்வேஷ்வரன் இன்னும் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதை பார்த்தவளின் மனதில் ஒரு நிம்மதி.
இப்போது நேற்று நடந்த நிகழ்வை நினைக்கவோ.. அதை பற்றி யோசிக்கவோ… அவளுக்கு நேரம் கிடையாது.. ஆனால் யோசிக்க வேண்டும்… அது இப்போது முடியாது என்பதால், இவனை இப்போதைக்கு தனிமையில் சந்திப்பதை தவிர்ப்பது நல்லது என்று நினைத்து அனைத்தையும் அவசர கதியில் முடித்து விட்டு படியில் இறங்கியவளை ஹாலில் அமர்ந்து தன் ஓரவத்தி ரேவதியிடம் பேசிக் கொண்டு இருந்தவள்..

இவள் வரவும் பேசுவதை விட்டு விட்டு, ஒரு விதமான எதிர் பார்ப்போடு, அவள் முகத்தை பார்த்தவரின் மனதில் நம்மதி..

தன்னையே பார்த்து கொண்டு இருந்தவரின் பார்வையில் சங்கடத்துடன் தலை குனிந்து வருவளின் அந்த செய்கை கூட வைதேகிக்கு ஒரு திருப்தியை கொடுத்தது வெட்கம் என்று நினைத்து…

வந்தவளை தன் பக்கத்தில் அமர வைத்துக் கொண்ட வைதேகி..

“ காலையில் காபி குடிப்பியா… டீயாம்மா..?” என்று கேட்ட்தற்க்கு மான்சி…

“ எது என்றாலும் பரவாயில்ல அத்தை..” என்று சொல்லவும்.. வைதேகி ..

“ காபி குடி இப்போது தான் டிக்காஷன் இறக்கிட்டு வந்தேன் ..” என்று சொன்னவர் சமையல் அறையை பக்கம் பார்த்து..

“ சாரதா ஒரு காபி கொண்டா…” என்று சொன்னவர், மான்சியின் ஈரமான தலையை தொட்டு பார்த்தவர்..

“ என்னம்மா இது ஈரத்திலேயே பின்னி இருக்க.. தலையில் தண்ணீர் கோக்காது…” என்று சொல்லி விட்டு, சும்மா நாளுகால் பின்னி இருந்த மான்சியின் நீண்ட கூந்தலை அவிழ்க்கும் போதே, வைதேகியின் கண்கள் மகிழ்ச்சியால் விரிந்தன..

“ முடி உனக்கு நீளமாவும், அடர்த்தியாவும் பார்க்க அவ்வளவு அழகா இருக்கு..” என்று பாராட்டிக் கொண்டே காபி கொண்டு வந்த சாரதாவிடமே, தலை முடியை துவட்டி விட துணி கொண்டு வர சொல்லி, தானே துவட்டிக் கொண்டு இருந்தார்…

“ பரவாயில்லை அத்தை நானே துவட்டிக்கிறேன்..” என்று மான்சி சொல்லியும் கேட்காது, அவரே துவட்டி விடுவதில் மான்சிக்கு ஒரு வித சங்கடம் உருவானது..

அவள் இது போல் எல்லாம் மற்றவர்கள் செய்ய விட்டது கிடையாது.. தன் அன்னையின் வாழ்க்கை தெரியாததிற்க்கு முன்.. துளசி செய்து விட்டு இருக்கிறாள்..

தெரிந்த பின் அவள் வேலையை அவள் தான் பார்த்துக் கொள்வாள்.. அதுவும் இது போல் அவ்வளவாக தெரியாதவர்களிடம் பேசியும் அவளுக்கு பழக்கம் கிடையாது…

அதில் ஒரு வித கூச்சத்துடன்… “ நேரம் ஆகி விட்டதே என்று தான் அவசர அவசரமா தலை பின்னிட்டு வந்தேன் அத்தை… இல்லேனா நான் எப்போவும் இது போல் முடி காயாது தலை பின்னிக் கொள்ள மாட்டேன்..” என்று சொன்ன மான்சியின் பேச்சில் வைதேகிக்கு மட்டும் அல்லாது, இவ்வளவு நேரமும் மான்சி வைதேகியின் பேச்சை கேட்டுக் கொண்டு இருந்த ரேவதிக்கும் சந்தோஷம் என்றாலும், மனது தன்னால் தன் மருமகளையும், மான்சியையும், எடை போட தொடங்கியது..

“ லேட் என்ன லேட்.. பார் நீ அழகா குளிச்சிட்டு புடவை கட்டி வந்து இருக்க.. என் பெண் எந்த கோலத்தில் வராளோ.. அவளுக்கு உன் போல் அழகா புடவை எல்லாம் கூட கட்ட வராது… “ என்று இவ்வளவு நேரமும் மகிழ்ச்சியுடன் சென்றுக் கொண்டு நேரத்தை கெடுக்க என்று சிறிது நேரம் முன் அங்கு வந்த வனிதா..

மாமியார் மருமகளுக்கு இடைய நடந்த அந்த நாடகத்தை, அவளை பொறுத்த வரை அது நாடகம் தான்.. அதை பார்த்து கொண்டு இருந்தவள், இடை இடையே தன் மாமியாரும் அந்த காட்சியை ஒரு வித பாசத்துடன் பார்த்துக் கொண்டு இருப்பதை பார்த்த, வனிதாவுக்கு அவ்வளவு கோபம்..

என்னை இது போல் பாசமா பேசி இருக்காங்களா.. .? இது போல் எழுந்து வந்தா காபி தான் கையில் கொடுத்து இருக்காங்களா.. .? அதுவும் நான் இந்த வீட்டு பெண்ணின் பெண்.. இவள் வந்த முறைக்கு அவளை தலையில் தூக்கி வைத்து பேசுவதா…? என்ற பொறாமையில்..

“ நீங்க கீதாவுக்கு எதுவும் சொல்லி கொடுக்கல.. அதனால் அவளுக்கு தெரியல.. ஆனா உங்க மருமகளுக்கு அவள் அம்மா எல்லாம்ம்ம்ம் சொல்லி கொடுத்து தான் வளர்த்து இருப்பாங்க..” என்று வனிதா சொன்ன எல்லாம் என்ற அந்த அழுத்தமே ஒரு மாதிரியாக தான் இருந்தது…

அதோடு விடாது.. தான் இப்படி பேசியும் எந்த ஒரு ரியாக்க்ஷனையும் காட்டாததோடு தன்னை நிமிர்ந்தும் பார்க்காத, மான்சியின் நடவடிக்கையை பார்த்து தன்னை மதிக்கவில்லை என்ற கோபம் இன்னும் எழுந்தது…

அந்த கோபத்தில் இன்னும் வார்த்தைகளை அதிகம் விட்டாள்…

“ இது மட்டும் இல்ல அத்தை. சர்வா கிட்ட எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்று கூட நீங்க சொல்லி தர அவசியம் இருக்காது..

அது எல்லாம் அந்த பொம்பள விவரமா… இவள் வயதுக்கு வந்த அப்போவே சொல்லி கொடுத்து தான் இருப்பா… தெரியாதவனை கட்டிகிட்டாலும் இந்நேரம் அவங்களுக்குள் எல்லாமே முடிந்து இருக்கும்..” என்று வனிதா இன்னும் வார்த்தைகளை அதிகம் சிதற விட்டாள்…

அவள் பேச்சில் வைதேகி பதறி போய் வனிதாவை அதட்டும் முன் மான்சி.

“ ஓ உங்க அம்மா உங்களுக்கு அப்படி சொல்லி கொடுத்ததால் தான். இப்போ உங்க தங்கை இப்போ ஆஸ்பிட்டலில் இருக்காளா...? ” என்று அவள் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே, தன்னை அடிக்க வந்த கையை பிடித்து நிறுத்திய மான்சி..

“ நீ அடித்தால் நானும் அடிப்பேன்..” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போது அங்கு சூர்ய நாரயணன் வந்து சேர்ந்தார்…

இரவு மான்சியை இங்கு விட்டு தன் வீட்டுக்கு சென்றவருக்கு இரவும் தூக்கம் பிடிக்கவில்லை.. அதனால் காலையில் தன் மனைவியையும், மகளையும் பார்க்க மருத்துவமனைக்கு சென்று பார்த்தவர்.. மனைவியின் உடல் நிலையில் முன்னேற்றம் என்று சொன்ன மருத்துவர்..

மகளை பற்றி சொன்ன செய்தியான..

“ இப்போ பரவாயில்லையா இருக்காங்க.. ஆனா இதே நிலை நீடித்தா அவங்க உயிருக்கு உத்திரவாதம் கிடையாது..” என்று மருத்துவர் சொன்ன அந்த செய்தி ஒரு தகப்பனாக கேட்க கூடாத வார்த்தை அது..

“ இனி நான் பார்த்துக்குறேன் ரமேஷ்..” என்று அந்த மருத்துவமனை அவர்களுடையது தான் என்பதால், அங்கு இருக்கும் மருத்துவரின் பெரும் பாலோர் பெயர் சூர்ய நாரயணனுக்கு தெரியும்..

அதுவும் இந்த ரமேஷை சூர்ய நாரயணனுக்கு நன்கு தெரியும்.. அந்த தெரியும் என்பதாலேயே, சூர்ய நாரயணனின் சங்கடம் இன்னும் கூடியது…

மருத்துவரிடம் பேசிய பின் தெளிந்து அமர்ந்திருந்த அனிதாவை பார்க்க அவள் அனுமதிக்கப்பட்ட அறைக்கு சென்றவரை அனிதா தலை நிமிர்ந்து பார்த்ததில் இவருக்கு தான் என்னவோ போல் ஆனது…

“ நீ செய்தது.. என்ன விளைவு கொடுத்து இருக்கு பார்த்தியா…?” என்ற கேள்வியில், அனிதா இன்னும் தலையை நிமிர்த்தி அவரை பார்த்து..

“ நீங்க செய்ததின் பின் விளைவு தான் இது..” என்று சொன்னவளிடம் இனியும் எதுவும் பேச இயலாது.. நாம் தான் அசிங்கப்பட வேண்டும் என்று நினைத்து, அங்கு இருந்து செல்ல பார்த்தவரை..

“எப்படியோ நேரம் பார்த்து, அந்த பொம்பளை பெண்ணை நம்ம குடும்பத்துக்கு உள்ளே விட்டு விட்டிங்க போல..” என்றவளின் பேச்சில்..

“ நான் உள்ளே விடல.. நீ செய்த செயல் தான் விட வெச்சது....” என்றவரின் பேச்சில்..

அனிதா கோபம் எல்லாம் கொள்ளவில்லை… “ நான்…. சொன்னா வனி எல்லாம் சொன்னா…” என்று அதே தெனவெட்டு பேச்சு பேசும் அனிதாவிடம் மேலும் பேச இயலாது, அங்கு இருந்து தன் மனைவி அனுமதிக்கப்பட்ட அறைக்கு செல்லும் போது தான் வனிதா..

பத்மாவதியிடம்.. “ மாம் நான் வீட்டுக்கு போறேன்.. அங்கு அவ என்ன செய்யிறா...பார்க்கிறேன்… ஆனா ஒன்னு நான் அவளை நிம்மதியா அந்த வீட்டில் இருக்க விட மாட்டேன்.. அது வீடு நமக்கான வீடு..” என்ற வனிதா சொல்லவும்..

“ வனி பார்த்து.. உன் தங்கை இப்படி செய்து அவள் வாழ்கையை அவள் அழித்துக் கொண்டா., நீ ஏதாவது செய்து பிரச்சனைய இழுத்து விட்டுக்காதே வனி..” என்ற தாயின் எச்சரியையை காதில் விழாது..

“ எனக்கு எல்லாம் தெரியும்.. நான் உங்களை மாதிரி ஏமாந்தவளும் கிடையாது.. அனிதா மாதிரி யோசிக்காது எதுவும் செய்பவளும் கிடையாது…” என்று பேசும் மகளிடம் வாதாட தெம்பு இல்லாது அமைதியாக கண் மூடிக் கொண்டார் பத்மாவதி..

வனிதாவின் பேச்சை கேட்ட சூர்ய நாரயணன் அதை பற்றி அவளிடம் எதுவும் கேட்காது தன் மனைவியிடம் பேசிக் கொண்டு இருந்தவர் வனிதா அங்கு இருந்து செல்லவும்..

அங்கு போய் இவள் என்ன செய்வாளோ என்ற பயத்திலேயே மனைவியிடம்..

“ எனக்கு வேலை இருக்கு..” என்று சொல்லி மருத்துவமனையில் இருந்து கிளம்பியவரை பத்மாவதி குற்றம் சாட்டப்பட்ட பார்வை பார்த்தாலுமே, அதை கருத்தில் கொள்ளாது நேராக சர்வேஷ்வரன் வீட்டுக்கு வந்தார்..

சூர்ய நாரயணன் பயந்தது போலவே அங்கு பிரச்சனையாகி விட்டது என்று உணர்ந்தவர்.. இதை எப்படி சமாளிப்பது என்று மான்சியை பார்த்து ஏதோ பேச வரும் முன்னவே வனிதா

“ உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தால், என் அம்மாவை பத்தி அப்படி பேசுவ…?” என்று கோபத்துடன் பல்லை கடித்துக் கொண்டே தன் கையை மான்சியின் பிடியில் இருந்து விடுவிக்க முயன்ற வாறு கத்தினாள்..

சூர்ய நாரயணன் இருவரின் அருகிலும் விரைந்து வந்து.. “ மான்சி வனி கையை விடு.. அவளுக்கு வலிக்கிறது பார் விடு.. விடு..” என்று இரண்டு மூன்று முறை சொல்லிய பின் தான் மான்சி வனிதாவின் கையை விட்டது..

மீண்டும் அடிக்க ஓங்கிய கையை இப்போது சூர்ய நாரயணன் பிடித்தவர்…

“ இது என்ன பழக்கம் வனி…” என்று அதட்டிய தன் தந்தையை முறைத்து பார்த்த வனிதா..

“ இவள் என்ன சொன்னா தெரியுமா டாட்…?” என்று இன்னும் ஆவேசத்துடன் அவள் குரல் உயரவும்.. அவர் அவர் அறையில் இருந்த அனைவரும் இவர்கள் இருந்த இடத்துக்கு வந்து விட்டனர்.. இதில் இன்னொரு ஜோடியான கீதாஞ்சலி விக்ரமும் அடக்கமே…

அனைவருக்கும் என்ன பிரச்சனை என்று தெரியாத போதும், மான்சி,, வனிதா இடையில் தான் பிரச்சனை என்பதை வனிதாவின் முகமே காட்டி கொடுத்தது..

மான்சி எப்போதும் போல் தலையை குனிந்த வாறு தான் இருந்தாள்.. அதனால் அவள் கோபமாக இருக்கிறாளா..? என்பது அங்கு யாருக்கும் தெரியவில்லை..

சர்வேஷ்வரன் தான்.. “ என்ன பிரச்சனை ..? “ என்று அங்கு கையை பிசைந்த வாறு நின்றுக் கொண்டு இருந்த தன் அன்னையை பார்த்து கேட்டான்..

அவர் என்ன சொல்லுவார்.. முதல் தவறு வனிதாவுடையது தான்.. ஆனால் அதற்க்கு என்று மான்சி பேசிய பேச்சு.. ஏனோ வைதேகிக்கு அவ்வளவு உவப்பானதாக இருக்கவில்லை..

அவர் மனதிலும் இது தான்.. என்னவோ நல்ல பொம்பளையை பேசியது போல் இப்படி கோபப்டுகிறாள் என்று… அதோடு பத்மாவதி தான் இந்த வீட்டுக்கு மருமகளாக ஆன பின் தான்.. தன் அண்ணனுக்கு மணம் முடித்து வைத்த பெண்… அவளை அது போல் மான்சி பேசியதும் வைதேகிக்கு பிடிக்கவில்லை..

அதனால் வைதேகி தன் மகன் கேள்விக்கு பதில் அளிக்காது ஒரு வித முக சுழிப்போடு மான்சியை பார்த்தார்…

சர்வேஷ்வரன் இதை கண்டு கொண்டதும் சூர்ய நாரயணனிடம்.. “ என்ன மாமா..?” என்ற சர்வாவின் கேள்விக்கு அவருக்கும் ஒன்றும் தெரியாத போது அவர் என்ன சொல்வார்..

அவருமே வனிதாவின் கையை மான்சி பிடித்துக் கொண்டு இருக்கும் போது தானே இந்த அறைக்கு வந்தது…

“ தெரியல சர்வா…” என்று சூர்ய நாரயணன் சொல்லவும்..

வனிதா கோபத்துடன்.. “ தெரிந்தாலும், அவர் சொல்ல மாட்டார் சர்வா… ஏன்னா தப்பு அவர் ஆசை நாயகியின் மகள் மீது இருக்கும் போது, அவர் எப்படி சொல்வார்..?” என்று வனிதா சொன்ன அந்த ஆசை நாயகி என்ற வார்த்தையில், மான்சியின் மனம் துடி துடித்து தான் போனது..

இது வரை அவளை பார்வையால் மட்டும் தான் கிழாக மற்றவர்கள் பார்த்தார்கள்… தன் காது பட இது போல் பேச்சுக்களை கேட்டது கிடையாது.. காரணம் சூர்ய நாரயணன் சமூகத்தில் பெரிய மனிதர் ..அவரை பகைத்து கொள்ள கூடாது என்று..

ஆனால் இப்போது அதே குடும்பத்தில் இருந்து பேசும் போது, சூர்ய நாரயணனாலேயே தடுக்க முடியாது எனும் போது ,மான்சியால் என்ன செய்ய முடியும்..

அதனால் ஒரு வித கைய்யாலாகாத தனத்தோடு சூர்ய நாரயணனை கண்கள் முழுவதும் கண்ணீர் மூடி மறைத்தால், அவரின் முகம் சரியாக தெரியாத போதும், அவரையே பார்த்திருந்தாள் மான்சி…

வனிதா துளசியை பற்றி பேசியதை விட, மான்சியின் கண்ணீர் வடிந்த முகத்தை பார்த்த போது, சூர்ய நாரயணன் மனது பதை பதைத்து போனது..

எப்போதும் மான்சி யாரின் முன்னும் அழுது அவர் பார்த்தது கிடையாது… ஏன் துளசி முன் கூட ஆதங்கம் கோபம்.. ஆத்திரம் தங்களின் இயலாமை.. இது போல் உணர்ச்சிகளை தான் அவள் காட்டி இருக்கிறாள்.. தன்னிடம் அது கூட கிடையாது..

ஆனால் இங்கு இவ்வளவு பேர் முன் அவள் கண்ணீர் வடிந்த முகத்தை பார்த்ததும் கோபத்துடன்..

“ என்ன பேச்சு வனிதா இது..? உன் தங்கை செய்து வைத்த காரியத்துக்கு, மான்சி மட்டும் இந்த கல்யாணத்துக்கு சம்மதித்து இருக்கவில்லை என்றால், இப்போது மீடியா முழுவதும் உன் தங்கையையும், நம்ம குடும்பத்தை பற்றியும் தான் பேசி இருப்பாங்க…

இன்னைக்கு இப்போது எந்த ஒரு பிரச்சனையும் இல்லாது, நம்ம மானம் தப்பி விட்டது என்றால், அதுக்கு காரணம் மான்சி.. நீ அவளிடம் அப்படி பேசுவியா…?” என்று சூர்ய நாரயணன் தன் மகளிடம் சத்தம் போடவும்…

பதில் தன் மருமகன் மகேஷ்வரனிடம் இருந்து வந்தது..

“ இந்த கல்யாணம் அவளுக்கு ஜாக் பாட் மாமா.. என்னவோ அவள் தியாகம் செய்தது போல் பேசுறிங்க..?” என்று மருமகன் பேச்சுக்கு, வனிதாவிடம் பேசியது போல் மகேஷ்வரனிடம் பேச முடியாது… சூர்ய நாரயணனால் இரு தலை கொல்லி போல் இருந்தார்..

ஒன்று தங்கையின் புகுந்த வீடும்.. தன் மகளின் கணவனும். அடுத்து தன் வளர்ப்பு மகளின் வாழ போகும் வீடு.. இந்த வீட்டு ஆட்களை பேசுவது முறை இல்லை என்று அமைதி காத்துக் கொண்டவர்..

தலை மீது கை வைத்து கொண்டு அங்கு இருக்கும் இருக்கையில் அமர்ந்து விட்ட மான்சியை, துக்கத்துடன் அமைதியாக பார்ப்பதை தவிர.. அவரால் வேறு ஒன்றும் செய்ய முடியாது போனது..

ஆம் மான்சி வனிதா பேச்சுக்கு மட்டும் தான் அவளாள் பதில் கொடுக்க முடிந்தது… அனைவரும் ஒரே குடும்பமாக ஒன்று சேர்ந்து கொண்டு, தான் மட்டும் தனித்து நிற்கையில், தன் அம்மாவை பற்றிய இது போலான பேச்சுக்களை கேட்ட போது..

ஆடை இல்லாது நிர்வாணமாக நிற்க வைத்து அனைவரும் தன்னையே பார்ப்பது போல், அந்த நேரம் அவள் உணர்ந்தாள்.. வாழ்க்கையில் எவ்வளவோ அவள் பார்த்து இருக்கிறாள்.. ஆனால் இப்போது தன் காது பட கேட்கும் இந்த பேச்சுக்கள் அவளுக்கு கொடுமையிலும், கொடுமையாக இருந்தது..

அந்த நேரம், அந்த பேச்சு கேட்டு அந்த அதிர்ச்சியில் வழிந்த கண்ணீரோடு சூர்ய நாரயணனை பார்த்தது தான்..

அடுத்து யாரையும் தலை நிமிர்ந்தும் பார்க்கவில்லை.. அடுத்து எந்த பேச்சுக்கும் அவள் கண்ணீர் சிந்த வில்லை…அமைதியாக இருக்கையில் அமர்ந்து விட்டாள்…

அவள் அமைதியை பார்த்து அங்கு இருந்த அனைவரும் என்ன நினைத்தனரோ, வனிதா எதோ பேச முயலும் போது ரேவதி..

“ கொஞ்சம் அமைதியா தான் இரேன்.. இப்போ தானே ஆஸ்பிட்டலில் இருந்து வந்தே போ.. போய் குளிச்சிட்டு சாப்பிடு.. போ..” என்று சொல்லவும் , அனைவரின் முகத்தையும் பார்த்த வனிதா என்ன நினைத்தாளோ…

“ நான் ஒன்னு மட்டும் சொல்றேன்.. ரொம்ப தலை மீது தூக்கி வைத்து ஆடுனா..? அப்புறம் நம்ம குடும்பது மானம் காத்துல பறப்பது உறுதி… ஏன்னா பிறப்பு அப்படி பார்த்துக்குங்க..” என்று சொல்லி விட்டு சென்ற, வனிதாவின் பேச்சை யாரும் மறுத்து பேசாதிலேயே இவர்கள் எண்ணமும் இது தானா என்று நினைக்க தோன்றியது மான்சிக்கு..

அதுவும் சர்வேஷ்வரன் அங்கு தான் இருக்கிறான்...அவன் கூட எதுவும் பேசாது பேச விட்டு வேடிக்கை பார்க்கிறானே.. அப்போ இரவு நடந்தது வெறும் இளமையின் தேடல் மட்டும் தானா..? என்று உறுதி பட நினைக்க வைத்தது சர்வேஷ்வரனின் தொடர் மவுனம்…

பின் நிலைமையை சகஜமாக்கும் பொருட்டு ரேவதி கீதாஞ்சலியை பார்த்து..

“ என்னடீ குளிக்காம வந்து நிற்க்கிற..” என்று ஒரு அதட்டல் போட..

“ இல்ல பெரிம்மா சத்தம் அதிகமா கேட்டது … அது தான் பயந்து போய் ஓடி வந்துட்டேன்..” என்று பல்லை கடித்துக் கொண்டு கீதா சொல்லும் போதே..

அய்யோ இப்போ நான் எந்த கோலத்தில் இருக்கேன் என்று தெரியலையே.. லூசு மாதிரியா இப்படி வந்து நிற்ப்பேன் என்று நினைத்துக் கொண்டே, தன் கணவன் விக்ரமை ஓரக்கண்ணால் பார்த்தாள்..

அவனும் ஒரு வித சங்கடத்துடன் தன்னை பார்த்த அந்த பார்வையில் தான் பதறி தன் அறைக்கு ஓடி போய் கண்ணாடியில் தன் முகத்தை பார்த்தவளுக்கு . லூசு என்ன அதற்க்கு மேல் என்ன வார்த்தைகள் இருக்கிறதோ அதை எல்லாம் வைத்து தன்னை தானே திட்டிக் கொள்ளலாம் போல் இருந்தது அவள் கோலம்
 
Top