Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Nayaganin Nayagi-1

  • Thread Author
அத்தியாயம்…1

“தே**** பை****”” என்ற வார்த்தை அவன் அணிந்து இருந்த தலை கவசத்தையும் மீறி அவன் காதில் தெளிவாக விழுந்தது. அந்த வார்த்தை தன் காதில் உள் நுழைந்து அவன் மூலையில் எட்டும் வேளயில் அவ்வளவு வேகமாக செலுத்திக் கொண்டு இருந்த தன் புல்லட்டின் சக்கரம் க்ரீச் என்று சத்தம் எழுப்பி நிற்கும் வகையில் தன் வண்டியை நிறுத்தி இருந்த நம் கதையின் நாயகன் குருமூர்த்தி…

வண்டியை நிறுத்திய வேகத்தை விட தன்னை திட்டியவன் அருகில் வேகமாக வந்து நின்றவன்… “இப்போ என்ன சொன்ன….?” இப்போ என்ன சொன்ன…?” என்று கேட்டுக் கொண்டே தான் கழட்டிய தலை கவசத்தை வைத்தே அவன் தாடையில் இரு குத்து குத்தியவன் தன் வாயில் இருந்த சுவிங்கம் மெல்ல அவன் கேட்ட அந்த தோரணையில் திட்டியவன் ஒரு நிமிடம் ஆடியே போய் விட்டான்.

திட்டியவன் ஒழுங்காக தன் வண்டியில் நேராக தான் வந்தான்.. ராங் ரூட்டில் வந்து நம்ம ராங்கான குருமூர்த்தி தான்... ஆனால் கெட்ட வார்த்தை திட்டியவன் தன் முன் நின்றவனின் தோற்றத்தில் ஒரு நிமிடம் ஆடி போனாலும், மறு நிமிடமே அவன் தானே ராங் ரூட்டில் வந்தான்..நான் ஏன் பயப்படனும் என்ற தைரியத்தில்..

“சார் என்ன சார் அடிக்கிறிங்க…?நீங்க ராங்கா வந்து என்னை அடிப்பிங்களா…?” என்று திட்டியவன் கேட்கும் போதே சாலையில் வந்தவர்கள் தத்தம் வண்டியை நிறுத்தி விட்டு.. ஆள் ஆளுக்கு நியாயம் சொல்ல ஆராம்பித்து விட்டனர்.

குருமூர்த்தியோ… “நான் சரியா வந்தேன் என்று நான் சொல்லலே…இப்போ நீ என்ன சொல்லி என்னை திட்டின அதை திரும்ப ஒரு தடவை சொல்.” என்று அவனை மீண்டும் அடிப்பது போல் கையை ஓங்கிக் கொண்டு கேட்டான்.

அங்கு இருப்பவர்களில் ஒரு சிலர்.. “என்ன சார் இது …?அவர் ஒழுங்கா இடது பக்கமா தான் வந்துட்டு இருந்தார்...ஆனால் நீங்க தான் எதிர்த்தாப்பல வந்து உடனே வலது பக்கம் திரும்பினிங்க..தப்ப உங்க பேருல வெச்சிட்டு அவரை அடிக்கிறிங்க..

இது நல்லதுக்கு இல்ல. ஒழுங்கு மரியாதையா அவர் கிட்ட மன்னிப்பு கேள்..அதோ நீங்க வந்து மோதியதில் அவர் வண்டி அந்த பக்கம் விழுந்து இருக்கு..அதில் என்ன என்ன போய் இருக்குன்னு சரி பார்த்துட்டு அதுக்கு உண்டான செலவும் நீங்க தான் ஏத்துக்கனும்” என்று ஒரு நியாயவாதி அந்த நேரத்துக்கு நீதிபதியாய் மாறி தன் தீர்ப்பை சொன்னார்.

அதற்க்குள் அவசரத்துக்கு நீதிபதியாய் ஆனவரின் பக்கத்தில் நின்றுக் கொண்டு இருந்தவர் அவரின் கை பிடித்து கண் ஜாடை காட்டினார்..அவர் கண் பார்வை சென்ற இடதில் தன் கண்ணை ஓட விட்ட அந்த அவசர நீதிபதியின் கண்கள் போய் சேர்ந்த இடம் குருமூர்த்தியின் வண்டி.

“என்ன …?” என்று கேட்டவரிடம் திரும்பவும் … “வண்டியை…பார்.” என்று ஜாடை கட்ட அப்போது தான் வண்டியின் பின் பக்கத்தில் இருந்த வக்கீலுக்கு உண்டான சின்னமும் அதன் கீழ் நான் ரொம்ப கேடு கெட்டவன் என்று எழுதி இருந்த வார்த்தையையும் பார்த்து..

“இது என்னடா வம்பா போச்சு..வக்கீல் அவனே ஒத்துக் கொள்கிறான்… நான் கெட்டவன் என்று… பார்க்கவும் அப்படி தான் இருக்கான்...இவனை பெத்தாங்களா…?இல்ல செஞ்சாங்களா…? என்பது போல் ஆறடிக்கு மேல் வளர்ந்தவனின் அந்த தோற்றமும்..மாநிறத்தில் முகம் கலையாக இருந்தாலும், அவன் முகத்தில் வெட்டுப்பட்டு இருந்த அந்த இரு கோடுகள் அவனுக்கு முரட்டு தோற்றத்தை தான் கொடுத்திருந்தது.

பார்த்ததும் நல்லவன் என்று மதிக்க முடியாத தோற்றத்தில் தான் அவன் இருந்தான். பேச்சும் அந்த அளவுக்கு நல்ல விதமாக இல்லை என்பது போல் தான் அவன் அடுத்து அடுத்த பேச்சு இருந்தது…

“நான் தானே தப்பா வந்தேன்..அப்போ நீ என்னை தானே திட்டனும்..இப்போ நீ திட்டினது யாரை சொல் சொல்..” என்று கேட்டவனின் பேச்சில் நியாயம் இருந்தது தான்.

ஆனால் அதை அவன் கேட்ட விதம்...அவன் வாயின் உள் மென்ற சுவிங்கம் போய் இப்போது அவன் உதட்டில் சிகரெட்டு குடிக் கொண்டு இருக்க..அவனின் கண்ணின் சிவப்பில் நேற்று இரவு போட்ட சரக்கின் வடு அவன் கண்களில் தெரிய… அவன் கேட்ட விதம்.

“.சொல்…” “ சொல்…” என்று குருமூர்த்தி சொன்ன ஒவ்வொரு சொல்லுக்கும் சிகரெட்டை ஒரு இழு இழுத்து அதன் புகையை தன்னை திட்டியவனின் முகத்தில் ஊதிக் கொண்டு இருந்தான்.

அவனும் அவன் வண்டியில் இருக்கும் சின்னதை பார்த்து விட்டான் போல… “என்ன சார் நீங்க ராங்கா வந்துட்டு என்னை திட்டுறிங்க..அடிக்கிறிங்க.. வக்கீலா இருந்தா என்ன வேணா செய்யலாமா…?” என்று அவன் நியாயம் கேட்டான்..

“சாரி…” என்று உடனே மன்னிப்பு கேட்ட குருமூர்த்தியின் பேச்சை அந்த திட்டிவன் மட்டும் அல்லாது அங்கு இருந்தவர்களும் அவனின் மன்னிப்பை அதிசயத்து கேட்டுக் கொண்டு இருக்கும் போதே..

குருமூர்த்தி அடுத்து பேசிய.. “நான் ராங்கா வந்ததுக்கு மன்னிப்பு கேட்டுட்டேன்… இப்போ நீ என்ன செய்ய போற..அதாவது நீ திட்டினது என்னை இல்ல.” என்று குருமூர்த்தி அவன் திட்டிய வார்த்தையிலேயே நிலையாக நிற்க..

அங்கு இருந்தவர்கள் ஒரு சிலர் குருமூர்த்தியை கொஞ்சம் பெருமையாக தான் பார்த்தனர்..பரவாயில்ல பையன் முரட்டு தனமா இருந்தாலும், அம்மா மேல பாசம் அதிகம் போல..அதான் அந்த வார்த்தையை அவனால் தாங்க முடியவில்லை என்று நினைத்துக் கொண்டனர் ..

திட்டினவனும் சரி பிரச்சனை தீரனும்..இவனை பார்த்தா லேசில் விடாதவன் போல இருக்கு… சரி மன்னிப்பு கேட்டுடலாம்.. என்று நினைத்து...அவன்…”சா…” அவனின் மன்னிப்பை முழுதுமாக கேட்க விடாத குருமூர்த்தி நீ திட்டுனது என்னை இல்ல...என்ற அவன் வார்த்தையில்..

“உங்க வீடு எங்கு சார் இருக்கு…” என்று பாவம் போல் கேட்டான்..

ஆம் அவன் ரொம்ப பாவம் தான்..காலையில் ஐந்தரை மணிக்கே எழுப்பி விட்ட அவன் மனைவியின் பேச்சுக்கு பயந்து பால் வாங்கிக் கொண்டு வரும் போது தான் இந்த விபத்து..

விபத்தில் அவனுக்கோ அவன் வண்டிக்கோ எந்த பிரச்சனையும் இல்ல..அவன் நன்றாக தான் இருக்கிறான். அவன் வண்டியும் கவிழ்ந்து இருக்கிறது அவ்வளவு தான்…எடுத்து நிற்த்தினால் ஓட்டுக் கொண்டு போய் விடலாம்..அவன் ஒரு வண்டி மெக்கானிக் அதனால் அவன் வண்டி நிலை அவனுக்கு தெரியும்.

ராங் ரூட்டில் வந்தவனை எப்போதும் திட்டும் அந்த வார்த்தை எப்போதும் போல் அவன் வாயில் இருந்து வந்து விட்டது… எப்போதும் திட்டினால் போகும் வேகத்துக்கு இவனும் வந்து விடுவான் அவனும் கடந்து போய் விடுவான்..இத்தனை ஆண்டுகளில் அந்த திட்டியவனின் அனுபவம் இது தான்..

ஆனால் இன்று தான் அந்த வார்த்தையின் வீரியத்தில் முழுபலனும் அனுபவிப்பது போல தன் எதிரில் இருந்தவனின் பேச்சும் செயலிலும்..அவன் வீடு தேடி அவன் அம்மாவின் காலிலேயே விழுந்து விடலாம் என்று நினைத்தவனாய் வீடு கேட்க…

“பக்கத்து தெரு தான்.” என்று குருமூர்த்தி சொன்னதும்..

கை எடுத்து கும்பிட்ட அந்த மெக்கானிக்.. “சார் உங்க வீட்டுக்கு வந்து உங்க அம்மா காலிலேயே விழுந்துடுறேன் சார்” என்று சொன்னான்.

அதற்க்கும்…“என் வீட்டில் அம்மா இல்லையே…” என்றதும்.. அங்கு இருந்த அனைவருக்கும் இறந்து விட்டாங்களா...?” என்ற நினைத்த நொடி..குருமூர்த்தி சொன்ன..

“எங்க அம்மா நீ சொன்னது போல தான்… அதனால நீ என்னை அந்த வார்த்தை கொண்டு திட்டினது கோபம் வரல…ஆனா நீ இதே வார்த்தையை எத்தனை பேரை பார்த்து சொல்லி இருப்ப..அவங்க அது மாதிரி இல்லாதப்ப...வீட்டில் அவங்க பாட்டுக்கு இருக்கும் போது அவன் மகன் செஞ்ச தப்புக்கு அவன் அம்மாவை நீ திட்டுவீயா…?திட்டுவீயா…?” என்று சொல்லி சொல்லி அவனை இன்னும் இரண்டு அடி அடுத்து விட்டே அந்த இடத்தை விட்டு சென்றான்.

அடிவாங்கியவனும் சரி..அதை வேடிக்கை பார்த்தவர்களும் சரி..இப்போ இவன் என்ன சொல்லிட்டு போனான்… இவன் யார் என்று..சொன்னது உண்மையா..?உண்மையா இருந்தாலும் இப்படியா சொல்லுவான்… இல்ல சும்மா விளையாடிட்டு போறானா...ஆனால் இதில் எல்லாம் என்ன விளையாட்டு…?என்று அங்கு அனைவரையும் குழப்பி விட்ட குருமூர்த்தி வந்து நின்ற இடம் காவல்நிலையம்…

அங்கு இருந்த நான்கு பெண்கள் குருமூர்த்தி வந்ததை பார்த்ததும்..”தோ வந்திட்டாருல எங்க ராசா..இப்போ பேசுங்க..?இப்போ எங்க கிட்ட வாய் கிழிய பேசுனிங்கலே...தைரியம் இருந்தா இவர் கிட்ட பேசுங்கலேன்.” என்று அந்த பெண்கள் பேசுவதை கேட்ட அந்த ஏரியா துணை ஆய்வாளர்..யாருடா என்று நிமிர்ந்து பார்த்த போது அவன் முன் இருந்த குருமூர்த்தியை பார்த்ததும்..

“அய்யோ இவனா…?” என்று சொல்லி எழுந்து நின்று விட்டான்.

“உட்காருங்க..உட்காருங்க.” என்று சொல்லி ஆய்வாளர் எதிர் இருக்கையில் அமர்ந்த குருமூர்த்தி..

“சார் நீங்க மைண்ட் வாய்ஸ்சுன்னு நினச்சிட்டு சத்தமா பேசுறிங்க.” என்று சொன்னவன் தொடர்ந்து தான் பார்க்க வந்த வேலையை ஆராம்பித்தான்.

“இவங்க எதுக்கு இங்கு கொண்டுட்டு வந்திங்கன்னு நான் தெரிஞ்சிக்கலாமா…?” என்று கேட்டவனையும் தான் கொண்டு வந்த பெண்களையும் மாறி மாறி பார்த்த அந்த ஆய்வாளர்…

“இவங்க யாருன்னு உங்களுக்கு தெரியாதா…?”

“ஆ தெரியும்.” என்று சொன்ன குருமூர்த்தையை ஒரு மாதிரியாக பார்த்துக் கொண்டே…”அப்போ எதுக்கு அழச்சிட்டு வந்திங்கன்னு கேட்குறிங்க…?” என்று கேட்டார்.

அதற்க்கு குருமூர்த்தி… “ இவங்க யாருன்னு எனக்கு தெரியும் சார்...இவங்கள எதுக்கு இப்போ அழச்சிட்டு வந்திங்க…?அது தான் என் கேள்வி…”

கடவுளே நல்லா குழப்புறானே...என்று அந்த காவல் நிலையத்திற்க்கு புதியதாய் வந்த அந்த துணை ஆய்வாளர் நினைத்தார்...கூடவே தான் இங்கு வந்ததும் நீதிமன்ற வளாகத்தில் இவனை காட்டி … “இவன் கிட்ட மட்டும் வாயை கொடுத்திடாதிங்க...அவ்வளவு தான்.” என்று சொன்ன மற்றொரு காவலரின் பேச்சுக்கு ஏற்ப தான் அன்று நீதிமன்றத்தில் அவனுடைய வாதம் இருந்தது.

மும்பையில்..கொல்கத்தாவில் இருப்பது போல இங்குக் விபச்சார விடுதி இருந்தால்...மொத்தமா ஒழியவில்லை என்றாலும்..இந்த கற்பழிப்பு குறையும்...இந்த சின்ன சின்ன குழந்தைங்க இதன் கொடுமையில் இருந்து தப்பித்துக் கொள்வாங்க.. நிம்மதியா வீதியில் பெண் குழந்தைங்க விளையாடுங்க..கூடவே இதுக்கு என்று இருக்கும் பெண்களின் வயிற்று பாடும் நிறையும் என்ற அன்று அவன் வாதத்தை கேட்ட அந்த துணை ஆய்வாளர் பயந்து தான் போய் விட்டார்.

அன்று நினைத்தார் இவன் கிட்ட மாட்டவே கூடாதுன்னு..ஆனால் இன்று காலையில் தன் காவல்நிலையத்தை தேடி அதுவும் தொடக்கமே இந்த வில்லங்கமான பேச்சில்… ஆனால்,விதி யாரை விட்டது…?

குருமூர்த்தி கேட்ட கேள்விக்கு… “விபச்சார வழக்கில் கைது செஞ்சி கூட்டிட்டு வந்து இருக்கோம்.” என்று அந்த துணை ஆய்வாளர் ஒழுங்காக தான் பதில் கூறினார்.

ஆனால் அந்த பதிலை தான் நம் குருமூர்த்தி ஏற்காது… “இவங்க புதுசா விபச்சாரம் செய்றாங்கன்னு கைது செய்து இருக்கிங்களா…?” என்ற குருமூர்த்தியின் கேள்வியில்..

கடவுளே இவனிடம் இருந்து தப்பித்தால் போதும் என்று… “ இவளுங்க…” என்று ஆராம்பித்த ஆய்வாளரை குருமூர்த்தி ஒரு பார்வை பார்த்ததில்.. “இவங்க…” என்று திருத்திக் கொண்ட அந்த ஆய்வாளர் தொடர்ந்து…

“ இவங்க தொழில்ல இருக்க பெண்கள் தான்…வக்கீல் உங்களுக்கு தெரியாதது இல்ல..ஒரு மாதத்திற்க்கு இந்த டார்க்கெட் என்று இருக்கு..அது தான்…” என்று அந்த துணை ஆய்வாளர் தான் சொல்ல வந்ததை முழுவதும் சொல்லாது விடுத்தாலும் குருமூர்த்தி புரிந்துக் கொண்டவனாய்..

“சரி..சரி.. தான்.” என்று குருமூர்த்தி உடனே ஒத்துக் கொண்டதில் அந்த துணை ஆய்வாளர் பரவாயில்ல நிலமை என்ன என்று சொன்னா புரிஞ்சிக்கிறார்..இவர போய் வில்லங்கம் பிடிச்சவன் என்று சொல்றாங்களே என்று அவர் நினைத்து முடிக்கும் வேளயில் குருமூர்த்தி …

“கேசு பிடிச்சா ஒழுங்கா பிடிக்கனும் சார்..அதாவது செய்வதை திருந்த செய்.. என்பது போல்..” என்று சொன்ன குருமூர்த்தி பேச்சு புரியாது அவனை பார்த்த அந்த துணை ஆய்வாளரிடம்…

“இப்போ ஒரு கொலை தனி ஒருவன் செய்யலாம்.கற்பழிப்பும் முடியும்.. நல்ல பலமா இருந்தா முடியும் முடியும்.” என்று அவனுக்கு அவனோ சொல்லிக் கொண்ட குருமூர்த்தி..பின்.. “அதே போல் தான் ஈவ்டீஸிங்கும்..ஆனா இந்த விபச்சாரம் தனியா செய்ய முடியுமா…? பெண் இங்கு இருக்காங்க… இந்த குற்றத்தில் பங்கு எடுத்த அந்த இன்னொரு நபர் எங்கே…?” என்று கேட்ட குருமூர்த்தி…

“என்ன புரியலையா…?” அங்கு இருந்த நான்கு பெண்களையும் காட்டி… “இவங்க கூட இருந்த ஆண்கள் எங்கே…?” என்று கேட்டு அந்த துணை ஆய்வாளரை ஒரு வழி செய்ததில் …

“கூட்டிட்டு போங்க கூட்டிட்டு போங்க…” என்று அந்த துணை ஆய்வாளர் அந்த நான்கு பெண்களையும் குருமூர்த்தி உடனே அனுப்பி வைத்தார்.

அப்போ வருகிறேன் என்று விடைப்பெறும் போது அங்கு இருந்த காவல் அதிகாரி ஒருவரிடம் குருமூர்த்தி… “எதை வேண்டும் ஆனாலும் ஓசியில் பெறலாம் இது கூடவா…? உண்மையா உடல் உழைப்புன்னா அது அவங்க தான்யா… போற நீங்க சும்மாவா வர்றிங்க..மூன்று நாள் எழுந்துக்க முடியாம உங்க வெறி எல்லாத்தையும் அந்த உடம்பு மேல தான காமிக்கிறிங்க… துட்டு கொடுய்யா இது கூட ஓசில..” என்று சொல்லும் போதே குருமூர்த்தியின் முகம் நீ எல்லாம் என்ன ஜென்மம்டா என்று சொல்லாமல் சொன்னது.

இந்த கதை ஒரு வில்லங்கம் பிடித்த கதை தான். நாயகம் பேசும் பேச்சில் நியாயம் இருந்தாலும், அவன் வார்த்தையில் நாகரிகம் இருக்காது..அதாவது ஒரு சிலர் மனதை குப்பையை வைத்துக் கொண்டு பேச்சில் அப்படி ஒரு தூய்மை இருக்கும்..ஒரு சில மனதில் எதுவும் இருக்காது அதாவது உள்ளதை உள்ளபடி சொவார்கள். பேச்சில் நாகரிகம் பூச்சு எல்லாம் இருக்காது..

ஒரு சிலர்…. அவங்க மனசுல என்ன இருக்கு…? பேச்சில் என்ன அர்த்தம் என்று தெரியாது ஒரு வில்லங்கத்தனமா இருக்கும்.. . நம் நாயகம் இந்த வில்லங்கதனத்தில் அடங்குவான்…

போட்டியில் முதல் நிலையில் வெற்றி பெற வைத்தமைக்கு என் நன்றியை இக்கதை…










 
Active member
Joined
May 12, 2024
Messages
215
Lawyer Gurumoorthy… vaai konjam upset… mathapadi nallavan thanunga… avan amma sariyillatha pombalaiya? Antha women group la avangalum irukkangala?
 
Administrator
Staff member
Joined
May 9, 2024
Messages
929
Lawyer Gurumoorthy… vaai konjam upset… mathapadi nallavan thanunga… avan amma sariyillatha pombalaiya? Antha women group la avangalum irukkangala?
நன்றி
 
Top