Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Negizhundha Nenjam...22.2

  • Thread Author
அத்தியாயம்….22….2



நேத்ரனை அந்த சமயத்தில் அங்கு எதிர் பார்க்காது அவன் குரலில் அதிர்ந்து போனவனாக அத்வைத் திரும்பி பார்த்தான்…



நேத்ரன் இந்த சினிமாவில் காட்டுவது போல் எல்லாம் கதவை உடைத்து எல்லாம் உள் நுழையவில்லை.. ஏன் என்றால் அவர்கள் தான் கதவையே தாழ்ப்பாள் இட வில்லையே..



இவர்களை போன்றவர்களை வைத்து தான் ஒரு பழ மொழி உள்ளது.. அது பரம்பரை ஆன்டி பஞ்சத்துக்கு ஆன்டி.. என்று..



இது போல் கடத்தலில் எல்லாம் எந்த வித முன் அனுபவமும் இல்லாது.. அதுவும் மந்ரா சொன்ன…



“ இது போல் வேலை செய்ய என்று ஆட்கள் உண்டு.. அவர்களை வைத்து ஸாகித்யாவை கடத்தலாம்..” என்றதற்க்கு..

அத்வைத்திடம் இருந்து உடனே.. “ அது எல்லாம் வேண்டாம்..” என்று விட்டான்..



மந்ராவின் திட்டம் ஸாகித்யாவை கடத்தி அத்வைத் தொட்டு விட்டால், நேத்ரன் விட்டு விடுவான் என்று அவள் அவனுக்கு திட்டம் வகுத்து கொடுத்தான்…



ஆனால் அத்வைத் திட்டத்திற்க்குள் ஒரு திட்டமாக.. “ தான் தொட்டு ஸாகித்யாவை மனைவியாக்கும் திட்டத்தை மனதில் வைத்து இருந்ததால், பார்த்த உடன் அழகுடன் இருக்கும் ஸாகித்யாவை இது போலானவர்களிடம் இருந்தால், என்ன என்றாலும் நடக்கலாம்…



“அதாவது பாம்பின் கால் பாம்பரியும்..” என்ற பழ மொழிக்கு ஏற்ப.. அவர்கள் ஸாகித்யாவை ஏதாவது செய்து விடுவார்கள் என்று நினைத்து மறுத்து விட்டான்…



மந்ரா அதற்க்கு மறுப்பு எல்லாம் சொல்லவில்லை.. ஸாகித்யாவை தொட்ட பின் அதை நேத்ரனிடம் சொல்ல தானே போகிறோம்… தன்னை அவன் என்ன செய்தான்.. அதையே தான் அவன் ஸாகித்யாவையும் செய்வான் என்று நினைத்து விட்டாள்..



மேலும் நேத்ரனுக்கு தான் தொழிற்சாலையில் ஒரு பிரச்சனையை உருவாக்கி விட்டோமே… அதை எல்லாம் முடித்து ஸாகித்யாவின் நினைவு வரும் போது, தாங்கள் எதை நினைத்து திட்டம் வகுத்தோமோ அது நடந்து முடிந்து இருக்கும் என்று அவள் ஒரு கணக்கை வைத்திருந்தாள்..



ஆனால் எதுவும் அவர்கள் திட்டத்திற்க்குள் அடங்காது நடந்து முடிந்து விட்டது…



இவர்களின் நேரம் நேத்ரனின் வீட்டுக்கு என்று இருக்கும் கார் சர்வீஸ்க்கு அனுப்பி இருக்க.. காலையில் ஸாகித்யாவும் நேத்ரனும் குழந்தையை பள்ளியில் விட்டு விட்டு அலுவலகம் சென்றனர்..





நேத்ரன் திட்ட மிட்டது… அவன் மட்டும் பள்ளிக்கு சென்று மாலையில் குழந்தையை வீட்டில் விட்டு விட்டு, பின் அலுவலகம் வந்து அலுவலகம் முடியும் போது இருவரும் ஒரு சேர வீட்டுக்கு போவது என்று..



நேத்ரனை தொழிற்சாலை பிரச்சனை என்று இங்கு வந்து விட்டாள், ஸாகித்யா தனியார் காரை தான் ஏற்பாடு செய்வாள் .. அப்போது கடத்தி விடலாம் என்று..



மந்ராவும். அத்வைத்தும் நினைத்து பாராதது… இடையில் குழந்தைக்கு உடல் நிலை விசயம்.. நேத்ரன் அலுலகத்தின் சாலையில் தான் அத்வைத் ஏற்பாடு செய்த கார் நின்று கொண்டு இருந்தது..





ஸாகித்யா மாலை வருவாள் என்று தெரிந்தும் முன்னவே காத்து கொண்டு தான் இருந்தனர்.. ஸாகித்யா முன்னவே அதுவும் அவள் அலுவகத்தில் இருந்தே காரை புக் செய்த பின் கார் வந்த பின் ஸாகித்யா காரில் அமர்ந்த பின் தான் அத்வைத் ஏற்பாடு செய்து இருந்தவர்கள் கவனித்து அத்வைத்துக்கு அழைத்து விசயம் சொன்னர்..



அத்வைத் சொன்னது.. “ இன்றே முடித்து விட வேண்டும்.. நேத்ரன் சுதாகரித்து கொண்டால் பிரச்சனை என்று நினைத்து…



“ஸாகித்யாவை பின் தொடருங்கள்.. “ என்று..



ஸாகித்யா பள்ளியில் இறங்கியதும். அதையும் அந்த கடத்த வந்தவர்கள் அத்வைத்துக்கு தெரியப்படுத்தி விட்டனர்…





அத்வைத்“ பள்ளியில் இருந்து வீடோ.. அலுவலகமோ செல்ல கண்டிப்பாக திரும்ப வாடகை காரை தான் அழைப்பாள். அவர்கள் வரும் முன் நீங்கள் அவளை உங்கள் காரில் ஏற்றி விடுங்கள் என்று..





ஸாகித்யா பள்ளியை விட்டு வெளி வரும் போது குழந்தையின் கை பிடித்துக் கொண்டு வருவதை பார்த்து அதையும் அவர்கள் அத்வைத்திடம் சொல்லி விட்டார்கள்..





அத்வைத் ஒரு நிமிடம் கூட யோசிக்கவில்லை…



“ குழந்தையையும் சேர்த்து தூக்கி விடு..” என்று சொல்லி விட்டான்…



மந்ராவிடம் சொல்லாது அத்வைத் செய்த செயல் தான் நேத்ரனை இங்கு வந்து நிறுத்தி இருந்தது…



ஆம் குழந்தையின் பள்ளி பையில் அவள் எங்கு இருக்கிறாள் என்று கண்டறியும் வழி செய்து வைத்து இருந்தான்…







மந்ராவும் குழந்தையையும் சேர்த்து அதுவும் உடல் நிலை சரியில்லாத குழந்தையை இங்கு கடத்தியதில் அவளும் அனைத்தும் மறந்தாள் என்று தான் சொல்ல வேண்டும்..



அதுவும் வந்த உடன் தான் வேண்டாம் என்று சொல்ல சொல்ல அவளை மயங்க வைத்தில் அத்வைத்துக்கும் அவளுக்குமே பிரச்சனையாகி விட..



பின் அத்வைத் நடந்து கொள்வதை பார்த்து, அதில் பயந்து என்று இருந்தவளுக்கு எப்போது குழந்தையின் பாதுக்காப்புக்கு என்று அவள் பயன் படுத்தும் பொருளில் ஏதாவது ஒன்றில் நேத்ரன் அதை பொருத்தும் படி செய்து விடுவான்..



குழந்தைக்கு என்று அணியும் வாட்ச் இப்படி ஏதாவது ஒன்றில் இருக்கும்.. அது மந்ராவுக்கும் தெரியும் தான்..









ஆனால் இங்கு நடந்த கலபரத்தில் அனைத்தும் மறந்து போனவளாக இருந்து விட்டாள்.. அவள் மறதி நேத்ரனுக்கு சாதகமாக அமைந்து விட்டது..



குழந்தையை வைத்து இல்லை என்றாலும் அவன் இவர்களை கண்டு பிடித்து தான் இருப்பான்.. ஆனால் நேரம் கடத்தாது..



அதாவது அவர்கள் எதற்க்கு ஸாகித்யாவை கடத்தினார்களோ அது நடப்பதற்க்கு முன் வந்து இருப்பானா..? என்று தெரியவில்லை..



ஆனால் அப்படி இல்லாது போனாலும் முடிவு இவர்கள் நினைத்தது போல் இருந்து இருக்காது என்பது மட்டும் நிச்சயம்..



அதை தான் நேத்ரன் அத்வைத்திடம் சொன்னான்..



“ உன் திட்டம் என்னடா இப்படி படு கேவலமா இருக்கு… உன்னை வைத்து எல்லாம் நான் தொழில் நடத்தி இருக்கேன் என்று நினைக்கும் போது எனக்கே அசிங்கமா இருக்குடா…” என்று பேசிய வாரே மயக்கத்தில் இருந்து தெளிந்து கொண்டு இருந்த ஸாகி பேபியின் கட்டை அவிழ்த்து கொண்டு இருந்தான்…



நேத்ரனை பார்த்து அத்வைத்தின் வெறி இன்னும் தான் கூடியது…



“ நானா முட்டாள்…? நானா முட்டாள்..?” என்று திரும்ப திரும்ப அதையே சொல்லிக் கொண்டே ஸாகித்யாவின் அருகில் செல்ல பார்த்தவனின் கைக்கு கிட்டாது நேத்ரன் அருகில் ஓடி போனவளாக கட்டை அவிழ்த்த குழந்தையை தூக்கி கொண்டு நேத்ரனின் கையை கெட்டியாக பிடித்துக் கொண்டு நின்று விட்டாள்..



ஸாகித்யாவின் கை உதறலை கவனித்த நேத்ரன்.. “ இவனுக்கு ஏன் இப்படி பயப்படுற..? அந்த அளவுக்கு எல்லாம் அவன் வெர்த் கிடையாது..” என்ற நேத்ரனின் பேச்சு அத்வைத்தை இன்னும் தூண்டி விட்டு விட்டது…



“ ஆ நான் எந்த அளவுக்கு வெர்த் என்று.. நீ இன்னும் கொஞ்ச நேரம் கழித்து வந்து இருந்தால் தெரிந்து இருக்கும்..” என்றவனின் பேச்சின் அர்த்தம் நேத்ரனுக்கு விளங்கவே செய்தது..



“ நீ இவளை தொட்டுட்டா நான் என் மனைவியை விட்டு விடுவேன் என்று நினச்சா நான் முன்ன சொன்னது போல் நீ முட்டாள் இல்லடா அடி முட்டாளுக்கும் முட்டாள்..” என்றவனின் பேச்சில்..



இவ்வளவு நேரமும் அதிர்ந்து போய் இருந்தவள்,, அந்த வார்த்தை கொடுத்த தாக்கத்தில் வெளி வந்து..



“ அப்போ என்னை மட்டும் ஏன் விட்டு விட்ட..?” என்று கேட்டு நான் அத்வைத்துக்கும் மேல் முட்டாள் என்று தன்னை நிருபித்தாள்…







இவ்வளவு நேரமும் மந்ராவின் பக்கம் பார்வை செலுத்தாது.. நான் பார்க்கும் அளவுக்கு கூட நீ கிடையாது என்று இருந்தவன்..



இப்போது அவள் பேச்சில்.. “ ஒரு காலத்தில் உன்னை போய் புத்திசாலி என்று நினைத்து தான் நான் அப்போ என் வாழ்க்கையின் மிக முக்கியமான அந்த முடிவை எடுத்தேன்..”



அவன் வாழ்க்கையின் மிக முக்கியமான அவளோடான கல்யாணம் என்ற வார்த்தையை கூட சொல்லாது சொன்னவன்..



“ தானே விருப்பப்பட்டு நடந்த விசயமும்.. வலுக்கட்டாயமாக நடக்கும் ஒரு விசயமும் உனக்கு ஒன்றா…?” என்று கேட்டவன்..



பின்.. “ நீ தான் இந்த முட்டாளுக்கு திட்டம் போட்டு குடுத்ததா..? ஆனால் ஒன்று… எனக்கும் உன்னை பற்றி முழுசா தெரியல.. எனக்கும் உன்னை பற்றி தெரியல… என் மனைவியை வலுக்கட்டாயமாக ஒருவன் தொட்டா நான் அவளை விட்டு விடுவேன்னா..? தொட்டவன் தன் உயிரை விட்டு இருப்பான்…” என்று ஆவேசமாக பேசிக் கொண்டே இருந்தவன் தன் முன் இருந்த அத்வைத்தின் முகத்தில் ஒரு குத்து குத்த..



எங்கு இருந்த ரத்தம் வருக்கிறது என்பதனை அனுமானிக்க முடியாத அளவுக்கு தொல தொல என்று ஊத்திக் கொண்டு இருந்ததில் முகத்தை கையில் அழைத்திக் கொண்டு நின்ற இடத்திலேயே அவன் அமர்ந்து விட்டான்..



அடித்த நேத்ரன் முகத்தில் அப்படி ஒரு கோபம் தெரிந்தது… நடுங்கி கொண்டு இருந்த ஸாகித்யாவின் தோள் பற்றி அவளிடம் ஏதோ மெல்ல பேசிக் கொண்டு இருந்தான்..



மந்ராவுக்கு அவன் என்ன ஸாகித்யாவிடம் பேசுகிறான் என்று கேட்கவில்லை… ஆனால் நேத்ரன் கண்ணில் தெரிந்த அன்பு.. இல்லை இல்லை இல்லவே இல்லை அது அன்பு கிடையாது.. காதல்…



நேத்ரன் கண்ணில் தான் இது வரை பார்த்திராத அந்த காதலை மந்ரா இன்று அவன் கண்னில் பார்த்தாள்..



இது போல் மெல்ல அவனுக்கு பேச வருமா..? பேசும் போதே இது போல் மென்மையாக கை வருடுவானா…? என்று பார்த்தவளுக்கு ஏதோ பெரியதாக ஏமாந்த உணர்வு… பின் ஏமாற்றிய உணர்வில்..



“ இது போல் ஒரு நாளாவது என்னிடம் நீ நடந்து கொண்டு இருக்கிறயா நேத்ரா… நீ சொல்ற அவள் கெட்டு போய் இருந்தாலும் விட்டு இருக்க மாட்டா என்று.. அப்போ ஏன் என்னை விட்டு விட்டே…?



நீ இது போல் இருந்து இருந்தால் நான் ஏன்..? “ என்று அதற்க்கு மேல் பேச முடியாது முகத்தை மூடி அழுபவளின் அழுகை அடங்கும் வரை அமைதி காத்தவன்.. இடையே அழும் தன் அன்னையையே ஒரு வித பயத்துடன் பார்த்து கொண்டு இருந்த பேபி ஸாகியை வெளியில் கூட்டி செல்லும் மாறு தன் மனைவியிடம் சைகை செய்தான்…



பின் மந்ரா அழுகை நின்ற பின்… “ மந்ரா தப்பு என் மீதும் இருக்கு.. அது அப்போ நான் உணரவில்லை.. இப்போ உணற்றேன்.. உனக்கும் எனக்கும் எத்தனை வருட நட்பு..

அது அப்படியே நட்பா மட்டும் இருந்து இருந்தால், நன்றாக இருந்து இருக்குமோ என்னவோ..



இத்தனை வருடம் நட்பு.. இதில் என்னை புரிந்து இருப்ப.. வாழ்க்கை பிரச்சனை இல்லாது போகும்.. என்று … ஒரு சில நட்பு வேண்டுமானால் காதல் ஆகும்.. ஆனால் எல்லாம் நட்புக்களும் …



காதல் ஆகுமா..? என்று எனக்கு தெரியல.. ஆனால் கல்யாணத்திற்க்கு நட்பையும் தான்டி ஏதோ மனதில் தோன்றனும்.. இது உனக்கும் என்னிடம் இல்ல.. எனக்கும் உன்னிடம் தோனல.. இது தான் நிஜம்.. “ என்று சொன்னவனிடம்…



“ எனக்கு தோனல என்று எப்படி சொல்ற நீ..? என்று கோபத்துடன் கேட்கும் மந்ராவிடம்..





“ கண்டிப்பா தோனல.. அப்படி தோன்றி இருந்தா என்னை தான்டி உன் மனசு யோசிச்சி இருந்து இருக்காது..



நான் ஒத்துக் கொள்கிறேன்… எனக்கு உன்னிடம் அது போல் தோன்றவில்லை.. அதனால் தான் உன்னிடம் அதிகம் நேரம் செலவிட வேண்டும் என்று எனக்கு தோனல..





நீ அதை பற்றி என்னிடம் சொன்ன போது கூட அதை எல்லாம் பெரியதாக நினைக்காது.. உன்னிடம் பக்குவம் இல்ல என்று தான் நான் நினைத்தேன்..”





உனக்கு ஒன்று தெரியுமா…? ஆஸ்திரேலியா வந்த அடுத்த வாரம் இரண்டு வாரம் வெளிநாடு போவது போல் ப்ளைட் டிக்கட் எல்லாம் புக் செய்து விட்டு தான், நான் இந்தியா வந்ததே…” என்றவனின் பேச்சில் அடங்கிய அழுகை மீண்டும் வந்தது..



அதுவும் குனிந்து தன் வயிற்றை பார்த்தவளுக்கு இன்னும் இன்னும் அழுகை அடக்க முடியது போனதில் நேத்ரன்..



“ இப்போவும் சொல்றேன் மந்ரா.. முழு தப்பும் உன்னுடையது மட்டும் இல்ல.. என்னுடையதும் இருக்கு தான்..



நான் வெளிநாட்டுக்கு போக நினைத்தது கூட நீ ரொம்ப லோன்லியா பீல் பண்ற… கூடவே இன்னும் ஒரு காரணத்தையும் நினைத்து தான்… எனக்கும் உன்னிடம் நேரம் செலவிட வேண்டும் என்று எல்லாம் கிடையாது..











ஆனால் என்ன ஒன்று..? என்ன இருந்தாலும்.. நீ செய்தது துரோகம்.. கொஞ்சம் யோசித்து பார்… நான் வெளிநாடு போகாது இருந்து இருந்தால்.. நீ இப்படி ஆகி இருந்தால் நான் என் குழந்தை தான் என்று நினைத்து இருப்பேன்..



நம் பாதுகாப்பையும் மீறி உண்டாகி விட்டது என்று தான் நான் நினைத்து இருப்பேனே ஒழிய.. உன் மீது சந்தேகமே வந்து இருக்காது.. அதுவும் அவனோடு.. நம்பிக்கையை தகர்ப்பது என்பது ..” என்று சொல்லிக் கொண்டு வந்தவன்.. சிறிது நேரம் எதுவும் பேசாது கண் மூடி தன்னை அமைதி காத்துக் கொண்டவன்..



பின்..” நீ என் கிட்ட சொல்லி இருக்கலாம்.. எனக்கு அத்வைத்தை ரொம்ப பிடித்து இருக்கு..” என்று சொன்னவனுக்கு பதில்…



“ சொல்லி இருந்தா நீ என்ன செய்து இருப்ப.. இவளை என் தலையில் கட்டிட்டு என் ஸாகித்யாவை நீ லவுட்டிட்டு போய் இருந்து இருப்ப அது தானே…?” என்று கீழே ஒழுகும் ரத்தத்தை துடைத்துக் கொண்டு இருந்த அத்வைத் நேத்ரன் மந்ராவிடம் பேசுவதில் இலக்காரம் எழ பேசினான்..

நேத்ரன்.. “ பார் இவனை..” என்பது போல் ஒரு பார்வை பார்த்த நேத்ரன்..



பின் ஏதோ ஒரு நினைவில் முகம் சிறிது கசங்கி பின் ஏதோ ஒரு முடிவு எடுத்தவனாக..



“ நானும் ரொம்ப எல்லாம் ஒழுங்கு கிடையாது… ஆனால் நான் மனதால அப்படி நினைப்பது… பார்ப்பது… கூட தப்பு என்று தான் ஆஸ்திரேலியாவுக்கு நான் தான் போய் ஆக வேண்டும் என்று எந்த வித கட்டாயமும் இல்லாத போதும் நான் போக காரணம் ஸாகித்யா தான்..” என்று நேத்ரன் சொல்லும் போது குழந்தைக்கு ஏறகனவே காய்ச்சல் ஆன உடம்பு.. இதில் மயக்க மருந்தும் கொடுத்து இருக்கிறார்கள்..







இதில் அவள் தன் அன்னையை பார்த்தது.. அவர்கள் பேசியது புரியாது போனாலும் ஏதோ ஒன்று என்று நினைத்து, பேபி ஸாகி வெளியில் தன்னிடம்..



“ மம்மி அம்மா கெட்டவங்களா.. அதனால தான் டாட் உங்களை மம்மியா இருக்க சொல்லி இருக்காங்களா..? என்று ஏதேதோ கேட்டுக் கொண்டு இருந்த குழந்தையை இன்னும் சமாளிப்பது கடினம் என்று நினைத்து நேத்ரனிடம் வந்தவளுக்கு அவன் சொன்ன வார்த்தையில் ஆணி அடித்தது போல் நின்று விட்டாள்…
 
Top