Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Pirithariyaa Pithana Podhum-13

  • Thread Author
அத்தியாயம்..13

லிங்கா எதிர் பார்த்தது போல் தான் மதுவோடு கீழ் தளத்தில் வந்த போது கூடத்தில் அனைவரும் இவன் வருகைக்காக தவறு தவறு.. அவர்களின் இருவரின் வரவுக்காகவும் ஒட்டு மொத்த குடும்பமும் காத்து கொண்டு இருந்தனர்..

லிங்காவுக்கு இது ஒன்றும் புதியது கிடையாது.. ஆனால் பாவம் மது.. ஏற்கனவே மன உளச்சலில் இருக்கும் பெண்.. இவர்கள் பேச்சில் இன்னும் மனது வேதனைக்கு உள்ளாகுமே என்று லிங்கா அந்த இடத்தில் தன்னை விட அவளை நினைத்து தான் பயந்தான்..

ஆனால் அம்மா அப்பா நல்ல படியாக அமைந்து விட்டாள்.. அவர்கள் பெற்றவர்களா.. வளர்ந்தவர்களா அது எல்லாம் கவலை கிடையாது.. தன் குழந்தையை பற்றி நன்கு புரிதல் இருந்தால் யார் வந்தாலும் எதுவும் செய்ய முடியாது என்பதற்க்கு உதாரணம் மதுவின் பெற்றோர்கள் என்று சொல்லலாம்..

மதுவை பார்த்த உடனே அவளின் அம்மா அப்பா இருவரும் அவளின் இருபக்கமும் கை பிடித்து கொண்டு நின்று விட்டனர்..

பின் காயத்ரி தன் அக்கா கணவனிடம்.. “ இது என்ன மாமா நடுயிரவில் எல்லோரயும் எழுப்பி விட்டு விளையாடிட்டு.. ஏதோ பொறி பிடித்து திருடர்களை பிடிப்பது போல எல்லோர் ரூம் கதவையும் தட்டி.. எனக்கு அசிங்கமா இருக்கு மாமா..” என்று விட்டார்.

லிங்காவுக்கு எப்போதும் தன் சின்ன அத்தையின் மீதும்.. சின்ன மாமாவின் மீதும் நல்ல அபிப்ராயம் தான்.. அன்று அந்த டீன் ஏஜில் தான் ஒரே வீட்டில் இருந்தால் மதுவையும் தவறாக பார்ப்பேன் என்று பெரிய மாமா சொன்ன போது அமைதியாக இருந்தது அவனுக்கு மன வேதனை அளித்தது தான்..

ஆனால் பரவாயில்லை மகள் எனும் போதாவது வாய் திறக்கிறார்களே என்றதில் கொஞ்சம் நிம்மதி தான்..

அதற்க்கும் பெரிய மாமா.. “ இல்ல காயூம்மா நம்ம பெண் சின்ன பெண்.. பாவம் அதற்க்கு என்ன தெரியும்.? . நான் சொல்ல வந்தது லிங்கா அவனை பத்தி தான்..” என்று அவரின் நோக்கம் லிங்கா மட்டும் தான்..

அதை வைத்து தான் காய் நகர்த்த முயன்றார். மது வீட்டு பெண்.. அனைவருக்கும் அவளை பிடிக்கும்.. லிங்கா மதுவை தவறாக நோக்கில் பார்க்கிறான் என்று நிரூபித்தால் போதும் தன் மாமனார் மீண்டும் அந்த கல்லூரி பள்ளிநிர்வாகம் தன்னிடம் ஒப்படைத்து விடுவார் என்ற திட்டம் தான் .

ஆனால் அதையும் மதுவின் தந்தை.. சத்யதேவன்.. “ இது என்ன பேச்சு சகல. எப்போ பார் லிங்காவை வைத்து இது போல பேச்சு,.. எனக்கு இது சுத்தமா பிடிக்கல.” என்று தன் அதிருப்தியை வெளிப்படையாக கூறி விட்டார்.

சத்யதேவன் எப்போதும் இப்படி தான் அவர் பெயருக்கு ஏற்றது போல் தான் அவர் பேச்சு இருக்கும்.. அவர் மட்டும் தன் போல இருந்தால் கூட்டு சேர்த்து இருக்கலாமே.. அதோடு அவருக்கு இந்த வீட்டில் அவர் நடத்தையின் மூலம் நல்ல மதிப்பு… அவர் பேச்சை குறை சொல்வது போல சிவ பிரகாஷ் எப்போதும் பேச மாட்டார்.

அதே போல் தான் இப்போதும்.. “ இல்ல சத்யா அந்த வயசுலேயே.” என்றவரின் பேச்சை முழுவதுமாக பேச விடாத சத்யதேவன்..

“ என்ன சகல அந்த வயசுலேயே. நம்ம சின்ன வயசுல யாருக்கும் லட்டர் கொடுத்தது கிடையாதா என்ன… அப்போ நாம என்ன பொறுக்கிங்களா.. மாட்டினவன் வெளியில் வருது. நம்ம போல மாட்டாதவங்க நல்லவங்க.. அவ்வளவு தானே..” என்று எதார்தத்தை சத்யதேவன் பேசினார்..

அவரின் அந்த பேச்சையும் வைத்து அந்த வீட்டில் நான் ஒழுக்க சீலன் என்று மற்றவர்களிடம் நிருபிக்க வேண்டி. “ அது என்ன சகல நாம என்று என்னையும் கூட்டு சேர்த்து சொல்றிங்க. நான் எல்லாம் ஏகபத்தினி விரதன் பா.. நான் அந்த வயசுல கூட எதுவும் செய்யல..” என்று பேச..

அதற்க்கு லிங்கா சிரித்து கொண்டே… “ அது தான் மாமா சொல்றரே.. மாட்டாத வரை ஒழுக்க சீலன் தான் என்று.” கூறியவன்..

பின் தன் சின்ன அத்த மாமாவிடம்.. “ ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் மாமா. நீங்களாவது என்னை புரிந்து கொண்டதற்க்கு. ஆனா அப்போ ஏன் எல்லோரும் அமைதியா இருந்திங்க என்று தான் புரியல.. “ என்று அன்று தன் மன ஆதங்கத்தை வெளிப்படுத்திய பின்.

அனவரையும் பொதுவாக பார்த்து.. “ இன்று ஹாஸ்ட்டல் கொலையை பத்தி தான் மது என் கிட்ட பேசிட்டு இருந்தா.” பாதி உண்மையை தான் லிங்கா கூறினான்..

உடனே சிவ பிரகாஷ் .. “ என்ன கொலையா..? அது தற்கொலை தானே .. “ அங்கு அங்கு காலேஜ் பேர் கெட்டு விட கூடாது என்று கொலையை தற்கொலையா மாத்துவாங்க.. நீங்க என்ன என்றால், தற்கொலையை கொலை என்று பேசுறிங்க…

இது வெளி ஆள் காதிற்க்கு போனா… என்ன ஆவது..?” என்று பட படப்பாக கூறினார்.

அவரின் அந்த பட படப்ப லிங்காவோடு மதுவும் கவனித்தாள் தான். இருவரும் ஒருவருக்கு ஒருவர் பார்த்தும் கொண்டனர்.. லிங்கா கண் சாடையில் அமைதியாக இரு.. என்று சொல்லியும் மதுவால் அமைதியாக இருக்க முடியவில்லை..

அதனால்.. “ அப்படி தான் முன் நடந்த இரண்டு கொலையையும் தற்கொலையா மாத்தி விட்டிட்டிங்களா பெரியப்பா..?” என்று கேட்டு விட்டாள்..

லிங்கா மது இப்படி வெளிப்படையாக கேட்டு விடுவாள் என்று அவன் நினைக்கவே இல்லை..

ஆனால் மற்றவர்கள் இவளின் பேச்சில் அதிர்ந்து தான் போய் விட்டனர்.. ஆள் ஆளுக்கு.. “ என்ன பேச்சு இது மது.. “ என்று அவர்கள் அவர்கள் பேச.

எதற்க்கும் மது பதில் அளிக்கவில்லை கை கட்டி கொண்டு நான் கேட்டதில் என்ன தவறு என்பது போல் தான் நின்று கொண்டு இருந்தாள்..

மது எப்போதும் அந்த வீட்டில் அமைதி தான்.. சின்ன வயதில் இருந்தே… பின் தான் தத்து பெண் என்றதில் எப்போதாவது மற்றவர்களோடு அடம் பிடிப்பவள் பின் அதையும் நிறுத்தி கொண்டாள்.

பின் சஜனா இறந்து அமெரிக்காவில் இருந்து இங்கு வந்ததில் இருந்து அமைதியோ அமைதி தான்.. அப்படி பட்டவள் இப்படி பேசியதில் எல்லோரும் அவளையே தான் பார்த்து கொண்டு இருந்தனர்.

ஆனால் மதுவின் பார்வை தன் அப்பா அம்மாவிடமே தான்.. மது அப்படி அதாவது முன் தற்கொலையை பற்றி தான் பேசியதும் அதிர்ந்த அவர்களின் முகத்தை பார்த்ததுமே மதுவுக்கு தெரிந்து விட்டது.

சஜனா யார் என்பது அவர்களுக்கு தெரிந்து தான் இருக்கிறது என்பது.. தெரிந்தும் இவர்கள் எதுவும் செய்யவில்லையா..? என்பதில் அவளுக்கு மன வேதனை தான்..

ஆனால் தன்னை மட்டுமே தானே அவர்கள் தத்து எடுத்துக் கொண்டார்கள்.. சஜனாவோடு இன்னும் இரண்டு அக்காக்களும் தான் இருக்கிறார்கள்.. எல்லோருக்கும் பார்க்க முடியுமா என்ற நியாய மனது இப்படி யோசித்தது தான்..ஆனால் அதே அவளின் நியாய மனது தான்.. நான் தானே அவளை சென்னை வர வழைத்தது.. என்னால் தானே அவள் இல்லாது போனது.. அவள் இல்லாது போனது

காயத்ரி தான்.. “ என்ன மது . காலேஜ் விசயம் எல்லாம் உன் டாடியே தலையிட மாட்டார்,. நீ எதுக்கு..” என்று தன் கணவனை அதிருப்தியோடு பார்த்து கொண்டே மகளை கண்டித்தாள்..

மது அதற்க்கும் ஏதோ பேச வரும் போது தான் லிங்கா. “ மது அது தான் என் கிட்ட எல்லாம் சொல்லிட்ட இல்ல. நான் பார்த்து கொள்கிறேன்..” என்று விட்டார்..

சிவ பிரகாஷ் என்னவோ நினைத்து இங்கு எல்லோரையும் கூட்ட. பேச்சு அது வேறு ஒரு திசையில் போய் விட்டதில், அவருமே அடுத்து பேசாது போய் விட.

பின் அனைவரும் அவர் அவர் அறைக்கு சென்று விட்டனர்.. கடைசியாக தன் அறைக்கு செல்ல பார்த்த தன் தந்தையை பார்த்து.. “ நீங்க என் கிட்ட ஏதாவது பேசனுமா..? கேட்கனுமா.. என்ற பேச்சில்.ஜெய பிரகாஷ்.. ஏதோ சொல்ல ஆரம்பித்தார் தான்.. ஆனால் அதற்க்குள் அவர் மனைவி. “ என்னங்க டைம் ஆகுது பாருங்க… நாளைக்கு காலையில் சீக்கிரம் போக வேண்டும் என்று வேறு சொன்னிங்க..” என்ற மனைவியின் பேச்சில் அவரை எதிர்க்க முடியாது எல்லாம், அவர் தன் மனைவியின் பின் செல்லவில்லை..

பேச வேண்டிய நேரத்தில் பேசாது.. இப்போதும் பேசி என்ன பயன் என்பது போல் தான் சென்றார்.. அவர் முதுகையே பார்த்து கொண்டு இருந்த லிங்கம்..

அவர் தன் அறை கதவை மூடும்.. முன் அவர் முகத்தை பார்த்து. “ உங்க கிட்ட ஒரு நாள் நான் பேசுவேன்.. அந்த பேச்சு இது போல நடுயிரவில் இருக்காது.. அதே போல நான் பேசும் போது அதை நீங்க மட்டும் கேட்க மாட்டிங்க. இந்த குடும்பம் மொத்தமும் கேட்க தான் பேசுவேன்..” என்று தன் ஒரு விரல் நீட்டி அவரை எச்சரிப்பது போல் பேசிய பின் தான் அவன் தன் தளத்திற்க்கு சென்றது.

தன் அறைக்கு வந்த சோமசுந்தரத்திற்க்கு பேத்தி பேரனின் பேச்சில் ஏதோ விளங்குவது போல்.. தன் கல்லூரி நிர்வாகத்தில் தான் ஏதாவது தவறு இழைத்து விட்டோமோ.. என்ற எண்ணம்.. எண்ணம் என்பதை விட பயம் என்று சொன்னால் சரியாக இருக்கும்..

இன்று ஒரு மரணம்.. தங்கள் கல்லூரி விடுதியில் நினைக்க. பாவம் தான்.. அனுதாபம் தான்.. வாழ வேண்டிய வயதில் அப்படி என்ன தற்கொலை செய்ய வேண்டும்.. ஒரு நிமிடம் தன் பெற்றோர்களை இவர்கள் நினைக்க மாட்டார்களா என்று மட்டுமே தான் அந்த செய்தி கேள்வி பட்டதில் இருந்து அவர் மனது நினைத்து கொண்டது..

ஆனால் இப்போது மது சொல்வது போல் இருந்தால், அது எவ்வளவு பெரிய பாவம்.. மதுவின் பேச்சில் உண்மை இருக்குமோ என்று லிங்காவின் அமைதியும் சொல்ல. அன்று இரவு முழுவதும் அந்த பெரியவருக்கு தூக்கம் வரவில்லை..

ஏற்கனவே வீட்டிற்க்கு வாழ வந்த பெண்ணை சாக அடித்து பாவத்த இந்த குடும்பம் ஏற்றி விட்டு இருக்கிறது.

இதில் நான் என் நிர்வாகத்தினால் ஒரு பெண் கிடையாது மூன்று சின்ன பெண்கள்..மனது அய்யோ என்று அடித்து கொண்டது..

அதே போல் தான் மதுவின் பெற்றோர்கள் தங்கள் அறையில் இன்றைய இறப்பை விட நான்கு வருடம் முன் இறந்த சஜனாவின் இறப்பை பற்றிய பேச்சு தான்..காயத்ரி.. “ ஏங்க மதுவுக்கு எதாவது தெரிந்து இருக்குமாங்க. எனக்கு ரொம்ப பயமா இருக்கு.” என்று தன் கணவனின் கை பற்றி பயந்த முகத்துடன் தன்னிடம் கேட்ட மனைவியிடம்..

“அது எப்படி தெரியும் காயூ.. ? நாம தான் அப்போவே வருடம் சப்ஜெக்ட் வைத்து அந்த பெண் மதுவோடு தான் படித்து இருக்கா என்று தான் தெரிந்து கொண்டமோ.. கூட படிக்கிற பெண் பேசி இருக்கலாம் அவ்வளவு தான்..

அதோட ட்வீன்ஸா இருந்தாலுமே, இரண்டு பேரும் வேறு வேறு போல தானே இருக்காங்க.” என்று தன் மனைவியின் மனது சமாதானம் அடைவது போல் பேசினாலுமே, சஜனா இறப்பிற்க்கு பின் அமெரிக்காவில் இருந்து மது தன் படிப்பை பாதியில் விட்டு விட்டு இந்தியா வந்தது

வந்தவளின் முகம் கலை இழந்து காணப்பட்டது.. அதோடு அதன் பின் அமைதியான பெண் இன்னும் அமைதியானது.. ஒரு வேளை.. சத்யதேவன் மனது முரணாக நினைத்தாலுமே, அதை தன் மனைவியிடம் கூறி இன்னும் அவளை பயப்படுத்த முயலவில்லை.

இவர்கள் அறையில் இப்படி என்றால் ஜெய பிரகாஷ் அறையில்.. “ அவன் யார்..? உங்களை கை நீட்டி பேச. நீங்க அமைதியா கேட்டுட்டு இருக்கிங்க..?” என்று கோபத்துடன் பேசியவளிடம்..

“அவன் யார்…? எனக்கு என்று உனக்கு தெரியாதா.” என்று கேட்டவன் அடுத்து எதுவும் பேசாது திரும்பி படுத்து கொண்டார்.

இங்கு சிவ பிரகாஷோ.. பிள்ளையாரை பிடிக்க போய் குரங்கா ஆனது போல. என்ன இது தான் ஒன்று தொடங்கி வைக்க.. பிரச்சனை வேறு திசையில் தவறு தன் திசை நோக்கி வந்ததில் நாளை என்ன நடக்குமோ என்று தூக்கம் வராது அவருமே புரண்டு புரண்டு தான் காலை வரை படுக்கையில் கிடந்தார்.

இதில் அமைதியாக உறங்கியவர்கள் இருவர் என்றால் அது மது லிங்கா தான்.. மது இத்தனை நாட்கள் தன் மனதில் இருந்த பாரத்தை தன் ஈஷ் அத்தானிடம் இறக்கி விட்டதினால் வந்த அமைதியில் உறங்கினாள் என்றால், லிங்கா தன்னை மது அணைத்தது… தான் மதுவை அணைத்ததில் தன் மேல் இருக்கும் மதுவின் வாசத்தில் அதை சுவாசித்த வாறு உறங்கி போனான்…


 
Top