Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Pirithariyaa Pithana Podhum...24 final

  • Thread Author

அத்தியாயம்.. 24 பாகம் இரண்டு

லிங்கா கல்யாணத்திற்க்கு பின் நான் எப்படி இருப்பேன் என்பதை ஒரு சிலதை ட்ரயல் செய்து அவளுக்கு உணர்த்தியவன்.. “ ஒடி போயிடு இதுக்கு மேல நீ இங்கு இருந்தா… சேதாரத்திற்க்கு நான் பொறுப்பாக முடியாது.” என்று சொன்னவனின் பேச்சிலும் செயலிலும் மது அங்கு நில்லாது அவன் சொன்னது போலவே ஒடி போய் விட்டாள்..

அடுத்து அவனே தான் இதுக்கு மேல் தாளாது நாம கண்ரோல் பண்ணனும் என்று நினைத்தாலும், இவள் வந்து வந்து நம்மை சாய்த்து விடுகிறாள் என்று நினைத்து அதற்க்கு ஒரு முடிவு கட்ட மறு நாளே வீட்டு பெரியவர்களிடம் தங்களின் திருமண பேச்சை ஆரம்பித்து விட்டான்..இதோ அந்த தொடக்கம் நாளை அவனுக்கு மதுவோடான திருமணம் என்று நிற்க. அந்த பெரிய திருமண மண்டபம் முழுவதும் உறவு நட்பு என்று நிறைந்து இருந்தனர்.மதுவின் பக்கம் அவளின் தந்தை தாய் என காயத்ரி சத்யதேவன் நிற்க. லிங்கேஷ்வரன் பக்கம் அவனின் தாய் மாமா மாமி அவர் மகன்கள் என்று நிற்க வைத்து கொண்டான்..

சுகந்திக்கும் சரி லிங்காவின் தந்தை ஜெய பிரகாஷுக்கும் சரி.. தாங்கள் மட்டும் தனித்து நின்று விட்டது போல் அன்று உணர்ந்தனர்.. அவர்களின் பெண்கள் சிறு வயது என்பதால், தங்களுக்கு மரியாதை தரகிறார்களா..? இல்லையா என்று எல்லாம் அவர்களுக்கு புரியவில்லை..

புது ஆடை உறவுகளின் வருகை இதிலேயே அவர்கள் சந்தோஷப்பட்டு கொண்டனர்.. அதுவும் இன்றைய உடை எடுத்து கொடுத்தது அவர்களின் லிங்கா அண்ணன்..

இப்போது எல்லாம் அந்த சிறு பெண்களிடம் பாசத்தோடு பழகவில்லை என்றாலும், எட்ட எல்லாம் நிறுத்தி வைக்கவில்லை..

பேசினால் பேசுவான்.. தங்கைகள் வந்து.. “ உங்க மேரஜுக்கு எங்களுக்கு எதுவும் இல்லையா..?” என்று கேட்டதும்.. அன்றே அவர்களை அழைத்து சென்று விழாவுக்கு உடுத்துவது போல் ஆடைகள் எடுத்ததோடு மட்டும் அல்லாது… அதற்க்கு தோதாக அவர்களின் வயதிற்க்கு ஏற்ப சிறிய தங்க நகைகளும் வாங்கி கொடுத்தான்..

சுகந்தி திருமணம் அன்று பெண்களுக்கு “ லிங்கா வாங்கி தந்தது சின்ன நகையாக இருக்கு இதை போட்டு கொள்ளுங்கள்” என்று தன் பெண்களுக்கு என்று சுகந்தி வாங்கி வைத்த பெரிய பெரிய நகைகளை எடுத்து போட பார்த்தவரை தடுத்து நிறுத்திய பெண்கள்..

“அம்மா இது எல்லாம் உங்கள மாதிரி இருக்கிறவங்க போடுறது.. அண்ணா எங்க ஏஜ்க்கு ஏத்தது போல வாங்கி கொடுத்து இருக்கிறார். இது தான் நாங்க போடுவோம்..” என்று சொல்லி லிங்கா வாங்கி தந்த உடை அணிகலங்களையே அணிந்து கொண்டவர்கள்..

மாப்பிள்ளையின் அறையில் இருந்த லிங்காவிடம் அதை காட்டி.. ‘ நல்லா இருக்கா அண்ணா..?” என்று கேட்டு. லிங்கா சொன்ன..

“ ரொம்ப அழகா இருக்கிங்க..” என்ற அவனின் பாராட்டையும் பெற்று விட்டதால், அந்த பெண்களுக்கு வேறு எதுவும் படவில்லை..

ஆனால் ஜெய பிரகாஷ் அன்று ஒரு தந்தையாக தனித்து நின்ற போது தான்.. அவர் செய்த செயல்களின் வீரியம் அவருக்கு எடுத்து உரைத்தது.

அதுவும் நாளை பாத பூஜையின் சடங்கின் போது தான் இல்லாது லிங்கா.. “ நான் மாமா மாமிக்கு தான் பாஜ பூஜை செய்வேன்.. அங்கு யாரும் சீன் கிரீயேட் செய்ய கூடாது…” என்று வீட்டில் தன் தந்தையிடம் மகன் தன்னை பார்த்து கொண்டே கூறிய பேச்சில் ஜெய பிரகாஷ் நிலை என்ன என்று சொல்ல முடியாத நிலை தான்.

அதுவும் சில உறவுகள் வேண்டும் என்றே தான் மட்டும் தனித்து இருப்பதை கவனித்து. “ என்னப்பா உன் மகன் இன்னுமா உன் கிட்ட பேசல.. ரொம்ப வைராக்கியம் பிடிச்ச பையன் தான் போல ..” என்று ஜெய பிரகாஷின் மனது நோகும் என்று தெரிந்தே கேட்டனர்./

ஒரு சிலரோ… “அம்மாவை கஷ்டப்படுத்தின எந்த அப்பாவையும் மகன் தள்ளி தான் வைப்பான்.. அதுவும் இவர் செய்த செயல் ரொம்ப அநியாயம் தானே.”மேடையின் நின்று கொண்டு இருந்த லிங்கேஷ்வரனை காண்பித்து.. “ நல்ல வேள அந்த மகன் சோமசுந்தரம் அண்ணன் போல் இருக்கான்.. இல்லேன்னா இதையும் சேர்த்து போன புன்னியவதி பேச்சு வாங்கி இருப்பா..” என்று லிங்காவின் தாத்தா சோமசுந்தரத்திற்க்கு தம்பி முறை ஆகும் ஒரு பெரியவர்..

முன்னவே தன் மனது அறுத்து கொண்டு இருந்த விசயமான ஜெய பிரகாஷ் தானே மருமகள் வீட்டிற்க்கு போனது. ஆனா அந்த பெண்ணை மட்டும் தப்பு சொல்றங்கலே என்று தன் மனதில் தோன்றி அந்த எண்ணத்தை ஒரு நாள் தன் மகளுக்கு பத்திரிக்கை கொடுக்கும் போகும் போது அண்ணி மருமகளை பேசிய பேச்சை கேட்டு கேட்டார் தான்..

ஆனால் வசதியில் தாழ்ந்து இருந்தவரின் பேச்சு அப்போது எங்கு செல்லுப்படி ஆச்சி… “ அப்போ யார் வீட்டிற்க்கு போனாலுமே..” என்ற காதில் வாங்க முடியாத அந்த வார்த்தையில் ஏன் கேட்டோம் என்று லிங்காவின் அன்னையின் முகத்தை கூட பார்க்க முடியாது வந்தவர் தான்..

பின் அந்த பெண் இறந்தது. அதுவும் தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டாள் என்ற செய்தி கேட்ட பின்னும் அந்த பெண் முகத்தை பார்க்க மனதில் தெம்பு இல்லாது போகாது விட்டு விட்டார்.அடுத்து ஜெய பிரகாஷ் தன்னிடம் வேலை பார்த்த சுகந்தியை திருமணம் செய்து கொண்டான் என்ற விசயம் காதில் விழ ஒன்றும் ஒன்றும் இரண்டு என்று அனுபவம் மிக்க அந்த முதியவர் மிக எளிதாக மனதில் கணக்கிட்டு விட்டார் தான்..

பின் லிங்கா இந்த நாட்டை விட்டே சென்று விட்டான் என்ற செய்தியும் அவர் காதில் விழுந்தன தான்.. எதற்க்கும் அவர் சென்னைக்கு வரவில்லை..

லிங்காவின் திருமணம் என்றதில் இதோ வந்து விட்டார்.. லிங்காவை பார்த்தவரின் கண்ணும் மனதும் அவ்வளவு நிறைந்து விட்டது..

இத்தனை ஆண்டுகள் கேட்ட செய்தியின் தாக்கத்தில், அதற்க்கு எல்லாம் காரணமான ஜெய பிரகாஷை ஒரு புழுவை பார்ப்பது போல் பார்த்தவர் ..

அடுத்த நாள் லிங்கா தன் தாய் மாமன் மாமி பாதத்திற்க்கு பூஜை செய்யும் போது நேற்றைய தினம் போல கை கட்டி அதை பார்த்து கொண்டு இருந்த ஜெய பிரகாஷின் அருகில் சென்ற அந்த பெரியவர்…

“ உப்பு தின்றவன் தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும் ஜெயா… நீ அன்னைக்கு அந்த பெண்ணை அவசரமா தொட்டது கூட தப்பு சொல்லலே நான். ஆனால் அந்த பெண் மானம் போகும் போதும் உயிர் போவதையும் பார்த்துட்டு இருந்துட்டே பார்த்தியா.. அதுக்கு தான் இதோ உன் சொந்த மகன் கல்யாணத்திலேயே ஒரு அன்னியனா தூரம் நின்று வேடிக்கை பார்த்துட்டு இருக்க.

குப்பையா தூரம் வீச நினைத்த உன் மகன் லிங்கேஷ்வரன் இன்னைக்கு கோபுரமா உயர்ந்து நின்னுட்டான் பாரு.. நல்லா பார்..” என்று விட்டார்.

ஆம் அந்த பெரியவர் சொன்னது போல் தான் லிங்கா கோபுரமாக உயர்ந்து விட்டான். அனைத்திலுமே.. தன் குடும்ப வாழ்க்கையிலும்.. இதோ திருமண நாள் அன்றே… தாலி கட்டிய உடனே..

அன்று அவளுக்கு ஒரு பரிட்ச்சை அவனே அவன் கல்லூரிக்கு அழைத்து சென்று எழுதிய அன்றைய கடைசி பரிட்சை முடிந்த பின்.. பெரியவர்கள் அன்றைய இரவே நல்ல நாள் என்று முதல் இரவுக்கு ஏற்பாடு செய்ய.

தன் தளத்தில் இருக்கும் அறைக்கு வந்த தன் மனைவியை உடனே ஆண்டு விட வேண்டும் என்று அவன் வயதின் உணர்ச்சிகள் சொன்னாலுமே, திருமண கலைப்பு மட்டும் அல்லாது, தேர்வு எழுதிய கலைப்பிலும் தன் அறைக்கு வந்த மனைவியின் கண் சோர்வில்..

“ ரொம்ப டையடா இருக்க டா.. தூங்கு. அதற்க்கு முன் அந்த பாலை குடி..” என்று விட்டு அவள் எடுத்து கொண்டு வந்த பாலை அவன் சிறிது குடித்து விட்டு மீதம் மொத்தத்தையும் மனைவியை குடிக்க வைத்தவனையே பார்த்து கொண்டு இருந்த மதுவிடம்.

“என்னம்மா தூங்கு. “ என்று கட்டிலில் படுத்தவளின் தலையை மென்மையாக தடவி கொடுத்து கொண்டு இருந்தவனின் கை பிடித்து கொண்ட மது..

“இல்ல இன்னைக்கு நல்ல நாள் என்று தான் நமக்கு..” என்று மேல சொல்ல முடியாது தயங்கியவளின் பக்கத்தில் படுத்து கொண்டு அவளின் கன்னத்தை பற்றிக் கொண்ட லிங்கா..

காதலோடு அவள் கண்களை பார்த்த வாறு… “ நாம இனி வரும் நாள் எல்லாம் நல்ல நாள் தான் மது… தூங்கு..” என்று சொல்லியும் தூங்காகது தயங்கிய கண்களோடு தன்னை பார்த்து கொண்டு இருந்தவளை பார்த்து.

“என்ன டா செல்லம்..” என்று கேட்டவனின் குரலில் இருந்த காதல் மதுவுக்கு தெரிந்தது தான்.. இருந்தாலுமே கணவனின் வாய் வழி மூலம் தெரிய.“ இல்ல ஜென்ஸ் இந்த நாளை ரொம்ப ஆவலா எதிர் பார்த்துட்டு இருப்பாங்க என்று கேள்வி பட்டேன்… ஆனா நீந தூங்கு சொல்றிங்க.. உங்களுக்கு பிடிச்சா மாதிரி நான் இல்லையா…” என்று அவள் சொன்னதுமே லிங்காவின் முகம் மனைவியின் முகத்தின் அருகில் சென்றது தான்..

ஆனால் அவள் முகத்தை தன் உதடு தொடாது அவன் மூச்சு காற்று மட்டும் தொட்டு தொட்டு அவள் முகத்தில் தழுவியதில், பெண்ணவளின் மனதிலும் சரி, உடலிலும் சரி உஷ்ணத்தின் அளவு சரிவிகிதமாக உயர்ந்ததில், அவள் கண்கள் பாதி அச்சத்திலும், மீதி எதிர்பார்ப்பிலும் தன்னை பார்த்தவளின் கண்களில் இவை இரண்டையும் தான்டி அந்த கண்களில் தெரிந்த சோர்வில்..

வெள்ளம் என்று தன் மனதில் பொங்கி எழுந்த தன் உணர்வுகளை அடக்கியவனாய்… “ உன்னை எனக்கு எப்படி எவ்வளவு பிடிக்கும் என்று நான் ஆரம்பித்தால், அது முடியவே முடியாது என்று ஒரு தொடர்கதையா ஆகிடும்.. வேண்டாம் இன்றைக்கு ஒரு நாள் தூங்கு.. புரியுதா. தூங்கிக்கே..

அப்போ தான் நாளைக்கு என்ன தாங்கும் சக்தி உன் கிட்ட இருக்கும்.. “ என்று சொன்னதோடு அது எப்படி என்று அவள் காதில் லிங்கா பேசிய பேச்சில்.

“சீ போங்கா. நீங்க ஜென்டில் மேன் என்று நினச்சிட்டு இருந்தேன்.. “ என்று கூறியவளின் காதில் லிங்கா மேலும் ஏதோ சொல்ல.

“ஈஷ் அத்தான் நான் தூங்கிட்டேன்.” என்று கன்னம் சிவந்து கணவன் இன்னும் ஏதாவது சொல்லி விடுவானோ என்ற பயத்தில், லிங்காவுக்காக தூங்குவது போல் கண்ணை மூடிக் கொண்ட மது..

இருந்த சோர்வில் உண்மையிலேயே தூங்கி தான் போனாள்.. அன்று மட்டும் தான் அவள் நிம்மதியாக தூங்கியது.. லிங்கா தூங்க விட்டது ..அடுத்து அடுத்த நாள்களில் அவனின் இளமையின் தேவைகள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகை என்று.. அவளை படுத்தி எடுக்கவில்லை..

ஆனாலுமே மது லிங்காவின் தேவைகள் அறிந்து, அவனின் அனைத்து தேவைகளையும் ஒரு மனைவியாக இரவில். அன்னையாக பகலில் அவள் அவனை கவனித்து கொண்டதில் ஆண் ஒன்று பெண் ஒன்று என்று இரண்டு குழந்தைகளுக்கு ஐந்து வருடத்தில் லிங்காவும் மதுவும் பெற்றோர்கள் எனும் ஸ்தானத்தை அடைந்தார்கள்.

வீட்டில் இந்த ஸ்தானம் என்றால் வெளி உலகில் வியக்கதக்க வகையில் அவனின் உயரம் வளர்ந்து நின்றது..

ஐந்து வருடங்கள் முன் தன் தாத்தா தன்னிடம் கொடுத்த அந்த கல்லூரியின் தரம் அவனா இறங்கவில்லை தான்.. அதில் அவனுக்கு துளி அளவும் சம்மந்தம் கிடையாது தான்.

இன்னும் கேட்டால் அவன் உண்மையை மட்டுமே தான் வெளி உலகிற்க்கு கொண்டு வந்தான்..

ஒரு சிலர்கள் அவனின் அந்த உண்மை தன்மையை உணர்ந்து அவன் கல்லூரியிலேயே சேர்த்தனர்.. ஆனால் பலர் தன் பெண்களை சேர்க்க பயந்தனர் தான்..

அந்த வருடம் அவனின் கல்லூரியின் சேர்க்கை முந்தைய வருடத்தை விட மிக குறைந்த அளவே இடம் நிரம்பியது.

இன்னும் கேட்டால் அந்த வருடம் கல்லூரியை நஷ்டத்தில் தான் லிங்கா இயக்கினான்.. பள்ளி ஒரளவுக்கு பரவாயில்லையாக இருந்தது.நஷ்டத்தில் இன்னும் நஷ்டம் ஏற்ப்பட்டாலும் பரவாயில்லை என்று லிங்கா செய்த பெரிய பெரிய கம்பெனிகளோடு டைய்யப் வைத்து கொண்டு அந்த வருடமே ஒரு பெரிய தொகையை அவர்களுக்கு கொடுத்த தன் கல்லூரிக்கு கேம்பஸ்க்கு ஏற்பாடும் செய்து விட்டான்..

அந்த வருடம் வந்த கம்பெனி அனைத்துமே டாப் அளவில் இருந்தவை. அதுவும் முன் இந்த கம்பெனிகள் எல்லாம் அந்த கல்லூரியில் கேம்பஸ்சுக்கு வராத பெரிய கம்பெனி எல்லாம் வங்கனர்..

நிறைய மாணவ மாணவிகளை.. அந்த கல்லூரியில் இருந்து தங்கள் கம்பெனிக்கு தேர்ந்தெடுக்க..

இது அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது.. அதுவும் அந்த கம்பெனிக்கு வேலை கிடைத்தவர்கள் அனைவருமே தங்கள் உறவுகள் நட்புக்களிடம் பகிர்ந்து..

அவர்களின் சம்பளம் .. தாங்கள் தேர்வு ஆகி இருக்கும் கம்பெனியின் பெயரை சொல்ல கேட்டவர்களின் ஒரு சிலர்..அந்த கல்லூரியில் சேர்க்க பயந்து வேறு கல்லூரியின் சேர்த்தவர்கள்.. நல்ல சான்ஸ்ஸை மிஸ் செய்து விட்டோமே என்று வருந்தினர்..

ஒரு சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் எதிர் கால வாழ்க்கையை முன் நிறுத்தி தங்கள் பிள்ளைகள் படித்து கொண்டு இருந்த கல்லூரியில் டிஸ்கண்டியூ செய்து விட்டு லிங்கா கல்லூரியில் சேர்த்தனர்..

இது போல சேர்க்கையின் போது மேனஜ்மெண்ட் கோட்டாவில் ஒரு கணிசமான தொகையை வாங்கி கொண்டு தான் மாணவ மாணவிகளை சேர்ப்பது வழக்கம்.. அதே போல் லிங்கா சேர்த்த்ஸ்தில் அடுத்த ஆண்டே சென்ற ஆண்டின் நஷ்ட்டத்தை சிறிது ஈடுக்கட்டியதோடு.. அடுத்து அடுத்த ஆண்டுகளின் வேலை வாய்ப்புகள்.. தரமான அதாவது ஒரு சில சப்ஜெக்ட்டுக்கு அனுபவம் வாய்ந்த பிரபோசரை நியமித்து.. ஏன் ஒரு சில சப்ஜெக்ட்டுக்கு பி.எச்.டி முடித்தவர்களை அதிகம் சம்பளம் கொடுத்து தன் கல்லூரியில் வேலைக்கு நியாமித்து தரமான கல்வியிலும் தன் கல்லூரியை அடுத்த மூன்றே ஆண்டுகளில் உயர்த்தி விட்டான்..கனடாவில் இருக்கும் தன் மாமனை இந்தியாவுக்கு வர வழைத்து கல்லூரியில் ஒரு முக்கிய பொறுப்பை கொடுத்து தனக்கு உதவியாக வைத்து கொண்டதோடு.. அவர் தனக்கு செய்ததோடு அதிகம் மாமன் மகன்களுக்கு கல்வியிலும் சரி. மற்ற விசயங்களையும் கவனித்து கொண்டான்.

இது போல பெரிய அத்தை சின்ன அத்தை. ஏன் அவன் தந்தை என்று ஒரே வீட்டில் இருந்த லிங்கா ஏனையரோடு, அதாவது தன் தந்தை சித்தி இவர்களை விடுத்து மற்றவர்களிடம் நல்ல முறையில் தான் பேசி கொண்டு இருக்கிறான்..

நல்ல முறை என்று ஈஷிக் கொள்வது போல் எல்லாம் கிடையாது.. ஈஷிக் கொள்வது எல்லாம் மதுவின் அந்த ஈஷ் அத்தான் அந்த அழைப்பில் மது அவனை பார்த்து விட்டால் போதும்.. அந்த மதுவை உண்டால் போதை ஏறுமா ஏறதா.? என்று தெரியாது..

மதுவின் ஈஷ் அத்தான் என்ற மனைவியின் அந்த அழைப்பில் மது உண்டவன் போல இடம் பொருள் என்று கூட பாராது தன் மனைவியை அப்படி ஒரு பார்வை பார்த்து வைப்பான்.மற்றவர்கள் தான் அவன் பார்வையை கவனித்து அந்த இடத்தை விட்டு செல்லும் படி ஆகி விடும். அதனாலேயே மது மற்றவர்கள் முன் அவனை ஈஷ் அத்தான் என்று அழைக்க மாட்டாள்..

தனித்து இருக்கும் போது அவர்களுக்குள் அந்த ஈஷ் அத்தான் ஒரு கோர்ட் வேர்ட் வார்த்தையாகவே தங்கள் படுக்கை அறையில் பயன் படுத்தி கொண்டனர்..

தேவைகள் என்பது. அதாவது உடல் தேவைகள் உணர்ச்சிகள் என்பது ஆணுக்கு மட்டுமே கிடையாது.. அது பெண்களுக்கும் இருக்கிறது தானே..

என் உணர்வுகளை தீர்க்க தான் மனைவி என்று இல்லாது, மனைவிக்கும் ஒரு சில நேரம் தேவை இருக்கும் தானே.

அது போலான சமயத்தில் அவனின் மது.. “ ஈஷ் அத்தான்..” என்று அழைத்தால் போதும், குழந்தைகளை அன்று எப்படியாவது விரைவில் தூங்க வைத்து விடுவான்..

சில சமயம்.. தூங்காது போனால், வெட்கம் எல்லாம் பார்க்க மாட்டான்.. குழந்தைகளிடம்..“பாட்டி தாத்தா பாவம் இல்லையா. நீங்க டெய்லி இங்கு தானே தூங்குறிங்க… அவங்க பாவம் தானே லோன்லியா பீல் பண்ணுவாங்க தானே..” என்று பேசி அன்று மதுவின் அம்மா அறைக்கு குழந்தைகளை பேக் செய்து விடுவான்..

இப்படி அவன் வாழ்க்கை எந்த ஒரு இடத்திலும் பின்னடைவு இல்லாது யார்..? யாருக்கு எந்த எந்த இடம் என்று சரியாக கணித்து அவன் வாழ்க்கையை ஒரு தெளிந்த நீரோடை போல சென்று கொண்டு இருக்கிறது..

நீரோடையின் தடுப்பாக அவன் தந்தை சித்தி மட்டுமே அவர்களை அவன் கடந்து விடுவான்.. ஒரு சில தவறுகளை காலத்தினாலும் மன்னிக்கப்படாதது.. ஜெய பிரகாஷ் சுகந்தி தவறும் அந்த வகையை சார்ந்தது..

சோமசுந்தரம் பேரனின் வெற்றியின் நீளத்தை போல அவர் ஆயிலும் நீண்டு தன் கொள்ளு பேரன் பேத்திகளோடு அவரின் வாழ்க்கை அந்த வயதிற்க்கு ஏற்றது போல வாழ்ந்து கொண்டு இருக்கிறார்…

மனம் போல் தான் வாழ்க்கை செல்லும்.. அவர்கள் வாழ்க்கை இதே தெளிவோடு செல்லட்டும்.. என்று நான் இந்த கதையை நிறைவு செய்கிறேன்..

நிறைவு.. மீண்டும் அடுத்த கதையில் சந்திக்கிறேன்…
 
Joined
May 11, 2024
Messages
86
கல்லூரி விஷயத்துல தொய்வு ஏற்பட்டாலும் நேர்மையான முறையில் தரம் உயர்த்திட்டான் லிங்கா
 
Top