Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Puthiyathoru Jodi........10

  • Thread Author
அத்தியாயம்...10

மஞ்சுளாவுக்கோ வைஷ்ணவி சொன்னதை தான் தவறாக புரிந்து கொண்டு விட்டோமோ ..என்ற சந்தேகமே வந்து விட்டது… அதன் விளைவாக மீண்டும் வைஷ்ணவியின் பக்கம் திரும்பிய கண்களுக்கு வைஷ்ணவின் பின் பக்கம் அதிர்வோடு நின்று கொண்டு இருந்த தன் குடும்பத்தினரை பார்த்த மஞ்சுளாவுக்கு தான் புரிந்து கொண்டது சரி தான் என்பது அவர்களின் அந்த அதிர்ந்த முகத்தை பார்த்து உறுதியானது..

ஆனால் அதற்க்கு தான் எவ்விதம் எதிர் வினையாற்றுவது என்று கூட புரியாது பரிதவித்து போய் நின்றவளின் கண்களுக்கு துகிலன் நர்மதாவிடம் ஏதோ தீவிரமாக பேசிக் கொண்டு இருக்கும் காட்சி தான் கண்களுக்கு தெரிந்தது.. அதுவும் பக்கம் பக்கம் தோள்கள் ஒன்றோடு ஒன்று உரசிக் கொண்டு இருந்தவர்களை பார்த்தவள் தன் பெற்றோர்களையும் கூட பிறந்தவனையுமே திரும்பி பார்த்தாள்..

பாவம் அவர்களுமே மஞ்சுளாவை போல தான் அதிர்வுடன் நின்று விட்டனர்… துர்கா தான் அங்கு வந்து மஞ்சுளாவையும் அவள் குடும்பத்தினரின் அதிர்வில் இருந்து விடுப்படும் வழியாக..

“என்ன இங்கேயே நின்னுட்டிங்க…? விக்கி அங்கு ஓட்டலில் எல்லாம் ரெடியா இருக்கு என்று சொல்றான்.. சாப்பிட்டிட்டு அவங்க அவங்க வீடு போய் ரெஸ்ட் எடுக்க வேண்டாமா….? குழந்தைகளை எல்லாம் விடியலையே எழுப்பி கூட்டிட்டு வந்தது வேறு நச நச என்று அழுதுட்டு இருக்காங்க…” என்று சொல்லி விட்டு செல்ல.

அவர் பின் தான் அனைவரும் பின் தொடரும் படியானது..

மாலினி பெண்ணையும் மாப்பிள்ளையும் அழைத்து கொண்டு தன் வீட்டிற்க்கு செல்வதை பற்றி துர்காவிடம் பேசிய போது துர்கா..

“மாலினி சொல்றேன்னு கோவிச்சிக்க கூடாது …என் மகனுக்கு உங்க வீடு வசதி படாது.. அதனால இந்த சாஸ்த்திரம் சம்பிரதாயம் எல்லாம் பார்க்க வேண்டாமே.. இரண்டாம் கல்யாணத்திற்க்கு இது எல்லாம் பார்க்க கூட தேவையில்லை என்று தான் சொல்லுவாங்க…” என்ற சம்மந்தியின் இந்த பேச்சுக்கே பாவம் மாலினி வாய் அடைத்து தான் போய் விட்டார்.

இல்லை என்றால் “ உங்க மகனுக்கு தான் இது இரண்டாம் கல்யாணம்.. என் மகளுக்கு முதல் கல்யாணம் தானே… அவளுக்கும் சில ஆசைகள் இருக்கும் தானே…” என்று கேட்டு இருந்து இருப்பாள் …

இதை தான் விரலுக்கு ஏற்ற வீக்கம் வேண்டும் என்று சொல்வார்கள் போல… சம்மந்தியம்மாவிடம் வாய் திறவாது போன மஞ்சுளாவின் பெற்றோர்கள் மகளிடம் பதமாக சொல்லலாம் என்று அவர்கள் இருக்கும் பக்கம் வந்தால்..

வைஷ்ணவி சொன்னதை கேட்டு… பாவம் வயதான காலத்தில் தலை சுற்றி கீழே விழாது இருப்பதே பெரிய அதிசயம் தான் என்பது போல் தான் நடுவில் மகன் நடந்து வர. இரு பக்கமும் சந்திப்பின் கையை பிடித்து கொண்டு மஞ்சுளா வீட்டவர்கள் ஏற்பாடு செய்து இருந்த அந்த வேனில் தன் உற்றார் உறவினர்களோடு மாப்பிள்ளை வீடு சொன்ன ஓட்டலுக்கு வந்து இறங்கினர்..

சுரேஷின் மனைவியே மஞ்சுளாவின் நிலையை பார்த்து பாவம் போல தான் பார்த்து கொண்டு இருந்தாள்.. பிரச்சனை செய்ய எல்லாம் அவள் வரவில்லை.

ஆனால் தன் கணவனுக்கு திருமணம் செய்ய பேசிய பெண்.. எப்படி இருப்பாள்.. அவளுக்கு திருமணம் செய்யும் போது தன் கணவனின் முக பாவனை என்ன..? இதை எல்லாம் கவனிக்க வந்தவளுக்கு, அனைத்தும் மறந்து போய் விட்டு..

“என்னங்க டைவஸ் ஆன பெண் கூட இப்படி பேசுறார்.. பழகுறார்…அநியாயமா இருக்கு.. உங்க அம்மா கூட சொன்னாங்க.. பெண் பார்க்க வந்த போது கூட இந்த பெண் கூட வந்தது என்று… அத்தை பெண் என்று சொன்னவங்க.. அந்த அத்தை பெண்ணை தான் திருமணம் செய்து விவாகரத்து செய்தார் என்ற விசயம் சொல்லனும் லே..”

வேனில் செல்லும் போது சுரேஷிடம் பேசிக் கொண்டு இருந்ததை மஞ்சுளாவின் பெற்றோர் கூட பிறந்தவனும் கேட்டு கொண்டு தான் ஓட்டலுக்கு வந்தது…

சுரேஷின் மனைவி சொன்னதை தான் அவர்களும் நினைத்தது.. அன்றே சொல்லி இருந்து இருக்கலாமே.. ஏன் சொல்லவில்லை.. இதில் ஏதாவது விசயம் இருக்கா.

கடவுளே ஒரு பெண் செய்த தவறில் மற்றொரு பெண்ணை தண்டித்து விட்டோமோ… தங்கள் பேச்சை கேட்டு அனைத்தும் செய்து வீட்டில் இருந்த பெண்ணுக்கு நியாயம் செய்யவில்லையா.? இவை அனைத்தும் மனதில் தான் நினைத்தாள் வாய் திறந்து யாரும் எதுவும் பேசவும் இல்லை… அவர்களுக்குள் கூட இதை பற்றி பேசவில்லை. பேசினால் கண்டிப்பாக வெடித்து விடுவோம். .

எதுவுமே சரியாக தெரியாது.. தாங்கள் ஏதாவது பேசி. அதை அவர்கள் கேட்கும் படியாகி விட்டால், இதனால் தன் மகளின் திருமண வாழ்வில் பிரச்சனை வந்து விடுமோ என்ற பயத்தில் அமைதியாக துகிலனுக்கு சொந்தமான அந்த ஓட்டலுக்கு வந்து இறங்கினர்.

இவர்களுக்கு முன் பெண்ணும் மாப்பிள்ளையும் கூடவே நர்மதா குழந்தை நர்த்தகன்.. கருப்பு கலர் ஆடி காரில் ஆடாது வந்து இறங்கினாலும், பெண்ணின் மனம் ஆடி தான் போய் விட்டது..

பெண் மாப்பிள்ளைக்கு என்று தனித்து கார். கல்யாணத்திற்க்கு என்று அவசரமாக மகன் வாங்கினான் என்று பெருமைப்பட்டு கொண்ட கனக சபை.

அப்படி ஆசைப்பட்டு மாப்பிள்ளை வாங்கிய அந்த காரில் மாப்பிள்ளை மட்டும் அல்லாது குழந்தை… குழந்தையை மஞ்சுளாவின் மனது ஏற்று கொண்டு விட்டது.

அது குழந்தையை பார்க்கும் முன்னவே இனி துகிலனின் குழந்தை தனக்கு குழந்தை தான்.. தன் அக்கா மகளை தன் அத்தானின் இரண்டாம் மனைவி எப்படி பார்த்து கொள்கிறாளோ அது போல் தானுமே பார்த்து கொள்ள வேண்டும்…

கவனித்து கொள்ள வேண்டும்.. இந்த ஒரு வாரம் காலமாக தன் திருமண வாழ்க்கையை ஏற்று தயாராகும் போதே மகனையும் ஏற்று கொண்டு விட்டாள் தான்.

ஆனால் அந்த மகனை இவளிடம் தர தான். அந்த மகனின் தந்தை தயாராக இல்லை… பின் கதவை திறந்து வைத்து… தன்னை ஏற சொன்ன கணவனின் அந்த தன்மையில் மஞ்சுளாவின் மனது ஒரு நொடி நெகிழ்ந்து தான் போயின..

ஆனால் அதை உடைக்கும் நிகழ்வாக அடுத்து தன் பக்கத்தில் அமர்ந்தவனின் மடியில் அமர்ந்த நர்த்தகனை பார்த்து..

“என் மடியில் உட்கார வரியா….” தன் மடியை காட்டி அந்த குழந்தையிடம் கேட்டாள்… குழந்தைக்கு தன்னை அறிமுகம் செய்து வைப்பார்கள்.. இல்லை குழந்தையை தன்னிடம் கொடுப்பார்கள் என்று எதிர் பார்த்தால் வேலைக்கு ஆகாது என்று அவளே நர்த்தகனிடம் பேச.

ஆனால் நர்த்தகனோ.. “ நோ நான் டாட் கிட்டேயே இருக்கேன்…” என்று சொல்லி விட.

குழந்தையின் அந்த பேச்சில் மஞ்சுளா மனது சுணங்கி எல்லாம் போகவில்லை.. அக்கா குழந்தையை வளர்த்தவள் அன்றோ.. அதனால் குழந்தைகளின் இயல்பு அவளுக்கு புரிந்தது.

ஆனால் புரிய வைக்க வேண்டிய கணவனின் முகத்தை பார்த்தவளுக்கு அவள் கணவன் சொன்ன.

“அவன் புது ஆளுங்க கிட்ட அவ்வளவு சீக்கிரம் ஒட்ட மாட்டான்…” என்று சொன்னவனிடம்..

இனி ஒட்டி தானே ஆக வேண்டும் என்று சொல்ல வருவதற்க்குள் காரின் முன் பக்க கதவை திறந்து கொண்டு நர்மதா அமர்ந்து கொள்ள. இது வரை ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து கொண்டு இருந்த ஓட்டுனர்.. நர்மதா காரில் ஏறி அமர்ந்த பின் தான் காரை எடுத்தார்…

இதை எல்லாம் பார்த்து தலை கிறு கிறு என்று ஆடினால் எத்தனை முறை தான் தலையும் கிறு கிறுத்து போகும்.. அப்படி ஆடினால் தலை தனியாக தான் விழும் என்பதினால் அமைதியாக அங்கு நடப்பதை வெறும் பார்வையாளராக மட்டும் பார்க்க ஆரம்பித்து விட்டாள் நம் மஞ்சுளா…

தன்னிடம் வராது குழந்தை நர்மதாவை பார்த்தது. “ மாம்..” என்று முன் பக்க இருக்கைக்கு தாவ பார்க்க.. துகிலன் தான்..

“மாம் க்கு டையடா இருக்கு பேபி…” என்று மகனிடம் சொல்ல.

மகனோ… “ டாட் நான் மாம் கிட்ட பேசனும்…” என்று கொஞ்சிக் கொண்டு சொன்னவனிடம்..

“இன்னைக்கு நையிட் மாம் கிட்ட தூங்கு.. அப்போ என்ன பேசனுமோ பேசலாம் என்ன.?.” என்று மகனிடம் கொஞ்சிக் கொன்டு இருக்க.

முன் பக்கம் அமர்ந்து இருந்த நர்மதா… “பேபி இன்னைக்கு மட்டும் தான் என் கிட்ட தூங்கனுமா இல்ல…” என்று இழுத்து நிறுத்திய நர்மதாவிடம்..

‘ஒன் வீக் ஸ்கார்ட்லாந்துக்கு ஹனி மூன் புக் செய்து இருக்கேன் உனக்கு தெரியும் தானே….”என்று சொல்ல…

துகிலன் பக்கத்தில் அமர்ந்து இருந்த மஞ்சுளா தலையை குனிந்து கொண்டு விட்டாள்.. ஹனி மூன் அதுவும் ஸ்கார்ட்லாந்து.. அவள் ஹனி மூன் செல்வது அவளுக்கு தெரியாது.. தனக்கு தெரியாது.. தன்னிடம் பேச வேண்டிய விசயத்தை எக்ஸ் மனைவியிடம் பேசிக் கொண்டு இருக்கிறான்…

தன்னிடம் பாஸ்போர்ட் இருக்கிறதா…? என்ற விவரம் மட்டும் கேட்கப்பட்டது.. அதுவும் தன்னிடம் எல்லாம் அதை பற்றி ஒன்றும் விசாரிக்கவில்லை… துகிலனின் அம்மா துர்கா தான் மஞ்சுளாவின் அம்மாவிடம் கேட்டது…

“இருக்கு கேம்பஸில் செலக்ட் ஆன சமயம் தேவைப்படும் என்று பாஸ்போர்ட் எடுத்து வெச்சிட்டா…” என்று மாலினி கொஞ்சம் தன் பெண்ணும் படித்தவள்.. காம்பஸில் செலக்ட் ஆகும் அளவுக்கு திறமையானவள் என்று உணர்த்த மாலினி அனைத்தையும் சொல்ல.

பாவம் துர்கா அந்த பேச்சை எல்லாம் காதில் வாங்கி கொண்டாரா என்று தெரியவில்லை..

“ஓ இருக்கா… நான் எங்க ட்ரைவரை அனுப்புறேன்.. அவர் கிட்ட கொடுத்து விடுங்க…” இது மட்டும் தான் சொன்னது.

இன்று தான் மஞ்சுளாவுக்கு தன் பாஸ்போர்ட்டை ஏன் கேட்டு வாங்கியது என்பதே தெரிகிறது…

இனி என்ன…? இவர்களுடையது என்ன மாதிரியான உறவு.. ..?” இவை அனைத்தையும் விட முக்கியமானது இவர்களுக்கு இடையில் நான் யார்…? குழம்பி போனவளின் காதில் அவர்களின் அடுத்த பேச்சாக

தொழில் பேச்சை பேச ஆரம்பித்து விட்டான்…

“அந்த சைட் இஞ்சினியரை மாத்து நம்மூ…”

“ஏன் துகி அவன் டேலண்ட் தானே…. சொன்னதை விட பர்பெக்ட்டா செய்வானே..” என்று நர்மதா சொல்ல..

அதற்க்கு துகிலன்… “ டேலண்ட் தான். ஆனா அது எல்லாம் ஒன்னுமே இல்ல என்னும் செய்ய அவன் பெண்கள் கிட்ட மிஸ் பிகவியர் பண்றதா நிறைய கம்பிளையண்ட் வருது நம்மூ.”

அதற்க்கு… நர்மதா. “ ஓ..” என்று இழுக்க..

“நம்மூ அவனை வேலையை விட்டு நிறுத்து அவ்வளவு தான்..”

இதற்க்கு நர்மதா என்ன செய்வாள் என்று தெரிந்தவனாக துகிலன் சொல்ல…

“லேடிஸ் கிட்ட மிஸ்பிகவியர் செய்து இருக்கான்.. அவனை வேலையை விட்டு அனுப்பினா மட்டும் போதுமா….? திறமையானவன் கண்டிப்பாக வேறு இடத்தில் வேலை கிடச்சிடும்… அங்குமே இதே வேலையை பார்ப்பான்…” என்று சொன்னவளின் பேச்சில் துகிலன் அவளை மெச்சுதலாக ஒரு பார்வை பார்த்தவன்.

“எனக்கு தெரியும்.. உன் கிட்ட இந்த விசயம் வந்தா இதை தான் நீ செய்வ என்று…”

அதற்க்கு நர்மதாவோ…. “நான் இதை செய்வேன் என்று தெரிந்து தானே என் கிட்ட சொன்ன….”

குலதெய்வ கோயிலில் இருந்து இதோ துகிலனின் இந்த ஓட்டல் வரும் வரை.. இந்த பேச்சுக்கள் தான் நடந்து கொண்டு இருந்தது.. நர்த்தகன் துகிலனின் மடியிலேயே தூங்கி விட்டான்…

இப்போது மஞ்சுளாவுக்கு அந்த குழந்தையை கேட்டு தன் மடியில் கிடத்தி கொள்ளலாம் என்ற நினைப்பு கூட வரவில்லை.

அவர்கள் இருவரும் பேசிய பேச்சிலேயே அவளின் மனது சுழண்டு கொண்டு இருந்தது..

தங்களின் அந்தரங்க ஹனி மூன் பேசியதை விட… இவர்களின் இந்த இருவருமான புரிதலான பேச்சில் இன்னுமே அவள் காயப்பட்டு போனாள்…

இப்போது அனைவரும் நினைத்ததை தான் அவளுமே நினைத்தாள்..

தோற்றத்தில் வசதியில் படிப்பில் பழகும் விதத்தில் இப்படி அனைத்திலுமே இருவருக்கும் அத்தனை ஒற்றுமை இருக்கும் போது ஏன் பிரிந்தார்கள்….? என்று..

மஞ்சுளாவின் குடும்பத்தினர் நர்மதா தான் மாப்பிள்ளையின் முதல் மனைவி என்று குழம்பி போய் இருந்தவர்களின் கண்ணில் காரில் பெண்ணும் மாப்பிள்ளையோடு நர்மதாவும் வந்து இறங்கியதை பார்த்து முன் ஒருவருக்கு ஒருவர் பார்த்து கொண்டு இருப்பதை கூட இப்போது பார்க்கவில்லை..

அவர்கள் குடும்பத்தினர் இதை பற்றி ஒன்றும் கேட்காது பேசாது… இதை ஏற்று கொண்டது… தங்களை ஏமாற்றி விட்டார்களா ஏன்…? இப்போது என்ன செய்வது…??

பாவம் குழப்பத்திலேயே அந்த ஸ்டார் ஓட்டலில் சாப்பிட்டு விட்டு பெண்ணிடம் விடைப்பெற்று சென்று விட்டனர்… அதிர்ச்சியில் யாருக்குமே அழுகை வரவில்லை..

துகிலனிடம் பேசி தங்கள் வீட்டிற்க்கு அழைக்கலாம் என்றதை கூட மறந்து விட்டு எப்போதும் மாப்பிள்ளையிடம் சொல்லும் ..

“எங்க பெண்ணை பத்திரமா பார்த்துக்கோங்க…” அதை கூட சொல்லாது ஒரு இயந்திர கதியில் தான் வீடு சென்றது.. அதுவும் ஒரு சில உறவுகள்..

“இந்த ஓட்டல் மாப்பிள்ளையோட தானாம்…”

நட்சத்திர அந்தஸ்த்து பெற்ற அந்த ஒட்டலில் அவர்கள் சாப்பிடுவதே யோசிக்க வேண்டிய ஒரு விசயம்.. அது மஞ்சுளாவை கட்டி கொடுத்தவனுடையது என்றதில் கொஞ்சம் பொறாமையானது.

அதன் தாக்கத்தில் மாலினி காது படவே… “ அது தான் முறையில்லாமல் போனா கூட பரவாயில்லை… என்று பெண்ணை கொடுத்து விட்டாங்க போல…”

“என்ன அண்ணி இப்படி பேசுறிங்க…” பெண்ணை திருமணம் செய்து கொடுத்த அன்றே தன் மகளின் திருமணத்தை கேள்வி குறியாக்கும்… கேலி கூத்தாவும் பேசும் இந்த பேச்சில் மாலினிக்கு அழுகை வந்து விட்டது.. அழுகையுடன் தான் மாலினி கேட்டார்..

“நான் என்ன இல்லாததா சொல்றேன்.. நீ தான் பார்த்தே தானே… நீ உன் வூட்டு மருமகன் மருமகன் என்று சொல்ற… ஆனால் உன் மருகனுக்கு விவாகரத்து ஆனது போல தெரியலையே… எதோ ஒரு கோயிலில் வைத்து தாலி கட்டிட்டாரு…. முதல் மனைவி இருக்கும் போது இரண்டாம் மனைவி கட்ட சட்டத்தில் இடம் இல்ல தானே….” என்று சொன்ன தன் ஒன்று விட்ட அண்ணியை அதிர்வுடன் பார்த்த மாலினி தன் நெஞ்சில் மீது கை வைத்து அமர்ந்து விட்டார்.

“அண்ணி அவருக்கு விவாகரத்து ஆயிடுச்சி அண்ணி… அதோட கோயிலுல் தாலி கட்டினாலும் கல்யாணத்தை ரிஜிஸ்ட்டரும் செய்தாச்சி… என் பொண்ணு சட்டப்படி அவர் மனைவி தான் அண்ணி…. அதோட எல்லோரையும் கூட்டி ரிசப்ஷன் வைக்க போறதா சம்மந்தியம்மா சொல்லி இருக்காங்க..” என்று துக்கம் தொண்டையை அடைக்க விளக்கமாக சொன்னார்… திருமணம் முடித்து வைத்த பெண்ணின் திருமணம் சட்டப்படி தான் என்று சொல்வது எல்லாம் வேதனைக்கு மீறிய ஆப்பார்ப்பட்ட விசயம்..

திருமணம் முடிந்த அன்று எத்தனையோ பிரச்சனைகள் வரலாம்.. ஏன் ஒரு சில திருமணம் மணமேடையில் ஏதாவது ஒரு காரணத்தினால் பெண் மாப்பிள்ளை மாறி போய் சொந்தம் நட்பு வீட்டில் இருப்பவர்களை ஜோடியாக ஆக்கி கூட திருமணம் செய்து வைத்து இருப்பர்.

ஒரு சில திருமணங்களில் சாப்பாடு சரியில்லை . சீர் பத்தவில்லை என்று சம்மந்தி சண்டைகளும்….ஒரு சில உறவுகள் எனக்கு மரியாதை கொடுக்கல என்று கோவித்து கொண்டு செல்வது இது போலான சண்டைகள்.. அதில் மன வருத்தம் என்று வரும் தான்… ஏன் சண்டையில் திருமணம் கூட நின்று கூட போய் இருக்கிறது தான்.

ஆனால் இது போல ஒரு பேச்சு.. இந்த திருமணம் சட்டப்படி திருமணம் தானா… சட்டப்படி திருமணம் தான் என்பது மாலினிக்கு அது தெரியும்.. ஏன் என்றால் தாலி கட்டியதும் அவர்கள் வசதியை பயன் படுத்தி கூடவே ரிஜிஸ்ட்டரை அழைத்து வந்து அங்கு அவர்களின் திருமணத்தை பதிவு செய்து விட்டனர்..

ஆனால் இது கோயில் ஒரு பக்கம் நடந்ததால் உறவு முறைகளின் கண்களுக்கு இது தெரியவில்லை…

அதை பற்றியதான பயம் மாலினிக்கு கிடையாது.. ஆனால் முதல் மனைவி எப்போதும் உடன் இருக்கும் போது ஊரார் கண்ணுக்கு தன் மகளின் பிம்பம் இப்படியாக தானே மற்றவர்களின் கண்ணுக்கு தெரியும்.. ஆம் உண்மை தான்… மாலினி பயந்தது போல தான் நடந்தது….
 
Well-known member
Joined
May 24, 2024
Messages
229
Manju va teliva ethavathu seiyanum
Dumm aakidatheenha
Ithunga randum vetru gragavasigala enna
Nadanthukiratha partha human pola trla
Honeymoon ah
Viji nalla senjividunha
 
Well-known member
Joined
Jun 1, 2024
Messages
144
மஞ்சுக்கு மட்டுமா நமக்கும் தான் தலை கிறுகிறுன்னு சுத்துது இவங்க பண்றதை எல்லாம் பார்த்து 😵😵😵🤯🤯🤯

துகி உன் மனசுல என்னடா நினைச்சுட்டு இருக்க 🥶🥶🥶🥶🥶 ஹனிமூன் கூட முதல் பொண்டாட்டிகிட்ட டிஸ்கஸ் பண்ணுவ மஞ்சுகிட்ட சொல்ல மாட்ட 😤😤😤

பாவம் மஞ்சு பேமிலி....🙁🙁. மஞ்சு தான் போல்டா இருந்து இவங்களுக்கு அவங்க தப்பை புரிய வைக்கணும் 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
 
Well-known member
Joined
May 12, 2024
Messages
261
Nan appove sonnen… rendu perum distance maintain pannanum endu… ippadi sense eh illama onna ve varranga… Manjula va Narmadha va nu vandha Kandippa Thugilan Narmadha va than choose pannuwan… Narmadha kooda ithai purinjikkala… Antha car la murai padi partha Thugilan thangachi than varanum… 🙄🙄🙄
 
New member
Joined
May 10, 2024
Messages
15
உங்களின் இந்த கதை நகரும் விதமும், வார்த்தைகளின் கோர்வையும் மிகவும் அற்புதம். வாழ்த்துக்கள்
 
Top