அத்தியாயம்…11
மாலினிக்கு நேரம் செல்ல செல்ல சம்மந்தி துர்காவை அழைத்து இதை பற்றி கேட்டு விடலாம் என்று கூட கை பேசியை கையில் எடுத்து விட்டார் கூட…
ஆனால் கேட்க விடாது ஏதோ ஒன்று அவரை தடுத்து நிறுத்தியது.. ஏதோ ஒன்று என்ன..? ஏதோ ஒன்று…
கேட்க விடாது மாலினியை தடுத்து நிறுத்தியது ஒன்று இரு வீட்டிற்க்கும் இடையில் இருக்கும் அந்தஸ்த்து பேதம்.. இன்னொன்று கேட்டு இதனால் தன் மகளின் வாழ்க்கையில் பிரச்சனை ஏதாவது வந்து விட்டால், என்று பயந்தவர்.. பின் தனக்கு தானே ஆறுதலும் படுத்தி கொண்டார்…
அது இது எல்லாம் தன் மகளுக்கு வர வேற்பு வைக்கும் வரை தானே… அன்று அனைவரையிம் அழைக்கு விமர்சனையாக தானே செய்வேன் என்று சம்மதி துர்கா சொன்னது.. அப்படி செய்தால், அனைவரின் வாயும் தன்னால் மூடி கொள்ள போகிறது.. தனக்கு தானே ஆறுதல் படுத்தி கொண்டவர்.
அந்த ஆறுதலை தன் கணவனுக்குமே அளித்தார்… ஷண்முகமும் அமைதியாக கேட்டு கொண்டார்.. வேறு வழி… என்பது போல் இருந்தனர்.
ஆனால் அந்த வரவேற்பும் வைக்க முடியாத சூழ்நிலை வர போகிறது என்று பாவம் அவர்களுக்கு தெரியவில்லை..
இவர்களின் மனநிலையே இப்படி இருந்தால், அந்த சூழ்நிலையில் மாட்டி கொண்டு இருக்கும் மஞ்சுளாவின் மன நிலை எப்படியாக இருக்கும்..
உண்மையில் சொல்ல முடியாத நிலையில் தான் அங்கு மாமியார் வீட்டில் இருந்தாள்.. முறைப்படி ஆராத்தி எடுத்து தான் மஞ்சுளா அந்த வீட்டிற்க்குள் அடி எடுத்து வைத்தாள்..
நல்ல வேலை இந்த ஆராத்தியை நர்மதா எடுக்கவில்லை. தங்கள் உடனும் நிற்கவில்லை.. அது வரை சந்தோஷப்பட்டுக் கொள்ள வேண்டியது தான்..
ஒரு பெரிய காம்பவுண்டுக்குள் தான் துகிலனின் பங்களாவும் நர்மதாவின் பங்களாவும் இருந்தது.. ஆனால் பக்கம் பக்கம் எல்லாம் கிடையாது இரு பங்களாவுக்கும் இடையில் தான் துகிலன் கார் ஷேட் இருந்தது.. ஒரு நான்கு கார்கள் நிறுத்தும் அளவுக்கு மிக பெரியதாகவே அந்த கார் ஷெட் இருக்க..
பெண்ணும் மாப்பிள்ளையையும் கூடவே நர்மதா நர்த்தகனையும் சுமந்து வந்த அந்த ஆடி கார் நின்றதுமே… நிர்மதாவின் கை பேசிக்கு ஒரு அழைப்பு வர…
அதனால் கொஞ்சம் ஒதுக்கி நின்று கொண்டதால், நர்த்தகன் தூங்கி விட்டதால், துகிலன் குழந்தையை தூக்கி கொண்டான்…
கையில் நர்த்தகனோடு துகிலன் நிற்க அவன் பக்கத்தில் தான் நின்று ஆராத்தி எடுக்கப்பட்டு உள் நுழைந்தது மஞ்சுளாவுக்கு அத்தனை ஒரு மன நிம்மதியை அவளுக்கு கொடுத்தது… ஒரு குடும்பாக அந்த நிகழ்வு அவள் மனதில் நிற்க.. இது எப்போதுமே தொடர வேண்டும் என்று தான் துர்கா பூஜை அறையில் விளக்கு ஏற்று என்று தன்னிடம் சொன்ன போது விளக்கு ஏற்றிய மஞ்சுளா இந்த வேண்டுதலை தான் கடவுளிடமும் வைத்தது…
அந்த பூஜை அறையின் பிரமாண்டமும்.. சாமீ படங்கங்கள் முதல் சிலைகள் வரை அனைத்துமே வெள்ளியிலான லட்சுமி சிலை மட்டும் தங்கத்தினால் செய்ததில் அந்த பூஜை அறையே ஜொலித்து கொண்டு தான் இருந்தது..
ஆனால் மஞ்சுளாவின் கண்களுக்கு அது எல்லாம் தெரியவில்லை.. ஒரு கல் எடுத்து இது இந்த சாமி என்று சொன்னால், நம் மனதில் அந்த கல் சாமி தான் என்று மனது பூர்வமாக வைக்கும் அந்த வேண்டுதல் தான் முக்கியம் என்று நினைப்பவள் மஞ்சுளா.. அதனால் அந்த பூஜை அறையின் பிரமாண்டத்தில் எல்லாம் மஞ்சுளா மயங்கி விடவில்லை.
ஆனால் அந்த வீட்டின் அந்த பிரமாண்டத்தில் பயந்து விட்டாள் என்று சொன்னால் சரியாக இருக்கும்…
அதே மனநிறைவுடன் பால் பழம்… என்று சம்பிரதாயம் முடிக்கும் வரை இருந்த துகிலன்.
பின்.. “மாம்…” என்று அழைத்து ஏதோ சொல்ல சரிப்பா சரிப்பா..’ என்று துர்கா தலையாட்டியதும் பின் துகிலன்
மஞ்சுளாவின் பக்கம் திரும்பியவன்… “ மாம் சொல்ற ரூமில் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு…கொஞ்சம் அவசர வேலை இருக்கு நான் ஆபிஸ் வரை போக வேண்டி இருக்கு..” என்று முதலில் மஞ்சுளாவை பார்த்து பேச ஆரம்பித்தவன் இடை இடையே தன் கை பேசியையுமே பார்வை இட்டு கொண்டு இருந்த சமயம்.
நர்மதா அந்த இடத்திற்க்கு வந்து ஏதோ சொல்ல ஆரம்பிப்பதற்க்குள்… துகிலன். “ நானும் பார்த்தேன் நம்மூ.. இதோ பேபியை படுக்க வெச்சிட்டு வரேன்..”
அவ்வளவு தான் அடுத்து மஞ்சுளாவின் பக்கம் திரும்பாது சொன்னது போல குழந்தையை மாடிக்கு தூக்கி கொண்டு சென்றவன் வரும் போது திருமண உடையான பட்டு வேஷ்டி சட்டையை மாற்று கோர்ட் ஷூட்டில் கீழே விடு விடு என்று நர்மதாவின் அருகில் வந்தவன் நர்மதாவிடம் ஏதோ பேசிக் கொண்டே மஞ்சுளாவின் பக்கம் திரும்பி கூட பாராது சென்று விட்டான்..
இதை ஒரு திக் பிரம்மையுடன் பார்த்து கொண்டு இருந்தவளிடம் துர்கா… எதுவுமே நடக்காதது போல.
“ வாம்மா நீயுமே எத்தனை நேரம் தான் இந்த பட்டுப்புடவையில் இருப்ப… ட்ரஸ் சேஞ்ச் பண்ணிட்டு கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடு…. இன்னைக்கு மிட் நையிட் ப்ளைட்டுக்கு போகனும் லே…” என்று சொன்னவளிடம் எதுவும் பேசாது எதுவும் கேட்காது தன் மாமியாரை பின் தொடர.. துர்கா ஒரு அறைக்கு அழைத்து சென்றவள்…
“உங்க வீட்டில் கொடுத்து விட்ட சூட் கேஸ் அங்கு இருக்கு…” என்று சொல்லி விட்டு கதவு வரை சென்றவர் என்ன நினைத்தாரோ மஞ்சுளாவை திரும்பி பார்த்தவர்….
“எங்க குடும்பத்துக்குள்ள இது வரை இந்த சண்டை சச்சரவு எல்லாம் வந்தது கிடையாது.. ரொம்ப கவுரமான குடும்பம்.. எங்க வீட்டு ஆண்களை பத்தி தவறா ஒரு வார்த்தை ஒரு பேச்சு வந்தது கிடையாது… ஆண்களே அப்படி என்றால் பெண்கள்… என்ன தான் படித்து பிசினஸ்ஸை பார்த்து வெளியில் போக வர இருந்தாலுமே எங்க வீட்டு பெண்கள் நெருப்பு போல.. நர்மதா எங்க வீட்டு பெண்… துகிலனோடு டைவஸ் ஆகி விட்டாலுமே, என் அண்ணன் மகள்.. உன் மாமனாருடைய தங்கை மகளும்… எந்த வகையா பார்த்தாலுமே நர்மதா இன்றும் எங்க வீட்டு பெண் தான்.” என்று விட்டு சென்று விட்டவரையும் முதுகையே பார்த்து கொண்டு இருந்தவளுக்கு மனது பாரமாகிய ஒரு உணர்வு…
என்ன பேசுவது.. என்ன சொல்வது.? ஒன்றுமே புரியவில்லை பெண்ணவளுக்கு விடியலில் எழுந்து தலை குளித்தது வேறு அடர்ந்த நீண்ட கூந்தலுக்கு காயும் அளவுக்கு நேரம் கொக்காததில் தலை வலி வேறு எடுத்து விட..
தலை விண் விண் என்று மண்டையை பொலக்க..இதோடு கணவன் நர்மதாவின் நடவடிக்கையை பார்த்தது. துர்கா பேசி விட்டு சென்றது அனைத்தும் சேர்ந்து அவளின் மூளை இதற்க்கு மேல் நீ எனக்கு வேலைகள் கொடுத்தால் என்னால் முடியாது.. எனக்கு கொஞ்சம் ஓய்வு தேவை… என்று அவளுக்கு உணர்த்தியதில் கணவனும், மாமியாரும் சொன்னது போல குளிட்து உடை மாற்றி கொள்ளலாம் என்று நினைத்து தன் உடைகள் நிறைந்த பெட்டியை திறந்தவள் ஒரு காட்டன் சுடி கண்ணில் பட்டது..
மாற்று உடைக்கு என்று அவளின் அம்மா மைசூர் சில்க் புடவை கொடுத்து விட்டார் தான்.. ஆனால் இவர்கள் என்னை குழப்பி அடிப்பதற்க்கு இதுவே போதும் என்று முடிவு செய்தவளாக சுடிதாரை எடுத்து கொண்டு சென்றவள் குளித்து முடித்து உடை மாற்றுவதற்க்கு என்று குளியல் அறையில் பக்கம் ஒரு அறை இருக்க… அதன் நாளா பக்கமும் கண்ணாடி பதிந்து இருப்பதை பார்த்தவள். அதில் அதிர்ந்து தன் அறை குறை கோலத்தை கண்ணாடியில் பார்த்தவள் சட்டென்று தன் உடைகளை மாட்டி கொண்ட பின் தான் நிமிர்ந்து தன்னை கண்ணாடியில் பார்த்தது..
குளிக்க வரும் முன்பே நகைகள் அனைத்துமே கழட்டி வைத்து விட்டு வந்தால், இன்று தனக்கு திருமணம் முடிந்து விட்டது என்பதை உணர்த்தும் வகையாக அவள் புதுமணப்பெண் தான் என்பதை அவளின் கழுத்தில் தடித்த அந்த மஞ்சள் கயிறின் மினு மினுத்து கொண்டு இருக்க. காதில் சிமிக்கி மட்டுமே இருக்கும் தன் முகத்தையே பார்த்து கொண்டு இருந்தவளின் கண்களுக்கு தான் எளிமையாக இருந்தாலும் கண்ணுக்கு நிறைவாக அழகாக இருக்கிறாள் என்ற பிம்பம் அவள் கண்ணுக்கு தெரியவில்லை..
அவள் கண்களின் திரையில் மாடல் உடையில், உடல் மினு மினுப்பி கம்பீரமாக இருக்கும் நர்மதா தான் அவள் மனம் என்ற பிம்பத்தில் பிரதிபலித்தாள்..
அவள் மன வேதனையை கூட்டும் வகையில் ஒரு கண்ணாடி ஓரத்தில் ஒட்டி இருந்த ஒரு ஸ்டிக்கர் பொட்டை பிய்த்து எடுத்தவள் திருப்பி திருப்பி அதை பார்த்தவளுக்கு என்ன என்னவோ நினைக்க தோன்றியது.
இந்த அறையில் தான் தன் கணவனும் நர்மதாவும் இருந்து இருப்பார்கள்.. இந்த உடை மாற்றும் இந்த அறையில் நர்மதா உடை மாற்றும் போது தன் கணவன் நினைக்கும் போதே தன் கண்ணை இறுக்கி மூடிக் கொண்டு விட்டாள்…
விழித்திரையில் உண்மையில் இது போலான ஒரு காட்சி பார்த்து இருந்தாள் பெண்ணவள் கண்கள் மூடியதில் அந்த காட்சியான பெண்ணவளின் கண்களுக்கு தெரியாது மறைந்து இருந்து இருக்க கூடும்..
ஆனால் அவள் பார்த்தது மனகண்ணில் அன்றே… கண்கள் மூடிய நொடி உடல் உறுப்புகளில் ஒன்று வேலை நிறுத்தியதுமே மற்றோரு உறுப்பானது கூடுதலாக அதன் வேலையை காட்டும் என்பது போல ஏதோ கலங்கலான தோன்றிய துகிலன் நர்மதாவின் பிம்பமானது மிக மிக தெளிவாக அவள் மனகண்கலுக்கு தெரிந்திட…
சட்டென்று கண்கள் திறந்தவள் அந்த அறையை விட்டும் சென்றாள்..
அங்கு இவளின் வருவுக்காக ஒரு பெண் காத்து கொண்டு இருந்தாள். அவளின் பேச்சில் இருந்து தெரிந்தது அவள் அந்த வீட்டின் பணிப்பெண் என்று…
“பெரிய அம்மா இந்த டிபனையும் காபியையும் குடிச்சிட்டு ரெஸ்ட் எடுக்க சொன்னாங்க… பாப்பிட்டு முடிச்சிட்டு நீங்க இந்த ட்ரேவை அந்த ரூமில்ல் வெளியில் வைத்தால் நான் எடுத்துப்பேன் .” என்றவளின் பேச்சுக்கு..
“ம்.” என்று மட்டும் தலையாட்டியவள் அவள் சென்ற பின் அந்த அறையின் கதவை தாழ்ழிடாது கதவை மட்டும் சாத்தியவள் அங்கு இருந்த காபி அவளுக்கு மிக தேவையாகவே இருந்தது..
அதை குடித்து முடித்து டிபனும் சாப்பிட தொடங்கிய பின் தான் தெரிந்தது தான் எத்தனை பசியில் இருக்கிறோம் என்பதை…
இவர்கள் காலை உணவு சாப்பிட அந்த நட்சத்திர ஓட்டலின் உள் நுழையும் போதே துகிலன்…
“இது நம்ம ஒட்டல் தான்…” என்று சொன்னதும் மஞ்சுளா அப்படியா என்பது போல தான் பார்த்தாள்.. இந்த ஓட்டலை வெளியில் இருந்து தான் பார்த்து இருக்கிறாள்..’இங்கு வந்து சாப்பிடும் அளவுக்கு அவளுக்கு வசதியும் கிடையாது.. வசதியான நட்பும் அவளுக்கு கிடையாது.
ஆனால் கேள்வி பட்டு இருக்கிறாள் ஒரு காபியே இங்கு இவ்வளவு விலை என்று…
தான் இங்கு சாப்பிடவே தன் வசதிக்கு இடம் கொடுக்காத இந்த ஓட்டல் தன் கணவனுடையதா….?மீண்டுமே தான் இதற்க்கு தகுதியானவளா என்று யோசிக்கும் போதே நர்மதா இடை புகுந்து…
“உன்னுடையது என்று சொல்ல கூடாது நம்முடையது என்று சொல்லனும்…” என்று துகிலனின் பேச்சின் அர்த்தம் புரியாது நர்மதாவை தான் பார்த்தாள் பெண்ணவள்..
ஆனால் அவளுக்கு நர்மதா பதில் சொல்லும் முன்பே அவள் கணவன்… இந்த ஓட்டலில் ஈக்வெல் ஷேர் ஒல்டர் இவங்க அதை தான் இப்படி சொல்றாங்க…” என்று சொன்னவன் நர்மதாவின் புஜத்திலும் லேசாக குத்தி விட்டு தான் அமர்ந்து சாப்பிட ஏதாவது ஒரு இருக்கையை நகர்த்தி தான் அமர்ந்த பின் தன் எதிரில் கணவன் அமர கணவனின் பக்கத்தில் நர்மதா அமர்ந்து கொண்டு விட்டாள்…
அதை தொடர்ந்து சாப்பிடும் உணவை நர்மதா தான் துகிலனுக்கும் சேர்த்து சொல்ல… மஞ்சுளா திக்கி திணறி என்றாலும் நர்மதாவிடம்..
“அவருக்கு விருப்பமானதை அவர் சொல்லுவார் தானே….” இந்த முறை அக்கா என்ற அழைப்பு இல்லாது தான் மஞ்சுளா நர்மதாவிடம் பேசியது.
இப்போதும் நர்மதா பதில் அளிக்கும் முன் துகிலன்.. “ என் டேஸ்ட் நம்மூவுக்கு தெரியும்.. உனக்கு என்ன பிடிக்கும் நீ சொல்…” என்று சொல்லி விட. எங்கு இருந்து பிடித்த உணவை மஞ்சுளா சொல்வது.. கடமைக்கே என்று சாப்பிட்டு வந்தவள் கொல்லை பசியில் இருந்து இருப்பாள் போல..
கொண்டு வந்த உணவை மிச்சம் வைக்காது சாப்பிட்டு பணிப்பெண் சொன்னது போலவே அந்த அறையின் வெளியில் வைத்து விட்டு.. இப்போதுமே தாழ் இடாது படுக்கை அறையில் அமர்ந்தவளுக்கு மீண்டும் மனது அரிக்க தொடங்கி விட்டது..
இந்த கட்டிலில் தான். என்று யோசித்தவள் அதற்க்கு மேல் யோசிக்க கூடாது என்று அந்த படுக்கையில் படுக்க பிடிக்காது அங்கு இருந்த சோபாவில் படுத்தவளுக்கு ஒன்று நினைத்து மட்டும் சிரிப்பு வந்து விட்டது.
அது எத்தனை கஷ்டம்.. எத்தனை பிரச்சனை வந்தாலும்.. இந்த பசி. அது தன் வேலையை காட்டி விடுகிறது லே. இங்கு என் வாழ்க்கையே என்ன என்று தெரியாது இருக்கும் போதே ஒரு தட்டில் வைத்ததை அனைத்தும் சாப்பிட்டு முடித்து இருக்கேன் பாரேன்.. இதோ இந்த தூக்கம் கூட… என்று நினைத்தவள் அதற்க்கு மேல் நினைக்க முடியாது ஆழ்ந்த நித்திரைக்குள் சென்று விட்டாள்…
அமைதி அமைதி அமைதி.. அந்த அறையில் நிலவிய அந்த அமைதி எத்தனை மணி நேரம் நீடித்ததோ… ஒரு குரல்…
“சாப்பிட்டாளா….?” இது இது என் கணவன் குரல்… அந்த ஆழ்ந்த நித்திரையிலும்.. உனக்கு மட்டும் தான் அவன் கணவனா… அவள் தூங்கினாலுமே… குழம்பி கொண்டு இருக்கும் இந்த மனது மட்டும் எப்போதுமே விழிப்போடு இருக்கும் போல. முழுதாக கூட விழிக்க வேண்டாம்… கொசு கடித்ததில் கொஞ்சம் லேசாக முழுப்பு வராது முழிப்பு வருவது போல் இருந்தால் கூட. இந்த மனம் ஆனது சட்டென்று விழித்து கொள்ளும் போல… உனக்கு மட்டும் தான் கணவனா என்று அது கேட்ட கேள்வியில் அவளின் உதடு கொஞ்சம் பிதுங்கி சோகத்தை காட்டியது…
மஞ்சுளா நித்தரையின் வந்த கனவு என்று நினைத்து கொண்டு நடுவில் கேட்ட குரலுக்கு விழித்த மனம் ஆனது கேட்ட குரலுக்கும் நினைத்த மனதிற்க்கும் சேர்த்து வைத்து பதில் சொல்லி விட்டு.. அதற்க்கு உண்டான பிரதிபலிப்பாக அவளின் பாவனையில் கொடுக்க வைத்து விட்டு மீண்டுமே நித்திரைக்கு சென்று விட்டது….
ஆனால் நித்திரையில் வந்த கணவு இல்லாது மஞ்சுளா இருந்த அறைக்குள் வந்த துகிலன்.. அங்கு இருந்த பெட்டில் படுக்காது ஷோபாவில் படுத்து உறங்கி கொண்டு இருக்கும் மனைவியை பார்த்து கொண்டே தான்…
தன் அறையில் இருக்கும் இன்டார்காமின் மூலம் சமையல் அறையின் மேற்பார்வையிடும் பெண்மணிக்கு அழைத்து பேசிக் கொண்டு இருந்த சமயம் தான் மஞ்சுளாவின் உதடு பிதுங்கி பின்…. ஒரு பக்கமாக வளைத்த அந்த உதடு அதே பாவனையின் தூக்கம் தொடர..
சமையல் அறையின் மேற்பார்வையாளரிடம் பேசிக் கொண்டு இருந்த துகிலனுக்கு கிடைக்க வேண்டிய…
“மேடம் சாப்பிட்டு விட்டாங்க….” என்ற பதில் கிடைத்து விட. தன் கையில் இருந்த சாதனத்தை படுக்கையில் நின்று இருந்த இடத்தில் இருந்தே தூக்கி போட்டவன்…
அவளுக்கு மட்டுமே படுத்து உறங்கும் அளவில் இருக்கும் அந்த சோபாவின் நுனியில் அவளின் உடல் தொட்டு உரசும் அளவுக்கு நெருக்கத்தில் அமர்ந்திருந்தவனின் உதடானது லேசாது பிதிங்கிய உதட்டின் மீது பதிய வைத்து விட்டு எடுத்தான்.
மஞ்சுளாவிடம் மீண்டும்.. ம். ம் என்று ஒரு முனகல்… பின் மீண்டும் ஒரு தூக்கம்.. முன் போல இல்லாது இப்போது மஞ்சுளாவின் உதட்டின் பிளவு அதிகமாக விரிந்து கொண்டு அவளின் தூக்கம் தொடர பார்த்தது..
தூக்கம் தொடர பார்த்தது தான்.. ஆனால் அதை தொடர விடாது முன் லேசாக தன் உதட்டை பெண்ணவளின் உதட்டின் மீது வைத்து விட்டு எடுத்த ஆணவனின் சிறிது கருத்த உதடானது இந்த முறை பெண்ணவளின் மீது பதிந்த அவனின் உதடானது ஆழமாக அவனின் உதடு பொறுந்தியதோடு மட்டும் அல்லாது அவனின் நாவுமே அவளின் உதட்டில் உட்புகுந்து பெண்ணவலின் நாவை பரிசித்த நொடி…
பெண்ணவளின் கண்கள் விரிந்து கொண்டது… விரிந்து கொண்ட கண்களுக்கு கணவனின் முகம் தெரியவில்லை. அவனின் அடர்ந்த முடி மட்டுமே தெரிய..முதலில் ம் ம் என்று மறுத்தவளின் உடலிலுமே ஏதோ ஒரு ரசாயண மாற்றம். கொடுக்க விரிந்த அவளின் கண்கள் மீண்டுமே மூடிக் கொண்டது.
இந்த முறை தூக்கத்தினால் கிடையாது.. சுகத்தினால்…
***********************************************************************
மீண்டும் ஒரு கண் மூடல். இப்போது கட்டிலிலோ… ஷோபாவிலோ கிடையாது… அதே போல நித்திரையினாலோ… சுகத்தினாலா மஞ்சுளாவின் கண்கள் மூடவில்லை.
பயத்தினால் கண்களை மூடிக் கொண்டவள்.. தனக்கு தைரியம் அளிப்பான் என்று நம்பி தன் பக்கத்தில் அமர்ந்திருந்த தன் கணவனை பார்த்தாள்.
அவனோ கண்கள் மீது ஒரு திரையை போட்டு கொண்டு அவள் அமர்ந்திருந்த இருக்கையில் மல்லாக்காக சாய்ந்து அமர்ந்திருந்த தோற்றத்தை பார்த்த மஞ்சுளாவுக்கு, கணவன் தூங்குகிறானா….? இல்லை முழித்து கொண்டு இருக்கிறானா….? என்று தெரியாது…
மீண்டும் முன் இந்த பக்கம் திரும்ப… ஆகாசத்தில் ஒரு பறவை போல தான் பறந்து கொண்டு இருப்பதாக ஒரு பீலை கொடுத்தது அந்த விமானத்தில் அவள் அமர்ந்திருந்த அந்த ஜன்னல் இருக்கை… இப்போது அவள் மனதில் இருந்த பயம் கொஞ்சம் கொஞ்சமாக விலகி ஓடி விட.. கண்களை விரித்து அதை பார்த்து கொண்டு இருந்தவளின் உதடு மீண்டுமே ஒரு பக்கம் வளைந்து அந்த காட்சியை ரசித்து பார்த்து கொண்டு இருந்தபளின் காதில்..
“இது போல நாம இரண்டு பேர் மட்டும் தனியா இருக்கும் போது மட்டும் பண்ணு..” சரிந்த அவளின் உதடுகளானது கணவனின் இந்த பேச்சில் நேராகியது….