Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Puthiyathoru Jodi...24.1

  • Thread Author
அத்தியாயம்….24…1

துகிலன் மஞ்சுளா வர வேற்ப்பு முடிந்து ஒரு மாதம் கடந்து விட்டது… துகிலன் சொன்னது போல முறையாக தன் மனைவியாக ஊரார் ஒரு கேள்வியும் கேட்க முடியாத அளவுக்கு துகிலன் தன் வீட்டிற்க்கு மரியாதையோடு அழைத்தும் வந்து விட்டான்…

ஆனால் முதலில் மஞ்சுளாவை பேசிய அதே சமூகம் தான் இப்போது நரேனை (நர்மதா) வை பேசுகிறது… தொடர்ந்து தினம் தினம் ஆரம்பத்தில் பேசி கொண்டு இருந்தவர்கள் இப்போது மெல்ல மெல்ல குறைந்து கொண்டு இருந்தது..

நரேன் (நர்மதாவும்) தன் பாலின மாற்றத்திற்க்கான சிகிச்சை மேற்கொள்ள… முதலில் மும்பை தான் தேர்ந்தெடுத்தது.. ஆனால் நரேன் (நர்மதா) துகிலனோடு படித்தவன் இப்போது இது தொடர்பான அறுவை சிகிச்சையின் மருத்துவனாக அமெரிக்காவில் இருப்பதால்,

நரேன் (நர்மதா) தன் முக நூல் பக்கம்.. இன்ஸ்டாகிராம் என்று அனைத்திலும் தன் பெயர் மாற்றத்தை வெளியிட்டதால், அதை தெரிந்து அவனே நரேனை (நர்மதாவை) தொடர்பு கொண்டு…

“இங்கு வா நான் உன்னை கவனித்து கொள்கிறேன்…” என்று சொன்னவன்.. துகிலனையும் அழைத்து…

“நீ சொல் துகிலா. இதுக்கு சிகிச்சை மட்டும் கிடையாது… மனதுக்கும் சிகிச்சை செய்யனும்.. நம்ம நரேனை (நர்மதாவை) பத்தி எனக்கு நல்லா தெரியும்.. நான் பார்த்துக்குறேன்….” என்று சொல்ல துகிலனுக்கும் அது தான் சரி என்று பட நரேனிடம் (நர்மதாவிடம்…) சொல்ல.

நரேன் (நர்மதா) யோசித்தவ(ன்) அவனுக்குமே அது தான் சரி என்று பட்டத்தால்..

“ஒகே துகி…” என்று சொன்னான்(ள்..)

இத்தனை பேச்சும் துகிலனின் படுக்கை அறையில் தான் பேசியது… அதே அறையில் தான் மஞ்சுளாவும் சாப்பிட்ட சாப்பாடு மொத்தமும் வாந்தி எடுத்து விட்தில் சோர்ந்து போய் படுக்கையில் கண் மூடி படுத்து கொண்டு இருந்தாள்….

கண் மூடி படுத்து கொண்டு இருந்தாளே ஒழிய… தூங்கவில்லை…. மதியமே நன்றாக தூங்கி எழுந்து விட்டதினாலோ என்னவோ… இப்போது சோர்வாக இருந்தாலுமே தூக்கம் வரவில்லை…

இப்போது எல்லாம் நாள் முழுக்க சோர்வாக தான் இருக்கிறது.. இதோ இது போல படுக்கையில் அக்காடா என்று படுத்து கொண்டு இருந்தால் போதும் என்பது போலான நிலையில் தான் அவள் உடல் நிலை இருந்தது…

இப்போது அவளின் அந்த சோர்வையும் மீறி கணவன் நர்தாவின் பேச்சை உள்வாங்கி கொண்டு இருந்தாள்… இவர்களின் இந்த நட்பு அவளை வியப்படைய செய்தது அவளுக்கு…

அவளின் இந்த வியப்பு இன்றைய பேச்சை மட்டும் வைத்து கிடையாது… அனைத்தையும் வைத்து தான்.. இதோ இன்றும் கூட நரேன் (நர்மதா) அன்று வீடியோ காலில் அவள் பார்த்த போது போட்டு கொண்டு இருந்த உடை மாதிரி தான் அணிந்து கொண்டு இருந்தாள்…

பேசி கொண்டு இருக்கும் போதே நரேன் (நர்மதா) துகிலனின் தோள் தட்டி… தட்டி தான் பேசிக் கொண்டு இருந்தான்….(ள்) காட்சி அதே தான்… ஆனால் அன்று அவள் இருந்த மன நிலைக்கும், அனைத்தும் தெரிந்ததால் இன்று அவள் இருக்கும் மன நிலைக்கும் தான் ஏகப்பட்ட வித்தியாசங்கள்…

அவர்களின் பேச்சை ஆழ்ந்து கேட்டு கொண்டு இருந்தாலுமே, மஞ்சுளா அவர்களின் பேச்சுக்கு இடையே இடை புகவில்லை…

நரேனின்(நர்மதா) அந்த பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கும் முன்.. செய்ய வேண்டிய மருத்துவத்தை பற்றி அனத்துமே அப்போதே அமெரிக்காவில் இருக்கும் மருத்துவ நண்பனை அழைத்து பேசி முடித்த பின்…

நரேன் ( நர்மதா…) “ நீ தனியா எல்லாம் பார்த்துப்பியா துகி..” என்று கேட்டான்…(ள்)

நரேன்( நர்மதா…) தனக்கு இத்தனை பிரச்சனைகள் இருந்துமே… நண்பனை பற்றி யோசித்து கேட்க…

“அது எல்லாம் ஒரு பிரச்சனையும் கிடையாது.. நான் பார்த்துக்குறேன்…. புரியுதா. நீ இங்கு நடக்கும் விசயத்தை பத்தி எல்லாம் யோசிக்காதே… உன் விசயம்… இது மட்டும் யோசி அது போதும்…” என்று விட்டான்…

அப்போது தான் அந்த அறைக்கு நர்த்தகன் வந்தான்… வந்தவனின் முகம் அழுது அழுது வீங்கி போய் இருந்தது.. பார்த்த இருவருக்கும் புரிந்து விட்டது என்ன நடந்து இருக்கும் என்பது….

பள்ளிக்கு செல்லும் குழந்தை … கண்டிப்பாக பள்ளியில் நரேணை (நர்மதாவை) பற்றியதான பேச்சு நடந்து கொண்டு இருக்கும் என்பது தெரியும்..

இதையும் தான் நாம் கடந்து வரவேண்டும்.. நரேனுக்கு (நர்மதாவுக்கு) தெரியும்.. இந்த விசயம் வெளியில் வந்தால் என்ன என்ன பிரச்சனையை தான் சந்திக்க வேண்டி வரும் என்று…

அனைத்து பிரச்சனைகளையுமே அவன் (ள் )சமாளித்து விட்டான் (ள்) தான்… ஆனால் குழந்தை..

இவனுக்கு எப்படி நான் என்னை புரியவைப்பேன்… பெரியவர்களே இன்னுமே தன் உணர்வை ஏற்று கொள்ளாது.. குறைந்த பட்சம் புரிந்து கொள்ளாது இருக்கும் போது குழந்தைக்கு நான் என்ன என்று சொல்லி புரிய வைப்பேன்… ஏற்கனவே நரேனுக்கு (நர்மதாவுக்கு) இது ஒன்று நினைத்து மட்டும் தான் கவலை.. நான் எப்படி மகனை எதிர் கொள்ள போகிறேன் என்று.’

இதோ இன்று எதிர் கொள்ளும் படியான நிலை வந்து விட்டது.. எதிர் கொண்டு தான் ஆகவேண்டும் என்று தன்னை தயார் செய்து கொண்டு தான் மகனிடம் செல்ல பார்த்தது நரேன்… (நர்மதா…)

ஆனால் துகிலன் அதற்க்குள் மகனை தூக்கி கொண்டவன்…

“நர்த்தகன் ஏன் அழுறான்…?” என்ற இந்த கேள்வியில் தான் இத்தனை நேரம் கண் மூடி படுத்து கொண்டு இருந்த மஞ்சுளாவும் கண்னை திறந்து பார்த்தது… பார்த்தவள் கண்களுக்கும் குழந்தையின் அழுகை முகம் தெரிய… அவளுமே பதறி போய் தான் படுக்கையில் இருந்து எழுந்தது.

அந்த நிலையிலுமே நரேன் (நர்மதா ) துகிலன்… “ மெல்ல எழுந்துக்கோ..” என்று சொன்னவர்களையே மாறி மாறி பார்த்த மஞ்சுளா..

“இப்போ நான் தான் முக்கியமா. குழந்தையை பாருங்க..” என்று சொல்லி அவளுமே கணவனின் அருகில் சென்றவள்… குழந்தையின் கையை பிடித்து கொண்டாள்…

மஞ்சுளா இந்த வீட்டிற்க்கு வந்து ஒரு மாதம் காலம் ஆகி விட்டதால், குழந்தை மஞ்சுளா வந்து பேசினாள் பதில் சொல்லுவான்… அருகில் வந்து அமர்ந்தாள் விலகாது அமர்ந்து இருப்பான்… மொத்தத்திற்க்கு விலகவில்லை… ஆனால் அதற்க்கு என்று ஒட்டிக் கொள்ளவும் இல்லை… எந்த முறை வைத்தும் அழைக்காது தான் இன்று வரை பேசி கொள்வதும்…

மஞ்சுளா முன் தான் இதை நினைத்து கவலை பட்டது எல்லாம். இப்போது குழந்தையின் பக்கம் இருந்து யோசித்தாள்…

அம்மா என்று ஒருவர் இருக்க.. தன்னை அந்த ஸ்தானத்தில் வைக்க சொல்லி கணவன் குழந்தையிடம் எப்படி சொல்லுவான்… சித்தி என்று தன்னை அறிமுகம் படுத்த பிடிக்கவில்லையோ… அவளுக்குமே குழந்தை தன்னை சித்தி என்று அழைப்பதில் விருப்பம் கிடையாது…. கணவனும் அப்படி தான் நினைத்து இருந்து இருப்பானாக இருக்கும்…

இந்த ஒரு மாதகாலமாக கணவனோடு சேர்ந்து இருந்ததில் சரியாக கணவனை கணித்தாள்… சேர்ந்து என்றால் ஒரே அறை ஒரே படுக்கை தான்.. ஆனால் அந்த பத்து நாட்கள் வாழ்ந்தது போல இந்த ஒரு மாதகாலமாக உடலை பகிர்ந்து கொள்ளாது உள்ளத்தை மட்டுமே பகிர்ந்து கொண்டதால் மஞ்சுளா சரியாக புரிந்து கொண்டாள் போல…

இந்த ஒரு மாத கால பழக்கத்தில் மஞ்சுளா நர்த்தகனை தொட்டதும் விலகாது.. இன்னுமே உதட்டு பிதிக்கு அழ ஆரம்பித்து விட்டான்…

மஞ்சுளாவுக்கு அய்யோ பாவமாக போய் விட்டதில், கணவனிடம் குழந்தையை தன்னிடம் தாங்க என்று குழந்தையை வாங்க கை நீட்டினாள்.

மஞ்சுளாவின் கையில் குழந்தையை தராது துகிலன் மனைவியை பார்த்து முறைத்து வைத்தான். மஞ்சுளாவுக்கு ஏன் கணவன் தன்னை முறைக்கிறான் என்பது பாவம் புரியவில்லை.

தான் இருப்பது குழந்தை ஒரு மாதிரியாக உணர்வான் என்று நினைக்கிறானா…. இந்த முறை மஞ்சுளா கணவன் ஏன் முறைக்கிறான் என்பதை தவறாக புரிந்து கொண்டாள்…

அவள் நரேன் (நர்மதா…) இல்லையே…. இப்போது தானே மெல்ல மெல்ல ஒருவருக்கு ஒருவர் புரிந்து கொள்ள தொடங்கி உள்ளனர்.

ஆனால் நர்த்தகன் நான் துகிலன் நர்மதாவின் மகன் என்பதை நிருபிக்கும் படியாக புரிந்து கொண்டான்…

“என்னை நீங்க தூக்க கூடாது… வயித்துல பாப்பா இருக்குலே… பாப்பாவுக்கு வலிக்கும்…” என்று மஞ்சுளாவிடம் சொன்ன குழந்தை தன் அந்தையை பார்த்து…

“ஆமாம் தானே டாடி…?” என்று தன் கவலை மறந்து மஞ்சுளாவின் நலனை முன் வைத்தான்.. … அதுவும் எப்போதோ… தான் நர்த்தகனை தூக்க முயலும் போது துகிலன் சொன்னதை வைத்து சொன்னவனின் பேச்சில் மஞ்சுளாவுக்கு கண்ணீர் வந்து விட்டது..

மஞ்சுளாவின் இந்த கண்ணீரை பார்த்த குழந்தைக்கு மீண்டுமே தான் ஏன் அழுதோம் என்பது அவனின் நியாபகத்திற்க்கு வந்து விட்டது போல.. மீண்டுமே உதட்டு பிதிக்கி அழ ஆரம்பித்து விட.

இப்போது துகிலன் மனைவியை பார்த்து முறைத்தான். பின் தன் கவனத்தை குழந்தையின் பக்கம் திருப்பியவன்..

“பேபி ஏன் அழறான்…..?” காரணம் தெரிந்தே குழந்தையிடம் கேட்டான்…

“ நான் பேபி இல்ல… நான் பிக் பாய்…” என்று சொன்ன நர்த்தகவன்..

பின் “கேல்ல தான் பேபி என்று சொல்லுவாங்க….” என்று சொன்னதுமே குழந்தைக்கு இந்த கேல் பாய் என்ற பேச்சில்… பள்ளியில் இன்று மற்றவர்கள் தன்னிடம் பேசிய…. கேட்ட…. கிண்டல்…. செய்தது அனைத்தும் சேர்ந்து…

தன் தந்தையிடம்… “டாடி மம்மி கேல் இல்லையா டாடி.. பாயா….? லோகேஷ்… உன் மம்மி கேள் இல்ல பாய் என்று சொன்னான் டாடி… இந்த விகாஷ் பொம்மி எல்லாருமே சொல்றாங்க.. டாடி மிஸ் கூட.. என் கிட்ட இது போல தான் சொல்றாங்க டாடி.. எல்லோரும் என்னை ஷேம் ஷேம் என்று சொல்றாங்க.. பேசுறாங்க டாடி….” என்று சொன்ன குழந்தையின் ஒவ்வொரு பேச்சுக்கும் அழுது அழுது இடைவெளி விட்டு சொல்லி முடிக்க.

அதை கேட்ட அங்கு இருந்த அனைவருக்குமே மனம் கணத்து தான் போயின… இந்த சமூகம் குழந்தைகளை கூட இந்த வம்பு பேச்சு உள் இழுத்து கொள்ளுமா…? என்று நினைத்து கோபம் தான் எழுந்தது துகிலனுக்கு.

என்ன செய்வது… இந்த சமூகத்திடம் ஒவ்வொருக்கும் சென்று நாம் தெளிவு படுத்த முடியாது தானே…

அதனால் துகிலன் குழந்தையை முதலில் தைரியம் படுத்துவோம்… பின் குழந்தைக்கு புரிவது போல் சொல்லுவோம்… தன் வீட்டை பாதுகாக்க வீட்டை சுற்றி வேலி போடுவது போல தன் குழந்தையின் மனதை பாதுகாக்க…

முதலில் துகிலன் குழந்தையின் அழுத கண்ணை துடைத்து விட்டான்… பின்..

“உனக்கு டாடி கூட வெளியில் போக பிடிக்குமா.. மம்மி கூட வெளியில் போக பிடிக்குமா….?” என்று கேட்டான்…

மஞ்சுளா.. இது என்ன சம்மந்தம் இல்லாத பேச்சு என்பது போல தான் கணவனை பார்த்தாள்…

ஆனால் துகிலனின் கவனம் குழந்தையிடம் தான் இருந்தது… குழந்தையோ தந்தை கேட்ட கேள்விக்கு உடனே…

“மம்மி கூட தான் பிடிக்கும்…” என்று கூறினான்..

தெரியும் துகிலனுக்கு தெரியும்.. மகன் அன்னையை தான் சொல்லுவான் என்று.. குழந்தைக்கு பொதுவாக காரில் செல்வதை விட இருசக்கர வாகனத்தில் செல்வது தான் பிடிக்கும்… குழந்தைக்கு என்ன தெரியும்.. கார் விலை.. இரு சக்கரவிலை… வசதி வாய்ப்பு மரியாதை என்பது எல்லாம்…

அனைவரும் பார்க்க கை நீட்டி.. சத்தம் இட்டுக் கொண்டு செல்வது தானே குழந்தைகளுக்கு பிடிக்கும்.. அதுவும் புல்லட் என்றால் கேட்க வேண்டுமா…? அதுவும் தன் பள்ளியில் தன் அம்மாவின் அந்த புல்லட்டில் இருந்து இறங்கும் போது அவனின் நட்பு தன் அன்னையை அதிசயமாக பார்ப்பது…

பின் தன்னிடம்.. “ உன் மம்மி கிரேட் நத்து….” என்று சொல்வது.. இது எல்லாம் அவனுக்கு நட்பு வட்டத்தில் ஒரு பெருமை.. அதோடு துகிலன் தான்.

“இது சாப்பிட கூடாது.. இது ஆகாது…” என்று வெளியில் அழைத்து சென்றால் திட்டம் செய்வான். ஆனால் அவனின் மம்மி…

“துகி ஒரு நாள் சாப்பிட்டால் எல்லாம் ஒன்றும் ஆகி விடாது…” என்று சொல்லுவான்… (ள்) அதனால் நர்த்தகனுக்கு தந்தையோடு செல்வதை விட அன்னையோடு செல்வது தான் பிடிக்கும்.. அதையே சொன்னான்…

“அப்போ மம்மி இப்போ இருப்பது உனக்கு பிடிக்கும்… “ என்று கேட்ட தந்தைக்கு…

தன் அன்னையை பார்த்தவன்… “ யெஸ் டாடி…” என்று சொல்ல…

“உன் மம்மி மத்த மம்மி போல இல்ல.. அது நீ ஃபீல் பண்ணி இருக்க தானே…?” திரும்பவும் கேள்வி கேட்டவனுக்கு குழந்தை யோசித்து…

“யெஸ்….” என்றான்…

பின் மீண்டுமே… “ உனக்கு பிடிக்கும் தானே…மம்மி இது போல இருக்கிறது…?” என்று கேட்ட தந்தையை யோசனையுடன் பார்த்த குழந்தை மீண்டும்..

“பிடிக்கும் டாடி… ரொம்ப ரொம்ப பிடிக்கும்…” என்று சொன்ன குழந்தையின் கன்னத்தில் முத்தம் இட்ட துகிலன்…

“உன்னோட மம்மி மிக சிறந்தவங்க… அது டாடியா இருந்தா என்ன மம்மியா இருந்தா என்ன… சொல்லுவே தானே… பாய் ஸ்டாங்க என்று… அப்போ மம்மி ஸ்டாங்கா ஆகுறாங்க…உன் பிரண்டுக்கு டாடி இல்ல. பாவம்… டாடி இல்லாம அவன் வீட்டில் இருக்க அவனுக்கு பயமாம் என்று சொல்றான் என்று நீ ஒரு நாள் என் கிட்ட சொன்ன தானே… நம்ம வீட்டில் இரண்டு டாடி… அப்போ உனக்கு இன்னும் இன்னும் ஸ்டேந்த் தானே… நீ மத்தவங்களை விட பயம் இல்லாம ஸ்டெந்தா இருப்பா…. இது ஹாப்பியான விசயம் தானே….?” என்று கேட்க கேட்க குழந்தையின் முகத்தில் மெல்ல மெல்ல தெளிவு வந்தது…

அதில் ஆமாம் என்று சொன்ன குழந்தை பின் சிறிது யோசித்து..

“ டாட் ஆனா எனக்கு மம்மியும் வேண்டுமே…?” என்று கேட்டவனிடம்…

மஞ்சுளைவை காட்டி… “ இவங்களே நீ அம்மா என்று கூப்பிட்டுக்க… மத்த குழந்தைகளை விட என் குழந்தை ஸ்பெஷல் அவனுக்கு டூ டாடி… ஒன் மம்மி …. காட் கொடுத்து இருக்காங்க….” என்று சொன்ன தந்தையின் கன்னத்தில் மகன் முத்தம் இட்டு…

தன் தந்தையின் கையில் இருந்தே எக்கி மஞ்சுளாவின் கன்னத்தில் ஒரு முத்தம் வைத்த நர்த்தகன்..

“அம்மா அம்மா யா.. யா.. நான் ஸ்பெஷ்ல் நான் ஸ்பெஷல்…” என்று கத்தி கொண்டு அழுது கொண்டு அந்த அறைக்கு வந்த குழந்தை சிரித்து கொண்டு அந்த அறையை விட்டு சென்றான்..

இவை அனைத்தையுமே… நரேன்.. ( நர்மதா. ) அருகில் செல்லாது சிறிது தள்ளி கை கட்டி புன்னகை முகமாக பார்த்து கொண்டு இருந்தான்.(ள்)…

நர்த்தகன் தன் கன்னத்தில் முத்தம் இட்டதில்.. அதுவும் தன்னை அன்னை என்று அழைத்ததில் அத்தனை மனதில் நிம்மதியும் மகிழ்ச்சியும் ஒரு சேர தன்னை மறந்து… நரேன். ( நர்மதா.) அங்கு இருப்பது மறந்தவளாக எக்கி கணவனின் கன்னத்தில் முத்தம் வைத்தாள்..

நரேன்… ( நர்மதா…) “ ஏய் நான் இங்கு தான்மா இருக்கேன்… கொஞ்ச நேரம் வெயிட் பண்ணு ஒரே ஒரு விசயம் உன் புருஷன் கிட்ட பேசிட்டு நான் வெளியில் போயிடுறேன்.. அப்புறம் நீ என்ன வேண்டும் என்றாலும் செய்…” என்ற கிண்டலை எல்லாம் சட்டை செய்யாது மஞ்சுளா தனக்குள் வந்த மகிழ்ச்சியை தாங்காது நரேன்… (நர்மதா) முத்தம் இட … அதை பார்த்த துகிலன் தன் மனைவியை முறைத்தான்…
 
Well-known member
Joined
Jun 23, 2024
Messages
101
சின்ன பிள்ளை மனசை எப்படி எல்லாம் காயப்படுத்தி இருக்காங்க 🤨 🤨 🤨 டீச்சருக்குமா அறிவு இல்லை 🤧 🤧 🤧 🤧 🤧

துகிலன் சரியான விதத்தில் குழந்தைக்கு புரிய வச்சுட்டான் 🤓 🤓 🤓 🤓 🤓

மஞ்சு உன் புருஷன் பொறாமையில் பொங்குறான் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
 
Last edited:
Joined
Mar 3, 2025
Messages
41
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
இரண்டு பொண்டாட்டி வந்தும் இவன் சோப்பளாங்கியா இருந்தான் அவிக மனசை புரிஞ்சுக்கிறதுல.
இப்ப நர்த்தகனோட மனசை பயபுள்ள கரக்கிட்டா கேட்ச் பண்ணி சமாதானப் படுத்துது.
 
Well-known member
Joined
May 11, 2024
Messages
243
நரேன் நர்மதா விஷயத்துலயும் நர்த்தகன் விஷயத்துலயும் துகிலன் தெளிவா புரிஞ்சி வைச்சிருக்கான், மஞ்சவை புரிஞ்சிக்க தான் லேட் பண்ணிட்டான்
 
Top