Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Puthiyathoru Jodi....4

  • Thread Author
அத்தியாயம்….4

துர்கா தன் மகன் துகிலனிடம் ஒன்றுக்கு மேற்பட்ட முறையாக.. “ உண்மையில் அந்த தரகரை வர சொல்றியா… துகிலா.. இது விளையாட்டு பேச்சு எல்லாம் கிடையாது தானே….” என்று கேட்ட தாயை முறைத்த தன் மகனின் முகத்தை பார்த்தவர்.. அடுத்து ஒன்றும் பேசவில்லை..

காரணம் துகிலன் சாதாரணமாக கூட நர்மதாவை தவிர யாரிடமும் அதிகம் பேச மாட்டான்… அப்படி இருக்க விளையாட்டு போல பேச்சு எல்லாம் எப்படி வரும்.. ஆனாலுமே இவர்கள் இருவரும் பிரிந்து விட்டார்களா…? பக்கம் பக்கம் அமர்ந்து கொண்டு ஏதோ தீவிரமாக பேசி கொண்டு இருந்த துகிலனையும், நர்மதாவையும் பார்த்து நினைத்து கொண்டார்.

ஏன் என்றால் அவர்கள் முன் போல தான் பழகுகிறார்கள் பேசுகிறார்க. .. தொழில் துறை லன்ச் மட்டும் இல்லாது… சில சமயம்.. மைன்ட் ரிலாக்ஸ் செய்து கொள்ள வேண்டி கூட இருவரும் ஒன்றாக வெளியில் சென்று சாப்பிட்டு விட்டு, அப்படியே குழந்தைக்கு தேவையானதை வாங்கி கொண்டு வருகிறார்கள்..

அப்படி இருக்க நாங்க விவாகரத்து பெற்று விட்டோம் என்று சொன்னால்.. ஆனால் சட்டம் அப்படி தான் சொல்கிறது… என்று துர்கா அதற்க்கு அடுத்து தன் மகனிடம் விளையாட்டா என்று கேட்காது இருக்க.

ஆனால் துகிலன் தனக்கு பெண்ணை தேடுகிறான் என்றதில் நர்மதாவின் அம்மா வசந்தி… “ துகிலா உண்மையில் நீங்க இரண்டு பேரும் பிரிஞ்சிட்டிங்கலா..?” என்று கேட்ட தன் அத்தைக்கு பதில் சொல்ல முடியாது வாயை குவித்து ஊதி ஒரு மூச்சை விட்டவன் தன் பக்கத்தில் அமர்ந்திருந்த நர்மதாவை தான் திரும்பி பார்த்தான்…

சில சமயம்.. துகிலனுக்கு பிடிக்காத கேள்வியோ.. இல்லை திரும்ப திரும்ப கேட்டாலோ.. அவன் இப்படி தான் செய்வான்.

அது தெரிந்த நர்மதா… தன் அம்மா வசந்தியிடம்.. “ம்மா நாங்க டைவஸ் பண்ணிட்டோம்.. டைவஸ் பண்ணிட்டோம்… இதை இந்த ஆறு மாசத்துல.. எத்தனை முறை சொல்றது… புரிஞ்சிக்கோங்க. நாங்க பிரிஞ்சிட்டோம்…” என்று கத்த..

வசந்தியோ மகளுக்கு மேல். “ டைவஸ் பண்ணிட்டோம்… டைவஸ் பண்ணிட்டோம் என்று சொல்ற… ஆனா அதுக்கு ரீசன் சொல்ல மாட்டிங்குறியே டி…?” என்று கத்தி கொண்டு இருக்கும் போது அமர்ந்து கொண்டு இருந்த துகிலன் சட்டென்று எழுந்து கொள்ள… அதில் வசந்தி அடுத்து ஏதோ கேட்க வாய் திறந்தவர்… வாயை இறுக்கி மூடிக் கொண்டவரிடம்..

துகிலன்… “ அது எங்க பர்சனல்.. இனி யாரும் இதை பத்தி நீங்க மட்டும் கிடையாது.. நம்ம இரண்டு பேர் வீட்டில் இருக்கும் யாருமே பேச கூடாது….” என்று சொன்னனின் பேச்சானது முதல் முறை நர்மதாவை தவிர்த்து வசந்தியிடம் நீண்ட வார்த்தைகள் பேசியவன்..

தன் வீட்டை நோக்கி நடந்தவன் பின் என்ன நினைத்தானோ…. தன் அன்னையை திரும்பி பார்த்தவன்…

“அந்த தரகர் நம்பர் எனக்கு சென்ட் பண்ணிடுங்க மாம்…” என்று விட்டு செல்ல..

செல்லும் அவன் காதில் துர்கா சொன்ன.. “ நானே நாளைக்கு அந்த தரகரை வீட்டிற்க்கு கூப்பிடுறேன் துகிலா…” என்று விட்டார்…

அடுத்து என்ன துகிலனிடம் சொன்னது போல மறு நாளே அந்த தரகரை வரவழைத்து விட்டார் துகிலனின் அன்னை துர்கா…

இப்போதும் இரு வீட்டவர்களும் துகிலன் வீட்டில் தான் இருந்தனர். வீட்டிற்க்குள் நுழையும் போதே அந்த தரகர் அனைவரையும் பொதுவாக பார்த்து ஒரு பெரிய கும்பிடாக போட்டவர்…

வசந்தியிடம்…நர்மதாவை காட்டி…. “உங்க பொண்ணுக்கு என்னை தான் வரன் பார்க்க சொன்னிங்க. அது என்னவோ எந்த இடமும் தழையாது தள்ளி போயிட்டே இருந்தது… ஒருத்தனோட மனைவியை இன்னொருத்தன் கல்யாணம் செய்துக்க முடியாது என்று பெரியவா சொல்லுவா… உங்க மகளுக்கு இவர் தான் என்று அந்த ஆண்டவன் எழுதி வெச்சிட்டான் போல. அது தான் வேறு எந்த இடமும் தழையல….”

துகிலனும் நர்மதாவும் பக்கம் பக்கம் அமர்ந்து கொண்டு இருப்பவர்களை சுட்டி காட்டி சொன்ன அந்த தரகர்..

பின்… “ பெரியவா என்ன எதுக்கு அழச்சேல் என்று தெரிந்தா நன்னா இருக்கும்…” என்று கேட்டதும்.

“எனக்கு பெண் பார்க்க தான்…” என்று சொன்னது சாட்சாத் நம் துகிலன் தான்..

“தம்பி கிண்டல் எல்லாம் பண்றார்.. நான் ரொம்ப கெடுப்புடி என்று தானே நினச்சேன்…” என்ற தரகரின் பேச்சில் கோபமாக அந்த தரகரை பார்த்த துகிலன்…

“எனக்கு பெண் பார்ப்பது உங்களுக்கு கிண்டலான விசயமா…?” என்று தரகரிடம் கேட்ட துகிலன்..

தன் அன்னை துர்காவை பார்த்து… “மாம் வேறு ப்ரோக்கரை பாருங்க…” என்று விட..

“அய்யோ வேண்டாம் சார்… வேண்டாம் சார்…” என்று அந்த தரகர் பதறி போய்.

“எதுக்கு யாருக்கு இடம் பார்க்க கூப்பிட்டிங்க என்று தெரியல.. அதனால இப்போ என் கை வசம் இருக்கும் பொண்ணுங்க போட்டோ காட்டுறேன் சார்… இன்னைக்கு சாயங்கலத்துக்குள்ள என் கிட்ட இருக்க எல்லா பெண்களின் போட்டோ கொண்டு வந்து தரேன் சார்..” என்று அவசர அவசரமாக சொன்னார்.

முன் நர்மதாவுக்கு மாப்பிள்ளை பார்க்கும் போதே ஒன்னும் முடியாது ப்ரோக்கர் கமிஷன் வாங்க முடியாது போனதில் அவருக்கு அவ்வளவு மன வருத்தம்…

பின் மன வருத்தம் இருக்காதா…? சாதாரணமாக இந்த தரகருக்கு மத்தியவர்க்கத்தினர் தான் இவரை அழைத்து பெண் வேண்டும்.. மாப்பிள்ளை வேண்டும் என்று கேட்பது… அவர்கள் என்ன அவ்வளவு கொடுத்து விட போகிறார்கள்.. இரு பக்கமும் போராடி தான் ப்ரோக்கர் கமிஷனே சில சமயம் வாங்க வேண்டி இருக்கும்…

எதாவது ஒன்று தான் இது போல பெரிய இடத்தில் இருந்து அழைப்பு வரும்.. அப்படி வந்த அழைப்பான நர்மதாவுக்கு ஏற்றது போல இவர் மூலம் மாப்பிள்ளை அமையாது பின் சொந்தத்திலேயே கட்டி கொடுத்தது.. சாருமதிக்கும் சொந்தம்.. பின் சரி இன்னொரு பையன் இருக்கானோ என்று விக்னேஷை அவர் நம்பி கொண்டு இருக்க அவனோ காதல் என்று முடித்து கொண்டான்.

இப்போது மீண்டும் ஒரு வாய்ப்பு இதை தவர விட அவருக்கு மனது இல்லை.. அதனால் தன்னிடம் இருக்கும் அத்தனை பெண்களை பற்றிய விவரங்களையும் துகிலனிடம் கொடுக்க பார்க்க..

ஆனால் அவனோ அதை கையில் கூட வாங்காது… நர்மதாவிடம்… “ வாங்கி பார்.… “ என்று சொல்ல.

அந்த தரகரோ என்ன டா இது கூத்து என்று நினைத்து கொண்டு தான் நர்மதாவிடம் கொடுத்தார்…

பெண்ணின் புகைப்படங்கள் ஒரு பேப்பரில் பெண்ணின் விவரங்கள் அதை அந்த புகைப்படத்தில் பின் குத்தி இது போல் தான் அந்த தரகர் நர்மதாவிடம் கொடுத்தது.

அதை பார்த்த துகிலன்… நர்மதாவை ஒரு பார்வை பார்த்தான்.. இந்த காலத்திலும் இப்படியா என்பது போல..

“நேத்து லேட்டஸ்ட் டெக்னாலேஜி அதுல தானே பார்த்தோம் துகிலா.. உனக்கு தான் அதுல இருக்கும் ஒரு பெண்ணையும் பிடிக்கலையே….?”

துகிலன் வாய் திறந்து சொல்லாமலேயே அதை புரிந்து கொண்டு பதில் சொல்லும் நர்மதாவை பார்த்த அந்த தரகருக்கு.. உண்மையில் இவங்களுக்கு விவாகரத்து ஆயிடுச்சா… ?

நல்ல வேலை இதை மனதில் தான் நினைத்தார்.. துகிலனிடம் கேட்கவில்லை.. அதனால் தப்பித்தார்..

நர்மதாவோ… தன் கையில் இருக்கும் ஒவ்வொரு புகைப்படமாக பார்த்து பார்த்து தங்கள் முன் இருந்த டீப்பாவின் மீது வைத்து கொண்டு இருக்க, துகிலனோ… அதை கையில் கூட எடுத்து பார்க்காது… அமர்ந்து கொண்டு இருக்க..

இப்போது கடைசியாக நர்மதாவின் கையில் இருந்தது ஒரே ஒரு பெண்ணின் புகைப்படம் மட்டும் தான்.

அது முதலில் பெண்ணின் புகைப்படம் மேல் பக்கம் தெரியாது… அந்த பெண்ணின் விவரங்கள் எழுதியது தான் மேல் இருந்தது.

பார்த்த அனைத்துமே பிடிக்காது போனதில் நர்மதா. அந்த தரகரிடம்… “என்ன இது.. ஒன்னுமே எங்களுக்கு செட் ஆவது போல இல்லையே…?” என்று ஒரு வித சலிப்பாக.. தன் கையில் இருக்கும் அந்த பெண்ணின் புகைப்படத்தை ஒரு கையில் பிடித்து கொண்டு இன்னொரு கையில் தன் உள்ளங்கையில் அடித்து கொண்டே தரகரை பார்த்து கேட்டாள்.

அதற்க்கு தரகர்… “ இப்போ இருப்பதை கொடுத்து இருக்கேன் மேடம்.. சாயங்கா…” என்று அந்த தரகர் சொல்லி கொண்டு இருந்த போது தான் நர்மதாவின் பக்கத்தில் அமர்ந்திருந்த துகிலன் அவள் கையில் இருந்த அந்த பெண்ணின் புகைப்படத்தில் மேல் விவரங்கள் அடங்கிய காகிதம் ஆனது நர்மதா தட்டி கொண்டு இருந்ததில் தனித்து வந்து பறந்து விட்டதினால், ஏதோ ஒரு யோசனையுடன் நர்மதாவையும் அவள் கையையுமே பார்த்து கொண்டு இருந்த துகிலனின் பார்வைக்கு இப்போது பளிச் என்று மஞ்சுளாவின் முகம் தெரிய… அதில் சட்டென்று அவள் கையில் இருந்த அந்த புகைப்படத்தை பரித்து கொண்டவனின் செய்கையில் நர்மதா தன் பேச்சை தரகரிடம் இருந்து விடுத்து துகிலனை பார்த்தவள் அவன் கையில் இருந்த புகைப்படத்தையும் பார்த்தாள்.. ஆனால் பெண்ணின் முகம் நர்மதாவுக்கு தெரியவில்லை…

ஆனால் துகிலனின் பார்வைக்கு உண்டான அர்த்தம் புரிந்து கொண்டவளாக சிரித்து கொண்டே… தரகரிடம்.

“ஈவினிங்க வேறு எந்த பெண்னின் போட்டோவும் வேண்டாம்… “ என்று சொன்னவள் அவளுமே எக்கி அந்த படத்தை பார்த்தாள்…

பார்த்த நர்மதாவிற்க்கு அந்த அளவிற்க்கு திருப்தி இல்லை போல்…

“துகிலா.. இந்த பெண்ணை பிடித்து இருக்கா…?” சந்தேகத்துடன் கேட்டாள்..

இப்போது துகிலனின் பார்வை தன் கையில் இருந்த புகைப்படத்தில் இருந்து நர்மதாவின் முகத்திற்க்கு இடம் மாறியது…

நர்மதாவை பார்த்தானே தவிர.. ஒன்றும் பேசவில்லை..

நர்மதா தான் தொடர்ந்து… “பெண் அழகா தான் இருக்கா. ஆனா ஆனா…” நர்மதா இப்படி இழுத்தும் துகிலன் வாய் திறக்காது போக..

இப்போதும் நர்மதாவே தொடர்ந்து “அழகா இருக்கா… ஆனா முகத்தில் ஒரு மெச்சூரிட்டி இல்லாதது போல இருக்கு துகிலா… அதோட நம்ம பழக்க வழக்கத்திற்க்கு செட் ஆவது போல தெரியல…”

இவர்கள் இருவரின் உரையாடலில்.. தவறு தவறு… நர்மதாவின் இந்த பேச்சில், துகிலன் ஒன்று பிடித்து இருக்கு என்று சொல்லி.. இது வேண்டாம் என்று நர்மதா சொல்லும் இந்த பேச்சில் அதிசயத்து அனைவரும் அந்த போட்டோவை துகிலன் கையில் இருந்து வாங்காது எட்டி எட்டி பார்த்து சென்றனர்..

பார்த்தவர்கள் அனைவருக்கும் நர்மதா சொல்வது போல் தான் இருந்தது.. பெண் அழகாக தான் இருக்கிறாள்.. ஆனால் பார்த்த உடனே தெரிந்து விட்டது.. வசதி ஒன்றும் அத்தனை இல்லை என்பது.. முகமே காட்டி கொடுத்து விட்டது.. பெண் மிடில் கிளாஸ் பேமிலி என்று..

துர்கா தான்… “ என்ன தரகரே…. செகண்ட் மேரஜ் என்று.. இது போல இடத்தை காட்டுறிங்கலா…?” என்று கேட்ட பின் தான் தரகர்..

எந்த பெண் என்று அவருமே துகிலன் கையில் இருந்த அந்த புகைப்படத்தை எட்டி பார்த்தது…

பார்த்தவர்… “ போட்டோ மாறிடுச்சிங்க மேடம்…நான் ஈவினிங்க உங்க தகுதிக்கு ஏத்தது போல கொண்டு வரேன்…” என்று சொல்ல.

துகிலனோ… “ இந்த பெண்ணுக்கு மேரஜ் ஆகிடுச்சா…?” இன்னுமே தன் கையில் வைத்து கொண்டு இருந்த அந்த பெண்ணின், அதாவது மஞ்சுளாவின் முகத்தை பார்த்த வாறே கேட்டான்..

உடனே தரகர்… “இல்ல சார். இன்னும் முடியல..”

“அப்போ இந்த பெண்ணையே முடிங்க….” என்று சொன்னவனின் கையில் இருந்து இன்னுமே மஞ்சுளாவின் முகைப்படம் கீழே இறங்கவில்லை.

தரகர் திக்கி திக்கி… “ அதுல கொஞ்சம் பிரச்சனை இருக்கு சார்..”

“என்ன பிரச்சனை…?” எப்போதும் அளவாக பேசும் துகிலன் இன்று நிறைய பேசினான்.. இல்லை இல்லை நிறைய கேள்விகளை கேட்டான்…

“இவங்க அக்கா ஒருவனை கூட்டிட்டு போயிட்டா….”

“ஓ… ஆனா இதுல என்ன இருக்கு…?” என்று தான் கேட்டான்..

தான் சொன்னதை சரியாக புரிந்து கொள்ளவில்லை போல என்று அந்த தரகர் விளக்கமாகவே…. “ சார் கல்யாணம் ஆகும் முன் எல்லாம் போகல… கல்யாணம் ஆகி புருஷன் கூட வாழ்ந்துட்டு இருக்கும் போது ஐந்து வயது பெண் குழந்தையை விட்டுட்டு வேறு ஒருவன் கூட போயிட்டா….” என்று விளக்கமாக சொன்னவர் பின்..

“நான் ஈவினிங்க வேறு பெண்களுடையது எடுத்துட்டு வரேன் சார்…”

“எதுக்கு.. இந்த பெண்ணே முடிங்க… அவங்க அக்கா தானே அப்படி பண்ணாங்க. இதையே முடிங்க…” என்று விட்டான்..

மற்றவர்களுக்குமே மஞ்சுளாவின் அக்கா.. அப்படி போனதில் பிரச்சனை இல்லை… அவர்கள் பிரச்சனை பார்த்த உடனே மத்தியவர்க்கம் போல் தெரியும் இந்த பெண் நம்ப குடும்பத்திற்க்கு ஒத்து வருவாளா….? முக்கியமா துகிலனுக்கு செட்டாவாளா என்று தான் அனைவரும் நினைத்தனர்.

எல்லா வகையிலும் சரியாக இருக்கும் நர்மதாவை விடுத்து.. இந்த பெண்ணை மனைவியாக ஆக்கி கொள்கிறேன் என்று சொல்றானே… என்று தான் இருந்தது அனைவருக்கும்..

ஆனால் என்ன செய்வது.. இந்த பெண்ணையே முடித்து விட சொல்கிறானே.. என்ன செய்வது என்று நினைத்து துர்கா… அந்த தரகரிடம்.

“தரகரே இந்த பெண் வீட்டில் பேசிட்டு எங்களுக்கு போன் பண்ணி நாங்க எப்போ பெண் பார்க்க வரனும் என்று சொல்லுங்க….” என்று துர்கா சொல்ல.

நர்மதா தான்.. “ அவங்க செகண்ட் மேரஜூக்கு ஒத்து கொள்வாங்கலா.. ? ஏன் கேட்கிறேன்னா.. பெண்ணுக்கு டுவென்டிஃபேர் தான் ஆகுது… துகிலாவுக்கு தெர்ட்டி டூ…” என்று சொல்ல..

அப்போது தான் துகிலன்.. மஞ்சுளாவை பற்றிய விவரம் அடங்கிய அந்த காகிதத்தை கீழே இருந்து எடுத்து பார்த்த நர்மதாவிடம் இருந்து வாங்கியவன்..

அதில் இருப்பதை முழுவதுமாக படித்த பின்.. மீண்டுமே தன் நெற்றியை தடவி விட்டு கொண்டு இருந்த துகிலனை பார்த்த நர்மதா தான் தரகரிடம்…

“இந்த பெண்ணுக்கு எப்போ இருந்து மேரஜூக்கு அலையன்ஸ் பார்த்துட்டு இருக்காங்க…?” என்று கேட்டது…

அதற்க்கு தரகர்…. ‘ மூன்று வருஷமா மேடம்…” என்ற பதிலில் இத்தனை நேரமாக யோசனையுடன் தலை குனிந்து நெற்றியை தடவி கொண்டு இருந்த துகிலன் தரகரின் இந்த பதிலில் நிமிர்ந்து..

“படிச்ச உடனே மேரஜூக்கு பார்க்க ஆரம்பிச்சாட்டாங்கலா..? ஏன்…?” என்றும் கேட்டான்…

“ அது தான் சொன்னேனுங்கலே சார்… இந்த பெண் அக்கா…” என்று தரகர் ஆரம்பிக்கும் போதே..

“ பெண் அக்கா ஓடி போனா. இந்த பெண் என்ன செய்வா. ரப்பிஷா இருக்கு..?” என்று கோபமாக கேட்டான்..

அதற்க்கு தரகர்… “ முதல் பெண் இப்படி போயிடுச்சி.. நாளை இந்த பெண்ணும் கல்யாணம் செய்த பின் ஓடி போயிட்டா எங்களுக்கு தான் அவமானம்… இந்த பெண்ணை பார்க்க வருபவர்கள் ஒன்று போல இதை தான் சார் சொன்னாங்க… அதனால தான் சார் இந்த மூன்று வருஷமா இந்த பெண்ணுக்கு இடம் முடியல..

நீங்க தான் சார் இதை பெருசா எடுத்துக்கல. இதுவே எனக்கு ஆச்சரியமா தான் சார் இருக்கு… இந்த பெண்ணோட சொந்த அத்தை தன் மகனுக்கு இந்த பெண்ணை எடுத்துக்கனும் என்று தான் சார் இருந்தது…

இந்த பெண்ணின் அக்கா இப்படி ஆனதில் வெளியில் இருந்து தான் சார் பெண்ணை கொண்டு வந்தாங்க…

அதோட அக்கா புருஷனுக்கே இந்த பெண்ணை கொடுக்குறதா இந்த பெண் அம்மா அந்த சம்மந்தி கிட்ட சொல்லியும்.. அவங்களுமே ஒரு பெண்ணை எடுத்து எங்க மானம் போனது போதும் என்று.. ஊரில் தான் சார் அந்த மூத்த மாப்பிள்ளைக்கும் பெண் பார்த்து கட்டினது…” என்று விளக்கம் சொல்ல.

தரகரின் இத்தனை நீண்ட விளக்கத்திற்க்கு துகிலன்… “ ஓகே அப்போ இந்த பெண்ணெ முடிச்சிடுங்க… “ என்று விட்டான்..

துகிலனுக்கு அக்கா கணவருக்கு இரண்டாம் தாரமாக கொடுக்க இருந்தவர்கள்.. தனக்கு தர மாட்டார்களா என்பது எண்ணம்…

அத்தியாயம்…5

துகிலன் வீட்டில் இருந்து அந்த தரகர் நேராக மஞ்சுளா வீட்டிற்க்கு தான் வந்தது.. மஞ்சுளா தான் கதவை திறந்து விட்டதும் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்ததும்.. பின் எப்போதும் போல அம்மாவை கூப்புட்டு விட்டு தன் அறைக்கு செல்ல பார்த்தவரை எப்போதும் இல்லாது இன்று அந்த தரகர் தடுத்து நிறுத்தினான்..

“ம்மா கொஞ்சம் நில்லும்மா..” என்று மஞ்சுளாவும் அமைதியாக நின்றாள்..

ஏன் நிற்க சொல்றிங்க ..? என்று எல்லாம் கேட்கவில்லை.. முன் எல்லாம் ஒரு கேள்விக்கு ஒன்பது பதில் சொன்னவள் தான் மஞ்சுளா… ஆனால் இந்த மூன்று வருடத்தில் அவளின் இயல்பு நிறைய மாறி போய் விட்டது..

வயது இருபத்தி நாங்கு தான் அவளுக்கு ஆகிறது.. ஆனால் முப்பதுக்கு மேல் வயது ஆகி விட்டது போல பார்ப்பவர்கள் அனைவருமே ஒன்று போல.

“இன்னுமா உனக்கு இடம் முடியல…?” அப்படி கேட்பவரின் வீட்டிலேயே திருமணம் முடியாத இருபத்தி ஏழு கடந்த வயதுடைய பெண் இருப்பது தான் ஆச்சரியம்..

காரணம் அந்த வீட்டு பெண்.. படித்து முடித்து வேலைக்கு சென்று கொண்டு இருக்கிறாள்.. இரண்டு முறை வேலையின் மூலமே இரண்டு முறை வெளி நாட்டுக்கு கூட சென்று வந்து ஆயிற்று.. அதோடு ஒரு முக்கிய காரணம்.. அவர்கள் வீட்டில் என் அக்காவை போல யாரும் திருமணம் முடிந்து வேஏரு ஒருவனோடு ஓடி போகவில்லை.. அதனால் இன்னுமே அவர்கள் வீட்டு பெண்ணுக்கு திருமணத்திற்க்கு மாப்பிள்ளை பார்க்கவே ஆரம்பிக்கவில்லை…

ஆனால் எனக்கு படிப்பை முடித்த உடன் தன் அக்கா செய்த செயலின் விளைவாக… மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்து மூன்று வருடமாக இடம் முடியாது போக. எனக்கு அவர்களை விட அதிகம் வயது ஆகி விட்டது போலான எண்ணம் இப்போது எல்லாம் அவளே நினைக்கிறாள்..

பின் நினைக்க மாட்டாளா… இந்த மூன்று ஆண்டுகளில் அவளை பெண் பார்த்து விட்டு சென்றவர்களின் எண்ணிக்கை. இரட்டை படையில் வந்து நிற்க்கும்…

சுமாராக இருக்கும் மாப்பிள்ளையை இவள் சரி என்று சொன்னால் கூட… அந்த மாப்பிள்ளை வீட்டவர்கள் இவளை நிராகரித்து விடுவர். அதே போல் இவளோடு படித்த இவளோடு வேலைக்கு தேர்ந்தெடுத்த பெண்கள் எல்லாம் வேலைக்கு சென்று… இன்று வீட்டிற்க்கு உதவியாகவும் இருந்து, அவர்களுமே வாழ்க்கையை அனுபவித்து வாழுவதை பார்த்தவளுக்கு ஏனோ இப்போது எல்லாம் தான் எதற்க்குமே லாயக்கு இல்லை என்பது போல ஒரு எண்ணம். தாழ்வு மனப்பான்மை… அதில் அவள் பேச்சுக்கள் குறைந்து விட்டது.. அதுவும் சமீபத்திய ஒரு பிரச்சனையாக அவளுக்கு நிற்பபது . அவள் தம்பியின் காதல்… அவர்களின் காதலுக்கு தான் இடையூறாக நிற்கிறோமோ என்ற எண்ணம்.

தம்பியும்.. அவள் காதலியும் வீடியோ காலில் மொட்டை மாடியில் பேசிக் கொண்டு இருந்த போது மாலை காய வைத்த துணியை எடுக்க சென்றவளுக்கு அவர்கள் இருவரும் பேசிக் கொண்டு இருந்ததை கேட்க நேர்ந்ததில், அவள் புரிந்து கொண்டது…

தம்பிக்கு திருமணம் வயது இல்லை. தான் இருபத்தி மூன்று தான்.. ஆனால் அந்த பெண் அவளின் தம்பி சந்தீப்பு உடன் வேலை பார்க்கும் பெண்.. இவனை விட ஒரு வயது பெரியவள் போல.

அதாவது மஞ்சுளாவின் வயது தான் ஆகிறது அந்த பெண்ணுக்கு.. அந்த பெண் வீட்டில் அவளுக்கு திருமணத்திற்க்கு மாப்பிள்ளை பார்க்கிறார்கள் போல…

அந்த பெண் இவள் தம்பியிடம்.. “ நீங்க வந்து என்னை பெண் கேளுங்க..” என்று சொல்கிறாள்..

ஆனால் சந்தீப்போ என் அக்காவுக்கே இன்னும் கல்யாணம் ஆகல. நான் எப்படி உன்னை பெண் கேட்டு மேரஜ் செய்து கொள்வேன்… அதுவும் இன்னும் எனக்கு மேரஜ் வயது வரல… டுவென்டி த்ரீ தான்.” என்று சொன்னவனின் பேச்சில்..

அந்த பெண்.. “ என் வயது தெரிந்து தானே நீ எனக்கு ப்ரபோஸ் பண்ணே அப்போ தெரியலையா உன் வயசு..” என்று கேட்டவளின் சந்தீப்…

“நான் என்னை விட நீ பெரியவள் எல்லாம் சொல்லலையே மைய்யூ.. இன்னும் ஒரு த்ரீ இயர்ஸ் போகட்டும் மேரஜ் பண்ணிக்கலாம்… உங்க வீட்டில் இப்போ மேரஜ் வேண்டாம் என்று தானே சொல்ல சொல்றேன்..” என்று சொன்னதற்க்கு தான் சந்தீப் மைய்யூ என்று அழைத்த மைதிலி…

“உன் அக்கா வயதும் என் வயதும் ஒன்னு.. உன் அக்காவுக்கு மூன்று வருடமா மேரஜூக்கு இடம் பார்த்துட்டு இருக்கிறதா சொல்ற….உனக்கே நீ சொல்றதுல ஒரு நியாயம் இருக்காடா…?”

அந்த பெண் கேட்டது நியாயமான கேள்வி தான்.. ஆனால் சந்தீப்… “ மைய்யூ மஞ்சுக்கு ஏன் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்து விட்டாங்க என்று நான் உன் கிட்ட சொல்லி இருக்கேன் தானே….”

“ஆமாம்.. சொல்லி தான் இருக்கேன்.. நான் இல்ல என்று சொல்லலே டா. ஆனா எனக்கு முன் என்னை விட நாங்கு வயது மூத்தவன் என் அண்ணன் எனக்கு கல்யாணம் முடிந்த பின் தான் நான் பண்ணிப்பேன் என்று நிற்கிறான். அடுத்து என்னை விட இரண்டு வயது சின்னவள் என் தங்கை இருக்கா. எனக்கு முடிச்சிட்டு.. என் அண்ணனுக்கு முடிச்சிட்டு அடுத்து என் தங்கைக்கு முடிக்கனும்… புரியுதா..

உனக்கு ஒன் வீக் தான் டைம் சந்தீப்… அதற்க்குள் நீ என் வீட்டிற்க்கு வந்து பெண்ணை கேட்கிற. இல்லேன்னா நான் வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையை மேரஜ் செய்துட்டு போயிட்டே இருப்பேன்… நீயுமே உங்க அக்கா லிஸ்ட்ல.. இரு… அதாவது உனக்கு பெண் பார்க்கும் போது வீட்டு பெண்ணே அப்படி செய்துட்டா… அந்த வீட்டு ஆண் எப்படி இருப்பான்… என்று இரு..” என்று சொல்லி விட்டு மைதிலி வைத்து விட..

சந்தீப் தலை மீது கை வைத்து அமர்ந்து விட்டான்.. மஞ்சுளா வந்த தடம் தெரியாது மீண்டும் கீழே சென்று விட்டாள்..

மைதிலி சொன்ன கெடு இன்றோடு முடிகிறது.. மஞ்சுளாவுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை..

தன் சந்தோஷம் நிம்மதியை அவளின் அக்கா கெடுத்து விட்டு சென்றது போல. தான் இந்த வீட்டில் இருந்து கொண்டு சந்தீப்பின் மகிழ்ச்சியை கெடுத்து கொண்டு இருக்கிறோமோ என்ற எண்ணம்..

அதுவும் சந்தீப் வேலைக்கு ஏனோ தானோ என்று போய் வந்து கொண்டு இருப்பதும், இரவில் தூங்காது மொட்டை மாடியில் நடந்து கொண்டு இருப்பதையும் பார்த்தவளுக்கு என்ன செய்வது…

தன்னை திருமணம் செய்ய ஒரு அரை கிழவன் வந்தா கூட போதும்… அனைவரும் நிம்மதியாக இருப்பார்கள் என்று நினைத்தாள்..

தந்தை பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். அறுபது வயது தான் ஆகிறது.. ஆனால் என்பது வயது போல மிகவும் தளர்ந்து போய்… இது வரை எத்தனை தரகரை பார்த்தார்.. எத்தனை தரகருக்கு பணத்தை கொடுத்து இருப்பார் என்பது கணக்கே இல்லாத ஒன்றாக தான் இன்றும் சென்று கொண்டு இருக்கிறது..

அதே போல்.. அம்மாவின் கனவு என்ன என்பது மஞ்சுவுக்கு தெரியும்.. தன் அப்பா ஓய்வு பெற்று வரும் அந்த பணத்தை கொண்டு.. இந்த வீட்டை டூ ப்ளக்ஸ் வீடு கட்ட வேண்டும் என்பது அவர் கனவு..

ஆனால் இப்போது தன் ஜாதகத்தை வைத்து கொண்டு ஜோசியக்காரனிடம் செல்வதும்.. அவர் சொல்வதை செய்வதும்… ஒரு தரகரிடம்..

“என் கணவருக்கு ரிட்டர்ட்மெண்ட் பணம் இவ்வளவு வந்து இருக்கு… இந்த வீடு இத்தனை மதிப்பு உடையது.. என் கிட்ட கூட இவ்வளவு நகை இருக்கு.. இது எல்லாத்தையுமே என் பொண்ணுக்கே கொடுத்து விடுகிறேன். என் பெண்ணை கல்யாணம் செய்து கொள்வது போல ஒரு மாப்பிள்ளையை மட்டும் கொண்டு வந்துடுங்க போதும்.. நான் உங்களை தெய்வமா நினச்சிப்பேன்…”

இது எல்லாம் எத்தனை வலி மிகுந்த வார்த்தைகள்… அனைத்தையும் கொடுத்தாவது தன் மகளுக்கு திருமணம் முடிந்தால் போதும் என்ற ஒரு நிலை..

அதுவும் ஒரு மாப்பிள்ளை என்று சொன்னார்களே தவிர. அவனுக்கு இந்த இந்த தகுதிகள் இருக்க வேண்டும் என்று கூட கேட்காது மாப்பிள்ளை கிடைத்தால் போதும் என்பது போல பேசிய அன்னையின் அந்த பேச்சு மஞ்சுளாவுக்கு தான் ஒன்னுமே இல்லையா…? இது தான் நினைக்க தோன்றியது..

அதில் தன் சுயம் மறந்து.. ஏதோ வாழ்க்கை மொத்தமும் வாழ்ந்து முடிந்து விட்டது போலான தோற்றமும் நடத்தையும் தான் இப்போது மஞ்சுளாவின் தெரிந்தது..

இதோ தரகர் அழைத்ததில்.. என்ன என்பது போல் பார்த்தாளே தவிர.. எதுவும் பேசவில்லை…

அதற்க்குள் மஞ்சுளா அழைத்த அவளின் அம்மா மாலினியும் வந்து விட..

தரகரை பார்த்தும் ஒரு பர பரப்பு… “ என்னங்க ஐய்யா இடம் ஏதாவது..” என்று மாலினி ஆரம்பிக்கும் போதே..

வெளியில் சென்று இருந்த மாலினியின் கணவரும் வந்து விட… மஞ்சுளா தன் தந்தைக்கும் தண்ணீர் கொண்டு வந்து தந்தவள்..

மணி மாலை நாங்கு மணி ஆனதால், எல்லோருக்கும் சேர்த்து காபி போடலாம் என்று சமையல் அறைக்குள் செல்ல போனவள் பின்…

தரகரிடம் மெல்ல…. “ சார் காபியில சுகர் போடலாம் தானே..” என்று கேட்டாள்..

“ம் போடலாம் ம்மா. போஷே போடலாம்… எப்போதையும் விட இன்னைக்கு அதிகமாவே எல்லோருக்கும் சேர்த்து போட்டு கொண்டு வாம்மா…”

அன்று ஒர்க் பர்ம் வேலை செய்து கொண்டு இருந்த சந்தீப்பும் மாடியில் இருந்து கீழே வந்தான்.. கையில் லேப் டாப்பை வரிசை தட்டை போல ஏந்தி கொண்டு…

தரகரை பார்த்ததுமே அவனுமே அறைக்கு செல்லாது தேங்கி நின்று விட்டான்.. அவனுக்குமே மஞ்சுளாவுக்கு இவர் மூலம் திருமணம் முடிந்தால், ஏதாவது ஒரு தேவலை… என்று நினைத்து விட்டான் போல ஒரு வித ஆர்வத்துடன் தான் அந்த தரகரை பார்த்தான்..

மஞ்சுளா அனைத்தும் பார்த்தும் கண்காணித்தும் கொண்டு தான் காபியை போட்டு வந்து அனைவருக்கும் கொடுத்தாள்..

அந்த தரகருக்கு காபி கொடுக்கும் சமயம் தரகர் ஏதோ சொன்னாரே சர்க்கரை அதிகமா போடு என்று.. ஏதாவது இடம் கொண்டு வந்து இருக்காரா…?

இதற்க்கு முன் கூட எத்தனையோ இடம் கொண்டு வந்தார் தானே.. அது முடியாது தானே போயிற்று… அப்படி இடம் கொண்டு வந்தால் கூட… கண்டிப்பாக முடியும் என்பது போல பேசுகிறார்…

தம்பியின் காதல் விசயம் தெரிந்த அன்று அரை கிழவனுக்கு கூட இரண்டாம் தாரமா கூட கல்யாணம் செய்ய ரெடி என்று நினைத்தேனே.. ஒரு வேளை அதே போல. இரண்டாம் தாரமா தான் கொண்டு வராரோ… என்று நினைக்க.

அவள் நினைப்பு சரி தான் என்பது போல தான் தரகர்.. மாலினியையும் , ஷண்முகத்தையும் பார்த்து… “ நல்ல இடம் தான். இன்னும் கேட்டால் நீங்க நினைத்து கூட பார்க்க முடியாத அளவுக்கு பெரிய இடம்.” என்று ஒரு இழுவை இழுத்தவர்..

பின் சொல்ல வந்த விசயமான… “ என்ன ஒன்னு பையனுக்கு டைவஸ் ஆகிடுச்சி ஒரு மகன் இருக்கான் நாளு வயசுல..” என்று பேசிக் கொண்டு இருந்தவரின் மீதி பேச்சை கேட்க மஞ்சுளா அங்கு இல்லை. தன் அறைக்கு சென்று விட்டாள்..

பின் அந்த தரகர் அரை மணி நேரம் கழித்து தான் தங்கள் வீட்டை விட்டு சென்றது.. அவர் சென்ற உடன் எல்லாம் மஞ்சுளாவின் பெற்றோர் அவளிடம் வந்து பேசவில்லை..

இரவு உணவு சாப்பிட்ட பின்… மேல் வேலைகள் அனைத்தும் முடித்த பின் தான் முதலில் அவளின் தந்தை ஷண்முகம் தான் பேச்சை ஆரம்பித்தார்…

எப்போதுமே இரவு உணவு முடிந்த பின் அவளின் தம்பி கீழேவே இருக்க மாட்டான்.. கை பேசியை எடுத்து கொண்டு மாடிக்கு சென்று விடுவான்..

முன் சும்மா காத்து வாங்க போகிறான் என்று நினைத்து கொண்டு இருந்த மஞ்சுளாவுக்கு ஒரு வாரம் முன் தானே தம்பியின் காதல் தெரிய வந்தது…

இன்று செல்லாது தம்பியும் அமர்ந்து கொண்டு இருப்பதை பார்த்த மஞ்சுளாவுக்கு தெரிந்து விட்டது.. அனைவரும் தன் சம்மததிற்க்காக தான் காத்து கொண்டு இருப்பது..

கூடவே இதுவுமே தெரிந்தது தான்.. இரண்டாம் தாரமாக திருமணம் செய்து கொள் என்று தன்னிடம் கேட்க தயங்குகிறார்கள் என்பதும்..

அதாவது அவர்களுக்கு அந்த கஷ்டம் தராது மஞ்சுளாவே…. “ இன்னைக்கு தரகர் கொண்டு வந்த இடம் எனக்கு ஓகே தான் ம்மா..” என்று சொல்லி விட்டு தன் அறைக்கு சென்றவளுக்கு நெஞ்சு வெடித்து விடும் போகும் அளவுக்கு துக்க தொண்டையை அடைத்தது…

படிக்கும் போதும் படித்து முடித்த பின்.. வேலைக்கு சேர போகிறோம்… பின் திருமணம் அதற்க்கு பின்னான வாழ்வு என்று கனவுகள் கண்டு இருக்கிறாள்..

ஆனால் அவள் கண்ட கனவுகள் அனைத்தும் ஒரு நாள் பொசுங்கி போனதில் அடுத்து கனவு காண்பதையே விட்டு விட்டாள் தான்.. ஆனால் இது போல அரை கிழவனை திருமணம் செய்ய நேரும் என்பதை அவள் நினைத்து கூட பார்க்கவில்லை…

இரண்டாம் தாரம் என்பதை மட்டுமே மனதில் வைத்து… நாளை அவளை பெண் பார்க்க வரும் துகிலனை பார்த்தும் அவளுக்கு இது போல நெஞ்சு குழி அடைக்குமா..?

அடைக்கும் அடைக்க தான் செய்யும்.. ஆனால் அது துக்கத்தினால் அல்ல…

“உண்மையில் அவர் தான் மாப்பிள்ளையாம்மா அவர் தானா….?” தன் அறைக்கு வந்து தன்னை ஹாலுக்கு அழைத்து செல்ல வந்த தன் அன்னையிடம் அத்தனை முறை கேட்டவளுக்கு அவளாள் நம்ப கூட முடியவில்லை..

இது அவனுக்கு இரண்டாம் திருமணம் என்று….






















 
Well-known member
Joined
Jun 1, 2024
Messages
144
துகியை ஏற்கனவே மஞ்சுக்கு தெரியும் போல 🤨🤨🤨அவனும் தெரிஞ்சு தான் இவளை கல்யாணம் பண்ணிக்கிறேன் சொன்னானா....🤔🤔🤔

துகி நர்மதா கதை என்னனு தெரியல மஞ்சு இவங்க நட்பை எப்படி எடுத்துப்பா 🤔
 
Well-known member
Joined
May 24, 2024
Messages
229
Lovely
Nammu ku vera track ethum iruka athu yarukum triyama randuperum maraichirukanhala
Kalyanam ok
Ana edukefuthalum nammu tan parkuran
Manju epadi itha eduthuka poralo
Ivangacranduperukum erkaneve oruthara oruthar trinjirukuma
 
Top