Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Puthiyathoru Jodi...5

  • Thread Author
அத்தியாயம்…5

துகிலன் அன்று வீடு வந்த போதே தன் அன்னையிடம்… “ ஓகே சொல்லிட்டாங்கலா…?” என்று தான் கேட்டான்..

பாவம் துர்காவுக்கு மகன் எதை கேட்கிறான் என்று புரியவில்லை போல…. பக்கம் நர்மதா இருந்து இருந்தால் புரிந்து இருக்கும் சொல்லி இருப்பாள்.. பெண் வீட்டில் சம்மதம் சொல்லிட்டாங்கலா என்று தான் துகி கேட்கிறான் என்று..

நர்மதாவும் இல்லாது போக துகிலனோ ஒரு மாதிரி பின்னங்கழுத்தை தடவி விட்டுக் கொண்டவன்..

“பெண் வீட்டில்…” என்று சொன்னவனையே அவனின் அன்னை அதிசயத்து பார்த்தார்.. மகன் அவனின் முதல் திருமணத்திலேயே இத்தனை ஆவல் காட்டியது இல்லையே… ஏதோ புது பில்டிங்க கட்டும் ப்ராஜெக்ட் போல தானே நர்மதாவும் இவனும் சேர்ந்து புடவை நகை வாங்கியது எல்லாம்…

சில சமயம் இருவரில் ஒருவர் இல்லாது போனால் கூட.. அந்த முதல் திருமண வேலைகள் நர்மதா துணைக் கொண்டு தானே திருமணத்திற்க்கு உண்டான ஷாப்பிங்க வேலைகள் அனைத்தும் இந்த விதமும் தங்கு தடை இல்லாது தானே நடந்து முடிந்தது.. காரணம் ஒருவரின் விருப்பு வெறுப்பு மற்றவர்களுக்கு புரிந்து இருந்ததால், மற்றவர்களுக்கும் சேர்த்தே வாங்கி விடுவர்..

மகனுக்கு இது இரண்டாம் திருமணம்… ஒரு அன்னையாக மகனை திருமணம் செய்ய போராட வேண்டி இருக்கும் என்று தான் பாவம் துர்கா நினைத்து கொண்டு இருந்தார்..

ஆனால் அதற்க்கு எதிர்பதமாக அனைத்தும் நடப்பது ஏனோ துர்காவுக்கு பிடிக்கவில்லை… நர்மதாவுக்கு என்ன குறை என்று.. அவளை விவாகரத்து செய்து விட்டு, எந்த விதத்திலுமே மகனுக்கு இணையில்லாத இந்த பெண்ணின் மீது மகன் ஆர்வம் காட்டுகிறான்.

மாமியாருக்கு இந்த மருமகள் தங்கள் வீட்டிற்க்கு வருவதற்க்கு முன்பே அவளை பிடிக்காது போய் விட்டது…

அதன் விளைவாக… “அது எல்லாம் ஓகே சொல்லிட்டாங்க. அவங்க வசதிக்கு உன்னை போல ஒரு மாப்பிள்ளை கிடைக்குமா.? ஆனா எனக்கு தான் இந்த பெண்ணை முடிவு செய்யும் முன்… கொஞ்சம் அந்த பெண் கிட்ட பேசனும்.”

ஒரு விதம் கோபமாக பேசிய அன்னையையே பார்த்து கொண்டு இருந்தவன் கண்கள் சுருங்க…

“என்ன பேசனும்…?” என்று கேட்டான்..

“உன் மகன் நர்த்தகனை பத்தி கொஞ்சம் சொல்லனும்.. அவனை எப்படி பார்த்துக்கனும் என்பதையும் நாம தெளிவா சொல்லிடுறது நல்லது புரியுதா…?” என்று துர்கா சொல்லி கொண்டு இருக்கும் போது தான் அந்த இடத்திற்க்கு நர்மதா வந்தாள்…

துகிலன் தன் பக்கம் வந்து நின்ற நர்மதாவை காண்பித்து … “எங்க மகன் நர்த்தகனை பார்த்துக்க அப்பா நான் இருக்கேன். அம்மா நம்மூ இருக்கா…? வரும் பெண் ஏன் பார்த்துக்கனும்…?” என்று கேட்ட மகனின் கேள்வியில் இப்போது உண்மையில் துர்கா குழம்பி போய்..

“நீ என்ன டா சொல்ற..? உன் மகனை உனக்கு வர போற மனைவியும் பார்த்துக்கனும் தானே டா…?”

“அது என் மகனின் அம்மா இல்லாது போனால், ஐ மீன் அவள் இறந்து போய் இருந்தால், ஆனா என் மகன் அம்மா பக்கத்தில் இருக்கும் போது எனக்கு வர போகும் மனைவி ஏன் பார்த்துக்கனும்.?” என்று கேட்டவனிடம்…

துர்கா என்ன சொல்வது என்று பார்த்து கொண்டு இருக்க.

துகிலன்.. “ மாம் எனக்கு இப்போ மனைவி தான் வேண்டும்.. என் மகனுக்கு அம்மாவா அந்த பெண்ணை நான் கல்யாணம் செய்துட்டு இங்கு அழச்சிட்டு வரல… ஏன்னா என் மகனின் அம்மா நர்மதா தான்…” என்று விட்டு செல்லும் மகனின் முதுகையே பார்த்து கொண்டு இருந்த துர்கா மகன் தன் கண் பார்வையில் இருந்து மறைந்து விட்டதும்..

நர்மதாவின் பக்கம் பார்வையை செலுத்திய துர்கா… “ இவன் என்ன நர்மதா சொல்றான்.. எனக்கு புரியல…” என்று குழம்பிய முகபாவனையில் கேட்ட அத்தையின் கை பற்றி கொண்ட நர்மதா..

“அத்த துகி சரியா தான் சொல்றான் அத்த.. நீங்க வீணா மனச போட்டு குழப்பிக்காதிங்க… துகிக்கு அந்த பெண்ணை ரொம்ப பிடிச்சி போச்சி… அது மட்டுமே யோசித்து அந்த பெண்ணை உங்க மகனுக்கு மேரஜ் செய்து வைங்க . வேறு எது பத்தியுமே நிங்க வீணா யோசித்து மனச போட்டு குழப்பிக்காதிங்க… புடியுதா அத்த..” என்று விட்டு தன் மகன் படித்து கொண்டு இருக்கும் படிக்கும் அறையை நோக்கி நர்மதா செல்ல.

மகன் பேச்சில் பாதி குழம்பி கொண்டு இருந்த துர்காவின் மனது நர்மதாவின் பேச்சில் முழுவதுமாக தான் குழம்பி போனது.

இவங்க இரண்டு பேருக்கும் இடையில் சண்டை இல்லை… சச்சரவும் இல்லை.. இருந்தும் பிரிந்து விட்டதே பெரும் குழப்பம் என்றால், எந்த பெண்ணாவது விவாகரத்தே ஆகி விட்டாலுமே.. என் கணவனுக்கு அந்த பெண்ணை ரொம்ப முடித்து இருக்கு கல்யாணம் செய்து வை என்று சொல்லுவாளா.? என்று நினைத்த துர்கா…

இவள் தான் அவனுக்கு பெண்ணையே தேடி கொண்டு இருந்தாளே.. இப்போ என்ன இவன் கல்யாணம் செய்து கொண்ட பின் நர்மதாவுக்கு தன் மகன் மாப்பிள்ளை பார்த்து கட்டி வைப்பானா…? கடவுளே கடவுளே என்று நொந்து போய் தான் போய் விட்டார் துர்கா..

சிறு வயதில் இருந்தே.. இரண்டு பேரின் ஒற்றுமையையும் பார்த்த இவர்களுக்கே இவர்களின் இந்த செயல் மண்டையை பிய்த்து கொள்ளலாம் போல இருந்தால், அந்த வீட்டிற்க்கு புதியதா புதுப்பெண்ணாக வரும் மஞ்சுளா எத்தனை குழம்பி போய் தவிப்பாள்…

அதுவும் துகிலன் பெண் பார்க்க சென்றது தன் அம்மா அப்பாவோடு மட்டும் அல்லாது தன் எக்ஸ் மனைவியையும் அழைத்து கொண்டு தான் மஞ்சுளாவை பெண் பார்க்க சென்றது.

ஆம் துகிலன் நர்மதாவை என் கூட வா என்று சொன்னானா.. இல்லை நர்மதாவே எப்போதும் போல துகிலன் என்று வந்து விட்டால், அவனுக்கு அனைத்திற்க்கும் துணை நிற்பது போல இதற்க்கும் துணை நிற்க வேண்டும் என்று கிளம்பு வந்து விட்டாளா தெரியாது.

மறு நாள் மாலை ஐந்து மணிக்கு பெண் வீட்டிற்க்கு போவதாக தரகர் மூலம் பெண் வீட்டார்களுக்கு செய்தி சொல்லியாகி விட்டது..

இதோ நாலரை மணிக்கு அவர் அவர் அறையில் இருந்து கிளம்பி வெளியில் வந்து நின்றனர்.. பக்கத்து விட்டில் தான் பெண் வாழ்வதால் சாருமதியும்,..

சாருமதியின் மாமியார் ஆன வசந்தியும் வைத்திய நாதனுமே தங்கள் கையில் பேத்தியின் கையை பிடித்து கொண்டு நின்று கொண்டு இருந்தனர்..

வசந்தியும் வைத்திய நாதனும்.. நர்மதாவின் அம்மா அப்பா மட்டுமே இல்லையே… தங்கள் வீட்டு பெண்ணை கொடுத்த சம்மந்தி அதோடு நாத்தனார்.. தன் அண்ணன் அண்ணி என்று சுற்றி சுற்றி உறவு முறை என்ற போது… முதலாவதாக வந்து விட்டனர் தான்..

ஆனால் வசந்தியின் முகம் தான் என்னவோ போல் இருந்தது… எதற்க்கு பிரிந்தார்கள் என்று தெரியவில்லை.. ஆனால் பின் நாளில் இருவரும் மீண்டும் சேர்ந்து வாழலாம் வாழ கூடும் என்று வசந்தி மட்டும் அல்லாது துகிலன் வீட்டில் இருப்பவர்களும் நினைத்தார்கள் தான்.. ஒருவளை தவிர. அவள் வைஷ்ணவி..

ஆனால் துகிலன் உடனே வேறு ஒரு பெண்ணை தேர்தெடுத்து இப்படி உடனே அவன் இரண்டாம் திருமணத்திற்க்கு தயாராகி நிற்பான் என்பதை யாருமே எதிர் பார்க்கவில்லை..

இதில் தன் மகள் தான் அனைத்திலும் முன் நின்று நடத்தி கொண்டு இருப்பதை பார்த்து ஒரு தாயாக அப்படி ஒரு கோபம் வந்தது வசந்திக்கு..

இந்த பெண் தானே தன் தலையில் மண்ணை வாரி கொட்டிக் கொள்கிறதே என்று. அந்த கோபம் வசந்தியின் முகத்தில் அப்பட்டமாகவே தெரிந்தது தான்.

அதன் தாக்கத்தில் தன் அண்ணியும் சம்மந்தியுமான துர்காவிடம்.. “ என்ன அண்ணி இன்னும் உங்க பெரிய பையன் மட்டும் வரல.. மாப்பிள்ளை ட்ரெஸ் பண்ணிட்டு வர லேட் ஆகுதா என்ன…?”

வசந்தி இதை ஒரு மாதிரியான குரலில் தான் கேட்டார்.. . வசந்தி எப்போதுமே துர்காவிடம் உன் மகன் என்று எல்லாம் பேசியது கிடையாது..

தன் மகளை கொடுப்பதற்க்கு முன்பே துகிலா துகிலா அப்படி ஒரு பாசம் துகிலன் மீது வசந்திக்கு.. இரு குடும்பத்திற்க்கும் மூத்த வாரிசு துகிலன் என்பதினால் அவனை அனைவருக்குமே பிடிக்கும்..

அதிலும் அவன் தொழிலில் காட்டிய ஈடுப்பாடு.. அதை சரியாக நடத்திக் கொண்டு போகும் பாங்கு என்று அனைத்திலுமே அவன் முதன்மையாக இருக்க.. அவன் மீது பாசம் கலந்த மரியாதை தான் அனைவருக்குமே.

முதல் முறை வசந்தி உன் மகன் என்றதுமே துர்காவின் மனது துணுக்குற்று தான் போனது… இதில் தன் மகள் வாழ்வும் சம்மந்தப்பட்டு வேறு இருப்பதில் இன்னுமே அதிக எச்சரிக்கை உணர்வோடு தான் வார்த்தைகளை பார்த்து பேச வேண்டி இருந்தது..

அதன் தொட்டு.. “என் மகனை எனக்கு தெரிந்ததை விட உங்க மகளுக்கு தானே அதிகமா தெரியும்.. ஏன் இத்தனை லேட் செய்யிறான் என்று அவளை கேட்டா தான் தெரியும்..” என்று சொல்ல…

அதற்க்கும் வசந்தி ஏதோ வாய் திறக்க போக. அதற்க்குள் நர்மதாவே அங்கு வந்து விட்டாள்… எப்போதும் போல ஜீன் மேல் சட்டையாக அணிந்து கொண்டு…

அங்கு வந்த நர்மதா யாரிடமும் பேசாது நேராக துகிலனின் அறைக்கு சென்றாள்.. முன் அது அவளுக்குமே சொந்தமான அறையாக இருந்த அறைக்கு சென்றவளை தான் வைஷ்ணவி ஒரு மாதிரியாக பார்த்தாள்..

பின் துர்காவிடம்.. “அத்த அவங்களும் வராங்கலா…?” என்று கேட்டவளுக்கு பதில் துர்காவுக்கே தெரியாததினால், ஒன்றும் பேசாது வசந்தியை பார்த்தார்.. பாவம் அவருக்கே தெரியவில்லை போல..

அதற்க்குள் யாருக்கும் தெரியாத கேள்விக்கு விடையளிக்க வேண்டிய இருவரும் பேசிக் கொண்டே அந்த அறையை விட்டு வெளி வந்தார்கள்..

வசந்தி தான்.. “என்ன நர்மதா நீயும் வர்றியா..?” என்று கேட்க.

“ம்மா இது என்ன கேள்விம்மா.. நான் இல்லாது துகிக்கு பெண் பார்ப்பதா நெவர்..” என்றவளின் பேச்சு பாவம் அங்கு இருந்த யாவருக்குமே புரியவில்லை..

ஆனால் நர்மதாவுக்கு அவர்கள் ஏன் தங்களை குழப்பமாக பார்க்கிறார்கள் என்பது புரிந்து விட்டது..

அதனால்.. “ உங்க எல்லோருக்கும் பொதுவா நான் சொல்றது இது தான்… நாங்க இரண்டு பேருமே ஃபைவ் இயர்ஸ்ஸா தான் ஹஸ்பெண்ட் ஒயிப்பா இருந்தோம். ஆனா அதுக்கு முன்.. இருபத்தி ஏழு வருஷமா பிரன்ஸ்… நாங்க எங்க கல்யாண வாழ்க்கையில் இருந்து தான் பிரிந்து விட்டோம்… எங்க நட்பை பிரிக்கல. அதே போல் தான் பிசினஸ்ஸும்..

அதனால் ஐந்து வருஷம் முன் நீங்க இரண்டு பேரும் எங்களை எப்படி பார்த்திங்கலோ… அதே போல நாங்க எங்களை பார்த்தால் போதும்.. சும்மா சும்மா இதை பத்தி இனி எங்களை பேச விடாதிங்க…” என்று நீண்ட பிரசங்கத்தை வைத்தாள் நர்மதா….

நர்த்தகன் குழந்தையை மட்டும் அவனை பார்த்து கொள்ள வேண்டி ஏற்பாடு செய்து இருந்த பெண்மணியிடம் விட்டு விட்டு அனைவரும்..

பெண் பார்க்க நேரம் ஆவதால் அனைவரோடும் நர்மதாவும் சென்றாள்.. பாவம் இந்த ஐந்து வருட திருமண வாழ்க்கையில் பிறந்த நர்த்தகன் எதில் இவர்கள் சேர்த்து கொள்வார்கள் என்பது தான் புரியவில்லை.

இவர்களுக்கு புரியாத அந்த விசயம். வரும் பெண் எந்த வகையில் புரிந்து கொள்வாள்.. அதையும் பார்க்கலாம்..

உலகிலேயே இரண்டாம் திருமணத்திற்க்கு பெண் பார்க்க விவாகரத்து செய்த முதல் மனைவியோடு பார்க்க செல்வது துகிலனாக தான் இருக்கும்.

இதை தான் வைஷ்ணவி காரில் பெண் வீட்டிற்க்கு போகும் போது குசு குசு என்று தன் அம்மாவிடம் கை பேசியில் பேசிக் கொண்டு போனாள்..

பக்கத்தில் அமர்ந்து இருந்த அவளின் கணவன் விக்னேஷின் காதில் அந்த வார்த்தை விழுந்து விட. மனைவியை முறைத்து பார்த்தான். பதிலுக்கு வைஷ்ணவியுமே கணவனை முறைத்து பார்த்தாள்..

நான் சொல்வதில் என்ன தப்பு இருக்கு மெல்ல உதட்டு அசைவிலும் சொல்ல.. பாவம் விக்னேஷ் தான் பின் வாங்க வேண்டி இருந்தது.. பார்வையையும் பேச்சையும் திசை திருப்பி…

தன் அன்னையிடம்.. “ ம்மா இந்த தெருவில் நம்ம கார் போகுமா…?” என்று கேட்டு..

மூன்று கார் ஒன்றன் பின் ஒன்றாக அந்த குறுகிய சாலையில் வந்து நின்றது…

“இது தான் பெண் வீடா… ?” முதல் ஆளாக வைஷ்ணவி தான் ஆர்வத்துடன் காரில் இருந்து இறங்கியது..

விக்னேஷ் தான் தன் மனைவியை சந்தேகமாக பார்த்தவனாக.. “ நான் என்னவோ நிறைய முறை வந்தது போல என் கிட்ட கேட்கிற…?” என்று கேட்டவன்..

பின்.. “ நீ ஏன் இந்த மேரஜில் இத்தனை ஆர்வம் காட்டுற…?” என்று கேட்டவனுக்கு பதில் சொல்ல முடியாது இப்போது வைஷ்ணவி தன் பேச்சை மாற்றினாள்..

“அத்தை வெளியிலேயே எவ்வளவு நேரம் நிற்பது வாங்க உள்ளே போகலாம்..” என்று அழைக்க.

ஆனால் அதற்க்குள் பெண் வீட்டவர்களாக மஞ்சுளாவின் அம்மா அம்மா தம்பி என்று குடும்பமாக மாப்பிள்ளை வீட்டார்களை வர வழைக்க..

முறையாக இரு சார்பாக அறிமுகம் படுத்திய பின் தான் வீட்டிற்க்குள் சென்றது.. என்ன ஒன்று நர்மதாவை துகிலன் மனைவி என்று அறிமுகம் செய்யாது… மாமா அத்தை பெண் என்று அறிமுகம் செய்தனர்..

அறிமுகம் படலம் எல்லாம் முடிந்த பின் அந்த வீட்டிற்க்கு முதல் ஆளாக துகிலன் உள் நுழைய அவனின் பின் நர்மதா சென்றாள்.. அவர்களுக்கு பின் தான் அனைவருமே சென்றது..

மூன்று வீடு தள்ளி இருந்த மஞ்சுளாவின் அத்தையுமே தான் அப்போது அங்கு இருந்தாள்..

இடம் பற்றாக்குறை எல்லாம் இல்லை.. பழைய காலத்து வீடு என்பதினால் கூடம் பெரியதாக தான் இருந்தது..

ஆனால் தரை இந்த காலத்திற்க்கு ஏற்ப பள பளப்பு இல்லாது அந்த காலத்தில் சிமெண்டில் ரெட் சிமெண்ட் போட்டு தரை வழிப்பர்.. அது போலான அந்த தரை இருக்க..

அதுவுமே சமமாக இல்லாது கொஞ்சம் பொக்கையும் போலுமாக தான் இருந்தது.. ஆனால் அதில் பெரிய பெரிய பெட்சீட்டை போட்டு மறைத்து தங்களின் மானத்தை காப்பாற்றி விட்டோம் என்று மாலினியும், ஷண்முகமும் நினைத்து கொண்டனர்.

ஆனால் ஆண்களை சேரிலும், பெண்களை அந்த பெட்சீட்டிலும் அமர சொல்ல. இருக்கைகள் இல்லாததினால், பெண்களும் அதில் தான் அமர்ந்தனர்.

எப்போதுமே மெத்து மெத்து என்று குஷனில் அமர்ந்தவர்களுக்கு மேடு பள்ளமான அந்த தரையில் அமர்வது என்பது கஷ்டமாக தான் போனது.

இதில் பெண் காண்பித்தால் போதும்.. வீட்டிற்க்கு சென்று கூட திருமண தேதியை குறித்து விடலாம் என்று பெண்கள் நினைத்து..

துர்கா மஞ்சுளாவின் அம்மா மாலினியை பார்த்தவர்…. “ பெண்ணை அழைச்சிட்டு வாங்க என்று அவர் சொல்வதற்க்கு முன்பு…

நர்மதா… மாலினியிடம்.. “ உங்க டாட்டரை கூட்டிட்டு வாங்க ஆன்ட்டி…” என்று சொன்னதுமே மாலினியும்..

“தோம்மா. அழச்சிட்டு வரேன் .” என்று சொல்லி சிரித்த முகத்துடன் தான் மஞ்சுளா இருக்கும் அறை பக்கம் சென்றார் மாலினி.

பாவம் மாலினிக்கே நர்மதா யார்..? என்ற விவரம் தெரியாது…

நர்மதாவை பற்றி முதலே தெளிவாக சொல்லாததிற்க்கு காரணம்… முதலே பெண் வீட்டார்களுக்கு சங்கடத்தை கொடுக்க கூடாது.. பின் தெரிய தானே போகிறது என்பது அவர் எண்ணம்.. கூட தெரிந்து தானே இரண்டாம் திருமணம் என்று தெரிந்து தானே தன் மகளை கொடுக்கிறார்கள் என்பதுமே அவர் எண்ணம் தான்..




 
Well-known member
Joined
Jun 1, 2024
Messages
144
எக்ஸ் ரெண்டு பேரும் மண்டையை காய விடுறாங்க..... 🥵🥵🥵🥵🤯🤯🤯🤯
நமக்கே இப்படின்னா மஞ்சு பாவம்
..... 😣😣😣
friend னாலும் எக்ஸ் wife தானே..... புருஷன் கூடவே சுத்தினா எந்த பொண்டாட்டிக்கு ஏத்துக்க முடியும் 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
இதுல நர்த்தகன் வேற 😴😴😴😴
 
Well-known member
Joined
Aug 16, 2024
Messages
362
என்னவோ போங்க ‌அவங்க இரண்டு பேர் எதற்காக பிரிந்தார்கள் என்று இன்னுமே அனுமானிக்க முடியவில்லை.
 
Well-known member
Joined
May 11, 2024
Messages
243
துகிலனுக்கு வெட்கமெல்லாம் வருது. பொண்ணு பார்க்க நர்மதாவும் வர்றாளே. மண்டை காயுது
 
Well-known member
Joined
May 12, 2024
Messages
261
Eppovum pola after marriage um irukka mudiyathu illaiya… Narmadha Thugilan bedroom kulla sagajama porathu ellam inimel nalla irukkathe Manaivi endu Narmadha vandha piragu… may be adhunala misunderstanding niraiya aagum pola
 
Well-known member
Joined
May 24, 2024
Messages
229
Nalla mandavkaya vidrangapa randu perum
 
Top