Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Puthiyathoru Jodi...6

  • Thread Author
அத்தியாயம்…6

மஞ்சுளாவின் தம்பி சந்தீப் துகிலனின் தந்தை அனைவரையும் அறிமுகம் படுத்தியவர் கடைசியாக தான் தன் மகன் துகிலனை காண்பித்து.., “ இவர் தான் மாப்பிள்ளை…” என்று சொன்னது..

ஆனால் வெளியில் வந்த நொடி முதல் சந்தீப்பின் பார்வை துகிலன் மீது தான் இருந்தது.. யாருடா இது விளம்பரத்திற்க்கு வரும் மாடல் போல இருக்கிறார்… ஸ்போர்ட்ஸ் மேன் போலவும் இருக்கார்.. துகிலனின் நிறத்தை பார்த்தும்… வெயிலின் தாக்கத்தில் துகிலனின் முகம் நிறம் மாறியதை பார்த்த சந்தீப் இவர் ஏசியிலே தான் இருப்பாரா….?

காரை விட்டு கொஞ்சம் இறங்கி நின்றதும் வெயிலில் முகம் இப்படி சிவந்து போய் இருக்கு… யாரா இருக்கும் என்று நினைத்தானே ஓழிய.. இவன் தான் மாப்பிள்ளையாக இருக்க கூடும் என்று அவன் கிஞ்சித்தும் எதிர் பார்க்கவில்லை…

அதனால் யார் என்று பார்த்து கொண்டு இருந்தவன் காதில் கனக சபை… “ இவர் தான் உங்க வீட்டிற்க்கு மாப்பிள்ளையாக வர போகிறவர்… என் மூத்த மகன் துகிலன்…” என்று சொல்லவும் சந்தீப்பின் மனதில் அத்தனை மகிழ்ச்சி..

காலையில் கூட மாலினி மகனிடம் இன்று பெண் பார்க்க வருகிறாகள் என்று ஏதாவது வாங்க கடைக்கு அனுப்பும் போது கூட மகிழ்ச்சியாக எல்லாம் செல்லாது மன சுணக்கத்துடன் தான் சென்றான்..

தன் சுயநலத்திற்க்காக மஞ்சுவின் வாழ்க்கையை நாம் நினைத்து பார்க்காது விட்டு விடுகிறோமோ… ஜெய மாலினி தன் சுகம் தான் பெரியது என்று போயிட்டா. நானுமே அது போல தான் இருக்கேனா.

மஞ்சுளாவுக்கு என்ன குறச்சல். படித்து முடித்து வேலைக்கு போக காத்து கொண்டு இருந்தவளை வீட்டில் வைத்து திருமணத்திற்க்கு மாப்பிள்ளை பார்க்கிறேன் என்று அப்பா அம்மா அவர்கள் பயத்திற்க்கு மஞ்சுளாவை நினைத்து பார்க்காது விட்டது போல தான் என் காதலுக்காக இரண்டாம் தாரமாக வீட்டில் பேசும் போது தான் அமைதியாக இருப்பது சரியா…?

மஞ்சுளாவுக்கு என்ன வயது ஆகிறது.. வெளி உலக பெண்கள் இந்த வயதில் திருமணம் பற்றி கூட யோசிக்காது வாழ்க்கை அனுபவித்து வாழ்ந்து கொண்டு இருக்கும் போது அவர் அவர் சுயநலத்திற்க்காக அவளை பந்தாடுவதா…? என்ற கவலையில் இருந்த சந்தீப்.. துகிலனை பார்த்ததும் அனைத்து கவலையுமே மறைந்து விட்டது…

இந்த காலத்தில் மனது ஒத்து போகவில்லை என்றால் பிரிவது எல்லாம் ஒரு பெரிய விசயம் கிடையாது தானே… தான் வேலை பார்க்கும் ஐடி உலகம் அவனுக்கு அதை தானே சொல்கிறது.. இப்படியாக துகிலனின் தோற்றத்தில் சந்தீப் விழுந்து போய் விட்டவன்.

மாலினி அவள் அறைக்கு செல்லும் முன்னவே சந்தீப் சென்று… “எனக்கே கொஞ்சம் கில்ட்டியா பீலா தான் இருந்தது மஞ்சு… என் காதலுக்காக சுயநலமா இருக்கோம்மோ என்று….”

சந்தீப் நேற்று இரவு கூட மஞ்சுளாவின் அறைக்கு வந்து… “ இரண்டாம் தாரம் எல்லாம் வேண்டாம் மஞ்சு பார்க்கலாம் உனக்கு என்ன வயசு ஆகுது..?” என்று தான் சொன்னான்.

ஆனால் மஞ்சுளா. “ அப்போ உன் காதலிக்கு என்ன பதில் சொல்லுவே சந்தீப்..?” என்ற கேள்வியில் சந்தீப்புக்கு தெரிந்து விட்டது.. தாங்கள் பேசியதை மஞ்சுளா கேட்டு விட்டாள் என்று…

“ அப்போ என் காதலுக்காக தான் இந்த இடத்துக்கு நீ சம்மதம் சொன்னியா மஞ்சுளா. அப்படி என்றால் வேண்டாம். நான் மைதி கிட்ட பேசுறேன்.’ என்று சந்தீப் சொன்னதற்க்கு மஞ்சுளா.

“ என்ன என்று பேச போற சந்தீப்… எத்தனை மாதம் காத்து இருக்க சொல்ற.. இல்ல வருஷமா.. அதோட எனக்கு மேரஜ் முடியலேன்னு நம்ம அப்பா அம்மா அதை பத்தியே கவலை பட்டுட்டு இருக்காங்க…” என்று சொன்னவள்..

“இரண்டாம் தாரம் பரவாயில்லை..” என்று சொன்னவளின் முகம் கூட கலை இழந்து தான் இருந்தது…

அக்கா தம்பி இருவருமே இரண்டாம் தாரம் என்றால், ஒரு நாற்பது வயது மாப்பிள்ளையாக குண்டாக தொப்பையாக முன் பக்கம் முடி கொட்டி கொஞ்சம் வழுக்கையாக இப்படி தான் மாப்பிள்ளை இருப்பான் என்று நினைத்து விட்டார்கள் போல…

இப்போது தம்பியானவன் துகிலனை பார்த்தவன் இவருக்கு இது இரண்டாம் திருமணமா…? என்று சந்தேகிக்கும் படியான தோற்றத்தில் நிம்மதியோடு மஞ்சுளாவின் அறைக்கு சென்று பார்த்த போது மஞ்சுளா ஏனோ தானோ என்று உடை அணிந்து கொண்டு இருந்தாள்..

ஏதோ கல்யாணம் முடிந்தால் போதும் என்ற மனநிலை தான் அவளுக்கு… அதோடு இரண்டாம் திருமணம் செய்து கொள்பவனுக்கு இது போதும் என்று மஞ்சுளா நினைத்து விட்டாள் போல. அதனால் தான் ஐந்து வருடத்திற்க்கு முன் வாங்கிய புடவையை கட்டி கொண்டு… ஒரே ஒரு நீளமாக கழுத்தணியை அணிந்து கொண்டு அமர்ந்து கொண்டு இருப்பவளின் பக்கத்தில் போய் மகிழ்ச்சியுடன் அமர்ந்து..

“ மஞ்சு. மாப்பிள்ளை பற்றி சொல்ல. அதுவும் பூரிப்போடு சொன்னவன் கூடவே இப்போ எல்லாம் செகண்ட் மேரஜ் ஒன்னும் பெரிய விசயம் இல்ல மஞ்சு…. அப்போ எல்லாம் என்ன ஆனாலுமே மனது ஒத்து போகுதோ இல்லையோ சேர்ந்து தான் வாழனும் என்று இருந்தது.. ஆனால் இப்போ அப்படி இல்ல மஞ்சு மனது ஒத்து போகலேன்னா பிரிஞ்சிடுறாங்க..

இப்போ மேரஜ் ஆகுற பாதி பேருக்கு முதல் மேரஜ் லைப் பெயிலியர்ல தான் முடியுது.. பின் கொஞ்ச நாள் கழித்து செகண்ட் மேரஜ் செய்துக்குறாங்க… பெண்களுக்கும் இது பொறுந்தும் மஞ்சு..” என்று சொன்ன சந்தீப்…

மஞ்சுளா அறையில் இருந்த சன்னலை திறந்து… சரியாக ஜன்னலின் எதிரில் இருக்கையில் அமர்ந்து கொண்டு இருந்த துகிலனை காட்டி சந்தீப்..

“ அவர் தான் மாப்பிள்ளை.” என்று துகிலனை காட்டினான்…

துகிலனை பார்த்த மஞ்சுளாவின் கண்கள் வியப்பில் விரிந்து கொண்டது… சந்தீப்பின் கண்களுக்கு துகிலன் மட்டும் தான் தெரிந்தான்.

ஆனால் மஞ்சுளாவின் கண்களுக்கு துகிலன் பக்கத்தில் அமர்ந்து இருந்த நர்மதாவும் கண்களுக்கு தெரிந்தாள்…

அப்போதும் அவர்கள் பக்கம் பக்கம் அமர்ந்து கொண்டு இருப்பதில் தவறாக எல்லாம் நினைக்கவில்லை… இருவரின் அழகில் வியந்து தான் போனாள்… அப்படி ஒரு நிறம். அதுவும் ஏசி இல்லாது போனதில் இருவருக்கும் வியர்த்து கொட்ட தங்களிடம் இருந்த கை குட்டையில் முகத்தை துடைத்து கொண்டதில் இன்னுமே சிவந்து போய் இருந்தவர்களின் தோற்றத்திலும் பொலிவிலும்… அதுவும் பார்த்த உடன் தெரியும் அந்த பணக்கார தோரணையில்

மஞ்சுளாவுக்கு ஒரு சந்தேகம் வந்து விட்டது… பரப்பரப்பாக தம்பியின் பக்கத்தில் போய் அமர்ந்து கொண்டவள்..

“சந்தீப் உண்மையில் இவங்க நம்ம வீட்டிற்க்கு தான் பெண் பார்க்க வந்து இருக்கங்கலா… மாப்பிள்ளையை பார்த்தால் அவருக்கு கல்யாணம் ஆனது போலவே தெரியலையேடா..

அதோட அவங்களை பார்த்தாலே தெரியுது ரிச்சா.. நம்ம வீட்டிற்க்கும் அவங்களுக்கும் பொருந்தியே போகலையே டா…” என்று சந்தேகம் கேட்டாள்..

அவளுக்கு ஆண் பாவம் படத்தில் பாண்டியன் இடம் மாறி பெண் பார்க்க வந்து விட்டது போல வந்து விட்டார்களோ என்ற சந்தேகம்..

சந்தீப் மஞ்சுளாவின் சந்தேகத்தில் சிரித்து விட்டான். பின்.. “ இல்ல மஞ்சு உனக்கு அந்த சந்தேகமே வேண்டாம்… நேத்து வந்த தரகரும் கூட இருக்கார்..” என்று சந்தீப் சொல்லி கொண்டு இருந்த போது தான் மாலினி விறு விறு என்று அந்த அறைக்கு வந்தது.

அங்கு மகன் மகளோடு பேசி கொண்டு இருப்பதை பார்த்து…

“ஏன்டா மாப்பிள்ளை வீட்டாளுங்க கிட்ட பேசாம இங்கு என்ன உட்கார்ந்துட்டு உன் அக்கா கிட்ட கதை அளந்துட்டு இருக்க போ போய் மாப்பிள்ளை கூட பேச்சு கொடு…” என்று மகனை அனுப்பி விட்டு மகளின் கையில் காபியை கொடுத்த மாலினி…

“இரண்டாம் தாரம் எல்லாம் சொல்லாத படி தான் மாப்பிள்ளை இருக்கார்… மனசை பொட்டு குழப்பி கொள்ளாம அங்கு இருக்கிறவங்க கிட்ட இந்த காபியை கொடு புரியுதா…. இந்த இடம் அமைந்தால் உண்மையில் உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமச்சி கொடுத்தோம் என்ற நிம்மதி வரும் எங்களுக்கு.. உனக்கு அடுத்து சந்தீப்புக்கும் முடிச்சிடுவோம்.. மூன்று வருஷமா நாம படுற அவமானதுக்கு ஒரு முடிவு வந்தா போதும் என்று இருக்கு டி…” என்று சொல்லி மாலினி மகளின் கையில் காபி தட்டை கொடுத்தாள்..

இப்போது மஞ்சுளாவுக்கு ஒரு சந்தேகம். மாப்பிள்ளைக்கு தன்னை பிடிக்குமா…? என்று… மஞ்சுளா அவளின் பெயருக்கு ஏற்ற நிறத்தில் தான் இருப்பாள்.. பார்க்கவும் அழகான பெண்.. இந்த மூன்று வருடத்தில் பெண் அழகு இல்லை என்று எல்லாம் வரன் தழையாது தட்டி போகவில்லை.

அக்காவை போல தங்கை இருந்தால், அதற்க்கு ஏத்தது போல பார்க்கவும் அழகா வேறு இருக்கா. இப்படி தான் கல்யாணம் தட்டி சென்றது..

அதனால் மஞ்சுளா பெண் பார்க்க வருபவர்களின் முன் தன்னை பிடிக்க வேண்டும் என்று எல்லாம் அலங்கரித்து கொண்டு எல்லாம் நிற்க மாட்டாள்.. அதற்க்கு என்று மெனக்கெடவும் மட்டாள்.. இன்று இன்னுமே ஏனோ தானோ என்று தான் கையில் கிடைத்த புடவையை கட்டி கொண்டு கூடுதலாக கழுத்தில் ஒரு ஜெயின்.. வீட்டில் போட்டு கொண்டு இருக்கும் அந்த குட்டி ஜிமிக்கி. கையில் ஒரு ஒரு வளையல் இவ்வளவாக தான் இருந்தாள்..

மாலினியும் வந்தவர்களின் தோற்றம் ஆளுமை வசதி இதை எல்லாம் பார்த்து பதட்டம் ஆகி விட்டது.. கூடுதலாக தரகர் சொன்ன.

“உங்க பெரிய பெண் விசயம் எல்லாம் அவங்களுக்கு ஒன்னும் இல்ல என்று தான் சொன்னாங்க…” என்றதில்.

இந்த இடம் எப்படியாவது முடிந்து விட வேண்டும் என்ற பதட்டத்தில் இருந்தவர் மகள் உடை அலங்காரம் இதை எல்லாம் பார்க்க தவறினார்..

இப்போது பெண்ணவளின் மனமோ தனக்கு கொஞ்சம் ஐந்து நிமிஷம் அவகாசம் கொடுத்தால் போதும் கொஞ்சம் தன்னை சரிப்படுத்தி கொண்டு அங்கு போகலாம்.. ஆனால் அதை அம்மாவிடம் சொல்ல ஏதோ போல இருக்க.. அம்மா கொடுத்த காபி தட்டை எடுத்து கொண்டு ஹாலுக்கு வந்தாள்..

அவள் கூடத்திற்க்கு வந்ததும் நிமிர்ன்டு பார்த்தவளின் கண்ணுக்கு தெரிந்தது துகிலனும், நர்மதாவும் தலையை குனிந்து கொண்டு ஏதோ பேசிக் கொண்டு இருப்பதை தான்..

ஆம் இவள் பார்க்கும் போது பேசிக் கொண்டு தான் இருந்தனர்.. துகிலன் தான். “ என்ன நம்மூ பெண்ணை கூட்டிட்டு வர காணும்.. என்னால உட்கார முடியல. சேர் வேறு ஆடுது.. அதோட ரொம்ப ஹாட்டா ஸ்வெட்டிங்கா இருக்கு.” என்று எப்போதும் போல தான் நினைப்பதை உணர்வதை நர்மதாவிடம் சொல்வது போல இதையும் சொல்லி கொண்டு இருந்தான்.

அகிலன் பக்கத்தில் அமர்ந்து கொண்டு இருந்த விக்னேஷ்… “ என்ன அண்ணா…?” என்று கேட்டதற்க்கு மட்டும் அகிலன்.. “ நத்திங்க்…” என்று ஒரு வார்த்தையில் பதில் அளித்தான்..

கீழே அமர்ந்து கொண்டு இருந்த வைஷ்ணவி இதை எல்லாம் ஒரு நாடகம் போல தான் பார்த்து கொண்டு இருந்தாள்.. அதுவும் நர்மதாவின் மீது வைஷ்ணவியின் பார்வை படும் போது மட்டும் அத்தனை அணல்.. அந்த அணல் பொறாமையினால் வந்த அணல். மழை விட்டும் தூவானம் விடாது போல இருவருக்கும் விவாகரத்து ஆன பின்னும் இவள் இன்னுமே இந்த குடும்பத்தில் நாட்டாமை செய்வாளா….? உடைக்கிறேன்…

துகிலனும் நீயும் சேர்ந்து தேர்வு செய்த இந்த பெண்ணை வைத்தே உங்கள் இரண்டு பேரை பிரிக்கிறேன்… அகிலனோடு நர்மதா பிரிந்தால் மட்டுமே தன் மாமியார் வீட்டில் நர்மதாவின் அதிகாரம் செல்லா காசு ஆகும் என்பது வைஷ்ணவியின் எண்ணம். இவர்கள் இருவரையும் பிரிக்க. துகிலன் விரும்பி கட்டும் இந்த பெண்ணை வைத்தே தன் திட்டத்தை நிறை வேற்ற இப்போதில் இருந்தே திட்டம் வகுக்க ஆரம்பித்து விட்டாள்..

அதன் முதல் படியாக.. இத்தனை நேரமும் பெண் வர காணும் என்று நர்மதாவிடம் புலம்பி கொண்டு இருந்த துகிலன்.. தொழில் துறை முறையில் அவன் கை பேசிக்கு வந்த ஒரு மெயிலை அவளிடம் காண்பித்து தீவிரமாக எதோ பேசிக் கொண்டு இருக்கும் போது தான் அங்கு மஞ்சுளா வந்தது.. பாவம் வந்ததை துகிலனும் பார்க்கவில்லை… நர்மதாவும் கவனிக்கவில்லை…

வைஷ்ணவி அதை தனக்கு சாதகாக பயன் படுத்தி கொள்ள நினைத்தாள்…

“அத்தான் எப்போவுமே நீங்க நர்மதா அக்காவோடு தானே பேசிட்டு இருக்கிங்க. இன்னைக்கு உங்களுக்கு பெண் பார்க்க வந்த இடத்திலுமா…?” என்று ஒரு மாதிரி தான் சொன்னாள்.

பாவம் அவள் சொன்ன விதத்தை மஞ்சுளா வீட்டவர்கள் சாதாரணமாக தான் நினைத்து விட்டனர்… மஞ்சுளாவின் தந்தையிடம் துகிலனின் அப்பாவும் நர்மதாவின் அப்போவும் பேசிய வியத்தில் தொழில் இன்று அளவுமே இரண்டு குடும்பமும் சேர்ந்து தான் செய்கிறோம்…

இப்போ நாங்க பெரும் பாலும் பார்த்து கொள்வது இல்லை… துகிலனும் நர்மதாவும் தான் பார்த்து கொள்கிறான்.. என்ற இந்த பேச்சை அனைவரும் கேட்டதினால் பெண் வீட்டவர்கள் யாரும் தவறாக நினைக்கவில்லை..

ஆனால் தொழிலை ஒன்றாக பார்த்து கொள்கிறார்கள் என்று சொன்னவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து தான் ஒரு குழந்தையை பெற்ற விசயத்தை சொல்லி இருக்கலாம்.. ஒரு சமயம் இந்த விவரத்தை தரகர் சொல்லி இருப்பார் என்று மாப்பிள்ளை வீட்டவர்கள் நினைத்து விட்டார்கள் போல…

அதனால் தானோ என்னவோ… அதை பேசி இரு வீட்டவர்களிடன் மனநிலையை கெடுத்து கொள்ள வேண்டாம் என்று நினைத்து விட்டார்கள் போல..

இதோ வைஷ்ணவியின் இந்த பேச்சை மஞ்சுளா தவறாக எடுக்காது வைஷ்ணவியை பார்க்க. அதே சமயம் வைஷ்ணவியின் பேச்சில் துகிலன் நர்மதாவிடம் இருந்து பார்வையை சட்டென்று மஞ்சுளாவின் பக்கம் செலுத்தினான்..

பார்த்தவன் அவளை அப்படி ஒன்றும் பார்த்து கொண்டே எல்லாம் இருக்கவில்லை.. ஆனால் பார்த்த அந்த சொர்ப்ப வினாடியில் அவளை ஆழ்ந்து பார்த்து விட்டான் என்று தான் சொல்ல வேண்டும்.

இல்லை என்றால் அவள் அணிந்து இருந்த அந்த குட்டி சிமிக்கியில் ஒரு சிகப்பு கல் விழுந்து உள்ளது வரை கவனித்து இருக்க முடியாது தானே.

மஞ்சுளாவோ துகிலன் அவளை பார்க்கும் போது வைஷ்ணவியை பார்க்க.. வைஷ்ணவி சிரித்து கொண்டே.

‘மாப்பிள்ளை நான் கிடையாது அவர்.” என்று துகிலனை சுட்டி காட்டி சிரித்ததில் மெல்ல தலை நிமிர்ந்து அவனை பார்த்தாள்.. அவள் பார்க்கும் சமயம் இப்போது மீண்டுமே நர்மதாவிடன் தான் ஏதோ பேசிக் கொண்டு இருந்தான்…

நர்மதா தான் துகிலனின் விலா எலும்பில் ஒரு இடி இடித்தவள்..

“துகி பெண் உன்னை பார்க்கிறா நீ பார்த்ததை அவள் பார்க்கவில்லை போல….” என்று சொல்ல.

துகிலனோ… “ நான் பார்த்துட்டேன்.. அவள் என்னை நல்லா பார்க்கட்டும்.. நான் நிமிர்ந்தா என்னை அவள் எப்படி பார்ப்பா…?” என்று சொன்ன பேச்சு சரி தான்..

ஆனால் இது மற்றவர்களும் சரியாக புரிந்து கொள்ள வேண்டும் அல்லவா…? அவன் தன்னை பார்க்கவில்லையோ என்று நினைத்து மஞ்சுளாவின் மனது சுண்டி தான் போனது…

பின் மாலினி காபி கொடு என்று சொல்ல ஒரு வகையாக காபி கொடுத்து விட்டாள். நல்ல வேலை கை நடுக்கத்தில் யாரின் மீது கொட்டாது… கொடுத்து முடித்ததே அவளுக்கு ஒரு டாஸ்க்காக தான் போனது.

துகிலன் தான் எப்போ எப்போ இருந்தானே மஞ்சுளா அறைக்கு போவதற்க்கு முன்பே துகிலன் எழுந்து நின்று விட்டான். துகிலன் எழுந்ததுமே தொடர்ந்தார் போல நர்மதாவும் எழுந்து கொள்ள..

துகிலன் தான். “ இன்னும் ஹாப்னவர்ல ஒரு ஸ்டார் ஒட்டல்ல மீட்டிங்க இருக்கு ஆபிசுக்கு போய் அதுக்கு உண்டான டாக்குமெண்ட் எடுத்துட்டு ஓட்டலுக்கு போகனும்.. டைம் ஆகுது… மத்த விசயங்களை டாட் மாம் உங்க கிட்ட பேசுவாங்க அங்கிள்..” என்று ஷண்முகத்தை பார்த்து சொன்னவன்..

பின் தன் அம்மா அப்பாவை பார்த்து அனைவரின் முன் நிலையிலும்… “ அடுத்த முகூர்த்ததிலேயே டேட் புக்ஸ் பண்னிடுங்க…” என்று விட்டு நர்மதாவோடு சென்று விட்டான்..

உண்மையிலேயே இன்று அவனுக்கு ஒரு மீட்டிங்க இருக்கிறது தான்.. அந்த பிரஜெக்ட்டை துகிலனும்… நர்மதாவும் சேர்ந்து தான் செய்வது.

ஆனால் அது இரவு பத்து மணிக்கு மேல் தான் அதை ஏற்பாடு செய்து இருப்பது.. அனைத்துமே முடிந்தது போல் தான்.. முடிந்ததை கொண்டாட செலபரேட் செய்ய தான் இரவை தேர்ந்தெடுத்தது.. இப்போது செல்ல காரணம் உண்மையில் துகிலனால் அங்கு அமர முடியவில்லை…

தன் முகத்தை சாதாரணமாக காட்ட அத்தனை மெனக்கெட அவனால் முடியவில்லை.. அதனால் தான் அந்த பிராஜெக்ட்டை காரணம் காட்டி அகிலனும் நர்மதாவும் சென்று விட்டபர்..

வைஷ்ணவி அப்போதும் விடாது இருவரும் சென்ற பின்… “ அங்க இரண்டு பேரும் சேர்ந்து செய்த அந்த பிராஜெக்ட் முடிந்து விட்டது தானே விக்கி…” என்று சாதாரணமாக காட்டிய வாறு ஒன்றும் தெரியாதது போல் கேட்டாள்..

அதற்க்கு விக்னேஷ் பதில் அளிக்கும் முன்.. துர்கா.. “ நீ நம்ம ஆபிஸ் பக்கம் கூட எட்டி பார்ப்பது இல்ல… அப்படி இருக்க முடிந்தது.. முடியாதது எல்லாம் உனக்கு தெரியுமா.? என்று கேட்டவர்.. பின் அனைவரும் சேர்ந்து அடுத்த வாரத்தில் இருக்கும் ஒரு முகூர்த்த நாளில் திருமணத்தை எங்கள் குலதெய்வம் கோயிலில் வைத்து கொள்ளலாம்…

பின் அனைவரையும் அழைத்து ஒரு ஸ்டார் ஓட்டலில் ரிசப்ஷனை வைத்து கொள்ளலாம் என்று துகிலனின் குடும்பம் சொல்ல.. அதை மஞ்சுளா குடும்பமும் எந்த மறுப்பும் சொல்லாது ஏற்று கொண்டனர்..

அவர்களுக்கு மாப்பிள்ளையை பார்த்த பின் இந்த சம்மந்தத்தை விட மனது இல்லை…

பின் அனைத்தும் சுமுகமாக முடிந்து மாப்பிள்ளை வீட்டவர்களை வழி அனுப்பி வைத்தனர்…

போகும் வழியில் துகிலனின் அத்தை வசந்தி தான்.. “ எதுக்கு அண்ணி இவ்வளவு சீக்கிரமா மேரஜை வெச்சிட்டிங்க… ஒரு மண்டம் பார்த்து வைக்கலாம் தானே..” என்று கேட்டார்..

வசந்திக்கு ஒரு நப்பாசை.. திருமணம் தள்ளி வைத்தால், அதற்க்குள் தன் மகளும் துகிலனும் சேர வாய்ப்பு இருக்குமா என்று.. அவரால் இன்றும் மகளும் மாப்பிளையும் பிரிந்து விட்டார்கள் என்பதை ஏற்று கொள்ள முடியவில்லை…

யார் தான் ஏற்று கொண்டனர்.. அவர்கள் இருவருக்குள்ளும் சண்டை இல்லை.. சச்சரவு கிடையாது.. இன்றுமே இணை பிரியாது தான் இருக்கிறார்கள்.. ஆனால் சட்டத்தில் பிரிந்து விட்டோம் என்று ஒரு பேப்பரை காண்பித்தால், அந்த காலத்தவர்களுக்கு ஏற்று கொள்வது கடினமாக இருந்தது.

அதிலும் பெண்ணை பெற்ற வசந்திக்கு கேட்கவும் வேண்டுமா….? ஏதோ தெரியாது செய்து விட்டார்கள்… சேர்ந்து விடுவார்கள் என்று தான் நம்பினார்.. இத்தனை அவசரமாக துகிலன் திருமணம் செய்து கொள்ளுவான் என்பதை அவர் சிறிதும் எதிர் பார்க்கவில்லை…

எப்போதும் போல வைஷ்ணவிக்கு வசந்தி ஏன் இப்படி சொல்கிறார் என்பது புரிந்து விட்டது..

அதில்.. “ பெரியம்மா அத்தான் செகண்ட் மேரஜ் கிராண்டா வேண்டாம் என்று நினைக்கிறார் போல… அதோடு அது தான் கிராண்டா ஸ்டார் ஓட்டலில் ரிசப்ஷன் வைக்கிறோமே பெரியம்மா…” என்று சொன்னவள்/..

அடுத்து… “ இது ஒன்னும் அத்தையின் முடிவு கிடையாது பெரியம்மா… இங்கு வரும் முன்னவே வீட்டில் துகிலன் அத்தான் அத்தை கிட்ட. சீக்கிரம் மேரஜ் வைத்து விடுங்க. அப்புறம் ரிசப்ஷன் கிராண்டா செய்யலாம் என்று அவர் தான் சொன்னது.. உங்களுக்கு உங்க அண்ணன் மகனை பற்றி தெரியும் தானே பெரியம்மா அவர் ஒன்னு சொன்னா அது தான் நடக்கனும் என்று…

இது வரை வசந்தியின் மாப்பிள்ளையாக இருந்து துகிலன் இனி உனக்கு அண்ணன் மகன் மட்டும் தான் என்பதை தெளிவாக விளக்கி சொல்ல. வசந்தி வைஷ்ணவியை முறைத்து பார்த்தாலும் ஒன்றும் சொல்லவில்லை. ஒரு வகையில் அவள் சொல்வது போல் தானே.. துகிலனின் பேச்சை தானே இரு குடும்பமும் கேட்கும்.. ஆனால் இவள் இப்படி முகத்தில் அடித்தது போல சொல்லுவாளா என்று அவளை முறைத்து பார்த்தவர் மனதில்..

நம்ம பொண்ணு தொழிலில் காட்டும் இந்த விவரத்தை வாழ்க்கையில் காண்பிக்கவில்லையே என்று தான் இருந்தது..

வசந்தி ஒன்றும் வைஷ்ணவியை சொல்லவில்லை என்றாலும், துர்கா.. “ உன்னை அண்ணி கேட்டாங்கலா… எப்போவும் நீ ஏதோ இந்த குடும்பத்திற்க்கும் உனக்கும் சம்மந்தம் இல்லாதது போல தான் இருப்ப.. ஆனா துகிலனின் இந்த மேரஜ் விசயத்தில் நீ ஏன் இவ்வளவு ஆர்வம் காட்டுற. எனக்கு புரியலையே...?” என்று மருமகளின் குணம் தெரிந்து தான் கேட்டார்.

அதற்க்கு .” என்ன அத்த நான் பாட்டுக்கு இருந்தாலுமே உனக்கு இந்த குடும்பத்தின் மீது அக்கறை இல்லை என்பது போல பேசுறிங்க. இப்போ நானே இன்வாலவ் ஆனாலுமே இப்படி சொல்றிங்க. போங்க அத்த..” தான் கோவித்து கொள்வது போல பேசி தப்பிக்க நினைத்தாள் வைஷ்ணவி.

ஆனால் துர்கா நான் எத்தனுக்கும் எத்தன் என்பது போல. “ உன் இன்வால்மெண்டை உன் புருஷன் பிசினசில் காமிம்மா. ஏன்னா உன் புருஷனும் பிசினஸை பார்க்காது இன்னுமே பேச்சிலர் லைப் எஞ்சாய் பண்ணிட்டு இருக்கான்.. நீயுமே உனக்கு கல்யாணம் ஆனதை மறந்து உன் அம்மா வீட்டிலேயே மாசத்துக்கு பாதி நாள் உன் அம்மா வீட்டில் போய் உட்கார்ந்துக்குற… வீட்டில் இருக்கும் அந்த பாதி நாளுமே உன் அம்மா கூட போனில் பேசிட்டு இருக்க…. உனக்கு கல்யாணம் முடிந்து ஒரு பொண்ணும் இருக்கா…. அதை நான் உனக்கு அப்போ அப்போ நியாயபம் படுத்த வேண்டி இருக்கு….”

வாய்ப்பு கிடைக்கும் போது எல்லாம் வைஷ்ணவியை வைத்து செய்வது போல துர்கா இன்றும் பேச.

வைஷ்ணவிக்கு அய்யோ என்று போனது…

“அத்தை இப்போ என் கல்யாணம் எனக்கு குழந்தை அதை எல்லாம் விடுங்க. துகிலன் அத்தான் கல்யாணத்திற்க்கு இன்னுமே ஒன் வீக் தான் இருக்கு அந்த வேலையை பார்க்கலாம்.. இதோ வீடும் வந்து விட்டது பாருங்க. கோயில் என்றாலும் மஞ்சுளாவுக்கு நல்லதா நகை எடுக்கனும்.. இன்னைக்கு போட்ட நகை பழசு தான். என்ன இருக்கு இல்ல என்று தெரியல.. அதோட புடவை… தாலி ..” என்று வைஷ்ணவி அடுக்கி கொண்டே போக..

துர்கா. “ நீ துகிலன் கல்யாணத்தில் இத்தனை ஆர்வம் காட்டுவது தான் ஏன் என்று புரியல…” என்று சொல்லி தான் துர்கா காரை விட்டு இறங்கியது..

இதோ இந்த காரணம் தான். நர்மதா சொந்த அண்ணன் பெண்.. நாத்தனார் பெண்.. அதோடு பக்கம் பக்கம் வீடு தொழிலிலும் பார்ட்னர்.. சின்ன வயதில் இருந்து கூடவே துர்காவும் சேர்ந்து தான் நர்மதாவை வளர்த்தது..

இவை அனைத்தையும் விட துகிலனின் நெருங்கிய தோழி… இத்தனை இவர்களுக்கு நெருக்கமான நர்மதாவை அந்த வீட்டிற்க்கு மூத்த மருமகளாக எடுத்து விட்டு..

வைஷ்ணவியோ சொந்தம் இல்லாது.. அவர்கள் இனமும் இல்லாது விக்னேஷ் காதலித்ததால் இந்த வீட்டிற்க்கு இரண்டாம் மருமகளாக வந்தவள்.. அவள் இந்த வீட்டிற்க்கு வர ஒரே தகுதியாக இருந்தது.. அவள் வீட்டிற்க்கு ஒரே பெண்.. அதோடு வசதி…

விசாரித்ததில் நல்ல மாதிரி சொல்லவும் தான் தன்னை விக்னேஷுக்கு திருமணம் செய்து வைத்தது என்பது வைஷ்ணவிக்கு தெரியும்…

அதனால் அது என்னவோ தான் என்னவோ அந்த வீட்டில் மருமகளாக பார்க்காது எட்டவே நிற்க வைப்பது… ஆனால் நர்மதாவை கொண்டாடி தீர்ப்பது…

இவர்கள் என்ன சமையல் செய்யும் பெண்மணி கூட தான் ஏதாவது ஆசைப்பட்டு இதை சமை என்று சொன்னால், அது சமைத்து வைக்க மாட்டாங்க..

ஏன் சமைக்கல என்று கேட்டால், அவர்கள் காட்டும் காரணம் நர்மதாவாக தான் இருக்கும்.. இவர்களின் தொழில் சம்மந்தமானவர்கள் ஏதோ பாரினராம் அவர் இந்திய புட் அதுவும் வீட்டு சாப்பாடு சாப்பிட ஆசைப்படாங்கலாம்..

இன்னைக்கு போகும் போது நர்மதா அம்மா மெனு சொல்லிட்டு போயிட்டாங்க.. இத்தனை செய்து இருக்கேன். நீங்க சொன்னதை நாளைக்கு செய்து கொடுக்கிறேன் என்று சொல்லி விடுவாள்…

இதில் அவளுக்கு அந்த உணவை சாப்பிடும் ஆசையே போய் விடும்..

இதை பற்றி கணவனான விக்னேஷிடம் சொன்னால் கூட.. அதுவும் தொழிலில் சம்மந்தப்பட்டவர்கள் என்ற வார்த்தை சொல்லி விட்டால் போதும்…

“ வைஷூ பேபி உனக்கு நம்ம பிசினஸ் பத்தி ஒன்னும் தெரியாது.. ஆனா நர்மதாவுக்கு எல்லாம் தெரியும்… யாரை யாரை எப்படி ஹான்டில் செய்தா நமக்கு நல்லது என்று அவங்களுக்கு புரியும் டா செல்லம்… உனக்கு என்ன வேண்டும் என்று சொல் ஆர்டர் போட்டு வாங்கி கொடுக்கிறேன்.. இது ஒரு சில்லி மேட்டர் இதுக்காக எல்லாம் வீட்டில் பிரச்சனை வேண்டாமே.. அதோட நர்மதா உன்னை பத்தி ஏதாவது பேசுறாங்கலா..?” என்று கேட்டு தன் வாயை தான் அடைத்து விடுவான்..

“நர்மதா ஏன் பேச போறா… அவளை தான் எல்லோரும் தலை மீது வைத்து கொண்டாடுறாங்கலே.. என்னை பார்த்து வேணா அவங்க பாவம் படலாம். வீட்டில் ஒரு மூலயில் இருப்பதை பார்த்து…” இப்படி சொன்னால் கூட விக்னேஷ் சட்டை செய்ய மாட்டான்… காரணம் அவன் ஒரு சோம்பேறி.. சமயத்திற்க்கு இவன் ஏதாவது சொதப்பி வைத்து விட்டால், துகிலனும் நர்மதாவும் தான் சரி செய்து கொடுத்து விடுவார்கள்.. அப்படி இருக்க இவன் எங்கு அவர்களை எதிர்த்து பேச போகிறான்..

வைஷ்ணவிக்கு இந்த வீட்டிற்க்கு மருமகளாக வந்த நாள் முதலாகவெ நர்மதாவை எப்படி எதிர்ப்பது என்று இருந்தவளுக்கு, அவளே இந்த வீட்டையும் துகிலனின் உறவையும் விட்டு போவதாக சொன்னதில் யப்பா அப்படி ஒரு நிம்மதி ஏற்பட்டது வைஷ்ணவிக்கு.. காரணம் நர்மதாவுக்கு எதிராக அந்த வீட்டில் ஒரு துரும்பை கூட எடுத்து அவளாள் போட முடியவில்லை.

தாஉ வீட்டில் அவள் ஒரு இளவரசியாக இருந்து விட்டு புகுந்த வீட்டில் பத்தோடு பதினொன்றாக இருக்கவும் அவளுக்கு விருப்பம் இல்லை…

அவளே போகிறாள் என்றதில் நிம்மதி அடைந்தவளுக்கு இன்னுமே மாமியார் வீட்டில் அவளின் ஆதிக்கம் தான் கொடி கட்டி பறப்பது பிடிக்கவில்லை…

துகிலனுக்கும், நர்மதாவுக்கும் விவாகரத்து ஆனாலுமே அவளை பொறுத்த வரை எதுவும் மாறவில்லை… அதற்க்கு காரணம் துகிலன் தான் அந்த வீட்டில் எல்லாமாக இருப்பவன்… வீட்டின் மூத்த மகன்.. என்று மரியாதை.. அதற்க்கு உண்டான திறமையும் அவனுக்கு இருக்கிறது.. அவனை கொண்டாடுங்கள்.. வைஷ்ணவி அதை பெரியதாக எடுத்து கொள்ளவில்லை.

ஆனால் துகிலோடான நர்மதாவின் இந்த பிணைப்பு தான் விவாகரத்து ஆனாலுமே நர்மதாவுக்கு இந்த வீட்டில் மதிப்பு இருக்கிறது என்பதை புரிந்து கொண்ட வைஷ்ணவி. துகிலனையும் நர்மதாவையும் பிரித்து விட்டால் போதும்… நர்மதாவுக்கு தன் புகுந்த வீட்டில் இருக்கும் இந்த மதிப்பு கொடுக்கப்படும் மரியாதை காணமல் போய் விடும்..

எப்படி பிரிப்பது…? துகிலனையும் நர்மதாவையும் பிரிக்க வைஷ்ணவி கையில் கிடைக்க போகும் துருப்பு சீட்டு தான் மஞ்சுளா…

ஆம் மஞ்சுளாவை வைத்து தான் நர்மதாவுக்கு அந்த வீட்டில் கொடுக்கப்படும் மரியாதையை தடுத்து இனி அது தனக்கு கொடுக்கப்பட வேண்டும் என்பது தான் அவளின் எண்ணம்…

மஞ்சுளாவை எளிதாக குழப்பி விட்டு தான் நினைத்ததை நடத்தி முடித்து விடலாம்… என்பதை வைஷ்ணவி நம்பினாள்..

எந்த மனைவி தான் தன் கணவன் முன் நாள் மனைவியோடு இன்றுமே ஜோடி போட்டு சுத்தி கொண்டு இருப்பதை பார்த்து கொண்டு சும்மா இருப்பாள்…

வைஷ்ணவியின் திட்டம் பலிக்குமா…? மஞ்சுளா வைஷ்ணவியின் இந்த திட்டத்தில் மாட்டிக் கொண்டு தன் வாழ்க்கையை சிக்கலாக்கி கொள்வாளா…? இல்லை தனக்கு கணவன் மீது ஒரு சந்தேகம் வந்ததுமே அதை கணவனிடமே கேட்டு அந்த சந்தேகத்தை தீர்த்து கொண்டு.. தன் வாழ்க்கையை காப்பாற்றி கொள்வாளா.? பார்க்கலாம்..

ஆனால் துகிலனின் குடும்பம் மஞ்சுளா குடும்பத்திடம் கடைசி வரை நர்மதா தான் துகிலனின் முதல் மனைவி என்பதை தெரிவிக்காதே… துகிலன் மஞ்சுளாவின் திருமணத்தை முடித்து விட்டனர்..

துகிலன் குழந்தையை கூட மஞ்சுளா கல்யாணத்தின் அன்று அவர்கள் குல தெய்வம் கோயிலில் தான் முதன் முறையாக பார்த்ததும்…








 
Well-known member
Joined
Jun 1, 2024
Messages
144
நர்மதா யாருன்னு சொல்லி இருக்கணும்..... ஒரே வீட்ல இருக்கப் போறப்போ உண்மையை சொல்லாம விட்டது தப்பு.....

மஞ்சு வைஷ்ணவி வலையில விழாம தப்பணும் அதுக்கு துகிலனும் அவளை சரியா நடத்தணும்..
 
Top