அத்தியாயம்…7
மஞ்சுளாவுக்கு திருமணத்திற்க்கு தேவையான அனைத்துமே வாங்கும் வேலையில் அவள் குடும்பம் மிக மும்முரமாக ஈடுப்பட்டு கொண்டு இருந்தது… சந்தீப் ஒரு வாரத்திற்க்கு வேலைக்கு விடுப்பு கொடுத்து விட்டான்…
அதே வாரத்தில் திருமணம்.. என்ன தான் எளிய முறையில் மாப்பிள்ளை வீடு அவர்கள் குலதெய்வ கோயிலில் செய்வதாக சொன்னாலுமே, பெண்ணுக்கு என்று பொருட்கள் வாங்க வேண்டும் தானே…
திருமணத்திற்க்கு உறவுகளை அழைக்க வேண்டும்… முக்கியமானவர்களுக்கு மட்டும் நேரில் சென்று அழைக்கலாம் மற்றவர்களுக்கு வாட்சாப்பில் சொல்லி விடலாம் என்று குடும்பம் முடிவு செய்தது…
உறவு முறைகளை அழைக்கும் பொறுப்பை ஷண்முகம் எடுத்து கொண்டார்… திருமணம் என்றால் வீட்டில் பூஜை செய்ய வேண்டும். நாட்கள் இல்லை..
பெண்ணை பார்த்து சென்ற மறுநாளே நல்ல நாளாக இருக்க… மாலினி அன்றே திருமணத்திற்க்கு முன் செய்யும் பூஜைகள் மூன்று நாட்களில் செய்து முடித்து விட்டாள் மகனின் உதவியோடு…
இப்போது பெண்ணுக்கு திருமணத்திற்க்கு என்று ஒரு சிலது வாங்க வேண்டிய வேலைகள் மட்டும் தான்…
மஞ்சுளாவிடம் இருக்கும் நகைகள் அனைத்துமே முன்பே வாங்கி வைத்தது.. இத்தனை சவரன் போட வேண்டும் என்ற கணக்கில், சேதாரம் குறைந்த நகைகளை தான் மாலினி எடுத்து வைத்து இருந்தார்…
பெரும் பாலோர் மத்தியவர்க்கத்தினர் நகைகளை ஒன்று முதலீடாக வாங்கி வைப்பர்.. இல்லை என்றால் பெண்களுக்கு திருமணம் செய்யும் சமயம் நகைகளை கணக்கு காட்ட வேண்டும் என்று வாங்குவர்..அதனால் பணம் எதில் குறைவோ.. அதை தான் பெரும்பாலோர் தாய் மார்கள் வாங்குவார்கள்.. அவர்களுக்கு தங்கம் வீட்டில் சேர வேண்டும் அவ்வளவே…
மாலினியும் அதே வகையை சார்ந்தவர் தான்.. முன்.. எல்லாம் மஞ்சுளா.. முன் என்றால் மூன்று ஆண்டுகளுக்கு முன் எல்லாம் மகளை கல்லூரிக்கு அனுப்பி விட்ட பின் அவரே சென்று தான் மஞ்சுளாவுக்கு நகையை வாங்கி சாமீ அறையில் வைப்பவர்..
மகள் வீடு வந்த போது தான்… “ மஞ்சு சாமீ ரூமில் உனக்கு நகை வாங்கி வைத்து இருக்கேன் பாரு… எப்படி இருக்கு என்று பார்த்துட்டு பத்திரமா என் பீரோவில் வைத்து பூட்டிட்டு எப்போதும் வைக்கும் இடத்தில் சாவீயை வை.. உன் அப்பா வந்தா உன் அப்பா கிட்டேயும் நகையை காட்ட வேண்டும்..” என்று சொல்லும் தாயை குறையாக பார்த்து கொண்டு தொம் தொம் என்று தன் கோபத்தை தரை மீது காட்டி கொண்டு பூஜை அறைக்கு சென்று தன் அம்மா வாங்கி வைத்த நகையை எடுத்து பார்ப்பாள் மஞ்சுளா..
அவள் நினைத்தது போலவே தான் அந்த நகையின் வடிவம் அவளுக்கு பிடிக்கவில்லை..
அந்த கோபத்தில் நகையை எடுத்த இடத்திலேயே வைத்து விட்டு மீண்டும் தொம் தொம் என்று தரை அதிர நடந்து வரும் பெண்ணை பார்த்து மாலினி.
“உனக்கு எத்தனை முறை சொல்றது மஞ்சு இது போல தரை அதிர நடக்க கூடாது..” என்று கண்டித்த போது மஞ்சுளாவும் மூக்கு விரைத்து கொண்டு…
“உங்களுக்குமே நான் எத்தனை முறை சொல்றது ம்மா எனக்கு என்று நகை வாங்கினா என்னை கூட்டிட்டு போய் வாங்குங்க என்று.. என் பிரன்ஸ் போட்டுட்டு வரது எல்லாம் எவ்வளவு நல்லா இருக்கும் தெரியும்மா..?” என்று கோபத்துடன் தொடங்கும் மஞ்சுளாவின் பேச்சு கடைசியில் ஆதங்கத்துடன் முடிவடையும்…
அப்போது எல்லாம் மாலினி மஞ்சுளாவை சமாதானம் செய்ய வேண்டி.. “ சரி சரி அடுத்த தடவை வாங்கும் போது உன்னையும் கூட்டிட்டு போறேன்..” என்று சொல்லும் மாலினி அடுத்த முறையும் மகளை அழைத்து செல்லாது தனியாக தான் சென்று வாங்கி வருவாள்..
மகள் சொல்லும் அந்த அழகிய டிசைனுக்கு எத்தனை சதவீதம் சேதாரம் கொடுக்க வேண்டும் என்று தெரிந்ததால், அப்படி மகள் கேட்டும் அழைத்து செல்லாத மாலினி இன்று மகளுக்கு வாங்கி வைத்த அத்தனை நகைகளையுமே ஒரு பெரிய கை பையில் எடுத்து கொண்டவள் சந்தீப்பிடம்…
“இவ்வளவு நகை கொண்டுட்டு போறோம் பொம்பளைங்க மட்டும் போறோம் நீயும் வாடா…” என்று அழைத்தவர் மகளின் அறைக்கு சென்று பார்த்த போது மகள் எப்போதும் வீட்டில் உடுத்தும் உடையிலேயே இருப்பதை பார்த்த மாலினி.
“ என்ன டி உனக்கு பிடித்தது போல டிசைனில் நகை வாங்கிட்டு வரலாம் என்று காலையில் சொன்னேன் தானே டி.. நான் உன் கிட்ட சொல்லிட்டு போய் மதியத்துக்கு உங்க அப்பாவுக்கு சாப்பாடு செய்து வெச்சிட்டு நானுமே ரெடியாகி வந்துட்டேன்.. நீ உட்கார்ந்த மேனிக்கு அப்படியே இருக்கே.. கல்யாணத்திற்க்கு இன்னுமே இரண்டு நாள் தானே டி இருக்கு….”
அன்னையின் இத்தனை பேச்சுக்கும் மஞ்சுளா தலையை குனிந்து கொண்டு தன் நகை கண்ணை பார்த்து கொண்டு இருந்தவள் மாலினியின் கடைசி பேச்சான கல்யாணத்திற்க்கு இன்னும் இரண்டு நாள் தான் உள்ளது என்றதில் சட்டென்று நிமிர்ந்து தன் அன்னையை பார்த்தவளின் கண்களில் அத்தனை கலக்கம் தெரிந்தது..
பாவம் வேலைகள் வரிசை கட்டி மாலினியின் மனதையும் மூளையும் ஆக்கிரமித்து கொண்டதால், மகளின் கலக்கமான கண்ணை கவனிக்க தவறி விட்டார்.
அதனால் தான் மஞ்சுளா சொன்ன…. “ இல்லேம்மா இருக்கும் நகையே போதும்மா… எதுக்கு வீண் செலவு.” என்று சொன்னதை தங்களுக்கு செலவு வைக்க கூடாது என்று தான் மகள் வர மறுக்கிறாள் என்று நினைத்து.
“முன் உங்க அப்பா ரிட்டையர் ஆனால் வரும் பணத்தில் வீடு கட்டனும் என்று நினச்சிட்டு இருந்தேன் டி.. அதனால தான் எதுல மிச்சம் பிடிக்கலாம் என்று தான் உனக்கு நகை வாங்கும் போது எல்லாம் பார்த்து பார்த்து வாங்கினேன்..
ஆனா இப்போ இதோ இந்த இடம் இருக்கு… வேண்டும் என்றால் உன் தம்பியும் உன் தம்பி பொண்டாட்டியும் லோன் போட்டு வீடு கட்டிக்கட்டும்.. நீ போற இடத்துக்கு ஏத்தது போல கொஞ்சம் நகையாவது வாங்கி கொடுத்து அனுப்புறேன்.. அதோட உன் அப்பா அவர் கார்ட்டை கொடுத்து விட்டு இருக்காரு டி, உனக்கு வைர மூக்குத்தி கம்பல் மோதிரம் வாங்கி கொடு என்று…
உன்னை பெண் பார்க்க வந்த அன்னைக்கு அந்த வீட்டு பெண்கள் எப்படி வந்து இருந்தாங்க என்று பார்த்த தானே… நீயும் கொஞ்சம் அவங்க கூட வெளியில் போனா மதிப்பா போக வேண்டாம். அதுக்கு தான் வா…” என்று இத்தனை சொல்லி அழைத்துமே பெண்ணவள்..
“வேண்டாம்..” என்று உறுதியாக மறுத்து விட்டாள்..
மாலினி தான். “ நான் பெத்தது எல்லாமே என் பேச்சை கேட்காது இப்படி தான்தோன்றி தனமா இருந்தா நான் என்ன செய்வேன்…”
மஞ்சுளாவை பெண் பார்த்து விட்டு சென்ற மருநாளே சந்தீப் விரும்பும் பெண்ணான மைதிலியின் அப்பா ஷண்முகத்திற்க்கு பேசியில் அழைத்து இவர்களின் காதல் விசயத்தை சொல்லி விட்டார்…
“நீங்க என்ன சொல்றிங்க.. எனக்குமே விருப்பம் இல்லை தான்.. ஆனா எங்க வீட்டு பெண் உறுதியா நிற்கிறா… நீங்க என்ன சொல்றிங்க.. உங்க முடிவை வைத்து தான் நான் அடுத்து என்ன என்று யோசிக்கனும்…” என்று கேட்டவரிடம் ஷண்முகம் என்ன என்று சொல்லி விட முடியும்.. சம்மதம் என்று சொல்வதை தவிர. சொல்லி விட்டார்.. என் மகளுக்கு கல்யாணம் முடிந்த பின் முறையா பேசலாம் என்று..
அவருமே. “ ம் என் மகள் மைதிலியுமே சொன்னா..” என்று விட்டார்.
வளர்ந்த மகன்.. அந்த பெண்ணை தான் திருமணம் செய்வேன் என்று நிற்கும் மகனை என்ன செய்வது.. வேறு வழி இல்லாது ஒத்து கொண்டு விட்டனர்…
மாலினி தான்… “ உன்னை விட ஒரு வயசு இருந்தாலும் மஞ்சு பெரியவள் டா… அவள் கல்யாணம் வரையாவது காத்து இருப்பா… அவள் தான் ஓடி போய் இவளுக்கு வினையை வைத்து விட்டு போனா நீயுமே உன் பங்குக்கு எங்க தலை மீது கல்லை போட்டு விடாதாப்பா…” என்று சொல்லி விட்டாலுமே.. இது போல இந்த மூன்று நாட்களும் பேசிக் கொண்டு தான் இருக்கிறார்..
கடைசியாக மாலினி சந்தீப்பை அழைத்து தங்களிடம் இருக்கும் நகைகளை அனைத்தும் மாற்றி புது நகைகளாக வாங்கி கொண்டு ஷண்முகம் சொன்னது போல வைரத்திலான கம்மல் மூக்குத்தி மோதிரம் வாங்கி வீடு வந்து சேர்ந்தார்…
மாலினி இந்த முறை பணத்தை பற்றி எல்லாம் யோசிக்கவே இல்லை… இரண்டாம் தாரம் என்றாலுமே நல்ல இடமாக வந்து உள்ளது.. பெரிய பெண் தான் இப்படி தங்களை அசிங்கம் செய்து சென்று விட்டாள்.. மகன் இப்போதே காதல் என்று வந்து நிற்கிறான். அந்த பெண் எப்படி பட்டவளோ… அதுவும் தன்னை விட ஒரு வயது சின்ன பையன் என்று தெரிந்தே காதலிப்பவளின் மீது மாலினிக்கு நல்ல ஒரு அபிப்பிராயம் எழவில்லை.
மிஞ்சி இருப்பது மஞ்சுளா…. மஞ்சுளாவை நல்ல முறையில் வாழ வைத்து அவள் மூலம் ஒரு பேரனோ பேத்தியோ பார்த்து விட்டால் போதும், முதல் பேத்தியான தீஷாவை தான் ஏதோ பக்கத்து வீட்டு குழந்தை போல தள்ளி நின்று ஒளிந்து மறைந்து பார்ப்பது போலான நிலை.. மஞ்சு குழந்தையாவது உரிமையுடன் கொஞ்ச வேண்டும்.. ஐம்பதை தொட்ட பெரும் பாலோர் பெண்மணியின் ஆசை இதுவாக தானே இருக்கும்..
ஆனால் மஞ்சுளா இதற்க்கு எதிர் பதமாக அவளின் நினைவு முழுவதுமே துகிலனின் குழந்தை தான் நிறைந்து இருந்தான்.
எல்லோரும் வந்தாங்க.. தரகர் சொன்னதாக அம்மா தன்னிடம் சொன்ன..
குழந்தை அப்பா கிட்ட தான் இருக்கும் என்று தான் கோர்ட்டில் சொல்லி இருக்காங்க போல… முதல் சம்சாரம் குழந்தையின் பொறுப்பை ஏற்று கொள்ளவில்லை போல… அதனால குழந்தையின் பொறுப்பு உன்னுடையது தான் மஞ்சு ஆம்பிள்ளை பையனாம்.. நான்கு வயது தான் ஆகுதாம்… நம்ம தீஷா போல தானே நல்லப்படியா பார்த்து கொள்ளும்மா….” என்று சொன்ன தாயின் பேச்சுக்கு உண்மையில் மஞ்சுளா மனது நிறைந்து தான்.
“கண்டிப்பா நான் நல்லா பார்த்துப்பேன் ம்மா..” என்று சொன்னது…
ஆனால் நல்லா பார்த்துப்பேன் என்று சொன்ன அந்த குழந்தையின் பெயர் கூட பாவன் மஞ்சுளாவுக்கு தெரியப்படுத்தவில்லை… அம்மாவிடம் கேட்க. பாவம் மாலினிக்குமே தெரியவில்லை…
“சம்மந்தி கல்யாண வேலையாக போன் செய்தா கேட்கிறேன் மஞ்சு…” என்று சொன்ன மாலினிக்கு இது வரை துகிலனின் அன்னை துர்கா கல்யாண சம்மந்தமாக இரண்டு முறை தான் அழைத்து பேசியது..
இரண்டு முறையும் அவர்கள் பேசும் போது மாலினி… “ ம் சரிங்க அப்படியே செய்துடலாம்.. சரிங்க சரிங்க…” என்று தான் பேசி வைத்தது.
பாவம் மாலினி துர்காவின் அந்த அதிகார பேச்சில், துர்காவும் அதிகாரமாக பேச வேண்டும் எல்லாம் பேசவில்லை.. மகன் வளர்வதற்க்கு முன்பு கணவனுக்கு துணையாக துர்காவுமே தொழிலை பார்த்து கொண்டவர்.. மகன்கள் வளர்ந்ததும் ஒதுங்கி கொண்டு விட்டார்.. அந்த ஆளுமை இப்போதும் அவரின் பேச்சில் இருக்கும்..
துர்காவின் பேச்சுக்கு அனைத்திற்க்கும் சம்மதம் சொன்ன மாலினி மகளிடம் சொன்னது போல துகிலனின் மகனின் பெயரை கேட்க வேண்டும் என்று நியாபகத்தில் கூட அவருக்கு வரவில்லை..
பின் மாலினி.. “ கல்யாணத்திற்க்கு அன்னைக்கு தெரிந்து விட போகுது..” என்று விட்டார்,..
இந்த ஒரு வாரமாக மஞ்சுளாவுக்கு இந்த திருமணம் சரி வருமா..? பெரியதாக ஆசைப்படுகிறோமே அது நல்லதா. மாப்பிள்ளையின் அம்மாவிடம் சாதாரணமாக குழந்தையின் பெயரை கூட கேட்க இத்தனை யோசிக்கும் தன் தாய் வீட்டவர்கள் நாளை ஏதாவது பிரச்சனை என்று வந்தால், என்ன செய்வது…? என்று எல்லாமாக யோசித்து மிகவும் குழம்பி போய் விட்டாள்..
ஆனால் இதை அனைத்தையும் மீறி துகிலனை அவளுக்கு பிடித்து இருக்கிறது என்பது அப்பட்டமான உண்மை… ஆனாலுமே பிடித்ததையும் மீறி தயக்கம். இது சரியாக வருமா.? வராதா..? என்று…
அன்று துகிலன் பக்கத்தில் அமர்ந்து இருந்த பெண் எவ்வளவு வெள்ளையாக இருந்தாங்க. அதோட அவங்க இரண்டு பேரும் பேசும் பேச்சு தொழில் முறை பேச்சு என்று புரிந்தது… அதில் அவர்கள் பேசியது எல்லாம் ஆங்கிலத்தில் தான்.. அதுவும் லண்டன் ஆங்கிலம் பாவம் ஆங்கிலம் ஒரு மொழியாக மட்டும் படித்து பாஸ் ஆனால் போது என்று படிப்பை முடுத்தவளுக்கு அவர்கள் பேசியதில் பாதி புரியவில்லை..
மெதுவாக பேசி இருந்தால் புரிந்து கொண்டு இருந்து இருப்பாளோ.. என்னவோ…. அவர்கள் பேசிய ஸ்பீடில் பாவம் புரியாது போய் விட்டது.. ஒரு சமயம் படிப்பை முடித்து வேலைக்கு சென்று இருந்தால் ஐடி வேலை அவளுக்கு ஆங்கிலத்தை கூடுதலாக கற்று கொடுத்து இருந்து இருக்குமோ…
நர்மதாவின் அந்த மாடல் தோற்றம். பேசிய ஆங்கிலம் என்று நர்மதாவை அவர்கள் வீட்டு உறவுக்கார பெண் என்ற பட்சத்திலேயே மஞ்சுளாவுக்கு தன்னை பற்றியதான ஒரு தாழ்வு மனப்பான்மை உருவாயிற்று…. பாவம் நர்மதா உறவுக்கார பெண் என்ற அளவில் தெரிந்தே தன்னை அந்த பெண்ணோடு ஒப்பிட்டு தாழ்வாக நினைத்து கொண்டவள் அவள் உறவுக்கார பெண் என்று மட்டும் கிடையாது முன் அவனின் அனைத்திற்க்கும் உரிமையாக இருந்த அவளின் முன் நாள் மனைவி என்று தெரிய வந்தாள்….