Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Puthiyathoru Jodi...9

  • Thread Author
அத்தியாயம்….9

மஞ்சுளாவுக்கு நர்த்தகன் தான் துகிலனின் குழந்தை என்று தெரிந்ததில், தன்னிடம் ஏன் அறிமுகம் செய்யவில்லை… இனி குழந்தைக்கு நான் தானே அம்மா… பார்த்ததும் இது போல யாரோ போல் தள்ளி நின்றாள் … எப்படி குழந்தைக்கும் தனக்குமான பிணைப்பு ஏற்படும் என்று மனது நினைத்து கொண்டே கண்கள் குழந்தை யாரை போல இருக்கிறது என்று குழந்தையின் முகத்தை உற்று பார்த்து கொண்டே. கணவன் இனி தன்னிடம் குழந்தையை பற்றி சொல்லுவான்..

இல்லை என்றால் குழந்தையிடம் தன்னை பற்றி சொல்லுவான்.. என்னை என்ன என்று சொல்லுவான்… அம்மா என்றா சித்தி என்றா.. இத்தனையும் மனதில் நினைத்து கொண்டே மஞ்சுளா ஒரு வித ஆர்வமாக குழந்தையை பார்க்கும் போது தான் குழந்தை மம்மி ஐஸ் க்ரீம் சாப்பிட கூடாது என்று சொல்றாங்க…

முகத்தை சுருக்கி தந்தையிடம் அன்னையை பற்றி புகார் சொல்வது போல சொல்வதை பார்ப்பதற்க்கு ஒரு கவிதை போல் தான் இருந்தது..

ஆனால் அந்த கவிதையை ரசிக்கும் மனநிலையில் மஞ்சுளா இல்லை.. மம்மியா. அப்போ துகிலனின் முதல் மனைவி இந்த கல்யாணத்திற்க்கு வந்து இருக்காங்கலா.. மஞ்சுளாவுக்கு அத்தனை ஆச்சரியம்.. அதோடு யார் அது என்று பார்க்கவும் மனது பர பரத்து இருந்தது…

ஆனால் யாரும் காணாது யாரை குறிப்பிடுகிறான் என்று மஞ்சுளா மீண்டும் குழந்தை துகிலன் பக்கம் பார்வையை செலுத்தும் போது.. தான் துகிலன் நர்மதாவிடம்..

“பேபி ஐஸ் க்ரீம் சாபிடட்டுமே நம்மூ.. ஐஸ் க்ரீம் சாப்பிட்டு ஹாட் வாட்டர் குடிச்சிட்டா சரியா போச்சு…’ என்ற பேச்சில் மஞ்சுளா தன் தலை மீது குட்டி கொள்ளலாம் போல இருந்தது..

குழந்தை தந்தையிடம் இருப்பதால், நர்மதாவை மம்மி என்று அழைக்கிறான் போல… இந்த குழந்தை வயதில் இவர்களுக்கும் குழந்தை இருக்கலாம்… அந்த குழந்தை அழைப்பதை பார்த்து துகிலனின் குழந்தையுமே அப்படியே அழைக்கலாம் என்று நினைத்து கொண்டாளே தவிர.. .

உண்மையில் நர்மதா தான் நர்த்தகனின் அன்னையாக இருக்கும் என்று அவள் நினைத்தும் பார்க்கவில்லை…

மனதில் இதை நினைத்து கொண்டே அவர்களின் பேச்சையும் மஞ்சுளா கவனித்துக் கொண்டு இருந்தாள்..

அதில் நர்மதா… “ எனக்கு என்ன துகி.. உன் பேபி கேட்பதை எல்லாம் வாங்கி கொடுக்கிறேன்.. அப்புறம் கோல்ட் பிடிச்சிட்டு ப்ரித்திங்கு கஷ்டப்பட்டா உன் தூக்கம் தான் கெடும் எனக்கு என்ன…?” என்று சொன்னாள் நர்மதா.. நர்மதா முன் அதாவது விவாகரத்து வாங்குவதற்க்கு முன்பே துகிலனிடம் உன் பேபி என்று தான் சொல்லுவாள்..

அதே போலவே சொல்ல… அதற்க்கு துகிலன் “ அது எல்லாம் நான் பார்த்துக்குறேன்… நீ கொடு…” விக்னேஷ் குழந்தை சாருமதி குழந்தைகள் சாப்பிட்டு கொண்டு இருக்க அதை பார்த்து ஏக்கத்துடன் இருக்கும் குழந்தையின் கையில் ஒரு ஐஸ்க்ரீம் கப்பை கொடுத்து விட்டு மஞ்சுளாவின் பக்கம் திரும்பியவன்…

“ம் போகலாமா…?” என்று கேட்டான்..

மஞ்சுளாவுக்கு புரியவில்லை.. இது வரை தான் தன்னிடம் குழந்தையை அறிமுகம் செய்யவில்லை.. இனியாவது செய்யலாம் தானே. இது என்ன உறவு முறை பெண்ணிடம் குழந்தையை கொடுத்து விட்டு போகலாமா..? என்று கேட்கிறான் என்று முழித்து கொண்டும் குழம்பிய முக பாவனையோடும் மஞ்சுளா கணவனை பார்த்தாள்..

மஞ்சுளாவின் இந்த பாவனையை பார்த்த துகிலன் … “ ஏதாவது என் கிட்ட சொல்லனுமா…?” என்று கேட்டவனிடம். இத்தனை மனதில் நினைத்தாலுமே பெண்ணவளாள் கேட்க முடியவில்லை..

ஆனால் அவள் கை குழந்தையின் பக்கம் நீண்டது… அவள் கை சென்ற திசையை பார்த்த துகிலன்…

“உனக்கும் ஐஸ் க்ரீம் வேண்டுமா..?” என்று கேட்டவனிடம் .” ம் வேண்டாம் வேண்டாம்…” என்று உடனடியாக மறுத்துவள்..

“குழந்தை…” என்று மட்டும் மீண்டும் திக்கி திணறி சொன்னவளின் பேச்சில், தன் புருவத்தை நீவி விட்டவனாகவும் தன் பின்கழுத்தை தடவி விட்டவனாகவும் ஒரு வித ஆயாசமாக மனைவியின் பக்கம் நன்றாக திரும்பி நின்று கொண்டவன்…

“நீ இப்போ தான் பேச்சு கத்துக்க ஆரம்பிச்சி இருக்கியா…?” என்று கேட்டவனின் இந்த கேள்விக்கு மஞ்சுளாவின் முகம் அதிர்ச்சியை காட்டியது.

ஆனால் அவளின் அந்த அதிர்ந்த முகத்தை எல்லாம் சட்டை செய்யாது…. “ எனக்கு இது போல தயங்கி தயங்கி பேசுறது… இது எல்லாம் சுத்தமா பிடிக்காது.. என் கிட்ட ஏதாவது பேசனுமா..? கேட்கனுமா..? நேரிடையா பேசனும்.. புரியுதா…? இன்னைக்கு நான் உன் கிட்ட சொல்றது தான்.. என்னால திரும்ப திரும்ப சொல்லிட்டு இருக்க முடியாது…” என்று அழுத்தம் திருத்தமாக பேசியவனின் இந்த பேச்சில் மஞ்சுளாவின் தலை தன்னால் ஆடி சம்மதம் சொன்னது தான். ஆனால் அவளின் முகம் கணவனின் இந்த பேச்சு கொஞ்சம் இல்லை மிகவும் பயத்தை கொடுத்து விட்டது.

முதலிலேயே கணவனோடு தன்னை ஒப்பிட்டு தோற்றம். பொருளாதாரம் என்று தன்னை தாழ்வாக நினைத்து கொண்டு இருந்தவளுக்கு கணவனின் இந்த பேச்சு… இன்னுமே அவள் மனதில் தாழ்வு மனப்பான்மை அதிகரித்ததோடு.. புதியதாக கணவன் மீது பெண்ணவளுக்கு பயத்தையும் வித்திட்டது…

பின் துகிலன் தான் சொல்ல வேண்டியது அனைத்தும் சொல்லி முடித்து விட்ட பின்… “ம் இப்போ சொல்… என் கிட்ட என்ன கேட்க நினைத்தே…?” என்ற கணவனின் கேள்விக்கு.

பாவம் பெண்ணவளுக்கு தான் என்ன கேட்க நினைத்தோம் என்பதே மறந்து போய் விட்டது…

“ஒன்னும் இல்ல….” என்று சொன்னவளிடம் துகிலன் மீண்டும் கோபமாக ஏதோ பேச ஆரம்பிக்க… இடை புகுந்த நர்மதா தான்..

“துகி என்ன இது… எல்லோர் கிட்டேயும் பேசுவது போல தான் அவள் கிட்டேயும் பேசுவீயா நீ….? பாரு பயந்து போயிட்டா….” என்று துகிலனை அதட்டிய நர்மதா மஞ்சுளாவையும் பார்த்து..

“ மஞ்சு துகிக்கு இது போல சொல்ல வந்ததை சொல்லாது சுத்தி வளைப்பது போல பேச்சு எல்லாம் சுத்தமா பிடிக்காது.. அதோட பெண்கள் போல்ட்டா இருக்கனும் மஞ்சு. நீ உன்னை ரொம்பவே மாதிக்கனும்…” என்றும் சொன்னாள்.. நர்மதாவுமே துகிலனை போல தான்.. அதனால் தான் இருவரின் பேச்சுமே ஒன்று போல இருந்தது..

துகிலனிடம் தலையாட்டியது போல தான் நர்மதாவிடமும் தலையாட்ட. இதை எல்லாம் கையில் குழந்தையுடன் பார்த்து கொண்டு இருந்த வைஷ்ணவிக்கு எப்போதுடா அங்கு போகலாம் என்று அவளின் கால் பர பரத்தது தான்..

ஆனால் விக்னேஷ் தான் மனைவியின் எண்ணம் புரிந்து… “ தோ பாரு வைஷூ நீ என்னவோ செய்ய நினைக்கிற. அது எனக்கு நல்லா புரியுது… ஆனா உன்னால எனக்கு தொழில்ல ஏதாவது ஒரு பிரச்சனை வந்தா…” என்று விக்னேஷ் சொல்லும் போதே..

வைஷ்ணவி… “ என்ன நீ என்னை சும்மா விட மாட்டியா….?” என்று கேட்டதற்க்கு..

“சீ சீ அப்போ அப்போ உன் அம்மா வீட்டிற்க்கு வரும் நான் நிறந்தரமா வீட்டோட மாப்பிள்ளையா வந்து உட்கார்ந்து கொள்ளுவேன்.. அப்புறம் என் செலவு மொத்தத்தையும் உன் அப்பா தான் பார்த்துக்கனும்.. அதுக்கு என்று உன் அப்பா பிசினஸ்ஸை என்னை பார்க்க எல்லாம் சொல்ல கூடாது..” என்றவனை நன்றாக திட்ட தான் நினைத்தாள்.. ஆனால் கோயில் என்பதினால் திட்டாது விட்டு விட்டாள்..

ஆனால் விக்னேஷ் மனைவியை விடுவதாக இல்லை.. தன் கை பிடியிலேயே வைத்து கொண்டு நின்று கொண்டு இருந்தவனின் அருகில் வந்த அவனின் அன்னை துர்கா..

“டேய் ஏன்டா எல்லாரும் என் உயிரை வாங்குறிங்க… என்ன தான் கல்யாணத்தை சிம்பிளா நடத்தினாலும் வேலை இருக்க தானே செய்யும்.. நீ இப்படி உன் மனைவி கிட்டயே அடை காத்த கோழி போல இருந்தா என்ன டா.” என்று கேட்ட போது வைஷ்ணவி…

‘இந்த பொம்பளைக்கு நாங்க இரண்டு பேரும் ஒன்னா இருந்தா பிடிக்காதே. ஆனா அதோ பிரிந்த அவங்க ஒன்னா இத்தனை நேரம் பேசிட்டு இருக்காங்க. இது எல்லாம் கண்ணுக்கு தெரியாது.. இருங்க எல்லாத்துக்கும் சேர்த்து ஒரு ஆப்ப ரெடி செய்யிறேன்…’ என்று மனத்திற்க்குள் இத்தனை துர்காவை திட்டிய வைஷ்ணவி.. வெளியில்..

“அத்தை என்ன வேலை அத்தை சொல்லுங்க நான் செய்யிறேன்…” என்று மாமியாரிடம் பேசிய வைஷ்ணவி தன் கையில் இருந்த குழந்தையை கணவனிடம் நீட்டி கொண்டு..

“குழந்தையை பிடிங்க.. என்ன வேலை அத்தை பொண்ணையும் மாப்பிள்ளையையும், பெண் வீட்டிற்க்கு அழச்சிட்டு போயிட்டு.. நம்ம வீட்டிற்க்கு அழச்சிட்டு வரனும்.. அவ்வளவு தானே அத்தை….”

என் கிட்ட சொல்லுங்க அத்தை வேலையை சிட்டா செய்து முடித்து விடுவேன் என்பது போல பேசிய மருமகளின் இந்த புதிய அவதாரத்தை சந்தேகத்துடன் பார்த்த துர்கா…

“நீ எப்போவும் போல குழந்தை சாக்கு சொல்லிட்டு இருப்பது போலவே இரு..” என்று அவளின் ஆசைக்கு ஆப்பு அடித்து விட்டு மகனிடம்..

“விக்கி உன் அண்ணன் சின்ன காரை எடுத்துட்டு போய் நம்ம ஓட்டலில் எல்லாம் ரெடியா இருக்கா என்று பார்த்துட்டு வர சொன்னான்…” என்று துர்கா சொல்லி விட்டு சென்று விட.

விக்னேஷும் அண்ணன் சொன்ன இது போல சின்ன சின்ன வேலைகளை செய்தால் தான் தன் தொழிலையும், தான் வெளி நாட்டுக்கு சென்றால், பணமும் என்று அனைத்தும் பார்த்து கொள்வான் என்று செய்வது போல இதையும் செய்ய ஓடினான்..

வைஷ்ணவி கணவனின் செயலை பார்த்து தலையில் அடித்து கொண்டாலும் துகிலன் மஞ்சுளா இவர்களோடு நர்மதாவும் நின்று கொண்டு இருக்கும் பக்கம் மெல்ல நடையை கட்டினாள்…

மாப்பிள்ளையையும் பெண்ணையும் அடி மிதிக்க தன்னை அழைத்து செல்ல சொன்னால், நர்மதா தான் துகிலனின் முதல் மனைவி என்ற விசயத்தை சொல்லி விடலாம் என்று திட்டம் தீட்டி இருந்தாள்.. ஆனால் இனி தன் கணவன் கண்டிப்பாக தன்னை அனுப்ப மாட்டான்.. அதோடு இது போல போவது என்றால் ஜோடியாக தான் மாப்பிள்ளை பெண்ணோடு போக வேண்டி இருக்கும்.. கண்டிப்பாக தன் கணவன் தன்னை கண்காணித்து கொண்டே தான் இருப்பான்.. மஞ்சுளாவிடம் தனியாக பேச முடியாது..

அதனால் இது தான் சரியான நேரம்… நர்மதா தான் உன் கணவனின் முதல் மனைவி என்ற விசயத்தை சொல்ல… அவளின் அம்மா கூட கேட்டார்கள் தான்.

“இது வரை சொல்லாமலா இருந்து இருப்பாங்க..?” என்று..

வைஷ்ணவி அடித்து சொன்னாள்.. “ஏந்த ஒரு பெண்ணும் விவாகரத்து பெற்று விட்ட முதல் மனைவியோடு எப்போதும் கூடவே இருந்தால், அதை பார்த்து இப்படி அமைதியாக இருந்து இருக்க மாட்டாள்… ஒன்று கோபப்படுவாள். இல்லை என்றால் இந்த திருமணத்தையே நிறுத்தி விடுவாள்… என்று.”

இதோ கணவன் இந்த பக்கம் மறைந்ததும் சிரித்தப்படி வைஷ்ணவி துகிலன் நர்மதா மஞ்சுளாவின் பக்கம் சென்று நின்றாள்..

மஞ்சுளாவை அப்போது தான் துகிலனும் நர்மதாவும்… “ இது போல எல்லாம் இருக்க கூடாது ஸ்மார்ட்டாக இருக்க வேண்டும்…” என்று சொல்லி இருந்ததில் முகம் கன்றி போய் தலை குனிந்து நின்று விட்டாள்..

செல்லலாம் என்று சொன்ன துகிலனியின் கை பேசிக்கு அழைப்பு வர. அதை ஏற்று பேச… மஞ்சுளாவுக்கு கையை பிசைந்து கொண்டு ஒரு மாதிரி அசாவுகரியமாக தான் இருந்தாள்..

அந்த சமயம் தான் வைஷ்ணவி சென்றது.. வைஷ்ணவியின் கையில் இருந்த குழந்தை பார்த்த மஞ்சுளா லேசாக சிரிக்க.

குழந்தையோ மஞ்சுளாவை பார்த்து நன்றாக சிரித்ததோடு மஞ்சுளாவின் பக்கம் கை நீட்டி என்னை தூக்கி கொள் என்று சொல்ல.

மஞ்சுளாவும் சிரித்து கொண்டே தூக்கிக் கொண்டவள்…

“பேபி நேம் என்ன..” குழந்தையின் உப்பிய கன்னத்தை தன் ஒரு விரல் கொண்டு அமுக்கி கொண்டே வைஷ்ணவியிடம் கேட்டாள்..

“கன்னிகா….” என்று சொன்ன வைஷ்ணவியோ குழந்தையிடம்… “ பெரிம்மா கிட்ட போயிட்டிங்கலா… பெரிம்மாவ பாப்பாவுக்கு ரொம்ப பிடிச்சி இருக்கா..?”

மஞ்சுளாவின் கையில் இருந்த குழந்தையை கொஞ்சிக் கொண்டே வைஷ்ணவி ஓர விழியின் நர்மதா என்ன செய்கிறாள் என்று பார்த்தாள்..

வைஷ்ணவி எதிர் பார்த்தது போல் தான் தன் கை பேசியில் அவர்களின் ஓட்டலுக்கு புக் ஆனவர்களின் கணக்கை பார்வை இட்டு இடை இடையே தன் பேசியில் அவர்களின் நட்சத்திர ஓட்டலின் காட்சிகளையும் சி.சிடியின் உதவியுடன் பார்த்து கொண்டு இருந்தாள்..

இது தான்.. இது தான் வைஷ்ணவிக்கு பிரச்சனையே.. துகிலனோடு விவாகரத்துக்கு முன் இவள் அந்த வீட்டின் முதல் மருமகள் என்றால் தான் இரண்டாம் மருமகள்… தான் இருந்தால் சட்டை கூட செய்ய மாட்டாள்… எப்போதும் இது போல தான்.. என்னவோ இவள் இல்லை என்றால் இவர்கள் குடும்ப பிசினஸ் அப்படியே படுத்து கொள்ளும் என்பது போல தான் பந்தா காட்டி கொண்டு திரிவாள்..

பெண் என்றால் ஒரு திருமணத்திற்க்கு புடவை நகை.. இது போல தானே போட்டுட்டு வருவாங்க. இது என்ன எப்போ பார்த்தாலும் மாடலா வருவது…?

ஆனால் வைஷ்ணவி இதற்க்கு நேர் மார். ஆண்கள் சம்பாதிக்கும் பணத்தை வீட்டு பெண்கள் நகை புடவை வாங்கி கணவன்மார்களின் அந்தஸ்த்தை வெளி உலகுக்கு உயர்த்தி காட்டுகிறோம் என்று நினைக்கும் பெண்… இது போன்று ஒரே வீட்டில் இரு மருமகள்கள் எதிர் எதிர் சிந்தனை கொண்டவர்களாக இருந்தால் எப்படி ஒத்து போகும்…

அதுவும் வீட்டில் தான் என்னவோ கீழாகவும் நர்மதா தான் அனைத்திலும் பர்பெக்ட் என்பது போலான பேச்சு.. அதுவும் தன் கணவனும் அப்படி பேசுவது தான் வைஷ்ணவியின் கோபத்திற்க்கு காரணமே..

உடைக்கிறேன்.. அனைத்தையும் போட்டு உடைக்கிறேன்… நீயும் துகிலனும் ஒன்னா இருந்தா தானே எனக்கு பிரச்சனை… பேப்பரில் மட்டுமே துகிலனோடு விலகி இருக்கும் உன்னை நிறந்தரமா துகிலன் விரும்பி கட்டிய பெண்ணை கொண்டே அதை உடைக்கிறேன் என்று நினைத்து நர்மதா பேசியில் பார்த்து கொண்டு இருப்பதை ஒரு வித வன்மத்தோடு பார்த்த வைஷ்ணவியின் கவனம் மீண்டும் மஞ்சுவின் பக்கம் சென்றது..

மஞ்சுளா குழந்தையிடம் ஏதோ கேட்க குழந்தையோ மஞ்சுளாவின் பேச்சை சட்டை செய்யாது… அவள் அணிந்து இருந்த ஜிமிக்கியை ஆட்டி கொண்டு இருந்தாள்..

மஞ்சுளா. “ பாப்பாவுக்கு ஜிமிக்கு வேண்டுமா. ஜிமிக்கு வேண்டுமா.?” என்று குழந்தையின் மூக்கை நிமிண்டி கொண்டு மஞ்சுளா கேட்ட போது தான் துகிலன் தன் கை பேசியின் பேச்சை முடித்து கொண்டு அவர்கள் அருகில் வந்து நின்றது..

நின்றவனின் காதில் மஞ்சுளா குழந்தையிடம் கேட்ட.. “ ஜிமிக்கு வேண்டுமா..? வேண்டுமா..?” என்றது காதில் விழ துகிலன் சட்டென்று.

“அது உனக்காக வாங்கியது… உனக்கு தான்.. புரியுதா..?”

இதை தன்மையாக எல்லாம் சொல்லவில்லை.. அப்படி துகிலன் சொல்லி இருந்தால், அதாவது உண்மையில் துகிலன் மஞ்சுளாவை முதன் முதலில் புகைப்படத்தில் பார்த்த போது அவனை முதலில் ஈர்த்தது அந்த குட்டி ஜிமிக்கி தான்…

அந்த ஜிமிக்கி புதியது எல்லாம் கிடையாது.. கல்லூரி சேர்ந்த போது அரை சவரனில் டிசைன் பார்க்காது குறைந்த சேதாரம் எது என்று பார்த்து தான் மாலினி மகளுக்கு வாங்கி கொடுத்தது..

அது என்னவோ மஞ்சுளாவுக்கு அந்த குட்டி ஜிமிக்கி மிகவும் பிடித்து விட… அதையே எப்போதும் போட்டு கொண்டு கல்லூரிக்கு சென்றாள்… பின் வீட்டில் இருக்கும் போது கூட அந்த ஜிமிக்கி தான் போட்டு கொண்டு இருந்தாள்.

அது போலான ஒரு நாளில் தரகருக்கு கொடுக்க போட்டோ வேண்டும். செல்லில் எல்லாம் வேண்டாம் ஸ்டுடியோ போய் எடுத்துட்டு வா என்று அவளின் அப்பா சொன்ன போது அம்மாவோடு ஏனோ தானோ என்று உடையை மட்டுமே மாற்றிக் கொண்டு எடுத்த அந்த புகைப்படத்தை தான் துகிலனும் பார்த்தது.. ஏன் அவளை துகிலன் பெண் பார்க்க வந்த போது கூட அந்த ஜிமிக்கியை தான் அணிந்து கொண்டு இருந்தாள்…

பெண்ணவளுக்கு மிகவும் பிடித்தது ஜிமிக்கி என்று துகிலன் வாங்கினானா..? இல்லை அவனுக்குமே ஜிமிக்கி பிடிக்குமா என்று தெரியவில்லை… அவள் இன்று அணிந்து இருக்கும் அனைத்து நகையுமே நர்மதா தான் வாங்கியது.. ஆனால் அந்த ஜிமிக்கி துகிலன் அவன் மட்டுமே சென்று வாங்கியது..

நர்மதா கூட… “இந்த நகை செட்க்கு நான் வாங்கிய கம்பல் தான் செட்டாகும் துகி…” என்று சொன்ன போது கூட துகிலன்..

“பரவாயில்லை இதுவே அன்னைக்கு அவள் போட்டுக்கட்டும் என்று சொல்லி அந்த ஜிமிக்கியை கொடுத்தது.

இதை எல்லாம் துகிலன் விவரித்து சொல்லி இருக்க வேண்டாம்..

“நானே உனக்காக வாங்கியது… “ என்று தன்மையாக சொல்லி இருந்து இருக்கலாம் பாவம் அவனுக்கும் ரொமன்ஸ்க்கும் காத தூரம் எனும் போது எப்படி அப்படியாக பேசுவான்.. எப்போதும் போல் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்பது போல பேசிய விதத்தில் பெண்ணவளின் மனம் பெரியதாக அடி வாங்கியது.

மஞ்சுளாவின் மனது மட்டுமா அடி வாங்கியது.. வைஷ்ணவியின் மனது கூட தான் அடி வாங்கியது.. அந்த ஜிமிக்கியை தன் மகளுக்கு தானே மஞ்சுளா தருவதாக சொன்னது.. அது ஒரு விளையாட்டு பேச்சு.. இதற்க்கு இப்படி சொல்வானா….?

இந்த ஜிமிக்கி எல்லாம் எனக்கு ஒன்றுமே கிடையாது… இதே வேறு ஒரு சமயமாக இருந்து இருந்தால் வைஷ்ணவி இதை சொல்லவும் செய்து இருப்பாள் தான்..

ஆனால் தான் செய்ய வேண்டிய. இல்லை இல்லை சொல்ல வேண்டிய விசயத்திற்க்காக பல்லை கடித்து கொண்டு தன் கோபத்தை முகத்தில் கூட காட்டாது சிரித்தப்படி இருந்தாள்.

நர்மதா தான்…. “ என்ன துகி மஞ்சு ஜஸ்ட் தான் கேட்டா….” என்றவளுக்கு துகிலன் பதில் அளிக்கவில்லை..

இத்தனை நேரம் துகிலனின் மனைவி நர்மதா தான் எப்படி சொல்வது எப்படி சொல்வது என்று இருந்த வைஷ்ணவி…

சட்டென்று… “ துகிலன் அத்தான் உங்க குழந்தை நர்த்தகனுக்கு என்றால் ஆகாத ஐஸ் க்ரீம் கூட கொடுத்து விடுவார்… தம்பி மகள் இல்லையா அது தான்…”

இந்த பேச்சை கேட்ட மஞ்சுளாவுக்கு குழப்பம்.. உங்க பிள்ளையா…? என்று குழப்பத்துடன் வைஷ்ணவியை மஞ்சுளா பார்க்கும் போதே அடுத்து…

“உங்க டைவஸ்க்கு முன் கூட உங்க இரண்டு பேருக்கும் நடுவில் வித்தியாசம் படுவது உங்க குழந்தை நர்த்தகன் விசயத்தில் தானே….”

இதை கேட்ட மஞ்சுளாவுக்கு தலை கிறு கிறுத்து விட்டது.. அது அவளின் உடலிலும் தெரிய…

துகிலன் தான் அவள் தோளை பற்றி… “ யூ ஆல் ரைட்…?” என்று கேட்டான்…

அவன் கேள்விக்கு பதில் சொல்லும் நிலையில் கூட மஞ்சுளா இல்லை.. அப்படியே தன் கணவனையும் நர்மதாவையும் மாறி மாறி பார்த்து பேந்த பேந்த விழித்து கொண்டு இருந்தாள்….


 
Well-known member
Joined
Jun 1, 2024
Messages
144
இவன் என்ன பிடிச்சி கல்யாணம் பண்ணினவன் மாதிரியா பேசுறான் பச்சை மிளகாயை கடிச்சவனாட்டம் சுள்ளுனு பேசுறான் 😬😬😬😬

வைஷ்ணவி உன்னோட வேல முடிஞ்சதா 🥶🥶🥶
நர்மதாவை பழி வாங்குறதா நினைச்சு மஞ்சுக்கு தான் கஷ்டத்தை குடுக்குறா....😐😐😐 ஏற்கனவே தாழ்வு மனப்பான்மை, துகியோட கோபம்.... அவளும் எவ்வளவு தான் தாங்குவா.... 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️

எனக்கு இந்த துகிலன் நர்மதாவை பிடிக்கவே இல்லை..... ஓவரா பன்றாங்க.... ஏன் எதையும் இவன் பேசமாட்டானா அவ தான் பேசுவாளா 😤😤😤😤
 
Member
Joined
Mar 18, 2025
Messages
21
Viji mum kuddie ud konjam Priya ud podungalen.
Enakku narmatha appadi iruppathu problem illa
intha thukilan koncham ovaraa panraano Ena irukku.
Eppadium don't care entru Manchu pinnal suththathaan pokiraarai thugi .
We waiting that moment.
 
Joined
Mar 3, 2025
Messages
41
இவன் என்ன பிடிச்சி கல்யாணம் பண்ணினவன் மாதிரியா பேசுறான் பச்சை மிளகாயை கடிச்சவனாட்டம் சுள்ளுனு பேசுறான் 😬😬😬😬

வைஷ்ணவி உன்னோட வேல முடிஞ்சதா 🥶🥶🥶
நர்மதாவை பழி வாங்குறதா நினைச்சு மஞ்சுக்கு தான் கஷ்டத்தை குடுக்குறா....😐😐😐 ஏற்கனவே தாழ்வு மனப்பான்மை, துகியோட கோபம்.... அவளும் எவ்வளவு தான் தாங்குவா.... 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️

எனக்கு இந்த துகிலன் நர்மதாவை பிடிக்கவே இல்லை..... ஓவரா பன்றாங்க.... ஏன் எதையும் இவன் பேசமாட்டானா அவ தான் பேசுவாளா 😤😤😤😤
ஹய்யோடா மதி மச்சீ அவிக ஆளு ஈரோ பயல புடிக்கலைன்னு வையறாங்களே🥳🥳🥳🥳
1000013827.jpg
 
Joined
Mar 3, 2025
Messages
41
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
ஏம்மா வைஷ்ணவி வந்த வேலைய நல்லா செஞ்சிட்டே போல😬😬😬😬😬😬
ஏற்கனவே மஞ்சு தாழ்வு மனப்பான்மைல ஊசலாடிட்டு இருக்கா.
துகிலா😤😤😤😤😤😤😤😤
 
Well-known member
Joined
Aug 16, 2024
Messages
362
வைஷ்ணவி சொல்ல வேண்டியதை சொல்லி விட்டாள். இனிய வைஷ்ணவி கொஞ்சம் நிம்மதியாக இருப்பாள்.
 
Well-known member
Joined
Jun 1, 2024
Messages
144
ஹய்யோடா மதி மச்சீ அவிக ஆளு ஈரோ பயல புடிக்கலைன்னு வையறாங்களே🥳🥳🥳🥳
View attachment 3
அவன் தான் முன்னாள் பொண்டாட்டிகிட்ட மட்டும் குசுகுசுன்னு பேசுறானே தவிர யாரையும் கண்டுக்க மாட்டேங்குறானே 🤧🤧🤧🤧

IMG-20250321-WA0004.jpg
 
Well-known member
Joined
Jun 1, 2024
Messages
144
@vaishanika மச்சீ கல்யாணம் ஆன கையோட உங்க ஹீரோயின் வாழ்க்கைக்கு நீங்களே வேட்டு வச்சிருக்கீங்களே அதை நினைச்சா 🤭🤭🤭🤣🤣🤣🤣🤣
IMG-20250321-WA0005.jpg
 
Joined
Mar 3, 2025
Messages
41
@vaishanika மச்சீ கல்யாணம் ஆன கையோட உங்க ஹீரோயின் வாழ்க்கைக்கு நீங்களே வேட்டு வச்சிருக்கீங்களே அதை நினைச்சா 🤭🤭🤭🤣🤣🤣🤣🤣
View attachment 5
யோவ் மதி மச்சீ இன்னா சொல்லறீங்க???🧐🧐🧐 1000013841.jpg
 
Well-known member
Joined
Jun 1, 2024
Messages
144
யோவ் மதி மச்சீ இன்னா சொல்லறீங்க???🧐🧐🧐 View attachment 6
நர்மதா யாருன்னு சொல்லி ஹீரோயினோட அறிவுக் கண்ணை திறந்த அந்த வைஷுவே நீங்க தான்னு சொன்னே மச்சீ 🤪🤪🤪
 
Top