Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

உன்னோடு யென் இதயம்...27....28

  • Thread Author
அத்தியாயம்---27

வீட்டுக்கு போகும் வழி முழுவதும் பரினிதா தான் அந்த அமைச்சரை பார்த்ததும் பயந்து விட்டதை ஏற்ற இறக்கத்துடன் ஆஷிக்கிடம் சொல்ல சொல்ல அவனின் முகம் கோபத்தால் சிவப்பதை பார்த்த சித்தார்த் “குட்டிம்மா நீ சும்மா இருக்க மாட்டே…” என்று ஒரு அதட்டல் போட்டான்.

பின் என்ன இவன் சும்மாவே உடுக்கை இல்லாமல் ஆடுகிறான். இவள் இப்படி சொல்லி வைத்தால் அவன் வசம் உள்ள அந்த அமைச்சரை இவன் ஏதாவது செய்து விட்டால் அந்த பயம் அவனுக்கு, என்ன தான் ஆஷிக் தன் மச்சானாக இருந்தாலும், அவனால் சட்டத்துக்கு புறம்பாக கண்டிப்பாக செயல் படமுடியாது.

அந்த அமைச்சர் ஆஷிக்கிடம் இருப்பதே….தவறு தான். சட்டபடி பார்த்தால் அந்த அமைச்சரை ஆள் கடத்திய குற்றத்துக்கு எப்.ஐ.ஆர் போட்டு உள்ளே தான் வைக்க வேண்டும். அப்படி செய்யாமல் அந்த அமைச்சரை ஆஷிக்கின் வசம் விட்டு வைத்து இருப்பதே...அவன் கொள்கைக்கு எதிரானது தான்.இருந்தும் அவன் இதற்க்கு சம்மதித்ததே….அவள் தங்கையின் பெயர் அடிபடக் கூடாது என்று கருதி தான்.

இவள் என்ன என்றால் ஆஷிக்கின் கோபம் ஏறும் வகையில் சினிமா படம் எடுப்பவனிடம் கதையாசிரியர் சொல்வது போல் இப்படி உணர்ச்சி ததும்ப சொல்லிக் கொண்டு இருக்கிறாளே….என்று அவளை ஒரு அதட்டல் போட்டான்.

அதற்க்கு பரினிதா ஆஷிக்கிடம் “பாருங்க மாமா...இந்த அண்ணன் கடத்திய அவனை விட்டு விட்டு என்னை திட்டுகிறார்.” என்று அவனிடம் சலுகையோடு கொஞ்ச அதை கேட்ட ஆஷிக்கின் மனம் அவனிடமே...இல்லை. இப்படியே வீடு வரை ஆஷிக்கை தரை இறங்க விடாமல் அவனை பறக்க விட்டுக் கொண்டே வீடு வந்து சேர்ந்தாள்.

அவளை பார்த்ததும் கலையரசி,ஆருண்யா ஒடி வந்து “உனக்கு ஒன்றும் இல்லையே….”என்று கவலையுடன் விசாரிக்க பரினிதா அவர்களுக்கு பதில் சொல்லாமல் தன்னையே பார்த்திருந்த தன் பாட்டியுடமே அவள் கண்கள் சென்றது.

இப்போதும் பாட்டிம்மாவின் கண்கள் அவள் சிறு வயது முதலே பார்த்த கண்டிப்பு தான் தெரிந்ததே தவிர...அதில் கவலை ,பதட்டம் ,இல்லை தன்னை பார்த்தால் ஏற்பட்ட மகிழ்ச்சி என்று ஒன்றையும் காணது தன் அறைக்கு சென்றாள்.

வந்ததில் இருந்த பரினிதாவையே பார்த்திருந்த ஆஷிக் அவள் தன் பாட்டியை ஒரு எதிர் பார்ப்போடு பார்த்தது. பின் தான் எதிர் பார்த்த எதுவும் பாட்டிம்மாவிடம் காணாது தோய்ந்த முகத்தோடு தன் அறைக்கு செல்பவளை தடுக்காமல் பாட்டியைய் பார்த்தான்.

அவன் பார்வையை எதிர் பார்த்த மாதிரியே பாட்டியும் ஆஷிக்கை பார்த்து “ என்னிடம் ஏதாவது கேட்க வேண்டுமா…? ஆஷிக்.” என்ற கேள்விக்கு.

“நான் கேட்பேன் என்று தெரிந்தவருக்கு,எதை கேட்பேன் என்று தெரிந்திருக்குமே…?” என்பவனை பார்த்தி சிரித்துக் கொண்டே

“ நீ மிக புத்திசாலி என்ற என் கனிப்பு தவவில்லை. என்று சொல்லி விட்டு. நான் ஏன் பரினிதாவிடம் அவ்வளவு கண்டிப்புடன் நடந்துக் கொள்கிறேன் என்று தானே கேட்க நினைத்தாய்.” என்று கேட்டவர்.

ஏதோ நினைத்தவறாக கலங்கிய தன் கண்ணை கண்ணாடி கழட்டி துடைத்து விட்டு திரும்பவும் அதை மாற்றிக் கொண்டு கரகரத்த தன் தொண்டையை சரி செய்துக் கொண்டே… “ பரினிதாவின் பெற்றோர் இறக்கும் போது அவளுக்கு வயது பன்னிரண்டு, சித்தார்த்துக்கு இருவது வயது” என்று ஆஷிக்குக்கு தெரிந்த விஷயத்தையே சொன்னவரை இதை ஏன் நம்மிடம் சொல்கிறார் கேள்வி குறியோடு பார்த்தான்.

“இதை எல்லாம் ஏன் சொல்கிறேன் என்று தானே பார்க்கிறாய்.” என்ற பாட்டியிடம் ஒன்றும் சொல்லாமல் மேலே அவர் சொல்வதை கவனமுடன் கேட்கும் முக பாவத்தை பார்த்து நேரிடையாக விஷயத்துக்கு வந்து விட்டார்.

“பரினிதா சின்ன வயது முதலே தன் அம்மாவின் முந்தானை பிடித்து தான் அலைவாள்.நான் என் மருமகளிடம் எவ்வளவோ சொல்லி விட்டேன். இப்படி அவளை உன் மடிமீது போட்டே வளர்க்காதே...பின் நீ இல்லை என்றால் அவள் கஷ்டப்படுவாள் என்று. நான் எந்த நேரத்தில் அப்படி சொன்னனோ அது பலித்து விட்டது.ஆனால் நான் அதை நினைத்து சொல்லவில்லை. ஒரு பெண்பிள்ளை திருமணமானால் பெற்றோர்களை பிரியதானே வேண்டும் நான் அந்த அர்த்தத்தில் தான் சொன்னேன்.ஆனால் என் பிள்ளைக்கும்,மருமகளுக்கும் அல்பாயுசு என்று அப்போது எனக்கு தெரியவில்லை.

அவர்கள் மறைந்த பின் என் கணவரின் ஆசையை நிறைவேற்ற சித்தார்த் படிக்க வேண்டி இருந்ததால் என் பிள்ளையும்,கணவரும் நடத்திய தொழிற்சாலையைய் நான் எடுத்து நடத்த வேண்டிய சூழ்நிலை எனக்கு ஏற்பட்டது.எனக்கு பிறகு சித்தார்த் இந்த தொழிலை கவனிக்க மாட்டான் என்று எனக்கு முன்பே தெரிந்து விட்டது.

எனக்கு பிறகு இந்த தொழிலை பரினிதா தான் பார்க்க வேண்டும் என்று நினைத்து குழந்தை தனத்துடன் இருக்கும் பரினிதாவை என் கண்டிப்பாவது மாற்றாதா...என்று அவளிடம் அன்பு காட்டாது கடுமையாகவே நடந்துக் கொண்டேன்.வீட்டில் இருந்து படிக்காது அவளை ஆஸ்ட்டலில் சேர்த்தேன்.

அனைவரிடமும் பழகினால் தான் அவளுக்கு வெளி உலகம் தெரியும் என்று அப்படி செய்தேன்.ஆனால் நான் எதிர் பார்த்த எந்த முன்னேற்றமும் பரினிதாவிடம் காணவில்லை. நான் எதில் தவறு செய்தேன் என்று எனக்கு இன்று வரை தெரியவில்லை ஆஷிக்.” என்ற அந்த பாட்டிம்மாவின் பேச்சி ஆஷிக்குக்கு வியப்பே ஏற்பட்டது.

“பாட்டிம்மா நான் புத்திசாலி தான் ஒத்துக் கொள்கிறேன். ஆனால் உங்களை விட அல்ல. இதை நீங்கள் கண்டிப்பாக ஒத்துக் கொள்ள வேண்டும்.” என்பவனை பார்த்து சிரித்து விட்டு.

“இதை ஏன் இப்போது சொல்கிறாய்.”

“நீங்கள் செய்தது அனைத்தும் சரி தான் பாட்டிம்மா...ஆனால் ஒரு பழம் தானாக தான் பழுக்க வேண்டுமே...தவிர தடிக் கொண்டு அல்ல. அது உங்களுக்கே நன்கு தெரியும். நீங்கள் சொன்ன மாதிரி பரினிதா தன் பன்னிரண்டு வயது வரை தன் அன்னையின் மடியிலேயே வளர்ந்தவள்.

அப்படி பட்டவளை நாம் மெல்ல மெல்ல தான் உங்களின் அரவணைப்பில் இனி நீ தான் எல்லாம் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று புரிய வைத்திருக்க வேண்டும்.சொன்னால் புரிந்துக் கொள்பவள் தான் அவள்.ஆனால் நீங்கள் ஆஸ்ட்டலில் சேர்த்தது தான் பிரச்சினையாகி போய் விட்டது.

நீங்கள் எந்த மாதிரி ஆஸ்ட்டலில் சேர்த்திர்கள் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் அங்கு அவள் கூட தங்கும் பெண்கள் அவ்வளவு நல்லவர்கள் இல்லை என்று நான் பரினிதாவின் பேச்சில் இருந்து நான் தெரிந்துக் கொண்டேன்.அவர்கள் எப்போதும் ஆண்களை பற்றி பேசியது பிடிக்காது போய் தான் பக்கத்தில் உள்ள பார்க்குக்கு சென்று இருக்கிறாள்.

அப்போது அவள் வளர்ந்தும் வளராத இரண்டு கெட்டான் பருவம் தானே...அந்த வயதில் அவளுக்கு அந்த குழந்தைகளுடன் இருப்பது பிடித்து போக அதையே இன்று வரை தொடர்கிறாள்.

ஒரு வகையில் இதுவே நல்லது தான் எனக்கு தோன்றுகிறது. நம் வீட்டு பெண் அந்த பிள்ளைகளிடம் பழகி தவறான வழி செல்லவில்லை அல்லவா….அதற்க்கு காரணம் அவள் தாய் சின்ன வயதில் வளர்த்த வளர்ப்பாக கூட இருக்கலாம்.

ஏன் என்றால் அவள் தாய் சொன்னதை அப்படியே நியாபகத்தில் வைத்துக் கொண்டு இருப்பதோடு அதை செய்யவும் செய்கிறாள். என்று சொன்னவன் சிரித்துக் கொண்டே என்னிடம் அவள் அண்ணனுக்கு சம்மந்தம் பேச வரும் போது பெரியமனிஷி போல் புடவை எல்லாம் வாங்கி வந்தாள். அது அவள் அன்னை சொன்ன பழக்கம் என்று கூட சொன்னாள். இதுவும் நல்லதுக்கு தான் பாட்டிம்மா ...என் மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் பரினிதாவை எனக்கு திருமணம் செய்து கொடுங்கள்.

நான் உங்கள் கணவர் ஏற்படுத்திய இந்த தொழிலை மேலும் வளர்பேனே தவிர கண்டிப்பாக அழிய விட மாட்டேன். பரி அவள் குழந்தை தனத்துடன் அப்படியே இருக்கட்டும் பாட்டிம்மா அவள் அப்படி இருப்பது தான் எனக்கு பிடித்து இருக்கிறது.” என்று சொல்பவனின் கைய் பற்றி

“ பரினிதாவை எங்களோடு நன்கு பார்த்துக் கொள்வாய் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது ஆஷிக்.ஏன் என்றால் இவ்வளவு வருடம் வளர்த்த நாங்கள் அவளை புரிந்துக் கொண்டதை விட நீ அவளை நன்கு புரிந்து வைத்திருப்பதிலேயே எனக்கு தெரிந்து விட்டது. உன்னை விட நல்ல மாப்பிள்ளை அவளுக்கு கிடைக்க மாட்டான்.ஆனால் பரினிதா உங்களை திருமணம் செய்ய ஒத்துக் கொள்ள வேண்டும் என்று” அவன் எதிர் பார்த்த மாதிரியே சொல்லும் பாட்டியின் கையைய் தன் மற்றொறு கரத்தால் பற்றி “கண்டிப்பாக பரினிதா சம்மதத்தோடு தான் இந்த திருமணம் நடக்கும்.அது போல் உங்கள் நம்பிக்கையை நான் காப்பாற்றுவேன் பாட்டிம்மா…” என்று சொன்னவன்.

தயங்கி பின் பாட்டிம்மா “இந்த விஷயத்தை இன்று நடக்கும் பங்ஷனிலேயே அறிவிச்சிடலாமா…?” என்று கேட்பவனிடம் பாட்டிம்மா பதில் சொல்வதற்க்கு முன்னவே இவ்வளவு நேரம் அமைதியாக இவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டு இருந்த சித்தார்த்.

“அவள் படிப்பு முடிந்த பின் தான் திருமணம்” என்று சொல்பவனின் அருகில் சென்று அவன் காதில் “கண்டிப்பாக நீ சொன்ன மாதிரி அவள் படிப்பு முடிந்தே வைத்துக் கொள்ளலாம். ஆனால் ஒன்று அவளுக்கு படிப்பு ஆரு தான் சொல்லிக் கொடுக்க வேண்டும்.” என்ன என்பவனிடம் மேலே எதுவும் பேசாமல் பாட்டியிடம் .

“பாட்டிம்மா ஆஷிக் சொன்ன மாதிரி இன்றே அறிவித்து விடலாம்.” என்று சொல்லி விட்டு தன் மனைவியை கையோடு தன் அறைக்கு அழைத்து சென்றான்.

பின் என்ன அவனே எட்டு வருடம் காத்திருந்து இப்போது தான் விரும்பிய பெண்ணை மணந்து இருக்கிறான்.பரினிதாவுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க ஆரு அவள் அறைக்கு சென்றால் கண்டிப்பாக விடிந்த பின் தான் ஆரு தன் அறைக்கு வரமுடியும்.

அதுவும் இவன் புன்னியத்தில் அடுத்த மாதம் இவன் டெல்லியில் பதவி ஏற்க வேண்டும். அப்படி இருக்கும் போது பரினிதாவுக்கு பாடம் சொல்லி கொடுக்க ஆரு தன் கூட வராமல் இருந்து விடிந்த பின் பார்க்கும் தன் மனைவியின் தரிசனமும் கிடைக்காமல் போய் விட்டாள். அதனால் தான் புத்திசாலி தனமாக பரினிதாவை இப்போதே ஆஷிக்குக்கு திருமணம் செய்ய சம்மதித்து விட்டான்.

சித்தார்த் சொல்லி சென்றதை கேட்ட பாட்டிம்மா ஆஷிக்கை பார்த்து “நீ என்னவோ அவனின் வீக் பாயிண்டை அவனிடம் சொல்லி இருக்கிறாய்.இல்லை என்றால் படிப்பு படிப்பு என்று பேசும் சித்து இப்படி திருமணத்துக்கு சம்மதித்து இருக்க மாட்டான்.” என்ற பாட்டியைய் பார்த்து.

“பாட்டிம்மா ஆனாலும் நீங்க இவ்வளவு புத்திசாலியாக இருக்க கூடாது.” என்று சொல்லி விட்டு “சரி பாட்டிம்மா நானும் அம்மாவும் கிளம்புகிறோம்.மாலை நிறைய வேலை இருக்கிறது .” என்று சொல்லி விட்டு தன் அன்னையை பார்த்தான்.

அவ்வளவு நேரமும் அனைத்தையும் அமைதியாக பார்த்திருந்த கலையரசி தன் மகன் தன்னை பார்ப்பதை பார்த்து “இப்போது தான் நான் உன் கண்ணுக்கே தெரிகிறானே ஆஷிக்.” என்ற அவர் பேச்சில் ஆஷிக் தன் தவறு உணர்ந்தவனாய் தன் அன்னையின் அருகில் விரைந்து சென்று.

“சாரிம்மா என்னை மன்னித்து விடுங்கள்.உங்களை மதிக்கவில்லை என்று தவறாக நினைக்க வேண்டாம்மா…” என்ற மகனை “சீ நான் சும்மா தான் சொன்னேன் ஆஷிக். எனக்கு வேண்டியது என்ன என் பிள்ளைகள் குழந்தை குட்டிகளுடன் சந்தோஷமாக இருக்க வேண்டும்.” என்றும் சொல்லும் அன்னையை அணைத்துக் கொண்டு “தாங்ஸ்ம்மா” என்று கூறிவிட்டு

“போவோம்மா வேலை நிறைய இருக்கு “ என்று சொல்பவனிடம் கொஞ்சம் இருடா “நான் என் மருமகளிடம் சொல்லி விட்டு வருகிறேன்.” என்று அவர் சொல்வதற்க்கும் பரினிதா அங்கு வருவதற்க்கும் சரியாக இருந்தது.

அவளை பார்த்த ஆஷிக் அய்யோ இவளிடம் இன்னும் எதுவும் சரியாக பேசவில்லையே அம்மா ஏதாவது கேட்க இவள் ஏதாவது உளரி விட்டால் என்று அவன் நினைக்கும் போதே அவன் நினைத்த மாதிரியே கலையரசி பரினிதாவிடம் “கல்யாணத்திற்க்குள் சாப்பிட்டு கொஞ்சம் சதை போடுடா…பாரு மெலிஞ்சி போய் இருக்கே...நாளைக்கு குழந்தை பிறக்கவாவது உடம்பில் தெம்பு வேண்டும் இல்லையா…? ஆரு நல்லா சமைப்பா. அதனால் உனக்கு பிடித்ததை கேட்டு சாப்பிடு.” என்று சொல்லும் கலையரசியின் வெள்ளை பேச்சில் பரினிதா விழுந்து தான் போனாள்.

அவன் அன்னையும் எப்போதும் அவள் உடலை பற்றி தான் கவலை பட்டு பேசுவார்கள்.அதே போல் அவளுக்கு என்ன பிடிக்கும் என்று கேட்டு தான் சமையலையே செய்வார்கள்.அவர் எப்போது இறந்தாரோ அன்றில் இருந்து சமைப்பதை விரும்பிய வரை சாப்பிட்டு எழுந்து விடுவாள். பாட்டிம்மாவுக்கு இது எல்லாம் கவனிக்க நேரம் இருந்தது இல்லை. நீண்ட வருடத்திற்க்கு பிறகு தன் தாய் போல் பேசும் கலையரசியின் பேச்சி பிடித்து போக தானாகவே அவர் என்ன சொன்னார் என்று கூட புரிந்துக் கொள்ளாமல் “சரிங்கத்தை நீங்க சொன்ன மாதிரி நான் நல்லா சாப்பிட்டு உடம்பை தேத்துகிறேன்.” என்று சொல்பவளை அதிசயத்துடன் பார்த்தார் பாட்டிம்மா.

நாம் இந்த கல்யாணத்திற்க்கு விருப்பமா என்று கேட்க தேவையே இல்லை போலவே என்று நினைத்துக் கொண்டே பரினிதாவிடம் “யம்மாடி நாங்கள் சொல்வதை தான் கேட்பது இல்லை. உன் மாமியார் சொல்வதையாவது கேட்கிறாயே அது வரை சந்தோஷம் தான்.” என்ற வார்த்தை தான் பரினிதாவை யோசிக்க வைத்தது.

இப்போ பாட்டிம்மா என்ன சொன்னார்கள் மாமியாரா என்று அதிர்ச்சியுடன் யாரையும் பார்க்காது ஆஷிக்கை பார்த்தாள். முதலில் இருந்தே தன் அன்னை பேசியதில் இருந்து அவளையே கவனித்துக் கொண்டு இருந்த ஆஷிக் தன் பாட்டிம்மா பேச்சிக்கு முகம் மாறியவளாக யோசிப்பதை பார்த்து விட்டு ஒ அம்மணிக்கு இப்போது தான் விளங்கியது போல் என்று நினைத்துக் கொண்டான்.

கடவுளே நான் இன்று ரிசப்ஷன் வேலை பார்த்த மாதிரி தான் என்று நினைத்துக் கொண்டே பரினிதாவின் அருகில் சென்று அவள் காதில் “நான் என்ன சொல்லி இருக்கிறேன் உன் படிப்பு பற்றி பேசாமல் நான் பார்த்துக் கொள்கிறேன். ஆனால் அதற்க்கு நீ நான் எது கேட்டாலும் ஆமாம் என்று சொல்ல வேண்டும் என்று சொன்னேன் தானே…?” என்ற அவன் பேச்சிக்கு பரினிதாவின் தலை தன்னால் ஆமாம் என்று தலையாட்டியது.

“குட் இதையே தான் மெயின்டன் செய்ய வேண்டும்.” என்று சொல்லி விட்டு பாட்டியிடம் “பாட்டிம்மா பரினிதாவிடம் ஏதோ கேட்க வேண்டும் என்று சொன்னீர்களே...இப்போதே கேட்டு விடுங்கள். நான் மாலை எங்கள் திருமணத்தை பற்றி கூற இருக்கிறேன்.”

என்ற அவன் பேச்சில் யாருக்கு திருமணம் என்று முழித்து இருந்தவளை பார்த்து பாட்டி “இவளிடம் என்ன கேட்பது அது தான் தெள்ள தெளிவாக விளங்குகிறதே…எங்கள் பேச்சை கேட்காதவள் உங்கள் அம்மாவின் பேச்சை கேட்பதிலேயே எனக்கு அவளின் விருப்பம் எனக்கு தெரிந்து விட்டதே என்று சொன்னவர்.

பரினிதாவிடம் “உனக்கு ஏத்த மாதிரியே அவள் இப்படியே இருக்கட்டும் என்று சொல்லி விட்டார். என்ன கல்யாணத்தை அடுத்த முகூர்த்தத்திலேயே முடிச்சிடலாமா…? என்ற கேள்விக்கு பதில் அளிக்காமல் ஆஷிக்கை பார்த்தாள்.

அதை பார்த்த பாட்டிம்மா பரவாயில்லையடி இப்பவே மாப்பிள்ளை மனசு ஏத்த மாதிரி தான் நடந்துக் கொள்கிறாய்.” என்ற பாட்டியின் வார்த்தை காதில் விழாதவளாக அப்போதும் ஆஷிக்கை தான் பார்த்திருந்தாள்.

ஆஷிக்கும் எதுவும் பேசாமல் பரினிதாவையே தான் பார்த்திருந்தான். அவனுக்கு தெரியும் தான் தலையாட்ட சொன்னால் அதை செய்வாள் என்று. அதற்க்காக தானே முன்பே அவளிடம் நான் என்ன சொன்னாலும் தலையாட்ட வேண்டும் என்று பேரம் பேசியது.

ஆனால் அதனை செய்யாது அவளாகவே அவள் சம்மதிக்க வேண்டும் என்று ஒரு எதிர் பார்ப்போடு அவளையே பார்த்திருந்தான்.அவன் கண்களில் அவள் எதைகண்டாளோ...தன் பாட்டியிடம் வாய் திறந்தே “எனக்கு சம்மதம் பாட்டிம்மா.” என்று சொல்லி விட்டு ஆஷிக்கை பார்த்து சிரித்து விட்டு சிட்டாக தன் அறை நோக்கி பறந்தாள்.

அவள் பின் செல்ல நினைத்த காலை கஷ்டப்பட்டு கட்டுபடுத்திக் கொண்டு ஒரு மனநிறைவுடன் தன் அன்னையுன் தன் இல்லம் சென்றடைந்தான் .

அத்தியாயம்---28

அன்று மாலை ஆஷிக் கண்ணாடி முன் நின்று மிக நிதானமா அனைத்தும் சரியாக இருக்கிறதா...என்று முன்னும் பின்னும் திரும்பி பார்த்துக் கொண்டான். தன் உருவத்தை எப்போதும் தன்னை இந்த அளவுக்கு கண்ணாடி முன் பார்த்தது கிடையாது.தன்னை கண்ணாடில் பார்த்துக் கொண்டே அவளுக்கு நான் பொருத்தமாக இருப்பேனா...இல்லை வயது கூடி தெரியுமா...என்ற கவலையிலேயே கண்ணாடி முன்னையே நின்றுக் கொண்டு தன்னை அளவு எடுத்துக் கொண்டு இருந்தவனை கலையரசியின் குரல் அவனின் கவனத்தை கலைத்தது.

“என்ன ஆஷிக் ரெடியாகிட்டியா…? என்று கேட்டுக் கொண்டே ஆஷிக்கின் அறை வாயிலில் வந்து நின்றார்.

அங்கு தன் மகன் கண்ணாடி முன் நிற்பதை பார்த்துக் கொண்டே அவன் அருகில் சென்று “என்ன ஆஷிக் இன்னுமா கிளம்ப வில்லை.” என்று கேட்டதற்க்கு.

“கிளம்பி விட்டேன் அம்மா.” என்று சொன்னவன் ஏதோ கேட்க வாய் திறந்து பின் மீண்டும் அமைதியாக இருக்கும் மகனை பார்த்து.

“ஆஷிக் என்னிடம் ஏதாவது கேட்கனும் என்றால் கேள்ப்பா...என்னிடம் என்ன தயக்கம் உனக்கு.”

“இல்லைம்மா எனக்கு வயது கூடி தெரியவில்லை தானே…?”

“ஏண்டா உனக்கு இந்த எண்ணம். என் மகனுக்கு என்ன அவன் ராஜா மாதிரி இருக்கான்.நீ எதற்க்கு கேட்கிறே என்று எனக்கு தெரியும்.பரினிதா சின்ன பெண் மாதிரி இருக்கிறா என்று தானே... அதற்க்கு காரனம் அவள் ரொம்ப ஒல்லியா இருப்பது தான் ராசா. அதனால் நீ கவலையே படதே அடுத்த மூகூர்த்தத்திலேயே கல்யாணத்தை முடித்து விட்டு அவளை இந்த வீட்டுக்கு கொண்டு வந்து அவளுக்கு பிடித்த மாதிரி சமைச்சி கொடுத்து ஒரு மாதத்திலேயே அவளை பத்து கிலோ ஏத்து காமிக்கிறேனா...இல்லையான்னு பாரு”

என்ற தன் அன்னையின் பேச்சில் சிரித்துக் கொண்டே “பாத்திங்களா...இப்பவே உங்க மாமியார் கொடுமையை காண்பிக்கிறீங்களே…” என்ற மகனின் பேச்சில் குழம்பி போய் “நான் எங்கடா மாமியார் கொடுமையை காட்டினேன். அவள் உடம்பை ஏத்துவதாக தானே...சொன்னேன்.”

“நான் அதை தான் சொல்கிறேன். இப்போ இருக்கும் பெண்களுக்கு உடல் ஆரோக்கியத்தை விட உடல் மெலிவு தான் முக்கியம். நீங்கள் இப்படி சொன்னால் அது கொடுமை தானே…” என்ற மகனின் பேச்சில்.

“நிஜமா தான் சொல்கிறயா...அப்போ நம்ம மருமகள் பெண் இதுக்கு தான் சாப்பிடமா அப்படி ஒல்லியா இருக்கிறளா…” என்று கேட்டதற்க்கு.

“சேச்சே மத்த பெண்கள் எப்படி என்று எனக்கு தெரியாது. ஆனால் என் பேபிம்மா அப்படி கிடையாது.சின்ன வயது முதலே ஆஸ்ட்டல் சாப்பாடு பிடிக்காமல் தான் இப்படி இருக்கிறாள்.” என்று சொன்னவனை பார்த்த கலையரசி.

“உனக்கு அந்த பெண்ணை ரொம்ப பிடிச்சிடிச்சி என்று உன் பேச்சிலேயே தெறிகிறது. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு ஆஷிக்.நீ எப்பவும் இறுக்கமாகவே இருந்துடுவியோன்னு நான் பயந்து போயிட்டேன். பரவாயில்லை என் மருமகள் பொண்ணு சமார்த்திய சாலிதான் திருமணத்துக்கு முன்னவே உன்னை மாத்திட்டாலே…”

தன் அம்மாவின் வாயில் இருந்து பரினிதாவை மருமகள் என்று சொன்னது அவனுக்கு அவ்வளவு சந்தோஷத்தை கொடுத்தது. அந்த சந்தோஷத்துடனே தன் அன்னையுடன் பங்ஷன் நடைபெறும் ஒட்டலுக்கு சென்றடைந்தான்.

அந்த ஒட்டல் கார் பார்க்கிங்கில் ஆஷிக்கின் கார் டிரைவர் கார் நிறுத்தியதும் தங்களுக்கு முன்னவே சித்தார்த்தின் கார் இருப்பதை பார்த்து விட்டு கார் டிரைவர் வந்து கார் கதவை திறக்கும் வரை கூட பொறுமை காக்காமல் தானே திறந்துக் கொண்டு தன் அன்னைக்கும் திறந்து விட்டு அவரை அழைத்துக் கொண்டு இரண்டடி நடந்தவன் பின் கார் டிரைவரிடம் டிக்கியில் உள்ள பொருட்களை எடுத்து வருமாறு சொல்லி விட்டு பரினிதா குடும்பத்திற்க்கு என்று அவன் முன்பே புக் செய்து வைத்திருந்த அறை நோக்கி சென்றான்.

ஆஷிக் அந்த அறை வாசலில் நின்று கதவை தட்ட கைய் கொண்டு போகும் போது பரினிதாவே கதவை திறந்தாள்.எப்போதும் அவனை பார்த்தவுடன் சகஜமாக பேசும் பரினிதாவுக்கு ஏனோ அன்று அவனை பார்த்து பேசமுடியாது போனது.

அதற்க்கு காரணம் தான் அவனை திருமணம் செய்ய சம்மதித்தது ஒரு காரணம் என்றால் மற்றொறு காரணம் அவன் பார்வையாக கூட இருக்கலாம்.ஆம் அன்று பரினிதா ஆஷிக் வாங்கி கொடுத்த சாரியை தான் கட்டிக் கொண்டு இருந்தாள். அதனை அவன் வாங்கும் போது அவளுக்கு எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து வாங்கியதை விட நேரில் இன்னும் அழகாகவும், அவளுக்கு பொருத்தமாகவும் இருந்தது.

அதுவும் ஆருண்யா அவளுக்கு பார்த்து பார்த்து மேக்கப் செய்ததில் இன்னும் அழகாக தெரிந்தாள். அவள் இது வரை உதட்டுக்கு லிப்ஸ்ட்டிக் கூட வைத்தது கிடையாது. இப்போது அவள் அண்ணி தீட்டிய ஐய்லைய்னரிலும்,ரூஜ்ஜீலும், இன்னும் மினு மினுப்பாக காட்சி தந்தாள்.

அவள் எந்த வித அலங்காரம் செய்யாத போதே...மயங்கியவன். இப்போது சொல்லவும் வேண்டுமோ…பேச்சற்று அவளை உச்ச தலையில் இருந்து உள்ளங்கால் வரையில் அளவிட்டுக் கொண்டு இருந்தான். அவனின் அந்த பார்வை பரினிதாவுக்கு புது வித மயக்கத்தை கொடுத்தது.

அவனின் அந்த பார்வை தன்னை பெண்ணாக உணர செய்தது. அவளாள் அங்கு நிற்கவும் முடியவில்லை, அதே போல் அந்த இடத்தை விட்டு போகவும் மனது இல்லை. அவள் இரு வேறு நிலையில் இருந்த போது அறையின் உள்ளிருந்து பாட்டிம்மாவின் “என்ன இன்னுமா..போக வில்லை. சீக்கிரம் போய் கீழே சித்தார்த் பூ கொண்டு வந்திருப்பான் வாங்கி வா ..” என்ற குரலுக்கு

“இதோ போகிறேன் பாட்டிம்மா” என்று அப்போது தான் கனவில் இருந்து முழித்தவளாக கூறியதை கேட்ட ஆஷிக்.

“நீ வேண்டாம் நான் போய் வாங்கி வருகிறேன்.” என்று சத்தமாக கூறியவன்.

அவள் காதருகில் “ இன்று மிக அழகாய் இருக்கே.” என்று சொன்னதோடு அவன் பார்வை அவளை என்னவோ செய்தது.அவன் பேச்சிக்கு எதுவும் பேசாமல் அவன் முகத்தையே பார்த்திருந்தாள்.

“என்ன பேபிம்மா ஒன்றும் சொல்லமாட்டேங்கிறே...என்ன பேச்சி மறந்து போச்சா…” என்று அவளை சீண்டலுக்கு நல்ல பலன் இருந்தது.

“யாருக்கு பேச்சி மறந்து போச்சி” என்று சிலுத்தெழுந்து விட்டாள்.

“இப்படி தான் என்னிடம் பேசனும். நீ பேசாமல் இருந்தால் யாரோ மாதிரி எனக்கு தெறிகிறது.” என்றது தான் தாமதம்.

“என்னை பார்த்து உங்களுக்கு யாரோ மாதிரி தெரிகிறதா...தெரியும் ,தெரியும். இனி யாரை பார்த்தாலும் என்னை மாதிரி தான் தெரியனும் சொல்லிட்டேன்.” என்று சொல்லி விட்டு போனவளை வியப்புடன் பார்த்தான்.

என் பேபிம்மாவுக்கு இப்படி எல்லாம் கூட பேச தெரியுமா...பரவாயில்லை நான் ரொம்ப கஷ்டபட தேவை இல்லை என்று நினைத்துக் கொண்டே சித்தார்த்திடம் இருந்து பூ வாங்க கீழே சென்றான்.

பின் ஒருவர் பின் ஒருவராக வர பங்ஷன் கலைகட்டியது.பரினிதா தன் அண்ணியை விட்டு அங்கு இங்கு நகரவில்லை. அவள் பக்கத்திலேயே இருந்து வந்தவர்கள் கொடுக்கும் பரிசு பொருட்களை வாங்கி பொறுப்பாக பக்கத்தில் வைத்துக் கொண்டு இருந்தாள். ஆஷிக் மேடையில் ஒரு காலும் கீழே ஒரு காலுமாக மாறி ,மாறி அவன் ஏறி இறங்கியதை பார்த்த ஆஷிக்கின் மனேஜர் ஸ்ரீதர்

“ சார் வந்தவர்களை நான் வரவேற்று மேடைக்கு அனுப்பி வைக்கிறேன்.நீங்கள் மேடம் அருகில் போய் நில்லுங்கள்.” என்று சொல்லி விட்டு ஒரு நமுட்டு சிரிப்புடன் வாசலை நோக்கி சென்றான்.

அவன் தன்னை கிண்டல் செய்கிறான் என்று அறிந்தும் அவனை ஒன்று சொல்லாமல் அவன் கிண்டலையும் ரசித்தான். பேபிம்மா என்னை என்ன மாதிரியாக்கிட்டே பார்த்தியா...இந்த மனேஜர் எங்கிட்டே பேசவே அப்படி யோசிப்பான் இப்போ என்ன வென்றால் என்னையே கிண்டல் செய்கிறான்.

பரவாயில்லை பேபிம்மா இதுவும் நன்றாக தான் இருக்கிறது.என்று நினைத்துக் கொண்டே மேடையேறி சித்தார்த்தின் பக்கத்தில் நின்றுக் கொண்டான்.தன்னை பார்த்து சிரிப்பவர்களிடம் தலையாட்டிக் கொண்டே இருந்தாலும் நிமிடத்துக்கு ஒரு தடவை பரினிதாவையும் பார்ப்பதை மறக்க வில்லை.

பங்ஷன் முடியும் தருவாயில் ஆஷிக் மைக்கை பெற்றுக் கொண்டு தன் குடும்ப உறுப்பினர் அனைவரையும் மேடை ஏற்றி “இன்று என் சகோதரியின் ரிசப்ஷன் மட்டும் அல்ல. என் திருமணத்தின் நிச்சயமும் இன்றே…” என்று சொல்லி விட்டு பரினிதாவை பார்த்தான்.

அவன் எதிர் பார்த்த மாதிரியே இவ்வளவு நேரம் சிரித்துக் கொண்டும் தன் அண்ணியிடம் அரட்டை அடித்துக் கொண்டும் இருந்தவள். இவன் அறிவிப்பால் கொஞ்சம் பதட்டத்துடன் தன் நகத்தை கடிக்க ஆராம்பித்து இருந்தாள்.

அஷிக் கண்ணாலயே தன் அருகில் அழைத்து மைக்கை ஒரு கையால் மூடிக் கொண்டே “குட்டிம்மா நான் பக்கத்தில் இருக்கும் போது உனக்கு என்ன பயம்.” என்று சொன்னதும் சுச்சு தட்டியது போல் அவள் முகம் பிரகாசமாக மாறியது.

அதனை பார்த்த ஆஷிக் “இப்படி தான் இருக்க வேண்டும்.” என்று சொன்னவன் அவள் முகத்தை தன் கட்சீப்பால் துடைத்தான்.

அதனை பார்த்த ஆரு “ஆஷிக் இதெல்லாம் அப்புறம் வைச்சிக்க கூடதா...பார் எல்லோரும் உங்களையே தான் பார்க்கிறாங்க. முதலில் சொல்ல வந்ததை சொல்லி முடி.” என்றதும்.

சிரித்துக் கொண்டே மைக்கின் மீது இருந்த கையை எடுத்து விட்டு “என் வருங்களா மனைவி” பரினிதா என்று அவன் சொல்வதற்குள் அங்கு இருந்த அனைவரும் பரினிதா என்று சொன்னதை கேட்டு ஆருவிடம் “ஏய் முந்திரி கொட்டை எனக்கு முன்னவே நீ சொல்லிட்டியா…?”

அதற்க்கு ஆரு வாய் திறப்பதற்குள் சித்தார்த் “இப்போ எதற்க்கு அவளை திட்டுறே...நீ வழியர வழிசலில் தெரியாமல் இருந்தால் தான் அதிசயம்.” என்று சித்தார்த் வாய் மூடுவதற்குள்.

பரினிதா “அவர் யாரிடம் வழிந்தார் என்னிடம் தானே…” என்று சிலிர்த்து எழுந்துக் கேட்டாள்.

“அப்படி சொல்லு பேபி.” என்று அங்கு இளைவர்களின் கல கலப்பில் முதயவர்களின் மனது நிறைந்து நிறைவாக அந்த விழாவை முடித்தார்கள்.அன்று அனைவரும் சித்தார்த்தின் வீட்டுக்கு தான் அனைவரும் போவதாக முதலில் முடிவாகியது.

ஆனால் ஆஷிக் மட்டும் அனைவரையும் பார்த்து “நீங்கள் எல்லோரும் போங்க நான் நாளை வருகிறேன்.” என்று கூறியதற்க்கு அனைவரும் ஒத்துக் கொண்டனர். என்ன இருந்தாலும் திருமணத்திற்க்கு முன்னே வந்து தங்குவதற்க்கு தயங்குகிறான் என்று அனைவரும் நினைத்துக் கொண்டனர்.

ஆனால் சித்தார்த் மட்டும் “இந்த இரவு நேரத்தில் அப்படி என்ன முக்கியமான வேலை.” என்று கேள்வி எழுப்பியதை பார்த்து ஆஷிக் வாய் திறப்பதற்க்குள் பாட்டிம்மா… “சித்து என்ன பேச்சி பேசுரே ஆஷிக் உனக்கு மச்சான் மட்டும் இல்லை. நம் வீட்டின் மாப்பிள்ளையும். அதனால் மரியாதையாக பேசு.” என்று அதட்டியத்துக்கு.

சித்தார்த் மனதுக்குள் இந்த பாட்டிம்மா வேறு நிலமை புரியாமல் பேசுவாங்க என்று நினைத்தன் வெளியில் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருந்தான். ஆனால் ஆஷிக் மற்றொரு காரில் ஏற போகும் போது அவன் அருகில் சென்று “வேண்டாம் ஆஷிக் அந்த அமைச்சரை ஒன்றும் செய்யாதே…” என்றதற்க்கு.

“என் பரினிதாவை பயப்படுத்தியவனை அப்படியே விட்டு விட சொல்கிறயா...சித்தார்த். அவன் உயிர் போகாது அதற்க்கு நான் உத்திரவாதம் தருகிறேன். ஆனால் உயிர் போய் இருந்தால் நல்லா இருந்து இருக்கலாமோ… என்று அவன் கருதுவான்” என்று கூறிவிட்டு தன் காரை எடுத்துக் கொண்டு அமைச்சரை அடைத்தி வைத்திருந்த கேளாம்பாக்கத்தில் உள்ள தன் குடோனுக்கு சென்றான்.

காரை விட்டு இறங்கியதும் உள்ளே சென்ற ஆஷிக் அமைச்சரை கட்டி வைத்திருந்த இடத்தின் அருகில் சென்று அந்த கட்டை அவிழ்த்தவாரே…. நீ போகலாம்.” என்ற இரு வார்த்தையோடு முடித்துக் கொன்டவனின் பேச்சை நம்ப முடியாமல் பார்த்தான் அமைச்சர்.

ஆஷிக் திரும்பவும் “நீ போகலாம்.” என்று சொல்லி விட்டு அங்கு இருந்த தன் ஆட்களிடம் “நீங்களும் போகலாம்” என்று சொல்லும் போதே... சித்தார்த்திடம் இருந்து அழைப்பு வந்தது.

அதை தான் அட்டென் செய்யாமல் அமைச்சரிடம் கொடுத்து விட்டு சிறிது தள்ளி நின்றுக் கொண்டான். சித்தார்த் அமைச்சரிடம் என்ன கேட்டானோ என்று தெரியவில்லை. ஆனால் அமைச்சர் சொன்ன விட்டு விட்டார்.ஆமாம் சார் நிஜம் தான் என்னை விட்டு விட்டார். என்று சொல்லி விட்டு போனை ஆஷிக்கிடம் கொடுத்த அமைச்சர் “என்னை மன்னித்து விடு ஆஷிக் தம்பி.” என்றவனின் பேச்சை போதும் என்று வாய் திறந்து சொல்லாமல் சைகையில் காமித்து பின் போகவும் என்று அதே கைய் அசைவில் சொல்லி விட்டு அவ்விடத்தை விட்டு அகன்றான்.

அந்த அமைச்சர் ஆஷிக் தன்னை ஒன்றும் செய்யாமல் விட்டதுக்கு சித்தார்த் தான் காரணம் என்று எண்ணிக் கொண்டு அவ்விடத்தை விட்டு அவசர அவசரமாக சென்றான் என்றால். ஆஷிக்கின் மனேஜர் இது பின் என்ன மறைந்து இருக்கிறதோ என்று சிந்தனையுடன் சென்றார்.

வீட்டுக்கு வந்த ஆஷிக் அங்கு யாரும் இல்லாததை பார்த்து ஒரு வெருமை சூழ்ந்தது.பேசாமல் நாமும் அவர்களுடனே பரினிதா வீட்டுக்கு சென்று இருக்கலாமோ...என்று எண்ணினான்.

அவன் மாப்பிள்ளை முறுக்கு என்ற காரணத்துக்கு எல்லாம் பரினிதா வீட்டுக்கு செல்லமால் இல்லை.தனிமையில் அவன் செய்யமுடிக்க வேண்டிய வேலை ஒன்று இருந்ததால் தான். தன் அம்மாவை பரினிதா வீட்டுக்கு அனுப்பி விட்டு தன் வீட்டுக்கு தனியே வந்தான்.

வந்தவன் ஒரு போன் காலுக்காக தன் போனையே பார்த்திருக்க போன் வந்தது.ஆனால் தான் எதிர் பார்த்த இடத்தில் இல்லாமல் வேறு ஒரு இடத்தில் இருந்து வந்தது. அந்த நம்பரை சேவ் செய்து வைத்திருந்த பேபிம்மா என்ற வார்த்தையை ஒரு முறை தானும் மென்மையாக ஒரு தடவை படித்து விட்டே போனை ஆன் செய்து காதில் வைத்து

“என்ன பேபிம்மா இன்னும் தூங்கலையாடா…? என்ற கேள்விக்கு பதில் அளிக்காமல் பரினிதா.. “அந்த அமைச்சரை என்ன செஞ்சீங்க…?” என்று மறுகேள்வி எழுப்பினாள்.

“நான் என்றும் செய்யவில்லையே…” என்ற அவன் பதிலில் நம்பிக்கை வராமல் “நிஜமா…”

“நிஜம் பேபிம்மா...வேண்டும் என்றால் உன் அண்ணாவையே கேள்.” என்ற அவன் பேச்சில் பரினிதாவின் குரல் கொஞ்சம் உள்வாங்கி “நிஜமாவே அவனை விட்டு விட்டீர்களா மாமா.”

“ஏன் பரினிதா நான் அவனை என்ன செய்து இருக்கனும் என்று நீ எதிர் பார்க்கிறே…”

“ஒன்னும் இல்லை.” என்று சொல்லி விட்டு போனை வைத்தவளுக்கு சொன்ன மாதிரி நான் என்ன எதிர் பார்த்தேன். நானும் ஆஷிக் அந்த அமைச்சரை ஒன்றும் செய்யக்கூடாது என்று தானே கருதினேன்.

அதே தானே அவனும் செய்தான்.அதற்க்கு நான் சந்தோஷப்படாமல் ஏன் ஒரு ஏமாந்த உணர்வு வருகிறது என்று நினைத்தவளுக்கு அப்போது தான் அவளுக்கு தன் மனதின் எண்ணம் விளங்கியது.

அது ஆஷிக் தனக்காக அந்த அமைச்சரை சும்மா விட மாட்டான். கண்டிப்பாக கொலை கூட செய்து விடுவான் என்று பயந்து தான் பரினிதா ஆஷிக்குக்கு போன் செய்தது.ஆனால் ஆஷிக் இப்படி சட்டென்று அவனை விட்டு விட்டேன் என்று கூறியதும். இவ்வளவு தான் ஆஷிக் தன் மீது வைத்திருக்கும் காதலா...என்று நினைக்கும் போதே…ஆஷிக் தன்னை காதலிக்கிறனா…? என்று தனக்குள்ளேயே…. கேள்வி கேட்டுக் கொண்டவள்.

நான் அவனை காதலிக்கிறேனா….என்று மற்றொறு கேள்வியும் தன்னால் எழுந்தது.முதல் கேள்விக்கான விடை தெரியாவிட்டாலும் இரண்டாம் கேள்விக்கான விடை தன் மனதில் நிகழ்ந்த நினைவுகள் மூலம் அவளுக்கு புரிய ஆராம்பித்தது.

முதலாவதாக தான் முதலில் ஸ்ரீதரை மணந்துக் கொள்வேன் என்று சொன்ன போதே...அதை ஆஷிக் மறுத்து விட்டு அவனை எல்லாம் நீ மணக்க கூடாது என்று அவன் திட்டிய போது தனக்கு கோபம் வராமல் ஏன் நிம்மதி ஏற்பட்டது.

பின் எந்த ஒரு விஷயத்துக்கும் தன் மனம் ஏன் ஆஷிக்கையே நாடியது.தன் தனிமையை யாரிடமும் சொல்லதா நான் ஏன் ஆஷிக்கிடம் மட்டும் சொன்னேன். கடைசியாக தன்னை மணக்க கேட்ட போது அவன் கண்ணை பார்த்து விட்டு சிறிதும் யோசிக்காமல் சம்மதம் சொன்னனே...அதுவும் அந்த சம்மதம் எனக்கு மகிழ்ச்சி தானே ஏற்பட்டது.

கடைசியாக அவன் வாங்கி கொடுத்த புடவை என்று தெரிந்ததும் யாரும் சொல்லாமலேயே அதனை கட்டிக் கொண்டு கண்ணாடியில் பார்த்த போது இதில் என்னை பார்த்தால் ஆஷிக் என்ன நினைப்பான் என்று தானே நினைக்க தோன்றியது.

தான் கற்பனையிலும் நினையதா ஒரு பார்வை அவன் தன்னை பார்த்த போது தன் உடலில் ஒரு மாற்றம் ஏற்பட்டதே...அப்போ அது பெயர் தான் காதலா…? தன் தோழிகள் கூட ஏதோ சொல்லிக் கொண்டு இருப்பார்களே ...அய்யோ அவர்கள் பேசுவதை அப்போதே கவனித்து கேட்டுக் கொண்டு இருக்கலாம். நாம் எப்போதும் செய்வது போல் அவர்கள் பேச்சை காதில் வாங்காது வேடிக்கை பார்த்தது தவறு என்று எண்ணியவளாக பல பல விதமாக யோசித்து கடைசியில் ஆஷிக் மீது தனக்கு ஏற்பட்டது காதல் தான் என்று உணர்ந்தவளாக போனை எடுத்து ஒரு வித பதட்டத்துடன் அவனின் பெயர் கொண்ட எண் மீது விரல் வைப்பதும் பின் எடுப்பதுமாக விளையாடி கொண்டு இருந்தவளுக்கு அந்த எண்ணின் அழைப்பு மூலமே விளையாட்டுக்கு முற்று புள்ளி வைக்க பட்டது.
 
Top