Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

நின் விரல் தீண்ட....2

  • Thread Author
அத்தியாயம்…2

தன் தோழி சாதனா ஆன் லைனில் வந்து விட்டது தெரிந்ததும் ஸ்ருதி உடனே அவளை அழைத்து விட்டாள்…

அழைப்பை ஏற்றதும் சாதனா…. “என்ன மேடத்துக்கு அதிசயமா என் நியாபகம் எல்லாம் வந்து இருக்கு…?” என்று கிண்டலாக கேட்டவளிடம்

ஸ்ருதி.. “எனக்கு உன் நியாபகம் இருக்கு.. சந்தேகம் என்றால் உன் போனை எடுத்து பாரு.. அதுல எத்தனை மிஸ்ட் கால் என்னுடையது வந்து இருக்கு என்று தெரியும்… மேடம் தான் ரொம்ப பிஸி…” என்று சொன்னதும்…

உடனே சாதனா… “சாரி சாரிப்பா… உனக்கே தெரியும்.. என் வேலையில் நான் எத்தனை பிரச்சனையை பேஸ் பண்றேன் என்று.. உன் மிஸ்ட் கால் பார்க்கும் போது எல்லாம் அன் டைம் ஆகி இருக்கும்.. நீ அந்த டைமில்…” என்று தன் பேச்சை இழுத்து நிறுத்த.

ஸ்ருதி… “ உன் கற்பனையை கொஞ்சம் நிறுத்து சாது… நான் உன்னை கூப்பிட்டதே முக்கியமான ஒரு விசயம் பேச தான்..” என்று சொன்ன ஸ்ருதி பக்கத்து வீட்டு பெண் சொன்னதை சொன்னவள்…

உன் வாட்ஸ் சாப்புக்கு அனுப்பிய மெசஜை கேட்டுட்டியா…? என்றதற்க்கு சாதனா.

“ம் கேட்டுட்டேன்… ஸ்ருதி…” என்றதும்.

“இப்போ எது எதுக்கு என்ன ரேட் என்று சொல்லு…” என்றதும் சாதனா சொல்ல ஆரம்பிக்க..

உடனே ஸ்ருதி… “ ஏய் இரு சாது.. நான் நீ சொல்றதை ரெக்கார்ட் பண்றேன்.. எனக்கு இது எதுவும் தெரிய மாட்டேங்குது.” என்று சொன்னவள் சொன்னது போல ஸ்ருதி சாதனா சொன்னதை தன் கை பேசியில் சாதனா பேசுவதை பதிவு செய்ய ஏதுவாக செய்து கொண்டவள்..

இந்த பேச்சு பேசும் போது சாதனா ஏதோ பக்கத்தில் இருப்பவர்களிடமும் மெல்ல பேச கடையில் இருக்கா போல. யாராவது கஸ்ட்டமர் வந்து இருப்பாங்க என்று நினைத்து தன் பேச்சை முடித்து கொண்டு வைக்கும் சமயம் தான்.

அவளுக்கு தன் புருவ திருத்தம் செய்ய வேண்டும் என்பதே அவளின் நியாபகத்திற்க்கு வந்தது.. கணவன் சொன்னது போல தான் அவளின் புருவம் அடர்ந்து இருக்கும்.. அதை திருத்தம் செய்யும் போது அவளுக்கு அத்தனை வலிக்கும்.. அதனால் தான் அவளுக்கு ப்யூட்டி பார்லர் என்றாலே கால தூரம் ஓடி விடுவாள்

ஆனால் சாதனா என்றால் இவளுக்கு கொஞ்சம் பார்த்து செய்வாள்.. அதன் தொட்டு நாளை எந்த டைம் அவள் கடையில் இருப்பாள் என்று கேட்க வேண்டி வைக்கிறேன் என்று சொன்னவள் தன் கை பேசியை அணைக்காது மீண்டுமே அவள் காதில் வைத்தாள்…


சாண்டில்யன் அப்போது தான் தன் கருப்பு அங்கியை கழட்டி கொண்டே தன் கேபினுக்கு வந்து அமர்ந்தது…

தன் முன் அவனின் ஜீனியர் வைத்த பழரசத்தை எடுத்து குடித்தவனுக்கு இத்தனை நேரம் தொண்டை கிழிய வாதாடி வந்தவனுக்கு அந்த பழரசம் அவன் தொண்டைக்கு இதமாக உள்வாங்கியது…

அவன் பழரசத்தை குடித்து முடிக்கும் வரை காத்து கொண்டு இருந்த அவனின் ஜீனியர்… சாண்டில்யனின் கை பேசியை அவனிடம் கொடுத்த வாறே.

“சார் அம்மா இரண்டு தடவை கால் பண்னிட்டாங்க சார்..” என்று சொன்னதுமே தான் சாண்டில்யனுக்கு இன்று தன் தங்கை மகளின் மஞ்சள் நீராட்டு விழாவுக்கு தான் செல்ல வேண்டும் என்பதே அவனின் நியாபகத்திற்க்கு வந்தது…

ஜீனியர் கொடுத்த தன் கை பேசியை பெற்று கொண்டவன் …

ஜீனியரிடம்.. நாளை வாதாட வேண்டிய கேசை பற்றி சொன்னவன். அதற்க்கு எடுக்க வேண்டிய குறிப்பை எடுத்து வைக்கும் மாறும் சொல்லி அனுப்பினான்.

சாண்டில்யன் அவன் வாதாடும் போது தன் கை பேசியை எப்போதும் தன் ஜூனியர்களிடம் கொடுத்து விட்டு தான் செல்வான்..

கை பேசி வாங்கியதும் முதலில் தன் அம்மாவை தான் அழைத்தான்…

“வசும்மா… என்று சாண்டில்யன் அழைத்ததும்..

அந்த பக்கம் இருந்து சாண்டில்யனின் அன்னை வசுமதி…

“என்…ன சா…ண்டில்யா…. கா..லை… சொல்லி…” என்று அன்னை பேச ஆரம்பிக்கும் போதே சாண்டில்யன்..

“வசும்மா இப்போ தான் வசும்மா என் ஆர்க்யூமெண்ட் முடிந்தது.. இதோ கிளம்பிடுறேன்…” என்று தன் அன்னையை பேச விடாது பட பட என்று பேசினான்…

அப்போது கூட வசுமதி… “ சாண்டில்யா உன் தம்பி உன் தம்பி பொண்டாட்டி எல்லாம் எப்போவோ கிளம்பிட்டாங்க… போப்பா.. அந்த குழந்தைக்கு நீயும் ஒரு தாய் மாமன் தானே போ…” என்று இந்த பேச்சையுமே வசுமதி கடினப்பட்டு தான் பேசியது.

இந்த முறை சாண்டில்யன் தன் அன்னையின் பேச்சை இடை மறிக்க எல்லாம் இல்லை.. அன்னை சொன்ன உன் தம்பியும் தம்பி மனைவியும் கிளம்பி விட்டாங்க என்ற அந்த பேச்சிலேயே அவன் மனது நின்று விட்டது.

பின் வசுமதி… “ சா..ண்டில்யா சா…ண்டில்யா..” என்று இரண்டு முறை அழைக்கவும் தான் நிகழ்வுக்கு வந்தவன்…

“சரி வசும்மா இப்போ கிளம்பிடுறேன்…” என்று சொன்னவன் ..சொன்னது போலவே கிளம்பியும் விட்டார்.

கார் ஓட்டுனர் செலுத்த பக்கத்தில் அமர்ந்து தான் சாண்டில்யன் சென்றது… எப்போதுமே ஓட்டுனரோடு தான் இவனின் காரின் பயணங்கள் பெரும் பாலும் இருக்கும்.. காரணம் பயணத்தின் போது கூட ஏதாவது வழக்கு சம்மந்தமான விசயங்களை குறிப்பு எடுத்து கொண்டு செல்வான்..

இன்று தன் பக்கத்தில் கிடந்த கேஸ் கட்டுக்களின் மீது பார்வை செல்லவில்லை… அவனின் தம்பி வாசு தேவன் தன்னை அழைத்து இருக்கிறானா..? என்று தன் கை பேசியை எடுத்து பார்த்தான்… தெரியும்.. அழைத்து இருக்க மாட்டான் என்று… ஏதோ ஒரு நப்பாசையில் பார்த்தான். அவன் நினைத்தது போல் தான் அழைக்கவில்லை..

தம்பி தான் அழைக்கவில்லை என்று பார்த்தால், அவனின் தங்கை.. நானுமே அவள் மகளுக்கு ஒரு தாய் மாமன் தானே….

சென்ற வாரம் தான் தன் மகளுக்கு சடங்கு வைத்து இருக்கிறேன் என்று அந்த வீட்டின் வாசுதேவ்வுக்கு அடுத்து பிறந்த பெண்ணான சுமதி அழைப்பிதழை படுத்த படுக்கையாக இருக்கும் இவர்களின் அன்னையிடம் கொடுத்து விட்டு முறைப்படி அனைவரையும் பொதுவாக தான் தங்கையும் தங்கை கணவனும் அழைத்தது... அந்த அனைவரிலும் இவனுமே அடக்கம் தான்.

ஆனால் அதன் பின் தன் இரண்டாம் அண்ணனிடம்… “ ண்ணா என் பொண்ணுக்கு நீ இது செய்யனும்.. இத்தனை தட்டு வைக்கனும்..” என்று உரிமையாக கேட்டவள் பக்கத்தில் நின்று கொண்டு இருந்த தன்னிடம் ஒன்றுமே கேட்காது சென்றவளின் செய்கையில் அவன் தனித்து நிற்பது போல உணர்ந்தான்.

அப்போது கூட தன்னை தேற்றிக் கொண்டவனாக தன் தம்பி வாசுதேவனிடம்…

“சுமதி கேட்டது எல்லாம் செய்துடு வாசு.. நான் உன் பாங்க் அக்கவுண்ட்டுக்கு பணத்தை அனுப்பிடுறேன்…” என்று சொன்ன போது..

“பரவாயில்லை சாண்டில்யா… என் கிட்ட இருக்கு…” என்று விட்டான்.. அப்போ அந்த வீட்டில் நான் யார்….? அவன் மனதில் பெரிய கேள்வி குறி சமீபகாலமாக தோன்ற ஆரம்பித்து விட்டது…

ஒரு வீட்டிற்க்கு தத்து என்று நான் போய் விட்டதால் இவர்கள் என் உடன் பிறப்பு இல்லை என்று ஆகி விடுமா….?

ஆம் சாண்டில்யனை அவனின் ஏழாம் வயதில் அவன் சொந்த அத்தைக்கு குழந்தை இல்லாத காரணத்தினால் தத்து கொடுத்து விட்டார்கள்..

அப்போது இவனின் சொந்த பெற்றோரான விசுவநாதன் வசுமதிக்கு இரண்டு மகன்கள். இரண்டு மகள்கள் என்று முறையே ஒன்னரை வயது வித்தியாசத்தின் இடையே அனைவரும் பிறந்து விட்டனர் தான்..

ஆனால் அது என்னவோ சின்ன குழந்தைகளை தத்து எடுக்காது இவனின் அத்தை ராஜ ராஜேஸ்வரியின் கணவன்.. சோமசுந்தரம்.. ஏழு வயதான..

தன் தந்தையும் தாயும் தன் குழந்தைகளின் ஒருவரை தத்து கொடுக்கிறேன் என்று சொன்ன போது அவர் தன்னை தான் தத்து எடுத்து கொள்வதாக கூறிவிட்டார்.

காரணம் தனக்கு இந்த பெயரை வைத்தது தன் அத்தை என்பதினால் கூட இருக்கலாம். இல்லை நான் பார்க்க அப்படியே அத்தை போலவே இருப்பதினால் கூட தன்னை தேர்ந்தெடுத்தாரா என்று தெரியவில்லை…

ஏழு வயதில் எப்போதாவது விடுமுறைக்கு விளையாடிய வீடும் ஊரும் தான் இனி உன் வீடும் உன் ஊரும் என்று சொன்ன போது இளம் மனம் முதலில் அதை ஏற்று கொள்ள கடினமாக தான் இருந்தது…

தன் அம்மா அப்பா…இனி அத்தை மாமாவை அம்மா அப்பா என்று அழை என்று சொன்ன போது… குழம்பி இரண்டு அழைப்புமே சேர்த்து அழைக்க..

சோமசுந்தரம் தான்… “ சாண்டில்யா.. உனக்கு எப்படி கூப்பிட தோனுதோ… அப்படியே கூப்பிடு..” என்று சொல்லி விட்டார்..

எப்போதும் இது செய்.. என்று சொன்னால் தான் அதை செய்ய மனது ஏற்காது.. ஆனால் உன் விருப்பம் என்று சொல்லி விட்டால், யார் உன் விருப்பம் போல செய் என்று சொன்னார்களோ அவர்களின் விருப்பம் போல செய்ய தான் மனது சொல்லும்..

தன் பத்தாவது வயதில் தத்து எடுத்த தன் அத்தை மாமாவை அப்பா அம்மா என்று அழைக்க தொடங்கினான்.

தன் சொந்த அப்பா அம்மாவை வசும்மா… விசுப்பா என்று அழைத்தான். அதே போல தான் பிறந்த வீடு விடுமுறைக்கு வந்து போகும் வீடாக மாறியது..

இந்த மாற்றம் எல்லாம் அவனிடம் வலுக்கட்டாயமாக புகுத்தவில்லை… சோமசுந்தரமும்.. ராஜ ராஜேஸ்வரியும் இவன் மீது செலுத்திய அந்த உண்மையான அன்பில் தன்னால் அவர்களை தன் பெற்றோர்களாக ஏற்று கொண்டு.. உள்ளார்ந்து தான் அப்படி அழைத்தது…

தன்னை அவர்கள் தத்து எடுத்து கொண்டதில் சோமசுந்தரத்தின் கூட பிறந்தவர்களுக்கு விருப்பம் இல்லை..

ஒரு நாள் தங்கள் வீட்டிற்க்கு வந்து தன் அப்பாவின் தந்தையும் தம்பியும்…

“பிள்ளை இல்ல என்றால் இன்னொரு கல்யாணம் செய்து இருக்கனும்..” என்று அவர்கள் சொன்ன போது. சோமசுந்தரம் பார்த்த அந்த பார்வையில் அடுத்த பேச்சாக…

“ஏன் எங்க பசங்க எல்லாம் உங்களுக்கு பசங்களா தெரியலையா…? ஏன் எங்க பசங்களை யாராவது ஒருவரை தத்து எடுத்தா ஆகாதா…? பொண்டாட்டி தம்பி மகனை தத்து எடுத்து இருக்க.. எங்க பசங்க தானே உனக்கு ரத்த சம்மந்த உறவு… உன் பொண்டாட்டியோட தம்பி பெத்தது உனக்கு எப்படி ரத்த உறவா ஆகும்.. உன் சொத்துக்காக நீ எனக்கு குழந்தையை தத்து கொடு என்று கேட்டதும் கொடுத்து விட்டாங்களா….?”

இத்தனை பேச்சுமே… சோமசுந்தரத்திடம் இருக்கும் சொத்துக்காக தான் அவர்கள் பேசுவது… அதை வைத்து இவர்கள் சொல்ல.

அதற்க்கு இவனின் அப்பா. (இனி சோமசுந்தரத்தையும், ராஜ ராஜேஸ்வரியையும் சாண்டில்யனின் அப்பா அம்மா என்றே குறிப்பிடுகிறேன் வாசகர்களே…)

“எனக்கு யார் யார் எப்படி என்று தெரியும்.. தெரிந்து தான் நான் என் மச்சான் மகனை தத்து எடுத்தேன்.. அதோட யார் யார் எப்படி என்று எனக்கு நீங்க சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை… தினம் தினம் கிரிமினல்களை பார்த்துட்டு இருக்க எனக்கு தெரியும்.. யார் என்ன மோட்டிவில் இருக்காங்க …” என்று சொன்ன சோமசுந்தரமும்.. ஒரு அரசாங்கா வக்கீல் …

அப்போது கூட அவர்கள் சோமசுந்தரத்திடம்…. “ நீ வேணா பாரு.. உன் பேரை இவன் கெடுத்து வைக்க போறான்..” என்று தன்னை கை காட்டி சொன்ன போது…

“என் பேரை காப்பத்த போறதே அவன் தான் டா…. நீ முதல்ல உன் பையனை பார்த்து வள… இந்த வயசுலேயே வாயில் சிகரெட்டை வெச்சிட்டு சுத்திட்டு இருக்கான்… ஒரு நாள் அவனால் பஞ்சாயத்து என்று வந்தா நான் வந்து நிற்க மாட்டேன்…” என்று சொல்லி விட்டார்…

சோமசுந்தரம் சொன்னது போலவே ஒரு மைனர் பொண்ணை இழுத்து கொண்டு ஓடி விட்டான் என்று அவன் மீது கேசு வர.

சோமசுந்தரத்திடம் தான் வந்தனர்… சோமசுந்தரம் சொன்னது போலவே… அவர்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை..

ஏற்கனவே தன் பிள்ளைகளை தத்து எடுக்கவில்லை என்ற கோபத்தில் இருந்தவர்கள்… தன் மகனை காப்பற்ற வில்லை என்றதில் மொத்தமாக உறவை துண்டித்து விட்டனர்..

இந்த பேச்சுக்கள் நடக்கும் போது கூட சாண்டில்யன் அந்த இடத்தில் தான் இருந்தான். ஆனால் அப்போது தன்னை பார்த்து ஒன்றும் சொல்லவில்லை..

காரணம் இருபத்திரெண்டு வயது வாலிபனாக சோமசுந்தரத்தையும் தான்டிய தன் வளர்ச்சியும்.. உடல் வளர்ச்சியோடு அப்போது தான் தன் தந்தையை பின் பற்றி வக்கீல் படிப்பை முடித்து தந்தையிடமே ஜூனியராக பிராக்ட்டிஸ் செய்து இருந்த காலம் அது..

அனைத்தும் நல்ல மாதிரியாக தான் சென்று கொண்டு இருந்தது… என்ன ஒன்று.. பள்ளிக்கு விடுமுறையில் விசுப்பா வசும்மா வீட்டிற்க்கு சென்று வந்து கொண்டு இருந்தவன்.. அவனின் பத்தாம் வகுப்புக்கு பின் செல்வதை குறைத்து கொண்டான்..

காரணமாக. இந்த வகுப்புக்கு செல்கிறேன் .. அந்த வகுப்பு செல்கிறேன் என்று சொன்னாலுமே உண்மையான காரணம்… அங்கு சென்றால், தம்பி தங்கைகள் ஒன்றாக இருப்பது போலவும் தான் மட்டும் தனித்து இருப்பது போலவும் ஒரு உணர்வு அவனுக்கு வந்ததே காரணம்..

அந்த வயதிலேயே சாண்டில்யன் பக்குவமாக அதை தவறாக எல்லாம் நினைக்க வில்லை. .ஒன்றாக வளர்ந்ததால் அவர்களுக்குள் அந்த பாச பிணைப்பு இருக்கிறது…

இதோ இப்போது இவர்கள் என்னை வளர்த்த அப்பா அம்மா… வசும்மாவும் விசுப்பாவும் தான் தன்னை பெற்றவர்கள் என்று தெரிந்துமே… எனக்கு அப்பா அம்மா மீது தானே அதிகம் பாசம் இருக்கிறது… என்று நினைத்து கொள்வான்…

இடையில் இவனின் இருபத்தி ஐந்தாம் வயதில் இவனின் பெரிய தங்கை சுமதிக்கு திருமணத்திற்க்கு தன் தாய் தந்தையோடு சென்று வந்தான்…

திருமணம் என்று விசுப்பா வசும்மா இது போல சுமதுக்கு திருமணம் செய்ய உள்ளேன்… என்று அவர்கள் சொன்ன போது சாண்டில்யன் தாம்… “ அவசரப்படாதிங்க… மாப்பிள்ளையை பத்தி விசாரிக்கிறேன்… உலகில் என்ன என்ன நடக்குது தெரியுமா…?”

ஓரு கிரிமினல் லாயராக. எத்தனையோ பேரை சந்தித்தவனின் பேச்சு இப்படியாக தான் இருந்தது..

பின் தான் மாப்பிள்ளை இவனின் தம்பி வாசுதேவ்வின் நண்பன் என்றும்.. அவனுமே ஒரு ஆடிட்டர் தான் என்பதும் தெரிந்தது..

வாசுதேவ்வுக்கு தெரியுமே.. என்று அதோடு விட்டவன்… அடுத்து தங்கை திருமணத்திற்க்கு பணம் தேவை என்று சாண்டில்யன் கேட்ட போது… விசுப்பா.


“பரவாயில்லை சாண்டில்யா… மாப்பிள்ளை வீடு அதிகம் எல்லாம் கேட்கல.. அதோடு நானுமே சுமதிக்கும் மாளவுக்காவுக்கும் சேர்த்து வைத்து இருக்கேன்…” என்று விட்டார்…”

அவ்வளவு தான் சாண்டில்யன் தன் அப்பா அம்மவோடு சொந்த தங்கை கல்யாணத்திற்க்கே மூன்றாம் மனிதன் போல தான் சென்று வந்தான்… அன்றும் அனைத்தும் வாசுதேவ் தான் செய்தது…

அதன் பின் அவனின் இருப்பத்தியெழாவது பிறந்த நாளில் தனக்கு திருமணம் செய்ய முடிவு செய்து விட்டு தன் ஜாதகத்தை எடுத்த போது.. முதலில் தங்கள் குலதெய்வம் கோயிலுக்கு ஜாதகத்தை வைத்து விட்டு பின் பெண் பார்க்க ஆரம்பிக்கலாம் என்று இருக்க..

சரியாக அன்று தான் விசுப்பாவும் வசும்மாவுமே வர… அன்று சோமசுந்தரத்தின் கீழ் ஒரு வழக்கு… சிறு பெண்ணை பற்றிய விசயம்..

அப்பா…. “ சாண்டில்யா யாரையும் நம்பி இந்த கேசை விட முடியாது.. உன் அம்மா என்ன என்றால் பிறந்த நாளுக்கு அவன் இல்லாது எப்படி என்று சொல்றா…. அப்போ நான் போகனும் என்றால், முதன் முதலா மகனுக்கு கல்யாணம் செய்ய ஜாதகத்தை எடுத்து இருக்கோம்… ஒரு நல்லது செய்ய போறோம்.. நீங்க இல்லாம எப்படி…என்று இதுக்குமே குறுக்கா நிற்கிறா.. நீ தான் உன் அம்மா கிட்ட பேசி ஏதாவது ஒன்னு செய்ய விடனும்..”என்று சொன்ன போது சாண்டில்யன் தான்..

தன் அம்மாவிடம். “ம்மா நீங்க போங்கம்மா.. நான் நம்ம கேஸ் முடிஞ்சதுமே கோயிலுக்கு வந்து ஜாயின் பண்ணிக்கிறேன்..” என்று அனைவரையும் அனுப்பி வைத்தது…

ஆனால் அடுத்து இவன் அவர்களை பார்த்தது பிணமாக தான்...

வசும்மா மட்டுமே இடுப்புக்கு கீழ் பலத்த அடிப்பட்டு இருக்க. மூன்று பேருமே கார் விபத்தில் உயிர் இழந்து இருந்தனர்.

முதன் முதலில் சாண்டில்யன்.. அடுத்து என்ன என்று திக் பிரம்மை போல நின்று விட்டான்… பின் யோசிக்க கூட நேரம் இல்லாது உயிரோடு இருக்கும் வசும்மாவை பார்க்க வேண்டும்.. என்று அனைத்தும் விரைந்து முடித்தான்., சொல்லி அழ கூட ஆள் இல்லாது…

வசும்மாவை சென்னையில் உள்ள தரமான மருத்துவமனையில் அனுமதித்து விட்டு… விசுப்பாவின் உடலை உடல் கூறு ஆய்வுக்கு பின்… விசுப்பா இல்லத்தில் வைத்து விட்டு..

தன் அப்பா அம்மாவையும் உடல் கூறு ஆய்வு முடித்த பின் இவனின் தம்பி வாசு…

“அவங்களுக்கும் செய்ய வேண்டியதை கூட இங்கேயே செய்து விடலாம்..” என்று சொன்ன போது சாண்டில்யன் திட்ட வட்டமாக மறுத்து விட்டான்..

அவனின் அப்பாவுக்கு சொந்த ஊரில் அத்தனை மரியாதை.. நல்ல விசயமாக இருந்தாலும் பிரச்சனையாக இருந்தாலும்.. அவரை தான் அழைப்பர்… அவரை அடுத்து இவனுக்கும் கொடுக்க.. ஆனால் எப்போதும் சாண்டில்யன் தன் தந்தையை தான் முன் நிறுத்துவான்.

அவருக்கு கிடைக்க வேண்டிய அந்த இறுதி மரியாதையை மறுக்க அவனுக்கு விருப்பம் இல்லை.. அதே போல தன் தந்தையின் மீது அன்பு வைத்தவர்களும் கடைசியாக அவர் முகத்தை பார்க்க விருப்பப்படுவார்கள் என்று தன் ஊருக்கு தான் அவர்களை கொண்டு சென்றது.

மூன்றே மணி நேரம் தான் வீட்டில் அவர்களை பிணமாக கிடத்தி இருந்தான். ஊரே வந்து விட்டதோ என்பது போல மக்கள் திரண்டு வந்து விட்டனர்…

இவனுக்கோ அவர்கள் அருகில் இருந்து முகத்தை பார்க்க கூட நேரம் இல்லாது ஒற்றை ஆளாக அனைத்தும் முறையாக செய்து முடித்தான்..

அதன் பின் சென்னைக்கு வந்தான்.. தன் தந்தையின் உடலுக்கு இறுதி மரியாதையை செலுத்த வேண்டி…

அப்போது தான் தந்தையின் உடலுக்கு செய்ய வேண்டிய சாங்கியத்தை செய்து கொண்டு இருந்தனர்.

இரு பக்கமும் இரு பெண்கள் நின்று கொண்டு இருக்க.. பெரிய தங்கையான சுமதியின் கணவன் விமல் வாசுதேவ் பக்கம் நின்று கொண்டு அவன் செய்து கொண்டு இருக்கும் சாங்கியத்திற்க்கு உதவி செய்து கொண்டு இருந்தான்..

சுமதியின் குழந்தை சாக்ஷி…. பெரிய தங்கையான மாளவிகா வைத்து கொண்டு இருந்தாள்…

தான் என்ன செய்ய வேண்டும் என்று தெரியாது இங்கு அமைதியாக நின்று கொண்டான்.. அங்கு அனைத்துமே அவன் தான் செய்தது… இங்கு செய்ய ஒன்றும் இல்லாது நின்று கொண்டு தன் விசுப்பா முகத்தையே பார்த்து கொண்டு இருந்தான்.

அன்று தனித்து நின்றவன் தான்… இதோ இன்றுமே தனித்து தான் நிற்கிறான்..

வசும்மா உடல் நிலை தேறி வீடு வரவே ஆறு மாதம் பிடித்தது… அப்போது கூட முழுநேரம் படுக்கையில் தான் அவர் வாசம் என்பது போலான நிலையில் தான் வீடு வந்தார்.. இன்று வரை அப்படி தான் அவர்கள் நாட்கள் செல்கிறது..

பணம் இருப்பதினால் இந்த பத்து வருடங்களாக வசும்மாவை பார்த்து கொள்ள ஒரு தாதி ஏற்பாடு செய்து விட்டனர்… இந்த பத்து வருடத்தில் ஐந்து தாதிமார்கள் மாறி விட்டனர்…

அது என்னவோ வசும்மா… “ இல்ல சாண்டில்யா நீ இங்கு எங்களோடு தான் இருக்கனும்… இல்லேன்னா என்னை உன் கூட கூட்டிட்டு போயிடு…” என்று அடம் பிடித்தார்..

அப்போது அனைவரும்.. அதாவது வாசுதேவ் சுமதி மாளவிகா என்று அனைவரும் அங்கு தான் இருந்தனர்… வசும்மா தன்னை உன்னோடு கூட்டிட்டு போயிடு என்று தன்னிடம் சொன்ன போது அவர்கள் மூன்று பேரின் முகமும் மாறி விட. அதில் வசும்மாவிடம்.

“நானே இங்கு வந்துடுறேன் வசும்மா… நான் பெரும் பாலும் என் கேஸ் விசயமா சென்னைக்கு தான் வரது போல இருக்கு… அதோடு உங்க ட்ரீட்மெண்ட்க்கு நீங்க சென்னையில் இருப்பது தான் உங்களுக்கு வசதி..” என்று சொன்னவன் சொன்னது போலவே ஊரில் இருக்கு விளை நிலங்கள் அனைத்துமே குத்தகைக்கு விட்டு விட்டு தோப்பையும் வீட்டையும் பார்த்து கொள்ள ஆட்களை வைத்து விட்டு ஒரே மாதத்தில் சென்னைக்கு வந்து விட்டான்..

சென்னை வந்த ஆறு மாதத்திலேயே வசும்மா. தனக்கு பெண் பார்க்க வேண்டும் என்று சொல்லி விட.

தனக்கு திருமணம் என்ற பேச்சு திரும்ப ஆரம்பித்ததும் ஏனோ தன் அம்மா அப்பா நியாபகம் தான் வந்தது…

தனக்கு திருமணம் செய்து வைத்து மருமகள் வர வேண்டும் என்றும் …பேரன் பேத்திகளோடு அவர்களின் நாட்களை கழிக்க வேண்டும் என்றும் தான் எப்போதும் கூறிக் கொண்டு இருப்பார்… அதுவும் அவனின் அன்னை… அவனின் இருபதாவது வயதிலேயே

“தோ பாரு சாண்டில்யா.. நீ ஒரு குழந்தை என்று இது போல கணக்கு எல்லாம் பார்க்க கூடாது. நம்ம கிட்ட பொருட்செல்வம் கணக்கு வழக்கு இல்லாம இருக்கு… குழந்தை செல்வத்தில் தான் கை வைத்து விட்டான்.. ஆனா உன் மூலமா இந்த வீட்டில் குழந்தைகளா நிறைந்து இருக்கனும்…” என்று தன் கை பிடித்து பேசியது தான் அவன் நினைவுக்கு வந்தது…

அதில் தன் வசும்மா… “ என்ன சாண்டில்யா ப்ரோக்கரை வர வழைக்கலாமா… இல்ல இந்த பதிவு செய்யிறாங்கலே அது போல செய்யலாமா..?” என்று ஒன்றுக்கு இரண்டு முறை கேட்டதை சாண்டில்யன் கவனிக்கவில்லை…

பக்கத்தில் நின்று கொண்டு இருந்த வாசுதேவ்…. “ம்மா அவருக்கு அவர் அம்மா அப்பா நியாபகத்தில் வந்து இருப்பாங்க..” என்று கூறியது உண்மை தானே… அதனால் சாண்டில்யனுக்கு கோபம் வரவில்லை…

“ம்மா முதல்ல மாளவிக்காவுக்கு முடித்து விடலாம்…” என்று சொல்லி விட்டான்…

நாளு பிள்ளைகளுக்குமே வயது வித்தியாசம் அதிகம் கிடையாது.. ஒன்னரை வருடங்களின் வித்தியாசத்தி தான் அனைவரும் பிறந்தது..

அப்போது சாண்டில்யனுக்கு இருபத்தியெட்டு எனும் போது கடைசி பெண்ணான மாளவிக்காவுக்கு இருபத்தி மூன்று வயது முடிவடைந்து தன் படிப்பையும் முடித்து விட்டு வேலைக்கும் செல்ல ஆரம்பித்த சமயம் அது…

இவன் மாளவிக்காவுக்கு மாப்பிள்ளை பார்க்கலாம் எனும் போது தான் வாசு தேவ்…

“மாலுவுக்கு மாமா பையனை தான் கல்யாணம் செய்ய இருக்கிறேன்…” என்று சொன்னது..

அப்போது சாண்டில்யன் தன் வசும்மாவை தான் பார்த்தான்.. பாவம் அவர்களுக்குமே அது புது செய்தி என்பது அவர்கள் முகத்தை பார்த்தே கண்டு கொண்டான்..

பின் வாசு தேவ் என்ன நினைத்தானோ… தொடர்ந்து… “ நானுமே மாமா மகளை தான் மேரஜ் செய்துக்கலாம்… இருக்கேன்…”

இந்த பேச்சு நடக்கும் போது இவனின் இரண்டு தங்கைகளுமே இருந்தனர்… சரி விருப்பம் போல என்று நினைத்தவன்..

அதற்க்கு பின் அதை எல்லாம் ஆராயவில்லை… அடுத்த வருடத்திலேயே மாளவிக்காவுக்கு இவர்களின் தாய் மாமன் மகன் கமல கண்ணனுக்கும் திருமணத்தை முடித்து விட்டனர்..

அப்போது கூட இவனின் பணத்தையும் எதிர் பார்க்கவில்லை.. இவனின் உழைப்பையுமே எதிர் பார்க்கவில்லை.. அனைத்துமே வாசு தேவ் தான் பார்த்து கொண்டது…

அதன் பின் மீண்டுமே இவனின் முப்பதாவது வயதில் இவனின் திருமண பேச்சை வசும்மா எடுத்த போது சாண்டில்யன் எந்த மறுப்பும் கூறவில்லை..

அவனின் அம்மாவுக்கு இவன் நிறைய குழந்தை பெற்று வாழ தானே ஆசைப்பட்டார்… அவனுக்குமே இந்த மூன்று ஆண்டுகள் தனிமை அவனை என்னவோ செய்ய….

அதனால் திருமணம் செய்து குடும்பமாக வாழ ஆசைப்பட்டான்..








 
Well-known member
Joined
Jun 23, 2024
Messages
116
சாண்டில்யன் தான் ஹீரோவா 🤔 🤔 🤔 🤔 உறவுகள் இருந்தும் ஆதரவு இல்லாத நிலை தான் 🥺 🥺 🥺 🥺

தம்பி தங்கைகள் ஏன் இப்படி அவனை ஒதுக்கி வைக்குறாங்க 🥶 🥶 🥶 🥶

சாதனா கூட அந்த பக்கம் பேசிக்கிட்டு இருப்பது ஸ்ரீ காந்த் தானா 🤨 🤨 🤨 போனை கட் பண்ணாமலே விட்டுட்டாளா சாதனா🤔
 
Last edited:
Well-known member
Joined
Aug 16, 2024
Messages
368
சாண்டில்யன் தம்பி தங்கைகள் அவனுடன் பேசுவதற்கு எது தடையாக உள்ளது அவர்களுக்குள் ஏற்பட்ட இடைவெளியா?
 
Top