Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

நின் விரல் தீண்ட...3

  • Thread Author
அத்தியாயம்….3

குடும்பமாக வாழ ஆசைப்படுகிறான் என்றால், அப்போது இது அவன் குடும்பம் கிடையாதா…? இல்லை என்பது போல் தான் இவனின் தம்பி வாசு தேவ் தன் ஒவ்வொரு செயல்களிலும் இவனுக்கு காட்டி கொண்டு இருந்தான்…

அன்னையின் பேச்சில் இவன் சென்னைக்கே வந்து விட…

அப்போது இவனின் தந்தை அரசாங்க வக்கீலாக இருந்து ஓய்வு பெற்று தனித்து ஒரு சில கம்பெனிக்கு அட்வைசராக இருந்த இருந்த சமயமும் அது..

திடிர் என்று அவர் இறந்து விடவும்… இவர் தந்தை வக்கீலாக இருந்த கம்பெனிக்கு இவனையு தெரியும் என்பதினால்…

“நீங்கலே இருங்கலேன்… உங்க அப்பா சொல்லுவார்… என் மகன் என்னை விட திறமை சாலி என்று… எனக்கும் உங்க மீது நம்பிக்கை இருக்கு…” என்ற அவர்களின் பேச்சுக்கு .. சரி என்று விட்டான்..

காரணம் சோமசுந்தரம் நேர்மை இல்லாத எந்த ஒரு விசயத்திலும் தலையிட மாட்டார்.. அவரே ஒரு கம்பெனிக்கு வக்கீலாக செயல்படுகிறார் என்றால், கண்டிப்பாக அங்கு நேர்மை இருக்கும் என்பது அவனுக்கு நிச்சயம்…

தந்தையுடைய பொறுப்பும் ஏற்கனவே இவனுக்கு என்று தனிப்பட்டு சில கம்பெனிகளுக்கு அட்வைசராகவும் இருக்கிறான்.. இதில் இடை இடையே வெளியில் இருந்தும் ஒரு சில வழக்குகளை எடுத்து நடத்துவான்..

அதனால் இவனை பார்க்க வேண்டி நிறைய பேர் வீட்டிற்க்கு வந்து சென்று கொண்டு இருந்தனர்.. ஊரிலும் அப்படி தான். அப்பாவுமே வக்கீல் என்பதினால் அம்மாவுக்கு இது பழகிய விசயம்.

ஆனால் இங்கு… ஒரு நாள் வாசு தேவ் இவனிடம்… “ வீட்டில் இரண்டு பெண்கள் நம்ம வீட்டிற்க்கு வந்து போக இருப்பாங்க. உன்னை இது போல ஆளுங்க தினம் தினம் பார்க்க வந்தா எப்படி…? என் வீட்டு பெண்கள் என் வீட்டில் செளகர்யமா இருக்கனும்…” என்று விட்டான்..

அவன் சொன்னது தவறு கிடையாது… ஆனால் அதை வாசு சொன்ன விதம்.. அப்போதே அங்கு இருந்து சென்று விடலாம் என்று தான் நினைத்தான்.. ஆனால் படுத்த படுக்கையாக இருக்கும் அவனின் வசும்மா…

அதனால் அவர்கள் வீட்டு பக்கத்தில் சிறிது காலி மனை இருந்தது.. அதில் ஒரு பெரிய படுக்கை அறை… குளியல் கழிப்பறை வசதி கொண்ட அறையாக கட்டிக் கொண்டவன்.. முன் ஒரு பெரிய ஹாலாக கட்டி கொண்டு அங்கு தன்னை பார்க்க வருபவர்களை பார்த்து அனுப்பினான்..

தனிமை அவனை கொல்லவே… திருமணம் செய்ய எந்த பிகுவும் செய்யாது ஒத்து கொண்டான். ஒத்து கொண்ட உடனே ஒரு பெண்ணின் படத்தையும் இவனிடம் காட்டினர்.. இவனுக்கும் பிடித்து இருந்தது…

அதன் தொட்டு இருவருக்கும் ஜாதகம் பொருத்தம் பார்க்கும் போது தான். இவனின் ஜாதகம் தோஷமான ஜாதகம் என்பதும்… இந்த ஜாதகத்தோடு ஒத்து போகும் ஜாதகம் கிடைப்பது அறிது என்பதும் தெரிய வந்தது..

அது போல் அறிதான ஒரு ஜாதகம் கொண்ட பெண் அவனுக்கு இன்று வரை கிடைக்கவில்லை… அதனால் தான் பாவம் இதோ இன்று வரை நீ தனித்து தான் இருக்க வேண்டுமடா என்று..

இதோ முப்பத்தியெழு வயது வரை தனித்து நின்று விட்டான்.. இவர்களின் தாய் மாமன் வீட்டவர்கள் எங்கள் வீட்டு பெண்ணை எத்தனை நாளைக்கு நாங்க எங்க வீட்டில் வைத்து கொண்டு இருப்போம் என்று வசும்மாவிடம் கேட்க.

பாவம் வசும்மா நிலை தான் இரு தலை கொல்லி போல தவித்து போக…

இவன் தான்… “ வசும்மா பெண் ரெடியாக இருக்கும் வாசுவுக்கு கல்யாணத்தை முடிச்சிடுங்க….” என்று சொல்லி விட்டான்…

பின் இவனின் முப்பத்தி மூன்றாம் வயதில், அதாவது வாசு தேவ்வுக்கு முப்பத்தி ஒன்று வயதில் அவனுக்கு திருமணம் முடிந்து… இதோ நான்கு வருடங்கள் கடந்த பின்னும் கூட தனித்து தான் நிற்கிறான்…

இதோ சொந்த தங்கையின் மகள் பெரியவள் கூட ஆகி சடங்குக்கு தனித்து சென்றான்… வழியில் ஒரு பத்து சவரனுக்கு காயின் வாங்கி கொண்டான்..

இந்த பெண்கள் அணியும் அணிகலங்களை பற்றி சாண்டில்யனுக்கு பெரியதாக தெரியாது… அவனின் அன்னைக்கு அத்தனை வசதி இருந்துமே நகை என்று அவர் பெரியதாக வாங்கியது கிடையாது… எப்போதும் அணிந்து இருக்கும் அந்த வைரக் கம்மல் மூக்குத்தி மோதிரம் கழுத்தில் ஒரு தடியான தாலி சரடு… கையில் இரண்டு இரண்டு வளையல்கள் அவ்வளவே.. அணிந்து இருப்பதோடு தான் எங்கும் செல்வது..

எதுவும் தெரியாததினால் காயின் கொடுத்தால் தங்கை பெண்ணுக்கு பிடித்த நகையை சுமதி செய்து விடுவாள்… என்று அந்த பார்ட்டி ஹாலுக்கு சென்றான்.

வந்தவனை சுமதியும் சரி மாளவிக்காவும் சரி ஏன் தங்கையின் மாமியார் வீட்டவர்களும் சரி நல்ல முறையில் தான் வர வேற்றது.

ஆனால் முறை என்று அழைக்கும் போது அவர்கள் வாசு தேவ்வையும் அவன் மனைவியையும் அழைத்து தான் செய்ய வைத்தனர்..

வாசு தேவ்வுமே அத்தனை வரிசை தட்டுக்களை அடுக்கி வைத்து விட்டான் . ஹான்ட்டிக் நகைகளாக செட்டாக சுமதி கேட்டதை விட அதிகமாக செய்து விட்டான்…

இவன் தான் தாய் மாமனாக வாசு தேவ் செய்து முடித்த பின் தனித்து தான் வாங்கி சென்றதை குழந்தையிடம் கொடுத்து கன்னம் தொட்டு விட்டு மேடையை விட்டு கீழே வந்து விட்டான்..

கீழே வந்தவன் ஒரு ஓரமாக இருக்கும் இருக்கையில் அமர்ந்தும் கொண்டான்… அமர்ந்தவன் மேடையையே தான் பார்த்து கொண்டு இருந்தான்..

இரண்டு தங்கைகள் அவர்களின் குழந்தைகள்.. தம்பி தம்பியின் மனைவி… குழந்தை என்று குடும்பமாக நின்று கொண்டு இருக்க. தான் மட்டும் தனித்து நின்று விட்டது போலான இந்த நிலையை அவன் விரும்பவில்லை…

அம்மா அப்பா என்னை இப்படி தனியே விட்டு செல்ல தான் என்னை தத்து எடுத்தீர்களா…? இன்று என்னவோ… தான் குடும்பமாக இல்லை என்ற அந்த ஏக்கம் மனதில் அதிகம் எழுந்தது.

அதை அதிகம் செய்யும் வகையில் ஒரு மூத்த பெண்மணி… நான் உன் அப்பா வீட்டு வகை உறவு என்று சொல்லி கொண்டு அவன் அருகில் வந்து அமர்ந்தார்…

அப்பா வீட்டு உறவு என்றால் தன் அன்னையின் உறவும் கூட தானே… அந்த ஒரு நினைப்பே சாண்டில்யனுக்கு அந்த மூத்த பெண் மணியுடன் பேச போதுமானதாக இருந்தது.

தன்னிடம் பேச ஆரம்பித்தவரிடம் அவனுமே… “ சந்தோஷமுங்க….” என்று பேசினான்..

அதற்க்கு அவர்கள்.. “ நான் உனக்கு பாட்டி முறை ஆகனும்… சாண்டில்யா.. பாட்டி என்றே கூப்பிடு…” என்று சொன்னவர் தொடர்ந்து.

“ராஜி…” என்று ஆரம்பித்தவர் சாண்டில்யனின் பார்வையில்..

“நான் ராஜ ராஜேஷ்வரியை ராஜி என்று தான் சொல்வேன்..” என்ற மூத்த பெண்மணி தன் அன்னையை சுருக்கி அழைத்து பேசும் அளவுக்கு இருக்கும் அந்த நெருக்கமே சாண்டில்யனுக்கு அவரிடம் பேச இன்னுமே ஆர்வம் காட்டினான்…

“ராஜி சாண்டில்யன் கதையை தான் விரும்பி படிப்பா… நான் கூட அந்த பேரை இருக்குறவனை கட்டிக்கோ… என்று கூட ராஜி கிட்ட சொல்லி இருக்கேன்… அதுக்கு அந்த பேரை தேடி பிடித்து கல்யாணம் செய்யனுமுன்னா எனக்கு வயது கூடிடும்… இந்த பேரை வேணா. எனக்கு பிறக்கும் மகனுக்கு வைக்கிறேன்… என்று சொன்னா மகராசி.. ஆனா கடவுள் அவளுக்கு அந்த பாக்கியத்தை கொடுக்கல… அதனால தம்பி மகனுக்கு வெச்சிட்டா. அவ சொன்னது போலவே அந்த பேரை உடையவனையே தன் மகனாகவும் ஆக்கிக்கிட்டா.” என்று சொல்ல இப்போது இருவருக்குமே அந்த பெயரை சூட்டியவரை தான் நினைத்து கொண்டனர்..

பின் அந்த மூத்த பெண்மணி… “ உனக்குமே கல்யாணம் செய்து வைக்கனும்.. என் வீடே அவன் குழந்தைகளாக நிறைந்து போகனும் என்று ஆசைப்பட்டா.. பாவீ இப்படி இப்படி போவா என்று யாரு நினச்சா…” என்று சொன்னவரின் கண்கள் கலங்கி போய் விட்டனர்…

சாண்டில்யனுக்குமே ஏற்கனவே அன்னை தந்தையின் நியாபகத்தில் மூழ்கி இருந்தவன். மூத்த பெண்மணி சொன்னது. இவனிடமும் இவன் அன்னை சொல்லி இருக்கிறார் தானே… அதனால் அந்த நாளை நினைத்து அவன் கண்கள் கலங்க பார்த்தது….

அந்த பெண் மணி விடாது… “ ஏனப்பா.. ராஜி இல்லேன்னா என்னப்பா… அவள் ஆசையை நீ நிறை வேத்தி வைக்க கூடாதா ப்பா… ஏனுப்பா இன்னுமே கல்யாணம் செய்யாம தனியா நிற்கிற..” என்று கேட்ட பெண்மணியின் பார்வையும் மேடையில் அனைவரும் குடும்பமாக நின்று கொண்டு இருப்பதை பார்த்து மீண்டும் இவனை பார்த்தார்..

“எனக்குமே தனியா நிற்கனும் என்று ஆசை இல்ல பாட்டி… ஆனா என் ஜாதகம் தோஷமானது.. அதுக்கு ஏத்தது போல இன்னுமே பொண்ணு அமையல பாட்டி… எனக்கு இந்த ஜாதகத்தில் நம்பிக்கை இல்ல… ஆனா பொண்ணு வீட்டில் நம்புவாங்க தானே பாட்டி…” என்று சொன்ன சாண்டில்யனின் இந்த பேச்சு அந்த பாட்டிக்கு அதிர்ச்சியை கொடுத்தது….

“யாரு சொன்னது உன் ஜாதகம் தோஷம் ஜாதகம் என்று…?” என்று கேட்ட அந்த பாட்டியின் குரலில் இன்னுமே அந்த அதிர்ச்சி மீதம் இருந்தது.

கேட்டவர் சாண்டில்யனிடம்… “ உன் அம்மா அப்பா சாகும் முன் நானும் உன் அம்மாவும் உன் ஜாதகத்தை ஒரு ஜோதிடர் கிட்ட காட்டினோம். அவர் உன் ஜாதகத்தை பார்த்துட்டு.. ராஜயோக ஜாதகம். என்ன ஒன்னு கல்யாணம் தான் கொஞ்சம் தாமதமா நடக்கும் என்று சொன்னாரு…

அதுக்கு தான் உன் பிறந்த நாளுக்கு அன்னைக்கு உன் ஜாதகத்தை கோயிலில் வெச்சிட்டு பெண் பார்க்கலாம் என்று என் கிட்ட சொன்னா.. ஆனா… “ என்று சொல்லி பேச்சை நிறுத்திய அந்த பாட்டி….

மீண்டுமே அந்த கேள்வியை கேட்டார்.. ஆனால் அவருக்கு பதில் சொல்லும் நிலையில் தான் சாண்டில்யன் இல்லை…

பின் எப்படி அங்கு சாப்பிட்டான் எப்படி அங்கு இருந்து வந்தான் என்று தெரியாது வீடு வந்து சேர்ந்து விட்டான்.. அதுவும் விடை பெறும் போது அந்த பாட்டி மீண்டுமே.

“சீக்கிரம் ஒரு பொண்ணை பார்த்து கட்டிக்கோப்பா…” என்று சொன்னவரிடம் ஒரு தலையசைப்பு மட்டுமே பதிலாக தந்து விட்டு வீடு வந்தவன்..

அந்த வீட்டிற்க்கு செல்லாது தான் இருக்கும் பகுதிக்கு வந்து விட்டான்… எப்போதும் இது போலான இரவு நேரத்தில் ஒரு இரண்டு மணி நேரத்தில் மெலடி பாடலாக கேட்பான்.. அவனின் தனிமைக்கு எப்போதும் அவனுக்கு துணை இருப்பது… பாடல்கள் தான்..

இந்த பழக்கமும் அவனின் அம்மாவிடம் இருந்து தான் வந்தது… அதுவும் கேட்பது அனைத்துமே காதல் பாடல்கள் தான்… ஆபாசம் இல்லாது இலை மறை காயாக இருக்கும் அந்த பாடல்கள் சிறு வயதில் புரியாது… அந்த குரலுக்கும், இசைக்கும் கேட்டு கொண்டு இருந்தவன் போக போக அதன் அர்த்தம் புரிந்த பின்…

அன்னையோடு கேட்க கூச்சப்பட்டு தன் அறையில் தனித்து கேட்பான். . அப்படி கேட்கும் பாடல்களில் ஒரு சில வரிகளை கேட்கும் போது இந்த பாடல்களை தன் துணையோடு கேட்க வேண்டும் என்று குறித்தும் வைத்து கொண்டும் இருந்தான்..

ஆனால் இன்று வரையும் கூட அந்த பாடல்களை துணையோடு கேட்கும் சந்தர்ப்பம் அவனுக்கு கிட்டவில்லை… இன்றோ தனித்து கேட்கும் மன நிலையும் மறைந்து தன் உடையை மாற்றி கொண்டு இரவு உடைக்குள் தன்னை புகுத்தி கொண்டு தூக்கத்திற்க்குள்லும் தன்னை புகுத்தி கொள்ள பார்த்தான் தான்..

ஆனால் மற்றது எல்லா வேலைகளும் யோசனை எங்கு இருந்தாலுமே வேலைகளை தன் பாட்டுக்கு செய்து கொள்ளலாம்.. ஆனால் தூக்கம்.. அதற்க்கு மன அமைதியும் வேண்டும் அல்லவா…?அன்று தூக்கம் அவன் அருகில் வரவில்லை…

அதனால் எப்போதும் கேட்கும் இசையை கேட்காது…. கடந்த பத்து ஆண்டாக செய்யாத விசயமான கண்ணாடி முன் நின்று தன் உருவத்தை பார்த்தான்..

வயதை நீ எனக்கு முப்பத்தியெழு என்று சொன்னால் தான் உண்டு. ஆனால் பார்க்க முப்பது போலான தோற்றத்தில் தான் நீ இருக்கிறாய் என்பதை அந்த கண்ணாடியின் பிம்பம் அவனுக்கு சொன்னது…

ஆராடி உயரம்.. நல்ல பழக்க வழக்கம் தொடர் உடட்பயிறச்சி என்று உடல் நீ நல்ல ஆரோக்கியத்தில் தான் இருக்கிறாய் என்பது போலான தோற்றம் அழகு என்று அனைத்தும் நிறம்ப பெற்றவன் தான் நீ…

தன் முன் இருந்த கண்ணாடியில் தன் உருவத்தை பார்த்த அவன் கண்கள் அவனுக்கு அது தான் எடுத்து உரைத்தது… ஆனால் எனக்கு இன்னுமே திருமணம் நடக்கவில்லை…

பெண்ணை பார்த்து… பெண்ணை தனக்கு பிடிக்கவில்லையோ.. இல்லை பெண்ணுக்கு தனக்கு பிடிக்கவில்லையோ என்ற காரணத்தினால் எல்லாம் அவனுக்கு திருமணம் நடக்கவில்லை என்பது எல்லாம் கிடையாது…

ஏன் என்றால் இன்னுமே அவன் ஒரு பெண்ணை கூட நேரில் சென்று அவன் இன்று வரை பார்த்தது கிடையாது…

அதே போல நல்ல வேலை இல்லை… படிப்பு இல்லை… என்று பெண் வீட்டார் என்னை நிராகரிக்கவில்லை… அதே போல வரதட்சணை என்று தான் கேட்டு பெண் வீட்டார் அதை கொடுக்க முடியாது என்று எல்லாம் என் திருமணம் தள்ளி போகவில்லை…

தன் திருமணம் இன்னும் நடை பெறாது போக என் தோஷஜாதம்.. ஆனால் ஒரு பாட்டி… அதன் அடிப்படையே தவறு என்று சொல்லும் பட்சத்தில் சாண்டில்யனுக்கு எப்படி தூக்கம் வரும்.. அன்று இரவு அவனுக்கு தூங்க இரவாக தான் கடந்தது….

மறு நாள் எப்போதும் போல குளித்து முடித்து பக்கத்தில் இருக்கும் அந்த வீட்டில் இருந்து வந்த அழைப்புக்கு…

“இல்ல நான் வெளியில் போறேன்.. சாப்பாடு அங்கு பார்த்துக்குறேன்…” என்று சொல்லி விட்டு வந்தவன் தான் பார்க்க வேண்டிய வேலை அத்தனை இருந்துமே அதை பார்க்க செல்லாது..

நேராக கோயிலுக்கு வந்து விட்டான்.. இன்று அவனின் பிறந்த நாள்.. அவனின் அன்னை அப்பா விசுப்பா இறந்த தினமும் இன்று தான்… ஏப்ரல் 14 மறக்க முடியுமா…?

அவனின் அன்னை அவன் பிறந்த விதத்தை கூட கதை கதையாக சொல்லுவார்…

“உன் வசும்மா அவளோட அம்மா இறந்ததினால வசுமதிக்கு தாய் வீட்டில் பிரசவம் பார்க்க முடியல.. நான் தான் இங்கு கூட்டிட்டு வந்து பார்த்தேன்..

இன்னும் டெலிவரிக்கு பத்து நாள் இருக்குன்னு நாளை தமிழ் வருஷப்பிறப்பு ஆச்சே என்று அதுக்கு உண்டான வேலையை பார்த்துட்டு இருந்தேன்… உன் வசும்மா இடுப்பு வலின்னு இடுப்பை பிடிச்சிட்டு உட்கார்ந்துட்டா… நான் பிள்ளை பெத்து இருந்தா… “ என்று ராஜேஷ்வரி இந்த வார்த்தை சொல்லும் போது மட்டும் சாண்டில்யன்..

“ம்மா…” என்று ஒரு குரல் கொடுப்பான்…

அதற்க்கு மட்டும் ராஜேஷ்வரி… “ சரி சாண்டில்யா சரி சண்டில்யா. இனி சொல்லலே.” என்று அடுத்து சொல்தை தொடர்வார்..

“எனக்கு எந்த வலி தெரியாம நான் பாட்டுக்கு வீட்டில் வெச்சிட்டு இருக்க… இன்னும் பிரவசத்துக்கு பத்து நாளுக்கு மேல இருக்கே…. முன் போல இதுவும் சூட்டு வலி தான் போல என்று நினச்சிட்டு கஷாயம் மட்டும் வெச்சி கொடுத்துட்டேன்..

அந்த சமயத்துக்கு கொஞ்சம் வலி அடங்குனா போல இருக்கு என்று சொன்ன உன் வசும்மா அப்புறம் போக போக.. இடுப்பை பிடிச்சிட்டு துடிச்சி போயிட்டா..

உன் அப்பா ஏதோ ஒரு கேசு விசயமா வெலி ஊருக்கு போயிட்டாரு…. ஒத்த பொம்பளை அந்த ராத்திரி நேரத்தில் நான் எங்கு என்று ஓடுவேன்…

அப்புறம் இந்த தெரு முனையில் ஒரு வயதான பாட்டி இருந்தாங்க. என்ன இது வசு இத்தனை வலியால் துடிக்கிறாளே என்று. பயந்து அவங்களை கூட்டிட்டு வந்தா.

அந்த பாட்டி என்னை அத்தனை பேச்சு… திட்டு.. இப்போ நான் அந்த வார்த்தை சொன்னா சொல்லாதே என்று திட்டுறியே… அந்த பாட்டி என்னை அப்படி தான் திட்டினாங்க..

திட்டினாலும் பரவாயில்லை சீக்கிரம் ஆஸ்பிட்டல் கூட்டிட்டு போகலாம் என்று பார்த்தா… நீ வெளியில் வந்துட்ட.. “ என்று உணர்ச்சி பூர்வமாக சொல்லி கொண்டு போகும் ராஜேஷ்வரி..

அங்கு இருக்கும் அந்த கடிக்காரத்தை காண்பித்து… நான் வென்னீர் வைக்கும் போகும் போது.. பன்னிரெண்டு அடித்தது நான் அந்த பாட்டி கிட்ட கொடுக்கும் போது.. நீ பிறந்துட்ட… சரியா பன்னிரெண்டு ஒன்னு… அதாவது தமிழ் வருஷப்பிறப்புல பிறந்த நீ…” என்று இதை அவ்வப்போது அவனின் அம்மா சொல்லுவார்..

நேற்றில் இருந்தே அவனின் மனது ஒரு நிலையில் இல்லாது தத்தளித்து கொண்டு இருந்தது… இதுவா அதுவா என்று யோசிப்பதற்க்கு பதில்..

நம் ஜாதகம் என்ன என்று பார்த்து விடலாமே… இன்னுமே அவனுக்கு இந்த ஜாதகத்தில் எல்லாம் நம்பிக்கை இல்லை தான்..

ஆனால் அதை வைத்து தானே.. இன்று வரை அவன் தனித்து நிற்பது… தன் ஜாதகம் தோஷமான ஜாதகமா… தெரிந்து கொள்ள வேண்டி ஒரு ஜோதிடரை சென்று பார்த்தான்..

அந்த ஜோதிடர் சென்னையில் மிகவும் ஒரு பிரபலமான ஜோதிடர் ஆவார்…அந்த ஜோதிடரை பார்க்கும் முன் சாண்டில்யன் மனதிற்க்குள் தனக்கு தானே அத்தனை தர்க்கம் செய்து கொண்டான்…

தான் இப்படி பார்ப்பது நான் யாரை சந்தேகம் படுகிறேன்.. என் வசும்மாவையா… என் தம்பியா… என் தங்கைகளையா….? நேற்று பார்த்த அந்த பெண்மணியை நான் இதற்க்கு முன் பார்த்ததே கிடையாது… அவர் சொன்னதை நம்பி இப்படி பார்ப்பது சரியா..? இப்படியாக நினைத்தவன்… இப்போது இந்த ஜோதிடர் ஆமாம் உன் ஜாதகம் தோஷமான ஜாதகம் என்று சொல்லிட்டா… என் மனசாட்சியே என்னை குத்துமே… இப்படியாக நினைத்தான்..

பின் பார்க்காது போனால் இன்று போல எத்தனை நாட்களுக்கு அந்த வீட்டில் போகாது இருப்பது.. இன்னும் கொஞ்ச நேரத்தில் வசும்மா அழைத்து விடுவார்களே…

“ஏன் சாப்பிட வரல என்று…” மனதில் இத்தனை சந்தேகங்களை வைத்து கொண்டு அவர்களிடம் சகஜமாக பேசவும் முடியாது… என்று யோசித்தவன்…

இறுதியில் பார்த்து விடலாம்… சந்தேகம் என்று வந்த பின் அதை தெளிவு படுத்திக் கொள்வது தான் நல்லது என்று அவனின் என் வக்கீல் மூளை அவனுக்கு சொன்னது..

சென்றான்… அவனின் நல்ல நேரம் ஜோதிடர் இருந்தார் தான்.. .. ஆனால் அவரை பார்க்க அத்தனை கூட்டம்…

என்ன இது… போய் விடலாமா என்று யோசிக்கும் சமயத்தில் தான் ஒரு பெண்மணியை பார்த்தான்..

அவர் யார் என்று சாண்டில்யனுக்கு தெரியவில்லை.. ஆனால் அந்த பெண்மணிக்கு சாண்டில்யனை தெரிந்து இருந்தது.. மூன்று வருடங்கள் முன்… அந்த பெண்மணியின் தாய் வீட்டு சொத்தை மீட்டு கொடுத்து இருக்கிறான்..

அந்த பெண்மணி இங்கு சாண்டில்யனை பார்த்ததில் அத்தனை மகிழ்ச்சி…

“எங்கு இங்கே…?” என்று கேட்ட போது.

சாண்டில்யன்… “ இல்ல ஜோதிடம் பார்க்கலாம்…” என்று சொன்னவனிடம்..

“நான் முன் பதிவு செய்து இருக்கேன் சார்… என் பதிவில் நீங்க பார்த்து கொள்ளுங்கள்…” என்று சொல்லி விட..

சாண்டில்யன் ..” அப்படி எல்லாம் வேண்டாம்… எனக்கு இதுல நம்பிக்கை இல்லை.. ஆனா ஒரு விசயம் க்ளியர் செய்ய தான் வந்தேன்… நீங்க பார்த்துக்கோங்க…” என்றவனிடம் விடாப்பிடியாக தன் படிவை சாண்டில்யனுக்கு விட்டு கொடுக்க…

அதில் பார்த்தான்.. தான் பிறந்த தேதி நேரம் வருடம். இடம் என்று சொன்னதுமே… ஒரு அரை மணி நேரம் அவருக்கு என்று நேரத்தை எடுத்து கொண்ட அந்த ஜோதிடர்..

பின்… “ உங்க ஜாதகம்.. கிருஷ்ணன் உடைய ஜாதகம் பா…” என்று அவர் பேச தொடங்கவும்…

சான்டில்யனுக்கு சிரிப்பு வந்து விட்டது தான்.. ஆனால் அடக்கி கொண்டான்…

கிருஷ்ணர் என்று சொன்னதுமே அனைவரின் நினைவுக்கும் வருவது.. அவரின் பெண்களின் லீலைகள் தான்.. ஆனால் அவர் பிறந்தது ஒரு இடம் வளர்ந்தது இன்னொரு இடம். அவருக்கு இரண்டு தாய்.. இரண்டு தாயின் மீதும் அந்த கிருஷ்ணர் வைத்த பாசம்…

பின் தான் அந்த ஜோதிடர்.. அதை விளக்க…. சாண்டில்யனால் நம்ப முடியவில்லை. அவர் பேச்சில் அப்படியே பார்த்து இருக்க… அனைத்தும் சொன்னவர்…

நல்ல யோகமான ஜாதகம்… திருமணம் தாமதமாக தான் நடக்கும்… இன்னுமே உங்களுக்கு திருமணம் நடந்து இருக்காது..

ஆனால் இனி தாமதிக்காது…” என்று கட கட என்று சொல்லி கொண்டு இருந்தவர் பின் ஏதோ யோசித்தவராக தன் விரல் கொண்டு கணக்கு போட்டவர்…

“உன் வீட்டில் இது வரை பொருட் செல்வம் மட்டும் தானே நிறைந்து இருந்தது… இனி குழந்தைகளின் குரல் உன் வீடு முழுவதும் எதிர் ஒலிக்கும்…” என்று சொல்லி விட்டார்..

பின் அவரிடம் சாண்டில்யன்… “இந்த ஜாதகத்தில் தோஷம்…” என்று ஆரம்பிக்கும் போதே..

“ரொம்ப ரொம்ப சுத்தமான ஜாதகம் ப்பா…” என்று விட்ட பின்… அடுத்து அவன் வாய் திறக்கவில்லை….
 
Well-known member
Joined
Jun 23, 2024
Messages
116
சாண்டில்யனுக்கு கல்யாணம் நடந்தா சொத்து பிரிக்க வேண்டிய வரும் என்று வாசு எதுவும் செஞ்சிருப்பானா🤭🤭🤭

சாண்டில்யன் ☹️☹️☹️☹️ உனக்கு கல்யாணம் யோகம் வர ஸ்ருதிக்கு டைவோர்ஸ் யோகம் வரணும் போலயே 🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️
 
Last edited:
Active member
Joined
Mar 22, 2025
Messages
35
இப்போ என்ன சந்தேகம்னா நான் ஹீரோயினை பார்த்துட்டோமா இல்லை இனி தானா இல்லை உண்மை தெரிந்து ஸ்ருதி டைவர்ஸ் வாங்க இவனிடம் வருவாளா எத்தனை கேள்விகள் மண்டைய குடையுது விஜி மேம்
 
Joined
Mar 3, 2025
Messages
73
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
அடப்பாவிகளா யார் செஞ்ச வேலை இது?🙄 கூட இருந்தே குழி பறிக்கிற வேலை செஞ்சிருக்காங்களே
 
Top