Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

நின் விரல் தீண்ட...4 டீசர்

  • Thread Author
அத்தியாயம்…4

“ஸ்ருதி நீ எப்போ வீட்டிற்க்கு போக போற….? பாவம் உன் மாமியார் வீட்டில் அவங்க என்ன செய்வாங்க…?”

பத்து நாட்களுக்கு முன்… தன் அன்னை ஷண்முகமதி கடைக்கு செல்லும் போது விழுந்து விட்டார் என்று செய்தி வரவும் தன் இரண்டு குழந்தைகளை தூக்கி கொண்டு இங்கு வந்தவள் தான். ஸ்ருதிகா ஸ்ரீ.

இன்னும் தன் மாமியார் வீட்டிற்க்கு செல்லவில்லை…

எப்போதும் வந்தால் தங்காது சென்று விடும் தன் தங்கை இந்த முறை தன் மாமியார் வீட்டிற்க்கு செல்லாது இங்கு தங்கி விடவும்…

அவன் மனைவி.. “ என்ன இது உங்க தங்கை அவள் மாமியார் வீட்டிற்க்கு போவதை பற்றி பேசவே காணும்….” என்று கேட்ட போது…

மாதவன்… “ ஏன்டி அவள் என் தங்கை அம்மா வீட்டில் ஒரு வாரம் தங்கி போக கூடாதா..?” என்று கேட்டான்.

அதற்க்கு அவன் மனைவி… “போவது என்றால் இந்த ஒரு வாரம் என்ன ஒரு மாதம் இங்கு இருந்தா கூட எனக்கு சந்தோஷம் தான்…” என்ற மனைவியின் ஒரு மாதிரியான பேச்சில் தான் மாதவன்.

“என்ன டி சொல்ற..?” என்று கேட்டது.

“எனக்கு என்னவோ அவள் புருஷன் கூட சண்டை போட்டுட்டு இங்கு வந்து இருக்கா என்று எனக்கு தோனுது… அவள் முகமே சரியில்லை…” என்று சந்தியா சொல்லவும்..

“அப்படியா சொல்ற..?” என்று கேட்டவன் பின் அவனே..

“சரி அப்படி இருந்தா கூட என்ன டி… கொஞ்சம் மன ஆறுதலுக்கு அம்மா வீட்டில் இருந்துட்டு போகட்டுமே.. இதுல என்ன தப்பு இருக்கு…?” என்று அப்போது கூட தன் தங்கையை விட்டு கொடுக்காது தான் பேசினான்…

ஆனால் சந்தியா…இந்த முறையும்.. “போனா பிரச்சனை இல்லை…” என்று திரும்ப திரும்ப அதையே சொல்லவும் தான் மாதவன்…

“சந்தியா என்ன சொல்ற…? சொல்வது தெளிவா சொல்லு…?” என்று கேட்டது…

“எனக்கு தெரிந்து பிரச்சனை பெருசு என்று எனக்கு தோனுது… அவள் புருஷன் போனை எடுப்பது இல்ல.. இப்போ அவள் போனை சுச் ஆப் பண்ணி வெச்சி இருக்கா… இரண்டு முறை உங்க தங்கச்சி புருஷன் இங்கு வந்துட்டு போனாரு.. ஆனா உன் தங்கச்சி அந்த மனுஷனோட முகத்தை கூட பார்க்கலே… அவள் குழந்தைகளையும் நம்ம பொண்ணு ஜனனி கூட விளையாட நம்ம ரூமுக்கு அனுப்பி விட்டுட்டா…எனக்கு என்னவோ இது சரியா படல.. நான் அவ்வளவு தான் சொல்லுவேன்..” என்றதும் தான் மாதவனுக்கு பிரச்சனையின் தீவிரம் புரிந்து..

“இப்போ நான் என்ன செய்ய.?” என்று கேட்டதும்…

“நீங்க மட்டும் இல்ல உங்க தம்பியுமே கேட்கட்டும்.. இல்லேன்னா நீங்க மட்டும் உங்க தங்கச்சியின் பார்வைக்கு வில்லனா தெரிவீங்க.” என்று சந்தியா சொன்னதின் பேரில் தான் நேற்று வெளியில் தம்பி வரதன் தம்பி மனைவி சங்கீதா . சந்தியா கடைக்கு செல்வது போல இவளுமே அவர்களுடன் சேர்ந்து கொள்ள.

பக்கத்து தெருவில் இருக்கும் பூங்காவில் அமர்ந்து மாதவன் சந்தியா… ஸ்ருதியின் சின்ன அண்ணன் வரதன் சங்கீதா… நான்கு பேரும் கலந்து பேசி கொண்டது இது தான்..

“இன்னும் ஆற போட கூடாது… என்ன விசயம் என்று உங்க தங்கை கிட்ட கேட்டு விடுங்க…” என்று சொன்ன சந்தியா..

“எடுத்த உடனே சண்டையா எல்லாம் கேட்க வேண்டாம்… என்னம்மா உன் மாமியார் வீட்டிற்க்கு எப்போ போக போற.. பாவம் நீ இல்லாம அவங்க கஷ்டப்படுவாங்க… அது போல பேச்சை ஆரம்பிங்க…” என்று சந்தியா முன் மொழிய..

அதையே வரதனும் சங்கீதாவும்… பின் பற்ற. இதோ கேட்டு விட்டான்…

தான் கேட்டதுக்கு தங்கையிடம் இருந்து பதில் இல்லாது போக…

“இந்த பத்து நாளில் மாப்பிள்ளை நூறு முறை எனக்கு போன் போட்டு கேட்டு விட்டார்… அத்தைக்கு இன்னும் சரியாகலையா என்று…? அம்மா தான் இப்போ எழுந்து நடக்குறாங்கலே” என்று கேட்டது வேறு யாரும் கிடையாது…. ஸ்ருதிகா ஸ்ரீயின் சின்ன அண்ணன் வரதன் தான்…

தன்னை சுற்றி இருந்த தன் இரண்டு அண்ணன் இரண்டு அண்ணிகளையும் பார்த்தவள்.. பின் அங்கு படுக்கையில் பயந்த முகத்துடன் அமர்ந்து கொண்டு இருந்த தன் அன்னையையும் ஒரு பார்வை பார்த்தாள்..

பின்… “நாளை அக்கா வரலேண்ணா. அவள் வரட்டும்.. நான் கொஞ்சம் பேசனும்…” என்று விட்டாள்…

ஷண்முகமதியின் முகத்தில் இன்னும் பீதி கிளம்பி விட்டது… அதில் ஒரு வித பதட்டத்துடன்…

“என்ன டி… ஏதாவது பிரச்சனையா..?” என்று கேட்டவரிடம் அவர் பயத்தை தெளிவு செய்ய கூட..

“பிரச்சனை ஒன்னும் இல்ல…” என்று அவளாள் சொல்ல முடியவில்லை…

ஸ்ருதி மிகவும் அமைதியானவள் தான். அனைவருக்கும் அடங்கியும் போய் விடுபவள் தான். ஏன் தாய் வீட்டில் கூட அண்ணன்கள் அக்காவுக்கு என்று சின்ன பெண்ணாக இருந்தாலும் விட்டு கொடுத்து தான் செல்லுவாள்..

ஆனால் ஒரு சிலதில் அடம் பிடித்தால் பிடித்தது தான். அது இரண்டு அண்ணனுங்களுக்கும் தெரியும் என்பதினால், பிரச்சனை என்ன என்று தெரிய நாளை வரை காத்து இருக்க வேண்டியது என்று ஸ்ருதியுடன் மீண்டும் கேட்காது விட்டு விட்டனர்..

ஆனால் அந்த அண்ணன்மார்கள் அவர் அவர் அறையில்… “ ஏன் உன் தங்கை கிட்ட இப்போ சொல் என்று கேட்க வேண்டியது தானே…. அவள் உங்க அக்கா வந்தா தான் சொல்லுவா என்று விட்டு விடுவீங்கலா…” என்று சத்தம் போட்டதிற்க்கு…

“அவள் ஒரு சிலதில் பிடிவாதம் பிடித்தால் அவ்வளவு தான்.. “ என்று விட்டனர்..

பாவம் இது சந்தியாவுக்கும் சங்கீதாவுக்கும் தெரியவில்லை… ஏன் என்றால் இவர்கள் ஸ்ருதி கல்யாணம் முடிந்து சென்ற பின் தானே இவர்கள் மருமகளாக இந்த வீட்டிற்க்கு வந்தது…

திருமணம் முடிந்து ஐந்து வருடங்கள் கூட குடுத்தனம் நடத்திய ஸ்ரீ காந்துக்கே மனைவியின் இந்த அடம் தெரியாத போது இவர்களுக்கு எங்கு இருந்து தெரிய போகிறது.

ஸ்ருதி சொன்னது போலவே மறு நாள் அந்த வீட்டின் மூத்த மகள் கலாவதியும் அவள் கணவன் குணசேகரனும்… அவர்களின் ஒரே மகள் மைதிலியும்.. டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்து இறங்கி விட்டனர்…
 
Active member
Joined
Mar 22, 2025
Messages
35
அய்யோ செல்ல குட்டி அப்படியே யூடியையும் கொடுத்துடுங்க படிப்போம்.
ஸ்ருதி போடுற அணுகுண்டுல எந்த வீடு தரைமட்டம் ஆகுதோ இல்லையோ பூயூட்டி பார்லரும் அழகை ரசிக்கிறவனும் வெடிக்காமல் இருந்தால் சரி.
 
Well-known member
Joined
Jun 23, 2024
Messages
116
சந்தியா பேசுவதை பார்த்தா ஸ்ருதி இந்த வீட்டில் இருக்க முடியாது போல 🤭🤭🤭🤭🤭

அக்காவோட ஆதரவு இருக்குமா 🧐🧐🧐

சாதனா அவ மாமா பத்தி சொன்னது எல்லாம் பொய்யா இருக்குமோ 🤔 🤔 🤔 இவ சரியில்லை என்று தான் அவங்க வெளியே அனுப்பி இருப்பாங்களோ 😖😖😖😖
 
Last edited:
Top