Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

பனியும் பத்திக்குமே....22 நிறைவு...

  • Thread Author
அத்தியாயம்….22

வசீகரி தன் அக்கா கீர்த்தனாவுக்கு உணர்த்தியது போல் தான் அனைத்திற்க்கும் துணை நின்றாள்… அனைத்து விதத்திலுமே.. ஆம் அனைத்து விதத்திலுமே துணை நிற்கும் படியான சூழ் நிலையை தான் கீர்த்தனாவின் கணவன் கிஷோர் அவள் அக்கா கீர்த்தனாவை வைத்து விட்டான் என்று தான் சொல்ல வேண்டும்..

ஆம் கிஷோர் பேச பேச வசீகரியின் குடும்பத்தினர் மட்டும் அல்லாது கிஷோரின் குடும்பத்தினரே அதிர்ந்து விட்டனர்.. கிஷோர் அந்த பெண்ணுக்கு கொடுத்த தொகையை கேட்டு..

ஆம் வீடு கட்ட வீடு கட்ட என்று கிஷோர் கீர்த்தனாவிடம் இருந்து வாங்கிய பணத்தை மொத்தமும் அந்த பெண்மணியிடம் தான் கொடுத்து இருந்தான்..

இதில் கீர்த்தனா தன் நகை மட்டும் அல்லாது சுபத்ராவிடைய நகை பணமும் தான் சேர்ந்து அந்த பெண்மணியிடம் என்று இருந்தது..

இதில் என்ன ஒரு விசயம் என்றால் மனைவி வங்கியில் வேலை பார்ப்பவள் தன்னை விட முதலீட்டை பற்றி நங்கு தெரியும் என்று நினைத்து பார்த்திபன் தன் சம்பளம் பணத்தையுமே இருவருமே சேர்ந்து தொடங்கி இருந்த வங்கியில் போட்டு இருக்க… சுபத்ரா பெரிய பெண் கேட்டால், அதுவும் பெரிய மாப்பிள்ளை வீடு கட்ட தானே கேட்கிறார். கூட. அவர் எத்தனை லட்சம் சம்பாதிக்கிறார். இது எல்லாம் ஒரு விசயமா சீக்கிரம் கொடுத்து விடுவார் என்று நினைத்து எந்த வித தயக்கமும் காட்டாது கொடுத்து கொண்டே இருந்தது தான் இங்கு இன்னும் பெரிய விசயமாகி போனது.

பாவம் பார்த்திபன் அதில் இருந்து தான் சின்ன மாப்பிள்ளையின் ஆலோசனை கொண்டு ஒரு இடம் வாங்க நினைத்து இருந்தார்.

இதை அனைத்தையும் விட இன்னும் ஒரு பெரிய குண்டாக கிஷோர் தன் அலுவலகத்தில் ஒரு பெரும் தொகையை அட்வான்ஸாக வாங்கி வேரு கொடுத்து இருக்க.

இதை சொன்ன நொடி.. கிஷோரின் தம்பி…. யார் இருக்கிறார்கள் இல்லை என்று கூட பாராது.

“அந்த கிழவி கிட்ட என்னத்த கண்ட என்று இத்தனை கொடுத்து இருக்க…?” என்று கேட்டு விட்டான்..

பின் பெரியவர்கள் முன் இப்படி பேசி விட்டோமே… என்று பொதுவாக மன்னிப்பும் கேட்டு விட.

அதற்க்கு ஜெய்… “ கிழவியோ குமரியோ… மனைவியை விட்டு இன்னொன்றை தேடினா பிரச்சனை தான்….?” என்று விட்டவன்..

பின்…. கிஷோரிடம்… “ இத்தனை பணம் கொடுத்து இருக்கிங்கன்னா.. அப்போ அவங்களை இத்தனை பிடிக்கும் என்றால், முறையா கீர்த்தனாவை காட்டி…

“ டைவஸ் வாங்கிட்டு அவங்களை மேரஜ் பண்ணிக்கோங்க..” என்று விட்டான்..

ஜெய் சொன்ன நொடி இத்தனை நேரமும் தவறு செய்து விட்டதாலோ… இல்லை மாட்டிக் கொண்டு விட்டதாலோ தலை குனிந்து கொண்டு இருந்தவன்…

“என் மனைவியை டைவஸ் பண்ணு என்று சொல்ல நீ யாருடா…” என்று கேட்டு விட..

ஜெய்யோ கிஷோர் போல் மரியாதை இல்லாது எல்லாம் பேசாது இப்போதுமே தன் நிலை குறையாது தான்…

“ ஒரே நேரத்தில் ஒரு சவாரி செய்ய முடியாது பிரதர்..” என்று சொன்னவனிடம் கிஷோர்..

“நான் தான் முதல்லேயே சொல்லி விட்டேனே எனக்கு என் மனைவி கூட தான் வாழ பிடிக்கும் என்று..”

கிஷோரின் இந்த பேச்சுக்கு அப்போ எதுக்குடா இது என்று தான் அவன் கேட்க நினைத்தான்.

ஆனால் இதை நான் கேட்க முடியாது என்று அமைதியாகி போக.

இப்போது கீர்த்தனா.. “ டைவஸ் பற்றி அவர் பேச கூடாது ஆனால் நான் பேசலாம் தானே… என்னால் உன் கூட வாழ முடியாது…” என்று விட்டாள்..

ஆம் கீர்த்தனா ஒரு முடிவு எடுத்து விட்டாள்… இனி கிஷோருடன் தன்னால் வாழ முடியாது என்று…

வீட்டு பெரியவர்கள் எப்போதும் போல்… “ குழந்தைக்காக என்று வாதிட….

அதற்க்கு கீர்த்தனா தீர்த்து சொல்லி விட்டாள்..

“என் இந்த முடிவு குழந்தைகளின் எதிர் காலத்தை கொண்டும் தான்… அவரோடு நான் இருந்தால் என் மன நிலை கெட்டு விடும்… சத்தியமா அவனை பார்க்க பார்க்க பத்தி கொண்டு தான் எனக்கு வரும்.. அவன் செய்தது நியாயபகம் வரும்.. அதன் தொட்டு கொண்டு கண்டிப்பாக நான் சண்டை பிடிப்பேன்.. காலம் போக்கில் மறந்து விடுவேன் என்று சொல்ற அளவுக்கு சிறிய தப்போ.. தெரியாமல் செய்த தப்போ இது இல்ல.

அதோடு இவர் கூட நான் இருந்தால் எந்த நேரம் கடன் கொடுத்தவன் வீட்டு முன் வந்து நிற்பான் என்று சொல்ல முடியாது.. இதனால என் குழந்தைகளுக்கு பிரச்சனை தான் வருமே தவிர… வேறு எதுவும் வர போறது கிடையாது…” என்று திட்டம் வட்டமாக சொல்லி விட்டாள்..

அவள் பேச்சை யாரும் மறுத்து கூறவில்லை என்பதை விட கூற முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும்..

கிஷோர் கீர்த்தனாவிடம் தனியாக பேசி விட்டால் போதும் மனைவியை சமாதானம் படுத்தி விடலாம் என்று அதற்க்காக எத்தனையோ கெஞ்ச…

கீர்த்தனாவோ அதற்க்கு இடமே கொடுக்கவில்லை.. இனி உனக்கும் எனக்குமாக தனியாக ஒன்றும் கிடையாது.. எது என்றாலும் இவர்கள் முன் தான் என்று சொன்னவள்..

கடைசியாக.. “ நான் உனக்கு கொடுத்ததை பாதியாவது எனக்கு கொடுக்க முடியுமா…? ஏன்னா நான் உன் கிட்ட பணம் கொடுத்து ஏமாந்தது என் பணம் மட்டும் கிடையாது… என் அம்மா அப்பா பணமும்.. என் அம்மா நகைகளுமே…. அது எல்லாம் எனக்கு மட்டும் கிடையாது என் தம்பி என் தங்கைக்குமே சொந்தமானது.. வயசானவங்க அவங்க எதிர் காலத்துக்கு வைத்து இருந்ததுமே…” என்று சொல்லி கேட்டாள்..

முன் எல்லாம் சுய நலமாக யோசித்து கொன்டு இருந்த கீர்த்தனா வாங்கிய பெரிட அடி ஆனது மற்றவர்களையும் சேர்த்து யோசிக்க வைத்து விட்டது போல்…

அதனால் கேட்க. அதோடு கீர்த்தனா கேட்டது நியாயமானதும் கூட தான்.. ஆனால் அதற்க்கு உண்டான பதில் தான் பாவம் கிஷோரிடம் இல்லை என்று..

கடைசியாக கிஷோரின் தம்பி தான். “ நீ எப்படியோ அந்த வீட்டை கட்டி முடிக்க போறது கிடையாது.. நல்ல இடத்தில் இருக்க பாதி கட்டி முடிச்சி இருக்க புதுசும் கூட அதனால அதை விற்று அவங்க கிட்ட கொடுத்து விடு…” என்று சொல்ல.

ஜெய்க்கும் இது நல்ல யோசனையாக தெரிந்ததினால் கிஷோரை பார்த்தான்.

பாவம் கிஷோரின் முகம் பார்த்த நொடி அனைவருக்கும் தெரிந்து விட்டது.. அதற்க்கும் வழி இல்லை என்று..

ஆம் அந்த வீடியோ வந்த நாளே…. வெளியில் கடன் வாங்கி இருந்தவர்கள் அவனை சூழ்ந்து கொண்டனர்….

ஒரு சிலர் அவன் வீடு கட்டி கொண்டு இருப்பது தெரிந்து.. அதுவும் முக்கியமான இடத்தில் இடம் என்பதில்..எனக்கே விற்று விடு என்று அடி மாட்டு விலைக்கு கேட்டனர் என்பதை விட மிரட்டினர் என்று தான் சொல்ல வேண்டும்…

ஏன் என்றால் அவன் கடன் வாங்கிய இடம் அப்படி பட்டது… கிஷோர் முழித்த முழியில் கேட்டு விசாரித்த விதத்தில்…

“இவன் கையை நாம் பிடித்தால் நம்மையும் சேர்த்து கொண்டு இவன் புதை குழியில் விழுவது நிச்சயம்…” என்று ஜெய் நினைத்த நொடி..

ஜெய்யின் பெரிய அண்ணன்… “ ஜெய் கிஷோர் கடன் வாங்கி இருக்கும் இடம் ரொம்ப டெஞ்சரானது ஜெய்… அவங்க வாங்கிய பணத்தை வாங்க என்ன என்ன ஆனாலும் செய்வாங்க… ஒரு சில இடத்தில் வீட்டு பெண் மீதே கை வைத்து இருக்காங்க.. வேண்டாம்.. அந்த பெண்ணை அவன் கூட அனுப்பாதே.. பார்க்க வேறு நல்லா இருக்கு வேண்டாம்.. அவன் விசயத்தை முடிச்சு விட்டு வந்துடுடு. அதோட நீயும் பார்த்து. அவனோடு தொடர்பு போல் இருக்காதே… அதோடு எனக்கு எல்லாத்தையும் விட நீ எங்களுக்கு முக்கிய்ஸ்ம்..” என்று விட்டான்..

ஜெய்… அண்ணன் என்ன சொல்ல வருகிறான் என்று புரிந்த நொடி… தன் கை பேசியை அனைவரும் கேட்கும் படி ஸ்பீக்கரில் போட்டு விட…

ஜெய் அண்ணன் தீபக் ராஜ் சொன்னதை அனைவரும் கேட்டு விட. இத்தனை நேரம் குழந்தைகள் என்று யோசித்து கொண்டு இருந்தவர்கள் கூட வேண்டாம் என்று நினைத்து விட்டனர்.

இதில் கிஷோர் குடும்பத்தினர் மட்டும் இல்லை கிஷோரே வேண்டாம்… கீர்த்தனா தன்னோடு இருந்தால் வேண்டாம்..

மதுவை தொட்டவர்களை கூட ஒரு சில பெண்கள் விட்டு விடுவார்கள்.. திருந்தி வந்தால் ஏற்றுக் கொள்வார்கள்..

ஆனால் மாதுவை தொட்டவன்… அதன் தொட்டு பணத்தை தண்ணியாக செலவு செய்தவன் இதோ தனித்து நின்று விட்டான். ஆம் தனித்து தான்…

கீர்த்தனா இந்த முடிவை எடுத்து விட்டாலும் அதனை தான்டி வர மிகவும் சிரமப்பட்டு போய் விட்டாள்..

அதுவும் இழந்தது தன் வாழ்க்கை மட்டும் அல்லாது பணம் நகையும். தன்னோடது மட்டும் அல்லாது பெற்றோர்களுடையதும் எனும் போது.

பிரச்சனை வர தானே செய்யும், வந்தது வசி பிரச்சனை செய்யவில்லை என்றாலும் சுயநலத்தின் மொத்த உருவமான அவளின் தம்பி ஸ்ரீ காந்த் வந்து விட்டான்.

“என்னால மானம் போச்சி மரியாதை போச்சு என்று சொன்னிங்கலே இப்போ என்ன ஆச்சு…?” என்று கேட்டவன்.

“சரி அது எல்லாம் விடுங்க… அது உங்க பிரச்சனை.. “ என்று சொன்னவன்..

பின்…. “ அது எப்படி எங்களுக்கும் சேர வேண்டிய பணம் நகையை நீங்க அவளுக்கு மட்டும் கொடுப்பிங்க….?” என்று கேட்டவனை தான் சுபத்ராவும் பார்த்திபனும் சீ என்று பார்த்தனர்..

இங்கு கூட பிறந்தவள் வாழ்க்கை இழந்து மனம் நொந்து நிற்கிறாள்… அதை பற்றி கவலை படாது இப்படி பேசுகிறானே என்று நினைத்து.

ஆனால் ஸ்ரீ காந்த் மீது மட்டுமே குறை சொல்லி விட முடியாது.. விதை ஒன்று போட்டால் வேறு ஒன்றா முளைக்கும்…

நாம் என்ன போட்டோமோ அதை தானே அருவடை செய்ய முடியும்… கெளரவன் ஆடம்பரம் பணம் தான் முக்கியம் என்று சொல்லி சொல்லி வளர்ந்தவன் அந்த பணத்தை கேட்டு நிற்கும் போது வாய் அடைத்து போக.

ஆனால் அக்காவுடன் துணைக்கு நின்ற வசி…” அவங்க கொடுத்தது அவங்க சம்பாதித்த பணம்… மூதையார் சொத்து கிடையாது.. அது அக்காவுக்கு என்ன தெருவில் போகுறவங்களுக்கும் கொடுப்பாங்க..” என்ற தங்கையின் பேச்சில்..

முன் போல் அடிக்க பாய்ந்து விட்டான் தான்.. அதுவும் தங்கை மாசமாக இருக்கிறாள் என்று தெரிந்துமே.

அனைவரும் ஏய் எனும் முன்…. என்றும் போல் அன்றும் மாலை மனைவியை பார்க்க வரும் ஜெய் சரியான சமயத்தில் வந்து விட்டதால் ஸ்ரீ காந்த் வீசியை கையை இடையில் பிடித்து கொண்டது மட்டும் அல்லாது முறுக்கியும் விட்டான்..

“விடு விடு அத்தான் விடுங்க….” என்று சொல்ல சொல்ல ஸ்ரீ காந்துக்கு அதிகம் வலியை கொடுத்த பின் தான் ஜெய் ஒரு வழியாக அதுவும் தன் மனைவி அவனின் சீரா…

“அந்த கருமம் பிடித்த கையை விடுங்க….” என்று சொன்ன பின் தான் விட்டான்…

இப்போது ஸ்ரீ காந்த்… “ நான் எனக்கு மட்டும் பேசவில்லையே… இது எல்லாம் வசீக்கு சேர வேண்டியது தானே.. நான் இவளுக்கும் சேர்த்து தானே பேசுகிறேன்…” என்று பம்மி பேசுகிறவனிடம்..

“எனக்கு தெரியும் டா. நீ உன் தங்கை மீது எத்தனை பாசம் வைத்து இருக்க என்று.. இதோ கர்பமா இருக்கும் தங்கையை கை ஒங்கியதில் இருந்தும். அக்கா பிரச்சனைக்கு வராது பணம் நகைக்கு வந்து இருப்பதிலேயே தெரியுது டா…. என் மனைவி சொன்னது தான்.. அது அவங்க பணம் அவ்வளவு தான்…” என்று சொல்லி அவனை அனுப்பி..என்று ஒரு ஒரு பிரச்சனையாக தான் வந்து வரிசை கட்டி நின்றது.

அதை அனைத்திற்க்குமே வசியும் ஜெய்யும் துணை நின்றார்கள்… கீர்த்தனாவுக்கு பிரச்சனை வர வர வசீயின் குழந்தையும் வளச்சி அடைந்து ஒன்பதாம் மாதம் எட்டி விட.

ஆடமரம் ஆடம்பரம் என்று சொல்லி கொண்டு இருக்கும் சுபத்ராவுக்கு உறவுக்காரர் முன் நிலையில் ஒன்றும் செய்ய முடியாது போய் விட.

ஜெய்க்கு தான் இவர்கள் பற்றி தெரியுமே.. அதன் தொட்டு மனைவிக்கு அவர்கள் போட்ட நகையையே பத்து சவரனை எடுத்து வந்து சுபத்ராவிடம் கொடுத்தவன்..

“இதை வைத்து செய்து கொள்ளுங்கள்…” என்று விட்டான்..

அவர்களுக்கும் வேறு வழி இல்லை தான் ஏன் என்றால் கீர்த்தனாவுமே அந்த வீடுக்கு என்று வெளியில் பணம் வாங்கி கிஷோரிடம் கொடுத்து இருந்தாள்..

கீர்த்தனா கேட்ட இடத்தில் எல்லாம் பணம் பணம் கிடைத்தது.. கீர்த்தனா வசதியை பார்த்து நம்பி கொடுத்தவர்கள் இப்போது அனைத்து விசயமும் தெரிந்து அவளை நெருக்க.. தாயும் பெரிய மகளும் இருக்கும் நகைகளை எல்லாம் விற்று கொடுக்கும் படியாக தான் ஆகி விட்டது….

கீர்த்தனா எத்தனை எத்தனை கெத்து காட்டி கொண்டு இருந்தாளோ அத்தனை அத்தனைக்கு அனைவரிடமும் பேச்சு வாங்கும் படியான நிலையில் தான் கீர்த்தனாவின் தற்போதைய நிலை ஆகி போனது..

கெட்டதிலும் ஒரு நல்ல விசயமாக அனைத்திற்க்குமே வசி அக்காவுக்கு துணை இருந்தாள்… அவள் மட்டும் இல்லாது அவளின் கணவன் ஜெய்யுமே அனைத்திக்கும் துணையாக இருந்தான் .

ஜெய் இடத்தில் வேறு யாராவது இருந்து இருந்தால் இத்தனை பெரிய உதவி செய்து இருப்பார்களா என்பது சந்தேகம் தான். அதுவும் அத்தனை பார்த்து பார்த்து செலவு செய்யும் ஜெய்யின் குடும்பம் இத்தனை பெரிய உதவியை கீர்த்தனா என்ன சுபத்ரா பார்த்திபன் கூட எதிர் பார்க்கவில்லை..

ஆம் அத்தனை ஒரு பெரிய உதவியை தான் ஜெய் கீர்த்தனாவுக்கு செய்தான்… இன்னுமே ஐம்பது லட்சம் தேவையான நிலை கீர்த்தனாவுக்கு தன்னுடையது தன் அம்மாவுடையது என்று அனைத்தும் போய் விட எதுவும் இல்லாது போனவள் என்ன செய்ய..

அதுவும் அதிகம் தொகை கொடுத்த ஒருவனின் பார்வையும் பேச்சும் ஒரு மாதிரியாக வேறு இருக்க நெருப்பில் நிற்பது போல் தான் இருந்தாள்..

இது எல்லாம் அவளுக்கு புதியது… குழந்தைகள் மட்டும் இல்லை என்றால் நான் ஏதாவது செய்து கொண்டு இருந்து இருப்பேன் என்று தன் அன்னையிடம் ஒரு முறை சொல்லி அழ..

அன்றில் இருந்து சுபத்ரா தன் மகளை அடை காக்கும் கோழி போல் மகளுடனே இருந்தார் வேலைக்கும் செல்லாது.

வசீ தாய் வீட்டில் இது போல் பிரச்சனை ஆனதில் இருந்து அடிக்கடி வந்து போய் கொண்டு தான் இருந்தாள்….

இதை சுபத்ரா மகள் சொன்னதை அழும் போது தான் வசீ.. “ நீங்க போட்ட என் நகை இருக்கும் போது என்ன கவலை ம்மா..” என்றதில் சுபத்ரா மட்டும் அல்லாது அப்போது தான் தன் பிள்ளைகளை பள்ளியில் விட்டு வந்த கீர்த்தனாவுமே அதிர்ந்து தான் போய் விட்டாள்..

“எப்படி உன் மாமியார் வீட்டில் ஒத்து கொள்வார்கள்… பெரியவ வாழ்க்கை தான் இப்படி ஆகிடுச்சி.. நீயாவது நல்லா இருக்கனும் வசீ.. இதை தொட்டு உன் வாழ்க்கையிலும் பிரச்சனை வந்து விட போகிறது…

அதோடு உன் மாமியார் வீட்டவங்க பார்த்து பார்த்து தான் செலவே செய்வாங்க… இத்தனை பெரிய தொகைக்கு நகைன்னா வேண்டாம்.. வேண்டாவே வேண்டாம்…” என்று விட்டார்..

மாலை வீடு வந்த பார்த்திபனுமே மனைவி சொன்னதையே தான் சொன்னார். “ வேண்டாம்… பெரிய மகளுக்காக சின்ன மகளை பிரச்சனையில் தள்ள நான் விரும்பல…. உன் புருஷன் இத்தனை ஆதரவா இந்த சமயத்தின் எங்க கூட இருப்பதே போதும். இது போல் எல்லாம் செய்து அதையும் நான் கெடுத்து கொள்ள விரும்பவில்லை…” என்று சொல்ல..

வசீயோ “ அது எல்லாம் எனக்கு ஒரு பிரச்சனையும் வராது…….” என்று அத்தனை தீர்க்கமாக எதை வைத்து சொன்னாளோ தெரியவில்லை…

மறுநாளே.. ஜெய் தன் மனைவி வீட்டில் போட்ட நூறு சவரன் நகைகளில் இருபத்தி ஐந்தை மட்டும் வைத்து கொண்டு மற்ற அனைத்தையும் கொண்டு வந்து சுபத்ராவின் கையில் கொண்டு வந்து கொடுத்தவன்.

“இதோட நம்ம வீட்டு பெண்கள் கெளரம் தான் முக்கியம் அத்தை…” என்றவனின் பேச்சில் கீர்த்தனா அவனின் காலிலேயே விழ போய் விட்டாள்.

சுபத்ராவோ தன் கை கொள்ளும் அளவுக்கு இருந்த நகைகளை பார்க்க பார்க்க அவர் கண்களில் இருந்து கண்ணீர் இடை விடாது வந்து கொண்டு இருந்தது.. அந்த கண்ணீர் துளியானது துளி துளியாக அவர் கையில் இருந்த நகை மீதும் விழ..

இந்த நகை வசீக்கு போடும் போது ஜெய்யை தான் எத்தனை கீழாக பேசினோம்.. பார்த்தோம்… இதற்க்காக தான் உன்னை கல்யாணம் செய்து கொள்கிறாங்க என்பது போலான பேச்சுக்கள் எல்லாம் பேசினது எல்லாம் அவரின் நியாயபகத்தில் வந்து போயின….

ஜெய் தான்.. தன்னிடம் நகை வாங்க கூச்சப்பட்டு அழுகிறார்கள் என்று நினைத்து..

“இது நீங்க சம்பாதித்தது அத்தை… என்னுடையது எடுத்து நான் கொடுக்கலையே…. எதை பற்றியும் யோசிக்காம பிரச்சனை தீர்க்க பார்ப்போம்..” என்று சொன்னவன்..

அவனே முன் நின்று நகைகளை விற்று…. கடன் வாங்கியவர்களிடம் கொடுத்து அவர்களிடம் எழுதி வாங்கி என்று அனைத்தும் முடிக்க..

இதோ சின்ன மகளின் சீமந்தம் என்றால் என்ன செய்வார்… ஜெய் தான் அப்போதும் அந்த இருபத்தி ஐந்தில் இருந்தும் பத்தை கொண்டு வந்து தந்தது..

இதோ வசியின் சீமந்தம் மிக எளிமையாக நடந்தாலும், மிக மகிழ்ச்சியாக நடன்டு முடிந்தது…

சீமந்தம் முடித்த ஒரு வாரத்தில் ஜெய்க்கும் அவனின் சீராவுக்கும்.. பெண் குழந்தை பிறந்தது….

பிரசவ செலவுக்கு கூட கை துடைத்து கொண்டு இருந்த போது வசீ தான் தன் வங்கியில் இருக்கும் பணத்தை கொடுத்தது..

எந்த பணம் பிசாத்து பணம்… “ பதினைந்து ஆயிரம் என்று சொன்னார்களோ அதை வைத்து தான் வசீ பிரசவம் மட்டும் அல்லாது குழந்தைக்கு போட்டு அனுப்ப வேண்டிய அனைத்தையும் வாங்கி கொண்டு தாய்க்கும் தந்தைக்கும் மேலும் சங்கடத்தை கொடுக்காது செய்து கொண்டு விட்டது…

கீர்த்தனாவோ… “ எப்படி இவ்வளவு…. ஜெய் கொடுத்தாரா…?” என்று கேட்டதற்க்கு தான் வசீ..

“தொகை எத்தனை சின்னதாக இருந்தாலும் முதலீடு நல்ல முறையில் செய்தால் கொஞ்ச நாளில் அதிகம் ஆகும் க்கா… என் சம்பளம் தான் யாரும் வாங்கலையே.. அதை ஈட்டி எப்… கோல்ட் சில்வர் என்று எல்லாத்திலும் போட்டேன் க்கா.. இப்போ தான் தங்கமும் வெள்ளியிம் எங்கேயோ போய் விட்டதே க்கா…” என்று சொன்னவளின் பேச்சில்

இருக்கும் உண்மையை புரிந்து கொண்ட கீர்த்தனாவுமே…

இப்போது தாய் வீட்டில் சமையல் செய்யும் பெண்மணியை நிறுத்தி விட்டு.. தானே வேலைக்கு செல்லும் முன் கீர்த்தனா அனைத்தையு செய்து விட்டு தான் செல்கிறாள்..

ஆம் கீர்த்தனா இப்போது வேலைக்கு செல்கிறாள் தான். முன்பே ஐடியில் வேலை பார்த்தவள் தானே… அதனால் உடனே கிடைத்து விட்டது தான்.

என்ன ஒன்று இத்தனை ஆண்டுகள் வீட்டில் இருந்ததினால் கொஞ்சம் பின்னோக்கி செல்லும் படியாகி விட்டது…

முன் போல் இருந்தால் என்ன செய்து இருப்பாளோ… ஆனால் இப்போது கிடைத்த் வேலையை கெட்டியாக பிடித்து கொண்டாள்..

தங்கை சொன்னது போல் வருமானம் எத்தனை இருந்தாலுமே அதை நாம் செலவு செய்வதையும் கொண்டும் இருக்கிறது என்பதை உணர்ந்தவளாக அதற்க்கு தக்க தன் செலவுகளை குறைத்து கொண்டு செல்கிறாள்..

வசீயும் குழந்தை பிறப்போடு இத்தனை பிரச்சனையிலும் தன் பி.எட்படிப்பை முடித்ததோடு.. பள்ளி கல்லூரியில் வேலைகள் கிடைத்த போதும் செல்லாது கணவன் எவ்வழியோ… மனைவி அவ்வழியாக கணவன் இந்தி டியூஷன் நடத்தும் இடம் பக்கம் தமிழ் ட்யூஷன் எடுக்கிறாள்.. மாணவர்களின் எண்ணிக்கை கணவனோடு அவளுக்கு தான் அதிகம் கூட இதை கொண்டும் வீட்டுல் கலாட்டா நடக்கும்…

கூட்டு குடும்பம் என்பதினால் இத்தனைக்கும் நடுவில் குழந்தை வளர்ப்பு அவளுக்கு கடினமாக இல்லை.. அவளின் மாமியார் அத்தனைக்கும் துணையாக இருந்தார்.

ஜெய்யுமே தன் கடை விரிவு படுத்தி என்று அடுத்து அடுத்து வளர்ச்சியில் தான் சென்று கொண்டு இருக்கிறது.

மாமியார் வீட்டவர்களுக்கும் அதாவது முதலில் மாமனார் மாமியார் வேலையில் இருந்து ஓய்வு பெற. அதில் இருந்து வந்த பணத்தை கொண்டு என்ன என்ன செய்ய வேண்டும் என்ரறு ஆலோசனை சொன்னதோடு.

“இப்போதும் ஒன்றும் கெட்டு போகவில்லை.. இரண்டு பேருக்கு பின்ஷென் வருது அதை கொண்டு என்னவும் செய்யலாம்..” என்று சொன்னவன் செய்யவும் வைத்தான்…

ஆடம்பரம் என்பது முதலில் பகட்டாக தான் தெரியும்.. ஆனால் அந்த வாழ்க்கை என்பது ஓட்டை விழுந்த படகில் பயணம் செய்வது போல் தான்.. அதை உணர்த்தி விட்டான் தன் மாமியார் வீட்டவர்களுக்கு நம் ஜெய்…

நிறைவு…




 
Top