அத்தியாயம்… 10
அந்த மகிழ்வுடனே கெளசல்யா…. “ஸ்வேதாவை கூப்பிடட்டுமாப்பா..?” என்று கேட்டார்…
“வேண்டாம் அத்த. நானே போய் பார்த்துக்குறேன்…” என்று சொன்னவனிடம் கெளசல்யா…
“சரிப்பா.. .” என்று சொன்னவர்.. நாகரிகம் கருதி அந்த இடத்தை விட்டு சென்று விட்டார்.
பின் தான் அக்னி ஒரு வித பதட்டத்துடன் தன் மூன்று வருட காதலியை நேரில் பார்க்க ஆர்வமுடன் பெண்ணின் அறைக்கு சென்றது…
அங்கு பெண்ணோ முழுமையாக வரைந்து முடிக்கப்படாத ஒவியம் போல் அவளின் அலங்காரம் முழுமை பெறாது பாதியில் இருந்தாள்…
பெண் அறைக்கு ஆண் ஒருவன் வரவும் அந்த அழகு நிலைய பெண் தான் செய்து கொண்டு இருந்த வேலையை நிறுத்தி விட்டு வாசலை பார்த்தாள்…
பெண்ணவளுமே தன் வேலையை விட்டு யாரை பார்க்கிறாள் என்று அவளுமே தன் முன் இருந்த கண்ணாடி வழியே கதவில் சாய்ந்து நின்று கொண்டு இருந்தவனை பார்த்தாள்…
அக்னியுமே கண்ணாடி வழியாக தான் அந்த பாதி அலங்காரத்திலுமே ஜொலித்து கொண்டு இருப்பவளை பார்த்தவன்.. பார்த்தான் பார்த்தான் பார்த்துக் கொண்டே இருந்தான்..
இவர்களின் இருவரின் அந்த பார்வையையும் பார்த்த அந்த அழகு நிலைய பெண்ணுக்கு புரிந்து விட்டது வந்தது யார்…? என்று… அதனால் தன் உதவிக்கு இருந்த பெண்ணை…
“வா கொஞ்ச நேரம் கழிச்சி வரலாம்…” என்று அந்த பெண்ணிடம் சொன்னவள்..
ஸ்வேதாவிடமும்.. “ரிசப்ஷனுக்கு இன்னும் டூ ஹவர்ஸ் தான் இருக்கு மேடம்…” என்று சொல்லி விட்டு தான் சென்றது.
ஆனால் அது எல்லாம் யார் காதில் விழுந்தது… வாசலில் நின்று கொண்டு இருந்த அக்னி வந்த இரு பெண்களுக்கும் வழி கூட விடாது அப்படியே தன்னவளையே பார்த்து கொண்டு இருக்க.
“என்ன டா இது…” என்று நினைத்து கொண்டு அவனை கொஞ்சம் இடித்துக் கொண்டு தான் அந்த அறையை விட்டு செல்லும் படியானது அந்த பெண்களுக்கு..
அந்த கொஞ்சம் இடித்தலில் தான் அக்னி தன் நிலைக்கு கொஞ்சம் மீண்டான்…கொஞ்சம் மீண்டான் என்று தான் சொல்ல வேண்டும்.
ஏன் என்றால் அவனின் பார்வை அந்த கண்ணாடியில் தான் பெண்ணவளின் அந்த பிம்பத்தையே வட்ட மடித்து கொண்டு இருந்தது.. தலை அலங்காரம் மட்டும் முடிந்து இருக்க…
முகத்தில் ஒரு சில சாயம் பூச்சும் கண்ணுக்கு மட்டுமே மை இட்டு இருக்க… நெற்றியில் பொட்டு வைக்காது அந்த இடம் வெறுமையாக தான் இருந்தது.
அந்த இடத்தின் வெறுமையை பார்த்து கொண்டே தான் அக்னி மெல்ல நடந்து அவள் அருகில் வந்து பெண்ணவளின் பின் பக்கம் நின்றது..
பெண்ணவளுமே அவனின் ஒவ்வொரு நடை அடியிலும் மனது மத்தளம் கொட்டியது.. என்றாலுமே திரும்பி பார்க்காது கண்ணாடி வழியாக தான் பெண்ணவளுமே அவனை பார்த்தது பார்த்தப்படி இருந்தாள்…
ஆனால் மனதில் வெட்கமும் கூடவே ஆசையும் சரிபாதியாக இருக்க… அவன் தன்னை நெருங்க நெருங்க ஒரு வித எதிர் பார்ப்பும் அவளிடம்..
ஆனால் அவள் எதிர் பார்ப்பை அவன் செய்யாது அங்கு இருந்த டேபுல் மீது இருந்த மெரூன் நிறத்திலான ஒட்டும் பொட்டை எடுத்து அவளின் பின் பக்கம் நின்றுக் கொண்டு இருந்தவன் அவளை திருப்பாது.. அவனுமே அவள் முன் வந்து நில்லாது அப்படியே தன் கை கொண்டு அவளின் முன் நெற்றியில் கண்ணாடியை பார்த்து கொண்டு அவள் நெற்றியில் சரியாக வைத்து விட்டான்.
அப்படி அவன் கை கொண்டு நெருங்கி நின்று வைத்த போதும் அவனின் உடல் அவள் உடம்பின் மீது படவில்லை. ஆனால் அப்படி உரசி இருந்து இருந்தால் கூட பெண்ணவளுக்கு பரவாயில்லையாக இருந்து இருக்கும் போல…
நெருங்கியும் நெருங்காத அந்த அண்மையானது பெண்ணவளை மிகவும் தடுமாற வைத்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும்..
பெண்ணவளுக்கே இந்த சோதனை என்றால், அக்னியை பற்றி சொல்லவும் வேண்டுமா? / அவனின் உடலானது அவனின் பெயருக்கு ஏற்றது போலவே சூடாக கொதித்தது என்று தான் சொல்ல வேண்டும்.
இருந்துமே தன்னை கட்டுப்படுத்தி கண்ணியம் காத்தான் தான்.. ஆனால் அவனின் அந்த கண்ணியம் எல்லாம் அந்த கண்ணாடியில் தெரிந்த அவளின் உடலை தழுவி இருந்த உடையை பார்க்கும் வரை மட்டும் தான்..
ஆம் இது வரை அக்னி ஸ்வேதாவின் முகத்தை மட்டுமே பார்த்து கொண்டு இருந்தானே தவிர.. முகத்தை தான்டி அவனின் கவனம் செல்லவில்லை..
இப்போது தான் ஆணவன் கவனித்தது பெண்ணவள் உள்பாவடை மட்டுமே அணிந்து மேல் சட்டையாக அவனின் அண்ணனின் சட்டையை அணிந்து கொண்டு இருப்பதை..
அனைத்து அலங்காரமும் முடிந்து வேறு உடை என்றால் சேலைக்கு மாறும் போது அலங்காரம் கலைந்து விடும் என்பதினால், அழகு நிலைய பெண் தான் இது போல் சட்டையை எடுத்து வர சொன்னது..
இவளுமே இது வரை அண்ணன் அண்ணி அம்மா ஏன் தோழிகள் மட்டுமே வந்து போக இருந்ததினால், பிரச்சனை இல்லை.. ஏன் அக்னி வந்து இது வரையும் கூட ஸ்வேதா தன் உடையை பற்றி கவனத்தில் கொள்ளாது தான் இருந்தாள்..
ஆனால் ஆணவன் பொட்டு வைத்து விட்டு தன் உடையை பார்த்து விட்டு முதலில் அக்னி முகத்தில் தெரிந்த அதிர்வு பின் ரசனை அதன் பின்னான அந்த மோகன பார்வையை தன் முன் இருந்த கண்ணாடி வழியே பார்த்தவளின் கண்கள் ஆனது பட பட என்று அடித்து கொண்டது.
சாதாரணமாகவே ஸ்வேதாவின் கண்களும் சரி.. அதை பாதுகாக்கும் இறப்பையும் சரி அவ்வளவு அழகாக இருக்கும்…வீடியோவிலும் சரி.. புகைப்படத்திலும் சரி.. அத்தனை அழகாக அக்னியை கவர்ந்தது..
இன்றோ அழகு நிலைய பெண்களின் கை வரிசையில் இன்னுமே மீன் போன்ற கண்களை இன்னுமே அழகாக்கி பெரிய இமையை மை தீட்டி இன்னுமே அழகுப்படுத்தி அந்த கண்ணால் இன்னுமே அகலம் விரித்து தன்னை பார்த்த பார்வையானது..
ஆணவனை பித்தம் கொள்ள வைத்தது என்று தான் சொல்ல வேண்டும்..’அது கொடுத்த மயக்கமானது பெண்ணவளை முதலில் இப்போது தான் நேரில் பார்க்கிறோம். பேச வில்லை பேச வேண்டும். என்பதை எல்லாம் மறந்தவனாக தன்னை முற்றிலும் மறந்தவனாக.
சட்டென்று தன் பக்கம் பார்க்க வைத்த அக்னி அவள் என்ன என்று உணரும் முன்பே தன் இதழ் முத்தத்தை அவளிடம் பதித்து விட்டான்…
தங்களின் இதழ்களின் ஈரத்தை இருவருமே உணர்ந்தனர் தான்… என்ன செய்து விட்டேன்.. என்ன செய்கிறேன் என்று அக்னியின் மூளையானது அவனுக்கு உணர்த்தினாலுமே, தன் இதழை அவளின் இதழில் இருந்து எடுக்க வேண்டும் என்பதை மறந்தவனாக அவன் இருக்க.
அவளோ.. ஐய்யோ ஐய்யோ.. என்ன இது.. முதல் முறை இப்போது தான் நேரில் பார்க்கிறோம்.. பேச கூட இல்லை .. அதற்க்குள் என்ன இது.. இப்படி நானுமே மயங்கி நிற்கிறேனே அவன் என்ன நினைத்து கொள்வான். என்று மனதில் அத்தனை ஓடினாலுமே, அவளுமே அவனை தள்ளிவிடவில்லை…
இவர்கள் இருவரும் பிரியாது இருக்க பிரிக்க வேண்டி…அந்த அறையின் கதவை கெளசல்யா தட்டியவர்.
“ மாப்பிள்ளை உங்க வீட்டுல இருந்து வந்துட்டாங்க. உங்களை பார்க்கனுமாம்..?” என்ற பேச்சில் தான் இருவரும் தன்னிலைக்கு வந்தது..வந்தவர்கள் சிறிது இடைவெளி விட்டு பிரிந்து நின்றாலுமே, பார்வை ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொண்டு இருந்தனரே ஓழிய பேச்சு வரவில்லை…
அதற்க்குள் மீண்டுமே கெளசல்யா கதவை தட்ட.
“தோ அத்தை.” என்று குரல் கொடுத்த அக்னி.
ஸ்வேதாவிடம்… “லிப்ஸ்ட்டிக் போட்டுக்கோ… போயிடுச்சி பாரு.” என்று சொன்னவன் தன் உதட்டில் இருந்த லிப்ஸ்ட்டிக்கை அவள் பார்க்கவே துடைத்து விட்ட வாறு வெளியில் செல்ல பார்த்தவன் மீண்டும் அவள் பக்கம் திரும்பி..
“இனி உன் அண்ணன் சட்டை எல்லாம் போடாதே… என்னுடையதை கொடுக்கிறேன்…” என்று சொன்னவன்.. தன் உதட்டில் இன்னும் கொஞ்சம் ஒட்டி இருந்த லிப்ஸ்ட்டிக் கரையை துடைத்துக் கொண்டே தான் பெண்ணின் அறையை விட்டு சென்றது…
பாவம் இதை கெளசல்யா கவனிக்கவில்லை. ஆனால் அக்னியின் மொத்த குடும்பமும் இதை பார்த்து விட்டது.
வீட்டில் இருந்து ப்ரீத்தா சுந்தரம் அத்தனை பேசியதில் மரகதம் அமைதியாகி போக… அக்னியின் தம்பி அகரனுக்கோ .. இதை பற்றி பேச கூட அவனுக்கு அருகதை இல்லை..
அதோடு.. அவனுக்குமே இப்போது அக்னியை விட்டால் வேறு வழியில்லை.. முதலில் படித்து வேலையில் சேர்ந்த புதியதில் அழகான பெண்ணான. அதுவும் படிக்கும் காலத்தில் கேரளத்து பெண்ணே அழகு தான் என்று புகழ்ந்த அந்த கேரளத்து பெண்ணே… தன்னை பார்க்கவும் காதலில் விழுந்ததோடு.. ஆறே மாதத்தில் மொத்தமாக விழுந்ததில் உஷா குழந்தை உண்டாகி.
அன்று அக்காவின் நிச்சயம் என்று யோசிக்க கூட உஷா விடவில்லை.. அவனுமே உஷாவை கை விடும் எண்ணம் எல்லாம் இல்லை. ஆனால் உடனே.. திருமணம் என்ற தயக்கம் உஷா செத்து விடுவேன் என்றதில் தாலியை கட்டி விட்டான்..
பின்னும் அவனின் வாழ்க்கை நன்றாக தான் சென்றது.. ஏன் அந்த குழந்தை கலைந்த போது கூட ஒரு இரண்டு நாள் ஒரு மாதிரியாக கணவன் மனைவி இருந்தனர். பின் சகஜமாகி விட்டனர்.. தான்.
ஆனால் அதன் பின்.. என்று அடுத்து யோசிக்கும் போதே மரகதம் அகரனிடம்.
“நீ இப்படி உன் அண்ணனை விட்டு ஒதுங்கி இருந்ததினால் தான் யார் யாரோ உன் அண்ணன் பணத்தை செலவு செய்யிறாங்க…” என்ற பேச்சில் நிகழ்வுக்கு வந்த அகரன்.. தன் அன்னையிடம்..
“என்னம்மா…? என்று கேட்டவனிடம்..
“அங்கே பாரு.. அந்த மாமா பையன் உன் அண்ணன் கிட்ட என்ன இழை இழைகிறான்…” என்று ..
ஷ்யாம் மாப்பிள்ளைக்கு என்று தான் வாங்கி வந்த ஜெயின் மோதிரம் கை ஜெயினை மாப்பிள்ளையாக தயாராகி வந்த அக்னிக்கு மாட்டி விட்டு தோளில் கை போட்டு சிரித்து பேசிக் கொண்டு இருந்தவர்களை காட்டி சொல்ல அகரனுமே ஷ்யாம் அக்னியும் அந்த பிணைப்பினை தான் பார்த்து கொண்டு நின்று இருந்தான்..
சிறு வயது முதலே அகரனுக்கு அண்ணன் அக்கா என்ற பாசம் இருந்தாலுமே, அவனுக்கு கொஞ்சம் சுய நலம் அதிகம் தான்.. உடம்பு நோக வேலை செய்ய மாட்டான்.. தன் செளகர்யம் குறைய கூடாது என்று பார்ப்பான்..
வருமானம் குறைவாக இருந்த போது பிள்ளைகளின் படிப்புக்காக மரகதமும் எக்ஸ்போர்ட் கம்பெனிக்கு வேலைக்கு சென்ற சமயத்தில் அம்மா இரவு வீட்டிற்க்கு வரும் முன்னவே அக்னியும் சரி ப்ரீத்தாவும் சரி வேலைகளை முடித்து விடுவார்கள்..
ப்ரீத்தா மேல் வேலைகளை பார்த்தால், அக்னி இரவு சமையலை எளிமையாக முடித்து விடுவான். ஆனால் அகரனோ அந்த பக்கம் கூட வர மாட்டான். அக்னி அவனுக்கு முக்கியமான பரிச்சையின் போது அகரனிடம்.. ஏதாவது செய் என்றால் ஓட்டலில் வாங்கிக் கொள்ளலாம் என்று சொல்லி விடுவான்..
இதன் தொட்டு அக்னியுமே அகரனிடம் வேலை செய் என்று சொன்னது இல்லை.. அதே சமயம் முன் போல் நெருக்கத்தையும் விட்டு விட. பின் படிப்படியாக அக்னி வெளி நாட்டு படிப்பு அதன் பின் அகரனின் திருமணம் என்று மொத்தமாக அண்ணன் தம்பி இருவரையும் பிரித்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும்..
பின் அகரன் தனிப்பட்டு வாழ்க்கையில் அடி வாங்கியதிலும், அக்னி பின் படிப்படியாக உயர்ந்து வசதியாக வாழ்வதையும்.. அதுவும் பெரிய சொத்து இரண்டு வாங்கி போட்டு உள்ளான்.. அதோடு சூப்பார் மார்க்கெட் அப்பாவுக்கு என்று வைத்து கொடுக்க போகிறான் என்று அன்னையின் மூலம் அறிந்ததில் இருந்து..
ப்ரீத்தாவுக்கு நகைப்ப்போட்டு திருமணம் செய்து கொடுத்தான்.. அம்மாவை வசதியாக வைத்து உள்ளான். இதோ அப்பாவுக்கும் கடை வைத்து கொடுக்க போகிறான். அப்போ எனக்கு மட்டும் தான் இவன் ஒன்னுமே செய்யவில்லை. என்று நினைத்து கொண்டான்.
ஆம் அகரனிடமும் மரகதம் … “ உன் அண்ணன் அப்பாவுக்கு சூப்பார்மார்க்கெட் வைத்து கொடுக்க போறார்…” என்று தான் சொல்லி இருக்கிறார்..
இன்னுமே யாருக்குமே அந்த சூப்பார்மார்க்கெட் வைக்க இடம் பார்க்க சொன்னது அக்னிக்கு தான் என்பது தெரியாது.. அதோடு இனி அவன் இந்தியாவில் தான் இருக்க போகிறான் என்பதும் தெரியாது.. பெண் வீட்டவர்களை தவிர..
அக்னிக்கு சொல்ல கூடாது என்பது எல்லாம் இல்லை.. அமெரிக்காவில் அதிகப்படியான வேலை பளு…. பேப்பர் போட்டு விட்டு.. இதை முடிக்க வேண்டும்.. அதை முடிக்க வேண்டும்.. அதோடு தன் வேலையை இன்னொருவருக்கு பயிற்ச்சி கொடுக்க வேண்டும்… இவன் இதை எல்லாம் சரியாக செய்தால் தான்.. அவன் கம்பெனியில் சீக்கிரம் இவனை விடு விப்பார்கள். கூடுதலாக அதிக டாலரும் கொடுத்து..
அதன் தொட்டு அவன் வேலையில் மூழ்கியது ஒரு காரணம் என்றால் மற்றொரு காரணம். கல்யாணம் மண்டபம் இவன் ஒன்று சொன்னால்..
மரகதம்.. “ அதுவா அது ரொம்ப பணம் ஆகுமே. அக்னி.” என்று சொல்பவர்.. அவரே. ஒரு சத்திரத்தை சொல்லி..
“இதுக்கு அட்வான்ஸ் கொடுக்கட்டுமா….?” என்று கேட்ட அன்னையிடம்..
“ ம்மா நான் சொன்ன சத்திரத்துக்கே அட்வான்ஸ் கொடுத்து விடுங்க.. அப்பா கிட்ட அந்த சத்திரத்தில் நம்ம டேட்ட்டுக்கு காலியா இருக்கா என்று பார்க்க சொன்னேன்… இருக்கு என்று தான் சொன்னார். நான் பணம் அனுப்புறேன் அதையே புக் பண்ணிடுங்க…” என்று சொன்னவன் பேச்சு.. சத்திரத்தோடு முடியவில்லை..
இவன் ஒன்று சொன்னால் மரகதம் அது அதிகம் இதுவே போதும்.. என்று ஒவ்வொன்றுக்கும் பேசி பேசியே அனைத்தும் செய்யும் படியானதில், இதை சொல்ல அக்னிக்கு நியாபகத்தில் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.. கூடவே நேரம் கிடைக்கும் போது எல்லாம் ஸ்வேதாவோடு பேசுவதில் தான் அவன் ஆர்வமும் இருந்தது..
அதன் தொட்டு பேச்சு வாக்கில் அவன் படித்தது முதல்.. அதற்க்கு உண்டான செலவு அதை அவன் எப்படி பிரட்டினான்.. எப்படி அடைத்தான். சேமிப்பு என்று நடந்தது… நடந்து கொண்டு இருப்பதை சொல்லியதோடு தன் எதிர்காலம்…அதில் தங்கள் வாழ்க்கை என்று அவனின் அனைத்து திட்டத்திலுமே அவளையும் சேர்க்க.
ஸ்வேதாவுக்குமே உறவு முறைக்கு முன்… தங்கள் குடும்பம் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும் என்ற வைராக்கியம் இருந்ததினால், அக்னியின் பேச்சை உன்னிப்பாக கேட்டத்தோடு அவனின் எதிர்கால திட்டத்தோடு தன்னையும் இணைத்து கொண்ட ஸ்வேதா அனைத்திலுமே அவனுக்கு துணையாக இருக்க நினைத்தவள் அதற்க்கு உண்டான வேலைகளையும் ஆரம்பித்து விட்டாள்..
ஆம் ஆரம்பித்து விட்டாள் தான்… நீ வேலை பார்க்கும் இடத்திற்க்கு பக்கத்தில் இடம் பார் அதுவும் கட்டிடமாக இருந்தால் பரவாயில்லை என்றதில்..
இவளும் தன்னுடன் வேலை பார்ப்பவர்களிடம் சொல்லி இருந்தாள்… இதோ அவளின் வர வேற்புக்கு வந்த அவளுடன் வேலை பார்க்கும் ஒருவர்..
“சூப்பர் மார்க்கெட்டே விலைக்கு வருதும்மா…” என்று சொன்னவர்.. அதன் பெயரும் சொல்ல…
ஸ்வேதாவுக்கு ஒரே ஆச்சரியம்… “ அதுவா.. அது நல்லா போகுதே… அதை ஏன் விற்கிறாங்க….? ஏதாவது பிரச்சனையா…? ” என்று கேட்டாள்..
அதற்க்கு இடத்தை சொன்னவர்… “ இல்லேம்மா அவங்க இரண்டு பசங்களுமே வெளி நாட்டில் தான் செட்டில் ஆயிட்டாங்க. அதோடு இந்த கடை ஒனருடைய மனைவி ஆறு மாசத்துக்கு முன் தான் இறந்துட்டாங்க. அது தான்,, தனியா இருக்க பிடிக்காது இதை வித்துட்டு பசங்க கூட செட்டில் ஆகிட பார்க்கிறார்…” என்று அவர் சொல்லியும் ஸ்வேதாவுக்கு யோசனை தான்..
காரணம் அவ்வளவு நன்றாக போகும் கடை அது… விற்கிறாங்க என்றால் ஏதாவது பிரச்சனையா என்ற சந்தேகம் அவளுக்கு… அக்னியிடம் இருக்கும் அந்த பணத்தின் மதிப்பு.. அதுக்கு அக்னி எத்தனை வெளிநாட்டில் கஷ்ட்டப்பட்டு சம்பாதித்தது என்று அனைத்துமே அவளுக்கு தெரியுமே….
அதன் தொட்டு எதிலாவது அதை போட்டு ஏமாந்து விட கூடாது.. அதன் தொட்டே இத்தனை யோசனை பெண்ணவளுக்கு. இந்த பேச்சு எல்லாம் வர வேற்பு முடிந்த பின்… அக்னி இருக்கும் போது தான் நடந்தது..
அந்த இடத்தை பற்றி சொன்னவர் சென்ற பின் கூட ஸ்வேதாவுக்கு அதே தான் யோசனையாக இருந்தது..
சாப்பிடவும் வந்து அமர்ந்து விட்டார்கள் அப்போது கூட ஸ்வேதா.. அக்னியிடம்..
“அந்த இடத்தில் ஏதாவது பிரச்சனையா என்று தீர விசாரித்து விட்டு தான் டோக்கன் அட்வான்ஸ் கூட கொடுக்கனும்…” என்று சொன்னவளின் பேச்சில்…
அக்னி தான்.. “இன்னைக்கே ரொம்ப யோசிக்காதே டா. . இன்னைக்கு நமக்கு உண்டான நாள்.. இன்னைக்கும் நாளைக்கும் உன் யோசனை எல்லாம் என் மேல மட்டும் தான் இருக்கனும்..” என்று சொன்னவனிடம் ஸ்வேதா சிரித்துக் கொண்டே ..
“அப்போ இந்த இரண்டு நாள் மட்டுமே உங்களை யோசித்தா போதுமா…?” என்று அவளுமே அந்த இடத்தை மறந்து புதுமணப்பெண்ணாக பேசியவளின் காதில் அக்னி…குறும்பாக…
“அதுக்கு அப்புறமும்.. உன்னை என்னை பத்தியே யோசிக்க வைக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு…” என்று சொல்ல.. அவனின் பேச்சின் பொருளிலும் பார்வையிலுமே பெண்ணவளுக்கு முகம் சிவந்து விட்டது.
இந்த பேச்சுக்கள் இரவு உணவு உண்ணும் போது நடந்தது… இவர்களின் இந்த பேச்சு யார் காதிலும் விழாது போனாலுமே, அவர்கள் அருகில் அமர்ந்திருந்த ஸ்வேதாவின் அண்ணன் அண்ணி அம்மா இதை பார்த்து மனம் நிறைந்து போனார்கள் என்றால், எதிர் வரிசையில் அமர்ந்திருந்த அக்னியின் தந்தையை தவிர மற்றவர்கள்..
என்ன பேசினான் என்று காதில் விழாத போதிலும்… “ நம்ம கிட்ட இது போல பேசி இருக்கானா…? எப்போவுமே இறுக்கமா தானே இருப்பான்….” என்று மரகதம் தன் மகளிடமும் சின்ன மகனிடமும் சொல்ல.
அவர்களுமே உணர்ந்தாலுமே ஒன்றும் சொல்லவில்லை.. காரணம் அக்னியை இருவருமே பகைத்து கொள்ள விரும்பவில்லை.. அதோடு அகரனுக்கு இனி தன் அண்ணனுக்கு ஷ்யாமோடு நான் தான் நெருக்கமாக இருக்க வேண்டும்… நான் தானே சொந்த தம்பி… அதோடு அண்ணனோடு சுமுகமாக பேசி சொத்தை பற்றியும் கொஞ்சம் பேச வேண்டியும் இருந்ததும் ஒரு காரணத்தினால் அமைதியாக இருந்தாலுமே மனதில் பொறாமை இருக்க தான் செய்தது… என்ன செய்ய அக்னியினால் ஆதாயம் ஆக வேண்டி இருந்ததினால் அமைதி காக்க.
மரகதம் தான் விடாது புலம்பிக் கொண்டு இருந்தார். இந்த புலம்பம் எல்லாம் தன் மகள் சின்ன மகனிடம் மட்டுமே அக்னியிடம் இதை பற்றி எதுவும் சொல்லாததால், வர வேற்ப்பும் அதற்க்கு அடுத்து திருமணமும் நல்ல முறையிலேயே எந்த பிரச்சனையும் இல்லாது நடந்து முடிந்தது.. உஷா மட்டும் தன் திருமணத்தோடு இந்த திருமணத்தை ஒப்பிட்டு பொறாமை என்று சொல்ல முடியாது ஆனால் ஆதங்கப்பட்டுக் கொண்டாள்.
தனக்கு மட்டும் இது போல எதுவுமே நல்ல முறையில் நடக்கவில்லையே என்று… ஒரே மகளாக செல்வ செழிப்பு மிக்க குடும்பத்தில் தான் நான் பிறந்தேன்… பின்பு ஏன் என் வாழ்க்கை இப்படி ஆனது என்று நினைத்து நினைத்து வருந்திக் கொண்டவளின் முகப்பாவனையை அவனின் கணவன் கண்டு கொண்டு விட்டான்..
அதனால் அவள் அருகில் வந்து… “ தோ பார் உஷா. இந்த குழந்தையும் ஏதாவது ஆகிடுச்சி.. நான் சும்மா இருக்க மாட்டேன் அவ்வளவு தான்.” என்று மிரட்டுவது போல் சொன்னவனின் பேச்சில் உஷாவுக்குமே கோபம் வந்து விட்டது..
“அப்போ நான் தான் கலைந்த குழந்தைகளுக்கு காரணம் என்று சொல்றிங்கலா….” என்று கோபமாக கேட்ட உஷாவிடம்..
அவளுக்கு மேல் கோபத்தோடு அகரன் பதில் அளித்தான்…
“அப்போ இல்ல என்று சொல்றியா…?” என்று கேட்டவன்..
தொடர்ந்து.. “ உன் இத்து போன அப்பா அம்மாவை நினச்சி தானே உன் கவலை எல்லாமே.. அவங்களை பத்தி தானே உன் கவலை எல்லாமே….?” என்று கேட்டவனிடம் உஷா.
ஆதங்கத்தோடு.. “ ஏங்க ஒரு பொண்ணா என் அப்பா அம்மாவை பத்தி நான் நினைக்க கூடாதா..? அவங்க அத்தனை கஷ்டம் அவமானம் அங்கு படும் போது ஒரு பொண்ணா இங்கு எப்படி என்னால நிம்மதியா இருக்க முடியும் சொல்லுங்க….?” என்று கேட்டவளிடம்.
அகரன்… “ நினைக்க கூடாது.. இப்படிப்பட்ட அப்பா அம்மா கூட நீ தொடர்பில் இருந்தால் அது நம்ம வாழ்க்கையும் புதை குழியில் போறதுக்கு சமம். இதை எத்தனையோ முறை உன் கிட்ட சொல்லிட்டேன்… ஆனா அதை பத்தி எல்லாம் கேட்காது.. ஒரு முறை நீ அங்கு கேரளாவுக்கு போய் நடந்தது எல்லாம் உனக்கு மறந்து போயிடுச்சா.?” என்று கேட்ட கணவனுக்கு உஷாவினால் பதில் சொல்ல முடியவில்லை….