Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Poiyenum Perum Velicham....13

  • Thread Author
அத்தியாயம்….13

மகன் இப்போ என்னம்மா சொல்றிங்க…? என்று கேட்டதும் மரகதத்திற்க்கு சட்டென்று பதில் சொல்ல முடியாது போக… தன் பார்வையை மகள் பக்கம் திரும்பினார்…

ப்ரீத்தியோ தன் அன்னை தன்னை பார்த்ததுமே அவளுமே இத்தனை நாள் அந்த சொத்து தன் அப்பாவின் பெயரில் தான் வாங்குவாங்க என்று அடங்கி நடந்தவளுக்கு… கூடவே தனக்கு கொடுத்த அந்த பத்து லட்சத்தை கேட்ட கோபத்திலும்…

“ இல்லேண்ணா உங்களுக்கே தெரியும்.. நீங்க இந்த படிப்பு படிக்க ஆசைப்பட்ட போது… நம்ம கிட்ட பணம் கூட இல்ல… என் நகையை வைத்து தான்…” என்று அவள் பழைய பல்லவியே பாட ஆரம்பித்தவளை அடுத்து பேசாது தடுத்து நிறுத்திய அக்னி…

“ அது எத்தனை சவரன்….?” என்று அண்ணன் கேட்டதும்… ப்ரீத்திக்கு அக்னி ஏன் கேட்கிறான் என்பது புரிந்து விட்டது…

“இல்லேண்ணா அப்போ நீ படிச்சு முடிச்சு இத்தனை சம்பாதிப்ப என்று உறுதி இல்லாத போது உன்னை நம்பி.. அத்தனை நகையை கொடுத்து….” என்று மேலும் ப்ரீத்தி என்ன சொல்வாள் என்று புரிந்த அக்னி..

“ உன் நகை உன் நகை என்று சொல்றியே…? அது நீ சம்பாதித்து வாங்கியதா….?” என்று கேட்டான்..

சத்தியமாக அக்னி இப்படி கேட்பான் என்று அங்கு இருந்த யாருமே எதிர் பார்க்கவில்லை.. நீல கண்டனுமே மகனின் இந்த கேள்வியில்..

“அக்னி இது என்ன பேச்சுப்பா…?” என்று கேட்டதற்க்கு.

அக்னி…” அது தான்பா நானும் கேட்கிறேன்..? இப்போ இங்கு நடந்து கொண்டு இருக்கிறது என்ன பேச்சுப்பா… லாஸ்ட் வீக் தான்ப்பா மேரஜ் ஆகி இருக்கு… தோ அவங்க அம்மா கால் பண்ணிட்டே இருக்காங்க. அவ எத்தனை தடவை தான் கால் கட் பண்ணிட்டு இருப்பா..

இது போல அவள் கால் கட் பண்ணிட்டே இருந்தா அவ அம்மா பயந்துக்க மாட்டாங்க. “ என்று கேட்ட மகனிடம்.

“சரிப்பா இது பத்தி அப்புறம் பேசலாம்.. நீ ஸ்வேதா வீட்டிற்க்கு போக பாரு..” என்று சொன்னதும்..

அக்னி அடுத்து எதுவும் பேசாது ஸ்வேதாவின் வீட்டிற்க்கு கிளம்பி விட்டான்..

போகும் வழி முழுவதுமே ஸ்வேதா அமைதியாக தான் வந்தாள்.. ஆனால் மனதில் அத்தனை யோசனைகள்…

அக்னி தான்… “ என்ன டா பயந்துட்டியா….?” என்று கேட்டான்..

அதற்க்கு மட்டும் இல்லை என்று தலையாட்டியவள்.. கணவனிடம் சொல்ல தான் நினைத்தாள்…

நீங்க உங்க வீட்டு மனிதர்களிடம் காசு விசயத்தில் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள் என்று.. ஆனால் சொல்லவில்லை…. அவளுக்குமே கணவன் புதியவன் தானே… எங்கு பணத்தை பற்றி பேசினால், தன்னை பணத்திற்க்கு முக்கியத்துவம் தருகிறவள் என்று தப்பாக நினைத்து விடுவானோ என்ற பயத்தில் எதுவும் சொல்லவில்லை..

இங்கு ஸ்வேதா வீட்டில் அக்னி சொன்னது போல் மகள் அழைப்பை ஏற்காது கட் செய்தில் உண்மையில் பயம் தான்.. மாப்பிள்ளைக்கும் அழைத்தார்,.. அக்னி தன் கை பேசியை அறையில் வைத்து விட்டதால் அவனும் எடுக்கவில்லை..

பின் தங்கள் அறைக்கு வந்து பார்த்த போது கெளசல்யா தன் கை பேசியில் அழைத்து இருப்பதை பார்த்து.

மனைவியிடம்… “ உங்க அம்மா எனக்கும் கூப்பிட்டு இருக்காங்க…” என்று தன் கை பேசியை காண்பித்து சொன்னவன்..

“கூப்பிடுட்டா….?” என்றும் கேட்டவனிடம்..

“ இல்ல வேண்டாம்…நாம இப்போ அங்கு தானே போக போறோம்.. சொல்லிக்கலாம்…” என்று விட்டாள்..

அவளுக்குமே அம்மாவிடம் என்ன சொல்வது என்பது புரியவில்லை.. உண்மையை சொன்னாலுமே அம்மா பயந்து விடுவார்.. மேலும் அவளுக்குமே ஒரு வாரமாக இருந்த அந்த இனிமை உணர்வு தொலைந்தது போலான நிலை தான்..

அவளுக்கு தெரிந்து விட்டது.. கண்டிப்பாக மாமியார் வீட்டில் ஒரு பெரிய பிரச்சனையை நாம் சந்திக்க வேண்டி இருக்கும் என்று…

அம்மா வீட்டிற்க்கு போகும் வழி முழுவதுமே அம்மாவிடம் என்ன சொல்வது என்ற யோசனையும் ஸ்வேதாவுக்கு..

அக்னியுமே…. “ உங்க அம்மா கிட்ட வீட்டில் நடந்த பிரச்சனையை சொல்ல போறியா….?” என்று கேட்டவனை திரும்பி பார்த்தாள்..

மனைவியின் பார்வையில் அக்னி என்ன கண்டானோ..

“ இல்ல இன்னைக்கு மாதிரி எங்க வீட்டில் இது போல பேசினதே கிடையாது…” என்றவனை பார்த்தாளே ஒழிய அவனுக்கு பதில் சொல்லவில்லை…

ஆனால் மனதில் இப்போ தானே நீ இந்தியாவில் செட்டில் ஆக போற என்று சொல்லி இருக்க… இப்போ தானே உனக்கு கல்யாணம் ஆகி புதுசா ஒரு பெண் உன் வாழ்க்கையில் வந்து இருக்கா… இத்தனை வருஷமா வெளி நாட்டில் நீ சம்பாதிக்க.. இங்கு இவங்க நல்லா செலவு செய்துட்டு இருந்தாங்க.. இப்போ அது எல்லாம் முடியாதோ என்ற பயம்.

கூட அவங்க உன் பணத்தில் பெரிய வீடா கட்டிக்கனும் என்று நினச்சி இருந்து இருப்பாங்க… அது முடியாது போகவும்.. இத்தனை ஆண்டுகளாக கட்டி காத்த அந்த போலி முகம் கழண்டு கீழே விழுந்து விட்டது என்று நினைத்தவளுக்கும் தெரியாது இன்னுமே அவர்களின் உண்மையான முகத்தை காட்டவில்லை என்பது..

மனைவியின் இந்த அமைதியை பார்த்து… பயந்து விட்டாள் என்று நினைத்து கொண்ட அக்னி…

மீண்டும் …”இனி அவங்க இது போல பேச மாட்டாங்க டா.. நீ பயந்துக்காதே… புரியுதா….?” என்று கேட்டவனுக்கு பெண்ணவள் தலையாட்டினாள்…

இவர்கள் கெளசல்யா வீட்டிற்க்கு சென்ற சமயம் பாவம் கையில் கை பேசியை வைத்து கொண்டே ஒரு வித பதட்டத்துடன் அவர் வாசலிலேயே தான் நின்று கொண்டு இருந்தார்..

இவர்கள் காரை கண்டதும் கெளசல்யா தன் வயதையும் மறந்து ஓடி வந்து கேட்டை திறந்து விட்டவர் மகள் காரில் இருந்து இறங்கியதுமே..

“ஏன்டி போனை எடுக்கல….” என்று இதை கோபத்துடன் தான் தன் மகளை பார்த்து கேட்டார்…

“ இல்லேம்மா அங்கு அவங்க வீட்டு ரிலேஷன் எல்லாம் வந்து இருந்தாங்க. அது தான்… அது போக நாங்க இங்கு தானே வர போறோம்….” என்றவளின் பேச்சில் கெளசல்யா இன்னுமே தான் மகளை பார்த்து முறைத்தார்..

பின் தான் மருமகனை பார்த்து… “ வாங்க மாப்பிள்ளை.” என்று சொன்னவர்..

“தப்பா நினைக்காதிங்க மாப்பிள்ளை… இவ போனை எடுக்காது கட் செய்யவும்.. உங்களுக்கு கூப்பிட்டேன். நீங்களுமே எடுக்கலேன்னதும் நான் பயந்துட்டேன்….” என்று சொல்லியவரிடம்…

“ போனை ரூமில் வெச்சிட்டேன் அத்த.. ஸ்வேதா சொன்னது போல தான் இங்கு தானே வரோம் என்று போன் செய்யல.. எங்கு மேல தான் தப்பு அத்த உங்களை கூப்பிட்டு இருந்து இருக்கனும் சாரி அத்தை …” என்ற அக்னியிடம்…

“ அய்யோ என்ன மாப்பிள்ளை… சாரின்னு எல்லாம் வாங்க வெளியிலேயே நின்னுட்டிங்கலே….” என்று பெண்ணையும் மாப்பிள்ளையும் அழைத்து சென்றார்…

பின் பெண்ணை தனியாக அழைத்து சென்று..

“ எந்த பிரச்சனையும் இல்லையே…” என்று கேட்டவரிடம் ஸ்வேதா..

“ம்மா அது எல்லாம் ஒன்னும் இல்லேம்மா.. அது தான் சொன்னனே.. அவர் சொந்தக்காரங்க எல்லாம் வந்து இருந்தாங்க.. அது தான் போனை கட் செய்தேன்ம்மா… “ என்றவளிடம்..

“ நான் ரொம்ப பயந்துட்டேன் டி..” என்று திரும்ப அதையே தான் கெளசல்யா சொன்னார்..

ஸ்வேதாவுக்கு தான் தெரியுமே…. மகள் மகன் தான் அவருடைய உலகமே.. அதன் தொட்டு அவளுமே ஒன்றும் சொல்லவில்லை..

அம்மா வீட்டில் விருந்து மூன்று நாள் முடிந்தும் அக்னி இங்கேயே. இருந்து விட்டான் தன் மனைவியுடன்..

அக்னி வீட்டிலேயே. கணவன் மனைவி இந்த பக்கம் சென்றதும்.. மரகதம் அத்தனை பேச்சு இவன் என்ன நினைத்து கொண்டான்.

படிக்கும் போது… “ நான் வெளிநாட்டில் போய் படிக்கனும் என்று சொல்ல தெரிந்தவனுக்கு இங்கு செட்டில் ஆக போறேன் என்பதை முதலில் நம்ம கிட்ட சொல்லி இருக்கனும் தானே… அதோடு அத்தனை நல்ல வேலையை யாராவது விட்டு விட்டு இங்கு வருவாங்கலா.. அதோடு இந்த சூப்பர் மார்க்கெட் பத்தி அவனுக்கு என்ன தெரியும்.. அந்த கம்பியூட்டர் பெட்டியை தட்டிட்டு இருந்தவனுக்கு வியாபரத்தை பத்தி தெரியுமா….?” என்று கேட்டு அத்தனை பேச்சு.

ப்ரீத்தாவுமே… “ நான் சம்பாதித்து வாங்கிய நகையா என்று கேட்கிறார் அண்ணன்… ஒரு பொண்ணுக்கு அப்பா அம்மா தானே நகை வாங்கி வைப்பாங்க.. இந்த அண்ணா என்ன புதுசா இப்படி எல்லாம் கேட்கிறாங்க…” என்று கத்தி கொண்டு இருக்க

நீல கண்டனுக்கு தான் மத்தளத்திற்க்கு இரண்டு பக்கம் அடி என்பது போல் தலை வலிக்க ஆரம்பித்து விட்டது..

அவருக்குமே. மகன் இப்படி செய்வான் இப்படி பேசுவான் என்று எதிர்பார்க்கவில்லை. கூடவே மருமகள் எதுவும் பேசாது அமைதியாக இருந்தாலுமே அனைத்தையும் உன்னிப்பாக கவனித்து கொண்டு தான் இருந்தாள்..

இந்த பெண் எப்படி..? கல்யாணம் முன் வரை யோசிக்காத விசயத்தை இப்போது யோசித்தார். காரணம் முன் என்றால் திருமணம் முடிந்து மகனுடம் வெளி நாட்டில் தான் வாழ போகிறாள்.

எப்போதாவது ஒரு வருடத்திற்க்கோ இல்லை இரண்டு வருடத்திற்க்கு ஒரு முறையோ இந்தியா வந்து செல்ல போகிறாள் என்று நினைத்தவர்….

இப்போது மகனுடம் இங்கு தான் என்றால்… எப்படி.. அதுவும் இப்போது மனைவி மகளின் கோபத்தில் ஏதாவது பேச… அந்த பெண் அமைதியாக போவாளா..

அந்த பெண்ணும் ஏதாவது பேசினாள்… பிரச்சனை தானே.. இதில் ஒரு மருமகள் இல்லாது இன்னொரு மருமகளாக சின்ன மருமகளும் இங்கு தான் இருக்கிறாள்..

இரு மருமகள்கள் ஒரு வீட்டில் இருவருக்கும் ஒத்து போகுமா.. சின்ன மருமகளான உஷாவை பற்றியும் அவருக்கு ஒன்றும் தெரியவில்லை.

மனைவி தான் அந்த பெண்ணிடம் பேசுவதும் பழகுவதும்… அதுவும் இருக்கப்பட்ட பெரிய வீட்டு பெண் என்று அந்த பெண்ணை தன் மனைவி தாங்கு தாங்கு என்று தாங்குகிறாள்..

கூட தன் மனைவிக்கு ஒன்னு இல்லாத வீட்டு பெண்ணான ஸ்வேதாவை எடுப்பதில் துளி கூட விருப்பம் இல்லாது தான் அந்த பெண்ணை கட்டி கொண்டு வந்து இருப்பது..

இதில் ஆகாச கோட்டையாக அந்த சூப்பார் மார்க்கெட் தனக்கு என்று நினைத்து கொண்டு இருந்தவளுக்கு அது இல்லை என்ற கோபம் வேறு இருக்கும்..

இதில் மகனும் வெளி நாட்டு வேலையை விட்டு விட்டு இங்கு தான் என்பதில் அது வேறு கோபம் இருக்கும்.. இது எல்லாம் சேர்ந்து கண்டிப்பாக தன் மனைவி அந்த பெண்ணை எப்படி நடத்துவாளோ….

இருமருமள்களுக்கும் இடையே வேற்றுமை காட்டினால் எந்த பெண்ணும் சும்மா இருக்க மாட்டாள்… அது பிரச்சனையை உருவாக்கும் தானே… என்ற கவலையும் அவருக்கு சேர்ந்து விட்டது…

ஸ்வேதா உஷா அகரனை பற்றி கணித்தது சரியே என்பது போல் தான் தங்கள் அறையில் உஷா தன் கணவனிடம்..

“என்னங்க உங்க அண்ணன் இப்படி குண்டை தூக்கி போட்டுட்டார்…?” என்று கேட்டவளிடம்..

அகரன்.. “ என்ன குண்டை தூக்கி போட்டுட்டான்… உங்க வீட்டவங்க என் தலையில் போட்ட குண்டை விட இது கம்மி தான்…” என்று மனைவி மீது எரிந்து விழுந்தான்..

ஆம் அகரன் தனக்கு சான்ஸ் கிடைக்கும் போது எல்லாம இப்படி தான் மனைவியின் மீது பாய்வான்… அதுவும் தனியே இப்படி இருக்கும் சமயத்தில் மட்டும் தான்..

அதுவும் இப்போது எல்லாம் அவனின் அன்னை….

“எனக்கு உன்னை பத்தி அத்தனை கவலை இல்லேட்டா. இப்போ உன் மாமியார் வீட்டில் கோபமா இருந்தாலும் ஒரே பெண் தானே விட்டு விட மாட்டாங்க. அந்த சொத்து எல்லாம் நாளை பின்ன ஒரே பெண்ணான உஷாவுக்கு தான் வந்து சேரும்…

அக்னி பத்தியும் கவலை இல்ல பெரிய சொத்தா வாங்கிட்டான்.என் கவலை எல்லாம் ப்ரீத்தா பத்தி தான்.. ஒரே சொத்து வாங்கி போடுவதற்க்குள் அத்தனை கஷ்டப்பட்டுட்டா….” என்று அவன் அன்னை மரகதம் பேசும் போது எல்லாம் அகரன் திருடனுக்கு தேள் கொட்டினது போல் எதுவும் பேச முடியாது அமைதியாக நிற்கும் படியான நிலையில் இருந்தவனின் மொத்த கோபம் எல்லாம் அவனின் மனைவி மீது தான் திரும்பும்.

அதுவும் இல்லாது இப்போது எல்லாம் தன் அன்னை மனைவியை தாங்கு தாங்கு என்று தாங்குவதை பார்க்கும் போது எல்லாம் இவர்களுக்கு எல்லாம் உண்மை தெரிந்தால் என்ன ஆகும் என்ற கவலையும் கூட அவனுக்கு…

இதோடு இவன் ஒரு கணக்காக இந்த இடம் மூதையார் சொத்து இதில் பின் பக்கம் இருக்கும் இடத்தில் ஒரு பெரிய வீடாக அண்ணன் கட்டி விட்டால் அதில் நாம சென்று விடலாம்.. பாகம் பிரிக்கும் போது அந்த சமயத்தில் உண்மையான தங்களின் நிலை கண்டிப்பாக வீட்டவர்கள் அனைவருக்கும் தெரிந்து இருக்கும்.

அப்போது கூடிய மட்டும் இந்த சொத்தை பிரிக்காது ப்ரீத்தாவுக்கு ஒரு தொகையை கொடுத்து விடலாம். அக்னிக்கு தான் அத்தனை இருக்க அது போதும் நான் தான் கஷ்டப்படுகிறேன் என்று மொத்தமாக தனக்கு இந்த சொத்து வரும் படி பார்த்து கொள்ள வேண்டும்..

அப்படி இல்லை என்றாலும் மொத்தமாக வாங்க முடியவில்லை என்றாலும், பெரிய பகுதியாக. அதுவும் அக்னி இப்போது கட்ட போகும் அந்த பெரிய வீட்டு பகுதி தான் எடுத்து கொள்ள வேண்டும் என்று நினைத்து கொண்டு இருந்த அகரனுக்கு அண்ணனின் இந்த முடிவு மொத்தமாக மண் அள்ளி போட்டது போலான நிலை தான்..

இப்படி அனைத்திலுமே கீழாக தான் ஆனதுக்கு மனைவியின் அம்மா வீடுமே ஒரு காரணம் என்றதில் உஷா மீது பாயந்தான்..

உஷாவுமே… “ உங்க அண்ணன் எடுத்த முடிவுக்கு என் மீது ஏன் இப்படி பாயிறிங்க..?” என்று அழுது கொண்டே தான் கேட்டாள்…

அதற்க்கும் அகரன்.. “ ஆமா பாயிறாங்க… முன்ன பாயாம இருந்து இருந்தா.. எனக்கு இந்த நிலை வந்து இருக்காது..” என்று திருமணத்திற்க்கு முன்பே செய்த அவர்களின் கூடலை குறிப்பிட்டு சொல்லவும் உஷா அமைதியாகி விட்டாள்..

இருவருக்குமே ஒருவர் மீது ஒருவருக்கு காதல் இருக்கிறது தான். ஆனால் அதையும் தான்டி தொடர் சரிவாக அவர்களின் வாழ்வில் ஏற்படும் சரிவு…

பொருளாதாரத்தில் அனைவரும் முன்னேறி கொண்டு போக தாங்கள் மட்டும் இப்படி பின் தங்கி இருப்பது.. அவனுக்கு ஒரு வித கைய்யாலக தனத்தை கொடுக்க.. அதன் தாக்கமே இது போலான பேச்சுக்கள் அகரன் வாயில் இருந்து விழுகிறது..

பின் தன் பேச்சுக்கு மனைவி அமைதியாகி போனதை பார்த்தவன். அவள் தோளை தொட்டு..

“ உஷா சாரிடா.. நானே ஒரு மாதிரி டென்ஷனில் இருந்தேன்.. அது தான். நீ ரொம்ப யோசித்து குழம்பிக்காதே என்ன.. அது நம்ம குழந்தைக்கு தான் பிரச்சனை… நான் ஒன்னை நினச்சா இங்கு ஒன்னு நடக்குது அது தான் எனக்கு டென்ஷன்… இதை எல்லாம் நான் பார்த்துக்குறேன்.. நீ நம்ம பேபியை மட்டும் நல்லா பார்த்துக்கோ… டாக்டர் கொடுத்த மாத்திரையை ஒழுங்கா போடு.. புரியுதா.. எனக்கு இப்போ இருக்கும் ஒரே ஆறுதல் இந்த குழந்தை மட்டும் தான்… உன் கவனம் மொத்தமும் நம்ம குழந்தை மீது தான் இருக்கனும் புரியுதா…? “ என்று சொன்ன கணவனுக்கு..

உஷா “ சரி ….” என்று தலையாட்டினாலும் மனதில் பயப்பந்து உழல தான் செய்தது.. காரணம் இந்த குழந்தைக்கும் ஏதாவது ஆகிவிடுமோ… என்று…
 
Top