Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Poiyenum Perum Velicham....14

  • Thread Author


அத்தியாயம்…14

அக்னி தன் வீட்டில் நடந்த விசயங்களை மறந்து புது மாப்பிள்ளையாக தன் மாமியார் வீட்டில் மிக சந்தோஷமாகவே இருந்தான்.. இரவு பகல் பாராது தான் அவன் இல்லற வாழ்க்கை மகிழ்ச்சியுடன் தன் மனைவியுடன் கூடி களித்தான் என்று தான் சொல்ல வேண்டும்..

இன்னும் கேட்டால் ஸ்வேதா வீடு வாடகை வீடு தான்… அக்னி வீட்டோடு சின்ன வீடு தான்.. ஆனால் ஸ்வேதாவின் அம்மாவின் மனது பெரியதாகி போக.. புது மண தம்பதியர்களுக்கு இடஞ்சல் இல்லாது கெளசல்யா… மகளுக்கும் மாப்பிள்ளைக்கும் விருந்து சமைத்து வைத்தவுடன்..

“பக்கத்து வீட்டவங்க இந்த கோயிலுக்கு கூப்பிட்டாங்க. இரவு தான் வருவேன்.. சமச்சி வெச்சிட்டேன்.. நீயும் மாப்பிள்ளையும் சாப்பிடுங்க….” என்று மகளிடம் சொல்லி விட்டு மாப்பிள்ளையிடமும் விடுபெற்று சென்று விடுவார்..

இது போல் தினம் ஒரு காரணமாக கெளசல்யா வெளியில் சென்று விட… அக்னி தன் மனைவியுடன் மகிழ்ச்சியுடன் அனைத்தும் மறந்து திளைத்தான்.

ஆனால் ஸ்வேதா முன் போல் தேன் நிலவில் மரகதத்தின் முரண்ப்பட்ட நடவடிக்கையை மறந்து திளைத்தது போல் எல்லாம் இப்போது அவளாள் கணவனும் ஒன்ற முடியவில்லை....

கணவனுடன் மகிழ்ச்சியுடன் இருந்தாலுமே ஒரு பக்கம் இங்கு வரும் நாள் தன் மாமியார் வீட்டில் நடந்த விசயங்களும் மனதில் ஒரு பக்கம் ஓடிக் கொண்டு தான் இருந்தது..

ஒரு சில சமயம் அக்னியே… “ என்ன டா. நம்ம ஹனி மூன் போல் உன் பர்மான்ஸ் இல்லையே….?” என்று கேட்ட போது தன் கவனத்தை மொத்தமும் தன் கணவன் பக்கம் திருப்பினாள் ஸ்வேதா.

அத்தனை ஆசைப்பட்டு தன்னை மணந்தவன். தன் லட்சியமான வெளி நாட்டு வேலை.. வாழ்க்கை அனைத்தையும் தனக்காக விட்டு விட்டவன்.. அவனை நாம் மகிழ்ச்சியாக வைத்து கொள்ள வேண்டும் என்ற எண்னம் ஸ்வேதாவுக்கு..

அதோடு மற்றவர்களால் தங்களின் சந்தோஷத்தை விட கூடாது என்ற நினைப்பும்… ஆனால் கணவனை மகிழ்ச்சியாக வைத்து கொள்ள வேண்டும் என்று அவள் நினைத்தால் மட்டும் போதுமா….?’

அவனுக்கு அவனின் குடும்பமே தொடர்ந்து குடச்சல் கொடுத்து கொண்டு இருந்தால், அவனால் நிம்மதியாக இருக்க முடியுமா….? பார்க்கலாம்..

இதோ இப்போது கூட கணவனும், மனைவியும் தனித்து இருக்கும் சமயம்.. மரகத்ததிடம் இருந்து அக்னிக்கு அழைப்பு வந்தது…

தன் மனைவியை கை அணைப்பில் வைத்து கொண்டே தான் அன்னையின் அழைப்பை அக்னி ஏற்றது..

“ம்மா சொல்லுங்கம்மா. எப்படி இருக்கிங்க….? சாப்பிடிங்கலா…?” என்று கேட்டவனிடம் மரகதம்.

மகன் கேட்டதற்க்கு பதில் சொல்லாது… “ கண்ணா அப்பாவோட பழைய முதலாளி ஒரு இடம் சொல்லி இருக்காருடா.. ரொம்ப சல்லிசா தான் வருதாம்…” என்று சொன்னவர் பின்.

“அவர் கூட சொல்றாருடா. எங்க கிட்ட கோடி கோடியா பணம் இருந்தும் எங்க பசங்களுக்கு படிப்பு ஏறல.. உங்க பையன் வெளி நாட்டில் படிச்சு வேலையும் கிடச்சு.. இத்தனை வருஷம் இருந்து இப்போ ஏன் வேலையை விடனும்.. சூப்பர் மாட்க்கெட் வைக்கனும் என்று நினச்சா வைக்கட்டும்.. பிசினஸ் செய்யிறதும் நல்லது தான்..” என்ற அன்னையின் பேச்சு அக்னிக்கு தலை வலியை தான் கொடுத்தது..

திரும்ப திரும்ப என்ன இது என்பது போலான ஒரு சலிப்பு… அந்த சலிப்பிலேயே தான். அதை தன் குரலிலும் காட்டி…

“ம்மா இப்போ திரும்பவும் அந்த பேச்சு ஏன்மா…?” என்று கேட்டவன்..

பின்… அவனே… “ நான் அங்கேயே இருக்கனும் என்று சொல்ற அப்பாவின் அந்த முதலாளி அப்போ சூப்பர்மார்க்கெட் வைக்க எதுக்க இடம் சொல்றார்…?” என்று கேட்டான்..

மரகதம் தான் இதற்க்கு தான் காத்து கொண்டு இருக்கிறேன் என்பது போல்… “ அது தான் கண்ணா உனக்கு இது பத்தி எல்லாம் அனுபவம் இல்ல. ஆனா அப்பாவுக்கு இருக்கு தானேப்பா… முப்பது வருஷமா அதுல தானே இருந்தார்.. நீ அப்பாவுக்கு வெச்சி கொடுத்தா.. கண்டிப்பா அப்பா அத நல்லா நடத்துவாருப்பா…

நீ இதுக்குன்னு அடிக்கடி இங்கு வந்து போக கூட வேண்டாம்.. அப்பா பெயரில் வாங்கிட்டா.. பத்தலேன்னா… ஒரு ஐந்து லட்சமோ… பத்து லட்சமோ லோன் வாங்கினா கூட அத அப்பாவே அடச்சிடுவாரு.. நீ என்ன கண்ணா சொல்ற…?” என்று கேட்ட மரகத்தின் குரலில் அத்தனை பேராசை….

அது அக்னிக்கு தெரிந்ததோ இல்லையோ கணவன் மீது சாய்ந்து இருந்ததினால் ஸ்வேதாவுக்குமே மரகதம் பேசியது அனைத்துமே தெளிவாக கேட்டதினால், மரகதத்தின் பேராசை புரிந்து விட்டது..

இவர்கள் தான் நினைத்ததை விட பெரிய திட்டத்தில் தான் இருக்கிறார்கள் என்பதை பெண்ணவள் புரிந்து கொண்டு விட்டாள்..

அது தன் கணவனுக்கு புரிகிறதா என்று கணவனின் முகத்தை பார்க்க.. அக்னியோ குழம்பி போன முகபாவனையுடன் கை பேசியை காதில் வைத்து கொண்டு இருந்தவன்.. தன் அன்னைக்கு பதில் அளிக்காது… அதிர்ந்த முக பாவனையுடன் தான் இருந்தான்..

பின் இருக்காதா…? ஒரு லட்சம் இரண்டு லட்சம் கிடையாது.. கிட்ட தட்ட இருபத்தி ஐந்து கோடி தான் சூப்பர் மார்க்கெட் வைக்க அவன் திட்ட மிட்ட தொகை.. அதாவது அவனின் அனைத்து சேமிப்பையும் தான் இதில் போடுகிறான்..

அதை தந்தை பெயரில் வாங்கு என்று அன்னை சொன்னால் அவன் அதிர்ச்சியாக தானே செய்வான்… இவன் இனி வெளி நாட்டிலேயே வேலை பார்த்து இன்னும் கோடி கோடியாக சம்பாதித்தாலுமே இத்தனை கோடி சொத்தை தந்தை பெயரில் வாங்குவது என்பது…

அதுவும் தான் வீட்டுக்கு ஒரே மகனாக இருந்தால் கூட அவனே ஆசைப்பட்டு பெற்றொர் பெயரில் சொத்து வாங்குவது என்பது வேறு விசயம்..

மூன்று பிள்ளைகள்.. அத்தனை கோடி சொத்தை எப்படி அம்மா அப்பா பெயரில் வாங்கு என்று சொல்றாங்க. அதுவும் அப்பாவுக்கு சூப்பார்மார்க்கெட் வைத்து கொடுப்பது… என்ற யோசனையில் இருந்தவனை..

மரகதம் மீண்டும்.. “ கண்ணா கண்ணா என்னப்பா சொல்ற. அப்பா முதலாளி சொன்ன இடத்தையே பேசி முடித்து விடலாமா…? என்று ஆர்வமாக கேட்ட அன்னையிடம்.

“ம்மா இதை பத்தி நான் அங்கு வந்து பேசுறேன்…” என்று சொன்னவன் பட்டென்று கை பேசியை வைத்து விட்டான்.

கை பேசியை வைத்தவன் இப்போது மனைவியை பார்த்தான். மனைவியின் பார்வை தன் முகத்தின் மீதே இருந்தாலும், யோசனை வேறு எங்கோ இருப்பதை பார்த்தவன்..

“ என்ன டா.?” என்று மனைவியின் கன்னம் தொட்டு கேட்டதும் தான் ஸ்வேதா தன் யோசனையில் இருந்து வெளியில் வந்தாள்..

வந்தவள் ஒன்னும் இல்லை என்று தலையாட்டினாலுமே அவள் முகம் தெளியவில்லை என்று தான் சொல்ல வேண்டும்…

கணவன் அவன் அம்மாவிடம்..” இதை பத்தி அப்புறம் பேசலாம்…” என்றவன்.. என்ன முடிவு செய்வான்… அவங்க சொன்னது போல் செய்வானா….?’ என்ற யோசனை தான் பெண்ணவளுக்கு..

இதை நினைத்தாலே.. அவள் மனது நிம்மதியாக இருக்க முடியவில்லை… கண்டிப்பாக அப்படி செய்தால் இதை விட முட்டாள் தனம் வேறு எதுவும் இல்லை என்று தான் அவள் சொல்வாள்…

அடுத்து அவர்களின் எதிர்காலம்.. அதுவும் இல்லாது தான் இந்தியாவில் செட்டில் ஆகிறேன் என்று தனக்கு வாக்கு கொடுத்த பின் தான் இந்த திருமணம் நடந்தது..

அப்படி இருக்க இருக்கும் பணத்தை மொத்தமும் கணவனின் அப்பா பெயரில் வாங்கி விட்டால், தங்களின் எதிர்காலம்… ? இப்படி பல யோசனையில், இருந்த கொஞ்சம் நஞ்ச நிம்மதியும் ஸ்வேதாவுக்கு பரிபோய் விட்டது…

அக்னிக்குமே முன் போல் தன் மனைவியுடம் முழுமனதாக ஒன்ற முடியவில்லை.. அவனுக்குமே இந்த யோசனை தான்.. எப்படி தன்னிடம் இப்படி ஒன்றை எதிர் பார்க்கிறார்கள் என்று…

நிச்சயமாக அம்மா சொன்னது போல் செய்ய மாட்டேன் தான்.. ஆனால் அவர்கள் சொன்னதை தான் மறுத்து அதற்க்கு அம்மா ஏதாவது பேசி மீண்டுமே ஒரு பிரச்சனையா…?’

கூட தன் மனைவி சொல்லவில்லை என்றாலுமே, தேன் நிலவின் போது இருந்த மகிழ்ச்சி இப்போது இல்லாது போனதற்க்கு காரணம்.. அன்று தன் வீட்டில் நடந்த பிரச்சனையே என்பது ஆண்மகனுக்கு புரிய தான் செய்தது.

இப்போது மீண்டும் ஒரு பிரச்சனை. அதுவும் திருமணம் முடிந்த உடனே அடுத்து அடுத்து நடந்தால் ஸ்வேதாவின் மனநிலை… இதை எல்லாம் யோசித்து கொண்டு இருந்த கணவனை மனைவியுமே கவனித்து கொண்டு தான் இருந்தாள்..

இப்படியாக இன்னும் இரண்டு நாளில் அக்னி அமெரிக்கா செல்ல வேண்டிய நிலையில் தான் அக்னி தன் மனைவியை தன் வீட்டிற்க்கு அழைத்து சென்றது…

இவர்கள் சென்றது காலையிலேயே தான். அமெரிக்காவுக்கு செல்லும் முன்பு ஒரு சில பொருட்கள் வாங்க வேண்டி இருந்ததால், தான் அத்தனை சீக்கிரம் சென்றது..

காலை உணவு எந்த வித பிரச்சனையும் இல்லாது தான் சென்றது.. அதாவது யாரும் அந்த இடம் வாங்குவது பற்றி பேசவில்லை. அதனால் அமைதியாக சென்றது..

ஆனால் அதை பற்றி பேசுவார்கள் என்பதை அக்னி மட்டும் அல்லாது ஸ்வேதாவுமே யூகித்து இருந்தாள்.. காரணம் அன்று ப்ரீத்தா மட்டும் அல்லாது அவளின் கணவன் சுந்தரமும் வேலைக்கு விடுமுறை எடுத்து இங்கு வந்து இருந்தான்..அவர்கள் மட்டும் அல்லாது ஒன்பது மணி தான்டியும் அகரனும் வேலைக்கு செல்லாது வீட்டில் அணியும் உடை அணிந்து இருப்பவனை பார்த்து..

“என்ன அகரன் வேலைக்கு கிளம்பலையா…?” என்று அக்னியே தன் தம்பியை கேட்ட போது..

அகரன்.. “ எனக்கு உடம்பு சரியில்லேண்ணா…” என்று சொன்னான் என்றால்..

அகரன் பக்கத்தில் இருந்த அவனின் மனைவி உஷா… “ எனக்கு இன்னைக்கு செக்கப்பு இருக்கு மாமா….” என்று இருவரும் ஒரு சேர வெவ்வேறு காரணம் சொல்லியவர்களை அக்னி பார்க்க. இவன் பார்க்கும் போது அகரன் தன் மனைவியை தீ பார்வை பார்த்து கொண்டு இருப்பதையும் கவனித்தவனுக்கு பல யோசனை…

அனைவரும் அவர் அவர் வேலைகளை விட்டு விட்டு தான் சூப்பர் மார்க்கெட்டுக்கு வாங்க போகும் இடத்தை பற்றி பேசவா காத்து கொண்டு இருக்கிறார்கள் என்று… நினைத்தவனுக்கு தெரியாதா.. ஏன் இவர்கள் இதில் ஆர்வம் காட்டுகிறார்கள்..

ஆனால் ஒன்றும் பேசவில்லை ஏன் எதற்க்கு என்று கேட்காது… தன் மனைவியுடன் ஷாப்பிங்க கிளம்பிவிட்டான்.

அப்போது கூட. மதியம் சாப்பிட்டு விட்டு தான் வருவோம். எங்களுக்கு செய்யாதிங்க என்று சொன்ன போது..

மரகதம்… “ இதை எல்லாம் நீ உன் மாமியார் வீட்டில் இருக்கும் போதே வாங்கிக்க கூடாதா…?” என்று கோபமாக தான் கேட்டார்..

ஆனால் அக்னி அதை காதில் வாங்காதது போல் தன் மனைவியிடம்…

“ஹான் பேக் எடுத்துக்கனுமுன்னா எடுத்துக்க….” என்று சொன்னவன்… தன் மனைவியுடன் கிளம்பி விட்டான்..

இவன் இந்த பக்கம் கிளம்பியதுமே… வீட்டில் ஒன்று கூடி… “ என்ன இது நீங்க கேட்டதுக்கு கூட ஒன்னும் பதில் சொல்லாது போறாரு…” என்று தன் மாமியாரை ஏற்றி விடும் வேலையை சுந்தரம் ஆரம்பித்து விட்டான் என்றால்,.

“இப்போ எல்லாம் அண்ணன் ரொம்ப தான் மாறிட்டாரு..” என்று சொன்னவன் வேறு யாரும் இல்லை.. அக்கா நிச்சயம் அன்று திருமணம் செய்து கொண்டு வந்த அகரன் தான்.

மேலும் “ எல்லாம் தலையணை மந்திரம் தான்.. “ என்று இதை சொன்னதும் அதே மகன் தான்…

மரகதத்திற்க்குமே தன் மகன் தன்னை மதிக்காது சென்றதில் கோபம்.. அதிலும் வீட்டு மாப்பிள்ளை வேலைக்கு விடுமுறை எடுத்து இங்கு இருக்கும் போது அவரையும் மதிக்காது இப்படி சென்று விட்டானே என்ற கோபமும்..

ஒரு சிலர் இப்படி தான். என்ன தான் மாப்பிள்ளை இங்கு இருந்து பிடுங்கி கொண்டு சென்றாலும் ,அந்த மாப்பிள்ளைக்கு அத்தனை மரியாதை கொடுப்பார்கள்..

இதே மகன் பொறுப்பாக வீட்டையும் பெற்றோரையும் பார்த்துக் கொண்டாலும்.. அந்த மகன் அந்த மாப்பிள்ளைக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.. நம் மரகதமும் அந்த வகையை சார்ந்தவர் தான்..

அதன் தொட்டு தான் சுந்தரம்… “ என்ன அத்த நான் வேலை இல்லாமலா இங்கு வந்து உட்கார்ந்துட்டு இருக்கேன்… என்ன ஏது என்று கூட கேட்காம இப்படி அவர் பாட்டுக்கு போறார்…” என்று கோபமாக கேட்ட போது..

“மன்னிச்சிக்கோங்க மாப்பிள்ளை… நீங்க போய் ரூமில் ரெஸ்ட் எடுங்க மாப்பிள்ளை. கனகாவை வஞ்சர மீன்… இறால் சுரா வாங்கிட்டு வர சொல்லி இருக்கேன்… வாங்கிட்டு வந்து சமச்சி வைத்த உடன் உங்களை எழுப்பிறேன் “

வீட்டில் சமையல் செய்யும் பெண்மணியை குறிப்பிட்டு சொன்னதும்… சுந்தரம் எப்போதும் தான் இங்கு தங்கினால் தங்கும் அறைக்கு தான் சுந்தரம் செல்ல பார்த்தான்..

ஆனால் இப்போது அதில் தன் சின்ன மகனும் மருமகளும் தங்க்கி இருப்பதால்,

மரகதம் அவசரமாக… “ மாப்பிள்ளை அங்கு அகரனும் உஷாவும் இருக்காங்க. நீங்க எங்க ரூமில் போய் படுத்துக்கோங்க..” என்று சொன்ன தன் மாமியாரிடம் சுந்தரம்..

“அங்கு தான் புது மாப்பிள்ளை தங்கி இருக்கிறாரே.” இதை ஒரு மாதிரி கிண்டலாக தான் சுந்தரம் சொன்னது.

மரகதத்திற்க்கு அது புரிந்ததோ என்னவோ ஆனால் அதை விடுத்து… “ அவங்க தான் வெளியில் போய் இருக்காங்கலே… வந்த பின்னே பார்த்துக்கலாம்…” என்று சொல்லி வீட்டு மாப்பிள்ளையை தங்கள் அறைக்கு அனுப்பி வைத்தார்..

ஆனால் சுந்தரம் அந்த அறைக்கு போகும் முன் தன் மனைவியை பார்த்து முறைத்து விட்டு போவதை மறக்கவில்லை..

ப்ரீத்தியுமே கணவன் தலை மறைந்ததும்… தன் அம்மாவிடம்..

“ம்மா என்னம்மா இது வீட்டு மாப்பிள்ளைக்கு தங்க கூட ஒரு ரூம் இல்ல.. காசு பணம் இல்லேன்னா கூட பரவாயில்லை… அத்தனை பணம் கையில் இருந்தும் இப்படி பண்றான்… இந்த அண்ணனுக்கு என்னம்மா ஆச்சு..?” என்று கோபமாக கேட்டவளிடம் மரகதம்…

“எனக்கு என்ன டி தெரியும்…” என்று தான் சொல்ல முடிந்தது..

இதன் நடுவில் அகரன் தன் அறையில் இருந்து வெளியில் வந்து தன் அன்னையிடம்… “ ம்மா உஷாவுக்கு சுராவும் இறாலும் சூடு ஒத்துக்காது… “ என்று சொல்ல..

மரகதம் உடனே தன் தலையில் அடித்து கொண்டவர்,,

“ஆமாம்லே அது மறந்துட்டேன் என்றவர். உடனே கவுச்சி வாங்க சென்று இருந்த கனகாவை கை பேசியில் அழைத்து.

“ பிரட்ட மண் ,ஈரலும் , சூப்பு வைக்க நல்லி எலும்பும் வாங்கி வர சொன்னார்..

அது வரை தன் அன்னையின் பக்கத்திலேயே இருந்த அகரன் . “ ம்மா அவளை பார்த்துக்கோங்கம்மா உங்களை நம்பி தான் உஷாவை இங்கு கூட்டிட்டு வந்தேன்…” என்று சொல்லி விட்டு சென்றவன் முதுகையே பார்த்திருந்த ப்ரீத்தா.

“ம்மா இவன் என்னம்மா இப்படி சொல்லிட்டு போறான்… “ என்று சொன்னவள்..

பின் அவளே … “ ஆமா இவன் இங்கு வந்து இரண்டு மாசம் ஆக போகுது… பணம் ஏதாவது கொடுத்தானா….?” என்று கேட்டாள்..

மரகதம்.. “ என்ன டி இப்படி கேட்கிற… அவன் என்ன வெளி ஆளா பணம் வாங்கி சாப்பாடு போட..” என்று சொல்ல..

அதற்க்கும் ப்ரீத்தா.. “ ம்மா பார்த்தும்மா முதல்ல எப்படின்னாலும் பரவாயில்லை… ஆனா இப்போ அக்னிக்கு கல்யாணம் ஆன பின்ன.. இது எல்லாம் பார்த்துக்கனும் ம்மா…” என்று சொன்ன மகளிடம்

மரகதம்.. “ என்ன டி பார்த்துக்கனும்….” என்று கேட்டவரிடம்..

ப்ரீத்தா… “ இல்ல அந்த ஸ்வேதா.. குடும்பமே நம்ம புருஷன் சம்பாத்தியத்தில் தான் நடக்குதா என்று கணக்கு பார்க்க ஆரம்பிச்சிட போறா…” என்று மகள் சொன்னது தான் தாமதம்.

மரகதம் அத்தனை பேச்சு அவர் வாயில் இருந்து வந்து விழுந்தன…

“ பாப்பாளா அவள் பார்ப்பாளா. பார்ப்பா பார்ப்பா. நான் ஏமாந்து இருந்தா பார்ப்பா. பார்க்கட்டும் …. நல்லா அங்கு என் பையனை ஏமாத்தி அங்கு இவள் அண்ணன் குடும்பமே சாப்பட்டு இருக்கு… இங்கு கூட பிறந்த தம்பிக்கு அவள் கணக்கு பார்ப்பாளா…. அதுவும் இருந்து இருந்து இப்போ தான் என் சின்ன பையன் இந்த வீடு வந்து இருக்கான்…” என்று சொல்லி அத்தனை ஆடி தீர்த்து விட்டார்..

பின் மரகதம் ஒரு வாறு மலை இறங்கியது கனகம் மரகதம் சொன்னதை அனைத்தும் வாங்கி வந்து சமைத்து முடித்ததும் தான்…

பின் மாப்பிள்ளை மகள் சின்ன மகன் மருமகள் கணவன் என்று அனைவருக்கும் பரிமாறி அவரும் சாப்பிட்டு முடித்ததும் செய்த அனைத்தும் தீர்ந்து போய் பாத்திரத்தை ஒழித்தும் போட்டு விட்டார்..

அதன் பின் தான் மாலை அக்னியும் ஸ்வேதாவும் அடுத்த நாள் அக்னி வெளி நாட்டிற்க்கு போக தேவையானதை வாங்கி கொண்டு வீடு வந்து சேர்ந்தனர்..

இன்னும் கேட்டால் இருவருக்குமே வீடு வரவே பிடித்தம் இல்லை தான்.. அக்னிக்கு மீண்டுமே வீடு சென்றால் திரும்ப பிரச்சனையை கிளப்புவார்கள் என்று,,

அவனுக்கு பிரச்சனையை பார்த்து அச்சம் எல்லாம் கிடையாது.. அவனின் அச்சமே ஸ்வேதா பயந்து விடுவாள் என்று தான்.

அது ஒரு வகையில் சரி தான். இதோ வாங்க வேண்டிய அனைத்தும் வாங்கி முடித்த பின் அந்த ஷாப்பிங்க மால் வெளியில் தான் இருவரும் இருக்கையில் அமர்ந்து இருந்தனர்.

அக்னி அமெரிக்காவில் இருந்து ஒரே மாதத்தில் திரும்ப இந்தியாவுக்கு வந்து விடுவதால், பெரிதாக வாங்க வேண்டியது இல்லை.. அதனால் ஷாப்பிங்க சீக்கிரம் முடிந்து விட்டது..

அதன் தொட்டு அந்த ஷாப்பிங்க மால் வெளியில் இருவரும் ஒருவர் கை பிடித்து இன்னொருவர் அமர்ந்து இருந்தனர்.

அக்னி வீட்டை பற்றிய யோசனையோடு.. நாளை இந்த நேரம் இந்த நாட்டை விட்டு கிளம்ப வேண்டும்…

இந்த பத்து ஆண்டுகளில் எத்தனையோ முறை இந்தியா வந்து சென்று இருக்கிறான் தான்.. ஆனால் இந்த முறை இங்கு இருந்து செல்லவே அவனுக்கு மனது இல்லை.. காரணம் அவன் மனைவி.. இப்படி த்ஃன் கையை இறுக்கி பிடித்து கொண்டு தன் பக்கய்ஹ்ய்ஹில் அமர்நு இருந்தளின் அந்த கை பிடி அழுத்தமே அவனுக்கு சொன்னது பெண்ணவளும் தன்னை போலவே தான் தவிக்கிறாள் என்பதை…

இப்போது தோன்றுகிறது… திருமணத்தை இன்னும் இரண்டு மாதம் தள்ளி வைத்து இருந்து இருக்கலாமோ என்று… இப்படி திருமணம் செய்து பதினைந்தே நாட்கள் வாழ்ந்து பின் மனைவியை விட்டு போவது என்பது கொடுமையாக இருந்தது..

அதுவும் இப்போது அந்த கொடுமையை தன் மனைவியும் அனுபவிக்கிறாள் என்பதில் ஆணவன் நாம் அவசரப்பட்டு இருக்க கூடாது என்று தவித்து போனவன் தன் கை பிடியில் இருந்த மனைவியின் கையை இவன் அழுத்தம் கொடுக்க. ஏதோ யோசனையில் அங்கு இருந்த மக்களை வேடிக்கை பார்த்து கொண்டு இருந்த பெண்ணவள் தன் கணவனை திரும்பி பார்த்தாள்..

தன்னை பார்த்த அந்த பார்வையின் தவிப்பில் அவள் கன்னம் தொட்டு…. “ எவ்வளவு சீக்கிரம் வர முடியுமோ.. அவ்வளவு சீக்கிரம் வந்துடுறோன் டா.. நீ இப்படி பார்த்தா எனக்கு எப்படியோ இருக்கு டா…” என்று சொன்ன கணவனின் அந்த பரிதவித்த பேச்சில் பெண்னவள் கண்னை தான்டி வர பார்த்த கண்ணீரை உள் இழுத்து கொண்டவள்.

“சரி…” என்பதாக தலையாட்டியவளின் முகம் இன்னுமே தெளிவு இல்லாது தான் இருந்தது..

மீண்டும்.. அக்னி. “ என்ன டா…” என்று ஸ்வேதாவிடம் கேட்ட அவனுக்கு எங்கு தெரிய போகிறது.

பெண்ணவள் கணவனின் பிரிவில் மட்டும் தவிக்கவில்லை… அவளின் உள்ளுணர்வு சொல்லும் அந்த எச்சரிக்கை உணர்விலும் சேர்த்து தான் தவித்து கொண்டு இருக்கிறாள் என்று.

எப்போதும் ஸ்வேதாவுக்கு அவளின் உள்ளுணர்வு ஏதாவது அவளுக்கு பெரியதாக நடக்க போகும் முன்பு இது போல் அவளின் மனது பிசைந்து எடுத்து விடும்..

அது போல் தான் காலை முதலே… அவளின் நெஞ்சில் ஏதோ ஒரு பெரிய பாராங்கல்லை எடுத்து வைத்தது போலவே பாரமாக இருக்கிறது..

இது போல் தான் அவளின் தந்தை இறக்கும் அன்று… அவளுக்கு இருந்தது.. கூட கணவன் நாளை வெளிநாட்டிற்க்கு சென்று விடுவான் என்பதில் அவளின் அழுத்தம் இன்னுமே கூடியதில் அவளின் முகம் தெளிவு இல்லாது இருந்தது…

ஏதோ தன் கணவனை விட்டு தன்னை தள்ளி வைத்து விடுமோ என்று அவளின் மனது பரிதவித்து போக.. அவளின் பர=ரிதவிப்பு உண்மை தான் என்பது அவளின் வாழ்வில் அடுத்து அடுத்து நிகழ்ந்த நினைவுகள் உண்மை என்று அவளுக்கு மட்டும் அல்லாது அக்னிக்குமே எடுத்துரைக்க போகிறது என்பது தெரியாது தான் கணவனும் மனைவியும் வீடு சென்றனர்..










 
Top