Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

3...4 தொடர்ச்சி...

  • Thread Author

கணவனின் தேவைகளை நிறைவேற்றி மாமியாரிடமும் பேச்சு வாங்கி கொண்டு.. அவ்வப்போது கணவனின் சுடு சொல்..

“ என்ன இருந்தாலும் உன்னிடம் தானே நான் வர்றேன்.. உன் அண்ணன் போல் வேறு ஒருத்திய தேடிட்டு போகலையே ..” என்று சொன்னதோடு.. என்னவோ சூர்ய நாரயணன் செயலுக்கு, அவன் தங்கையான தனக்கு வாழ்க்கை கொடுத்தது போல் பேசும் இது போல் பேச்சுக்களை கேட்டு கேட்டு, கொஞ்ச நாளில் அந்த வார்த்தையின் வீரியத்தின் தாக்கம் குறைந்து போய் விட்டது தான்..

ஆனால் இப்போது எல்லாம் வனிதா இது போல் புதியதாக பேச தொடங்குவதை கேட்கும் போது தான் எரிச்சல் வருகிறது..

அதுவும் அவள் பேச்சும், உடையும்.. இப்போது இல்லை வனிதாவையும் சரி.. அனிதாவையும் சரி வைதேகிக்கு பிடிப்பது இல்லை.. இன்னும் கேட்டால் சொந்த அண்ணன் மகள்கள் தான்.. இருந்தும் ஏனோ பிடித்தம் இல்லாது போய் விட்டது..

தாயை போய் என்று பத்மாவதியை இதில் குறை சொல்ல முடியாது.. இன்னும் கேட்டால் தன் அண்ணனின் செயலுக்கு எப்படி இப்படி அமைதியாக இருக்கிறார் என்று சொல்லும் அளவுக்கு பத்மாவதி அமைதியோ அமைதி..

ஆனால் அவர்கள் பெற்ற அந்த இரண்டு மகள்கள்.. இதில் அடுத்த பெண் தன் மகனையே திருமணம் செய்துக் கொண்டு இந்த வீட்டுக்கு வரப்போக்கிறாள்.. அவள் வந்து என்ன ஆட்டம் ஆட போகுதோ என்ற கவலை வைதேகிக்கு இப்போதே ஆரம்பித்து விட்டது..

அதோடு தன் மகன் சர்வாவின் குணம் பற்றி ஒரு தாயாக வைதேகிக்கு நன்கு தெரியும்… அவன் எதிலும் ஒழுக்கத்தை கடைப்பிடிப்பவன்…

நேரத்துக்கு எழுந்து.. காலையும் தினம் உடற்ப்பயிற்ச்சி, பின் கொஞ்சம் செய்தி தாளை படிப்பது.. பின் காலை உணவு என்று அனைத்தும் நேரத்தை கடைப்பிடிப்பவன்.

அதோடு பேசி என்பது தங்கள் உபயோக்கிக்க பயன் படுத்த வேண்டுமே தவிர, எந்த நேரமும் அதில் மூழ்கி அதற்க்கு அடிமையாக கூடாது என்று நினைப்பவன்..

ஆனால் அனிதா.. தாங்கள் அங்கு போகும் போது எல்லாம் இதோ இப்போது வந்தாளே அவள் அக்கா வனிதா அது போலான ஒரு கோலத்தில் தான் வந்து நிற்ப்பாள்..

வந்தவள்.. “ வாங்க..” என்று கடமைக்கு அழைத்து விட்டு, பின் எதிரில் இருந்த சோபாவில் காலை மேல் தூக்கி வைத்துக் கொண்டு அந்த பேசியில் மூழ்கி போனவள் போனவளாகவே ஆகி விடுவாள்.

அப்படி இல்லை என்றால், அவள் ஊரிலேலே இருக்க மாட்டாள். “ எங்கு..?” என்று பத்மாவதியிடம் கேட்டால், தயங்கிய வாறு..

“ அவள் பிரன்சுங்களோடு டூர் போய் இருக்கா..” என்ற பதில் தான் கிடைக்கும்.. தன் அண்ணன் மகளாக இருந்தாலும், அவளை பற்றி வைதேகிக்கு இன்னும் முழுமையாக அவள் எப்படி..? என்று தெரியாது தான் சொல்ல வேண்டும்…

ஏன் என்றால் படிக்கும் போதே லீவ் என்று அவர்கள் இங்கு வந்து தங்க மாட்டார்கள்.. வைதேகியும் தன் அண்ணன் வீடு என்று அங்கு போய் வருவதோடு சரி.. தங்குவது எல்லாம் கிடையாது..

வைதேகிக்கு தன் மகனுக்காவது அனிதாவை பற்றி முழுமையாக தெரியுமா என்பதே அவருக்கு சந்தேகம் தான்..

காரணம் அவன் இளகலை படிப்பை இந்தியாவில் அதுவும் டெல்லியில் படித்தான்.. மேற்ப்படிப்பை வெளிநாட்டில் படித்த உடன் மருந்து தயாரிக்கும் தங்களின் குடும்ப தொழிலை கையில் எடுத்த நாளாக, அதன் பின் ஓடவே அவனுக்கு நேரம் சரியாக இருக்கிறது…

இதில் அவன் தனிப்பட்டு மால் தியேட்டர் என்று கட்டிக் கொண்டு இருப்பதில், வீட்டில் நிற்கவே நேரம் இல்லாது போனதால், எப்போதாவது வந்து போகும் அனிதாவை அவன் நன்றாக பார்த்தானா என்பதே வைதேகிக்கு சந்தேகம் தான்..

அதன் தொட்டு வீட்டில் சர்வேஷ்வரன் அனிதா திருமண பேச்சு நடைப்பெற்ற போது சர்வேஷ்வரன் சிறிதும் யோசிக்காது தன் தந்தையிடம்..

“ உங்கள் விருப்பம் படி செய்யுங்க அப்பா..” என்று தன் சம்மதத்தை சொன்னதுமே, வைதேகிக்கு அதிர்ச்சி தான்...

பின் வைதேகி.. “ நீ எதற்க்கும் அனிதாவிடம் பேசி பின் சம்மதம் சொன்னா நல்லா இருக்கும் சர்வா.. ஏன் என்றால் வாழ போவது நீ தானே..” என்று மகனிடம் வைதேகி சொல்லும் போதே, ஓரப்பார்வையில் தன் கணவன் தன்னை முறைத்து பார்ப்பது அவர் உணர்ந்தார் தான்.

ஆனாலும் இதற்க்கு எல்லாம் பயந்தால் தன் மகன் வாழ்க்கை.. வைதேகிக்கு தன் மகனுக்கு அனிதா செட்டாக மாட்டாள் .. அதுவும் தன் மகனும் அனிதாவிடம் பேசி பழகியது கிடையாது..

இன்னும் கேட்டால் சர்வா கடைசியாக அனிதாவை பார்த்தது வனிதா மகேஷ்வரன் திருமணத்தில் தான் என்பது அவர் யூகம்.. அதனால் சொல்ல..

அதற்க்கு வெங்கட பூபதி.. “அனிதா என்ன வேறு வீட்டு பெண்ணா.. அவன் இனி தான் பார்ப்பதற்க்கும் பேசுவதற்க்கும்..?” என்று பல்லை கடித்துக் கொண்டு தன் மனைவிக்கு அவர் பதில் அளித்தாள்..

வைதேகி அப்போதும் விடாது.. “ இல்ல பெரியவங்க ஆன பின் இரண்டு பேரும் பேசுனது இல்லையே.. அது தான்..” என்று கணவன் முறைப்பில் வைதேகி தன் பேச்சை பாதியில் முழுங்கினார்..

யாருக்காக தன் கணவனின் கோபத்தை கூட பொருட்படுத்தாது வைதேகி பேசினாரே அவனே..

“ மாம் டாட் சொன்னது சரி தான்.. அனி என்ன நான் பார்க்காதவளா..? அதோட வெளியில் நீங்க பெண் பார்த்து இருந்தா பார்த்து ஓகே சொல்ல போறேன்.. அனிதா அப்பியரன்சில் நாட் பேட்..” என்று சொல்லி எழுந்து சென்றவனை அப்போது விட்டு விட்டு, தனியாக மகன் அறையில்..

“ இல்ல சர்வா வனி இங்கு எப்படி இருக்கா என்று நீ தான் பார்க்கிறியே.. அனியும் அப்படி இருந்தா என்ன செய்யிறது..என்று தான்..” என்று சொன்ன தாயின் தோளை பற்றிக் கொண்ட சர்வேஷ்வரன்..

“ மாம் நான் மகி போல் எல்லாம் கிடையாது..என் கவுரவம் எனக்கு ரொம்ப ரொம்ப முக்கியது.. அதை தக்க வைக்க நான் என்ன செய்யனுமோ அதை கண்டிப்பா செய்வேன்.. நீங்க ஒரி பண்ணிக்காதிங்க… எப்படி இருந்தாலும் நான் வழிக்கு கொண்டு வந்து விடுவேன்..” என்று சொன்ன சர்வேஷ்வரனுக்கு அப்போது தெரியவில்லை..

அனிதா வழிக்கே கொண்டு வர முடியாத பாதையின் எல்லைக்கே அவள் சென்று விட்டாள் என்று.. அதோடு மானம்.. கவுரவம் என்று பார்ப்பவனுக்கு, அவன் திருமணத்தின் முன் தினம் அது காற்றில் பறக்க போகிறது என்பதும் தான்..

வைதேகி இப்படி தன் மகன் திருமணத்தை பயத்துடன் எதிர் நோக்கி காத்துக் கொண்டு இருக்க. அதே பயம் பத்மாவதிக்கும் இருந்தது..

காரணம் இப்போது எல்லாம் அனிதாவின் நடவடிக்கை எல்லை மீறுவதாகவே இருந்தது… இப்போது எல்லாம் அவள் வீட்டில் தங்குவதோடு வெளியில் தான் அதிகம் தங்குக்கிறாள்.. அதுவும் இரவில்..

அதை பத்மாவதி கேட்டால், எப்போதும் அவர் வாய் அடைக்கும் பேச்சான .. “ உங்க புருஷன் இரண்டு நாள் அங்கு தங்கிட்டு வந்தார் போல.. முதல்ல அதை தடுங்க என்னை பின் பார்க்கலாம்..” என்று சொல்லி செல்லும் மகளை பத்மாவதி ஒரு கைய்யாளாகாத தனமாக தான் பார்க்க வேண்டி இருந்தது…

இங்கு சர்வேஷ்வர் தொழில் சம்மந்தமாக ஜெர்மனிக்கு செல்ல வேண்டிய சூழ்நிலையில் வெங்கடப்பூபதி.. . “ நீ போய் தான் ஆகனுமா சர்வா.. அதுவும் இந்தியா வர மூன்று மாதம் ஆகும் என்று வேற சொல்ற…?” என்று கேட்டதற்க்கு,

“ ஜஸ்ட்டு த்ரீ மன்த் தான்பா. .. கல்யாணம் முன் நாள் நான் கண்டிப்பா இந்தியாவில் இருப்பேன்.. ஊரை கூட்டி விட்டு நானே நம்ம குடும்பத்தை தலை குனிய வைப்பேன்னா.. டோன்ட் ஒரி..” என்று சொல்லி விட்டு அவன் ஜெர்மனிக்கு பறந்து விட்டான்..

இந்தியாவில் சூர்ய நாரயணன் தன் மகள் அனிதாவின் திருமணத்திற்க்கு உண்டான வேலையில் மிக மும்முரமாக ஈடுப்பட்டு கொண்டு இருந்ததால், இங்கு துளசி வீட்டுக்கு முன் போல் அதிகம் செல்ல முடியாது போனது..

அதில் மான்சி தன் ஐ.ஏ.எஸ் நுழைவு தேர்வுக்கான படிப்பையும், நவீன் தன் பன்னிரெண்டாவது பொது தேர்வு.. மற்றும் நீட் தேர்வுக்காகவும் நிம்மதியாக தங்கள் படிப்பில் மட்டும் கவனத்தை செலுத்தி கொண்டு இருந்தனர்…

இதோ அதோ என்று அனிதா, சர்வேஷ்வர்.. அவர்கள் திருமணத்தோடு, சர்வேஷ்வர் தங்கை கீதாஞ்சலிக்கும், விக்ரமுக்கும் நடைப்பெற இருக்கும் திருமணம்… நாளை எனும் போது கூட, சர்வேஷ்வர் ஜெர்மனியில் முக்கியமாக ஒரு தொழில் மீட்டிங்கில் கலந்து கொண்டு மூன்று மாதம் பின் இந்தியா வந்து இறங்கினான்

பின் தன் பெரியப்பா, தன் அப்பா .. “ நாளை உனக்கு கல்யாணம் சர்வா.. வாழ்க்கையில் ஒரு முறை நடைப்பெறும் நிகழ்வுக்கு இப்படி தான் இருப்பியா..” என்று சொல்லி அவனுக்கு விழாவுக்கு உண்டான உடை… எடுத்து அன்றே அவனுக்கு என்று இருக்கும் பிரத்தியோகமான ஆடை வடிவமைப்பாளர் அவனுக்கு ஏற்ப வடிவமைத்து கொடுக்க, அதை உடுத்தியவனின் அழகு இன்னும் கூடியது..

அதோடு ஆண்களுக்கு என்று இருக்கும் அழகு கலையின் கைங்கரியத்தில் அவன் இன்னும் ஜொலிக்க.. அதை பார்த்தவர்கள் அனைவரின் கண்ணிலும் கொஞ்சம் பொறாமை தெரிந்தது என்னவோ உண்மை…

சூர்ய நாரயணன் தன் மகளின் கல்யாணத்திற்க்கு பம்பரமாக சுழன்று வேலை செய்து கொண்டு இருந்தாலும், அவர் மனதின் ஓரத்தில் துளசியும், மான்சி நவீனும் இங்கு வர முடியாத சூழ்நிலையில், அவர் மனது கொஞ்சம் சோர்ந்து தான் போனது..

அதுவும் மான்சிக்கும் இருபத்திரெண்டு வயது ஆகிறது.. அடுத்து அவளுக்கு ஒரு நல்ல இடமாக பார்க்க வேண்டும்.. தன் மகளின் திருமண வேலை, மற்றும் இதோ இப்போது நடைப்பெறும் ஒவ்வொரு நிகழ்விலும், அவர் மனது மான்சிக்கும் இது செய்ய வேண்டும் என்று கணக்கிட்டு கொண்டு தான் இருந்தார்..

ஆனால் அவள் தன்னை செய்ய விடுவாளா…? தெரியவில்லை.. வயதில் சரி என்று தெரியும் ஒரு சில விசயங்கள் மத்தியதர வயதை அடையும் போது, அதுவும் வயது வந்த பிள்ளைகளின் எதிரில் ஒரு சில விசயங்களை சொல்ல முடியாத சூழ்நிலையில், அவர்கள் கண்ணுக்கு குற்றவாளியாக தெரியும் போது தான், அந்த தவறின் வீரியமும் அவர்கள் உணர்க்கிறார்கள்..

அதே சூழ்நிலையில் தான் இப்போது சூர்ய் நாரயணன் இருக்கிறார்.. அதுவும் துரோகம் செய்த தன் மனைவிக்கு, தன் குழந்தைகளுக்கு, ஏன் தாலி கட்டாது வாழும் துளசி நினைத்து கூட அவர் கூனி குறுகவில்லை..

அந்த இரு பிள்ளைகளை பார்க்கும் போது மட்டும், மற்றவர்கள் முன் நான் இப்படி தான் என்று தலை நிமிர்ந்து நின்றவர்..

தன் இரு மச்சான்கள் கேட்ட போது… “ இந்த விசயத்தில் உங்கள் தங்கைக்கு மட்டும் தான் நான் பதில் சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன்..” என்று நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு சொன்னவர்..

அந்த இரு சிறு பிள்ளைகளின் முன்.. அதுவும் அவர்கள் தன்னை பார்த்ததும், தலையை குனிந்து கொள்ளும் அவர்களின் அந்த செயல்களில், சூர்ய நாரயணன் பலமாக அடிவாங்கினார்..

தன்னை கோபமாக பார்த்து திட்டி இருந்து இருந்தால் கூட, அவர் எந்த அளவுக்கு வருந்தி இருக்க மாட்டார்.. அவர்கள் தன்னை பார்க்காது தலை குனியும் போது எல்லாம் இவர் தலை குனிந்து போவார்..

பிடிக்கும். அந்த இரு குழந்தைகளையும் சூர்ய நாரயணனுக்கு அவ்வளவு பிடிக்கும்… அது என்னவோ தன் ரத்தத்தில் உதிர்த்த தன் இரு பெண்களையும் விட, மான்சியையும், நவீனையும் அவருக்கு பிடித்தது அவருக்குமே ஆச்சரியம் தான்…

சிறு வயதில் மான்சியும், நவீனும் தான் அங்கு போனால் தன்னை சுற்றியே வட்டம் அடித்ததை இப்போது நினைக்கும் போது இனி அந்த காலம் வருமா…? என்று யோசிக்க தேவையே கிடையாது..

வராது… அந்த காலம் இனி கண்டிப்பாக வராது என்பது அவருக்கு நிச்சயம்… ஆனால் ஒரு தந்தை ஸ்தானத்தில் நான் அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமையை செய்ய வேண்டும்.. அதை அவர்கள் தன்னை செய்ய விடுவார்களா என்பதுமே அவருக்கு சந்தேகமே…

இப்படி பல நினைவுகளின் தாக்கத்திலும், தன் சின்ன மகளின் திருமணத்தில் எந்த குறையும் இல்லாது தன்னுடைய நேரிடை பார்வையில் அனைத்தையும் பார்த்து கொண்டு இருந்தார்..

அப்போது பத்மாவதி தயங்கி தயங்கி தன்னிடம் வருவதை பார்த்து சூர்ய நாரயணன் யோசனையுடன் தன் மனைவியின் அருகில் சென்றார்..

“ என்ன பத்து என்ன விசயம்..?” என்று கேட்டதற்க்கு…

“ அனி படுத்துட்டே இருக்கா அத்தான்.. இன்னும் எழுந்து கொள்ளவில்லை.. ப்யூட்டிஷன் வந்து ஒரு மணி நேரமா காத்துட்டு இருக்காங்க..” என்று பத்மாவதி சொல்லவும்..

“ என்ன பத்து இதை ஏன் என் கிட்ட வந்து சொல்ற.. அனியை போய் எழுப்பினா போச்சி.. இதை போய் பெருசா சொல்ற… நான் உன் முகத்தை பார்த்துட்டு ஏதோ பிரச்சனையோ என்று பயந்து விட்டேன்…” என்று நிலமையின் தீவிரம் புரியாது சூர்ய நாரயணன் சொன்னார்..

பத்மாவதியோ.. “ என்ன அத்தான்.. நான் அவளை எழுப்பாது இங்கு வந்து சொல்வேன் என்றா நினச்சிங்க.. நான் எழுப்பி உட்கார வைத்தா அவள் சோர்ந்து சோர்ந்து திரும்பவும் அவள் படுக்கையில் படுத்து கொள்கிறாள்.. .

எத்தனை முறை இது போல் செய்வது..” என்று சொன்ன பத்மாவதியும் அனிதாவுக்கு உடல் நிலை சரியில்லையோ என்று தான் நினைத்து, இது என்ன கல்யாணம் அன்னைக்கு இப்படி ஆயிடுச்சே என்ற சங்கடம்..

கூடவே என்ன இது அபசகுணம் என்று நினைத்து தான் தன் கணவனிடம் பத்மாவதி சொன்னது.. அவருக்குமே இன்னும் நிலமையின் தீவிரம் புரியவில்லை தான்….

சூர்ய நாரயணன் அப்போதும். “ நையிட் அந்த செல்லை வைத்து பார்த்து கொண்டு இருந்து இருப்பாள்.. அது தான்.” என்று சொல்லியும் மனைவியின் முகத்தில் தெளிவு இல்லாததால், அவரே தன் மனைவியோடு தன் மகள் அனிதாவின் அறைக்கு சென்றார்..

ஆனால் இப்போது பத்மாவதி சொன்னது போல் தான் அனிதாவை எழுப்பி எல்லாம் உட்கார வைக்க முடியாத சூழ்நிலையில் தான் அவள் உறக்கத்தில் ஆழ்ந்து விட்டாளா..? இல்லை மயக்கமா என்று நினைக்கும் அளவுக்கு,

சூர்ய நாரயணன்.. “ அனி அனி…” என்று கன்னத்தை தட்டி பார்த்தார்.. அனிதாவின் உடலை வேகமாக குலுக்கியும் அவள் எழாது போகவும்..

பதட்டத்துடன் தன் பக்கத்தில் நின்று கொண்டு இருந்த மனைவியிடம்.. “ என்ன பத்து எழுப்பி உட்கார வைத்தேன் என்று சொன்ன.. ஆனால் இப்போ கண் கூட முழிக்க மாட்டேங்குறா…” என்று இப்போது தான் சூர்ய நாரயணனுக்கு லேசாக பயம் ஏற்ப்பட்டது..

அவருக்குமே இன்னும் தன் மகளை பற்றிய தெளிவாக புரியாது, உடல் நிலை தான் சரியில்லையோ என்று நினைத்தார்..

அங்கு இருக்கும் தண்ணீரை தன் மகள் முகத்தில் தெளித்தும் மகள் முழிக்காது போனதால், பத்மாவதி…

“ நம்ம ஆஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போய் விடலாம் அத்தான்..” என்று தன் கணவனிடம் பதறி போய் சொன்னார்..

மாலை தான் வர வேற்ப்பு, இப்போதே மருத்துவமனைக்கு அதுவும் தங்கள் மருத்துவமனைக்கு அழைத்து கொண்டு சென்று விட்டால், அங்கு இருக்கும் மருத்துவர்களுக்கு இன்றைய நாளின் முக்கியதுவம் தெரியும் தானே..

அதனால் சீக்கிரம் சிகிச்சை செய்து மாலைக்குள் தன் மகளை சரி செய்து விடுவர்.. என்று நினைத்து தங்கள் குடும்ப மருத்துவமனைக்கு சூர்ய நாரயணனும், பத்மாவதியும் அனிதாவை அழைத்து கொண்டு சென்றனர்.

பூபதி குடும்பத்திற்க்கு என்று சொந்தமாக ஒரு மருத்துவனை இருக்கிறது.. அவர்கள் குடும்பமே மருந்தகம் தயாரிப்பது தான்..

அதனால் வெங்கட பூபதியும், சங்கர பூபதியும் அவர்கள் தலை முறையில் சொந்தமாக ஒரு மருத்துவமனையை வாங்கி விட்டனர்.. என்ன ஒன்று தங்கள் பெயரில் இல்லாது அவர்கள் நண்பன் பினாமி பெயரில் அந்த மருத்துவமனை இருக்கிறது…

ஆனால் அனைவருக்குமே தெரியும்.. அந்த மருத்துவமனை பூபதி குடும்பத்திற்க்கு சொந்தமானது என்று..

அதனால் அனிதாவை சூர்ய நாரயணனும், பத்மாவதியும் அங்கு அழைத்து சென்ற போது , உடனடியாக அவளுக்கு சிகிச்சை அளிக்க தொடங்கி விட்டனர்.. என்ன ஒன்று அனிதாவுக்கு சிகிச்சை அளிக்கும் முன், அந்த மருத்துவமனையின் தலமை மருத்துவர் வெங்கட பூபதிக்கு அழைத்து சொல்லி விட்டார்..

அங்கும் பயந்து தான் விட்டனர்.. ஒன்று தங்கை மகள்.. அந்த பாசம்.. அதோடு நாளை காலை முகூர்த்தம் இன்று மாலை வர வேற்ப்பு வைத்து இருக்கிறோம்..

இந்த சமயத்தில் அவளுக்கு உடல் நிலை சரியில்லாது போய் விட்டதே, என்று பதட்டத்துடன் அனைவரும் தங்கள் மருத்துவமனைக்கு சென்ற அனைவரும் உண்மை நிலை புரியாது தான் பதறி சென்றனர்..

அனிதாவின் தோழி சுஜாதா அந்த மருத்துவமனையில் ஒரு மருத்துவராக இப்போது தான் சேர்ந்தாள். அவளுக்கு அனிதாவை சேர்த்து உள்ளார்கள் என்று தெரிந்ததுமே, பதறி போய் அனிதாவுக்கு சிகிச்சை செய்து கொண்டு இருக்கும் இடத்தை தேடி மூச்சு வாங்க ஓடி வந்தாள்..

ஆனால் அவள் வருவதற்க்குள் அனிதாவை பரிசோதனைகள் செய்து முடித்து விட்டனர்.. அந்த பரிசோதனையை செய்தது அந்த மருத்துவமனையின் தலமை மருத்துவர்..

அவரை இங்கு நியமித்தது வெங்கட பூபதி தான் எனும் போது, அந்த தலமை மருத்துவர் வெங்கட பூபதிக்கு தானே உண்மையாக இருப்பார்..

அனிதாவுக்கு என்ன பிரச்சனை என்பதை அறிந்த பின், அதுவும் நாளை சர்வேஷ்வருக்கும், இந்த பெண்ணுக்கும் தான் திருமணம்.. அவர் வீட்டுக்கும் அழைப்பிதழ் வந்து இருக்கிறதே…

அதுவும் அவருக்கு தனிப்பட்ட முறையில் சர்வேஷ்வரனையும் தெரியும்.. இப்போது எல்லாம் அந்த மருத்துவமனைக்கு தேவையான மருந்துக்கள் அனைத்துமே சர்வேஷ்வரனின் நேரிடை பார்வையில் தான் இங்கு வருகிறது..

அதன் பொருட்டு இந்த மருத்துவமனைக்கு சர்வேஷ்வரனின் விஜயம் அவ்வப்போது நிகழும்.. நல்ல பைய்யன் என்ற அப்பிராயமும் சர்வேஷ்வரன் மீது அந்த தலமை மருத்துவருக்கு உண்டு..

அதனார் அனைவரையும் தன் அறைக்கு அழைத்து… “ அவங்க சமீபத்தில் கருகலைப்பு செய்து இருக்காங்க போல.. அதுவும் அந்த குழந்தை நன்கு வளர்ச்சி அடைந்த பின்..

அது அவங்க உடல் நிலையும் பாதித்து அவங்க கருவரையையும் பாதித்து இருக்கு… அது மட்டும் இல்ல.. என் கணிப்பு படி பார்த்தால், அவங்களுக்கு இந்த கருகலைப்பு முதல் முறை இல்லை என்பது தான் என் இத்தனை வருடம் சர்வீஸ் சொல்க்கிறது..” என்று அந்த தலமை மருத்துவர் சொல்லவும் பத்மாவதி அங்கேயே சாட்சாங்கமாக வீழ்ந்து விட்டார்..

உடனடியாக பத்மாவதிக்கும் அங்கு சிகிச்சை செய்ய தொடங்கி விட்டனர்.. ஏன் என்றால் அவரின் உடல் நிலையை பற்றி அந்த மருத்துவமனையில் இருக்கு தலமை மருத்துவருக்கு தெரியும் என்பதால், பத்மாவதிக்கு உடனடிகையாக சிக்கிச்சை செய்ய ஆரம்பித்து விட்டனர்..

சூர்ய நாரயணனுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.. சங்கர பூபதி தன் தம்பி வெங்கட பூபதியை பார்க்கா,, அவர் முகத்தில் அப்படி ஒரு கோபம், கூடவே சங்கடமும்..

பின் தன் தம்பி மகன் சர்வேஷ்வரனை பார்த்தார்.. அவன் முகத்தில் கோபம் என்று சொல்வதை விட அவமானம்.. அடுத்து என்ன..? நாளை திருமணம் என்று அனைவரையும் அழைத்தாயிற்று..

நட்பு தொழில் வட்டம்.. ஏன் அரசிய
 
Active member
Joined
Aug 16, 2024
Messages
267
3.4 தொடர்ச்சியில் புதிதாக எதுவும் இல்லையே.இரண்டும் ஒன்று தானே என்ன வித்தியாசம்.
 
Administrator
Staff member
Joined
May 9, 2024
Messages
914
3.4 தொடர்ச்சியில் புதிதாக எதுவும் இல்லையே.இரண்டும் ஒன்று தானே என்ன வித்தியாசம்.
பார்க்கிறேன் பா
 
Top