Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

kambathu ponnu...25(3)

  • Thread Author
அத்தியாயம்….25….2

தங்கள் அலுவலகத்தில் இருந்து உதயேந்திரன் தங்கி இருக்கும் கெஸ்ட் அவுசுக்கு போக தேவையான நேரம் வெறும் அரைமணி நேரம் தான்.

தன் காரில் முதன் முதலில் தன் மனம் கவர்ந்தவளை அருகில் அமர வைத்தவனுக்கு, எப்போதும் எடுத்த உடன் காரை வேகம் எடுத்து ஓட்டுபவனுக்கு அன்று ஏனோ வேகம் எடுக்க மனம் வரவில்லை.

தன் மனதில் கிருஷ்ணா குடியேறி மாதம் பல கடந்து விட்டும், இன்னும் தன்னையோ தன்னை பற்றியோ அவளுக்கு முழுமையாக தெரியப்படுத்த வில்லை.

கிருஷ்ணாவுக்கு தன்னை பற்றி தெரியப்படுத்த வேண்டிய அவசியம் இராது என்று அவனுக்கு நன்கு தெரியும்.

இருந்தும் தன் நிலைப்பாட்டை அவள் கைய் பிடித்து பேச வேண்டும் என்ற ஆவல் அவன் மனதில் இருந்தது.

அதற்க்கு தோதான நேரம் தான் இவனுக்கு வாய்க்கவில்லை. எங்கே அவனுக்கு பிரச்சனையை தீர்க்கவே நேரம் சரியாக இருக்கிறது. காதல் செய்ய எங்கே நேரம் கிடைக்கிறது. என்று நினைக்கும் போதே…

அவன் மனசாட்சி...உரிமை இல்லாத இடத்தில் ஒழுக்கம் கெட்டு பழகுனலே..அது தான் உரிமை இருக்கும் பெண்ணிடம் பேச கூட விடாது உன்னை விதி வெச்சி செய்யுது என்று எடுத்துரைக்க…

என்ன செய்யிறது…?எனக்கு இப்படி தேவதை போல ஒரு பெண் இறைவன் எனக்காக படைத்து இருப்பார் என்று அப்போ எனக்கு தெரியலையே...என்று அவன் மனதுள் ஏதோ நினைத்துக் கொண்டு அவன் காரை எவ்வளவு மெதுவாக செலுத்த முடியுமோ அவ்வளவு மெதுவாக செலுத்திக் கொண்டு இருந்தான்.

உதயேந்திரன் பக்கத்தில் அமர்ந்திருந்த வேணிக்கும் இந்த பயணம் புது மாதிரியான பயணமாகவே இருந்தது. அவள் கம்பத்தில் இருக்கும் வரை கார் பயணம் என்பது எப்போதாவது தான் சென்றது. அதுவும் சொந்த கார் கிடையாது.

குடும்ப மொத்தமும் கோயில், நெருங்கிய உறவு முறையில் விசேஷம் இப்படி போக வேண்டும் என்றால், மாமா வாடகை கார் எடுப்பார். அப்போது தான் அவள் காரில் பயணம் செய்து இருக்கிறாள்.

சென்னை வந்த சமீப காலமாய் தான் அவளின் காரின் பயணம் செய்வது அதிமாக...அதுவும் ராஜசேகரே “நம் கம்பெனியில் வேலை செய்யும் உயர் பதவியில் இருப்பவங்கலே...காரில் வரும் போது...நீ பவித்ரன் கூட டூவிலரிலோ...ஆட்டோவிலோ வந்தால் அது நன்றாக இருக்காது.” என்று சொல்லி அவரே கார் வாங்கி கொடுப்பதக சொல்ல…

பவித்ரன் தான்… “கார் வாங்கும் அளவுக்கு எல்லாம் எங்கி கிட்ட காசு இருக்கு. அதுவும் எ நாங்க சுயமா...யாரின் குடும்பத்தையும் கெடுக்காது சம்பாதித்த பணம் இருக்கு. அதில் நான் என் வேணிக்கு வாங்கி கொடுப்பேன்.” என்று சொன்னதோடு நிறுத்தாமல் அடுத்த வாரமே தன்னை அழைத்து சென்று எனக்கு பிடித்த காரை வாங்கியதோடு தன்னை தான் முதலில் அமர வைத்து ஓட்டியது.

அப்போது இல்லாத மகிழ்ச்சி...இப்போது உதயேந்திரனின் காரில் அமர்ந்து வரும் போது ஏதோ ஒரு சுகம் மனதில் பரவுவதை அவளால் உணர முடிந்தது.

பவி...எனக்கு மிக நம்பிக்கையானவன். அவனோடவா இவன் எனக்கு மகிழ்ச்சியை கொடுத்து விட முடியும். நட்பு நம்பிக்கை கொடுப்பதும், காதல் தான் நெருக்கத்தை கொடுப்பது அந்த நெருக்கைத்த தான் உதயேந்திரன் தன் கிருஷ்ணாவுக்கு கொடுத்திருந்தான்.

இருவரும் ஒருவருக்கு ஒருவர் கண்ணா மூச்சி ஆடுவது போல் மற்றவர் பார்க்காத போது பார்த்துக் கொண்டு இருந்தவர்கள்.

ஒரு சமயம் இருவரும் ஒரு சேர பார்த்த போது வேணியின் முகத்தில் மாட்டிக் கொண்ட சாயல் போல் உதட்டை கடித்துக் கொண்டு தலை குனிந்துக் கொண்டவளிடம்…

“கிருஷ்ணா நீ என் கிட்ட ஏதாவது பேசனுமா…?” என்று கேட்டவன். பின்… “ஐ மீன் ஏதாவது கேட்கனுமா…?” என்று கேட்ட்ற்க்கு…

வேணி …. “இல்லை.” என்பது போல் தலையாட்டவும்,…

திரும்பவும் உதயேந்திரன்… “எதுவும் இல்லையா…?” என்று அழுத்தம் திருத்தமாய் கேட்டதற்க்கு…

“இல்லை.” என்று தன் தலையாட்டல் மூலம் அவள் பதில் அளிக்கவும்...அவனுடைய கெஸ்ட் அவுஸ் வரவும் சரியாக இருந்தது.

காரில் இருந்து இறங்கிய வேணி….அந்த கெஸ்ட் அவுஸை யோசனையுடன் பார்த்துக் கொண்டே வந்தவளின் காதுக்கருகில்…

“என்ன நியாபகம் இல்லையா…? இங்கு தான் நான் உனக்கு முதல் முத்தத்தை கொடுத்த இடம்.” என்று சொல்லி விட்டு கண் சிமிட்டியவன்…

பின்… “அது தான் இங்கயே மொத்தத்தையும் கொடுத்து விடலாம் என்று இங்கு அழச்சிட்டு வந்தேன்.” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே ஹால் வந்து விட…

அவள் முன் தன் ஒரு காலை மடக்கி அவள் கைய் பற்றிய வாரே தன் பாக்கெட்டில் இருந்த மோதிரத்தை எடுத்து அவள் விரல் முன் கொண்டு சென்று…

“நான் செய்த தவறை மறந்து, என்னோட கை கோர்த்து என் வாழ்க்கை முழுமைக்கும் சேர்ந்து இருக்க வருவாயா…?” கண்ணில் காதல் மின்ன தன்னை ஒரு வித எதிர்பார்ப்போடு பார்த்துக் கொண்டு இருந்தவனின் கண்ணையே பார்த்துக் கொண்டு இருந்த வேணியின் தலை தன்னால்..

“சம்மதம்.” என்று தலையாட்டல் மூலம் தெரிவிக்க...தன் முன் நீட்டி இருந்த விரலில் தான் வைத்திருந்த மோதிரத்தை அணிவித்து விட்டு…

அந்த கையை விடாது பற்றி இருந்தவன் திரும்பவும் அவள் முகத்தை நிமிர்ந்து பார்க்க...

முதல் போலவே தன் தலையாட்டல் மூலம் தன் சம்மதத்தை பெற்றதும், பற்றி இருந்த கையில் முத்தத்தை பதித்தவனுக்கு தன் உதட்டை அந்த கையில் இருந்து எடுக்கவே மனது இல்லாது போல்… அவள் கையிலேயே அவன் உதடு தங்கி விட…

வேணிக்கு கூச்சம் என்பதை விட...அவன் மீசையின் உராய்வு ஒரு வித குறு குறுப்பை தோற்று வித்தது.முதலில் எல்லாம் இவனின் மீசை இவ்வளவு அடர்தியாகவா இருக்கும் வேணி முன்பு அவனின் மீசை எப்படி இருந்தது என்று யோசனையில் ஆழ்ந்தது.

முன் எல்லாம் அவன் முகத்தை அவள் என்ன உன்னிப்பாகவா கவனித்தாள். மீசை அடர்ந்து இருந்ததா…?இல்லையா…? என்ற அவளின் யோசனையை தன் கன்னத்தில் முத்தமிட்டு நிகழ் உலகத்திற்க்கு கொண்டு வந்தவன்.

“என்ன யோசனை…?அதுவும் நான் முத்தம் கொடுக்கும் போது.” என்று கேட்டவனின் மனதிலோ நான் உன் பக்கத்தில் இருந்தால் உன் நினைவு கூட என்னை பற்றியதாக மட்டும் தான் இருக்க வேண்டும்.

அப்படி இருக்கும் போது உன் கையில் கொடுத்த முத்தமே என்னை ஆழ் கடல் போல் எங்கோ இட்டு செல்லும் போது, எனக்கு இருக்கும் அந்த நிலை உனக்கு இல்லையா…?மனதில் நினைப்பதை அனைத்தும் சொல்லவில்லை. ஆனால் அவன் மனதுக்குள் வேணியின் எண்ணம் முழுவதும் நானாகவே இருக்க வேண்டும் என்று மட்டும் இருந்தது.

அவன் எண்ணத்திற்க்கு ஏற்ப….”இல்ல உங்களுக்கு எப்போவும் மீசை இப்படி அடர்த்தியா தான் வெச்சிட்டு இருந்திங்கலா…?” என்று கேட்டுக் கொண்டே தன் கையில் உள்ள குறு குறுப்பை தேய்த்துக் கொண்டு இருந்தவளின் கன்னம் பற்றி தன்னை பார்க்க வைத்தவன்…

“இதை தான் யோசிச்சிட்டு இருந்தியா…?” என்ற கேள்விக்கு…

“ஆ.” ஆம் என்று சொல்ல வேணியின் உதடு ஆ என்று ஆராம்பிக்கும் போதே அவளின் பிளந்த உதட்டில் தன் உதட்டை பொறுத்தியவன் வேணியின் பிளந்த உதட்டை மூட விடாது, அவள் கண்னை மூடும் படி செய்து விட்டு…அவளின் மூச்சு காற்றை தான் இழுத்தவனாய், தன் மூச்சு காற்றை அவளுக்கு செலுத்திக் கொண்டு இருந்தவன்…

ஒரு நிலைக்கு மேல் அவள் உடல் தன் மேல் மொத்தமும் விழவும் தான் தன் உதட்டை அவள் உதட்டின் மிதிருந்தே பிரித்து எடுத்தான்.

தன் மேல் சாய்ந்து இருந்தவளின் கன்னத்தை தட்டியவன்…..“என்ன இப்போ நினைவுக்கு வந்து விட்டதா…?” என்று கேட்டவனின் முகத்தை நிமிர்ந்து பார்த்த வேணி…

“அப்போ எனக்கு முத்தம் கொடுத்து இருந்தா தெரிஞ்சி இருக்கும். உங்க மீசை அளவு வித்தியாசம்.” என்று சொன்னவளை உதயேந்திரன் அதிசயத்து பார்த்தான்.

“ஏய் நீ இப்படி எல்லாம் கூட பேசுவியா…?”

“ஏன் அப்படி கேட்குறிங்க...” என்று கோபம் குரலில் கேட்பது போல் இருந்தாலும் வேணியின் குரலில் கொஞ்சம் வெட்கமும் கலந்தே காணப்பட்டது.

“இல்ல கம்பத்து பொண்ணு.” அதற்க்கு மேல் பேசாது வாய் மூடிக் கொண்டான்.

பெண்களுக்கு அம்மா வீட்டையும், பிறந்த ஊரையும் சொன்னால் பிடிக்காது என்று எங்கே யாரோ சொன்னது போல் அவன் நினைவுக்கு வந்ததால் சட்டென்று வாய் மூடிக் கொள்ள…

அவன் நினைத்தது போலவே அவனில் இருந்து தன்னை பிரித்து எடுத்தவள்…. “ஏன் கம்பத்து பொண்ணுங்க எல்லாம் பிள்ளை பெத்துக்குறது இல்லையா…?” இது எல்லாம் பேசாம தெரியாமயா நாங்க இருக்கோம் என்ற ரீதியில் கேட்டாள்.

“அப்போ அம்மணிக்கு தெரியும். நான் ரொம்ப எல்லாம் கஷ்டப்பட தேவை இருக்காதுன்னு நினைக்கிறேன்.” என்று சொல்லிக் கொண்டே அவளை தன் அருகில் கொண்டு வந்தவன்…

“உனக்கு என்ன பத்தி தெரிஞ்சதில் ஏதாவது கேட்கனுமா கிருஷ்ணா…”

இவ்வளவு நேரமும் உல்லசாமாக பேசிய குரலில் இருந்த உற்சாகம் இப்போது அவன் குரலில் இல்லை. சீரியஸான குரலில் கேட்டான்.

“இருக்கு.” என்று சொல்லி நிறுத்தி விட்டு உதய் முகத்தை பார்த்த வேணி… “ஆனா இப்போ அதை மாத்த முடியாது. நடந்ததை நினைக்காம இருக்குறது தான் நம்ம இரண்டு பேருக்கும் நல்லது.” என்று சொல்லி நிறுத்தியவள்..

பின்… “என் வீட்டில்….” என்று இழுத்து நிறுத்திய வேணி அடுத்து என்ன பேசுவது என்று அவனை பார்த்திருந்தாள்.

அவளுக்கு தெரிந்து விட்டது உதய் தன் தந்தை சம்மதம் இல்லாது கூட தன்னை கை பிடிப்பான் என்று.

ஆனால் தன்னால் அப்படி முடியுமா…? முடியாது கண்டிப்பாக முடியாது. தன் அன்னை இதற்க்கு சம்மதிக்க வில்லை என்றால்...இவனை மணக்க முடியாது. வேணி நினைத்ததை அவனிடம் சொல்லி விட்டாள்.

“உன்னை உங்க அம்மா சம்மதம் இல்லாது கை பிடிக்க மாட்டேன். உங்க அம்மா சம்மதம் வாங்குவது என் பொறுப்பு.” என்று சொல்லி வாக்குறுதி கொடுத்தான்.

அவனை பற்றி தெரிந்தவளாய்… “ஏதாவது ப்ளான் பண்ணி இருக்கிங்கலா…?” சந்தேகத்துடன் கேட்டதற்க்கு,

“ஆம்.” என்று தலையாட்டிய உதயேந்திரன்…

பின்…” பெரிய ப்ளான். ரொம்ப பெரிய ப்ளான்.” என்று தன் இரு கையையும் விரித்து காட்டி சொன்னதும்…

இவங்க குடும்ப வழக்கப்படி ஏதாவது தாத்தா மாமாவை கடத்திட்டு வந்து அம்மா கிட்ட சம்மதம் வாங்குவானோ...என்று பயந்து போய்…

“என்ன ப்ளான்…?” கேட்டவளிடம்… இருகையையு மேல் தூக்கி சாஷ்ட்டாங்கமாய் வேணியின் காலில் விழுந்தவன்…

“இதே போல் உங்க அம்மா காலில் விழுந்து விடுவேன்.” என்று உதயேந்திரன் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே அந்த இடத்திற்க்கு வந்த க்ரீஷ், கீர்த்தி தன் மாமன் வேணியின் காலில் விழுந்து கிடப்பதை பார்த்து வாய் பொத்தி அப்படியே அதிர்ச்சியாகி நின்று விட்டனர்.
 
Top