Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Kambathu Ponnu....8

  • Thread Author
அத்தியாயம்….7

பரமேஸ்வரர் உதயேந்திரனை சேர்மேன் பதவிக்கு முன் மொழிந்த உடன், அனைவரும் அதை ஏற்றுக் கொண்டதும், இப்போது பவித்ரன் எழுந்து நின்றவன் “ நான் பேசவா…?” என்று அனுமதி எல்லாம் கேட்கவில்லை.

எழுந்து நின்றதும் தன்னிடம் உள்ள உயிலை பொதுவாக தன் முன் இருக்கு மேஜை மீது போட்டு விட்டு… “ இதில் மிஸ்டர் சந்திரசேகர் தன் பெயரில் இருந்த பங்கான இருபது சதவிதத்தை தன் இரண்டாம் மனைவி மேடம் ஜெய்சக்தி மீது எழுதவில்லை. தன் இரு பிள்ளைகள் மீது...அதாவது பத்து , பத்து சதவீதம் என்று அவர் உயிலில் எழுதி இருக்கிறார். ஜெய்சக்தி மேடம் அந்த பங்குக்கு வெறும் பாதுகாவலர் மட்டும் என்று தான் சந்திரசேகர் தன் உயிலில் குறிப்பிட்டு இருக்கிறார். “ என்று சொன்னவன்,

தன் எதிர் இருக்கையில் அமர்ந்து இருந்த கீர்த்தியின் வயதை கணக்கிட்டு கொண்டே…. “ ஒரு சொத்துக்கு பாதுகாவலராய் நியமித்து இருந்தவருக்கு, அந்த சொத்தை விக்கவோ...மற்றவர்களுக்கு எழுதி கொடுக்கவோ, எந்த வித உரிமையும் இல்லை.

மிஸ்டர் சந்திரசேகர் உயில் படி மகளுக்கு பதினெட்டு வயது முடிவடைந்து இருந்தாலும், வெறும் பத்து சதவிகிதம் பங்கு தான் மிஸ்டர் உதயேந்திரனுக்கு கொடுக்க முடியும். அதுவும் மிஸ் கீர்த்திக்கு இதில் விருப்பம் இருக்கும் பட்சத்தில் மட்டும் தான். அப்படி இருக்கும் போது எப்படி மிஸ்டர் உதயேந்திரன் சேர்மன் பதவியில் அமர முடியும்…?”

உதயேந்திரன் சேர்மன் நாற்காலியை ஆட்டம் காட்டிய பவித்ரன் , தன் இருக்கையில் சாவுகாசமாய் அமர்ந்துக் கொண்டு தான் பேசிதற்க்கு எதிர் வினையை எதிர் பார்த்துக் காத்துக் கொண்டிருந்தான்.

உதயேந்திரனுக்கு தான் சேர்மேன் பதவி என்ற போது வேணிக்கு தன் அம்மா போல் நாமும் தோல்வியை தான் தழுவ வேண்டுமோ என்று மனது கலங்கினாலும், பவித்ரன் சொல்லிக் கொடுத்த முதல் பாடமான எதையும் முகத்தில் காட்ட கூடாது என்பதை மனதில் நிறுத்தி நிமிர்ந்து அமர்ந்திருந்தாள்.

பவித்ரன் இப்படி பேசி அமரவும், அவன் கைய் பற்றிய வேணி… “பவி சும்மா கலக்கிட்ட போ …” இத்தனை நாள் மனதில் தோன்றியதை பேசியே பழக்கப்பட்ட வேணி, தான் இருக்கும் இடம் மறந்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாள்.

பவித்ரன் பேசிய பேச்சில் இருந்தே அங்கு இருந்தவர்களுக்கு பவித்ரனின் புத்திசாலி தனம் தெரிந்து விட்டது. இது வரை அவனை பற்றி அறிந்துக் கொள்ள ஆர்வம் இல்லாதவர்கள் கூட, இப்போது யாராய் இருப்பான் என்று ஆர்வ பார்வையை அவன் மீது செலுத்தினார்கள்.

அதை பார்த்து இது ‘சரியில்லையே’ என்று உதயேந்திரன், பரமேஸ்வரர், எண்ணும் வேளயில் , வேணியின் இந்த செயலை பார்த்து இருவரும் ஒரு சேர அவளை பார்த்து முறைத்தனர். அதுவும் உதயனின் பார்வையும் கொஞ்சம் உஷ்ணம் கூடுதலாய் இருந்ததோ…

“ என்ன வக்கீல் சார் தம்பி சொல்வது சரியா…?” அங்கு இருந்த பெரியவர் ஒருவர் ராஜசேகரை பார்த்து கேட்டார்.

“ பாயிண்ட் சொல்லி கூட்டி வந்ததே அவர் தானே….அப்போ சரியா தான் இருக்கும்.” என்று பொதுவாக சொன்ன உதயேந்திரன், ராஜசேகரை பார்த்து… “ அப்படி தானே சார்…?” என்று அவரை பார்த்து கேள்வி எழுப்பவும் தவற வில்லை.

“ மிஸ்டர் உதயேந்திரன் இப்படி தான் செய்வார் என்று முதல்லேயே அவர் கிட்ட சொல்லி இருந்தா...அவர் சொன்னது சரியா தான் இருக்கும்.” இப்படி உதயனை பற்றி பேசினாலும், அவனை பாராது இடக்காக இப்படி சொன்னது நம் கிருஷ்ணவேணியே தான்.

முடிந்த மட்டும் கிருஷ்ணவேணியை பார்த்து முறைத்து விட்டு… “ எங்க செயலை மத்தவங்க கிட்ட சொல்லிட்டு தான் செய்யனும் என்று எந்த அவசியமும் இல்ல.” அவள் தன்னை பாராத போது தான் மட்டும் அவளை பார்த்து பேச வேண்டுமா…? என்ரூ உதயேந்திரனும் மறைமுகமாய் தான் பேசினான்.

” மத்தவங்க சொல்லி கொடுத்து தான் எங்களுக்கு தெரியனும் என்பதும் இல்லை.” என்று உதயனுக்கு பதில் கொடுத்துக் கொண்டே தான், வேணியும் பேசினாள்.

ஏனோ உதயனுக்கு வேணியின் பேச்சில் எரிச்சலோ, கோபமோ வரவில்லை. மாறாக…” அப்படியா…?” அதிசயத்து சொல்வது போல் தன் இரு புருவத்தையும் மேல் நோக்கி கேட்டவனை இடைமறைத்தார் பரமேஸ்வரர்.

“ உதய் ஆக வேண்டியதை பார்.” பவிதரன் பேச, பேச, உதயனுக்கும் ,பரமேஸ்வரருக்கும், அதில் உள்ள சட்ட பிரச்சனைகள் தெரிந்து விட்டது.

உதயனும் சரி. பெரியவரும் சரி. சந்திரசேகர் எழுதிய உயிலை ஊன்றி கவனிக்கவில்லை. கவனித்து இருந்தால் நேற்று தன் அக்காவிடம் இந்த யோசனையையே உதயன் சொல்லி இருக்க மாட்டான். பெரியவரும் அதற்க்கு உடன் பட்டு இருக்க மாட்டார்.

தங்கள் கவனக்குறைவால் ஒரு சின்ன பையன், தங்கள் தவறை சுட்டிக் காட்டும் படி ஆகிவிட்டதே என்று பரமேஸ்வரர் எண்ணும் வேளையில், ஏனோ உதயன் அந்த பெண்ணிடம் இப்படி இலகுவாக பேசுவது பிடிக்காது, பிரச்சனை பக்கத்தில் மகனின் கவனத்தை திசை திருப்பியவர் யோசனையுடன் வேணியை பார்த்தார்.

உதயன் ராஜாசேகரை பார்க்கவும்,,, “ மிஸ்டர் உதயேந்திரன், பவித்ரன் சொல்வது சரி தான் .” என்று ஒரு வக்கீலாய் சொல்லி முடித்தார்.

அடுத்து என்ன செய்வது….யோசனையுடன் உதயேந்திரன் தன் பக்கவாட்டில் அமர்ந்து இருந்த தன் அண்ணன் கஜெந்திரனை பார்த்தான். அய்யோ பாவம் எப்போதும் போல் உதயனின் பார்வைக்கு அர்த்தம் புரியாது …

.” என்ன …?” என்பது போல் சைகையில் கேட்டான்.

“எங்களுடைய பங்கை என் மச்சினருக்கு கொடுக்கிறோம். அதற்க்கு உண்டான பேப்பரை ரெடி செய்ங்க.” வக்கீல் என்ற முறையில் ராஜசேகரை பார்த்து வாணி சொன்னதும், உதயனின் முகத்தில் வெற்றியின் புன்னகை மிளிர்ந்தது.

வாணி தனக்கு வாரிசு இல்லை. இந்த வயதுக்கு பிறகு பிறக்க போவதும் இல்லை. எப்படி இருந்தாலும் தங்கள் காலத்துக்கு பின் இந்த பங்கு உதயேந்திரனிடம் தான் சேர போகிறது. என்றோ சேர போவது இப்போதே கொடுத்தால், அந்த S.P குழுமத்தின் சேர்மனின் குடும்பம் என்ற பெயராவது நிலைத்து நிற்க்கும் என்று நினைத்து தான் உதயனின் பார்வைக்கு அர்த்தம் தெரிந்து கணவனிடம் கூட ஆலோசிக்காது, அனைவரின் முன்நிலையிலும் இப்படி சொல்லி விட்டார்.

ஒரு மெச்சுதலான பார்வையை தன் மருமகள் மீது செலுத்திய பெரியவர்… “ ம் அது தான் என் மருமக சொல்லிட்டாளே, பிறகு என்ன….? வாணி சொன்ன படியே பேப்பர ரெடி பண்ணு.” ராஜசேகரை பார்த்து சொன்னவர். அனைவரையும் பார்த்து எப்போதும் போல் தன் ஆணவ பார்வையை செலுத்தவும் தவறவில்லை.

வேணி தயக்கத்துடன் பவித்ரனை பார்க்க, பவித்ரன் வக்கீல் ராஜசேகரை பார்க்க. அவர் கண் மூடி அவனை சமாதானப்படுத்தி விட்டு, பெரியவரிடம்… “ இது தயாரிக்க கொஞ்ச நேரம் பிடிக்கும்.” என்று சொன்னதும்,

தன் கைக்கெடிகாரத்தை பார்த்த உதயேந்திரன்… “ இது லன்ச் டைம் தானே. எல்லோரும் சாப்பிட்டு முடிப்பதற்க்குள் அண்ணி சொன்னதை செய்து வெச்சிடுங்க.” முடிக்க முடியுமா…? என்று கேட்காது, முடித்து தான் ஆகவேண்டும் என்று கட்டளையிட்டான் உதயேந்திரன்.

“ என்ன எல்லோரும் லன்சுக்கு போகலாமா…?” அனைவரையும் பார்த்து பொதுவாக கேட்ட உதயேந்திரன், அவன் பார்வை வட்டத்தில் வேணி வரும் போது மட்டும்… உதடு அசைவில் “போகலாமா…?” என்று கேட்டான்.

அவனை யோசனையுடன் பார்த்த வாறே தன் பக்கத்தில் அமர்ந்து இருக்கும் பவித்ரனை பார்க்க, அந்த இடமே வெற்றிடமாய் இருந்தது. ‘எங்கே இவன்…?’ தன் பார்வையை சுழல விட்டவளின் கண்களில் ராஜசேகரிடம் ஏதோ தீவிரமாய் பேசிக் கொண்டு இருப்பது தெரிய, ஏதோ யோசனையுடனேயே பவித்ரன் அருகில் சென்ற வேணி அவன் பக்கத்திலேயே நின்றுக் கொண்டாள்.

அங்கு ஏற்பாடு செய்திருந்த உணவை அனைவரும் உண்டு முடிக்கவும், ராஜசேகர் வாணி சொன்னது போல் பேப்பர் தாயார் செய்து முடிக்கவும் சரியாக இருந்த்து.

அவர் நீட்டிய பேப்பரை வாங்கிய உதயேந்திரன், எல்லாம் சரியாக இருக்கிறதா…? ஒரு முறைக்கு இரு முறை சரி பார்த்த பின்னே கைய்யெழுத்து இட தன் அண்ணன் முன் அந்த பேப்பரை வைத்தான்.

ராஜசேகர் கஜெந்திரன் கைய்யெப்பம் இடுவதை யோசனையுடன் பார்த்துக் கொண்டு இருந்தார். கஜெந்திரன் மட்டும் அல்லாது அங்கு இருந்த பங்குதாரர்கள். பங்குதார்கள் என்றால் இவர்கள் போல் இருபது முப்பது சதவிகிதம் கிடையாது.

இரண்டு மூன்று சதவிகிதம் தான் அங்கு அவர்களின் பங்கு இருக்கிறது. ஆனால் அதன் மதிப்பே எக்க சக்கம் என்று சொல்லலாம். S.P குழுமத்தில் ஷேர் வைத்திருப்பதே ஒரு அந்தஸ்தாய் தான் அவர்கள் நினைத்தார்கள்.

கஜெந்திரனோ தன் மனைவி காட்டிய இடத்தில் எல்லாம் கைய்யெப்பம் இட்டு விட்டு, எதுவும் நடக்காதது போல் இருந்தவனை அனைவரும் அதிசயத்து தான் பார்த்திருந்தனர். கஜெந்திரன் உதயனுக்கு கொடுத்த ஷேரின் மதிப்பு என்ன…?என்று அவர்களுக்கு தெரியும் தானே…?

“ இப்போது என் மகன் இந்த பதவிக்கு பொறுத்தமானவன் தானே…?” என்று பரமேஸ்வரர் இந்த பார்மால்டீஸ் எல்லாம் முடித்த பின் கேட்டார்.

“ பொறுத்தமானவர் என்று எதை வெச்சி சொல்றிங்க….?” இப்படி கேட்டது நம் வேணியே தான்.

தன் தந்தையிடம் அமைதியாக இருக்கும் படி சைகை காட்டி விட்டு….” தகுகுதின்னு நீ எதை சொல்ற…?” இவ்வளவு நேரமும் உதயன் பேசுவதை வேணி கேட்டுக் கொண்டு இருப்பதும், வேணி பேசுவதை உதயன் கேட்டுக் கொண்டு இருப்பதுமே இந்த மீட்டிங் ஆராம்பித்தில் இருந்து நடைப்பெற்று இருந்தது.

இப்போது நேரிடையாக வேணியை பார்த்து கேட்டதும்…. என்ன பேசுவது என்று தடுமாறி , பின் பவித்ரனை பார்க்கவும், டேபுள் அடியில் இருந்த அவள் கைய் பற்றியதும் கொஞ்சம் தெளிந்த கிருஷ்ணவேணி…

“ இதோ இப்போ நீங்க என்னை பேசுற இந்த ஒருமை பேச்சு கூட, இந்த பதவிக்கு தகுதி இல்லேன்னு நான் சொல்றேன் மிஸ்டர் உதயேந்திரன்.” அவனை நேரிடையாக தாக்கி பேசினாள் கிருஷ்ணவேணி.

“ அப்போ என்னோட உனக்கு என்ன தகுதி இருக்கு….?” இப்போதும் அவன் தன் ஒருமை பேச்சை கைய் விடாதவனாய் தான் வேணியிடம் பேசினான்.

“ அதையும் நீங்கல சொல்லுங்க..இங்க இருக்கும் எல்லோரும் கேட்கட்டும்.” இப்போது யாரையும் இடையில் விடாது, நேரிடையகவே அவர்களின் பேச்சு தொடர்ந்தது.

“ என்னை பொறுத்த வரை உன்னிடம் ஒரு தகுதி இருக்கு.” என்று சொன்ன உதயேந்திரன் அது என்ன என்று சொல்லாது கொஞ்சம் அமைதி காத்தான்.

அந்த இடைப்பட்ட நேரத்தில் ஆளுக்கு அவர்கள் மனதில் தோன்றியதை நினைத்தார்கள் என்றால், ஜெய்சக்தியோ திரும்பவும் இவள் சந்திரசேகரின் மகள் என்று அனைவரின் முன்நிலையிலும் சொல்லுவானா…? என்ற சங்கடத்துடன் தன் தம்பியை பார்த்தார்.

அவனோ யாரும் நினைக்காத… “ என்னை பொறுத்தவரை உன் தகுதி நீ கம்பத்துல இருந்து வந்து இருக்க கம்பத்து பொண்ணு அவ்வளவு தான்.” உதயனின் பேச்சு மிகவும் இளக்காரமய் தான் இருந்தது.

“ ரொம்ப நன்றி.” ஏதோ உதயன் அவளுக்கு மெடல் குத்தியது போல் மகிழ்ச்சியுடன் கூறிய வேணி..

“ நானும் நான் கம்பத்து பொண்ணாய் இருப்பது தான் என்னிடம் இருக்கும் தகுதியா அதை தான் நினைக்கிறேன்.” என்று சொன்னதும்,

அங்கு இருந்த அனைவரும் ‘என்ன இந்த பொண்ணு இப்படி சொல்லுது…? மிஸ்டர் உதயேந்திரன் சொன்னது போல் இந்த பொண்ணு கிராமத்தில் இருந்து வந்த பொண்ணு. சிட்டியில தாக்கு பிடிப்பதே கஷ்டம். இதுல இவ்வளவு பெரிய குழுமத்தை எப்படி நிர்வகிக்கும்…?’ அவர் அவர்கள் எண்னத்துக்கு ஏற்ப இப்படி நினைத்தார்கள்.

பவித்ரனோ அடுத்து என்ன பேச போகிறாள் என்று ஒரு ஆவளுடன் கிருஷ்ணவேணியை பார்த்தாள் என்றால், பவித்ரனின் ஆவளுக்கு கொஞ்சமும் குறையாத ஆவல் மனதில் இருந்தாலும், அதை முகத்தில் காட்டாது ஒரு எதிர் பார்ப்புடன் வேணியின் முகத்தை பார்த்திருந்தான் உதயேந்திரன்.

“ இருபது வருடத்துக்கு முன், இதே கம்பத்தில் இருந்து வந்த மிஸ்டர் சந்திரசேகரிடம் தான் இந்த குழுமத்தின் மொத்த உரிமையும் கொடுத்து இருக்கிறார் மிஸ்டர் பரமேஸ்வரர். அதுவும் சென்னையிலே பிறந்து தொழில் குடும்பத்தில் பிறந்து, வளர்ந்த தன் மகன் மிஸ்டர் கஜெந்திரன் இருக்கும் போது.”

என்று சொன்ன கிருஷ்ணவேணி உதயேந்திரனோடு நக்கல் பார்வையை அவன் மீது செலுத்துயவாறு சொல்லவும், என்ன தான் கட்டு படுத்தியும் உதயேந்திரன் உதட்டோரம் வந்த புன்னகையை அவனால் மறைக்க முடியாது போனது.

ஆனால் உதயேந்திரனும், கிருஷ்ணவேணியும் நேருக்கு நேர் பேச ஆராம்பித்ததில் இருந்து, அவர்களையே பார்த்திருந்த பரமேஸ்வரருக்கு ஏதோ தவறாய் பட…. “ உதய் வீண் பேச்சு எதற்க்கு…? இது வரை நான் கைய் காட்டியவரை தான் இந்த பதவியில் அமர வைத்திருக்காகங்க நம்ம ஷேர் ஓல்டர்ஸ். இப்போவும் அவங்க மேல இருக்க நம்பிக்கையில் உன் பெயரை சொல்றேன். முடிவு அவங்க கையில்.”

நடப்பதை பார் என்று உதயேந்திரனிடம் சொன்ன பரமேஸ்ரர். தன் மகன் தான் இந்த பதவியில் அமர வேண்டும் என்று மறைமுகமாக பங்குதாரர்களுக்கு வலியுறுத்தினார். ஷேரும் வேணியிடன் முப்பது சதவிகிதம் தான் இருக்கு. உதயனிடம் நாற்பது சதவீதம் இருக்கு. வயது, படிப்பு அனுபவம் அதோடு பரமேஸ்வரரே ஆணையிடுவது போல் சொல்லி விட்டார்.

அவரை பகைத்துக் கொள்ள விருப்பம் இல்லாதவர்கள் அனைவரும் ஒரு மனதாய் உதயேந்திரனை தேர்ந்தெடுத்தனர். அந்த ஒரு மனதால் தேர்ந்தேடுத்தவர்களில் நம் வேணியும் ஒருவர்.










































 
Top