Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Kangal Verkindrana...10

  • Thread Author
அத்தியாயம் பத்து

எல்லோரும் எதிர்பார்த்த ஃளாஷ்பேக் இதோ!! சரியாக சொல்ல போனால், ஒரு எட்டு மாதங்களுக்கு முன்னால் நடந்ததை தான் பார்க்க போறோம்….

ப்ரியங்காவின் பூர்விகம் புனே தான்! பிறந்தது, வளர்ந்தது, படித்தது, பட்டம் வாங்கியது முதல் அனைத்தும் புனேவே! சிறு வயதிலிருந்தே குறும்பாக வளர்ந்தாள். ‘எல்லோரும் சந்தோஷமாக இருக்க வேண்டும்! அவளையும் சேர்த்து!!’ இதுவே அவளின் வாழ்வின் லட்சியமாக இருந்தது.

யாராவது உன்னோட லட்சியம் என்னவென்று கேட்டால், மேற்கூறியவற்றே அவளின் பதிலாக இருக்கும்….

அப்படிப் பட்டவளுக்கு, படிக்கும் போதே, கேம்பஸ் இன்டர்வியூவில் ஒரு புகழ் பேற்ற பன்னாட்டு நிறுவனத்தில், கை நிறைய சம்பளத்துடன் வேலை கிடைத்தது! மிகவும் சந்தோஷமாக அனைவருக்கும் கூறினாள் தான் செலக்ட் ஆனதை.

ஆனால், ட்ரெயினிங் மைசூரில் நடந்ததால், முதல் முறையாக தான் வாழ்ந்து வளர்ந்த புனேவை விட்டு, கிளம்பினாள், கண்ணை கசக்கிக் கொண்டே! ஆனால், அவளின் அழுகை அத்துடன் நிற்கவில்லை….

ட்ரெயினிங் முடிந்து, அவள் போஸ்டிங் சென்னையில் என்று வந்தது, அவள் அதிர்ஷ்டமா, அல்லது துரதிஷ்டமா? இப்பொழுது இருக்கும் ப்ரியங்காவிடம் கேட்டால் கண்டிப்பாக அதிர்ஷ்டம் என்றே கூறுவாள்.

அதனால் தானே ராஜீவ்வை பார்க்க முடிந்தது?? ஆனால், அப்பொழுது இருந்த ப்ரியங்கா, மீண்டும் தன் விதியை நோந்த படி, அழுதுக் கொண்டே, தன் பயணத்தை சென்னையை நோக்கி ஆரம்பித்தாள்.

அவளுக்கு இருந்த ஒரே ஆறுதல், அவளின் நெருங்கிய தோழி மதுவிற்க்கும் சென்னை போஸ்டிங் கிடைத்தது தான். இருவரும் மைசூரில், ஒரே அறையில் தங்கியிருந்ததால் மிகவும் நெருங்கியிருந்தனர்.

சிங்கார சென்னைக்கு வந்தவுடன் எல்லாம் புதிதாக இருந்தது ப்ரியங்காவிற்க்கு…. அவளுக்கு பாஷை வேறு தெரியாததால், மதுவும் அவளை எங்கேயும் தனியாக அனுப்பவில்லை.

வந்தவுடன் அவர்களின் ஆபிசிற்க்கு அருகிலேயே ஒரு ப்ளாட் வாடகை எடுத்தனர். அவர்களுடன் மேலும் இரு தோழியர் தங்கினர்.

வந்த மூன்றாம் வாரமே, ப்ரியங்கா அவளின் தோழியர்களுடன் சென்னையை சுற்றி பார்க்க ஆரம்பித்தாள். மதுவும் தன் கல்லூரி காலத்தை சென்னையில் கழித்ததால், அவளே அவர்களின் கைட் ஆனாள்.

பார்க்காத இடமே இல்லை என்ற அளவிற்க்கு ஊர் சுற்றி முடித்தாயிற்று!! அந்த வார சனிக்கிழமை ப்ரியங்கா ஷாப்பிங் செய்ய வேண்டும் என்று மதுவை நச்சரித்துக் கொண்டு இருந்தாள்.

மதுவை “அம்மா தாயே!! வரேன்… இப்போ கொஞ்ச நேரம் அமைதியா இரு!” என்று கை எடுத்து கும்பிடும் வரை விடவில்லை. அந்த காலத்தில், நம் நாயகிக்கு தமிழ் சுட்டு, வறுத்து, ஏன் கொன்று போட்டாலும் வரவே வராது!!!

அதனால், ப்ரியங்காவின் பேச்சு மற்றும் மது ப்ரியங்காவிடம் பேசுவதை மட்டும் ஆங்கிலத்தில் பேசுவது போல, தயவு செய்து, இல்லை இல்லை, கண்டிப்பா நீங்க கற்பனை செய்து தான் ஆக வேண்டும்! வேறு வழியே இல்லை!

அவர்கள் முடிவு செய்தது போல, சனிக்கிழமை ஷாப்பிங் கிளம்பினர், இருவரும். மாம்பலத்தில் அவர்கள் ஏறி இறங்கிய கடைகள் பல!

ஒரு வழியாக எல்லா ஷாப்பிங்கும் முடிந்து, மாலை நான்கு மணி அளவில், மாம்பலத்தில் அனைத்து பேருந்துகளும் வரும் டெர்மினஸ்க்கு வந்தனர். ப்ரியங்கா தூக்க முடியாமல், பைகளை தூக்கி நின்றாள். மதுவும் தான்!

அவர்கள் செல்ல வேண்டிய பேருந்து மட்டும் கண்ணிலேயே படவில்லை! தாகமாக வேறு இருந்ததால், மது ப்ரியங்காவிடம், “ஹே ப்ரியா, ரொம்ப தாகமா இருக்கு! நான் ஒரு கூல் டிரிங்ஸ் வாங்கிட்டு வரேன்” என்றாள்.

“நீ இரு மது! நான் போய் வாங்கிட்டு வரேன்… நீ ஆல்ரெடி ரொம்ப டையெர்டா இருக்க!”

“நீ அங்க போய் கரக்டா எப்படி கேட்டு வாங்குவ? நானே போறேன்!” இதை கேட்டதும் நம் தன்மான சிங்கம் சும்மா இருக்கும்னு நினைக்கிறீங்களா என?

பைகளை மதுவிடம் கொடுத்துவிட்டு, “எனக்கு கொஞ்சம் கொஞ்சம் தமில் வரு” என்று தமிழ் படத்தில் நடிக்கும் ஹிந்தி ஹீரோயின் போல, சொல்லிச் சென்றாள் நம் ஹீரோயின்!

“ஐய்யோ கடவுளே!!! எல்லாம் என்னோட நேரம்” என்று தலையில் அடித்துக் கொண்டாள் மது. ப்ரியங்கா சற்று தள்ளி உள்ள கடைக்கு சென்று கூல் டிரிங்ஸ் கேட்டாள். மது நிற்கும் இடத்தை அந்த கடையில் இருந்து பார்க்க முடிந்தது.

கடையில் கூட்டம் ஜாஸ்தியாக இருந்ததால், இவளை காக்க வைத்தனர்.

அப்போழுது சரியாக, ஒரு ஐந்தாறு போலீஸ் வாகனங்கள் பஸ் நிலைத்தினுள்ளே நுழைந்தது. என்ன ஏது என்று எல்லாரும் வேடிக்கை பார்க்கவும், போலீஸ் வாகனத்தில் வந்தவர், “ஒரு முக்கிய அறிவிப்பு! பஸ் ஸ்டாப்ல ஒரு பாம் இருக்கறதா எங்களுக்கு தகவல் வந்துருக்கு.

அதனால, எல்லாரும் சீக்கிரமா பஸ் ஸ்டாப் விட்டு போகனும்னு கேட்டுக்கறோம்! எவ்வளவு சீக்கிரமா போறீங்களோ அவ்வளவு நல்லது! யாரும் பயப்பட வேண்டாம்… போலீஸ் கண்டிப்பா பாம் டிப்யூஸ் பண்ணிடுவோம்……”

அதற்க்கும் மேலே, அவர் நிறைய பேசினார். ஆனால் யாரால் கேட்க முடிந்தது??

எல்லாரும் நாலாப்பக்கமும் ஓடுவதிலேயே குறியாக இருந்தனர். இதில் பாம் டிப்யூஸ் பண்ண வந்த போலீஸ் வேறு ஒரு பக்கம் அவர்களின் தேடுதல் வேட்டையை ஆரம்பித்தனர்.

ப்ரியங்காவிற்க்கு முதலில் ஒன்றுமே புரியவில்லை! என்னென்றால் அறிவிப்பு தமிழில் அல்லவோ இருந்தது…. பேந்தப் பேந்த அவள் முழித்து நின்றதை பார்த்து, கடை முதலாளி, “சீக்கிரமா இங்கயிருந்து போமா… நின்னு வேடிக்கை பார்க்கற?” என்று கூறிக் கொண்டே, கடையை அடைத்து கிளம்பினார்.

பாம் – டிப்யூஸ் போன்ற வார்த்தைகளை வைத்து என்னவென்று புரிந்துக் கொண்டாள்.

ப்ரியங்கா உடனே மது நிற்கும் இடத்தை தான் பார்த்தாள். மதுவும் இவளை நோக்கி தான் வந்துக் கொண்டிருந்ததால், இவளும் அவளை நோக்கி கிட்டத்தட்ட ஓடினாள்.

ஆனால் பாதி தூரம் கூட செல்லவில்லை… அதற்க்குள் மதுவை பின்னால் வந்த ஒருவர் தள்ளிவிட, மது கீழே விழுந்தாள். விழுந்த அவளை யாரும் கண்டுக் கொள்ளவில்லை. மதுவால் எழ கூட முடியவில்லை.

முகத்திலும் கை-கால்களிலும் பட்ட அடி அவளை சட்டென்று எழ விடவில்லை! இதை எல்லாம் பார்த்த ப்ரியங்காவிற்க்கு ஒரு நிமிடம் என்ன செய்வது என்றே புரியவில்லை. அவளால் முடிந்த அளவிற்க்கு வேகமாக மதுவிடம் சென்றாள்.

மதுவிற்க்கு பின்னால் வந்தவர்கள் அவளை மிதித்து செல்ல, அரை மயக்க நிலைக்கு தள்ளபட்டாள் அவள். ப்ரியங்கா மதுவிடம் வந்த போது, மதுவால் பேச இயலவில்லை… கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது ப்ரியங்காவிற்க்கு.

எப்பொழுதும் மது தான் ப்ரியங்காவை பார்த்துக் கொள்வாள். அவளுக்கு ஒன்று என்றவுடன் ப்ரியங்காவிற்க்கு முதலில் அழுகை தான் வந்தது. ஆனால், மூளை ‘உடனே எதாவது செய்’ என்று ஆணையிட்டு அவளை செயல்ப்பட வைத்தது.

உடனே, அவளை பஸ் நிலைத்தின் மறுகொடிக்கு இழுத்து சென்றாள். ப்ரியங்காவிற்க்கு அவளை இழுத்து செல்வதே பெரும் பாடாக இருந்தது…

ஒரு வழியாக அவளை ஒரு முலையில் படுக்க வைத்துவிட்டு யாராவது உதவிக்கு வருவார்களா, என்று பார்க்கலானாள்.

பஸ் ஸ்டாப்பில் இருந்த பாதிக்கும் மேற்பட்டோர் அதற்க்குள் கிளம்பி இருந்தனர். யாரை கூப்பிடுவது என்று தெரியவில்லை. தூரத்தில் ஒரு போலீஸ் கார் அருகே இரண்டு காவல் அதிகாரிகள் பேசிக் கொண்டு இருந்தனர்.

விரைவாக அவர்களின் அருகே சென்றாள் ப்ரியங்கா. அருகில் செல்லும் போது தான் உணர்ந்தாள், அந்த இரண்டு பேரில் ஒருவர் மற்றொருவரை திட்டிக் கொண்டிருந்தார். இவள் அருகே விரையவும் திட்டிக் கொண்டிருந்தவர், நிறுத்திவிட்டு இவளை நோக்கினார்.

ப்ரியங்கா உடனே ஒரு பதட்டப்பட்ட குரலில், மது இருக்கும் இடத்தை சுட்டிக் காட்டி, “சார் என்னோட ப்ரெண்டு கீழ விழுந்து, அடிப்பட்டு, மயக்கமா இருக்கா சார்! ப்ளீஸ் அவளை ஹாஸ்பெட்டல் கூட்டிட்டு போகனும். ஹேல்ப் மீ சார்…” என்றாள்.

ராஜீவ் மது இருக்கும் இடத்தை பார்த்து விரைவாக செயல்பட்டான்! ஆம், ப்ரியங்கா இவ்வளவு நேரம் ‘சார்’ போட்டு கூப்பிட்டது ராஜீவ்வை தான்!! நான் என்ன சொல்ல? எல்லாம் அந்த கடவுளின் செயல்!!

ராஜீவ் உடனே ப்ரியங்காவிடம், “கம் வித் மீ…” என்று கூறிக் கொண்டே காரில் ஏறி உட்கார்ந்து ப்ரியங்கா ஏறியவுடன், மது இருக்கும் இடத்தை நோக்கி சென்றான்.

மதுவையும் ஏற்றி, ஹாஸ்பெட்டலுக்கு காரை விரைவாக செலுத்தினான். போகும் வழியாவும் ப்ரியங்கா கண்ணீரை துடைத்தபடி, அவள் உயிர் தோழியை மயக்கத்திலிருந்து எழுப்ப தன்னாலான அனைத்தையும் செய்தாள்.

ஆனால், பலன் தான் இல்லை… ஐந்தே நிமிடத்தில் மருத்துவமனையும் வந்தது. வீல் சேரில் உட்கார வைத்து மதுவை உள்ளே அழைத்து சென்றனர்.

அவளை தனி அறைக்கு கூட்டிச் சென்ற பின்னர், ப்ரியங்கா ஓய்ந்து போய், வெளியில் இருக்கும் இருக்கையில் அப்படியே அமர்ந்தாள்….

ராஜீவ்விற்க்கு அவளை பார்க்க பாவமாக இருந்தது. ‘இவள பார்த்தா தமிழ் பொண்ணு மாதிரி கூட இல்லை… இங்கிளிஷ்ல தான் பேசறா… எப்படி இங்க தனியா சமாளிப்பா? பாவம்!’ என்பதே அவன் எண்ணமாக இருந்தது.

அதற்க்கு மேல், அவனை சிந்திக்க விடாமல் தொலைப்பேசி அவனை அழைத்தது! அவனும் வேண்டியவர்களுக்கு அழைத்து ஆணைகளை பிறப்பித்துக் கொண்டிருந்தான்.

ஒரு வழியாக டாக்டரும் வந்து, பயப்பட ஒன்றும் இல்லை…. அதிர்ச்சியில் வந்த மயக்கம் தான் என கூறவும், ப்ரியங்காவால் அடுத்தது என்ன, என்று யோசிக்க முடிந்தது.

புத்தி விரைவாக அதன் வேலையை செய்ய, உடனே அவளின் மற்ற தோழிகளை மொபைலில் அழைத்து விஷயத்தை கூறி ஹாஸ்பெட்டலுக்கு வரச் சொன்னாள்.

அப்பொழுது தான் ராஜீவ் அங்கேயே இருந்தது அவளுக்கு தெரிந்தது… அவனின் அருகே சென்று அவன் தொலைப்பேசியில் பேசி முடிக்கும் வரை காத்திருந்தாள்.

கண்கள் அவனின் பெயரை யூனிப்பார்மில் இருந்து படித்தது… ‘ராஜீவ் குமார்’ மனது தானாக பதிவு செய்தது. அவன் பேசி முடித்தவுடன், “ரொம்ப ரொம்ப தாங்க்ஸ் சார்! டாக்டர் இப்போ தான் வந்து பயப்பட ஒன்னும் இல்லைனு சொன்னாங்க. உங்க டைம்லி ஹேல்ப்புக்கு ரொம்ப தாங்கஸ்” என்று புன்னகையுடன் சொன்னாள் ப்ரியங்கா.

இதை கேட்ட ராஜீவ்விற்க்கும் நிம்மதியாக இருந்தது…. அவனும் புன்னகையை முகத்தில் பூசி பதில் கூறினான். “இட்ஸ் ஓகே! உங்களுக்கு ஏதாவது ஹேல்ப் வேணுமா? யாராவது ஏற்பாடு பண்ணட்டுமா, கூட இருக்க?”

“நோ நோ… நான் என்னோட ப்ரெண்ட்ஸை வரச் சொல்லிட்டேன்…. அவங்க வந்துடுவாங்க. நீங்க கிளம்புங்க சார்… ரொம்ப தாங்க்ஸ்!”

“நோ ப்ராப்ளம்! அப்போ நான் கிளம்பறேன். பை… டேக் கேர்!” என்று கூறி விடைப்பெற்றான் ராஜீவ். அவனுக்கு வேலைகள் தலைக்கும் மேலே காத்துக் கொண்டு இருந்தன!

இவர்களின் உரையாடல் தமிழில் அல்ல மக்களே! இங்கிளிஷ் என்னும் ஆங்கிலத்தில் தான் அமைந்தது என்பதை நான் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்!

ப்ரியங்காவும் அவனை அத்துடன் மறந்து விட்டாள் என்றே சொல்ல வேண்டும்…. வீட்டிற்க்கு வந்தவுடன் எல்லோருக்கும் நடந்ததை சொன்ன போது தான், மது ராஜீவ்வை பற்றிக் கேட்டாள்.

ப்ரியங்கா அதற்க்கு ஒரு அலட்சிய குரலில், “அவரோட நேம் ராஜீவ் குமார்…. அது மட்டும் தெரியும். வேற எதுவும் தெரியாது! பட், பேசினது நடந்துகிட்டதை எல்லாம் வெச்சு பார்க்கும் போது அவர் கண்டிப்பா இன்ஸ்பெக்டர் இல்லனா சப்-இன்ஸ்பெக்டரா இருப்பாருனு தோணுது” என்றாள்.

“அடுத்த வாட்டி பார்க்கும் போது கண்டிப்பா தேங்க் பண்ணனும்” மது கூறியவுடன் ராஜீவ்வை பற்றிய பேச்சு முடிந்தது! ப்ரியங்கா முற்றிலுமாக அவனை மறந்தாள். அடுத்த முறை அவனை பார்க்கும் வரை…. அடுத்த நாள் தான் தெரிந்தது அந்த பாம் விஷயம் ஒரு பொய்யான தகவல் என!!

மதுவிற்க்கு உடம்பு முழுமையாக குணம் அடைய எடுத்துக் கொண்ட, இரண்டு வாரமும் ப்ரியங்கா எங்கேயும் போகவில்லை…. நல்ல பிள்ளையாக, இல்லை இல்லை…. நல்ல தோழியாக மதுவின் அருகிலேயே இருந்து பார்த்துக் கொண்டாள்.

இரண்டு வாரம் கழித்து, அவர்கள் படம் பார்க்க ஒரு புகழ் பெற்ற ஷாப்பிங் மாலுக்கு சென்றனர். படத்திற்க்கு டிக்கட் வாங்கிவிட்டு, எல்லா கடைகளையும் சும்மா சுற்றி வந்தனர். மாலுக்கு போகும் பாதி பேர் அதை தானே பண்ணுவர்?

அப்பொழுது தான் ப்ரியங்கா ராஜீவ்வை பார்த்தாள்! ராஜீவ் ஒரு துணிக்கடையின் முன் நின்று மொபைலில் எதையோ நோண்டிக் கொண்டிருந்தான்…. ப்ரியங்கா உடனே மதுவிடம் அவன் சுட்டிக் காட்டி அவன் தான் ராஜீவ் என்று கூறினாள்.

“ஹோ! அவர் தானா? என் கூட வா….” என்று ப்ரியங்காவின் கையை பற்றி அவனிடம் அழைத்துச் சென்றாள்.

ப்ரியங்காவும் அவள் இழுத்த இழுப்புக்கு சென்றாள். ராஜீவ்வின் அருகில் சென்றவுடன் மது தன் குரலை கனைத்து, “ஹாய் சார்” என்றாள். ராஜீவ் இவர்களை பார்த்து ஒரு நிமிடம், யார் என்பது போல விழித்தான்.

பிறகு அவனே சற்று யோசித்து அறிந்துக் கொண்டான் இவர்களை. ஒரு புன்னகையோடு மதுவிடம் அவளின் உடல் நிலையை பற்றி விசாரித்தான், “ஹாய்! இப்போ சரியாகிடுச்சா உங்களுக்கு?”

ஆனால் அவன் பேசியது தமிழில் என்பதால், மதுவும் தமிழிலேயே பதில் கூறினாள். பாவம், நம் ப்ரியங்காவிற்க்கு தான் ஒன்றும் விளங்கவில்லை!! அதனால் ஒன்றும் பேசவும் இல்லை….

“இப்போ ஓகே சார்! அன்னிக்கு நீங்க தான் ரொம்ப ஹெல்ப் பண்ணிங்கனு இவ சொன்னா. அதான் தாங்க்ஸ் சொல்லாம்னு வந்தேன். தாங்க்ஸ் சோ மச் சார்…. நீங்க இல்லனா ரொம்ப கஷ்டமா போயிருக்கும்”

இத்தனையும் ராஜீவ் ஒரு விரிந்த புன்னகையுடன் தான் கேட்டான். ப்ரியங்காவிற்க்கு மது அவனிடம் நன்றி கூறுகிறாள் என்று மட்டும் புரிந்தது. அந்த சமயம், ஒரு பெண் ராஜீவ்வின் அருகில் வந்து நின்றாள்.

அந்த பெண் வேறு யாருமல்ல…. நிஷா தான்! ராஜீவ் நிஷாவை அவர்களுக்கு அறிமுகம் செய்தான். கூடவே, அன்று நடந்ததையும் கூறி மதுவையும் ப்ரியங்காவையும் நிஷாவிற்க்கு அறிமுகம் செய்து வைத்தான்.

பிறகு ஒரு சாதாரன குரலில், “எதுக்கு இவ்வளவு தாங்க்ஸ் சொல்றீங்க? இதே நிஷா அந்த இடத்துல இருந்தா நான் பண்ண மாட்டேனா? அப்படி தான் இதுவும்….

எனிவேஸ் எங்களுக்கு லேட் ஆகுது. நாங்க கிளம்பறோம்… பை” என்று கூறினான் ராஜீவ்.

மதுவும் “சரிண்ணா… நீங்க கிளம்புங்க” என்று விடை கொடுத்தாள்.

நிஷாவும் அவர்களுக்கு ‘பை’ சொல்ல, இரண்டு அடி எடுத்து வைத்த ராஜீவ், திரும்பி வந்து, ப்ரியங்காவிடம் பார்வை இருக்க, மதுவிடம் குறும்புக் குரலில் ராஜீவ் சொன்னான் “உங்க ப்ரெண்டுக்கு ஒன்னும் புரிஞ்சிருக்காது… அவங்களுக்கு எல்லாத்தையும் ட்ரான்ஸ்லேட் பண்ணிடுங்க”

இதை கேட்டு மது சிரிக்க ப்ரியங்காவிற்க்கு, தன்னை பற்றி தான் ஏதோ பேசுகிறார்கள் என்று மட்டும் புரிந்தது. சிரித்தபடி ராஜீவ்வும் நிஷாவும் செல்ல, மது சிரிப்பை நிறுத்தி நடந்தவற்றை ப்ரியங்காவிற்க்கு ராஜீவ் சொன்னது போல, மொழி பெயர்த்தாள்.

அத்துடன் விட்டுருக்கலாம்! ஆனால், மது முடிக்கும் போது, “இந்த காலத்துலயும் இப்படி இருக்காங்க பாரேன்…. பார்க்கற பொண்ணுங்கள எல்லாம் சைட் அடிக்குற வயசுல, யாருனே தெரியாதவங்கள தங்கச்சினு சொல்லிட்டு இருக்கார்…. இதுல மரியாதையா வேற பேசிட்டு போறார்! சூப்பர்ல?” என்றாள்.

அது தான் ப்ரியங்காவின் மனதில், நங்கூறம் பாய்ந்தது போல், நச்சென்று இறங்கியது!! ராஜீவ்வின் மேல், முதன் முதலில் ஒரு விருப்பம், ஒரு நல்ல அபிமானம் அவள் மனதில் விதையாக விழுந்தது அப்போது தான்….

அது பெரும் மரமாக அவளே அறியாமல் வளர்ந்தது அடுத்து வந்த நாட்களில்!! அந்த மரமே ராஜீவ்வின் மேல் அவளை பைய்த்தியமாக அலைய வைத்தது…..!
 
Top