Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Kangal Verkindrana....11

  • Thread Author
அத்தியாயம் பதினொன்று

ப்ரியங்கா ராஜீவ்வை பற்றி நிறைய சிந்தித்தாலும் ராஜீவ் அவளை பற்றி பெரிதாக எண்ணவில்லை என்பதே உண்மை! பார்ப்பதற்க்கு சிறு பெண் போலவே தோற்றமளித்தாள் ப்ரியங்கா, அவன் கண்களுக்கு….

அதனாலா இல்லை எல்லா பெண்களையும் நிஷா போலவே எண்ணுவதால், மேற்க்கொண்டு நினைக்கவில்லையா? அவனுக்கே வெளிச்சம்…. ராஜீவ் எப்போழுதுமே இப்படி தான். பள்ளி, கல்லூரிகளிலும் இதே கதையே!

அதற்க்காக அவனுக்கு பெண்களிடம் பேசும் பழக்கமே இல்லை, என்று சொல்லவும் முடியாது…. கூட படிக்கும் பெண்களிடம் நட்பாகவே பழகுவான். என்ன உதவி தேவைப்பட்டாலும் செய்து கொடுப்பான்.

ஆனால், இந்த சைட் அடிப்பது போன்ற விஷயங்கள் எல்லாம் ஒரு பெரிய ‘நோ’ தான்!! வீட்டில் எல்லோருக்கும் இதை நினைத்து பெருமை தான் நிஷா உட்பட! ஆனால், இதனாலேயே நிஷா அவனை பல முறை கலாய்ப்பதும் உண்டு.

அன்றும் ப்ரியங்கா மற்றும் மதுவிடம் விடை பெற்று வந்த பின்னர், நிஷா தன் அண்ணனை குற்றம் சாட்டினாள்.

“ஏன்டா, ரெண்டு அழகான பொண்ணுங்க வந்து பேசுறாங்களே…. நாமலும் கூட ரெண்டு வார்த்தை பேசுவோம்னு இல்லாம, ‘டைம் ஆச்சு வரேன்’னு சொல்ற? இதுல அவங்கள தங்கச்சி மாதிரி வேற நினைச்சுப்பாராம்!

இப்படியே இரு… விளங்கிடும் நம்ம குடும்பம்! அட்லீஸ்ட் அம்மா பார்க்குற பொண்ணையாவது ‘தங்கச்சி’ மாதிரி நினைக்காம இருப்பா… உனக்கு புண்ணியமா போகும்!!!”

இதை எல்லாம் ஒரு சிறு முறைப்புடனே ராஜீவ் கேட்டுக் கொண்டிருந்தான். அவள் முடித்தவுடன், “உனக்கு வர வர வாய் ரொம்ப ஜாஸ்தி ஆகிடுச்சு!” என்று கூறினான், அதே முறைப்புடன்.

தோலை குலுக்கிய படி சென்றாள் நிஷா!

****************************************************************************************************

இங்கே, ப்ரியங்காவின் எண்ணம் எல்லாம் ராஜீவ்வின் மேலே தான் இருந்தது… அன்றைக்கு முழுவதும்….. ஆனால், அடுத்து வந்த நாட்களில் மறந்துவிட்டாள். இல்லை இல்லை, மறந்துவிட்டாள் என அவளே நினைத்துக் கொண்டாள்.

ஆனால், மனதின் மூலையில் இருந்த ராஜீவ் தன் இருப்பிடத்தை, அடுத்த முறை அவனை பார்க்கும் போது தான் நிரூபித்தான். ராஜீவ்வை ஷாப்பிங் மாலில் சந்தித்த அடுத்த வாரம், ஒரு நாள், ப்ரியங்கா, மது மற்றும் அவர்களின் தோழிகள் எல்லாம் சேர்ந்து மதிய உணவு வேலையில் சாப்பிட்டு கொண்டிருந்தனர்.

அப்பொழுது, ப்ரியங்கா திடீர் என்று தன் நண்பிகளிடம், “நான் நாளையிலிருந்து ஜோகிங் போகப் போறேன்” என்று அறிவித்தாள். இதை கேட்டு எல்லோரும் முழித்தனர்.

மது மட்டும் உடனே சுதாரித்து, ஏன் இந்த முடிவு என்று கேட்டாள். ப்ரியங்கா உடனே, ஒரு ஆச்சரியமான பார்வையை செலுத்தினாள் மதுவை நோக்கி…. “ஏன் இந்த முடிவா? இங்க வந்ததுலிருந்து எவ்வளோ சாப்பிட வைச்ச என்னை?

‘அது நல்லா இருக்கும் இதை ட்ரை பண்ணு, இது அதை விட நல்லா இருக்கும் இதையும் ட்ரை பண்ணு’ இப்படி சொல்லி சொல்லியே எல்லாத்தையும் சாப்பிட வெச்சு, மூணு நாலு கிலோ வெயிட் ஏற வைச்சுட்ட என்னை.

நான் கண்டிப்பா ஜோகிங் இல்லனா வாக்கிங் போகத்தான் போறேன்… யார் எல்லாம் என் கூட வர்றீங்க? ஹ்ம்ம்ம்… டெல் மீ?”

ப்ரியங்கா பேசி முடித்தவுடன் அவளை கிண்டல் அடிக்கும் நோக்கில், தண்ணீர் பாட்டில் எடுத்து கொடுத்து, “பேசிப் பேசியே அரை கிலோ குறைஞ்சிருக்கும் உனுக்கு…. நீ வேணா ஒன்னு பண்ணு பேசிப் பேசியே எப்படி வெயிட் லாஸ் பண்ணலாம்னு கண்டுப்பிடி….

ஆட்டமாட்டிக்கா வெயிட் குறைஞ்சிடும் பாரு!!” என்றாள் மது. இதை கேட்டு சிரித்த மற்ற தோழிகளையும் சேர்த்து ப்ரியங்கா முறைத்தாள். வேறு என்ன சொல்ல முடியும் அவளால்?

பேசாமல் சிறிது நேரம் கூட அவளால் இருக்க முடியாது என்பது அவளை சுற்றி உள்ளவர்கள் அனைவரும் அறிந்த விஷயம்!

ப்ரியங்காவின் முறைப்பை பார்த்து இன்னுமே சிரித்தாள் மது. கடைசியாக ப்ரியங்காவும், “அப்போ யாரும் என் கூட வரமாட்டீங்களா?” என்று முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு கேட்டாள். யாரும் செல்ல தயாராகயில்லை…

மதுவே எல்லோரின் முகத்தை பார்த்து புரிந்துக் கொண்டு, ப்ரியங்காவிடம் திரும்பி கூறினாள். “காலையில எல்லாம் ஓடுறது ரொம்ப கஷ்டம் ப்ரியா! நீயே போ… மேபி லீவ் நாள்ல வேணும்னா நான் உன்கூட வரேன்… ஓகே வா?”

ப்ரியங்காவும் கூடவே இருந்து இவர்களின் சோம்பேரித்தனத்தை பார்த்ததால், மேலே அவர்களை வற்புற்த்தவில்லை. அடுத்த நாளில் இருந்து, அவளின் நடைப்பயிற்சி/ஜாகிங் ஆரம்பமாகியது.

காலையில் ஐந்தரைக்கே வீட்டிலிருந்து கிளம்பினாள். அந்த அடுக்குமாடி குடியிருப்பிற்க்கு வந்து சில மாதங்கள் ஆகியதால், ப்ரியங்காவிற்க்கு அதன் சுற்று வட்டாரங்கள் ஓரளவிற்க்கு அத்துபடி. அதனால் தான் மதுவும் அவளை தனியாக அனுப்ப சம்மதித்தாள்.

வீட்டிலிருந்து கிளம்பி ஒரு பத்து பதினைந்து நிமிடம் ஜாகிங் செய்தவுடன் ப்ரியங்கா ஒரு பெரிய காலி மைதானத்தை பார்த்தாள்.

அங்கே சிலர், ஓடிக் கொண்டும், சிலர் உடர்பயிற்சி செய்துக் கொண்டும் இருந்தனர்…

ப்ரியங்காவும் அந்த ஒரு சிலருடன் சேர்ந்து, மைதானத்தை சுற்றி ஜாகிங் செய்யலானாள். நேரம் செல்ல செல்ல, நிறைய பேர் வந்தனர் அந்த கரவுன்டிற்க்கு. எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்த படி ஓடினாள் ப்ரியா.

ஓரளவிற்க்கு மேல், அவளால் ஓட முடியவில்லை. பலமாக மூச்சு வாங்க அந்த மைதானத்தின் உள்ளேயே இருந்த கல் பெஞ்சில் அமர்ந்தாள். தன்னையே ஆசுவாசப் படுத்திக் கொண்டு, அவள் சுற்றிலும் பார்வையை படறவிட்டாள்.

இப்போழுது நிறைய இளைஞர்களும் இளைஞிகளும் வந்திருந்தனர். ஒரு பக்கம் இளைஞர்கள் வாலி பால், விளையாடிக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் தான், ராஜீவ் கரக்டாக அந்த மைதானத்திற்க்குள் நுழைந்தான்.

வந்தவன் இரண்டு முறை கரவுன்டை வலம் வந்து, பின் வாலி பால் விளையாட அந்த இளைஞர்களுடன் சேர்ந்துக் கொண்டான். இதை எல்லாம் ஒன்று விடாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் ப்ரியங்கா.

ராஜீவ் கரவுன்டின் உள்ளே வரும் போதே அவனை கண்டுக் கொண்டாள். குப்பென்று ஒரு சந்தோஷம் அவளுள் அவளையும் அறியாமல் பரவியது….

ஏன் அவனை பார்க்கிறோம், என்று யோசிக்காமலே பார்த்தாள் அவனை. ஆனால், ராஜீவ் ப்ரியங்காவை பார்க்கவேயில்லை!! ‘பார்த்தாலும் பெரியதாக ஒன்றும் சொல்லமாட்டான்’ என்று மனதிற்க்குள் நினைத்தாள்.

அதற்க்குள், மூக்கு வேர்த்தது போல, மது ப்ரியங்காவின் மொபைலுக்கு கால் செய்தாள்.

சைட் அடிப்பது தடைப்பட்டதால், எரிச்சலுடனே போனை எடுத்தாள் ப்ரியா… அவள் கஷ்டம் அவளுக்கு! அவள் எடுத்த நிமிடம் மது என்னும் பட்டாசு பொறிய துவங்கியது….

“ஹே, எங்கடி இருக்க? அஞ்சரை மணிக்கு வீட்டுலருந்து கிளம்பின… இப்போ டைம் என்னாச்சு தெரியுமா? ஏழு மணி ஆவப்போது! இன்னும் என்ன ஜாகிங் பண்ணிட்டு இருக்க? வேலைக்கு போகனும்னு எண்ணமே இல்லையா உனக்கு? இன்னும் டென் மினிட்ஸ் தான் உனக்கு டைம்…. வீட்டுக்கு வர அதுக்குள்ள… ஓகே வா? பை!”

ப்ரியங்காவை பேசவே விடாமல், தன் புலம்பலை எல்லாம் கோபமாக கொட்டிவிட்டு, பட்டாசு தானாகவே அணைந்தது! அவள் சொன்னவுடன் தான் மணி ஏழு ஆகியதே ப்ரியங்காவிற்க்கு தெரிந்தது…

சைட் அடிக்க நேரம் காலம் தெரியல்ல, நம் ஹீரோயினுக்கு! கடைசியாக அவனை கண்களுக்குள் நிரப்பிக் கொண்டு, வீட்டுக்கு ஓடினாள்…. ஜாகிங் எல்லாம் இரண்டாம் பட்சம் ஆகியது இப்போழுது!

வீட்டின் உள்ளே, வந்தவள் நேராக சமையல் அறைக்கு சென்றாள். அங்கே தான் அனைவரும் காலையில், தங்களின் கை வண்ணைத்தை சமையலில் காட்டிக் கொண்டிருப்பர் என்று தெரியாதா என்ன?

நுழைந்தவளை ஏற இறங்க பார்த்து அவளுக்கு தண்ணீர் எடுத்துக் கொடுத்தாள் மது. முறைத்துக் கொண்டும் தான்! ஆனால், அவள் முறைப்பை எல்லாம் கிடப்பில் போட்டு, தண்ணீரை குடித்தாள் ப்ரியங்கா.

குடித்து முடித்தவுடன், உற்சாகமாக ஒரு வேகத்துடனும், குதூகளத்துடனும் மதுவிடம் அன்று ராஜீவ்வை பார்த்ததை சொன்னாள்.

“மது, இன்னிக்கு நான் யாரை பார்த்தேன்னு தெரியுமா? ராஜீவ் சாரை பார்த்தேன்” இவளின் மகிழ்ச்சியை பார்த்து மற்ற தோழிகளும் ஆச்சரியமாக இவளை திரும்பி பார்த்தனர்.

‘ஒரு போலீஸ் ஆபிஸரை திரும்ப பார்த்ததுக்கா இவ்வளவு சந்தோஷம்? ஹ்ம்ம் வேற என்னமோ இருக்கு’ மதுவையும் சேர்த்து எல்லார் மனதிலும் இதே எண்ணம் தான்.

என்ன தான் ஒன்றாக இருந்தாலும் ப்ரியங்காவும் சரி, மதுவும் சரி, அவர்களின் தோழியர்களுக்கு எந்த பெர்ஸ்னல் விஷயத்தையும் சொன்னதில்லை…

இப்போழுது அவர்களின் முன் ப்ரியங்கா இப்படி சொல்லவும், வேறு வினையே வேண்டாம் என்று அவளை தங்களின் படுக்கை அறைக்கு தள்ளிக் கொண்டு போனாள். கதவை சாத்தியவுடன், ப்ரியங்காவிடம் திரும்பி தன் கேள்விகளை அடுக்க ஆரம்பித்தாள் மது.

“இப்போ எதுக்குடி இப்படி சந்தோஷப்படுற? ஆமா, நீ எங்க ராஜீவ் அண்ணாவ பார்த்த?”

அவளின் கேள்விக்கு பதிலாய், தான் வீட்டிலிருந்து கிளம்பியது முதல், திரும்ப வந்தது வரை எல்லாவற்றையும் சொன்னாள் ப்ரியங்கா. அவள் பேசும் போது அவளின் முகத்தில் தெரிந்த சந்தோஷமும் பூரிப்பும் மதுவை சிந்திக்க வைத்தது.

ப்ரியங்கா அவளின் சிந்திக்கும் முகத்தை கண்டவுடன், “என்ன மது? என்ன யோசிக்கற?” என்று கேட்டாள். மது திரும்ப ப்ரியங்காவை ஊற்று நோக்கி அவளிடம், “ப்ரியா இப்போ நான் கேக்க போறதுக்கு ஒழுங்கா பதில் சொல்லு.

நீ எதுக்கு இன்னிக்கு இவ்வளவு எக்சைட்டடா இருக்க?” என்று மறுபடியும் கேட்டாள்.

இப்போழுது யோசிப்பது ப்ரியங்காவின் முறை ஆயிற்று… ஆனால், ரொம்ப எல்லாம் யோசிக்கவில்லை. சிறிது நேரம் கழித்து, “ஹ்ஹ்ம்ம்ம் தெரியல மது… லீவ் இட்! லேட் ஆச்சு.. ஆபிஸ் போகனும்” என்று தப்பிக்க பார்த்தாள் மதுவிடம் இருந்து.

மதுவாவது விடுவதாவது? ப்ரியங்கா தன் அலமாரிக்குள் தலையை விட்டு எதையோ தேடவும் அவளை இழுத்து, தன்னை நோக்கி நிற்க வைத்தாள். அவளின் கண்களே சொல்லியது இதற்க்கு ஒரு விடை தெரியாமல் நான் விடப் போவது இல்லை என!

“இப்போ உனக்கு என்ன தான் வேண்டும் மது? சொல்லு!?” பொறுமையின் விளிம்பில் இருந்த அந்த குரலை கேட்டு, மதுவிற்க்கு கோபம் இன்னும் அதிகமாகியது…

‘இவ எல்லாத்தையும் செஞ்சிட்டு, கடைசியில என் மேல கோபப் படுறா? ஓவரா பண்ற நீ! இருடி இரு… இன்னிக்கு உன்னோட வாயாலயே எல்லாத்தையும் சொல்ல வைக்கிறேன்’

மது கோபம் தாண்டவமாடிய கண்களை கட்டுப் படுத்தி, சாந்தமாக மீண்டும் அதே கேள்வியை ப்ரியங்காவை நோக்கி வைத்தாள்…

இந்த முறை ப்ரியங்காவால், தப்பிக்க முடியவில்லை…. “எனக்கு சீரியஸா தெரியல மது. பட், எனக்கு அவரை பிடிச்சிருக்குனு நினைக்கிறேன்!”

இதை கேட்டு, மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானாள் மது!!! ‘என்ன பிடிச்சிருக்கா?? கடவுளே’ என்று நினைத்தபடி தலையில் கை வைத்தாள்.

ஆனாலும் விடாமல், “நீ ராஜீவ் அண்ணாவ லவ் பண்ணிறா?” என்றும் நடுங்கும் குரலில் கேட்டாள் மது. ஏனோ, அவளால் அதை ஏற்க்கவே முடியவில்லை… அவர் எங்கே, இவள் எங்கே? குணத்தில் பல வேறுப்பாட்டை கொண்டவர்கள் எப்படி சேர முடியும்? கண்டிப்பாக ராஜீவ்வும் இதை ஏற்ப்பான் என்றும் தோன்றவில்லை.

ஆனால், இந்த கேள்வியை கேட்டு ப்ரியங்கா சிரிக்க ஆரம்பித்தாள். சிரித்து முடித்துவுடன் மதுவை பார்த்து பேசினாள். “என்ன லவ்வா? லூசா மது நீ? எனக்கு அவரை பிடிச்சிருக்குனு சொன்னது ஒரு ‘கரஷ்’, ஒரு லைக்கிங்!! அந்த மாதிரி தான்….

பார்த்தா சில பேரை நம்மக்கு பிடிக்கும்… அதுக்காக அவங்கள எல்லாம் லவ் பண்ண முடியுமா? ஸோ, தேவையில்லாம இதை பத்தி நினைக்கறதை விட்டுடு வேலையை போய் பாரு… நானும் குளிக்க போறேன்”

மதுவிற்க்கு தன் காதுகளையே நம்ப முடியவில்லை…. ‘என்ன இவ ராஜீவ்வண்ணாவை அவளோட கரஷ்னு ஏதோ ‘கேன்டி கரஷ்’ விளையாடுறது மாதிரி சாதரணமா சொல்றா?’ உள்ளே நோந்தவள், வெளியேயும் கேட்ட தயங்கவில்லை….

“ஹே! என்ன கரஷ்ஷா? அவர் நம்மல தங்கச்சியா நினைக்குறாரு… அவரை போய்?”

மது பேசி கூட முடிக்கவில்லை, அதற்க்குள் நிறுத்தும் படி கை காட்டி, “அவர் உன்னை தான் தங்கச்சி மாதிரினு சொன்னாரு, என்னை இல்ல… சோ, எனக்கு நோ ப்ராப்ளம்”

ஒரு இளகிய குரலில் கூறி முடித்து, திரும்ப தன் கப்போர்டுக்குள் தலையை நுழைத்துக் கொண்டாள் ப்ரியங்கா.

மதுவிற்க்கு கொஞ்சமும் ப்ரியங்காவின் சொல் மேல் நம்பிக்கை இல்லை…

இன்றைக்கு ‘கரஷ்’ என்பவள், நாளைக்கு ‘லவ்’ என்று வரமாட்டாளா என்ன? இதேல்லாம் எங்கே போய் முடியப் போகிறதோ? என்று சலித்த படி ஆபீஸ் கிளம்பினாள் மது.

அடுத்து வந்த நாட்களில் ப்ரியங்கா கரக்டாக ஆறு மணிக்கு மைதானத்தில் ஆஜர் ஆனாள்… ஏன் ஆறு மணிக்கா? அப்போது தானே ராஜீவ்வும் வருவான்!

ராஜீவ் முதல் ஒரு இரண்டு மூன்று நாட்கள் இவளை கவனிக்கவில்லை…. ஆனால், நான்காவது நாள் இவளை பார்த்து, ஒரு தெரிந்த புன்னகையை மட்டும் செலுத்தி சென்றான்.

அவனுக்கு ஆயிரம் வேலைகள்… நம் ப்ரியங்காவிற்க்கு இது தானே முக்கியமான ஒன்று… அதனால் விடா முயற்ச்சியாக அவனை பற்றி அனைத்து விஷயங்களையும் சேகரிக்க ஆரம்பித்தாள்.

அதில் முதலில் அவள் செய்தது, ராஜீவ்வே அறியாமல் அவன் பின்னால் சென்று அவன் வீட்டை கண்டுப் பிடித்தாள்!!! எது தன்னை இத்தனையும் செய்ய தூண்டுகிறது என்று கேட்டால், அவளே அறியாள்….

ஆனால் அவளையும் மீறி இதை செய்கிறாள் என்று மட்டும் புரிந்தது. தடுக்கத் தான் முடியவில்லை… இவை அனைத்தும் மதுவிற்க்கும் தெரியும் என்பது வேறு கதை. அவளிடம் மட்டும் எதையும் மறைக்கவில்லை ப்ரியங்கா…..

இப்படியே அவள் அந்த கரவுன்டிற்க்கு வர ஆரம்பித்து, இரண்டு வாரம் ஆன நிலையில், ஒரு நாள் காலையில் வழக்கம் போல ப்ரியங்கா மைதானத்திற்க்கு வந்து சேர்ந்தாள். ஆனால், பாவம் ராஜீவ்வை தான் காணவில்லை.

மணி ஆறு, ஆறரை ஆகியதே ஒழிய அவன் வரக் காணோம்.

ப்ரியங்காவிற்க்கு மண்டை வெடித்து விடும் போல், இருந்தது ராஜீவ்வை பார்க்காமல். அவன் ஏன் வரவில்லை என்று தெரிந்தால் கூட பரவாயில்லையாக இருக்கும். ஆனால், யாரிடம் கேட்பது? என்வென்று கேட்பது?

இப்படியே அவள் வழக்கமாக உட்காரும் பெஞ்சில், அமர்ந்து யோசிக்கும் போது, பின்னால் இருந்து ஒரு குரல் கேட்டது. “யாரை தேடுறீங்க? ராஜீவ்வை யா?”

ஆங்கிலத்தில் கேட்ட அந்த குரலை கேட்டு தூக்கி வாரி போட்டு, திரும்பினாள் ப்ரியங்கா. பின்னால் ஒரு நடுத்தற வயது இளைஞன், நின்றுக் கொண்டு இதை கேட்டான். அவன் கண்களில் அவளை அறிந்த ஓளி, மின்னியது….

‘இவனை எங்கயோ பார்த்திருக்கிறோம்! எங்க பார்த்தோம்?’ ப்ரியங்கா அந்த புதியவனின் முகத்தை கூர்ந்து நோக்கினாள். இப்போழுது அவனை அறிந்த மின்னல், அவள் கண்களில் வெட்டியது….!!!
 
Top