அத்தியாயம் பதிமூன்று
ப்ரியங்காவின் அழுகையை பார்த்து திகைத்து நின்றாள், மது. எப்பொழுதும் ஜாகிங் முடிந்து சந்தோஷமாக வருபவளுக்கு இன்று என்ன ஆகிற்று??? வேலைக்கு கிளம்பும் அவசரத்தில் இருந்தவளுக்கு அவளை என்னவென்று கேட்பது என்ற தெரியவில்லை….
ஒரு வேளை, அண்ணாகிட்ட இவ ப்ரப்போஸ் பண்ணி, அவரு முடியாதுனு சொல்லிட்டாரா??? பயந்து கொண்டே ப்ரியங்காவின் அருகில் சென்று, அவளின் தோளில் கை வைத்தாள். அவ்வளவு தான்….
கொஞ்சம் நஞ்சம் அடங்கி இருந்த அழுகையும், ஓவென்று மீண்டும் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது…. மதுவும் சரி அழுதால், மனது லேசாக ஆகும் என்று சிறிது நேரம் அழவிட்டாள். நிமிடங்கள் கழிந்தனவே ஒழிய ப்ரியங்கா நிறுத்துவதாக காணோம்!!
அதனால், மது அவளை உளுக்கி எழ வைத்தாள். “ஹே!! எதுக்குடி இப்போ இப்படி அழற?? என்னாச்சுன்னு சொல்லிட்டாவது அழு….. ப்ரியா!!! போதும். எனஃப்!! அழறத இப்போ நிறுத்த போறியா இல்லையா???
ஸ்டாப் க்ரையிங் ஐ ஸே!!! நிறுத்துடி…….” மதுவின் அதட்டல் சிறிது வேலை செய்தது. சிறிது நேரத்திலேயே அழுகையை முற்றிலுமாக விட்டிருந்தாள் ப்ரியங்கா…. ஆனால், விசும்பல் மட்டும் அடங்கவில்லை. ப்ரியங்கா நினைத்தாலும் அதை தவிர்க்க முடியவில்லை.
“குட்! இங்க பாரு ப்ரியா. என்ன நடந்துச்சுன்னு எனக்கு ஒழுங்கா அழாம சொல்லு! உனக்கும் ஃப்ரியா இருக்கும் அப்புறம்.”
ப்ரியங்கா மெதுவான குரலில், மைதானத்தில் என்ன நடந்தது என்பதை விலாவரியாக மதுவிடம் ஒப்பிக்கலானாள். மதுவிற்க்கும் இது அதிர்ச்சியே, யார் இது புதிதாக குட்டையை குழப்புவது என.
பல கேள்விகளுடன் அவள் ப்ரியங்கா கூறுவதை கேட்டுக் கொண்டபடி இருக்க, இங்கே நம் ப்ரியங்காவின் நிலைமையோ அந்தோ பரிதாபம்…. மிகவும் கஷ்டப்பட்டு அழுகையை அடக்கி குரலில் சிறிது பிசிறுதட்ட கூறிக் கொண்டிருந்தாள்.
அப்போதும் கடைசியில் முடிக்கும்போது, “இத்தன நாளா நீ, ராம் பைய்யா எல்லாம் கேக்கும் போது, ‘லவ்வெல்லாம் இல்லை… எனக்கு இது லவ்வானு தெரியலை’ இப்படி எல்லாம் சொல்லிட்டு என்னையே ஏமாத்திட்டு இருந்தேன் மது.
நான் இவ்ளோ நாளைக்கு யோசிச்சது, எங்க மேரேஜ் லைஃப் பத்தி தான். அவருக்கு என்னை பிடிக்குமா? நிறைய பிரச்சனை வருமோன்னு தான் தயங்கினேன் நானு. ஆனா…. ஆனா, இன்னிக்கு அந்த பொண்ணு வந்து, ‘நானும் ராஜீவ்வும் கல்யாணம் பண்ணிக்க போறோம்’ன்னு சொன்னதும்…..”
மீண்டும் அழுகை பீறிட, வெடித்து அழுதாள் ப்ரியங்கா. மது அவளை அணைத்து ஆறுதல் படுத்த, தன் ஃப்ளீங்ஸை உயிர் தோழியிடம் பகிர்ந்தாள். “என்னால முடியல மது… நான் ராஜீவ்வ எவ்ளோ லவ் பண்ணுறேன்னு எனக்கு அப்போ தான் புரிஞ்சுது!!! நிஜமா சொல்றேன் மது, ஐ லவ் ஹிம் அ லாட்… நான் அவரை கல்யாணம் பண்ணிக்கனும் மது.
எனக்கு ராஜீவ் வேண்ணும்னு ரொம்ப தோணுது இப்போ. பட், அவருக்கு சீக்கிரமா வேற ஒரு பொண்ணோட கல்யாணம் நடக்க போகுது…. இந்த விஷயத்த என்னால டைஜஸ்ட் பண்ண முடியல!!! சுத்தமா முடியல!!!”
மனதில் இருப்பதை எல்லாம் கொட்டிவிட்டு சிறிது நேரமாக குத்தகை எடுத்து இருந்த அழுகையை மறுபடியும் எடுத்தாள் ப்ரியங்கா. அவளை என்ன சொல்லி தேற்றுவது என்றே தெரியவில்லை மதுவிற்க்கு.
இப்படி ஏதாவது பிரச்சனை வரும் என்று தான் அவளும் பயந்தாள். அவள் பயம் தேவையானதே என்பது போல, இப்போது பிரச்சனையும் வந்தாகிற்று. இனி இதிலிருந்து மீண்டு வர என்ன வழியென்றே யோசித்தாள் மது.
ப்ரியங்காவை ஒரு முறை பார்த்தாள்…..
அவளை பார்த்தால், ராஜீவ்வை மறந்துவிடுகிறவள் போல தோன்றவில்லை. மறந்துவிடு என்றும் மதுவால் சொல்ல இயலாது. ஆம், ப்ரியங்கா ராஜீவ் மேல் காதல் கொள்வதில் அவளுக்கு விருப்பமில்லை தான்!
ஆனால், காதல் எனும் சமுத்திரத்தில் விழுந்தாகிற்று…. இனி நல்லபடியாக கரை ஒதுங்குவதே சாலச் சிறந்தது. அதுவும் ராஜீவ்வின் கையை பற்றியப்படி ஒதுங்க வேண்டும்!! அது தான் இதில் மிக முக்கியம்.
இப்படியெல்லாம் மது யோசிக்கும் வேளையில், மற்ற இரு தோழிகள் வந்து ஆபீஸ் செல்ல டைம் ஆகுவதாக எச்சரித்தனர். மது அவர்களிடம் ப்ரியங்காவுக்கு உடம்பு சரியில்லை என்று கூறி தாங்கள் இன்று அலுவகத்தில் லீவ் எடுத்துக் கொள்வதாக சொல்லினாள்.
இதை கேட்டு அவர்கள் சென்றவுடன், தன்னுடைய மேல் அதிகாரிக்கும் ப்ரியங்காவின் மேல் அதிகாரிக்கும் அழைத்து தங்களின் விடுப்பை பற்றி தெரிவித்தாள். சொல்லிவிட்டு, தங்களின் வீட்டின் ஹாலில் அப்படியே அமர்ந்துவிட்டாள்.
அவளுக்கும் யோசிக்க வேண்டி இருந்தது. நிறையவே இருந்தது. ப்ரியங்காவை நினைத்தால் பாவமாக இருந்தது. என்னவும் செய்து அவளை ராஜீவ்வண்ணாவுடன் சேர்த்து வைக்க வேண்டும், என்றெண்ணிக் கொண்டாள்.
யோசித்து யோசித்து தலை வலித்தது தான் மிச்சம்!! ஒன்றும் உருப்படியாக தோன்றவில்லை! சை!!… என்று சலித்த வண்ணம் இருந்த போது தான் அவளுக்கு அந்த யோசனை வந்தது…. இவ்வளவு நேரம் ஏன் இப்படி யோசிக்கவில்லை என்று தன்னையே திட்டிக் கொண்டு, ப்ரியங்காவை நோக்கி கிட்டத்தட்ட ஓடினாள்.
****************************************************************************************************
இங்கே அவன் அலுவகத்தில் ராஜீவ் மிகுந்த குழப்பத்தில் இருந்தான். காலையில் இருந்து மண்டைக்குள் ஓடிக் கொண்டிருந்த சிந்தனை உண்டாக்கிய குழப்பம் தான் அது!!! என்ன குழப்பமா??
ப்ரியங்கா அதிர்ந்து நிற்பதை மைதானத்திற்க்குள் வரும் போதே, கண்டுக் கொண்டான்.
ஆனால், இவனை பார்த்ததும் அவளின் அதிர்ச்சி, திகைப்பு எல்லாம் பெரும் அழுகையும் ஆற்றாமையுமாக மாறியது தான் அவனை குழப்பியது. மிகவும் குழப்பியது… ஆனால், இதற்க்கெல்லாம் சந்தியா தான் காரணம் என்பதை அவன் அறியவில்லை…. அறிந்திருந்தால்???
சீன் வேறு விதமாக மாறியிருக்கும்… ஆனால், கடவுள் என ஒருத்தன் இருக்கிறானே! தன் மதியை வைத்து, விதியை தன் திருவிளையாடலுக்கு பயன் படுத்துவான். இப்போழுது அவன் திருவிளையாடல் ராஜீவ்-ப்ரியங்கா ஜோடியில் நடந்தது!
அதை உணர்ந்தோ உணராமலோ, என்ன யோசித்தும் ஒன்றும் விளங்காமல் அந்த கடவுளிடமே பாரத்தை போட்டுவிட்டு, தன் பணிகளை மேற்க் கொண்டான் ராஜீவ். அடுத்த நாள் தனக்கு இருக்கும் ஆச்சரியங்களையும் அதிர்ச்சிகளையும் தெரியாமல்….
****************************************************************************************************
ப்ரியங்காவிடம் ஓடிய மது, “ஹே! ப்ரியா இங்க பாரு… நான் கேக்குற கேள்விக்கு ஒழுங்கா பதில் சொல்லு… எனக்கு என்னவோ அந்த பொண்ணு பொய் சொல்லிருக்கும்னு தோணுது…”
இதை கேட்டு தன் கண்களை திறந்து, மதுவை ஒரு எதிர்ப்பார்ப்புடன் நோக்கினாள் ப்ரியங்கா. அப்படியும் இருக்குமோ??? ஆனால், தோன்றிய வேகத்திலேயே அந்த எண்ணம் அழிந்தது.
“இல்ல, மது. அந்த பொண்ணு பொய் சொல்லிருக்க மாட்டா. ஏன்னா, அவ ரொம்ப தைரியமா எல்லாத்தையும் பேசினா! அது மட்டுமில்ல, அவ பொய் சொல்ல வேண்டிய அவசியமே இல்லையே? பின்ன, எதுக்கு அவ சொல்லனும்?”
“கத்தி பேசினாலோ, இல்ல தைரியமா பேசினாலோ, பொய் உண்மை ஆகாது ப்ரியா….”
“எனக்கு என்னவோ அப்படி தோணல மது… வேற எதாவது இருந்தா சொல்லு… இல்லனா என்னை கொஞ்ச நேரம் தனியா விடு… ப்ளீஸ்!”
ப்ரியங்காவின் தூயரம் படிந்த முகத்தை பார்த்து, மது எரிச்சலுற்றாள். பிறகு, சொல்ல வந்ததை முழுசாக கேட்காமல் இருந்தாள் அவளுக்கும் கோபம் வராமல், வேறு என்ன வரும்???
“ஹே ப்ரியா… ஃப்ரஸ்ட் நான் சொல்லுறத கேளு… நீ உன்னோட ராம் பைய்யா கிட்ட, ராஜீவ்வை ரொம்ப பிடிக்கும்னு சொன்னல?? அதுக்கு அவரு உன்னை விஷ் தான பண்னாரு! இந்த பொண்ணு ராஜீவ்வை கல்யாணம் பண்ணிக்க போறதா இருந்தா, ராம் ஏன்டி உன்கிட்ட அப்படி சொல்லனும்?
கண்டிப்பா அவருக்கு ராஜீவ் பத்தின மேட்டர் எல்லாம் தெரிஞ்சிருக்கும்… அதனால, தான் அந்த பொண்ணு சொன்னது எல்லாமே பொய்யுனு சொல்றேன். நீயும் யோசி… அப்போ தான் உனக்கும் புரியும்.”
மது சொன்னவுடன் தான் ப்ரியங்காவிற்க்கு ராமின் நினைவே வந்தது… பேசாமல், ராமண்ணாவிடம் கேக்கலாமா, இதை பற்றி என்று சிந்தித்தாள். அடுத்த நாள் அவரை பார்த்து கேட்பதா வேண்டாமா என்று தெளிவாக குழம்பினாள்.
அன்றைய நாள் இப்படியே சென்றது, முடிவெடுக்க முடியாமல்!!! கடைசியில் மதுவே அதற்க்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்தாள். ஆனால், முற்று புள்ளியின் பின்னால், மீண்டும் நிறைய புள்ளிகளை வைத்து அதை தொடர்கதை ஆக்கினாள் ப்ரியங்கா.
“ராஜீவ் அண்ணா கிட்டயே நேரா போய் எல்லாத்தையும் சொல்லிட்டு, அவரையே ஒரு முடிவு கேக்கலாம்! எனக்கு அது தான் கரக்டா படுது.”
மது முடிவாக இப்படி சொல்லவும் ப்ரியங்கா பயந்தே போனாள். ராஜீவ்விடம் நேரடியாக இதை பற்றி கேக்க அவளுக்கு மிகவும் தயக்கமாகவும், பயமாகவும் இருந்தது… ஆனால், மது அவளின் கெஞ்சல்களை காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை….
அடுத்த நாள், ப்ரியங்கா கரவுன்டிற்க்கு போகிறாளோ இல்லையோ மது தான் சென்று ராஜீவ்விடம் பேசப் போவதாக தெரிவித்தாள். ப்ரியங்காவின் அழுகை கூட மதுவை அசைக்கவில்லை… அவள் கூறியது எல்லாம் ஒன்று தான்.
“நீ இப்படியே உட்கார்ந்து இருக்கறது எனக்கு சுத்தமா பிடிக்கல, ப்ரியா. பார்க்கவும் முடியல… அது மட்டும் இல்லை, நீ ராம் கிட்ட இதை பத்தி கேட்டாலும் அவன் திரும்ப பொய் சொல்றானா, இல்லை உண்மைய சொல்றானானு என்னால மண்டையை பிச்சிக்க முடியாது.
அதனால தான் இந்த டெசிஷன் எடுத்தேன். நானே நாளைக்கு ராஜீவ்வண்ணா கிட்ட பேசுறேன். யூ டோன்ட் வொறி!!!”
மது இவ்வளவு கூறிய பிறகும், ப்ரியங்கா எதுவும் சொல்லவில்லை… பேசாமல், இருந்தாள்… தனக்குள்ளே பொங்கி எழும் மன உணர்வுகளை தன்னுள்ளேயே அடக்கி, பொழுது எப்போதடா விடியும் என்று காத்திருந்தாள்.
அடுத்த நாள் காலையும் புலர்ந்தது… விடியும் முன்னரே ப்ரியங்காவும் மதுவும் மைதானத்தில் இருந்தனர் என்று நான் தனியாக வேறு கூற வேண்டுமா?? ப்ரியங்கா தான் எப்போதும் அவரும் கல் பெஞ்சில் மதுவுடன் அமர்ந்தாள்….
அந்த நேரத்தில் தான் அவள் எண்ணங்களின் நாயகனும் கரவுன்டின் உள்ளே வந்தான், ஜாகிங் செய்தபடி!! இவர்களை தூரத்திலேயே கண்டுக் கொண்டான். நேற்று ப்ரியங்கா பண்ணியது ஞாபகத்தில் வந்தது. அதனால், அவர்கள் அருகில் வந்து நின்றான்.
ப்ரியங்கா பேசவே இல்லை, மது தான் பேச்சை ஆரம்பித்தாள். “ஹாய் அண்ணா! குட் மார்னிங்! எப்படி இருக்கீங்க? அப்புறம் நாம இங்கிளிஷ்லயே பேசலாமா? இவளுக்கும் புரியும் பாருங்க”
ராஜீவ் சிரித்து கொண்டே காலை வணக்கத்தை கூறிவிட்டு ஆங்கிலத்தில் பேசினான். “ஓகே… எனக்கு எந்த ப்ராப்ளமும் இல்லை… தென், எதுக்கு நேத்து இவங்க அழுதுகிட்டே போனாங்க? அதுவும் என்னை பார்த்து தான் அழுதாங்க, ரொம்ப!!
எனக்கு ஒண்ணுமே புரியலை….. ப்ளீஸ், சொல்லுங்க என்னாச்சு, ஏன் அழுதீங்க?”
மதுவிடம் ஆரம்பித்தாலும், ப்ரியங்காவை பார்த்து நேரடியாக ராஜீவ் போட்டு தாக்கவும், அவள் செய்வது அறியாமல் திகைத்தாள். மீண்டும் மதுவின் ரீ-என்டிரியே அவளை காப்பாற்றியது, எனலாம். மது நடுவில் புகுந்து, நேற்று நடந்தனவற்றை கூறினாள்.
முக்கியமாக ப்ரியங்கா ராஜீவ்வை லவ் பண்ணுவதை மறைத்துவிட்டாள். அவள் வேண்டும் என்று சொல்லாமல் இருக்கவில்லை. ஆனால், ப்ரியங்கா அழுததற்க்கு மேலே அவளாலும் பேச இயலவில்லை.
ராஜீவ் இதை எல்லாம் கேட்டு மிகவும் அதிர்ந்தான். யார் அது புதிதாக இப்படி எல்லாம் கதை கட்டுவது?? ஆனால், ப்ரியங்கா போல், அவனுக்கு மூளை வேலை செய்யாமல் இருக்கவில்லை… போலீஸ் மூளை அதி வேகமாக தன் பணியை செய்தது.
விளைவாக ப்ரியங்காவை நோக்கி தன் கேள்விகளை வைத்தான். “உங்ககிட்ட வந்து பேசுன பொண்ணு பார்ப்பதுக்கு எப்படி இருந்தா?? இல்ல, வேற ஏதாவது தெரிஞ்சாலும் சொல்லுங்க… நோ ப்ராப்ளம்!!”
ப்ரியங்கா சந்தியாவின் அங்க அடையாளங்களை சொல்ல, ராஜீவ்விற்க்கு ஓரளவிற்க்கு யாராக இருக்க முடியும் என்று அனுமானித்தான்…. போதா குறைக்கு, ப்ரியங்கா அந்த பெண் ஒரு பிங்க் கலர் ஸ்கூட்டியில் கிளம்பினாள் என்று வேறு சொல்ல…
ராஜீவ் ஒரு முடிவுக்கு வந்தவானாக, இவர்களிடம் “எக்ஸ்க்யூஸ் மீ” என்று கூறி, சிறிது தள்ளி சென்று, மொபைலில் யாரையோ அழைத்தான். யாராக இருக்கும் அந்த பெண் தான்!!
இதை பார்த்ததும் ப்ரியங்கா மற்றும் மதுவிற்க்கு ஒரே குழப்பமாக இருந்தது… அவன் முதலில் விசாரித்ததை பார்த்தால், காதலி யாருமில்லை என்றே நினைத்தார்கள். ஆனால், இப்போழுது என்னவென்றால் யாரையோ அழைக்கிறான்???
இவர்கள் குழம்பிய குட்டையில், மீன் பிடிப்பதற்க்குள் ராஜீவ் வந்துவிட்டான்.
நேராக ப்ரியங்காவிடம் வந்து, “வெரி வெரி சாரி ப்ரியங்கா! அந்த பொண்ணு என்னோட கஸின் சந்தியா தான். அவ என்னோட அத்தை பொண்ணு!! சின்ன வயசுல இருந்தே எங்க பாட்டி நாங்க ரெண்டு பேரும் தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு ஒரே பிடிவாதம்.
ஆனா, எனக்கு இதுல இஷ்டம் இல்லை. பட், சந்தியாக்கு என்னை பிடிக்கும். அதனால, இந்த மாதிரி லூசுத் தனமா ஏதாவது செய்வா!! அவ ஏதோ நீங்க இங்க ஜாகிங் வரற்த பார்த்துட்டு தப்பா புரிஞ்சிருக்கா! அவளுக்காக நான் சாரி கேட்டுக்கறேன்… ரொம்ப சாரி! இனிமே அவ உன்கிட்ட பேசவே மாட்டா! ஓகே??”
ராஜீவ் கூறியதை எல்லாம் கேட்டவுடன் ப்ரியங்காவின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை எனலாம்!! ஆனாலும், மனதிலிருந்த கேள்வியை அவனிடம் கேட்டாள், “ஏன் நீங்க சந்தியாவை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்றீங்க?”
“பிகாஸ், நாங்க டெரக்ட் கஸின்ஸ்… சொந்ததுக்குள்ள கல்யாணம் பண்ண கூடாதுல.. அது மட்டும் இல்ல… எனக்கு சந்தியாவை அப்படி யோசிக்க கூட முடியல.. சோ, வேண்டாம்னு சொல்லிட்டேன்!”
அவன் முடிபதற்க்கும் ப்ரியங்கா துள்ளி குதிப்பதற்க்கும், சரியாக இருந்தது. மது அவர்களுக்கு தனிமையை கொடுத்து, சற்று தள்ளி நின்றுக் கொண்டிருந்தாள்.
ப்ரியங்கா குதிப்பதை பார்த்து, வியப்பாக அதிர்ந்தான். ‘என்ன இவ?? லூசா இருப்பாளோ??’ என்று அவன் யோசிக்கும் வேளையில், ப்ரியங்கா அவனிடம் மீண்டும், “அப்போ நீங்க யாரையும் லவ் பண்ணல தான??” கேட்டாள்.
“இல்ல! பட், நீங்க எதுக்கு இவ்ளோ சந்தோஷப் படுறீங்க?”
“பிகாஸ், ஐ லவ் யூ!! ஐ லவ் யூ சோ மச் ராஜ்”
ராஜீவ் முதன் முறையாக சிலையாக நின்றான், இதை கேட்டு!! ‘நிஜமாவே லூசு தான் போல!’ என்று முடிவிற்க்கு வந்தான். இதை அனைத்தையும் இரு விழிகள், ஆக்ரோஷமாக பார்த்துக் கொண்டிருந்தன…..