Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Kangal Verkindrana - 17

  • Thread Author
அத்தியாயம் - 17

ராஜீவ்விற்க்கு தினகரன் கூறியதை உள்வாங்க சிறிது நேரம் பிடித்தது மட்டும்மல்லாமல், உள்வாங்கியவுடன் என்ன செய்வது என்றே புரியவில்லை…. அவனை போய், ஸஸ்பெண்ட் செய்வதா?? ஏன்?? எதற்காக இந்த முடிவு?

யோசித்த அடுத்த நிமிடம், பூங்காவில் நடந்தது கண் முன் சென்றது!! அவன் தண்டிக்கப் பட்டுவிட்டான்… யாரால் எல்லாம் அந்த ப்ரியங்காவால்!! அதன் பின், ஒரு நிமிடம் கூட ராஜீவ்வால், அங்கே நிற்க முடியவில்லை!

“சார்… நான் கிளம்பறேன்… நீங்க கவுதம் கிட்ட... “ அவனின் துக்கம் புரிந்துக் கொண்டது போல, தினகரனும் மேற்கொண்டு விவாதிக்கவில்லை. “நான் கவுதம் கிட்ட எல்லாத்தையும் பேசிக்கறேன். நீ கிளம்பு ராஜீவ்.”

கண்களை மீறி எங்கே கண்ணீர் வழிந்து விடுமோ, என்று யாரின் முகத்தையும் பார்க்காமல், ராஜீவ் தன் காரை நோக்கி ஓடினான். விட்டால் போதும் என்று அவன் சென்றதை பார்த்து, தினகரனுக்கும் கவுதமிற்க்கும் பாவமாக இருந்தது.

ராஜீவ் சிறிது நேரம் தன்னை ஆசுவாசப்படுத்த எண்ணி, காரில் கண் மூடி அமர்ந்தான்… ஆனால், உள்ளம் சிறிதும் அடங்காமல் கொதிக்கும் நீரை போல் பொங்க, நேரே தன் வீட்டிற்க்கு காரை செலுத்தினான்.

வீட்டை அடைந்ததும் நேரே தன் அறைக்குள் போக முயன்றான் அவன். ஆனால், அவனால் முயல மட்டுமே முடிந்தது… ஏன்னென்றால், அவன் குடும்பத்தினர் அவனை சூழ்ந்துக் கொண்டனர்.

நிஷா மட்டுமே காலேஜுக்கு சென்றிருந்தாள். மற்றப்படி ராஜேந்திரன், கீதா மற்றும் அவன் தாத்தா ஈஷ்வர் அனைவரும் அவன் வருகைக்காக ஹாலிலேயே உட்கார்ந்து இருந்தனர்.

கவுதம் அவர்களுக்கு தகவல் அனுப்பி இருந்தான். போதாதற்க்கு டிவிலேயே நிமிடத்திற்க்கு ஒரு முறை அந்த வீடியோவை போட்டு காண்பித்தனர். அப்போதிலிருந்து ராஜீவ்வின் மொபைலுக்கு அழைத்து அழைத்து, கலைத்து போனார் ராஜேந்திரன்.

அதானாலேயே அவனை வழி மறித்து கேள்விக் கனைகளை வீசினர். “டேய், ராஜீவ்… என்னடா நடந்துச்சு? உனுக்கு ஒன்னும் இல்லையே?” இது கீதா.

“ராஜீவ் ஏன் ஒரு மாதிரி இருக்க?? என்னாச்சு? எதுவா இருந்தாலும் சொல்லுடா…” ராஜேந்திரனின் பதற்றம் அவரின் குரலின் பரிதவிப்பில் வெளிப்பட்டது, அப்பட்டமாக.

ஈஷ்வர் பேரனின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்… அவன் தன் உணர்வுகளை அடக்க போராடுவது நன்றாக தெரிந்தது அவருக்கு. அதனால், தன் பிள்ளையை அடக்கினார்.

“ராஜேந்திரா, அவனை கொஞ்சம் நேரம் உட்கார விடுங்கப்பா… அப்புறம் உங்க கேள்விய கேளுங்க! பாவம் புள்ள… ரொம்ப களைச்சு போயிருக்கான்!!”

அவர் கூறியவுடன் ராஜீவ்வை அமர வைத்தனர் சோபாவில். பின், சிறிது தண்ணீர் குடுத்தனர்… ஆனால், ராஜீவ் அதை வாங்க கூடவில்லை. ஏதோ விபரிதம் என்று புரிந்தது வீட்டினருக்கு. அவனே சொல்லட்டும் என்று அமைதிக் காத்தனர்.

சில நிமிடங்களில், ராஜீவ்வே கீதா பார்த்து, “அம்மா! என்னை ஸஸ்பெண்ட் பண்ணிட்டாங்கமா!!” என்றான் ஒரு விவரிக்க முடியாத குரலில். கேட்ட அனைவருக்கும் ஷாக் அடித்தது போல் இருந்தது.

டிவியில் காட்டும் செய்திகளை பார்த்தே அதிர்ந்து இருந்த அவர்களை, இது மேலும் புதைக் குழிக்குள் தள்ளியது போல் இருந்தது. ஒரு அழுத்தமான குரலில் நடந்ததை கூறினான் ராஜீவ்.

அவனால் உணர்வுகளை உள்ளேயே அடைத்துக் வைக்க இயலவில்லை. அதனால், தன் குடும்பத்தாரிடம் பீறிட்டு வந்தது வாக்கியங்கள்….

முடிக்கும் தருவாயில், “எல்லாமே…. எல்லாமே அந்த ப்ரியங்காவால தான் ஆச்சு!!! அவளை என்ன பண்றேன் பாருங்க…”

சொல்லிவிட்டு வீட்டின் வாசலை நோக்கி, நடக்க ஆரம்பித்தான் ராஜீவ். அவன் போன வேகத்தை பார்த்தால், ப்ரியங்காவை ஓங்கி ஒரு அறை விட்டுருப்பான் போலும்! ஈஷ்வர் தான் கைப் பிடித்து நிறுத்தினார்!! “எங்க போற ராஜீவ்?? அந்த பொண்ணு பண்ணது தப்பு தான். உன்னோட கோபம் கூட கரக்ட் தான்.

ஆனா, இப்போ அவளை போய் பார்க்காத! தேவையில்லாத பிரசன்னை தான் வரும்! அதனால….”

“என்ன பிரசன்ன வந்தாலும் பரவாயில்ல தாத்தா! நான் இன்னிக்கு அவளை பார்த்திட்டு தான் வருவேன் தாத்தா! நான் ஸஸ்பெண்ட் ஆகிருக்கேன்… இதுக்கு மேல என்ன நடக்கனும்? யாரும் எதுவும் சொல்லாதீங்க. நான் கேக்க மாட்டேன்!”

திட்ட வட்டமாக சொன்ன ராஜீவ்வின் முகத்தையே பார்த்த ராஜேந்திரன் என்ன நினைத்தாரோ?? ராஜீவ்வின் கைகளை பற்றி, “சரி நீ போ… யாரும் தடுக்கல! ஆனா, நானும் உன் கூட வருவேன். சரியா?” என்றார்.

ராஜீவ்வின் தலை தானாக அசைந்தது! அவனுக்கும் துணைக்கு ஆள் தேவைப்பட்டதோ? தன்னை நேசிக்கும் ஒருவர் பக்கத்திலேயே இருப்பது யாருக்கு தான் திடத்தை கொடுக்காது??

ஆனால், தன்னை நேசிக்கும் இன்னொரு ஜீவன், தான் செய்த்தை எண்ணி மறுகிக் கொண்டிருப்பதை அறியாமல், அந்த ஜீவனையே திட்டுவதற்கென்றே தன் அப்பாவுடன் கிளம்பிச் சென்றான் ராஜீவ்…

***************************************ப்ரியங்காவின் வீடு***************************************

தன் முகத்திலேயே இனி முழிக்க வேண்டாம், என்று ராஜீவ் கூறியதை பொறுக்க முடியாமல் ஓவென்று மீண்டும் தன் ஒப்பாறியை ஆரம்பித்தாள் ப்ரியங்கா.

ஓரளவிற்க்கு மேல் அவளையும் திட்ட முடியாமல், மதுவும் அவளை சமாதானப்படுத்தினாள். என்ன செய்வது தோழி ஆகிற்றே??

அப்படி சமாதனப்படுத்தும் போது தான், டிவியில் ராஜீவ் ஸஸ்பெண்ட் ஆகியிருப்பதை, தினகரன் மீடியாகளிடம் பேட்டி அளித்துக் கொண்டிருந்தார். பார்த்த ப்ரியங்கா செயலற்று இருந்த வேளையில், வீட்டின் காலிங் பெல்லை யாரோ வேகமாக அழுத்தினர்.

மது யாரென்று பார்க்க, எழுந்து கதவை திறக்க, புயலாக உள்ளே வந்தான் ராஜீவ். தன் தந்தையுடன் தான்! ப்ரியங்காவிற்க்கு ஒன்றும் விளைங்கவில்லை… திருதிருவென அவள் முழித்ததை பார்த்து, ராஜீவ்வின் கோபம், சென்னை வீடுகளுக்குள் வெள்ளம் எவ்வளவு வேகமாக ஏறியதோ அதே போல் ஏறியது!!!

டிவியை நோக்கி கை காட்டி, “பார்த்தியா?? போதுமா உனக்கு? இல்ல இன்னமும் நான் அசிங்கப்படனுமா? எப்படி உன்னால இப்படி என்னை ஏமாத்த முடிஞ்சது??

லவ் பண்றேனு சொல்லிட்டு, பின்னாடி சுத்திட்டு ஏமாத்துற பசங்கள தான் பார்த்துருக்கேன்… ஃபர்ஸ்ட் டைம், ஒரு பொண்ண பார்க்கறேன்!!! நல்லா ஏமாத்துனடி!! சே, உன்கிட்ட பேசக் கூட பிடிக்கல எனக்கு…”

தன் கையை ஓங்கி சுவற்றில் முட்டிக் கொண்டான் ராஜீவ். ராஜேந்திரன் தான் அவன் தோளில் கை போட்டு அமைதிப்படுத்த முயன்றார். அந்த அடி தன் கன்னத்தில் இறங்கியிருக்க வேண்டியது, என புரிந்தது ப்ரியங்காவிற்க்கு!

இதை எல்லாம் கேட்டு அவளுக்கு எப்படி தான் மாரடைப்பு வராமல் இருந்ததோ!! அந்த கடவுளுக்கே வெளிச்சம்… ராஜீவ்வின் ஒவ்வொரு சொல்லும் அவளை கொல்லாமல் கொன்றது! மதுவின் கைகளை பிடித்துக் கொண்டு, கண்களில் பெரும் வலியுடன் தன் காதலனை நோக்கினாள்…

அவனோ இவளை பார்ப்பது கூட பாவம் என்பது போல, முகத்தை திருப்பினான்.

அந்த நிமிடம் தான் செய்ததை எண்ணி மிகவும் மறுகினாள், ப்ரியங்கா. உள்ளத்தின் மறுகல், கண்களில் கண்ணீரை வாரி இரைத்தது.

நடப்பது அனைத்தையும் மௌனமாக பார்த்துக் கொண்டிருந்த மது, முதன் முதலாக தன் வாயை திறந்தாள். “அண்ணா, அவ எதோ தெரியாம பண்ணிட்டாணா! ப்ளீஸ், கொஞ்சம்….”

மது முடிக்கவில்லை, அதற்குள் ராஜீவ்வின் பிபி மீண்டும் எகிறியது! “ஹே… நீ இவளுக்கு சப்போர்ட் பண்ணாத சொல்லிட்டேன்! அப்புறம் உன்னையும் எதாவது சொல்லிட போறேன்!! சே…. கொஞ்சம் கூட அறிவே இல்லாத லூசு தான் உன்னோட ஃபிரண்டு… அவ தெரியாம பண்ணிட்டாளாம். நான் எல்லாத்தையும் மறந்து மன்னிச்சிடனுமாம்!

நீ பேசாம இரு… அப்புறம் கெட்ட வார்த்தைல எதாவது திட்டிட போறேன்!”

இதற்க்கு மேல், என்ன பேசுவது! ராஜேந்திரன் ராஜீவ்வை எவ்வளவு தான் அடக்க முயன்றாலும், அவனின் கோபம் யாரையும் மதிக்கவில்லை! தன் அப்பா உட்பட…

ப்ரியங்காவிடம் மீண்டும் திரும்பி, ஒரு எச்சரிக்கை விடும் முகபாவத்துடன் பேசலானான், ராஜீவ். “இங்க பாரு! இது தான் உன்னை நான் பார்க்குறது கடைசியா இருக்கனும்… இதுக்கும் மேல எதாவது ஏடாகூடமா பண்ணி, என்னை டிஸ்டெர்ப் செஞ்சனா, நான் சும்மா இருக்க மாட்டேன் சொல்லிட்டேன்!

அந்த கரவுன்டுக்கு கூட நீ வர கூடாது… மீறி வந்தனா, ஒழுங்கா வீடு வந்து சேர மாட்ட! புரிஞ்சுதா??” அவன் கூறீயது பாதி தான் மண்டையில் ஏறினாலும், தலையை புரிந்தது போல, அசைத்தாள் ப்ரியங்கா.

ராஜேந்திரனை கூட்டிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தான் ராஜீவ். ப்ரியங்காவை திட்டினாலும் மனது அமைதி ஆகவில்லை! எப்படி ஆகும்? பல வருட கனவு நிஜமாகி, அவன் ஐ.பி.எஸ் ஆனது இது போல, பணி நீக்கம் செய்யப்படவா??

யார்விட்ட சாபமோ, நிஜமாகியது போல உணர்ந்தான் அவன்…. அன்று முழுக்க அவனும் அவன் குடும்பத்தினரும் வெளியே தலை காட்ட முடியாமல் போனது. அப்போதும் போனில், அழைத்து வம்படியாக அவனின் ஸஸ்பென்ஷன் பற்றி கேட்டனர் சிலர்.

இப்படி இங்கே சோகத்தில் வீடே மூழ்கியிருக்க, அதற்க்கு சற்றும் குறையாமல் இன்னொரு வீடும் துயரப்பட்டது! அது ப்ரியங்காவின் வீடு இல்லை… சந்தியாவின் வீடு!!

ப்ரியங்காவும் ராஜீவ்வும் இருக்கும் வீடியோ, நியூஸ் சேனலில் மட்டும் அல்லாமல், சமூக வளைத்தளங்களிலும் தீயாக எல்லோரும் பகிர்ந்ததில், சந்தியாவிற்க்கே வந்தது அந்த வீடியோ! சந்தியாவின் கண்கள், ராஜீவ் ப்ரியங்காவை காப்பாற்றியதில் நிலை குத்தி நின்றது.

இதில் நியூஸ் சேனலில் வேறு இதை அக்கு வேறு ஆணி வேறாக அலசியதில், அவள் மனதில் ராஜீவ்வின் மேல் இருந்த காதல் என்னும் பித்து, தன் நிறம் இழந்து போனது!

அன்று அவள் அழுத அழுகை அவள் வாழ் நாளிலேயே மறக்க முடியாதது… ராஜீவ் தன்னை இப்படி ஏமாற்றுவான் என துளியும் எதிர்பார்க்காதலால், வலி கொஞ்சமல்ல நிறையவே இருந்தது அவளுக்கு!!!

சந்தியாவின் வீட்டிலும் எல்லோரும் கவலைக்குள்ளாகினர்… அதிலும், ராஜீவ் மற்றும் சந்தியாவின் பாட்டி தையல்நாயகி, தன் எண்ணம் ஈடேறாமல் போனதால், புலம்ப ஆரம்பித்தார்.

“என்னென்னவோ நினைச்சிருந்தேனே!! கடைசியில, இந்த பையன் இப்படி பண்ணிபுட்டானே… ஈஷ்வரா! இப்போ எப்படி நான் இவளுக்கு அவனை கல்யாணம் பண்ணி வைப்பேன்?? ஊரே கேள்வி கேக்குமே? நான் என்ன பண்ணுவேன்??

எல்லாம் என்னோட தலையெழுத்து… இதுக்கும் மேல, என்ன எல்லாம் நான் பார்க்க வைச்சுருக்கானோ ஆண்டவன்!”

அடுத்த நாளும் அவரின் புலம்பல் தொடர, அது சற்றே எல்லை மீறிய சமயத்தில் சந்தியா கத்த ஆரம்பித்தாள். அவளின் சத்தத்தை கேட்டு அங்கே வந்த தன் பெற்றோர்களை பார்த்து அவளின் முடிவை கூறவும் செய்தாள்.

“சும்மா கத்திட்டே இருக்காத பாட்டி!!! எரிச்சலா வருது…. அப்பா, இப்போ சொல்றேன் கேட்டுக்கோங்க.. நான் ராஜீவ்வை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்… திஸ் இஸ் ஃபைனல் டெசிஷன்! எனக்கு வேற மாப்பிள்ளை உடனே பாருங்க…

நான் கல்யாணம் பண்ணிக்க ரெடி! நீங்க யார சொன்னாலும் பண்ணிக்கறேன்பா… சீக்கிரமா பாருங்க…”

சொல்லிவிட்டு, தன் அறைக்குள் சென்று கட்டிலில் விழுந்து கதறினாள். அவளை பொறுத்தவரை ராஜீவ்வின் அத்தியாயம் அவள் வாழ்க்கையில் முடிவுக்கு வந்தது. எல்லோரும் அவனை இன்னொரு பெண்ணுடன் பார்த்ததால் மட்டுமல்ல இந்த முடிவு!

தான் அவனிடம் ப்ரியங்காவை பற்றி விசாரித்த போது கூட பொய் கூறி தன்னை ஏமாத்தியதை தான் அவளாள் தாங்க முடியாமல், போயிற்று… அதனால், மூளையில் உட்கார்ந்து அழுதுக் கொண்டே இருந்து தன் வாழ்க்கையை வீணாக்க அவள் தயாராக இல்லை…

யார் தன்னை ஏமாற்றினார்களோ, அவர்கள் முன் நன்றாக வாழ்ந்துக் காட்டவே ஆசைப்பட்டாள்…. அதனால், தான் மாப்பிள்ளை பார்க்க சொன்னாள். அப்படி அவள் தந்தை சேகர் அவளுக்காக பார்த்த மாப்பிள்ளை தான் அர்ஜுன்!

அவனும் அவளின் இன்னொரு முறை பையன் தான்…. எல்லாம் சரியாக சென்றுக் கொண்டிருந்த வேளையில், ராஜீவ் மீண்டும் குறுக்கே வந்தான்….. அதற்காக நன்றாக வாங்கிக் கட்டியும் கொண்டான்.. சந்தியாவிடமிருந்து அல்ல, அர்ஜுன் இடமிருந்து!!
 
Top