Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Kangal Verkindrana - 18

  • Thread Author
அத்தியாயம் - 18

அர்ஜுன்…. சந்தியாவிற்க்கு ராஜீவ் எப்படி அத்தை மகனோ, அது போல அர்ஜுன் மாமன் மகன்! அர்ஜுனிற்க்கு சிறு வயதிலிருந்தே சந்தியாவை மிகவும் பிடிக்கும்… சந்தியா பார்க்க அழகாக இருந்த காரணமா, இல்லை அவள் எல்லோருடன் பழகும் பண்பா, தெரியவில்லை. ஆனால், பிடிக்கும்!

அதுக்கு நேர் எதிராக சந்தியாவிற்க்கு, ராஜீவ்வை தான் மிகவும் பிடித்தது. அவர்களுக்கு தெரியாமலே, ஒரு மூக்கோண காதலில் மூவரும் சிக்கினர். இதற்க்கெல்லாம் காரணம் தையல்நாயகி! ஆம், ராஜீவ்வின் தாய் வழி பாட்டி மற்றும் சந்தியாவின் தந்தை வழி பாட்டியான அவரே, சந்தியா - ராஜீவ்வின் கல்யாணத்தை பற்றி பேசினார்.

அதுவும் எப்போது? சந்தியா கைக்குழந்தையாக இருந்த போது!!! அதுவே, சந்தியாவை ராஜீவ்வின் மேல், காதலில் விழ வைத்தது. தன் பேரக் குழந்தைகளை தம்பதிகளாக பார்க்க ஆசைப்பட்ட அந்த நெஞ்சம், ஏனோ அவர்களின் விருப்பத்தை கருத்தில் கொள்ளவே இல்லை!

இன்னொரு ஜீவனின் கருத்தையும் கண்டுக்கொள்ளவில்லை. சிறுவனாக இருந்த போது, அர்ஜுன் சந்தியாவை பார்க்கும் பார்வையிலேயே அவனின் மனது அவருக்கு புரிந்தது தான். ஆனால், அதை அவர் அறவே வெறுத்தார்.

ராஜீவ் இருக்கும் இடத்தில் இவனை வைத்துப் பார்க்க, அவர் மனம் ஒப்பவில்லை, என்பது ஒரு புறம் இருந்தாலும், அர்ஜுனின் குடும்பமும் அந்த அளவிற்க்கு சொல்லிக் கொள்ளும்படி பொருளாதாரத்தில் இல்லை…

அதனால், சந்தியாவின் அம்மாவும் பெரிதாக ஆசைகளை வைத்துக் கொள்ளவில்லை. எப்படியும் தன் மாமியார் இருக்கும் வரை இது நடக்கபோவதில்லை… வீணாக ஏன் ஆசை வளர்த்துக் கொள்ள வேண்டும்??

இவர்களின் மனதில் எண்ணங்கள் இப்படி இருக்க, அர்ஜுன் கொஞ்சம் வளர்ந்து, பருவ வயது அடைந்தவுடன், சந்தியாவின் மனது புரிந்து, தன் விருப்பத்தையும் குழி தோண்டி புதைத்துவிட்டான்….

ஆனால், விதி என்னும் விளையாட்டில் கடவுள், இவர்களை எல்லாம் க்ளீன் போல்ட் ஆக்கினார். ராஜீவ்வை வேண்டாம் என, சந்தியா கூறியவுடன் தையல்நாயகியின் மூளை மீண்டும் விழித்துக் கொண்டது. வேறு யாரை கல்யாணம் செய்து வைப்பது, இவளுக்கு, என யோசித்தவரின் மன விழியில் வந்தது, அர்ஜுனின் மூகம்.

தாமதமே செய்யாமல், தன் எண்ணத்தை சந்தியாவின் தந்தையான சேகரிடம் சொன்னார். சேகர் சிறிது நேரம் சிந்திக்க, சந்தியாவின் தாய் பத்மா, தான் பொங்கினார். “எப்படி அத்தை, இப்போ போய் உங்க பையன கல்யாணம் பண்ணிக் குடுங்கனு கேக்க முடியும்?

நாம சந்தியாக்கு ராஜீவ்வை பேசின விஷயம் அவங்களுக்கு நல்லாவே தெரியும்…. அப்புறம் எப்படி?” இதை கேட்டதும், தையல் நாயகிக்கு கோபம் வந்தது.

“பின்ன, இவ எல்லார்கிட்டயும் ராஜீவ்வ தான் கல்யாணம் பண்ணிப்பேனு சொல்லிருக்கா. வேற யார்கிட்ட போய் கல்யாணம் பேச முடியும்? அர்ஜுன் என்ன தான் இருந்தாலும் உன்னோட அண்ணன் பையன். நெருங்கின சொந்தம் வேற. அது மட்டுமில்ல, அவனுக்கு நம்ம சந்தியாவ ரொம்ப பிடிக்கும்.

அதனால, தான் சொல்றேன் அவனையே பேசி முடிங்க… என்ன சேகரா, சரி தான?” அந்தர் பெல்டி மற்றும் சமர் பெல்டியும் சேர்த்து அடித்தார், தையல்நாயகி.

தாயின் அதட்டலில், சிறு பிள்ளை போல், தலையசைத்தார் சேகர். சந்தியாவிடமும் இதை பற்றி கூறினர்… எப்படியும் தனக்கு மாப்பிள்ளையாக வரப்போறவனிடம், தன் சோக கதையை கூறத்தான் இருந்தாள். இப்போது அந்த வேளை மிச்சம்…

அர்ஜுனுக்கும் தன்னை பிடிக்கும் என்று நன்றாகவே அறிவாள் சந்தியா. அதனால், காலம் காலமாக படத்தில் காட்டுவது போல், தான் விரும்புபவனை விட, தன்னை விரும்புபவனே மேல் என யோசித்து, சந்தியா திருமணத்திற்க்கு ‘ஓகே’ கூறினாள்.

அர்ஜுனின் வீட்டில், முதலில் தயங்கினர் அர்ஜுனின் பெற்றோர்… ஆனால், அர்ஜுனின் ஆவலான முகத்தை பார்த்து, சம்மதித்தனர். இப்படியே, அர்ஜுன் - சந்தியா திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

அது ராஜீவ்வின் வீட்டிற்க்கு சொல்லப்படவும் இல்லை. ‘ஆல் இன்டியா ரேடியோ’ என பட்டப்பெயர் கொண்ட ஒரு உறவினர், இந்த விஷயத்தை ராஜீவ்வின் வீட்டிற்க்கு தெரியப்படுத்தினார்.

கேட்டதும் மிகவும் அதிர்ந்தது இரண்டு பேர். ஒன்று கீதா… தன் பிறந்த வீட்டு சொந்தம் தன்னை இப்படி ஒதுக்கியதே, என வருத்தம் கொண்டார்… இன்னொன்று ராஜீவ். சொந்தத்திற்க்குள் திருமணம் கூடவே கூடாது, என சொல்பவன் வீட்டிலேயே அப்படி ஒரு திருமணமா??

இதை கண்டிப்பாக தடுத்தே ஆக வேண்டும், என மனதில் குறித்துக் கொண்டான். அதற்க்கான சந்தர்ப்பமும் அடுத்த இரண்டு வாரங்களிலேயே கிடைத்தது. ஸஸ்பெண்ட் ஆன முதல் ஒரு வாரம் வீட்டிலேயே முடங்கியவன், இது வேளைக்கு ஆகாது என்று வெளியே சுற்ற ஆரம்பித்தான்.

அப்படி தான் ஒரு நன்பகலில், ஹோட்டலில் மதிய உணவை முடித்து பில்லுக்காக காத்திருந்த நேரத்தில் அதே ஹோட்டல் வெளியே கார் பார்க்கிங்கில், இருந்த அர்ஜுன் கண்ணில் பட்டான். சீக்கிரமாக பில்லை கட்டிவிட்டு, அர்ஜுனை நோக்கி சென்றான்.

இவனை பார்த்ததும், என்ன செய்வது என்று ஒரு நிமிடம் யோசித்த அர்ஜுன், ஒரு புன்னகை கூட புரியாமல், தன் காரை நோக்கி செல்ல ஆரம்பித்தான். அவனுக்கு சந்தியாவை ராஜீவ் நம்ப வைத்து, ஏமாற்றியது கோபமாக உருவெடுத்தது.

ஆனால், ராஜீவ் அவன் அருகில் சென்று வழி மறித்து, பேச்சை, சாரி சாரி சண்டையை ஆரம்பித்தான். “ஹாய் அர்ஜுன்… எப்படி இருக்க?”

“ஹம்ம்ம், நல்லா தான் இருக்கேன்” அர்ஜுனின் குரலில் இருந்தே அவன் பேச விரும்பவில்லை, என புரிந்துக் கொண்டான்.

இருந்தாலும், சும்மா போற சனியனை தூக்கி பனியனுக்குள் போட்ட கதையாய், அர்ஜுனிடம் மேலே பேசலானான். “அப்புறம் உனக்கும் சந்தியாக்கும் மேரேஜ் பிக்ஸ் ஆகியிருக்கு போல?”

“ஆமா, அடுத்த மாசம்!” ‘ஒற்றை வார்த்தையில் பதில் அளிக்கவும்’, என்று யாரோ அர்ஜுனிடம் சொன்னார்கள் போலவும். அவன் பதில் அப்படியே இருந்தது. ராஜீவ்வாவது விடுவதாவது??

“அர்ஜுன், சொல்றேன்னு தப்பா எடுத்துக்காத! இது ராங் டைமிங்கா கூட இருக்கலாம்… பட், இப்போ தான் என்னால சொல்ல முடிஞ்சது… “ இதற்க்குள் என்னவோ எக்குத் தப்பாக தான் சொல்லப் போகிறான், என்ற முடிவுக்கு வந்தான் அர்ஜுன்.

“சொந்ததுக்குள்ள கல்யாணம் பண்றது நல்லதில்லை அர்ஜுன். நம்ம பின்னாடி வர ஜென்ரேஷன் தான் பாதிக்கப்படுவாங்க. உனுக்கே இது தெரிஞ்சுருக்கும். அப்புறம் ஏன் இப்படி பண்ற?? ப்ளீஸ், இந்த கல்யாணத்தை நிறுத்திடு….”

ராஜீவ் முடிக்க கூடவில்லை, அதற்க்குள் அர்ஜுனின் கை ராஜீவ்வின் சட்டையை பிடித்தது. “என்னடா நினைச்சுட்டு இருக்க? நீ என்ன வேண்ணா பேசுவியா? முதல்ல சந்தியாவ ஏமாத்துன. இப்போ என்கிட்ட வந்து டிராமா பண்றயா?

நீயும் கல்யாணம் பண்ணிக்க மாட்ட!! நானும் அவளை கல்யாணம் பண்ணக் கூடாது!! அப்புறம் யார் தான்டா பண்றது??”

“நானே சந்தியாவுக்கு நல்ல மாப்பிள்ளையா, பார்க்கறேன் அர்ஜுன்…”

“சீ.. வாய மூடு! உனுக்கு வேணும்னா, அவள பிடிக்காம இருக்கலாம். பட், எனக்கு சந்தியா தான் எல்லாமே! நான் அவளை தான் கல்யாணம் பண்ணிப்பேன்… உன்னால என்ன செய்ய முடியுமோ, செஞ்சிக்கோ!”

கைகளை உதரிவிட்டு, ராஜீவ்வை முறைத்து பார்த்து, தன் காரை எடுத்து பறந்தான் அர்ஜுன். ஒரு நீண்ட பெருமூச்சுடன் ராஜீவ் போகும் காரையே வெறித்தான்….

ராஜீவ்வின் மனதிற்க்குள் ஏதோ அபாய மணி அடித்துக் கொண்டே இருந்தது! அவர்கள் திருமணம் நடக்கும் வரையிலும்! இதற்க்கு நடுவில், ஒரு கோவிலில் ஈஷ்வர் தாத்தா, ப்ரியங்காவை எதர்ச்சையாக சந்தித்தார். தன் வீட்டிற்க்கு அவள் பெற்றோர்களை கூட்டி வந்து, பேசும்படி அவரே ஐடியா குடுத்தார்…

கோபம் தான் என்றாலும், வேண்டா வெறுப்பாக சேகர் தன் தங்கையின் குடும்பத்தாரை அழைத்தார். அன்று ப்ரியங்கா தன் பெற்றோர்களை கூட்டிக் கொண்டு ராஜீவ் வீட்டிற்க்கு கல்யாணம் பேச வந்த தினம், ராஜீவ்வின் வீட்டு ஆட்கள் சென்ற திருமணம் அர்ஜுன் – சந்தியா திருமணமே!!

அதன் பின், நடந்தது உங்கள் அனைவருக்கும் நன்றாகவே தெரியும்… இப்போது இதை எல்லாம், யோசிக்கும் போது தான், தான் எவ்வளவு பெரிய தவறு செய்திருக்கிறோம், என்று புரிந்தது ப்ரியங்காவிற்க்கு. இப்போது ராஜீவ் தன் முகம் பார்த்து பேசுவதே, பெரிய விஷயம் போல், தோன்றியது!

இப்படி யோசித்தப்படியே தூங்கிப் போனாள், நம் நாயகி! அதனால், அடுத்த நாள் கொஞ்சம் அடக்கியே வாசித்தாள். காலையில், அவள் முழித்த போது, ராஜீவ் சமையல் அறையில், எதையோ உருட்டிக் கொண்டிருந்தான்.

இவள் போய் நின்றதும் ஒரு புன்னகையுடனே பேசினான் அவள் மணாளன். “அப்பாடி! எழுந்துட்டியா? உன்னை காபி போட சொல்லலாம்னு பார்த்தா, என்ன இப்படி தூங்கற?”

ராஜீவ் பேசியதை கேட்டு சிரித்துவிட்டு, “குட் மார்னிங்! நல்லா தூங்கிட்டேன். நான் காபி பண்றேன்… பெர்த்டே பாய் நீங்க போங்க…“ என்றாள். அதன் பின், நிறைய பேச்சின்றி இருவரும் குளித்துக் கிளம்பினர். டிபன் சாப்பிடும் வேளையில், ப்ரியங்கா கோவில் செல்ல வேண்டும் என்றாள்.

சிறிது நேரம் யோசித்துவிட்டு, ஓகே என்றான் ராஜீவ். சாப்பாடு முடிந்து, கோவில் சென்று ராஜீவ்வின் பெயரில் பூஜையும் செய்துவிட்டு, திரும்ப ப்ரியங்காவை ப்ளாட்டில் விட்டான் ராஜீவ்.

“இங்க பாரு… உனக்கு என்னோட வேலை பத்தி சொல்ல என்னால முடியாது. ஆனா, இப்போ நிலைமை கொஞ்சம் சரியில்ல.. அதனால, ராணி ஜான்சி மாதிரி வெளியே கிளம்பாம ஒழுங்கா வீட்டிலயே இரு! புரியுதா?”

அவன் கூறியதை ஒரு ஆயாசமான முகத்துடன் கேட்டுவிட்டு, மண்டையை பூம்பூம் மாடு போல், ஆட்டினாள். ‘சரியான மைதா மாவு’ என்று மனதிற்க்குள் கொஞ்சிக் கொண்டு(!), அவனை அறியாமலே ஒரு இளகிய புன்னகையுடன் சென்றான், ராஜீவ்.

தன்னை தன் கணவன் ரசிக்கிறான், என்று அறியாமலே ப்ரியங்கா, தன் வேலைகளை கவனிக்க சென்றாள். எடுத்து வந்த ஒரு சில பொருட்களையும் அடுக்கி கொண்டு, ராஜீவ்வின் வருகைக்காக காத்திருக்க ஆரம்பித்தாள்.

தான் திரும்பி செல்ல வேண்டிய பிளைட், ஈவ்னிங் தான் என்பதால் தன் பிறந்த வீட்டாருக்கும் புகுந்த வீட்டாருக்கும் கால் செய்து பேசி நேரத்தை போக்கினாள். காலையில் இருந்து நெஞ்சில் ஏதோ நேருடல், இருந்துக் கொண்டே அவளை இம்சித்தது… அவனை திரும்ப பிரியப்போகிறோம் என்ற நிலையா? அவளுக்கே தெரியவில்லை!

தன் வீட்டாரிடம் பேசிய போதும், அது குறைந்தப் பாடில்லை… இப்படியே, அவள் யோசித்தப்படி இருக்க, ராஜீவ் சரியாக மூன்று மணிக்கு வந்து, அவளை ஏர்போட்டுக்கு கூட்டிச் சென்றான். காரில் செல்லும் நேரத்திலும், ப்ரியங்கா அமைதியாக வர, ராஜீவ்விற்க்கு அவளை சீண்ட ஆசை வந்தது…

“என்ன மேடம், ரொம்ப அமைதியா இருக்கீங்க காலையிலிருந்து? எதாவது புதுசா ப்ளான் பண்றீயா என்ன?” திரும்பி அவனை முறைத்துவிட்டு, மீண்டும் சாலையை நோக்கினாள் ப்ரியங்கா.

“ஹோ!! முறைக்கறத பார்த்தா, வேற என்னவோ இருக்கு போல…. என்ன ப்ரியங்கா, எதாவது பேசு… ஒண்ணு பேசுனா, ரொம்ப பேசுற! இல்லனா பேசவே மாட்டுற… வொய்??”

“பச்! அதெல்லாம் ஒண்ணுமில்ல…”

ப்ரியங்காவின் சலிப்புற்ற குரலில், ராஜீவ்வின் புறுவம் சுருங்கியது. அவன் அறிந்த ப்ரியங்கா, இது போல் இருக்க மாட்டாளே? என்னாச்சு இவளுக்கு? சிந்தனையுடனே அவளை உள்ளே அழைத்து சென்றான். இதற்க்கு மேல், செல்ல முடியாது என்ற நிலையில், தன் அட்வைஸ் மழையை ஆரம்பித்தான் ராஜீவ்.

“போய் சேர்ந்ததும் ஃபோன் பண்ணு எனக்கு, ஓகே வா? அப்பா வந்து உன்னை கூட்டிட்டு போக சொல்லிருக்கேன். பார்த்து பத்திரமா போ!! அப்புறம்… ஹே! என்னாச்சு?”

ராஜீவ் ‘என்னாச்சு’ என்று கேட்டதிற்க்கு காரணம், ப்ரியங்கா அவனை கட்டிக் கொண்டு மெலிதாக தேம்ப ஆரம்பித்தாள். ஏர்போர்ட்டில் இது சகஜம் என்பதால், யாரும் அவர்களை ஊற்று நோக்கவில்லை. ராஜீவ்வையும் அறியாமல், அவன் கை அவளை அணைத்துக் கொண்டு அவளை தேற்ற ஆரம்பித்தது.

“என்னால அங்க தனியா இருக்க முடியல, ராஜ்… உன்னோட மேமரீஸ் தான் ரொம்ப வருது எனக்கு! நான் நிறைய தப்பு பண்ணிட்டேன் தான்… நேத்து எல்லாத்தையும் யோசிக்கும் போது தான் புரிஞ்சிச்சு எனக்கு! அப்போ நான் தப்புக்காக ஃபீல் பண்ணதை விட, இப்போ ரொம்ப ஃபீல் பண்றேன். எல்லாத்துக்கும் சாரி…. தவுசன் டைம்ஸ் சாரி… எல்லாத்துக்கும் ரீஸன் நான் உன்னை ரொம்ப லவ் பண்றேன் ராஜ்…. அது ஏன்னு எனக்கே புரியலை!

ப்ளீஸ், ட்ரை டு அன்டர்ஸ்டேன்ட் மீ!! ஐ லவ் யூ சோ மச்… எனக்கு உன்கூடவே இருக்கனும்… தாட்ஸ் ஆல்!” பேசிக் கொண்டே அழுதாள் ப்ரியங்கா. ராஜீவ்வின் கைகள் அவளை இருக்கிக் கொண்டது. சிறிது நேரம் அவளை அழவிட்டு, அவளின் முகத்தை நிமிர்த்தினான்.

“இங்க பாரு… நான் இன்னும் ஒரு மாசத்துல அங்க வந்துருவேன். ஐ ப்ராமிஸ்! இதுக்கா இப்படி அழற?? ப்ரியங்கா போய் அழலாமா? சியர் அப்… பாரு, போட்ட மேக்கப் எல்லாம் கலஞ்சு போச்சு!” அவளை தேற்றிவிட்டு, முடிக்கும் தருவாயில் சிரித்தான்.

அவனை செல்லமாக தோளில் குத்திவிட்டு, கைகளை அசைத்துவிட்டு உள்ளே சென்றாள் ப்ரியங்கா. அவள் சென்றதும் தான், மீண்டும் தனியானது போல், உணர்ந்தான் ராஜீவ்.

அப்போது தான் அந்த கேள்வி தோன்றியது, அவனுக்கு… ‘நான் ப்ரியங்காவ லவ் பண்ண ஆரம்பிச்சுட்டேனா?’ என்பது தான் அது. விடை தெரியாமல், திக்கென்று நின்றான் ராஜீவ்.
 
Top