அத்தியாயம் - 19
ராஜீவ் குழம்பி நின்றது சில நிமிடங்களே… மீண்டும் அப்படி எல்லாம் இருக்காது, என்று தன்னை தானே தேற்றிக் கொண்டு தன் வேலையை கவனிக்க சென்றான். என்ன தான் சமாதானம் செய்தாலும், ப்ரியங்காவின் மேல் முன் போல் கோபம் இல்லை, என்பதை மட்டும் நன்கு உணர்ந்தான்.
கோபத்தை இழுத்து வைக்கும் அளவிற்க்கு, அவளும் ஒன்றும் செய்யவில்லையே?? அதானால் தானோ என்னவோ, ப்ரியங்காவிடம் இப்போது எல்லாம் சரளமாக பேச முடிகிறது…. இப்படி ராஜீவ் சிந்தித்துக் கொண்டிருந்த நேரத்தில், வானில் உயர, உயர பறந்துக் கொண்டிருந்தாள் ப்ரியங்கா.
அவள் பிளைட்டில் பறப்பதை மட்டும் கூறவில்லை… அவள் உடல் மட்டுமல்லாமல், மனமும் சிறகில்லாமல் வானில் பறந்தது, சந்தோஷமாக!!! பின்னே, கணவன் இன்னும் ஒரு மாதத்தில், வீடு திரும்ப போகிறான்…
அது மட்டுமா? அவன் தன்னிடம் அன்பாக பேச ஆரம்பித்திருப்பதே நல்ல முன்னேற்றமாக கருதினாள், அந்த பாவை. அன்பாக என்று சொல்லும் போதே, ஏர்போர்டில் அவனை கட்டி அணைத்தது தான் ஞாபகம் வந்தது அவளுக்கு.
எப்படி சற்றும் யோசிக்காமல், கட்டியணைத்தோம்? அவனும் விலகவில்லையே! மாறாக தன்னை போலவே அணைத்துக் கொண்டானே? அதில் அவன் அன்பை மட்டும் தானே உணர முடிந்தது… யோசிக்கும் போதே, முகமே சூடாகி, ரத்த நிறம் கொண்டுவிட்டது, ப்ரியங்காவிற்க்கு.
மேலே எதுவும் மூளையை குழப்பாமல், மகிழ்ச்சியுடன் மீதி பயணத்தை கடத்தினாள். ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது… ராஜீவ் தன்னை விரும்ப ஆரம்பித்துவிட்டான் என்பதே அது!! அவன் வாயாலேயே அதை சொல்லவைக்க வேண்டும் என்று உறுதி மொழி எடுத்தாள்.
*********************************************சென்னை *******************************************
தன்னை கூட்டிச் செல்ல வந்த தன் மாமனாரிடமும் சரி, வீட்டில் இருந்த மற்ற குடும்பத்தாரிடமும் சரி, ப்ரியங்கா ராஜீவ்வின் ரகசிய செயல்களை கூறவில்லை என்ற போதும், அவன் நன்றாக இருக்க வேண்டும் என்று பிராத்தனை செய்ய மறக்கவும் இல்லை… வீடு வந்து சேர்ந்ததும் ராஜீவ்விற்க்கு ஃபோன் செய்து, சிறிது நேரம் பேசிவிட்டு, மீண்டும் தன் வழக்கமான அரட்டையை நிஷாவுடன் தொடர்ந்தாள்…
இங்கே, நிலைமை இப்படி இருக்க, ஒரு பிரபல தனியார் மருத்துவமனையில், அர்ஜுனும் சந்தியாவும் டாக்டரை பார்க்க காத்துக்கொண்டிருந்தனர். இரண்டு பேருமே டென்ஷனாக இருந்தனர்… அது அவர்களின் முகத்திலிருந்தே தெரிந்தது.
சந்தியாவிற்க்கு இது ஆறாவது மாதம். ஸ்கேன் ரிப்போர்ட் மற்றும் சில கோப்பைகளுடன் டாக்டரின் அழைப்புக்காக கதவிலேயே விழி வைத்து காத்திருந்தனர். சிறிது நேரம் கழித்து, செவிலிய பெண் வந்து டாக்டர் கூப்பிடுவதாக கூறி உள்ளே அழைத்துச் சென்றாள்.
இவர்களிடம் நலம் விசாரித்து முடிந்தவுடன், ரிப்போர்ட்களை வாங்கி அலசினார் அந்த மகப்பேறு மருத்துவர். பின், சில கேள்விகளை சந்தியாவிடம் கேட்டப் பின்னர், அவளை தனி அறைக்கு கூட்டிச் சென்றுவிட்டார். இங்கே, அர்ஜுன் தான் திண்டாடி போனான்.
அவனை ரொம்பவும் சோதிக்காமல், மருத்துவரும் அவனின் மனைவியும் ஒருங்கே வந்தனர். அவர்களுக்குரிய இடத்தில் அமர்ந்த பின்னர், டாக்டரின் முகத்தையே பார்த்து இருந்தனர் இருவரும்…
என்னவோ ஏதோ என்று அவர்கள் பயந்ததிற்க்கு மாறாக, டாக்டர் நல்ல வார்த்தைகளையே கூறினார். “ஏன் ரெண்டு பேரும் டென்ஷனா இருக்கீங்க? ஒன்னும் ப்ராப்ளம் இல்ல. எல்லாமே நார்மலா தான் இருக்கு! கொஞ்சம் நல்லா சாப்பிட்டு, குடுத்த டாப்ளட்ஸ் எல்லாம் ஒழுங்கா எடுத்தாலே போதும்.
எவ்ரிதிங் வில் பீ ஃபைன்…. அடுத்த மாசம் தான, சீமந்தம் வைச்சுருக்கீங்க?”
“ஆமா, டாக்டர்! ஏழாவது மாசம் முடியும் போது வைச்சுருக்கோம்! நீங்களும் கண்டிப்பா வரனும்”
டாக்டர் ‘ஆல் ஓகே’ என்று சொன்ன நிமிடம், அனைத்து கவலைகளும் பறந்து போயே, போயிற்று அந்த தம்பதிக்கு! என்ன தான் ராஜீவ் சொன்னதையும் மீறி, திருமணம் செய்தாலும், அர்ஜுனுக்கும் சரி, சந்தியாவுக்கும் சரி குழந்தை என்று கன்பார்ம் ஆனதோ, அன்றிலிருந்து ஒரு வித பயம் இருந்து கொண்டே இம்சித்தது. அதனால், தான் இந்த பயம்.
ஒரு வழியாக நிம்மதி மூச்சுடன் வீடு வந்து சேர்ந்ததது, அர்ஜுன் ஜோடி….
நாட்கள் ஒரு புறம் டெம்பிள் ரன்னில், வருபவனை போல, நிற்க்காமல் ஓடிக் கொண்டே இருந்தன! ப்ரியங்கா விரல் விட்டு எண்ணாத குறையாக ராஜீவ் வரும் நாளுக்காக காத்திருக்க ஆரம்பித்தாள்.
தினமும் அவனிடம் பேசினாலும் கூட, மனம் அவன் அருகாமையே விரும்பியது! அவனும் வந்து சேர்ந்தான் தான்… அதுவும் அவன் கூறியது போல, ஒரு மாதத்திற்க்குள் தான்! ஆனால், வந்து சேர்ந்தவிதம் தான் அனைவரின் நெஞ்சத்தையும், முக்கியமாக ப்ரியங்காவின் மனதையும் கிழித்தது…
ப்ரியங்கா டெல்லி சென்றுவந்து, ஒரு மாதம் முடிய இரண்டு நாட்களே இருந்த நிலையில், திடீரென்று ஒரு நாள், பிரபல நேஷ்னல் டிவியில் ஷேக் இறந்துவிட்டதாகவும், அதற்க்கு காரணமான தமிழ்நாட்டு போலீஸை பாராட்டுவதாகவும் தெரிவித்தது.
அவனை என்கவுன்டரில் அவர்கள் போட்டதாக கூடுதல் தகவல் வேறு சொல்லியது! இதில் ஸ்பெஷல் என்னவென்றால், இதற்க்கெல்லாம் காரணமான ராஜீவ் என்ற அசிஸ்டென்ட் கமிஷ்னரை பாராட்டுவதாக ஒளிபரப்பியது. போதாதா? இது போதாதா நம் ஊர் ஆட்களுக்கு?
மீண்டும் ராஜீவ்வை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினர். எந்த மீடியா அவனை மிக கேவலமாக சித்தரித்ததோ, அதுவே இப்போது அவனை பாராட்டுகளை அள்ளி வீசியது. ஆனால், இந்த மாதிரி நல்ல விஷயம் நடக்கும் போதும், முன்போல் எப்போரையும் கூட்டி, நிகழ்ச்சி நடத்தவில்லை!!
ஒரு வேலை திட்டுவதற்க்கும், சண்டை போடுவதற்க்கும் மட்டுமே அப்படி நிகழ்ச்சி நடத்துவார்களோ? ஏன்? அவர்களை தான் கேட்க வேண்டும்….
எப்படியோ, வீட்டில் இதை பார்த்து அனைவருக்கும் மிகவும் சந்தோஷம்! ஆனால், எல்லாம் ராஜீவ் பேட்டி கொடுக்கும் வரையில் தான்… பேட்டி கொடுத்த போது தான் தெரிந்தது, ராஜீவ்விற்க்கு இடது முழங்கையில் கத்தி குத்துப்பட்டிருப்பது!!
பார்த்த ப்ரியங்கா, உடனே அவனை அழைத்தாள், தொலைப்பேசியில். அவனை சீக்கிரமாக சென்னைக்கு திரும்ப சொன்னாள், அழுதுக் கொண்டே…. “நானும் எவ்ளோ சீக்கிரமா முடியுமோ, அவ்ளோ சீக்கிரம் வரலாம்னு தான் பார்க்குறேன் ப்ரியா.
பட், இங்க கொஞ்சம் ஃபார்மாலீட்டிஸ் இருக்கு. முடிஞ்சவுடனே வந்துடறேன். ஓகே?”
“இல்ல, நீங்க உடனே வாங்க. உன்னை பார்க்கனும் போல இருக்கு! நீ வரலனா, நான் அங்க வந்துருவேன்…”
“ஹே! நானே வரேன்… லூசு மாதிரி திரும்ப இங்க வந்துராத… புரியுதா?” இப்படியாக ராஜீவ்வை மிரட்டியே, சென்னைக்கு அடுத்த நாளே வரவைத்தாள், ப்ரியங்கா. வீட்டிற்க்குள் அவன் நுழைந்த நிமிடம் அம்மா, தங்கை, மனைவி அனைவரும் அழத் துவங்கினர்!
ஐய்யோ என இருந்தது ராஜீவ்விற்க்கு!! இனி இவர்களை வேறு சமாளிக்க வேண்டுமா?? அவர்களை எப்படி சமாளிப்பது என தெரியாமல், முழித்திப்படியே பேச ஆரம்பித்தான். “ஏன் இப்போ இப்படி அழறீங்க? எனக்கு தான் ஒன்னும் ஆகலைல? அப்புறம் ஏன் இப்படி கவலைப்படறீங்க?”
“ஆமாடா, நீ சொல்லுவ! நாங்க இங்க எவ்வளோ டென்ஷனானோம் தெரியுமா? இதுல அழறதுக்கு வேற அதட்டுறீயா நீ?”
கீதாவின் குரலில் இருந்த கவலை, வேதனையை உள்வாங்கிக் கொண்டு அவர்களை தேற்ற வேறு வழி கண்டான் ராஜீவ்.
“அப்படியில்லமா… அழுதா இவங்க ரெண்டு பேரு மூஞ்சியையும் பார்க்க சகிக்கல.. அதனால தான் சொன்னேன் அழாதீங்கனு!!”
ராஜீவ்வின் கிண்டலில் ப்ரியங்காவும் நிஷாவும் அவனை துரத்தினர், கண்களை துடைத்துக் கொண்டே…. எல்லா விஷயங்களையும் பேசி முடித்தப் பின்னர், ராஜீவ் படுக்க சென்றான் அறைக்கு. அவனை இரண்டு அல்லது மூன்று வாரம் ரெஸ்ட் எடுத்து விட்டே, வேலைக்கு திரும்ப சொன்னார், கமிஷ்னர் தினகரன்.
அதனால், ராஜீவ் வீட்டில் இருந்த நேரத்தில் எல்லாம், சிரிப்புக்கும் கிண்டல் கேலிக்கும் பஞ்சம் இல்லாமல் போனது… ப்ரியங்காவும் வேலைக்கு ஒரு சில நாட்கள் விடுப்பு எடுத்திருந்தபடியால், அவளாலும் இதில் கலந்து கொள்ள முடிந்தது…
இந்த நாட்களில், ராஜீவ் மற்றும் ப்ரியங்காவின் உறவு கொஞ்சமல்ல நிறையவே முன்னேறியது என்றே சொல்ல வேண்டும்!! எந்த அளவுக்கு சென்றது என்பதை கீழே இருக்கும் நிகழ்வை வைத்தே தெரிந்து கொள்ளலாம்…
அன்றிரவு தங்களின் படுக்கை அறைக்கு வந்த ப்ரியங்கா, முதலில் பார்த்தது ராஜீவ் நீயூஸ் சேனல்களை மாற்றி மாற்றி, வைத்துக் கொண்டிருந்ததை தான்… அவனும் ரிமோட்டை கீழே வைப்பான், தனக்கு வேண்டிய சீரியலை பார்க்கலாம் என்று பார்த்தால், அவன் வைத்தால் தானே??
இதில் சீரியல் பார்க்க வேண்டும் என்றால் கண்டிப்பாக ரிமோட்டை கொடுக்க மாட்டான் என்று தெரிந்து, சில நிமிடங்களை கடத்திய ப்ரியங்கா, அதன் மேலும் பொறுக்க முடியாமல், ராஜீவ்வின் பக்கம் திரும்பினாள்.
அவள் ரிமோட்டுக்காக தான் காத்திருக்கிறாள் என்று தெரிந்தே உள்ளுக்கு சிரித்துக் கொண்டு, வெளியே கவனிக்காத மாதிரி நடந்துக் கொண்டான் ராஜீவ்.
“ராஜ், எனக்கு டிவி பார்க்கனும்… ரிமோட் தாங்க”
“டிவி தான பார்க்கனும்… அதுக்கு எதுக்கு ரிமோட்? இப்படியே பாரு!”
கிண்டல் கலந்த அவன் குரலில், ப்ரியங்கா முறைக்க ஆரம்பித்தாள். பிறகு, மீண்டும் அவனிடம் கேட்டாள்… நோ நோ, கெஞ்சினாள். “ப்ளீஸ், ராஜ்… சும்மா குடுங்க… ப்ளீஸ்….”
இவள் இப்படி வெளிப்படையாக கெஞ்சியதில், ராஜீவ் ஒரு குறும்பான பார்வை பார்த்து, அவளிடம் நெருங்கி உட்கார்ந்தான்… அவனின் மூச்சு காற்று அவள் மேலே படும் அளவிற்க்கு அவன் நெருங்கியதில், ப்ரியங்காவின் மூச்சு நின்றே போனது!! கண்களை அகல விரித்து, மேய் சிலிர்க்க, ஒரு ரகசிய குரலில், “என்ன… எதுக்கு கிட்ட வறீங்க??”
“நீ தான் ‘சும்மா’ குடுங்கனு சொன்ன? ‘சும்மா’னா ஹிந்தில ‘கிஸ்’னு எனக்கு தெரியும்! மூணு மாசமா டெல்லில இருந்துருக்கேன்.. இதுக்கூடவா தெரியாது? ஹ்ம்ம்ம், சரி சொல்லு, எங்க ‘சும்மா’ வேணும்?”
ஒரு கணவனின் பார்வையோடு ராஜீவ், கேட்டதும் ப்ரியங்காவால் ஒரு நிமிடம் ஒன்றும் செய்ய முடியவில்லை. பின், அவள் மூளை சரியாக அந்த நேரத்தில் வேலை செய்ததில், இது தான் சமயம் என்று அவனிடமிருந்து ரிமோட்டை பிடிங்கி கொண்டாள், கல கலவென சிரிப்புடன்.
அவனே எப்போவோ தான் இப்படி நடப்பது! இதில் சரியாக சொதப்பும் இவளை என்ன செய்வது??
ராஜீவ்வும் அப்போது தான், உணர்ந்தான்… ஒரு கிண்டலுக்காக தான் அவளிடம் நெருங்கினான்... ஆனால், ப்ரியங்கா அனுமதித்திருந்தால், முத்தம் கொடுத்திருப்போமோ?? என்ன செய்கிறேன் நான்? அவள் மேல், இருந்த கோபம் முழுதாக நீங்கிவிட்டதா? எப்படி இது நடந்தது?
இப்படி விடை தெரியாத பல கேள்விகளுடன், தூக்கத்தை போராடி பெற்றான் ராஜீவ். இருவருக்கும் அன்று கனவில் முத்தம் கொடுப்பது போல், காட்சிகள் வந்தது என்னவோ உண்மை…
அடுத்த நாள் மகிழ்ச்சியாக விடிய, காலை டிபன் வேலை முடிந்ததும், சரியாக பத்து மணிக்கு சேகர் தன் மனைவியுடன் தன் தங்கையின் குடும்பத்தை, தன் பெண்ணின் வளைகாப்பிற்க்காக அழைக்க வந்தார்.
எல்லோரும் இதை பார்த்து அடைந்த சந்தோஷத்திற்க்கு அளவே இல்லாமல் போனது. அதுவும் ப்ரியங்காவை கேட்டவே வேண்டாம். தலை கால் புரியாமல், அவர்களை கவனித்துக் கொண்டிருந்தாள்.
பிறகு, சேகர் ராஜேந்திரனிடம் திரும்பி, “கல்யாணம் அப்போ கோபமா இருந்ததுனால உங்கள ஒழுங்கா கவனிக்க முடியல. அதை எல்லாம் மனசுல வைச்சுக்காம வளைக்காப்புக்கு எல்லாரும் வரனும்னு ஆசைப்பறேன்” என்றார், ஒரு குற்ற உணர்ச்சி மிகுந்த குரலில்.
ராஜேந்திரன் கண்டிப்பாக எல்லோரும் வருவதாக உறுதி அளித்தப்பின் ராஜீவ், அர்ஜுன் சந்தியா மற்றும் குழந்தையை பற்றி விசாரித்தான். “கடவுள் புன்னியத்துல, சந்தியாவும் சரி, குழந்தையும் சரி நல்லா இருக்காங்கப்பா…”
இதை கேட்டதும் தான் ராஜீவ்வின் மனது நிம்மதி அடைந்தது. சிறிது நேரம் பேசி இருந்துவிட்டு, போகும் தருவாயில் சேகர் மற்றும் அவரின் மனைவி பத்மா, சந்தியாவை காப்பாற்றியதற்க்காக ப்ரியங்காவிற்க்கு நன்றிகளை தெரிவித்தனர்.
இவள் சிரித்து, “அதெல்லாம் பெரிய விஷயமில்ல ஆன்டி! பரவாயில்ல…” என்றாள்.
இப்படி அவர்கள் கிளம்ப, இங்கே எல்லோரும் சந்தியாவின் வளைகாப்பிற்க்காக காத்திருக்க ஆரம்பித்தனர்… ஆனால், அன்று நடக்கவிருக்கும் நிகழ்வுகளை முன்கூட்டியே தெரிந்திருந்தால் யாரும் சென்று இருக்க மாட்டார்கள்…
அதுவும், ப்ரியங்கா!!! அன்றைய நாளின் முடிவில் அவள் மனம் சில்லு சில்லாக நொறுங்கியது!!! அவளை மேலும் வருத்தமுற செய்தது என்னவென்றால், அப்படி நொறுக்கியது அவள் ஆருயிர் கணவன் ராஜீவ், என்பது தான்!!!