அத்தியாயம் - 20
சந்தியாவின் வளைகாப்பை நோக்கி, ப்ரியங்காவின் ஆர்வத்தை பார்த்து, ராஜீவ்விற்க்கும் மற்றவர்களுக்கும் மிகவும் ஆச்சரியமாக இருந்தது. சந்தியாவின் வளைகாப்பிற்க்கு ப்ரியங்கா ஏன் இவ்வளவு மகிழ வேண்டும்?
நிஷா அதை வாய் விட்டே கேட்டுவிட்டாள். “என்ன ப்ரியா, சந்தியாவோட வளைகாப்புக்கு இவ்வளோ சந்தோஷமா?”
நிஷா கேட்டது, இரவு உணவு அருந்தும் வேளையில் என்பதால், அனைவரும் ப்ரியங்காவின் முகத்தை ஆவலுடன் பார்த்தபடி இருந்தனர். ப்ரியங்கா அழகாக புன்னகைத்து, மெதுவான குரலில் கூறினாள்.
“என்னோட தப்பால, இந்த குடும்பத்தை பிரிச்சோட்டோம்னு நிறைய நாள் ஃபீல் பண்ணிருக்கேன். எங்களோட கல்யாணத்துக்கு கூட அவங்க யாரும் வரலைல…. இப்போ, சந்தியாவோட ஃபங்ஷனுக்கு எல்லோரும் போறோம்னு ரொம்ப ஹேப்பியா இருக்கு!! அதான்…”
எல்லோருக்கும் மனநிறைவாக இருந்தது அவள் கூறியதை கேட்டு! அவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த நாளும் வந்தது. அனைவரும் காலையிலேயே கிளம்பிவிட்டனர்… காலை பத்தரை மணி அளவில் தான் ஃபங்ஷன். ராஜீவ் கிளம்பிவிட்டு, ஹாலிற்க்குள் வந்தால், ப்ரியங்கா, நிஷா மற்றும் கீதா ஒரே வண்ணத்தில் பட்டு புடவை கட்டிக் கொண்டு ரெடியாக இருந்தனர்.
“அப்பாடி… ஒரு வழியா காலையிலிருந்து கிளம்ப ஆரம்பித்து, ஒரு வழியா முடிச்சிட்டீங்களா உங்க மேக்கப்ப??”
ராஜீவ்வின் நக்கலான குரலில், ப்ரியங்காவும் நிஷாவும் முறைக்க, கீதாவும் ராஜேந்திரனும் சிரித்தனர். மேலும் காலம் தாழ்த்தாமல், ப்ரியங்கா அனைவரையும் வெளியே வரச் சொன்னாள். அப்போது தான் நிஷா, ராஜீவ்விடம் வந்து, “எங்கள என்ன தான் நீ ஓட்டுனாலும், நீ ஓரக் கண்ணால ப்ரியாவை நிறைய சைட்டு அடிக்குறனு எனக்கு தெரியும்… ரொம்ப வழியிது!! தொடச்சுக்கோ…”
தாம் இப்படி எல்லோருக்கும் தெரியும்படியா, அவளை பார்க்கிறோம் என்று வெட்கித்தான் ராஜீவ்… ஆனாலும், வெளியே காட்டிக் கொள்ளாமல், நிஷாவை கவனிக்காதது போல் நடந்துக் கொண்டான்.
தன் கோபம் எல்லாம் போயே போய்விட்டது… ‘இட்ஸ் கான்’ என்னும் படியாக சொல்லாமல் கொள்ளாமல் போய்விட்டது என்பது, முத்திரை குத்தாத குறையாக அவனுக்கு நன்கு விளங்கியது தான் என்றாலும், அவனை இப்போது சிந்திக்க வைத்தது, ப்ரியங்கா மேல், தீயாக வளர்ந்துக் கொண்டே இருந்த காதல் தான்.
அது காதல் தானா என்பது, முதல் பிரச்சனை. அப்படியே, காதல் என்றால், அவளை இவ்வளவு திட்டி, அதட்டி, உருட்டிய பின், அவளிடம் எப்படி அதை கூறுவது?? இப்படியே, அவன் யோசனையில் மூழ்கியதை பார்த்த ப்ரியங்கா, அவன் வேறு எதையோ சிந்திக்கிறான் என எண்ணினாள்.
தன்னவனின் எண்ணத்தில் தான் மட்டுமே, நிரம்பி இருப்பதை அவள் பாவம் அறியவில்லை…. ராஜீவ்வின் யோசனை முடிவிற்க்கு வரவில்லை என்றாலும், சந்தியாவின் வீடு வந்ததில் அனைவரும் இறங்கி உள்ளே சென்றனர்.
அங்கே, அனைவரின் மத்தியிலும், ப்ரியங்கா மற்றும் அவள் குடும்பத்தினருக்கும் பலத்த வரவேற்பு!! சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த சமயத்தில் தான் அர்ஜுனும் சந்தியாவும் வந்தனர். எல்லோரையும் வரவேற்ற பின்னர், ராஜீவ்விடமும் ப்ரியங்காவிடமும் நலம் விசாரித்தனர்.
ராஜீவ்வுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை… பின்னே, இவனை கண்டாலே முகத்தை திருப்பி கொண்டு போகிறவர்கள், தானாக வந்து பேசியதை அவனால், நம்ப இயலவில்லை. ப்ரியங்காவிற்க்கு இருந்த எக்ஸைட்மென்டில் வானில் பறந்தாள்…
ராஜீவ்விற்க்கு ஆச்சரியம் அடங்கிய நேரத்தில் சந்தியாவின் வளைகாப்பு தொடங்கியது..
கூடி இருந்த சுற்றமும் நட்பும், நன்றாக பேறு காலம் அமைய வேண்டி வாழ்த்த, அவளின் மனம் விகசித்தது!! அந்த விகசிப்பு முகத்தில் புதிய பொலிவை கொடுக்க, கண்களோ அவளின் கண்ணாளனை பார்த்தது... முன்பு எப்படியோ!!
இப்போது சந்தியாவின் அனைத்துமாக அர்ஜுனே இருந்தான். இதனால் அனைவருக்கும் ஆனந்தமே. ஒருவரை தவிர.
அது தையல்நயகி!! தன் பேரக் குழந்தைகளை வாழ்நாள் முழுக்க சேர்ந்து பார்க்க ஆசைப்பட்ட அவரின் நினைப்பில் ஒரு லாரி மண் அள்ளி போட்ட ப்ரியங்காவின் மேல், அவருக்கு நாளுக்கு நாள் ஆத்திரமும் கோபமும் கட்டுக்கடங்காமல் வளர்ந்தது...!
தான் நினைத்ததை சாதித்துக்கொள்ள அந்த சின்னப் பெண்ணால் முடிந்ததே!! தன்னால் முடியவில்லையே என்ற ஆதங்கம் அவரின் மனதை அரித்தது.!!! இதில் அவர் ராஜீவ்விடம் கோபத்தில் பேசாமல் இருக்க, அவன் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் மீண்டும் தன் மனைவியிடம் எப்போதும் போல் பேசியதை, அவரை அவமதித்தது போல் உணர்ந்தார்….
இதற்க்கெல்லாம் யார் காரணம்?? ப்ரியங்காவே தான்!!! இருக்கட்டும்… ஒரு நாள் மாட்டாமலா போவாள்?? அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டார். ஆனால், இன்றே அவள் மாட்டுவாள் என்று தெரியவில்லை!
இதற்க்கு நடுவில், விழாவிற்க்கு வந்திருந்த சில வாய் தொடுக்கான சொந்தங்கள் சிலர், தையல்நாயகியின் கோபத்தில், எண்ணெய், பெட்ரோல், டீசல் எல்லாம் ஊற்ற, அதில் வெந்து செத்ததோ ப்ரியங்கா தான்!!
ஆம், வளையல் அடுக்கும் நிகழ்வெல்லாம் இனிதே முடிய, அனைவரும் சாப்பாடு பந்தி நடக்கும் பக்கம் சென்றனர். ஏற்கனவே சாப்பிட்ட சிலர், வீட்டில் அந்தந்த இடத்தில் கூடி உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர்… ராஜீவ்வின் வீட்டினர் சாப்பிட்டுவிட்டு, பந்தியை கவனித்துக் கொண்டிருக்க, ப்ரியங்காவும் நிஷாவும் சந்தியாவுடன் இருந்தனர்.
கீதா தன் அண்ணியுடன் ஐக்கியமாகிவிட, இங்கே சிற்றவர்களின் சிரிப்புக்கு அளவில்லாமல் போனது! அப்போது பார்த்து, அங்கே அர்ஜுனும் ராஜீவ்வும் வர, சந்தியா ப்ரியங்காவை பார்த்து, “ஹே ப்ரியா! நீ எப்போ நல்ல நியூஸ் சொல்லப் போற?” என்றாள் இளகிய குரலில்…
அனைவரும் ராஜீவ் மற்றும் ப்ரியங்காவை பார்க்க, அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். கண்கள் வழியாக இதயம் பரிமாறப்பட, எல்லோரும் சிரிப்பதை பார்த்தவுடன் தான், கனவுலகில் இருந்து மீண்டனர் இருவரும்.
நிஷாவும் சந்தியாவும் மேலும் கேலி செய்ய, அவர்களிடம் இருந்து தப்பிக்கும் வழி தெரியாமல், அறையைவிட்டு வெளியேறினாள், சிவந்த முகத்துடன்… அப்போது தெரியாத்தனமாக தையல்நாயகி அவரின் சொந்தங்களுடன் இருந்த அறைக்குள் சென்றுவிட, அங்கே ஆரம்பித்தது வினை!!
இவளை பார்த்த நிமிடம், தையல்நாயகியின் பேச்சு சட்டென்று திசை மாறியது… “என்ன இங்க வந்திருக்க? ஆமா, நீ மட்டும் வர… உன்னோட புருஷன் வரலயா?”
இதற்க்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல், ப்ரியங்கா பதில் கூறாமல் இருந்தாலும், தலை மட்டும் தானாக இடம் வலமாக ஆடியது. அதை பார்த்து மேலும் எரிச்சலுற்ற தையல்நாயகி, தன் புலம்பல் போன்ற குத்தலான பேச்சை ஆரம்பித்தார்.
“இதோ இங்க நிக்கறாளே, இவ தான் என்னோட பேரனை கல்யாணம் கட்டிகிட்டவ! பார்க்க தான் ஒன்னும் தெரியாத மாதிரி இருப்பா! ஆனா, சரியான தில்லாலங்கடி! என்னோட பேரனையே மயக்கி கைக்குள்ள போட்டுகிட்டானா பாரேன்…
அது மட்டுமா, எங்களோட குடும்பத்தையே பிரிச்சவ இவளே தான்….“ இவர் இப்படி வசை பாடுவதை கேட்ட முடியாமல், கனக்கும் செஞ்சத்தோடும், கண்களில் வேர்த்த கண்ணீரோடும், அறையைவிட்டு வெளியேற நினைத்து திரும்பினாள் ப்ரியங்கா.
ஆனால், தையல்நாயகியாவது விடுவதாவது? “ஏம்மா… பேசிட்டே இருக்கும் போது, மரியாதை இல்லாம போற? இது தான் உன்னோட வீட்டுல சொல்லிக் கொடுத்தாங்களா?”
தான் அசிங்கப்பட்டாலும் பரவாயில்லை, தன் வீட்டினரை அவப்பெயர் வாங்க வைக்கக் கூடாது என அங்கேயே நின்றாள் ப்ரியங்கா, குனிந்த தலையுடன். தையல்நாயகியின் பேச்சு போய் கொண்டே இருந்ததே தவிர நின்றபாடில்லை. கடைசியில் நிஷா தான் வந்து நிறுத்து வைத்தாள்.
தன் செல்ல அண்ணி திட்டு வாங்குவதை பார்க்க முடியாமல், தன் பாட்டியையும் அடக்க முடியாமல், தன் வீட்டினரை கூட்டி வந்தாள் நிஷா. “பாட்டி இப்போ எதுக்கு சத்தம் போடுறீங்க? நாங்க தான் இப்போ சந்தோஷமா இருக்கோம்ல… அப்புறம் என்ன உனக்கு?”
இது ராஜீவ் தான் கூறினான், என நீங்கள் நினைத்தால், அது முற்றிலும் தவறு. இதை கூறியது சந்தியா… ராஜீவ் அங்கே அமைதியாக நின்றான் தன் பாட்டியின் முன்னால். நிஷா, கீதா, ராஜேந்திரன் எல்லாம் ப்ரியங்காவுக்காக பேசியது கூட ராஜீவ் பேசவில்லை…
இதில் உச்சக்கட்டமாக, “இதோ இங்க மரம் மாதிரி நிக்கறானே என்னோட பேரன்! இவளுக்காக என்கிட்ட பேசுறத கூட நிறுத்திட்டான்! அவ்வளோ நல்லவன்! ஆனா, இன்னிக்கு சொல்றேன்டா, நல்லா கேட்டுக்கோ! நான் பார்த்த பொண்ணு வேண்டாம்னு, நீயா பார்த்து, கல்யாணம் பண்ணிக்கிட்டல? இவளால உனக்கு இன்னும் என்ன எல்லாம் நடக்க போகுதுனு மட்டும் பாரு!!” என்று சாபமேவிட்டார், வாய் கூசாமல்.
இதற்க்கு மேல், பொறுக்க முடியாமல் கீதா தன் அண்ணனிடம் கூறிக் கொண்டு கிளம்ப, ராஜீவ்வின் குடும்பம் தங்கள் வீடு நோக்கி பயணித்தது. வழியெங்கும் யாரும் பேசாமல் வந்தனர். ப்ரியங்கா தன் துயரத்தை அடக்குவது அப்பட்டமாக தெரிந்தது.
வீட்டிற்க்குள் வந்ததும் மற்றவர்கள் அவரவர் அறைக்குள் சென்றுவிட, ப்ரியங்காவும் அதையே செய்தாள். ஆனால், தன் மாமியார் தன்னை பின் தொடர்வதை அறியாமல், ரூம்மிற்க்குள் சென்றதும், கட்டிலில் விழுந்து அழ ஆரம்பித்தாள்.
கீதா பின்னாலயே, வந்து தன் மகளான மருமகளின் துயரத்தை ஆற்றும் வழி தெரியாமல், அவளை தன் மடியில் தாங்கிக் கொண்டார். தன் அத்தையை பார்த்ததும் இன்னும் அழுகை பொங்கிக் கொண்டு வர, அவரின் மடியை கட்டிக் கொண்டு அழலானாள்.
இதில் நிஷா வேறு வந்து விட, அழுகை நிற்க்கும் வழியையே காணோம்… கீதா சிறிது நேரம் அழவிட்டு, பின்பு, “ப்ரியா போதும்டா… ரொம்ப அழாதமா! உனக்கு உடம்புக்கு எதாவது வரப் போகுது… எங்க அம்மா திட்டுனதுக்கு நான் உன்கிட்ட சாரி கேட்டுகறேன்மா…” என்று குற்ற உணர்ச்சி மிகுந்த குரலில் சொன்னார்.
“ஐய்யோ… நீங்க எதுக்குமா என்கிட்ட சாரி சொல்றீங்க! நான் அழல…” என்று கண்களை துடைத்து கொண்டாலும், அவளின் மனக்குமுறலை, அவள் மறைப்பது அவருக்கு புரிந்ததால், நிஷாவை அவளுடன் இருக்கவிட்டு அவரும் இடத்தை காலி செய்தார்.
ராஜீவ் அப்போதும் அறைக்கு வரவில்லை… ஹாலில் இருந்த சோபாவில், படுத்து கண்களை மூடிக் கொண்டான். யாரும் நல்ல மனநிலையில் இல்லாதலால், அவனை எதுவும் கேட்கவில்லை.. இரவு உணவு தயாரிக்கவே, பெண்கள் எழுந்தனர்…
அனைவரும் அமைதியாக சாப்பிட்டனர்… ராஜீவ் இரவு தூங்க அறைக்கு திரும்பிய போது தான், ப்ரியங்கா ஏக்கமாக தன்னை பார்ப்பது தெரிந்தது… ஆனாலும் கண்டுக் கொள்ளவில்லை…
ப்ரியங்காவிற்க்கு ஒன்றுமே புரியவில்லை.. கடந்த சில நாட்களாக நன்றாக இருந்த தன் கணவன், ஏன் இன்றைக்கு தன்னை ஒதுக்குகிறான்… நியாயமாக பார்த்தால், பாட்டியிடமே தனக்காக வாதாடி இருக்க வேண்டும்.
அதுவும் செய்யவில்லை… வீட்டிற்க்கு வந்தும் கூட, தன்னை தேற்ற சிறு முயற்சியும் எடுக்கவில்லை… தேற்றுவது என்ன? இதுவரை பேசக் கூட இல்லை! என்னவாக இருக்கும் என்ற கேள்வியுடன், அவனை பார்த்து, “ஏன் ராஜ், இன்னிக்கு பாட்டி திட்டும் போது, எனக்காக அவங்ககிட்ட பேசனும்னு உங்களுக்கு தோணலையா?” என்று வினவினாள்.
அவளையே கூர்ந்து பார்த்து பதிலாக கேள்வியையே கேட்டான் அவள் கணவன்.
“ஏன், அவங்க சொன்னதுல என்ன தப்பு கண்டு புடிச்ச நீ? அவங்க நீ செஞ்சதுக்கு தானே திட்டுனாங்க? அவங்க சொன்ன மாதிரி, உன்னை பார்த்ததுக்கு, அப்புறம் தான் எனக்கு எல்லா பிரச்சனையும் ஆரம்பிச்சுது! உன்னால எல்லார் முன்னாடியும் என்னையும் தான் திட்டுனாங்க! அப்புறம் என்ன கேள்வி வேற? எல்லாம் என் தலையெழுத்து!!!”
ராஜீவ்வின் இந்த பதிலை, ப்ரியங்கா சுத்தமாக எதிர்பார்க்கவில்லை, என்பது அவளின் அதிர்ந்த முகத்தில் இருந்தே தெரிந்தது… சொல்லிவிட்டு அவன் தூங்கச் சென்றுவிட்டான்.
ப்ரியங்கா தான் அவன் சொன்னதை ஜீரணிக்க முடியமல் தத்தளித்தாள்… என்னவெல்லாம் சொல்லிவிட்டான்… பாவி? அப்போ, அவனுக்கு தன் மேல் இருந்த கோபம் துளியும் குறையவில்லை என்று தானே அர்த்தம்? கொஞ்ச நாட்களாக நன்றாக பேசுவதை பார்த்து ஏமாந்து விட்டோமே, என்று மீண்டும் தன்னுடைய கண்ணீர் கடலில் மூழ்கினாள்.
ஒரு நிலையில், யோசித்து யோசித்து தலை பாரமாக கனத்த போது தான், அந்த முடிவை எடுத்தாள்… அந்த முடிவு நல்லதா கெட்டதா, என்று பகுத்தறிய அவளாள் முடியவில்லை…
ஆனால், எடுத்த முடிவின் படி அடுத்த நாள் செயல்பட்டாள்… இப்போது அவள் எடுத்த முடிவால், ராஜீவ் அதிர்ந்து நின்றான்!!! நிராகதியாக, முழுவதுமாக அதிர்ந்து நின்றான்!!!