ப்ரியங்காவிற்க்கு திருமணம் நடக்கும் வரை ஒரு விதமான பதட்டம் இருந்து கொண்டே இருந்தது!! ஏதாவது நடந்து, கல்யாணம் நின்று விடுமோ என்ற பயம் மனதை அரித்தது.
எது நடந்தாலும் ராஜீவ் தான் தனக்கு எப்போதும் என்பதில் மட்டும் உறுதியாக இருந்தாள்! அதனால் இப்போதைக்கு மற்றதை எல்லாம் ஒதுக்கி வைத்து, தன் திருமணத்தில் கவனம் செலுத்தினாள்.
திருமணம் சிம்பிளாக கோவிலில் நடந்தாலும், எதிலும் குறை இருப்பதை அவள் விரும்பவில்லை! அவளின் முக்கிய உறவினர்கள் மட்டுமே, புனேவில் இருந்து வருவதாக இருந்தனர்.
மற்றவர்கள் புனேவில் நடக்கும் ரிசப்ஷனுக்கு கூப்பிட்டுருந்தனர், ரவி தம்பதியர்! அதனால், ப்ரியங்கா இங்கே சென்னையில் ஃபிரியாக அவள் தோழி மதுவிடமிருந்து தமிழ் நாட்டு பாரம்பரிய உணவு வகைகளை சமைக்க கற்றுக் கொண்டிருந்தாள்!
மதுவும் அவளும் ஒரே பன்னாட்டு அலுவகத்தில் வேலை பார்ப்பதோடு, ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருக்கின்றனர்! மதுவின் சொந்த ஊர் மதுரையானதால், அவளும் எல்லா வகைகளையும் சொல்லிக் கொடுத்தாள்!
அதுமட்டுமல்லாமல் ப்ரியங்கா தமிழை மிக தீவிரமாக கற்க ஆரம்பித்தாள் எனலாம்! சென்னைக்கு வந்ததும் சிறிது சிறுதாக கற்க ஆரம்பித்தது, இப்போழுது ஜெட் வேகத்தை அடைந்தது.
ஆனாலும் அவளால், பாதி கிணறு கூட முழுதாக தாண்ட முடியவில்லை! பின்னே தமிழ் என்னும் சமுத்திரத்தில் மூழ்கி வெளியே அவ்வளவு எளிதாக வர முடியுமா என்ன??
இருந்தாலும் மனம் தளராமல், போராடிக் கொண்டிருந்தாள்!! கூட அவளின் வருங்காள நாத்தனார் நிஷாவும் நிறைய சொல்லிக் கொடுத்தாள்.
ஆம், ராஜிவ்வின் வீட்டில், அவளுடன் ஒட்டுறவாக இருந்தது இரண்டு பேர். ஒன்று, நிஷா. இன்னொன்று அவளின் தாத்தா ஈஷ்வர்!
நிஷா கூட கேட்டுப் பார்த்தாள் அவள் தாத்தாவிடம், எப்படி அவர் ப்ரியங்காவுடன் பழக்கமானார் என்று. ஆனால், தாத்தாவோ பேத்திக்கு மேலே!
“அதேல்லாம் எனக்கும் என் பேத்திக்கும் இருக்கும் ரகசியம்! உன்கிட்ட சொல்ல முடியாது நிஷா கண்ணு! சாரிமா!” அவர் சொன்னதிற்க்கு பதிலாக, தன் தோள் பட்டயை முகவாயில் இடித்து சென்றாள் நிஷா!
ஆனால் இது எதற்க்கும் எனக்கும் சம்மந்தமே இல்லை, என்கிற மாதிரி இருந்தான் ராஜீவ்!! ரிசப்ஷன் உடை எடுப்பதற்க்கே மிகவும் நேரம் கடத்தினான். அந்த வீட்டின் பெரிய மனுஷியான நிஷா திட்டிய பிறகே அவளுடன் சென்று எடுத்தான்!
கல்யாண வேலைகள் பரபரப்பாக சென்றுக் கொண்டிருந்த போது, சரியாக சொல்லப் போனால், கல்யாணத்திற்க்கு இரண்டு வாரங்கள் முன்பு ராஜீவ்விற்க்கு அர்ஜுனிடம் இருந்து தொலைப்பேசி அழைப்பு வந்தது.
‘இவன் எதுக்கு இப்போ கூப்பிடறான்? அவன் கல்யாணத்துக்கு போகாத போதே கூப்பிடல! இப்போ என்ன ஆச்சு தெரியலையே??’ மனதில் கேள்வியுடனே அட்டெண்ட் செய்தான் ராஜீவ். “ஹலோ ராஜீவ்! எப்படி இருக்கே?” அர்ஜுனின் குரல் உற்சாகமாக வந்தது!
“நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்க?” ராஜீவ்வின் குரலே ஒரு சம்பிரதாயமாக ஒலித்தது.
அதை புரிந்துக் கொண்டே, வேண்டுமென்றே நக்கல் குரலில், “எனக்கு என்ன ராஜீவ்? புது மாப்பிள்ளையா வாழ்க்கையை சூப்பரா என்ஜாய் பன்றேன்! ஆமா நீ கல்யாணத்துக்கு வந்த மாதிரி தெரியலையே! ஏன்?”
“இல்ல ஒரு முக்கியமான வேலை இருந்துச்சு! அது தான் வர முடியல!” அவனால், வேறு என்ன சொல்ல முடியும்? மனதில் ஏதேதோ தோன்றியது; ஒரு நிலையில் நான் இல்லை, அதனால் தான் வர முடியவில்லை என்றா கூற முடியும்?
ஆனால், அப்படி கூறி இருந்தால் என்னவாகி இருக்கும் அர்ஜுனின் முகம், என்று எண்ணிக் கொண்டிருந்தான் ராஜீவ்.
அவன் நினைப்பதற்க்கெல்லாம் நேரம் குடுக்காமல், அர்ஜுன்னே தொடர்ந்தான்!
“ஆமா, ஆமா…. நிறைய முக்கியமான வேலை இருக்கும் ஏ.சி.பி சார்க்கு!” என்றான், ‘முக்கியமான’ என்பதில் அழுத்தம் கொடுத்து.
“இப்போ எதுக்கு கூப்பிட்டனு சொன்னா தேவலை அர்ஜுன்! அதை விட்டுட்டு தேவையில்லாத விஷயம் எல்லாம் எதுக்கு பேசற?”
ராஜீவ்வின் குரலே எச்சரித்தது…. அதிசயமாக அர்ஜுனும் எதிர்த்து பேசாமல், அவன் பேச வேண்டியதை பேசினான்! “உனக்கு கல்யாணம் ஏற்பாடு ஆகி இருக்கு! எனக்கு சொல்லவே இல்லையே ராஜீவ்!”
இதற்க்கு நிஜமாகவே ராஜீவ்விடம் பதில் இல்லை! அவன் கூப்பிடவே யோசிக்கவில்லை என்பதே உண்மை! ஆனாலும் இப்படி கேட்பவனிடம் என்ன சொல்லவது?
“அது சிம்பிளாக கோவில்ல பண்றோம் அதனால தான் நிறைய பேர்க்கு சொல்லாம விட்டுட்டோம்!”
அவனிடம் ஏதோ சொல்ல வேண்டுமே என்பதற்க்காக சொன்னான். ஆனால், அதிலும் குறை கண்டு பிடித்தான் அர்ஜுன். லாயர் அன்றோ!! இங்கேயும் வாய் விளையாடியது!
“ஹோ!! வர வேணாம்னு சொல்ற! ஆனால், ரிசப்ஷனுக்கு வரலாம்ல?? இல்ல அதுக்கும் வர கூடாதா சார்??”
‘வேண்டாம்னு சொல்லிடுவியா என்ன??’ என்ற எகத்தாளமே அதிகம் இருந்தது! “கண்டிப்பா வா அர்ஜுன். வீட்டிலையும் எல்லாரையும் கூட்டிட்டு வா! எல்லாரும் சந்தோஷமா இருக்கனும்னு தான் எனக்கும் ஆசை!”
ராஜீவ் கூறிய பதிலை அவன் எதிர் பார்க்கவில்லை போலும். “சரி… பார்க்கறேன்! பை” என்று கூறி கட் செய்தான் அர்ஜுன்.
அதற்க்குப்பின் ஒரு பத்து நாட்கள் எவ்வித பிரச்சனையும் இல்லாமல், ஒழுங்காக சென்றது!
விதிக்கே போர் அடித்தது போலும்!! மறுபடியும் தன் விளையாட்டை ஆரம்பித்தது! இன்னும் நான்கு நாட்களில் திருமணம் என்ற நிலையில், ப்ரியங்காவின் பெற்றோர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் சென்னைக்கு வந்தனர்.
ப்ரியங்காவின் பெற்றோர்கள் மட்டும் அவளுடன் தங்கிக் கொள்ள, மற்றவர்களுக்கு தங்க ஏற்பாடு செய்ய உதவிக் கேட்டாள், ப்ரியங்கா. அவள் கேட்டது என்னமோ ராஜேந்திரனிடம் தான்.
ஆனால், அவருக்கு ஏதோ முக்கியமான வேலை இருப்பதாக கூறி, ராஜீவ்விடம் போனை கொடுத்து போனார். “ஹலோ யாரு?” ராஜீவ்விற்க்கு யார் பேசுவது என்று கூட சொல்லவில்லை அவன் தந்தை! சொன்னால் தான், அவன் பேச மாட்டானே !
ப்ரியங்காவிற்க்கு ஒரு நிமிடம் என்னவென்று புரியவேயில்லை!! “நான் நா… ப்ரியங்கா” ஏன் தான் தமிழ் பேசும் போது மட்டும் திக்குதோ?? ப்ரியங்கா அவளையே மனதிற்க்குள் திட்டினாள்!
“நீயா…..சொல்லு” மணிரத்தினம் படம் வசனம் போல், ஒற்றை வார்த்தை, பதில் இவனால் மட்டும் தான் குடுக்க முடியும். ப்ரியங்கா நினைக்கவில்லை, நான் தான் நினைத்தேன்!
ப்ரியங்கா ஒரு வழியாக சொல்லி முடித்ததும், அவன் “ஓகே! வில் டூ இட்” என்று கூறி போனை வைத்தான். ஆனால், மனதிற்க்குள் அவளுக்காக செய்யனுமா? என்ற கேள்வி எழுந்தது!
அவளுக்காக வேண்டாம், அப்பாக்காக செய்யலாம் என்று முடிவெடுத்து, ஹோட்டலில் ரூம் புக் செய்து கொடுத்தான் அர்ஜுன்!
அடுத்து, திருமணத்திற்க்கு ஒரு நாளுக்கு முன்னர், ப்ரியங்கா வீட்டினர் மருதாணி இடும் நிகழ்விற்க்காக இவர்களை கூப்பிட்டனர். “இது என்ன புதுசா? நீ நம்ம வீட்டிலையே வச்சுக்கோ நிஷா. அங்க எல்லாம் போக வேண்டாம்!”
வேறு யாராக இருக்க முடியும், நம்ம ஹீரோ தான்! “ஏன் போக கூடாது? அவங்க வீட்டில இது எவ்ளோ பெரிய விஷயம் தெரியுமா? எனக்கு இப்போ மருதாணி வைக்கவா கூப்பிடறாங்க? ப்ரியாவுக்கு வைக்கனும்! இது கூட தெரியல… கடவுளே!”
‘இவன் என்ன லூசா??’ என்கிற பாவனையுடன், நிஷா கிடைத்த வாய்ப்பில் அவள் அண்ணனை வாரினாள்…. கீதாவும், ராஜேந்திரனும் அவள் கூறியதையே வழிமொழியவும், ப்ரியங்காவின் வீட்டிற்க்கு போக ஒத்துக் கொண்டான் ராஜீவ்.
ஏனோ, தன் வாழ்க்கை தன் கையில் இல்லாதது போன்ற பிரம்மை உண்டானது!! எல்லோரும் சொல்கிறப்படி, நாம் நடப்பதால், அப்படி தோன்றுகிறதோ!
ஏதோ ஒன்று! ராஜீவ் அதை பற்றி மிகவும் யோசிக்கவில்லை! யோசிக்க நேரமும் இல்லை! ப்ரியங்காவின் வீட்டிலே, அவர்களுக்கு பலத்த வரவேற்ப்பு!!
அதுவும் முக்கியமாக ராஜீவ்வை எல்லாருக்கும் அறிமுகம் செய்து வைத்தார் ரவி!
ப்ரியங்காவும் அவள் பங்கிற்க்கு அவள் தம்பி, ப்ரதீக்கை அறிமுகம் செய்தாள். அவனும் ராஜீவ் உடன் பேச ஆர்வம் காட்டியதால், ராஜீவ்வும் நன்றாகவே பேசினான் அவனிடம்.
ஆனால், ரவி ப்ரதீக்கை கூப்பிடவும் அவன் “பை ஜீஜு” என்று கூறி தந்தையிடம் விரைந்தான். ப்ரதீக் அவனை ‘ஜீஜு’ என்று கூப்பிட்டதும், ராஜீவ்விற்க்கு ஒன்றும் புரியவில்லை!! ப்ரியங்கா தான், அவனின் பாவனையை பார்த்து, “ஜீஜூ மீன்ஸ் அக்கா ஹஸ்பன்ட்” என்றாள்.
அவள் கூறியவுடனே, இது என்ன நாய்க்குட்டியை கூப்பிடற மாதிரி இருக்கு? என்றே எண்ணினான் ராஜீவ்!! ஆனால் வெளியே யாரிடமும் சொல்லவில்லை.
மருதாணி இடும் வைபவமும் ஆரம்பமாகியது! இதில் குறிப்பிட வேண்டியது என்னவென்றால், ராஜீவ்வையும் ப்ரியங்காவின் அருகிலேயே உட்கார வைத்தனர்!!
அவன் எதோ தலையெழுத்தே என்று உட்கார்ந்தான்!! நிஷா ப்ரியங்காவின் கஸின்ஸ் உடன் நன்றாக ஒட்டிக் கொண்டாள்.
அதனால் இதை எல்லாம் கவனிக்கவில்லை! மருதாணி இடும் நேரம் முழுவதும் ப்ரியங்கா, ராஜீவ்வையே நோட்டம் விட்டுக் கொண்டிருந்தாள்…. அவனின் முகத்தில் தெரிந்த ஒட்டாத தன்மையை பார்த்து, அவள் முகமும் குழப்பத்தை காட்டி, வாடியது….
அவர்கள் எல்லாம் சென்றப்பின், தனியாக போய் உட்கார்ந்து யோசித்தாள்.
அவன் குடும்பத்திற்க்கும் தன் குடும்பத்திற்க்கும் ஒத்தே வராதோ??? இவன் கடைசி வரை இப்படியே தான் இருப்பானா? எப்படி அவங்க வீட்டில இருக்க போறேன் ?? பல கேள்விகள் அவளுக்குள்ளே!
விடை தெரியாமலே தூங்கிப் போனாள். யாருக்காவும் காத்திருக்காமல், திருமண நாளும் வந்தது! வடபழனி முருகன் கோவிலில் ராஜீவ் ஐயர் கூறிய மந்திரங்களை திருப்பி மறுஒளிபரப்பு செய்துக் கொண்டிருந்தான்.
ப்ரியங்காவும் சந்தன நிறமும் மெரூன் நிறமும், இழைந்தோடிய அழகிய பட்டு புடவையில் சமத்தாக வந்து அவனின் பக்கத்தில் உட்கார்ந்தாள். முதலில் ராஜீவ்வின் குடும்ப முறைப்படி, திருமாங்கல்யம் சூட்டி அவளை மனைவி ஆக்கிக் கொண்டான்.
அக்னியை வலம் வந்தவுடன், மறுபடியும் ப்ரியங்காவின் குடும்ப முறைப்படி, கல்யாணம் நடந்தது. இந்த விஷயம் ராஜீவ்விற்க்கு தெரியாததால் அவனின் தந்தையின் முகத்தை பார்த்தான்!
அவர் ஆமோதிப்பாக தலையசைக்கவும் அவனால், ஒன்றும் செய்ய இயலவில்லை…. மனதிற்க்குள்ளே புழுங்கிக் கொண்டான்! ‘இவளை ஒரு தடவை கல்யாணம் பண்ணுவதே பெரிய விஷயம்! இதுல ரெண்டு தடவ வேற!! ஆல் மை பேட் டைம்!!’
இப்படி அவன் நினைப்பு இருக்க அவனின் மனைவியோ, இந்த பந்தம் என்றைக்கும் நிலைத்து இருக்க வேண்டி, கடவுளிடம் வேண்டிக் கொண்டாள்.
அதற்க்குப் பின், பெற்றோர்களிடம் ஆசிர்வாதம் வாங்கி, வந்தவர்களை கவனிப்பதற்க்கு நேரம் சரியாக இருந்தது. கடைசியாக இவர்கள் கிளம்பி, ப்ரியங்கா இப்பொழுது இருக்கும் வீட்டிற்க்கு சென்று, அவளின் உடைமைகளை எடுத்துக் கொண்டனர்.
ராஜீவ்வின் வீட்டிற்க்கு வந்த போது முன்பகல் ஆகி இருந்தது. ப்ரியங்காவை விளக்கேற்ற சொன்னார் கீதா. அவரால் இன்னும் கூட தன் மருமகளுடன் நன்றாக பழக முடியவில்லை!!
மொழி பிரச்சனை ஒரு காரணமாகியது… ஆனால் அவராலும் அவள் செய்ததை மன்னிக்க முடியவில்லை என்பதே உண்மை. இப்போழுது வேலை தலை மேல், இருந்ததால் அவரால் மேலும் சிந்திக்க முடியவில்லை…..
ஹோட்டலில் சாப்பாடு சொல்லி இருந்ததால், ஈவ்னிங் நடக்க போகும் ரிசப்ஷனுக்கான வேலைகளில் முனைந்தனர் அனைவரும்.
நிஷா அவளின் அண்ணியை கூட்டிக் கொண்டு, வீட்டை சுற்றி காண்பித்தாள். வீடு என்றால், மிகப் பெரிய வீடேல்லாம் இல்லை. கீழே ஹால், இரண்டு படுக்கை அறை, சமையல் அறை மற்றும் பூஜை அறை.
மேலே நிஷாவின் அறையும் ராஜீவ்வின் அறையும் இருந்தது. கீழே உள்ள அறைகளை பெரியவர்கள் உபையோகித்தனர்.
எல்லாம் சரி ராஜீவ் என்ன செய்தான் தெரியுமா? பால் பழம் குடித்ததும் நேரே டிவி முன் உட்கார்ந்து, செய்திகளை பார்க்க ஆரம்பித்தான்!! இவனை என்ன செய்வது?
இன்றைக்கு முக்கியமான நாள் என்பதால், ராஜேந்திரனும் ஒன்றும் சொல்ல முடியாமல் இருந்தார்.!!!
ஆனால், ப்ரியங்காவை தனியாக விடாமல், நிஷா எப்பொழுதும் கூடவே இருந்து உதவி புரிந்தாள்.
ஈவ்னிங் நடக்க போகும் ரிசப்ஷனுக்கு மூன்று மணியிலிருந்தே ரெடியாக ஆரம்பித்தாள் ப்ரியங்கா! ப்யூட்டி பார்லர் பெண்கள் தங்கள் கைவரிசயை அவளிடம் காண்பித்து கொண்டிருந்தனர்.
கூடவே, எக்ஸ்ட்ரா ஃட்டிங்காக நிஷா வேறு!!! ராஜீவ் தனியாக தான் ரிசப்ஷன் நடக்கும் ஹோட்டலுக்கு சென்றான். ப்ரியங்கா நேராக ஹோட்டலுக்கு வருவதாக ஏற்ப்பாடு.
மாலை ஆரரை மணி அளவில், ரிசப்ஷன் தொடங்கியது. ப்ரியங்கா மிகவும் அழகாக இருந்தாள். ராஜீவ்விற்க்கே அப்படி தோன்றியது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!!
இதில் நிஷா வேறு ராஜீவ்விடம் வந்து, “அண்ணி சூப்பரா இருக்காங்கல?? அவங்களுக்கு லெஹங்கா சூப்பரா இருக்கு!” என்றாள்.
“மதியம் மூணு மணியிலிருந்து மேக்கப் போட்டா அப்படித்தான் இருக்கும்!” ராஜீவ்வின் குரலில் நக்கல் தெரிந்தது. “போடா! உனக்கு அவங்க அருமை தெரியலை!” நிஷா திட்டிவிட்டு சென்றாள்.
ராஜீவ்வும் கோட்-சூட்டில் கம்பிரமாக அழகாக இருந்தான்… ப்ரியங்கா ஏன் பார்வையை திருப்ப போகிறாள்? அவள் கண்ணுக்கு அவன் மட்டுமே காட்சி அளித்தான்.
எல்லாம் நன்றாக தான் சென்றுக் கொண்டிருந்தது…. முதலில், வந்து கடுப்பேற்றியது ப்ரியங்காவின் தோழி மது!
“ஹாப்பி மேரீட் லைப் அண்ணா!” அதே மாதிரி வாழ்த்தை ப்ரியங்காவிடமும் கூறினாள். ப்ரியங்காவின் முகம் மலர்ந்த அதே நோடி, ராஜீவ்வின் முகம் இருண்டது.
தலையை மட்டும் அசைத்தான்… அவளை பார்த்தால், ஏனோ நடந்தது எல்லாம் ஞாபகம் வந்தது அவனுக்கு.
மதுவும் அதை உணர்ந்து, உடனே மேடையை விட்டு இறங்கினாள். ப்ரியங்கா தான் போகும் தோழியை ஏக்கமாக பார்த்துக் கொண்டு நின்றாள். சிறிது நேரத்தில், இரண்டு பேரும் சகஜ நிலைக்கு திரும்பினர்.
ஆனால், இரண்டு நிமிடங்கள் கழித்து, ப்ரியங்காவின் கை தானாக தன் துணைவனின் கறத்தை பற்றியது. ‘என்ன’ என்று கண்களாளே கேட்டான் அவன்.
கண்ணில் பயத்துடன் அவள் பார்வை சென்ற திசையை நோக்கி, அவனின் பார்வையும் பயணித்தது. சென்ற இடம் சரியில்லையோ?? அவனின் முகம் மீண்டும் இறுகி போனது.
ஏன்னென்றால், ப்ரியங்கா பார்த்துக் கொண்டிருந்தது, அப்பொழுது ரிசப்ஷன் ஹாலின் உள்ளே வந்த அர்ஜுன் தம்பதியரை! அவர்கள் நேரே மேடை ஏறும் வரிசையில் நின்றனர்.
அவர்கள் மேலே வந்ததும், பொதுவாக, “ஹாப்பி மேரீட் லைப்” என்றுக் கூறினர். போட்டோ எடுத்ததும், ராஜீவ்விடம் வந்து, சந்தியா “அவளுக்காவது உண்மையா இரு” என்று மெதுவான குரலில் கூறிச் சென்றாள்.
அதற்க்குப்பின் என்ன முயன்றும் ராஜீவ்வின் மூடை மாற்ற முடியவில்லை. ஆனால், நம் நாயகி அவர்கள் சென்றவுடன், நார்மல் ஆகிவிட்டாள்.
எல்லோரும் சென்றப்பின் சாப்பிடும் இடத்திலும், நிஷா மற்றும் ப்ரியங்காவின் அரட்டை ஆரம்பமாகியது….. ராஜீவ்வை அவர்கள் கண்டு கொள்ளவேயில்லை!
அவர்கள் பாட்டிற்க்கு பேசுவதும், சிரிப்பதும், சுற்றி முற்றி யாராவது பார்க்கிரார்களா என்று கவனிப்பதுமாக இருந்தனர்!!
ராஜீவ் இதை கவனித்து கொண்டு தான் இருந்தான். ‘இவங்க இரண்டு பேரும் ஒண்ணா சேர்ந்தாங்கனா பண்ற அலப்பரயை தாங்க முடியாது போலவே?! கடவுளே, இனிமேல் வீட்டுலயும் இதே நிலைமை தானா??’
ரிசப்ஷன் முடிந்து திரும்ப ராஜீவ்வின் வீட்டிற்க்கு செல்லும் போதும் இதே கதையே தொடர்ந்தது!
வீட்டிற்க்கு சென்றதும் அவன் அப்பா அவனை கீழே உள்ள அறையில் தயாராகி, அவனின் அறைக்கு செல்லச் சொன்னார். ‘இது வேறையா?’ அவனுக்கு ஆயாசமாக இருந்தது.
அவர் சொன்னப்படி செய்தான் ராஜீவ். அலங்கரிக்கப் பட்ட அவனின் அறையில், ப்ரியங்காவிற்க்காக காத்துக் கொண்டிருந்தான்.
மேடம் மிகவும் பொறுமையாக கிளம்பி, ஒரு அரை மணி நேரம் கழித்து தான் வந்தாள் அவனின் அறைக்கு. வந்தவளை முறைத்துப் பார்த்தான் ராஜீவ்.
“ஏன் இவ்ளோ சீக்கிரமா வந்துட்டிங்க மேடம்? இன்னும் கொஞ்சம் நேரம் கழிச்சு வர வேண்டியது தானே?” அவனின் குரலில் அடக்கப்பட்ட கோபம் தெரிந்தது.
அவன் கூறியது புரிந்ததால், “நோ… நான் போறா சொன்ன...பட்…….” அவள் முடிக்கவில்லை! அதற்க்குள் தான் அவள் கணவன் அவளை திட்ட ஆரம்பித்தானே!
இரண்டு நிமிடம் அவன் திட்டி முடித்ததும், ப்ரியங்கா ஆங்கிலத்தில் கீழே கூறியவற்றை கூறினாள்.
“திட்டுவதற்க்கு எப்போதும் தாய் மொழிதான் வசதி! எனக்கு தெரியும். ஆனால், நீங்க இப்போ திட்டியது எனக்கு ஒன்னுமே புரியல!! அதனால, இங்கிலிஷ்ல மறுபடியும் திட்டுறிங்களா?? ப்ளீஸ்!”
அவள் மெதுவான குரலில் கூறிய விதமும், அவளின் முகத்தின் ‘பாவப்பட்ட பொண்ணு நான்’ என்ற பாவனையும் ராஜீவ்விற்க்கு சிரிப்பை வரவழைத்தது.
அவனின் சிரிப்பை பார்த்ததும் ப்ரியங்காவும், கண்களாளே அதை சிறைப் பிடித்தாள்!!!
அப்பொழுது ராஜீவ்வின் மொபைல் ஒலியெழுப்பி அவர்களை திசை திருப்பியது!! யார் இந்த நேரத்தில் அழைப்பது?? தொலைப்பேசி ‘கவுதம்’ என்றது….
கவுதம் என்றதும் மிக முக்கியமான காரணம் ஏதும் இன்றி கூப்பிட மாட்டான் என அறிந்ததால், உடனே அவனுடன் உரையாட ஆரம்பித்தான்.
பால்கனிக்கு சென்று பேசியபடி ராஜீவ் இருக்க, இங்கே ப்ரியங்கா அவன் முதன் முதலாக அவளை பார்த்து சிரித்ததை எண்ணி மகிழ்ந்துக் கொண்டிருந்தாள். சில நிமிடங்கள் கழித்து உள்ளே வந்த ராஜீவ்வின் முகத்தை பார்த்து அந்த மகிழ்ச்சி அடியோடு அழிந்தது.
“கிருஷ்ணாவை போலீஸ் அரெஸ்ட் பண்ணிட்டாங்க!! இப்போ போலீஸ் கஸ்டடில தான் இருக்கான்!” ராஜீவ்வின் இறுகிய குரலை கேட்டு, ப்ரியங்காவின் முகம் பேய் அறைந்தது போல் ஆனது.
‘கிருஷ்ணா’ அந்த ஒரு பெயரே அவளின் முகத்தை வெளுத்துப் போக வைக்க போதுமானதாக இருந்தது!