Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Kangal Verkindrana...6

  • Thread Author
அத்தியாயம் ஆறு

ராஜீவ்வின் பொறுமை மிகவும் சோதனைக்கு உள்ளாகியது பின் வந்த நாட்களில். அடுத்த நாள் அதாவது திருமணம் முடித்த இரண்டாவது நாள், அனைவரும் புனேவுக்கு பயணப்பட்டனர்.

புனேவுக்கு பயணம் ஆரம்பித்ததிலிருந்து ப்ரியங்காவின் அட்டகாசமும் ஆரம்பாகியது என்றே சொல்ல வேண்டும்! அதுவும் புனேவுக்கு சென்றவுடன் வேறு லெவலில் இருந்தாள் அவள்!!!

அங்கே அவர்கள் மூன்று நாட்கள் இருப்பதாக இருந்தது. போன முதல் நாளே அவளின் சொந்தபந்தங்கள், கல்யாணத்திற்க்கு வர முடியாதவர்கள், முக்கியமாக தோழர்கள், தோழியர்கள் நிறைய பேர் வந்த வண்ணம் இருந்தனர்.

ராஜீவ்விற்க்கு மிகவும் ஆச்சரியம். ‘இவளுக்காக இவ்ளோ பேர் வந்துருக்காங்களா? ஹ்ம்ம்ம்ம்! எல்லாம் நேரம்!’ ராஜீவ்வின் எண்ணம் இப்படியே இருந்தது!

இத்தனை வேலைகளுக்கு நடுவிலும் அவள் யாரையும் கவனிக்கத் தவறவில்லை. எப்பொழுதும் நிஷா ப்ரியங்காவின் வால் பிடித்து அவளுடன் சுற்றிக் கொண்டிருந்தாள். அதனால், அவளைக் கொண்டே யார் யாருக்கு என்னென்ன தேவை என்பதை அறிந்தாள்.

அதுவும் அங்கே வந்த ப்ரியங்காவின் கஸின்ஸ் தான் ராஜீவ்வை பாடாய்ப்படுத்தினர். “ஜீஜு ஜீஜு” என்று கூப்பிட்டு கொண்டே அவனுடனே இருந்தனர். இவர்கள் ஒரு பக்கம் என்றால், ப்ரியங்காவின் உறவினர் ஒருவர், தன்னைத் தானே அறிமுகபடுத்திக் கொண்டு பேச ஆரம்பித்தார்.

அப்பொழுது நிஷாவும், ஈஷ்வரும் அவனுடன் இருந்தனர். அவர் இவனிடம், “நீங்க போலீஸ் டிபார்ட்மென்ட்ல இருக்கீங்களாமே? இன்ஸ்பெக்டரா இல்ல சப்-இன்ஸ்பெக்டரா??” என்று கேட்டாரே பார்க்கலாம்; அவன் முகம் நொந்தே போனது!!

ராஜீவ்வின் மைன்ட் வாய்ஸ் இது தான் – “அடப்பாவிங்களா! கடைசியில இன்ஸ்பெக்டரா இல்ல சப் – இன்ஸ்பெக்டராங்கற நிலைமைக்கு கொண்டு வந்துட்டாங்களே!”

நிஷாவிற்க்கும் ஈஷ்வருக்கும் சிரிப்பை அடக்குவது கடினமாக இருந்தது. இருந்தாலும் சமாளித்தனர். ராஜீவ் அதற்க்குள், அவரின் முகத்தை நேராக பார்த்து, “நான் ஐ.பி.எஸ். பாஸ் பண்ணி, அஸிஸ்டென்ட் கமிஷ்னரா இருக்கேன்” என்றான்.

அந்த மனிதரின் பார்வையில் மரியாதை தானாகவே கூடியது! “ஹோ…. குட் குட்” என்று சொல்லி இடத்தை காலி செய்தார்.

அதற்க்குப்பின் நிஷா சிரித்துக் கொண்டே, “டேய் ராஜ், கடைசியில நீ கூட சிரிப்பு போலீஸ் மாதிரி ஆவேன்னு நினைக்கவே இல்லை! தாத்தா பார்த்திங்களா? நானும் போலீஸ் தான்!! நானும் ஐ.பி.எஸ். தான்!! அப்படிங்கற மாதிரி இல்ல இவன் சொன்னது??” என்றாள்.

ராஜீவ் கோபத்துடன் அவளை முறைத்தான்!! ஈஷ்வரும் சிரிப்புப் பாதி, கேலி மீதியான குரலில் இன்னும் அவனை ஓட்டினார். “சும்மா இரு நிஷா!! உன்கிட்ட எத்தனை வாட்டி சொல்லிருக்கேன்? கோபம் வர மாதிரி காமெடி பண்ணாதேன்னு. பாரு ராஜ்க்கு கோபம் வருது!”

அவர் முடிக்கக் கூட இல்லை, ராஜீவ் அந்த இடத்தை காலி செய்தான்! ‘சே… இந்த நிஷா எல்லாம் கலாய்க்கற நிலைமைக்கு ஆளாகிட்டோமா?? ப்ச்ச்ச்!’ அவனால் புலம்ப மட்டுமே முடிந்தது.

ஆனால். அவன் பின்னேயே நிஷாவும் ஈஷ்வரும் அவனை சமதானப்படுத்த வந்தனர்! கெஞ்சிக் கொஞ்சி, சமாதானமும் படுத்தினர். அதற்க்கு அடுத்த நாள், ரிசப்ஷனும் நல்ல படியாக முடிந்தது!

ரிசப்ஷனில், ப்ரியங்காவின் வாய் ஓயவேயில்லை எனலாம். அந்த அளவிற்க்கு இருந்தது அவள் அட்டகாசம்!

வருபவர்களை, ராஜீவ்விடம் அறிமுகம் செய்வதில் தொடங்கி, வந்திருந்த அவளின் ப்ரெண்ட்ஸ்களிடம் மேடையிலேயே அரட்டை அடிப்பது வரை செவ்வனே செய்தாள்.

ராஜீவ்விற்க்கு எல்லாம், ஏதோ ஹிந்தி சினிமா பார்ப்பது போலவே இருந்தது!! புது ஒரு உலகிற்க்குள் வந்தது போல இருந்தது! ஆனால், ப்ரியங்காவிற்க்கும் அவனின் வீட்டில், அப்படி தான் இருக்கும், என்ற நினைப்பு வரவேயில்லை!!!

எல்லாம் முடிந்து ஊருக்கு திரும்பும் வேலையில், ப்ரியங்காவின் கண்ணீருக்கு அளவே இல்லாமல் போனது! அவள் அழ, அதை பார்த்து அவள் அம்மா அழ, அவர் அப்பா இருவரையும் சமாதானப்படுத்த, ப்ரதீக் அவன் அக்காவை, அழுகையை நிறுத்த சொல்லி அதட்ட ஒரு அழுகை நாடகம் அரங்கேறியது, ராஜீவ்வை பொறுத்தவரை!

ஃளைட்டிலும் ப்ரியங்கா அமைதியாகவே இருந்தாள். ஆனால், சீக்கிரமே நிஷா அவளுடன் பேசி அவளை பழைய பார்முக்கு கொண்டு வந்தாள்!

வீட்டிற்க்கு வந்ததும் திருமணத்திற்க்கு எடுத்த லீவ் எல்லாம் முடிந்ததால், ராஜீவ்வும் ப்ரியங்காவும் தத்தம் வேலையில் சேர்ந்தனர்! ப்ரியங்கா தினமும் வீட்டில் கீதாவிடம் தமிழ் கற்றுக் கொண்டு, அதற்க்கு பதில் ஆங்கிலத்தை அவருக்கு சொல்லி கொடுத்தாள்.

மாமியாரும் மருமகளும், இப்படியே அந்த வீட்டை அன்பால் நிறப்பினர்! நிஷாவும் ப்ரியங்காவும் சேர்ந்து அடிக்கும் லூட்டிக்கு அளவே இல்லாமல் போனது!

அப்படித்தான் அன்று அவர்கள் ப்ரியங்காவின் அறைக்கு, சத்தம் எழுப்பிக் கொண்டே வந்தனர்! அறையில் தூங்கிக் கொண்டிருந்த ராஜீவ் இதனால், தூக்கம் கலைந்து, கோபமாக கத்தினான்.

“என்ன வேணும் உங்க ரெண்டு பேருக்கும்? எப்ப்ப்ப்ப்பொவும் டிஸ்டர்ப் பண்ணிக்கிட்டே இருக்கீங்க?”

அறையின் வாசலிலேயே நின்றுக் கொண்டு, நிஷாவிற்க்கு மட்டும் கேட்கும் மெதுவான குரலில், “நீங்க எப்ப்ப்ப்ப்பொவும் கத்திக் கிட்டே இருக்கீங்க!” என்றாள் ப்ரியங்கா அவனை போலவே…..

இதை கேட்டு நிஷா கொல்லென சிரிக்க, ப்ரியங்கா புன்னகைக்க, ராஜீவ்வின் முகம் தான் கடுத்தது! சிறிது இடைவேளை விட்டு, “வா நிஷா உன் ரூம் போலாம்!” என்றாள் பலத்த குரலில். பார்வை மட்டும் ராஜீவ்விடம் இருந்தது!

நிஷாவின் தோளில் கைப் போட்டு, போகும் முன், உள்ப்பக்கம் திரும்பி, ராஜீவ்வை பார்த்து கண்ணடிக்கவும் மறக்கவில்லை அவள். ராஜீவ்விற்க்கு அதை பார்த்ததும் கட்டுக் கடங்காமல், கோபம் வந்தது!

ஆனால், இதற்க்கெல்லாம் அவளை திட்டினால், திட்டிக் கொள் என்று இருப்பவளிடம் என்னவென்று கேட்பது?! அவள் எடுத்த முடிவு பாவம் ராஜீவ்விற்க்கு தெரிய வாய்ப்பில்லை!

நாட்கள் இப்படியே செல்ல, ஒரு நாள் கமிஷ்னர் அலுவகத்தில் கவுதம் உடன் வேலையாக இருந்த போது, அர்ஜுன் அவனை பார்க்க வந்தான்!

அந்த அறையில், கவுதம் மற்றும் ராஜீவ் மட்டுமே இருந்தனர். கதவை தட்டி உள்ளே வர அனுமதி கேட்டான் அர்ஜுன். அவனை ஒரு லாயராக தெரியும் கவுதமிற்க்கு! மற்றபடி அவனுக்கும் ராஜீவ்விற்க்கும் இருக்கும் விஷயமெல்லாம் தெரியாது!

உள்ளே வந்தவன், நேராக கவுதமின் அருகில் வந்து, அவன் நலத்தை விசாரித்து பேசிக் கொண்டிருந்தான். இதை எல்லாம் கண்டும் காணாமலும் இருந்தான் ராஜீவ்!

ஒரு ஸ்வீட் பாக்ஸ்யை திறந்து, கவுதமிடம் நீட்டி, “நான் அப்பாவாக போறேன் கவுதம்! ஸ்வீட் எடுத்துக்கோ” என்றான் ஒரு விரிவான சிரிப்புடன்!

சரக்கென்று ராஜீவ்வின் தலை திரும்பியது அர்ஜுனை நோக்கி. ஆனால், ஒன்றும் சொல்லவில்லை அவன்! ஒரு சிறு அதிர்ச்சியுடன் மட்டும் பார்த்துக் கொண்டிருந்தான்!

‘ஏன் ராஜீவ் சார், இதை கேட்டு ஷாக் ஆகிட்டார்?’ கவுதமின் எண்ணம் இதுவாகவே இருந்தது! மறுபடியும் பழைய நிலைமைக்கே முகத்தை கஷ்டப்பட்டு கொண்டு வந்தான் ராஜீவ்!

‘நல்லதே நினை ராஜீவ்… நல்லதே நடக்கும்’ அவனுக்கு அவனே சொல்லிக் கொண்டான்!

ராஜீவ்விடமும் ஸ்வீட் பாக்ஸை நீட்டினான் அர்ஜுன். ஒரு புன்னைகை உடனே ஸ்வீட் எடுத்துக் கொண்டான் ராஜீவ். கூடவே, “ரொம்ப சந்தோஷம் அர்ஜுன்!! சந்தியாவிடமும் என்னோட விஷ்ஷஸ் சொல்லிடு…” என்றான் அதே முகத்துடன்.

அர்ஜுன் புருவத்தை தூக்கி ஆச்சரியம் காட்டினாலும் தலையசைத்து அதை ஏற்றுக் கொண்டான்! மீண்டும் ராஜீவ்வின் நினைப்பு எல்லாம் வேலையின் பக்கம் திரும்ப, அவன் லாப்டாப்பை இயக்க தொடங்கினான்.

அர்ஜுனும் கவுதமிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு, கிளம்பும் சமயம் ராஜீவ்வை நோக்கி, “உன்னை கொல்ல வந்தவங்களை பிடிச்சிட்டியாமே? கங்கிராட்ஸ், ராஜீவ்” என்றான் ஒரு பாராட்டும் குரலில்.

இது தான் அர்ஜுனுக்கும் ராஜீவ்விற்க்குமான பந்தம்…. அவர்களுக்குள் ஆயிரம் விஷயங்கள் இருந்தாலும், ‘வேலை’ என வந்தால் அவர்கள் இருவருமே எதையும் நடுவே கொண்டு வருவதில்லை.

இதுவே அவர்களுக்கு மற்றவர்களிடம் நற்பெயரை பெற்றுத் தந்தது எனலாம். ராஜீவ்வும் ஒரு தலையசைப்புடன், “ஆமா அர்ஜுன்… போன மாசம் தான் பிடிச்சோம்! இன்னும் நிறைய வேலை இருக்கு, பார்க்கலாம் என்ன ஆகும்னு!” என்றான்.

“ஆல் தி பெஸ்ட் டு போத் ஆப் யூ” என்று கூறி விடைப்பெற்றான் அர்ஜுன். ராஜீவ்வும் கவுதமும் மீண்டும் வேலையில் மூழ்கினர்.

இரவு எட்டு மணிக்கு வேலை முடிந்தவுடன், கவுதம் ராஜீவ்விடம் சொல்லிக் கொண்டு புறப்ப்ட்டான் அவன் வீட்டை நோக்கி! ராஜீவ்வும் புறப்பட வேண்டும் தான். ஆனால், வீட்டிற்க்கு போக வேண்டும் என்ற நினைப்பே அவனுக்கு, பாகற்க்காய் ஜூஸ் குடித்தது போல கசந்தது!!!

ஏன் கசக்குதா? எல்லாம் அவன் அருமை மனைவியால் தான்! ‘அவ செய்யறது எல்லாம் தெரிஞ்சு தான் செய்யறாளா, இல்ல தெரியாம செய்யறாளா?’ என்ற குழப்பம் தான் முதலில் அவனுக்கு வந்தது.

ஆனால், போகப் போக புரிந்தது, தெரிஞ்சே தான் எல்லாத்தையும் செய்யறாள் என!!! ‘அப்படி அவள் என்ன செய்து விட்டாள்’ என்று தான யோசிக்கறிங்க?

இதே கேள்வியை ராஜீவ்விடம் கேட்டால், ‘என்ன செய்யல?’ என்று பதிலுக்கு கேட்பான். திருமணம் ஆகி என்னவோ ஒரு மாதம் தான் ஆகியது!

ஆனால், அவனுக்கு ஒரு வருடம் ஆனதுப் போல ஒரு ப்லீங் வந்தது என்னவோ உண்மை. ப்ரியங்கா அப்படி அவன் உயிரை வாங்கிய சாம்பிள் பிட்டுகள் இதோ….

முதலாவதாக, அவள் மொபைலின் ரிங்டோனை மாத்தினாள். என்ன பாட்டுக்கு மாத்தினாள் என்பதை தான் குறிப்பிட வேண்டும் இங்கே. ‘கோபுர வாசலிலே’ படத்தில், வரும் ‘காதல் கவிதைகள் படித்திடும் நேரம்’ என்ற பாட்டிற்க்கு தான் மாத்தினாள்.

பாட்டு என்னவோ நல்ல பாட்டு தான். ஆனால் அது ஆரம்பம் ஆகும் வரிகள் தான் ராஜீவ்வை எரிச்சல் ஊட்டியது. பின்னே,

“Yes!!! I love this idiot…

I love this lovable idioooooooooot!!!!”

என்று ரிங்டோன் வைத்தால், அவனும் தான் என்ன பண்ணுவான்? முதன் முதலில், கேட்கும் போது, ராஜீவ்விற்க்கு மிகுந்த கோபம் வந்தது.

“ஹே… என்ன ரிங்டோன் இது? முதல்ல மாத்து! சேஞ் இட் ரைட் நௌ!” என்று கத்தினான் ராஜீவ்.

ப்ரியங்காவிற்க்கு இப்பொழுது எல்லாம் கூர்ந்து கவனித்தால், ஓரளவிற்க்கு மற்றவர்கள் பேசுவது புரிந்தது! வீட்டில் எல்லோருடனும் பேசுவது, டிவியில் தமிழ் சேனல்கள் பார்ப்பது அவளை இந்த நிலைமைக்கு தேற்றியிருந்தது.

அதனால் அவன் கூறியதும் அவனின் எரிச்சலும் புரிந்தது, நன்றாகவே!! ஆனால், ஒரு ஆச்சரியமான பார்வையுடன், “ஏன் சேஞ் பண்ணனும்? நிஷா மொபைல்ல கேட்டதும் எனக்கு நிறைய பிடிச்சுது திஸ் சாங்! வெறி நைஸ் சாங்…. நான் சேஞ் பண்ண மாட்டே” என்று அழுத்தம் திருத்தம்மாக சொன்னாள் அவன் மனையாள்.

பேசுவது தப்பாக இருந்தாலும் பரவாயில்லை என இப்பொழுது எல்லாம் தமிழிலேயே முழுமையாக பேசினாள்.

இந்த பதில் ராஜீவ்வை முழுமையாக பொறுமை இழக்க செய்தது!! “எனக்கு பிடிக்கல ப்ரியங்கா! சோ மாத்து” என்றான் கோபம் முழுதும் கட்டுப்படுத்திய குரலில்.

“ஓகே! நா சேஞ் பண்றேன். நோ ப்ராப்ளம்! பட், நீ உன் மொபை… சாரி சாரி!! நீங்க உங்க மொபைல் ரிங்டோன் சேஞ் பண்ணனும்! தாட் டூ, நான் சொல்ற சாங் தான் சேஞ் பண்ணனும் ஓகே???” என்றாளே பார்க்கலாம்!

ராஜீவ் எதுவும் சொல்ல முடியாமல், அந்த இடத்தை காலி செய்தான்! ப்ரியங்கா நமட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டு, அவன் போவதையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

இன்னோரு நாள், ராஜீவ் ஈஷ்வருடன் செஸ் விளையாடிக் கொண்டிருந்தான். நன்றாக போய் கொண்டிருந்த விளையாட்டில், நடுவே புகுந்தாள் ப்ரியங்கா! ராஜீவ்வின் பக்கத்தில் உட்கார்ந்து, அவன் விளையாட்டை இவளே விளையாட ஆரம்பித்தாள்.

எப்போதும் செஸ் என்று வந்துவிட்டால், அந்த வீட்டில் ஈஷ்வர் தான் ஜெயிப்பார்.

ஆனால், ப்ரியங்கா அவரையே மிஞ்சினாள். அவள் வந்து விளையாட ஆரம்பித்தவுடன், ஈஷ்வர், “ஹே! நீ வராத இப்போ…. நான் ஜெயிக்கற மாதிரி இருக்கேன். வந்து உன்னோட ஹஸ்பென்டை வின் பண்ண வெச்சுருவ!” என்று கூறினார்.

ஆனால், ப்ரியங்கா கண்டுக் கொண்டதாக தெரியவில்லை! அவளே விளையாடி ராஜீவ்வை ஜெயிக்க வைத்தாள். ஈஷ்வரும் அவளை கடைசியில் பாராட்டினார்.

ராஜீவ்விடம் திரும்பி, “உன்னோட வைப் ரொம்ப புத்திசாலிடா ராஜ்! ஒரு கேம் கூட நான் அவகிட்ட ஜெயிக்கவேயில்லை!” என்று ஒரு பெருமைக்குரிய குரலில் சொன்னார்.

இதை கேட்ட ராஜீவ் தலையசைத்து, ஒரு இகழ்ச்சியான பார்வையுடன், “ஆமாம் தாத்தா! பட் இந்த புத்திசாலித்தனம் எல்லாம் விளையாட்டில் மட்டும் தான்!” என்றான்.

எல்லோருடைய முகமும் ஸ்விச் போட்டது போல் சட்டென்று மாறியது, ப்ரியங்கா உட்பட! ஆனால் ப்ரியங்கா உடனே சுதாரித்து, “எஸ் தாத்தா…. ராஜீவ் சொல்றது கரக்ட்! சோ ஒன்லி, நா ராஜீவ்வை லவ் பண்ணி, கல்லியாணம் பண்ணிக்கிட்டே” என்றாள் கேலிக் குரலில்.

எல்லோரும் ஒன்றாக நகைத்தனர் அவனை பார்த்து! ராஜீவ்வின் முகம் கறுத்து போனது இவள் பதிலை கேட்டு!

இப்படி பலப்பல நிகழ்வுகள்… எல்லாமே அவனை வெறுப்பேற்றியது!! ‘இவளை என்ன சொல்லி அடக்குறது? ஒன்னுமே புரியலையே??’ அவன் மண்டையை போட்டுக் குழப்பிக் கொண்டான்.

எல்லாவற்றிர்க்கும் சிகரம் வைத்தால் போல, அவனால் தாங்க முடியாதது என்னவென்றால், ப்ரியங்காவின் பேச்சு! ஆம், ப்ரியங்கா எப்பொழுதும் யாருடனாவது பேசிக் கொண்டே இருந்தாள்…..

அவன் வீட்டிலிருந்து கிளம்பும் போது கேட்கும் பேச்சு அவளுடையதாக இருக்கும்! வீடு திரும்பும் போது கேட்கும் குரலும் அவளுடையதாக தான் இருக்கும்!! படுக்கும் போது கேட்கும் குரலும் அவளுடையதாக இருக்கும்!

இப்படி பேசிப் பேசியே கொல்வது எப்படி, என்பதை ராஜீவ்விற்க்கு லைவ் ரிலே கண்பித்துக் காட்டினாள் ப்ரியங்கா.

இதனாலேயே, அவள் பேசுவதை காதில் வாங்கினாலும் கருத்தில் வாங்க மாட்டான் ராஜீவ்! அதுவே அவனுக்கு வினையாக போயிற்று!

சில நாட்கள் கழித்து, ப்ரியங்கா ஒரு நாள் இரவு ராஜீவ் ரூமிற்க்கு வந்தவுடன், “ராஜ் இன்னிக்கு என்னாச்சு தெரியுமா?” என்று ஒரு பரவசக் குரலும், ஆச்சரிய முகத்துடனும் பேச ஆரம்பித்தாள்.

ராஜீவ் காதை பொத்திக் கொண்டு, “ஐயோ!!!! எனக்கு ஒன்னும் தெரிய வேண்டாம் ப்ரியங்கா! ப்ளீஸ், பேசாம இரு…. நான் தூங்கனும்!” என்று எரிச்சலாக கூறி படுக்க சென்றான்.

ப்ரியங்கா உடனே, “நீங்களே என்கிட்ட கேப்…. கேப்பீங்க… தாட் டைம், நா சொல்ல மாட்டே!” என்றாள் தெனாவட்டாக. “நான் உங்ககிட்ட கேக்கவே மாட்டேன் மேடம்… ரொம்ப பீல் பண்ணாதிங்க! குட் நைட்!” என்றான் ராஜீவ் பதிலுக்கு.

ஆனால், அவனுக்கு தெரியவில்லை, இரண்டு நாட்களிலேயே, அவளிடம் அந்த விஷயத்தை தானே கேட்போம் என்று.

அதுவும் ப்ரியங்காவை, அர்ஜுன் மற்றும் சந்தியாவுடன் ஒரு காபி ஷாப்பில், சிரித்துப் பேசி பார்த்தப் பின்னர், அந்த விஷயத்தை கேட்போம் என்று அவன் கனவிலும் நினைக்கவில்லை!






 
Top