அத்தியாயம் 9
“ப்ரியா, இன்னிக்கு சென்னா பட்டூரா சூப்பரோ சூப்பர்!!! ராஜ் மட்டும் இங்க இருந்தா, நாலு பூரிய அசால்டா உள்ள தள்ளிருப்பான்.” நிஷா முதல் வாக்கியம் கூறும் போது முகத்தில் இருந்த பூரிப்பு, அடுத்த வாக்கியத்தில் சற்றே மட்டுப்பட்டது.
யார் முகத்தில் என்று நான் தனியாக வேறு சொல்ல வேண்டுமா? எல்லாம் நம் ஹீறோயின் ப்ரியங்கா முகத்தில் தான். ‘ராஜ்’ அந்த வார்த்தையை கேட்கும் போது ஒருங்கே வந்த கோபத்தையும் வலியையும் அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை.
வலி வந்தது அவனை பிரிந்து இருப்பதால், என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால், கோபம் ஏன்?? ஏன்னென்றால், “டைம் கிடைக்கும் போது நானே வரேன்” என்று சொல்லிச் சென்ற அவள் கணவன், சென்று ஐம்பது நாட்கள் ஆகியும் இன்னும் வரவில்லை.
ஆம், ராஜீவ் டெல்லிக்கு கிளம்பி, நாட்கள் இன்றோடு அரை சதம் அடித்தது. ஒவ்வொரு நாளையும் எண்ணிக் கொண்டிருந்தாள் ப்ரியா, பெரும் வலியோடு! மனதில் இருக்கும் துயரத்தை யாரிடமும் வெளிப்படையாக சொல்லவும் இல்லை.
ஆனால், அவனுக்கு மனதில் மட்டும் பூஜை நடத்துவாள்! மிகவும் தாங்கமுடியாத போது அவனுக்கு தொலைப்பேசியிலும் பூஜை நடக்கும்!!
‘அவன் தான் வர மாட்டேகிறான்… சரி நாமலாவது போலாம்னு பார்த்தா, அதுக்கும் பெரிய நோ சொல்லிடுறான். என்ன தான் பண்றதுனு தெரியலையே??’
இதுவே அவள் மனதில் எப்போழுதும் ஓடிக் கொண்டிருந்தது. தினமும் ஒரு முறையாவது பேசினான் தான். ஆனால், அது எல்லாம் எந்த விதத்திலும் அவளை சமன்ப்படுத்தவில்லை.
பேசுவது எல்லாம், ரொம்ப இல்லை. ‘என்ன எப்படி இருக்க? சாப்பிட்டியா?’ அந்த அளவுக்கு தான். இதை நினைக்கும் போது, அடுத்த கவுன்டர், மனதில் உதித்தது ப்ரியங்காவிற்க்கு.
“ஆமா இங்க இருக்கும் போதே, ரொம்ப பேசமாட்டான். இதுல, அங்க போயிட்டு எப்படி பேசுவான்? சான்ஸ்லெஸ்!!”
சில சமயம் அவள் மனதில் நினைப்பதை நிஷாவிடமோ, இல்லை கீதாவிடமோ சொல்லுவது உண்டு. ஆனால், அவர்களும் கிட்டத்தட்ட அவளின் நிலையில் இருப்பதால், எதுவும் மேற்க் கொண்டு சொல்ல முடியவில்லை.
இவள் மிகவும் வேதனை படுவதை பார்த்து, ராஜேந்திரன் இவளை, புனேவிற்க்கு சில நாட்கள் சென்று வரச் சொன்னார். இவளும் ஒரு மாறுதலுக்காக போனாள்.
அங்கே சென்றதும் அப்பா, அம்மா, தம்பி எல்லோரையும் கண்ட பிறகு ஓரளவிற்க்கு தேறினாள். திரும்ப சென்னைக்கு வந்த போது, பழைய ப்ரியங்காவாக பூல் பார்முக்கு திரும்பி இருந்தாள்.
ஆனாலும், ஒரு நாள் தன் நிலையை மறைக்க முடியாமல், ராஜீவ்விடம் தான் அங்கே வரட்டுமா, என்று கேட்டாள்.
ராஜீவ் ஒரு நிமிடம் மவுனம் சாதித்து, “இங்க நாங்க எல்லாம் ஒரே வீட்டுல, இருக்கோம் ப்ரியங்கா! ப்ளீஸ் புரிஞ்சிக்கோ… நீ இங்க வந்தா என்னால உன்னோட டைம் ஸ்பென்ட் பண்ண முடியாது… இங்க ட்ரெயினிங் ரொம்ப கஷ்டமா இருக்கு எனக்கு.
அதனால, எனக்கு எப்போ ரொம்ப வேலை இல்லையோ, அப்போ நானே வரேன் அங்க” என்று முடித்தான்.
இதை கேட்டு பதிலுக்கு ஒன்றும் சொல்ல முடியாமல், போனை வைத்தாள், ப்ரியங்கா. கண்களில் பூத்த கண்ணீரோடு தான்.
அங்கே, ராஜீவ்விற்க்கும் மிகவும் கடினமாக தான் இருந்தது. ஷேக்கின் குரூப் அவன் நினைத்ததை விட மிகவும் ஆபத்தானவர்களாக இருந்தனர்.
ராஜீவ் மற்றும் அவன் கூட வந்தவர்கள், போலீஸ் என்று தெரியாமல் இருக்க தாடி முடி எல்லாம் வளர்த்து, பார்ப்பதற்க்கே வேறு மாதிரி இருந்தனர்.
அதனால், தையிரியமாக அவன் குரூப்பில் இருந்து, டேவிட் மற்றும் கவுதமை ஷேக்கின் குரூப்பில் இருந்த இம்ரானுடன் பழகவிட்டான்.
அந்த இம்ரான் இவர்களுடன் கொஞ்சம் நெருங்கிப் பழகுவதற்க்கே ஒரு மாதம் பிடித்தது. அதன் பின், அவன் ஒரு நாள் குடி போதையில் இருந்த போது, ராஜீவ்வை பற்றி பேச்சை எதர்ச்சையாக ஆரம்பிப்பது போல், ஆரம்பித்தனர்.
“ஆமா… அந்த ராஜீவ் தான் எங்க அப்துல் பாய்யை என்கவுன்டர் பண்ணான். இதனால எங்க பெரிய அண்ணன் ஷேக், செம டென்ஷன் ஆகிட்டாரு…. அதனால தான், அவனை போடுறதுக்கு ஒரு ஆளை செட் பண்ணோம்.
அவன் பேரு கூட, எதோ ஹிந்து சாமி பேரு தான்….. ஹான், கிருஷ்ணா… கிருஷ்ணா!! ஆனா, அவன் குடுத்த காசுக்கு வேலைய முடிக்காம இருந்தான்.
சோ, அவனை கடைசியில நாங்களே, முடிச்சிட்டோம். அது இப்போ கேஸ் போயிட்டு இருக்கறதுனால, கொஞ்ச நாள் சும்மா இருக்கலாம்னு சொல்லிட்டார் ஷேக்கண்ணன்.”
அவன் கூறியதை கேட்டு தான், அவர்கள் எவ்வளவு கொடுமை ஆனவர்கள், என்று புரிந்தது. அவன் கூறிய இம்ரான், சில மாதங்கள் முன்னால் தான் ராஜீவ்வால், என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான்.
ஆனால், அவன் ஷேக்கின் கூட்டாளி, என்று ராஜீவ்விற்க்கு தெரியவில்லை. தெரிந்திருந்தாலும் அவன் நினைத்ததை தான் செய்திருப்பான், அது வேறு விஷயம்!
இப்படி, இங்கே இவ்வளவு பிரச்சனை இருக்கும் போது, அவனால் அவன் வீட்டில் இருப்பவர்களை எப்படி வர சொல்ல முடியும்????
இதை எல்லாம் அறியாமல், அவர்கள் ‘நாங்க வரட்டுமா? வரட்டுமா?’ என்றால் அவனும் தான் என்ன செய்வான்? அவர்கள் வந்தால், பாதுகாப்பிற்க்காக இவன் தான் எல்லாம் செய்ய வேண்டும்.
அவர்களிடம் எதுவும் கூறுவும் முடியாது!!! அதனால், அவர்களின் வரவை தடுத்தான்.
அவனுக்கும் பார்க்க வேண்டும் என்று ஆசை இல்லையா என்ன? அவனே எல்லாத்தையும் கட்டுப்ப்டுத்திக் கொண்டு இருக்கிறான். இதில் இவள் வேறு!!
‘அவளுக்காவது கூட எல்லாரும் இருக்காங்க. எனக்கு இங்க யார் இருக்காங்க?’ என்றே அவன் மனம் யோசித்தது.
ஆனால், ப்ரியங்கா அன்று லேசாக கொளுத்தி விட்ட வீட்டின் நினைப்பு, அடுத்த வாரம் அவன் மனதில் பெரும் தீயாக மாறியது என்றால் மிகையாகாது.
ஏன், என்று தெரியவில்லை…. வீட்டினரின் நினைப்பு கொஞ்சம் அல்ல ரொம்பவே ஜாஸ்தியாக இருந்தது ராஜீவ்விற்க்கு, அடுத்து வந்த நாட்களில்.
நிஷாவின் கேலியான பேச்சு, அம்மா - அப்பாவின் அன்பு, தாத்தாவின் செல்ல மிரட்டல், ப்ரியங்காவின் சமையல்! எல்லாவற்றையும் மிகவும் மிஸ் செய்தான் ராஜீவ்.
அதுவும் ப்ரியங்காவிற்க்காக அவன் இவ்வளவு ஏங்குவான் என்று அவனே அறியவில்லை. பெரும் அதியசமாக இருந்தது அவனுக்கு.
குறிப்பாக ப்ரியங்காவின் பேச்சிற்க்காக தான் மிகவும் ஏங்கினான் ராஜீவ். “சே… அந்த மைதா மாவு பேச்சுக்கெல்லாம் ஏங்கற மாதிரிஆகிடுச்சே!!! தெரிஞ்சிருந்தா, அவ பேசுறத ரெக்கார்ட் பண்ணிட்டு வந்திருக்கலாம்.”
இப்படி யோசித்தப்படியே அவன் வழக்கமாக ப்ரீயாக இருக்கும் போது, வரும் பார்க்கிற்க்கு வந்தான்.
அந்த பார்க் அவன் தங்கி இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் மிக அருகில் இருப்பதால், தினமும் இரவில் இங்கு வருவதை வழக்கமாக கொண்டிருந்தான்.
அன்றும் இரவு ஒரு ஏழு மணி வாக்கில், அந்த பார்க்கில் இருக்கும் பெஞ்சில், உட்கார்ந்து பாட்டு கேட்ட படி இருந்தான். யாரும் அந்த நேரத்தில் பூங்காவில் இல்லாமல் போனது அவனின் நல்ல காலமா, இல்லை கெட்ட காலமா?
ஏன்னென்றால், சிறிது நேரத்தில், போர்வை போர்த்திய படி ஒரு உருவம் அவன் பின்னால் வந்து நின்றது.
அதன் நிழலை பார்த்து, யாரோ தன்னை தாக்க வந்திருக்கின்றனர் என்று நினைத்து, தன் சாக்ஸில் வைத்த துப்பாக்கியை எடுத்து அந்த உருவத்தின் நெற்றியில், குறி வைத்தான் ராஜீவ்.
ஆனால், அந்த உருவத்தின் முகத்தை பார்த்ததும் ஷாக் அடித்தது, போல அதிர்ந்து நின்றான் ராஜீவ். அதே அதிர்ச்சி, துளியும் குறையாமல், எதிர்ப்பக்கம் இருந்த அந்த உருவத்திடமும் இருந்தது.
ஒரு சில வினாடிகள் கழித்து, “நீயா? எப்போ வந்த இங்க? யார் கூட வந்த?” உங்களின் நினைப்பை எல்லாம் வீணாக்காமல், ப்ரியங்காவே அங்கு நின்று இருந்தாள்.
துப்பாக்கியை சாக்ஸில் மறுபடியும் வைத்து, அதிர்ந்து இருந்த அவளை உளுக்கி திரும்ப கேள்விக் கேட்டான். “நான் இன்னிக்கு ஆப்டர்னூன் வந்தேன். நான் மட்டும் தான் வந்தேன்!” என்றாள் ப்ரியா இன்னும் அவனின் தாடியையும் துப்பாக்கியையும் ஆச்சரியமாக பார்த்துக் கொண்டு.
கோபம் எக்ஸ்ப்ரெஸ் வேகத்தில் கிளம்ப, என்ன செய்கிறோம் என்று அறியாமலே, அவளின் கன்னத்தில் அடிக்க, கையை ஓங்கினான் ராஜீவ். ஆனால், கை கன்னத்தில் படவே இல்லை!
அவள் அதற்க்குள், கன்னத்தில் கை வைத்து பயந்து குனிந்து விட்டாள் கண்களை மூடிக் கொண்டு!!
அதை பார்த்ததும் கை தானாக, கீழே இறங்கியது ராஜீவ்விற்க்கு. ஆனால், கோபம் இன்னும் குறையாமல், “உன்னை யாரு இப்போ இங்க தனியா வரச் சொன்னா? என்ன தான் நினைச்சிட்டு இருக்க நீ?” என்று கத்தினான்.
ப்ரியங்காவிற்க்கும் கோபம் ஏறியது. “ஏன் வரக் கூடாது? நீயும் அங்க வர மாட்ட! நானும் இங்க வரக் கூடாதா? தென், என்ன இது ஷேவ் பண்ணாம இப்படி இருக்கீங்க? என்ன பண்ற மேன் இங்க?”
“நான் வர வேண்டாம்னு சொன்னேனா அதுக்கு ஒரு ரீஸன் இருக்கும். இது கூட புரிஞ்சிக்க மாட்டியா நீ? லூசு மாதிரி சொல்லாம கொள்ளாம வந்துருக்க? சே! அறிவே இல்லயா உனக்கு?”
இந்த வார்த்தைகள் ப்ரியங்காவை மிகவும் காயப்படுத்தியது! ஆசையாக பார்க்க வந்தால், இப்படி திட்டுகிறானே, என்று நினைக்கும் போதே கண்ணில், அணை உடைத்து, வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
கண்களை துடைக்கக் கூட இயலாமல், அவள் பேச ஆரம்பித்தாள். “எஸ், லூசு தான்! ஐ ஆம் அ மென்டல். உனக்காக உன்னை பார்க்கனும்னு எல்லார் கிட்டையும் பேசி, லீவே குடுக்க மாட்டேனு சொன்ன மேனஜர் கிட்ட, ரிக்வஸ்ட் பண்ணி லீவ் வாங்கி வந்தேன் நான்!
நான் லூசா? ஏன் வந்த, ஏன் வந்த, கேக்கற? உனக்கு டுமாரோ பேர்த்டே!! அதுக்காக எவ்வளோ ஆசையா வந்தேன் தெரியுமா? உனக்கு தான் எல்லாம் மறந்து போச்சு! பட், எனக்கு எப்போவும் நீ தான்! ஆல்வேஸ், உன்னோட தாட்ஸ் தான் எனக்கு! ஆனா நீ… நீங்க… (தேம்பினாள்)
நான் போறேன். இனிமேல், இங்க வரமாட்டேன்! ஓகே? பை!” கண்களை துடைத்தபடி, திரும்பி நடக்க முற்ப்படடாள் ப்ரியங்கா. ஆனால், முடியவில்லை!
அவள் கை தான் ராஜீவ் பிடித்து வைத்திருந்தானே! அவளின் பேச்சு…. ரொம்ப நாள் கழித்து அவள் பேச்சு, மிகவும் பாதித்தது அவனை.
“சாரி ப்ரியா! வெரி சாரி…. எனக்கு பேர்த்டே சுத்தமா ஞாபகம் இல்ல. இனிமேல், இப்படி பேச மாட்டேன்” ஒரு நிமிடம் தன் காதுகளையே, நம்ப முடியாமல் அவன் முகத்தையே பார்த்தாள் ப்ரியங்கா.
அவன் அவளின் முழியை பார்த்து சிரிக்க, அதற்க்கு மேல் முடியாமல், அவனை அணைத்தாள். அவனும் மறுக்காமல் திரும்ப அவளை அணைத்தான். கனவில் இருப்பது போல இருந்தது ப்ரியங்காவிற்க்கு.
சிறிது நேரத்தில் சுய நினைவிற்க்கு வந்த ராஜீவ், “எங்க தங்கி இருக்க?” என கேட்டான். அதற்க்கு பதிலாக, அவள் ஒரு சில பில்டிங் தள்ளி இருந்த அடுக்குமாடியை காட்டி, “அங்க என்னோட காலேஜ் ப்ரெண்டு இருக்கா. நம்ம மேரேஜ் போட்டோஸ் பார்த்துட்டு, அவ தான் நீங்க இங்க இருக்குறதா என்கிட்ட சொன்னா!
அவ வீட்டுல தான் என்னோட பேக் இருக்கு” என்று ஒரு மெதுவான குரலில் சொன்னாள்.
“சரி போய் உன்னோட பேக் எடுத்துட்டு வா! சீக்கிரமா வரனும் ஓகே?” இதற்க்கு மேல் என்ன வேணும் அவளுக்கு? துள்ளி குதித்து ஓடினாள் ப்ரியங்கா.
அதே இடத்திற்க்கு ஐந்தே நிமிடத்தில் திரும்பினாள். ராஜீவ் அவனின் வீட்டிற்க்கு அழைத்துச் சென்றான். போகும் போது, வீட்டில் இருப்பவர்களை பற்றி விசாரித்தான் ராஜீவ்.
அவனும் அவன் குரூப்பில் இருப்பவர்களும் இரண்டு வீட்டில், தங்கி இருந்தனர். மொத்தம் ஆறு பேர் என்பதால், மூன்று பேர் ஒரு வீட்டில் என, அடுத்தடுத்த ப்ளாட்டில் குடியிருந்தனர். இவர்கள் அங்கே போகவும், மிகுந்த ஆச்சரியம் அடைந்தனர் மற்றவர்கள்.
ஆனால், அது எல்லாம் முதல் ஐந்து நிமிடம் மட்டுமே! பிறகு இவளிடம் சரளமாக பேசினர். ப்ரியங்காவும் எல்லோரையும் ‘அண்ணா’ என்று விளிக்கவும், அதற்க்கு மேல், ஏன் ஒதுங்கி போகப் போகிறார்கள்?
இதில் அவர்கள் வேறு சமைத்து வைத்து ராஜீவ்வின் வருகைக்காக காத்திருந்தனர். அதனால், இவர்கள் வந்ததும் சாப்பிட ஆரம்பித்து இருந்தனர்.
சாப்பிடும் போது, ப்ரியங்கா ராஜீவ்வை கண்டுக் கொள்ளவே இல்லை! மற்றவர்களிடமே பேசிக் கொண்டிருந்தாள். ராஜீவ் எப்போழுதும் போல நோந்து போனான்.
‘இவ வேலையே இது தான்! ‘ஐ லவ் யூ’ மட்டும் நல்லா சொல்லுவா. ஆனா, வேற யாராவது நடுவுல வந்துட்டா போதும்! கண்டுக்கவே மாட்டா…. இதுல, என்னை தவிர ஊர்ல இருக்க எல்லாரும் இவ அண்ணனுங்க!! கடவுளே’
அவன் என்ன எதிர்ப்பார்க்கிறான் என்று அவனிற்க்கே புரியவில்லை…. சாப்பிட்டவுடன், ப்ரியங்காவை அழைத்து, “எங்களுக்கு கொஞ்சம் வேலை இருக்கு! நீ இங்கயே படுத்து தூங்கு!
நாங்க எல்லாரும் பக்கத்து ப்ளாட்டுல இருக்கோம்! நான் லேட் நைட் தான் வருவேன் வேலை முடிஞ்சு. ஓகே வா?” என்றான் ராஜீவ். அதற்க்குள் மற்றவர்கள் சென்றிருந்தனர். ப்ரியங்கா ஒரு ஆயாசமான பார்வையோடு, “உங்களோட வேலை பத்தி கேட்டா, சொல்ல மாட்டீங்க!
கண்டிப்பா, ட்ரெயினிங்க்கு நீங்க வரல… தாட்ஸ் கன்பார்ம். பட், டோன்ட் வொறி, நான் யார் கிட்டயும் சொல்ல மாட்டேன்!” என்று கூறினாள்.
ராஜீவ் சிறு சிரிப்போடு, கதவை முடிச் சென்றான். அதற்க்குப்பின், அவன் சொன்ன படி தூங்கியிருப்பாளா என்ன ப்ரியங்கா? அதுக்கு அப்புறம் உலகம் என்னாவது??
எப்போதடா மணி பன்னிரெண்டு ஆகும் என்று இருந்தாள். படுக்கையில் புரண்டு, எடுத்து வந்த பேக்கை நோன்டி, மொபைலை நோன்டி என்று நேரத்தை போக்கினாள். கரக்டாக, பதினொன்று ஐம்பதுக்கு அவள் ப்ரெண்டுக்கு கால் செய்து ப்ளாட்டுக்கு வர வழி சொன்னாள்.
மணி பன்னிரெண்டு, ஆனதும் கதவை வேகமாக தட்டினாள். எந்த கதவை? ராஜீவ்வும் மற்றவர்களும் இருந்த வீட்டின் கதவை! உள்ளே எல்லோருக்கும் இப்போழுது யார், என்று பயம் வந்தது என்னவோ உண்மை.
அவர்கள் எல்லாம் ஷேக்கை வீழ்த்த திட்டம் தீட்டிக் கொண்டிருந்தனர். அதனால், யாரோ வந்திருக்கின்றனர் என அலர்ட் ஆறுமுகமாக மாறிய நம் நாயகன் ராஜீவ், துப்பாக்கியை எடுத்து கதவின் முன் நின்று, கதவை திறந்தான்.
“ஹேப்பி பேர்த்டே ராஜ்” என்று கத்திக் கொண்டே உள்ளே வந்தாள் ப்ரியங்கா அவளின் தோழியோடு.
இதில் அவனின் துப்பாக்கியை பார்த்து, “இதை ஏன் அடிக்கடி எடுக்கற? கீழ வைப்பா!” என்று இடைச் சொருகல் வேறு. ஒரு நிம்மதி பெருமூச்சோடு, அவளின் கையில் இருந்த கேக்கை பார்த்தான் ராஜீவ்.
அதில், ‘ஹேப்பி பேர்த்டே டூ மை ஹஸ்பென்ட்’ என்றிருந்தது… அதன் பின், மற்றவர்கள், சொல்லுவதை தான் செய்தான் ராஜீவ்.
ப்ரியங்கா, கேக் வெட்ட சொன்னாள், செய்தான். அவளுக்கே முதலில் ஊட்டவும் செய்தான். எல்லோரும் சிறிது நேரம் செலவழித்த பின், ராஜீவ்வும் ப்ரியங்காவும் பக்கத்து வீட்டிற்க்கு சென்றனர்.
“இப்போவாவது ஒழுங்கா தூங்கு! குட் நைட்” என்று தூங்க சென்றான் ராஜீவ். ப்ரியங்காவிற்க்கு தூக்கம் வருவேனா என்றிருந்தது! பின்னே கல்யாணம் முடிந்து, முதன் முதலில் நன்றாக பேசியிருக்கிறான் கணவன்!
எப்படி வரும்? அதன் தொடர்பாக அவனை முதன் முதலில், பார்த்த ஞாபகம் வந்தது ப்ரியங்காவிற்க்கு!
பார்த்தவுடன் வந்த காதல் இல்லை அவளது….. ஆனால், எப்படி அவனிடம் தலை குப்புற விழுந்தாள், என்ற கேள்விக்கு அவளிடம் பதில் இல்லை.
அவனை முதன் முதலில் சந்தித்த நொடி, அவனிடம் ஈர்க்கப்பட்ட நொடி, அவளின் காதலை உணர்ந்த நொடி, அவனிடம் தன் காதலை சொன்ன நொடி…. எல்லாம் ஒரு படம் போல் ஓடியது அவளின் நினைவில்.
அப்பாடா, கடைசியில ப்ளாஷ்பேக்க்கு வந்துட்டேன், வந்துட்டேன்!!!!!!!!!