Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Nayaganin Nayagi...12

  • Thread Author
அத்தியாயம்…11

“ஒன்னும் இல்லையா…? அப்போ சரி தான்.” என்று சொன்ன குருமூர்த்தியை பார்த்த கிரிதரன் அவன் முகத்தில் என்ன கண்டானோ… லேசாக வெட்கப்பட்டு சிரித்தவனாய் கிரிதரன் தலை குனிந்துக் கொண்டான்.

“சோ..க்யூட்…” என்று சொல்லி குருமுர்த்தி கிரிதரனின் கன்னம் பற்றியவனை அப்போது தான் கீதாவிடம்..

“அப்பாவுக்கு அழைத்து பேசிட்டியாக்கா…” என்று கேட்டு விட்டு இவர்கள் பக்கம் பார்வையை திருப்பிய பத்மினியின் கண்ணில் குருமூர்த்தி கிரிதரனை கொஞ்சுவதை பார்த்த பத்மினிக்கும் என்ன தோன்றியதோ..

அவள் முகத்திலும் லேசான சிகப்பின் சாயல், அவள் கன்னக்கதுப்பில் பூசிக் கொள்ள..அதை பார்த்த குருமூர்த்திக்கு இப்போது கிரிதரனை கொஞ்சினது போல் இவளையும் கொஞ்சினால்… அந்த நினைவே அவனுக்கு தித்திக்க செய்தது.

இரு ஆடவர்களின் மனதிலும் வேறு வேறு எண்ணங்கள் இருந்தாலுமே, அவர்களின் போகும் பாதை ஏனோ ஒன்றாய் இருக்க..குருமூர்த்தி என்ன நினைத்தானோ கிரிதரனின் தோளில் கை போட்டுக் கொண்டு…

“என்ன ப்ரோ இந்த பக்கம்…?” என்று இலகுவாக பேசினான்.

குருமூர்த்தி இது போல் அனைவரிடமும் இலகுவாய் பழகுபவன் கிடையாது. பெண்களிடம் பேசுவான்..அந்த பேச்சுக்கள் அனைத்தும் அவனின் தொழிலை வைத்தே இருக்கும்…

ஆண்களிடமும் பேசுவான்..ஆனால் அந்த பேச்சு எல்லாம் குண்டக்கா மண்டக்கா ரகம் தான்.. அவனிடம் பேசும் ஆண்கள்… “என்ன இவன் இப்படி பேசுகிறான்…?” என்று மற்றவர்களிடம் புகார் வாசித்தால்...புகார் கேட்டப்பட்டவர்கள் சொல்லும் பதில்..

“அவனிடம் திறமை இருக்கு..அதனால் திமிரும் இருக்கு.” என்று தான் சொல்வார்கள்.

“பெண்களிடம் மட்டும் அப்படி பேசுகிறான்…?” என்று கேட்டால் அதற்க்கும், ..

“அவர் பேசும் பெண்கள் பெரும்பாலோர் யார் தெரியுமா…? போய்யா போ…” என்று விரட்டி விடுபவர்கள் உண்டு என்றாலும், ஒரு சிலர்…

“அவங்க கிட்ட அவனுக்கு வேண்டும் என்பது இருக்கு..உன் கிட்ட இருக்கா…?” என்று கேட்டுக் கொண்டே அவன் கேட்டப்பட்டவனின் பாகத்தை பார்க்கும் பார்வையில், அவன் என்ன சொன்னான் என்று புரிந்துக் கொண்டவன்..

“அப்படியா…? அப்படி பட்டவரா…?” என்று வீண் வம்பு பேசுபவனும் வீண் வம்பு கேட்பவனும் கதை அடிப்பார்கள்..

இது போல் தான் குருமூர்த்தியின் பிம்பம் வெளி வட்டாரத்தில்..அதாவது அவன் பேசும் பெண்கள் பெரும்பாலோர் அப்படி பட்டவர்கள்…இவனும் அப்படி இப்படி தான் என்ற பேச்சும் இருக்கிறது.

மதிப்பு இல்லாதவன்...என்றும் தான்..ஆனால் முதல் முறை குருமூர்த்தி கிரிதரனிடம் சாதரணமாக பேசினான்… ஒரு தோழமையுடன். அதை பார்த்த இல்லை இல்லை உணர்ந்த கிரிதரன் குருமூர்த்தியை அதிசயமாக பார்த்தான்.

ஏன் என்றால் அவனை பற்றி கிரிதரனுக்கும் கொஞ்சம் தெரியுமே…?என்ன இவர் என்னிடம் இப்படி சாதரணமாக பேசுகிறார் என்று அதிசயத்து கிரிதரன் குருமூர்த்தி முகத்தை பார்த்தான்..

கிரிதரனின் பார்வையை கண்டுக் கொண்ட குருமூர்த்தி… திரும்பவும்… “என்ன ப்ரோ…” என்று கேட்டான்.

“ஒன்னும் இல்லை…” என்ற தலையாட்டலே மீண்டும் கிரிதரனின் பதிலாய்…

“ஒன்னும் இல்ல..ஒன்னும் இல்லேன்னு சொல்ற. பார்க்கலாம்.” என்று சொன்னவன்..

“எதுல வந்த ப்ரோ…” என்று குருமூர்த்தி கிரிதரனிடம் கேட்டான்..

இரு பெண்களையும் பார்த்த வாறே… “டூ விலரில் தான் வந்தேன் சார்.” என்று சொன்னவனின் குரலில் மிகுந்த ஏமாற்றம்.

காரில் வந்து இருந்தால், இவர்களை தான் வீட்டில் விட்டு இருக்கலாமே என்று நினைத்தான். அவனின் நினைப்பை அறிந்துக் கொண்ட குருமூர்த்தி..

“இன்னைக்கு அவங்களை பாதுகாப்பா நான் அழச்சிட்டு போறேன்..இனி அவங்க இங்கு வந்தா நான் உனக்கு இன்பாம் செய்யிறேன். காரை எடுத்துட்டு வாங்க…” என்று சொன்ன குருமூர்த்தி..

மேலும் … “கார் இல்லேன்னாலும் லோன் போட்டாவது வாங்கிடு ப்ரோ…” என்றவனின் பேச்சில் கிரிதரன் சிரித்துக் கொண்டே…

“கார் இருக்கு சார்.” என்று பதில் அளித்தான்.

“நான் எப்படி உன்னை ப்ரோ ப்ரோன்னு பாசமா கூப்பிடுறேன்..அது என்ன நீ சார் சாருன்னு...ஒழுங்கா என்னை பேர் வெச்சி கூப்பிடு..இல்ல என்னை போல் ப்ரோ..இல்ல சகல என்று கூட கூப்பிடலாம். அது உன் விருப்பம்…”

குருமூர்த்தி சகல என்று சொல்லும் போது அவன் கண் தன்னால் பத்மினி பக்கம் சென்று வந்தது..அதை கவனித்த கிரிதரனுக்கு இது நல்லதா…? கெட்டதா…? என்று அவனுக்கு தெரியவில்லை.

குருமூர்த்தியை பற்றி ஒரளவுக்கு..ஒரளவுக்கு தான் கிரிதரனுக்கு தெரியும்..மிகவும் திறமையான வக்கீல்..ஆனால் அவன் எந்நேரமும் அது போலான இடத்தில் தான் இருப்பான் என்று..

ஆனால் பெண்களுக்கு ஒன்று என்றால். அவன் தான் முதன்மையாக நிற்ப்பான் என்றும் தெரிந்ததால் தான் கீதாவின் விசயம் தெரிந்ததும் குருமூர்த்தியிடம் கிரிதரன் அழைத்து கொண்டு வந்தது.

ஆனால் குருமூர்த்தியின் இந்த பார்வை..நல்லதிற்க்கா…? கெட்டதிற்க்கா…? கிரிதரனுக்கு தெரியவில்லை. பத்மினி புத்திசாலியான பெண் தான்..அவன் கீதாவை தான் அவளின் திருமணத்திற்க்கு முன் ஒரு தடவை ஒரே தடவை மட்டுமே பார்த்து இருக்கிறான்.

அப்போது அவன் இடம் விசயத்தில் பெரும் பிரச்சனையை மாட்டிக் கொண்டு முழித்திருந்த சமயம்...தனிப்பட்டு தன்னை பற்றி யோசிக்க கூட முடியாத சமயத்தில் தான் கிரிதரன் கீதாவை பார்த்தது.

அனைத்தும் முடிந்து என்ன என்று அவன் யோசிப்பதற்க்குள் பத்மினி … “அண்ணா என் அக்காவுக்கு திருமணம்..நீங்க எல்லாம் கண்டிப்பா வரனும்.” என்று அழைகத்தது.

அப்போது கூட ஏதோ ஒரு நப்பாசையில்… “எந்த அக்காவுக்கும்மா…” என்று கேட்டான்.

“எனக்கு ஒரே ஒரு அக்கா தான் அண்ணா…” என்று சொன்னதுமே… சரி அவ்வளவு தான். ஒரே முறை தான் பார்த்தேன்.

இப்போ அவள் முகம் கூட எனக்கு சரியா நியாபகத்தில் இல்ல..விடு விடு என்று அவனுக்கு அவனே சொல்லிக் கொண்டவனாய் இருந்து விட்டான்.

இருந்தும் கீதாவின் திருமணத்திற்க்கு சென்று வந்த கிரிஜா… “மாப்பிள்ளை அவ்வளவு அழகா இருந்தார் தெரியுமா...கொஞ்சம் பெரிய இடம் தான் போல…” என்று அவள் பெருமை பீற்றும் போது அவனே அறியாது…

“கொஞ்சம் வாயை மூடிறியா…?” என்று கத்தி விட்டான்.

கிரிஜா அதிர்ச்சியாக தன்னை பார்க்கும் போது தான் கிரிதரன் தன் தவறை உணர்ந்தவனாய்… “ஒன்னும் இல்லடா… வெளியில் ரொம்ப அலஞ்சேன்.. தலை வலி வேறு..வீட்டுக்கு வந்தா காபி போட்டு கொடுக்க அம்மா இல்ல..அவங்க கோயிலுக்கு போய் இருக்காங்கலாம்..அதான் கத்தி விட்டேன்.” என்று சொன்னவனின் பேச்சில்…

“சாரிண்ணா..சாரி..பாருங்க டீ குடிக்கிறிங்களான்னு கேட்காமா நான் பாட்டுக்கு என்ன என்னவோ பேசிட்டு இருக்கேன்.” என்று தன்னையே திட்டிக் கொண்டு செல்லும் தங்கையையே பார்த்திருந்தவனுக்கு ஏனோ மனதில் வெறுமை மட்டுமே…

பின் போக போக அதை மறக்க நினைத்து மறந்தானா..>இல்லையா…? என்று தெரியாதே அவன் காலம் கடத்தினான் என்று தான் சொல்ல வேண்டும்.

பத்மினி தன் வீட்டுக்கு வந்து சென்றால்..அன்று முழுவதும் அவன் மனதின் பாரம் கூடுதலாய்..அவனே நினைத்தான் இது போல் என்று உறுதியாய் தெரிந்திருந்தால்...பேசி இருக்கலாமே குறைந்த பட்சம் முயற்ச்சியாவது செய்து இருக்கலாமே என்று..

பத்மினியிடம் அவன் நன்றாகவே பழகுவான்.. அவள் மூலமாவது முயற்ச்சி செய்து பார்த்து இருக்கலாம்.. அதுவும் பத்மினி ஒரு முறை சொன்ன..

“அக்காவுக்கு ஐந்து வருடமா இடம் பார்த்தோம்.. அப்பாவுக்கு உடம்பு சரியில்லை.. அக்காவுக்கு சீக்கிரம் முடித்து விட பார்த்தால் எந்த இடமும் கூடவில்லை.” என்று அவள் சொன்ன போது முயன்று இருந்தால் கிடைத்து இருக்கும்.

காலம் கடந்து என்ன செய்வது என்று அவன் நினைக்கும் போது தான் பத்மினியிடம் இருந்து அவனுக்கு அழைப்பு பின் நடந்தது எல்லாம்..

கிரிதரன் பத்மினியை தன் தங்கை கிரிஜா போல் தான் பார்க்கிறான்..பத்மினி புத்திசாலி பெண் தான். அதில் அவனுக்கு சந்தேகம் கிடையாது..ஆனால் குருமூர்த்தி என்று அவனின் யோசனையை கலைக்கும் விதமாய்..

“என்ன ப்ரோ…” என்றதற்க்கு திரும்பவும் கிரிதரன் … “ஒன்றும் இல்லை.” என்று தான் பதில் அளித்தான்..

குருமூர்த்தியின் காரில் பத்மினியும் கீதாவும் ஏறியதும் பத்மினியிடம்… சைகையில்.. “போனதும் போன் பண்ணு…” என்பது போல் சொன்னான்.

கிரிதரனின் சைகை பாஷை பத்மினிக்கு புரியவில்லை என்றாலும், நம் குருமூர்த்திக்கு புரிந்து விட்டது…

பத்மினி “என்ன அண்ணா சொன்னிங்க…?” என்ற கேள்விக்கு ...கிரிதரன் பதில் அளுக்கும் முன் குருமூர்த்தி…

“போன உடனே போன் பண்ணனுமா…? உங்க அண்ணான் சொல்றார்.“ என்று குருமூர்த்தி சொன்னதுமே கிரிதரனுக்கு சங்கடமாய் ஆகி விட்டது..

குருமூர்த்தியை பற்றி கிரிதரனுக்கு ஒரு சிலது தான் தெரியும்..அந்த சிலத்திலேயே ஒரு சிலது சரியானதாக இல்லை..அப்படி இருக்க இரு பெண்கள் அவனோடு என்றதில் தான் பத்மினிக்கை சைகை செய்தது.

ஆனால் அதை குருமூர்த்தி கவனித்து விட்டதில் கிரிதரன் சங்கடப்பட..அவன் முக பாவனையை கவனித்துக் கொண்டு இருந்த குரிமூர்த்தி..

“நீ சொன்னதில் தவறு இல்லை ப்ரோ..ஒரு லாயரா நான் எவ்வளவோ கேசை பார்த்துட்டு இருக்கேன்..அதுவும் பெண்கள் பற்றிய கேசில் நாம நினைத்து பார்க்காதது எல்லாம் தான் நடக்குது…

நீ ஜாக்கிரதையா இருப்பதில் தப்பு இல்ல… நிஜமா தங்கையின் பிரண்ட் குடும்பத்து மேல் உன் அக்கறை பார்த்து எனக்கு சந்தோஷம் தான். அதனால கவலையை விடு.” என்று சொன்னவன்..

“பத்து போன் பண்ணுவா…” என்று குருமூர்த்தி கூடுதலாய் சொன்ன அந்த பேச்சில் கிரிதரன் வாய் அடைத்து அவனை பார்க்க..அவனோ கிரிதரனை பார்த்து லேசாக கண் சிமிட்டியவனாய்… சிரித்து விட்டு சென்று விட்டான்.

காரில் இரு பெண்களிடம் அமைதியே நிலவியது..பின் சீட்டில் அமர்ந்து இருந்த இரு பெண்களிடம் மிரர் வழியாக பார்த்துக் கொண்டே குருமூர்த்தி கேட்டதற்க்கு மட்டும் பதில் அளித்தவர்கள் மீண்டும் அமைதியை தத்து எடுத்துக் கொள்ள..

பாதி தூரம் சென்ற குருமூர்த்தி ஒரு ஓரமாய் காரை நிறுத்தியதும் இரு பெண்களையும் பார்த்து… “என்ன உங்க பிரச்சனை…?” என்று கேட்டான்.

அதற்க்கு இரு பெண்களிடம் இருந்து உடனடியாக பதில் இல்லாது போக மீண்டும் அதே கேள்வியை தான் குருமூர்த்தி கேட்டான்.. வேறு மாடுலேஷனில்..

அதற்க்கு பத்மினியிடம் இருந்து பதிலாய்…“பூஜா அக்காவை தான் நினச்சிட்டு இருக்கோம்.. அவங்க ரொம்ப ரொம்ப பாவம் லே….”…. என்று சொல்லும் போதே அவள் குரல் உடைப்பட கண்ணில் இருந்து கண்ணீர் பெருக்கெடுக்க அதை துடைக்க கூட இல்லாது வேதனையுடன் அவள் குருமூர்த்தி முகத்தை பார்த்தாள்.

பத்மினியின் முகமும் அவள் காட்டிய வேதனையும், குருமூர்த்திக்கும் வேதனை அளித்தது தான்.. இருந்தும்… கண் மூடி தன்னை நிலைப்படுத்தி விட்டு..

“பூஜாக்கா பாவம் தான்.ஆனா பூஜாவோடு பாதிக்கப்பட்டவங்க இங்கு இன்னும் நிறைய பேர் இருக்காங்க. பூஜாவுக்காவது விடிவு வந்து விட்டது… நான் சின்ன வயசுல பார்த்த பெண்களின் வாழ்க்கை… அது நரகத்தை விட கொடியது..

வெளியில் இருந்து பார்ப்பவங்க ஈஸியா சொல்லுவாங்க..ஏன் அவங்க உழைத்து சம்பாதிக்க கூடாதான்னு…? அங்கு இருப்பவங்க்ள்ள பெரும் பாலோர் உழைத்து சம்பாதிக்க வந்தவங்க தான்…

வேலை செய்யும் இடத்தில் காதல் வலை வீசி இங்கு கொண்டு வந்து விட்டவங்க கொஞ்சம் பேர் என்றால்..நிறைய பேர் அந்த காதல் கல்யாணத்துல முடிஞ்சு கொஞ்ச நாள்ல அந்த வாழ்க்கை திகட்டி...ஷேரிங் நல்லது தான்..

ஆனால் இதில் ஷேரிங் என்பது… பின் அவங்க இங்கு வந்துடுவாங்க… ஒரு சிலர் சினிமா ஆசை… இப்படி ஏகப்பட்ட ரகம்..அங்கு இருப்பவங்களுக்கு பிறக்கும் குழந்தை அதிலேயே..

அது நல்லதா…?கெட்டதான்னு கூட அவங்களுக்கு தெரியாத வயதிலேயே அதில் தள்ளிடுவாங்க.. ஒரு சிலர் இப்படியும் கேட்டு இருக்காங்க..தெரியாம விழுந்துட்டாங்க..அதில் இருந்து வெளியில் வரலாமேன்னு…

வரலாம் தான்..ஆனா பின் அவங்க பிழைப்பு..இது போல் இருக்கிறவங்களை வீட்டு வேலைக்கு கூட எடுத்துக்க மாட்டாங்க..அவங்க அவங்க புருஷனை காப்பாத்திக்கனுமாம்..

அடுத்து சரி பெண்கள் இல்லாது வீடா பார்த்து வேலைக்கு போனா கொஞ்ச நாள் நல்லா தான் போகும்...பின் அவன் ஏதாவது நெட்டிலோ..வேறு எதிலோ பார்த்து அவனுக்கு போதை ஏறும். அவன் போதைக்கு ஊறுகாயா இவள் வேணும்..

மறுத்தா நீ என்ன பத்தினியான்னு…?கேட்பானுங்க..அது தான் இப்படி அங்கு அங்கு கொஞ்சம் கொஞ்சமா சீரழியறதுக்கு பதிலா அதுக்கு என்று இருக்கும் இடத்தில் மொத்தமா சீரழியிறாங்க……” என்று பேசிவனின் பேச்சில் அவ்வளவு ஆவேசம் கூடவே ஆதாங்கமும் இருந்தது.

குருமூர்த்தி பேசும் போதே பத்மினி புரிந்துக் கொண்டது.. இவன் இதை எல்லாம் முயற்ச்சி செய்து பார்த்து இருக்கிறான் என்று… அது தான் நிஜம் போல் அடுத்து அவன் பேசிய பேச்சு இருந்தது.

“என்னால் எல்லோருக்கு ஒரு வழி செய்ய முடியலேன்னாலும் கொஞ்ச பேருக்காவது முடியும் என்று நினச்சி நான் செய்த செயல் எல்லாம்.” என்று சொல்லி தன் கட்டை விரலை கீழ் நோக்கி காட்டியவன்..

“அடுத்து இது போல் பிரச்சனைன்னா போவேன்..அவ்வளவு தான் இப்போதைக்கு என்னால செய்ய முடிஞ்சது…” என்று சொல்லிக் கொண்டு வந்த குருமூர்த்தி இப்போது பத்மினியின் முகத்தை குறிப்பாய் அவள் கண்களை பார்த்த வாறு…

“நான் என்னை பத்தி யார் கிட்டேயும் இது போல் விளக்கம் கொடுத்தது கிடையாது… என் அக்காவும் தன் கடந்த காலத்தை யார் கிட்டேயும் சொன்னது கிடையாது..உங்க கிட்ட..சாரி உன் கிட்ட என் அக்கா சொல்லும் போது நான் தடுக்கல…

உனக்கும் எல்லாம் தெரிஞ்சி இருக்கனும் என்று நினைக்கிறேன்..அதே போல் இப்போ நான் என்னை பத்தி எல்லாம் சொல்ல காரணம்..என்னை பத்திய பேச்சு அவ்வளவு நல்லதாய் இல்லை..இருந்தும் யாருக்கும் எவனுக்கும் நான் விளக்கம் கொடுத்தது கிடையாது… எனக்கு அவனுங்க எல்லாம்…” என்று சொல்லிக் கொண்டு வந்தவன்..

தன் தலை முடியை காண்பித்து… “இது போல் தான் எனக்கு அவனுங்க எல்லாம்... ஆ முக்கியமானதை சொல்ல மறந்துட்டேன் பார்..என் வாயில் இது போல் தான் அப்போ அப்போ வண்ணமயமான வார்த்தைகள் வந்து விழும்…

நான் மாத்திக்க பார்க்கிறேன் என்று சொல்ல மாட்டேன்..ஏன்னா நான் இது போல் எப்போவிலிருந்து பேசுறேன் என்று எனக்கே தெரியாது..நான் மாத்த நினச்சாலும், அது என்னால் முடியுமான்னு தெரியல.. நீ தான் கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்துக்கனும். என்னை பத்தி யாருக்கு தெரியுதோ இல்லையோ..உனக்கு என்னை பத்தி முழுசா தெரியனும்.

அதனால் தான் என்னை பத்தி பிறப்பில் இருந்து அனைத்தும் சொல்லி விட்டேன்...நான் எப்போதும் இது போலவே தான் இருப்பேன்..அதாவது அது போல் இருக்கும் இடத்துக்கு சென்று வந்துக் கொண்டு…” என்று சொல்லிக் கொண்டு வந்தவனிடம் பத்மினி ஏதோ பேச முயற்ச்சி செய்தாள்.

அவளை தடுத்தவனாய்… “நான் முதல்ல பேசிடுறேன்… இது எல்லாம் சொல்ல காரணம்..உனக்கு என்னை கொஞ்சம் பிடிக்குதுன்னு உன் கண் சொல்லுது...எனக்கு உன்னை பிடித்து இருக்குன்னு என் மனசு சொன்ன தொட்டு தான் இதோ உன்னிடம் பேசிட்டு இருக்கேன்..”

மீண்டும் பேச வந்தவளை தடுத்து நிறுத்தியவன்… “நான் பேசிடறேன்னு சொல்றேன்லே…” என்று சொன்னவன் தொடர்ந்து…

“உன்னை பத்தி என் கிட்ட சொல்ல விருப்பம் இருந்தா...நல்லா கவனி சொல்ல விருப்பம் இருந்தா..” பக்கத்தில் இருந்த கீதாவை கை காட்டி…

“உங்க அக்காவை கழட்டி விட்டுட்டு நாளைக்கு நீ மட்டும் வா….” என்று சொல்லி முடித்தான்.

பத்மினி மீண்டும் பேச முயல குருமூர்த்தி திரும்பவும்… “தோ பாரும்மா உங்க அக்காவை வைத்துக் கொண்டு இது பேசினதே அதிகம்..எனக்கும் கொஞ்சம் கூச்சமா இருக்குல..அதனால ஏது சொல்வது என்றாலும், நீ தனியா வந்து சொல்.” என்று சொல்லி காரை எடுத்தான்..

இந்த பேச்சை அனைத்தும் வாய் அடைத்து கேட்டுக் கொண்டு இருந்த கீதாவுகோ இங்கு என்ன நடக்குதுடா…? இப்போ நடந்தது லவ் ப்ரபோஸா என்பது போல் பார்த்தாள்.
 
Top