அத்தியாயம்….10
மந்ரா தந்தையிடம் முடிவாக சொல்லி விட்டாள். “ என் குழந்தை எனக்கு தான் வேண்டும்..” என்று..
ராம் மோகனுக்கு இரு வேறு மனநிலையில் இருந்தார்.. ஒன்று தன் மகளுக்காக அவள் குழந்தையை அவளிடம் மீட்டு கொடுப்பது..
இன்னொன்று மகளை பார்த்தால், மகன்.. இரண்டு மாதம் முன் தான் பிரசாந்துக்கும் இவன் நண்பனின் மகள் சுதாவுக்கும் நிச்சயம் ஆகி உள்ளது..
நல்ல குடும்பம்.. பெண்ணும் நல்ல பெண்ணோடு.. சொத்துக்கார பெண்ணும்.. வீட்டுக்கும் ஒரே பெண் என்பதால், அவர்கள் தொழிலை சுதா தான் பார்த்து கொள்கிறாள்.. அதோடு மிகவும் பராம்பரியமான குடும்பம்…
மந்ரா விசயம் வெளியில் கசிந்தால், கண்டிப்பாக இந்த இடம் விட்டு போகும்… அது மட்டும் நிச்சயம்.. அதை மந்ராவிடம் சொல்லவும் செய்தார்…
“ டாட் உங்களுக்கு மகன் தான் முக்கியமா? நான் படிப்பு முடித்த உடன் ஒன்றும் கேட்கவில்லை.. நீங்களே தொழிலை என் கையில் கொடுத்து விட்டு, பார்த்துக்க என்று சொன்னிங்க..
நான் கூட எனக்கு ஒன்றும் தெரியாதே டாட் என்று சொல்லியும், யாரும் பிறந்ததில் இருந்து கத்துக்கிட்டு வந்தது கிடையாது..
நம்ம தொழிலை நாம் தானே பார்த்து கொள்ள வேண்டும்.. போக போக தான் பிடிப்படும் என்று… நீங்க சொன்ன பேச்சை கேட்டு நான் நம்ம தொழிலை பார்க்க ஆரம்பித்தேன்..
முதலில் திணறி.. அது பிடிப்பட்டு, தொழிலில் எனக்கு ஆர்வம் வரும் போது, பிரசாந்த் இந்தியா வந்த உடன்..
நம்ம தொழிலை என் கிட்ட இருந்து வாங்கி அப்படியே அவன் கிட்ட தூக்கி கொடுத்திங்க.. எனக்கு தெரியும் டாட் பிரசாந்த் வெளி நாட்டில் தான் செட்டில் ஆகிடுவான் என்று நினைத்து தான் நீங்க தொழிலை என் கிட்ட கொடுத்திங்க.. அவன் வந்ததும்..” என்று சொல்லிக் கொண்டு வந்த மந்ரா முகம் கசங்க..
“நான் செய்தது சரி என்று சொல்லலே.. ஆனால் ஒரு வேலை நம்ம தொழிலை என் கிட்ட இருந்து பிடுங்காது நீங்க இருந்து இருந்தால், நேத்ரனை நான் அப்படி எதிர் பார்த்து இருக்க மாட்டேனோ இல்லையோ..
அதே போல் நான் எதிர் பார்த்த அந்த அக்கறை எங்கு கிடைக்கும் என்று தேடாது, இருந்து இருப்பேனா இருந்து இருக்கும்..” என்ற பேச்சில் ராம் மோகன் அமைதியாக இருந்தார்..
ஆனால் அவள் தம்பி பிரசாந்த்.. “ தவறு செய்தவங்க, அதை மறைக்க இது போல் தான் ஏதோ காரணத்தை தேடி அலைவாங்க..” என்று பிரசாந்த் சொல்லி கொண்டு இருக்கும் போதே..
மந்ரா.. “ உனக்கு இந்த பிரச்சனை வெளியில் வந்தால், உன் கல்யாணம் நின்று விடும் என்ற பயம்.. நீ ரொம்ப சுயநலக்காரன் பிரசாந்த்..” என்றவளின் பேச்சில், ஒரு அலட்சிய புன்னைகை புரிந்த பிரசாந்த்..
“ இந்த பிரச்சனை வெளியில் வருதோ… இல்லையோ… நான் இதை கண்டிப்பா சுதாவிடம் சொல்வேன்.. முடிவு அவள் எடுக்கட்டும்..’ என்றவனை அதற்க்கு அடுத்து என்ன பேசுவது என்று தெரியாது தன் தந்தையை பார்த்தவள்..
“ டாட் நான் கண்டிப்பா என் குழந்தையை கேட்பேன்.. நீங்க என் கூட இருக்கிங்களா..? இல்லையா..?”
அவ்வளவு தான் பேச்சு என்பது போல் பேசும் மகளை பார்த்து என்ன நினைத்தாரோ…
“ சரி குழந்தையை கேட்கலாம்.. “ என்று தான் ராம் மோகன் சொல்லும் படி ஆகி விட்டது..
பெண் தைரியமாக வளரட்டும் என்று தான் அனைத்திற்க்கும், மந்ராவுக்கு சுதந்திரம் கொடுத்து வளர்த்தார்.. ஒரு சிலர் தனக்கு கிடைத்த சுதந்திரத்தை நல்ல மாதிரியாக பயன்ப்படுத்தி பெற்றோர்களை தலை நிமிர வைக்கிறார்கள்..
ஆனால் ஒரு சிலர் மந்ராவை போல் நடந்து, இதோ ஒரு தந்தை பார்க்க கூடாத… கேட்க கூடாத வார்த்தைகளை எல்லாம் கேட்க போகிறாரே, அந்த நிலைக்கு தான் நிறுத்துவர்..
ஸாகித்யா நேத்ரன் வீட்டின் காரில் சென்ற பின், அத்வைத் உடனே அங்கு இருந்து சென்று விட்டான்..
போனவன் சென்ற இடம் ஸாகித்யா தங்கும் விடுதிக்கு, அங்கு அத்வைத் தான் சேர்த்தான். ஸாகித்யாவை அழைத்து செல்ல அங்கு வந்து இருப்பதால், அவனை எல்லோருக்கும் தெரியும்..
அதனால் அவனை பார்த்த அங்கு தங்கி இருக்கும் பெண்.. அங்கு வேலை செய்பவரை அழைத்து..
“ஸாகித்யாவை கூப்பிடுங்க..” என்று சொன்னவள் அத்வைத்தை பார்த்து..
“ சாரின் காத்து இந்த பக்கம் அடித்து ரொம்ப நாள் ஆகுது..?” என்று அந்த பெண் அத்வைத்தை பார்த்து விளையாட்டாக மிக சாதரணமாக தான் கேட்டாள்…
ஆனால் குற்றம் உள்ள நெஞ்சம்.. ஆதலால், சாதாரண அந்த பேச்சு கூட அவனை குத்தியது போல், அதனால் அது கொடுத்த குடைச்சலில்..
“ அது பத்தி உங்களுக்கு என்ன வந்தது..?” என்று வல் என்று விழ..
எப்போதும் இங்கு வந்தால், ஸாகித்யா கிளம்பும் வரை, இங்கு இருப்பர்கள் இவனிடம் பேச்சு கொடுப்பர்.. .
அனைவருக்கும் அவர்களுக்கு தக்க வகையில் பதில் கொடுத்து, அங்கு அவன் ஒரு ரசிகர் மன்றமே ஏற்படுத்தி உள்ளான்.. ஆனால் இன்று..
அவன் பேச்சில் , அந்த பெண்ணின் விரிந்த புன்னகை கூம்ப.. “ சாரி..” என்று நகர்ந்தவளை பார்த்து கொண்டே அங்கு வந்த ஸாகித்யா..
“ பாவம் அந்த பெண்ணுக்கு தெரியல.. உங்க காத்து வேறு பக்கம் போய் ரொம்ப நாள் ஆகிடுச்சி என்று.. அவள் சார்பா நான் மன்னுப்பு கேட்டு கொள்கிறேன்..” என்று சொல்லி தன் இரு கையை கூப்பிடவளின் கையை பற்ற வந்த அத்வைத்திடம் இருந்து தூரம் விலகி போனவளாக..
“ எதுக்கு வந்திங்க..?” என்று ஸாகித்யா கேட்கும் பாங்கிலேயே அத்வைத்துக்கு அப்படி ஒரு அணல் அடித்தது…
அவள் பேசிய பேச்சை விடுத்து.. “ என்ன ஸாகி யாரோ போல பேசுற..? என்னை அத்தான் என்று கூப்பிடாது உன் வாயில் இருந்து ஒரு வார்த்தை கூட வராது…
ஆனால் இப்போ ஒரு அத்தானுக்கு கூட உன் கிட்ட பஞ்சமா ஆகி விட்டதா..?” என்று அத்வைத் சொன்ன அடுத்த பேச்சாக..
ஸாகித்யா.. “ சொல்லுங்க அத்தான்.. எதுக்கு வந்திங்க அத்தான் ” என்று அத்வைத் சொன்னது போல் தான் ஸாகித்யா ஒவ்வொரு வார்த்தைக்கும் அத்தான் போட்டாள் தான்..
ஆனால் அந்த அத்தான் அழைப்பு முன் அழைப்பது போல் இல்லாது ஒரு இயந்திர தன்மையில் இருப்பது அத்வைத்துக்கு வெளிப்படையாகவே தெரிந்தது..
ஸாகித்யாவின் இது போல் பேச்சுக்கு அத்வைத் எப்படி..? பதில் அளிப்பது என்று தெரியாது முழித்து கொண்டு இருந்தான்…
ஸாகித்யா எப்போதும் தன் பேச்சுக்கு.. “ அப்படியா அத்தான்.. சரி அத்தான்..” இது போல் பதில் தான் அவளிடம் இருந்து கேட்டு இருக்கிறான்…
இப்பொதும் தான் சொன்னதும் அத்தான் என்று அழைத்தாள் தான்.. ஆனால் அதில் தெரிந்த விலகல்..
மாமாவின் மகன் அத்தான்.. என்ற முறைக்கு அழைப்பது போல் தான் அவனுக்கு தெரிந்தது..
அதை கேட்கவும் செய்தான்.. “ நான் சொன்ன உடன் அத்தான் என்று அழைத்து விட்ட..”
“மாமா மகன் அத்தான் தானே..” என்று இவள் எதிர் கேள்வி கேட்க.. அவளிடம் இருந்து இது போலான பேசுசுக்களும் அவனுக்கு புதியது..
“ அவ்வளவு தானா..?” என்றதற்க்கு,
“ வேறு என்ன எதிர் பார்க்கிறிங்க.. நீங்க என் கிட்ட இருந்து..”
“ நமக்கு கல்யாணம் செய்ய வீட்டில் பேசி இருக்காங்க.. அது உனக்கு மறந்து விட்டதா..?” என்று பல்லை கடித்து கொண்டு கேட்டான்..
இவள் கத்துவாள்.. அழுவாள், சண்டை போடுவாள்.. அதற்க்கு எப்படி பேசி அவளை சமாதானம் செய்யலாம் என்று இங்கு வரும் வழி முழுவதும் அவன் நினைத்து வந்தவனுக்கு,
ஸாகித்யாவின் இந்த பேச்சு, அவனுக்கு ஏற்புடையதாக இல்லை…
“ இப்போ நீ என்ன சொல்ற..?’ என்று எப்போதும் பேசும் தோனியில் கேட்டான்…
“ நான் எதுவும் சொல்ல வில்லையே அத்தான்..” என்று பேசியவளின் இந்த பேச்சுக்கு உள் மறைந்து இருக்கும் வலி அவள் மட்டுமே உணர்வாள்….
ஸாகித்யா இங்கு வந்து அரை மணி நேரம் கழித்து தான் அத்வைத் வந்தது.. வந்த உடன் நேத்ரனை அழைத்து வந்து சேர்ந்ததை சொல்லி விட்டான்..
அப்போது அவன் சொன்ன வார்த்தை.. “ நம் அழுகைக்கும் ஒரு மதிப்பு இருக்க வேண்டும்.. நான் சொல்வது உனக்கு புரியுதா..?” என்று சொல்லோடு பேசி நின்று விட்டது…
இங்கு ஸாகித்யாவின் அழுகையும் நின்று விட்டது… நேத்ரன் இவ்வாறு சொல்ல காரணம், ஸாகித்யா நேத்ரனை அழைக்கும் போது, காரில் வரும் போது அடக்கப்பட்ட அழுகை அறையில் வந்ததும்.. கட்டுப்படுத்த முடியாது வெளி வர துடித்தது..
அதை அடக்கியவளாக தான் ஸாகித்யா நேத்ரனை அழைத்து பேசியது.. அழுகையை அடக்கி பேசியவளின் குரலை இனம் கண்டு கொண்டவனாக நேத்ரன் பேசினான்…
நேத்ரன் சொன்னது போல், நான் ஏன் அழ வேண்டும்… ? என்று தான் நினைத்தது, அத்வைத் வரும் வரை அதையே மனதில் உருப்போட்டு கொண்டு இருந்ததால், தான் ஸாகித்யாவால் அத்வைத்திடம் இது போல் சாதரணமாக பேச முடிந்தது…
அத்வைத் சொன்ன.. “ வீட்டில் நமக்கு கல்யாணம் பேசி இருக்காங்க..” என்ற வார்த்தைக்கு பதிலாக..
“ அது தான் நீ குடும்பம் நடத்தியே முடித்து விட்டிங்களே .. புதுசா என்ன கல்யாணம் வேண்டி இருக்கு…? ” என்ற இந்த பேச்சை அத்வைத் ஸாகித்யாவிடம் இருந்து சுத்தமாக எதிர் பார்க்கவில்லை..
“ என்ன இது போல் அசிங்கமா எல்லாம் பேசுற..?” என்று சின்ன வயதில் ஸாகித்யாவை அதட்டி பேசுவது போல் பேசினான்..
“ ஆமாம் அசிங்கம் தான்.. இந்த வார்த்தையை சொன்னதற்க்கே நான் என் வாயை பினாயில் போட்டு தான் கழுவ வேண்டும்..” என்று சொல்லி விட்டு…
“ வேறு விசயம் ஏதாவது இருக்கா..?” என்ற கேள்வி கேட்டவள்.. இல்லை என்றால் நான் போகிறேன்.. என்று சொல்லி விட்டு போனவளின் முதுகையே பார்த்து கொண்டு இருந்தவனுக்கு அப்போது கூட நம்பிக்கை இருந்தது…
தான் ஸாகித்யாவை திருமணம் செய்து கொள்வேன் என்று..ஏன் என்றால் தன் வீட்டில் இருப்பவர்களை பற்றி நன்கு தெரிந்தவனாக, அவன் அப்படி ஒன்றும் ஸாகித்யா விசயத்தில் தளர்ந்து விடவில்லை..
ஸாகித்யா விசயம் அடுத்த வாரம் ஊருக்கு போகும் போது பார்த்து கொள்ளலாம்.. எப்படியும் ஊருக்கு என் கூட தானே வந்து ஆக வேண்டும்..
தனியாக போவதற்க்கு அவளுக்கு எங்க்கு தைரியம் இருக்கிறது…? என்று நினைத்து கொண்டு தன் சிந்தனை அடுத்த பிரச்சனையான மந்ராவிடம் வந்து நின்றது..
படித்த பெண்.. புத்திசாலி என்று நினைத்தேன்.. ஆனால் பேஸிக்.. பாதுகாப்பு இல்லாது.. அது தான் கடை கடைக்கு விற்கிறாங்களே.. சேர்ந்த மறு நாள் கூட போடலாம் என்று..
எனக்கு கல்யாணம் ஆகவில்லை.. அவளுக்கு தான் ஆகி விட்டு குழந்தையும் பெத்து இருக்கா, இந்த விவரம் தெரியாதா இருக்கும்.. என்ற எரிச்சலில் அத்வைத் பேசியில் மந்ராவுக்கு அழைத்தான்..
அப்போது தான் தன் தந்தை தம்பியிடம் குழந்தை விசயமாக பேசி விட்டு தன் அறைக்கு சோர்ந்து போய் வந்து தலை மீது கை வைத்து அமந்தவளுக்கு, அத்வைத்திடம் இருந்து வந்த அழைப்பை பார்த்து..
“ஆமா இவனை எப்படி மறந்தோம் ..” என்று நினைத்து கொண்டே.. அவன் அழைப்பை ஏற்ற உடன்..
அத்வைத் கோபத்துடன்.. “ என்ன மந்ரா என்ன காரியம் செய்து வைத்து இருக்க பார்.. உன்னால் ஏகப்பட்ட பிரச்சனை.. . நீ என்ன சின்ன பெண்ணா..? இதை தடுக்க தான் ஏகப்பட விசயம் இருக்கே.. அதில் ஒன்றை எடுத்து கொள்ள வேண்டியது தானே..
ஸாகித்யா முகத்தை என்னால் பார்க்க முடியவில்லை.. இதில் உன் புருஷன் வேறு பிசினஸில் என்ன என்ன செய்வானோ.. இந்த விசயம் என் அப்பா அம்மாவுக்கு தெரிந்தால், அவங்க முகத்தில் விழிப்பதை நினைத்தாலே..” என்று அவன் பாட்டுக்கு மந்ராவை பேச விடாது பேசிக் கொண்டு இருந்தான்..
முதலில் மந்ரா அத்வைத்தின் பேச்சில்.. ‘ இவன் என்ன பேசுகிறான்..? புரிந்து பேசுகிறானா..? புரியாது பேசுகிறானா..?’ என்று நினைத்து கொண்டு இருந்தவள்.. போக போக அவன் பேச்சு எல்லை தான்டி போகவும்..
“ இப்போ வாயை மூடிறியா..? இல்லையா..? “ என்று தன்னால் முயன்ற அளவுக்கு குரல் உயர்த்தி மந்ரா சத்தம் போடவும் தான் அத்வைத்தின் பேச்சு நின்றது..
“ அப்போதும் படித்த..” என்ற அத்வைத்தை மேல பேச விடாது..
“ நீ படிக்கவில்லையா..?” என்று கேட்டாள்..
அத்வைத் உடனே தான் சொல்ல வந்ததை மாற்றி..
“ உனக்கு இது பற்றிய விவரம் தெரியும்.. என்று தான் நான் அசால்ட்டா விட்டு விட்டேன்.. கல்யாண ஆன பெண்ணுக்கு இந்த விவரம் தெரியாதா..? என்று தான்..” என்ற அவன் பேச்சில், எந்த அக்கறையான கவனிப்பில் வீழ்ந்தாளோ.. எந்த பாசமான செயல்களுக்கு அவன் மேல் விழுந்து பழகினாளோ..
இப்போது அது எதுவும் இல்லாது தன் பிரச்சனை மட்டுமே பிரதானம் என்பது போல் பேசியனின் வார்த்தையில் விக்கித்து அடுத்து பேச முடியாது பேச தோனாது சிலையாகி நின்று விட்டாள்..
.