Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Negizhundha Nejam...20

  • Thread Author
அத்தியாயம்….20

தன் அறைக்கு வந்த அத்வைத்துக்கு மனது ஆறவில்லை.. தானே இது போல் ஸாகித்யாவை ஒட்டினார் போல் அமர்ந்தது கிடையாது.. என்று நினைக்கும் போதே ஸாகித்யாவின் சிவந்த முகமும் அவன் கண் முன் வந்து ஆட்டம் காட்டியது..



அவள் கன்னம் எப்படி சிவந்து கிடந்தது.. தன்னால் அவள் கன்னம் இப்படி சிவந்ததா..? யோசித்தவனுக்கு பதில் இல்லை என்று தான் கிட்டியது…



கூடவே சிவப்பது போல் தான் நான் அவளிடம் நெருங்கியது இல்லையே… தனக்கு உண்டான ஒரு பொருளை பாதுகாப்பும் எண்ணம் மட்டும் தான் அத்வைத்துக்கு இருந்ததே தவிர.. அவளை தவறாக அணுக வேண்டும் என்று அவன் நினைத்தது கிடையாது..







நெருங்கி இருக்க வேண்டுமோ.. அப்படி இருந்து இருந்தால், இன்று அவள் தன் கை விட்டு சென்று இருக்க முடியுமா…?



ஒரு பொருள் தன் அருகில் இருக்கும் போது அதன் அருமை நமக்கு தெரியாது.. இதே அதே பொருள் அடுத்தவர் கையில் இருக்கும் போது தான் அது பளிச் என்று நம் கண்ணுக்கு தெரியும்…



பொருளுக்கே அப்படி என்றால், பெண்ணுக்கு.. அந்த நிலையில் தான் அத்வைத் இப்போது இருந்தான்… அத்வைத் இப்படி தன்னிலையில் புலம்பிக் கொண்டு இருக்க..



அத்வைத் நிலையே மேல் என்பது போல் தான் மந்ராவின் மன நிலை இருந்தது.. இது வரை தன் அருகில் இப்படி இழைந்து இருந்து இருக்கிறானா…? தன்னோடு நேரத்தை தான் செலவிட்டு இருக்கிறானா…?



இல்லையே … இல்லையே.. இருந்து இருந்தால் நான் ஏன் வேறு இடம் தேடி இருக்க



போகிறேன்… இன்று அவர்கள் குடும்பமாக இருந்த அந்த காட்சியே… மந்ராவின் கண் முன் வந்து அவள் தன் நிலை இழக்க செய்தது..



இன்று அத்வைத்தை அழைத்து பேச.. தவறு தவறு சண்டை இட காரணம்.. நீதி மன்றத்தில் சொல்லாது மாயமாகிட்யவனை வேறு ஒரு நட்பு மூலம் தான் அவன் கிடைக்க பெற்றான்..





“ நான் சொல்லும் இடத்திற்க்கு நீ வந்து தான் ஆக வேண்டும்.. இல்லை என்றால்,

என் வயிற்றில் இருப்பது உன் குழந்தை தானே..? இதை வைத்தே நான் உன்னை என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும்..?



உனக்கு தெரியும் தானே..? என்று மிரட்டி அத்வைத்தை மந்ரா வர சொன்ன இடம் தான் அந்த ஓட்டல்…





அங்கு வந்ததும் மந்ரா ஆரம்பித்து விட்டால்,..

“ உன்னால் என் வாழ்க்கை போனது.. மற்றவர்கள் பார்வைக்கு என் மதிப்பு போய் விட்டது.. என் தம்பியே என்னை சீப்பாக பார்க்கிறான்..



முக்கியமா என் குழந்தை என்னை விட்டு போய் விட்டது..” என்று சொன்னவளின் மற்ற பேச்சுக்கு அமைதியாக இருந்தது போல் அமைதியாக அத்வைத் இல்லாது…



மந்ரா சொன்ன என் குழந்தை போய் விட்டது என்ற அவள் கடைசி பேச்சில்.. “ அது தான் அதற்க்கு பதிலாக இங்கு இருக்கே..” என்று சொல்லி அவள் பெரிய வயிற்றை அவன் காட்டவும்..

மந்ராவின் கோபம் இல்லையை தான்டியது என்று தான் சொல்ல வேண்டும்..



“ இந்த குழந்தை வந்ததால் தான் எனக்கு இவ்வளவு பிரச்சனையும் உனக்கு என்ன..? இந்த குழந்தையின் பொறுப்பை நீ ஏத்துப்பியா…? இதனால் உனக்கு என்ன பாதிப்பு வந்து விட்டது” என்பது போல் இவள் எகிற..



மந்ராவுக்கு மேல் அத்வைத்.. “ எனக்கு என்னவா…? என் கல்யாணம் நின்று விட்டது… என்ன தான் என் குடும்பம் என்னை ஏத்துக் கொண்டாலும், முன் போல் என்னை பார்க்கும் அந்த பார்வையில் மரியாதை இல்லை…





பணம் மொத்தமா போனது இல்லாம, அந்த நேத்ரன் பொய் கணக்கு காண்பித்தது மட்டும் இல்லாம… நஷ்ட்டத்தில் முப்பது சதவீதம் நான் கட்ட வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பி இருக்கான்..” என்று இருவரும் ஒருவரின் மேல் இன்னொருவர் சேற்றை வாரி இறைத்து கொண்டு இருந்தனர்…



மொத்தத்தில் உன்னால் நான் கெட்டேன் என்னால் நீ கெட்டாய் என்பது போல் நிலையில் தான் இருவரும் சண்டை போட்டு கொண்டு இருந்தனர்..





அந்த நேரத்தில் தான் நேத்ரன் ஸாகித்யாவோடு குழந்தை என்று குடும்ப சகிதமாய் அந்த ஒட்டலுக்குள் நிழைவதை பார்த்ததும்..



எரியும் தீயில் எண்ணையை ஊற்றியது போல் தான் இருவரின் மனநிலையும் இருந்தன..





அதுவும் பார்ட்டிக்கு என்று ஸாகித்யா விசேஷமாக அணிந்திருந்த புடவை, நகையில் அவளின் அழகு இன்னும் மிளிர்ந்து காணப்பட்டது..



அவள் ஓட்டலுக்கு உள் நுழையும் போது, ஸாகித்யாவை ஒருவன் இடிப்பது போல் ஒரு நிலையில், சட்டென்று அவளை தன் அருகில் இழுத்து கொண்டவன் எதிரில் வந்தவனை பார்த்து முறைத்து…

என்னவோ பேசினான்.. என்ன என்று கேட்கவில்லை.. ஆனால் கோபமாக என்று நேத்ரனின் முகமே சொல்லியது..



இன்னும் கேட்டால், அவன் வேண்டும் என்று எல்லாம் இடிப்பது போல் வரவில்லை.. தெரியாது நிகழ்ந்த நிகழ்வு..

தவறு தவறு.. அது தான் அவன் ஸாகித்யாவின் புடவை நுனி கூட படாது சட்டென்று நேத்ரன் தன் பக்கம் இழுத்துக் கொண்டானே…



அவனின் அந்த முகத்தில் அப்படி ஒரு கோபம் தெரிந்தது.. கோபம் படுவான் தான் . ஆனால் இது போல் அனைவரும் பார்க்க கோபமாக கத்தும் அந்த முகம் மந்ராவுக்கு புதியது…



அதை பார்க்கும் போது மூன்று ஆண்டுக்கு முன், இருவரும் ஒரு இடத்திற்க்கு போகும் போது ஒருவன் தன்னையே முறைத்து பார்ப்பதை நேத்ரனிடம் மந்ரா சொன்னாள்..







“ அவன் ஏன்னையே பார்த்துட்டு இருக்கான்..” என்று..



நேத்ரனும் திரும்பி மந்ரா சொன்னவனை பார்க்க தான் செய்தான்.. ஆனால் அவன் அப்போது அவன் பார்வை வேறு எங்கோ இருப்பதை தான் நேத்ரன் பார்க்க நேரிட்டது…



“ அவன் இங்கு பார்க்கவில்லை மந்ரா. ஒரு சில பெண்கள் … இப்படி தான் எல்லோரும் தன்னையே பார்ப்பது போல் ஒரு எண்ணம் வரும்..



முதல்ல அந்த உன் எண்ணத்தை மாற்று..” என்று சொன்னவனின் அந்த நாளையும்..



இப்போதும் நேத்ரன் ஸாகித்யாவை இடிக்க கூட விட இல்லை… அதுவும் தெரியாது படுவது போல் ஆனது. ஆனால் படவில்லை…









அப்படி இருக்க எப்போதும் ஒரு நாசுக்கு பார்க்கும் நேத்ரன்… இப்படி அனைவரும் பார்க்க.. கத்திக் கொண்டு இருந்தவனை தான் மந்ரா… நேத்ரன் தன் குடும்பத்தோடு நுழையும் போது பார்த்தது…



பின் ஸாகித்யா தான்.. “ அவர் வரும் போது எதிரில் வருபவர் இடிப்பது போல் ஆனதால் தான், அவர் என் அருகில் வரும் படி ஆனது.. அதுவும் அவர் என்னை இடிக்க கூட இல்லையே…” என்று ஸாகித்யா சொன்னதுமே..



“ ஓ அப்போ நான் உன்னை என் பக்கம் இழுக்கலேன்னா அவன் இடித்து இருப்பானா…?” என்று சொல்லி கொண்டே பாவம் எதிரில் வந்தவனின் சட்டையை கொத்தாக பற்றிக் கொண்டான் நேத்ரன்..







ஸாகித்யா தான் இன்னும் பதறி கொண்டு “ அவரின் சட்டையை பிடித்து கொண்டு இருக்கிங்க… விடுங்க… முதல்ல விடுங்க. குழந்தை பார்த்து பயப்படுறா..” என்று சொல்லவும் தான் நேத்ரன் அவனை விட்டது..



அதன் பின் உணவு கேட்டு சொல்லி விட்டதோடு ஸாகித்யாவின் பக்கத்தில் அமர்ந்து, மந்ராவுக்கு அதை நினைக்க நினைக்க தாள முடியவில்லை..



அவள் இப்போது தனியாக தான் இருக்கிறாள்.. அவள் தம்பிக்கு நிச்சயம் செய்த இடத்தில் பிரசாந்த் அனைத்தும் சொல்லி விட்டான்..



பெண் வீட்டார்கள் சொன்னது இது தான்…அந்த பெண்ணுக்கு கொடுக்க வேண்டிய சொத்து என்னவோ அனைத்தும் கொடுத்து விடுங்க …அது எல்லாம் எங்களுக்கு முக்கியம் கிடையாது..







ஆனால் என் பெண் இருக்கும் வீட்டில் உங்க அக்கா இருக்க கூடாது.. என்று சொல்லி தான் அவர்கள் பெண்ணை கொடுத்தது.



.

அதன் படி இப்போது மந்ரா அவள் தந்தை தனக்கு என்று கொடுத்த வீட்டில் தான் தனித்து இருக்கிறாள்… கணவனின் அக்கறை இல்லை என்று அக்கறை காட்டிய இயத்திற்க்கு தேடி சென்றவளுக்கு, ..



தன் மீது அவன் அக்கறை காட்டியது எதனால்..? என்று தெளிவாக தெரிந்த பின்.. அக்கறை காட்ட யாரும் இல்லாது தனித்து இருக்கிறாள்..





அவள் தந்தை அவளிடம் தான் இருந்தார்.. மகனை பார்க்க அவ்வப்போது போய் வந்ததில் அந்த பெண் காட்டிய பாசத்தில், இப்போது எல்லாம் அவர் இவள் வீட்டுக்கு தான் அவ்வப்போது வந்து செல்கிறார்..





அதுவும் வந்தவர்.. “ நீ இப்படி இருப்பதால் தான் இங்கு வர வேண்டியதாக இருக்கிறது..” என்று அவள் மேடிட்ட வயிற்றை சுட்டி காட்டி சொன்னவர்…



பின் “ அங்கு என் மருமகள் வேறு முழுகாம இருக்கா… நான் இருந்தால் தான் ஒழுங்கா சாப்பிட்ட சொல்வேன்..” என்று அவர் பாட்டுக்கு சொல்லும் போது தான் மந்ரா ஒன்று உணர்ந்தாள்..



தானும் தான் குழந்தை உண்டாகி இருக்கிறோம்.. என்று.. ஆனால் இன்னொன்றை மறந்து போனால், எதுவுமே நடக்கும் முறையில் நடந்தால் தான் அதற்க்கு மதிப்பு இருக்கும் என்று…



இதே இந்த குழந்தை நேத்ரனோடையதாக இருந்து இருந்தால், இரண்டாம் குழந்தை என்று தான் அவள் தந்தை கொண்டாடி தீர்த்து இருப்பார்..



ஏன் மந்ரா தன் முதல் குழந்தை ஸாகி உணாடகி இருக்கும் போது இதே தந்தை அவளை கொண்டாடி தீர்க்க வில்லை..



ஏன் இவளுமே முதல் குழந்தை சுமக்கும் போது இருக்கும் மனநிலையிலேயா இப்போது இருக்கிறாள்.. அது தான் இருக்கும் இடத்தில் இருந்தால் தான் எப்போது அதன் மதிப்பு தெரியும்…





மந்ராவுக்கு இப்படி தனிமையில் இருக்க அத்வைத் தானே காரணம் என்று அவனை திட்ட ஓட்டலும் அழைத்தவள்.. அங்கு நேத்ரனை ஸாகித்யாவோடு, அதுவும் அப்படி இழைந்து பார்த்ததில் இவனால் தான்..



தவறு தவறு ஸாகித்யாவால் தான் நான் இப்படி ஆனேன்.. அத்வைத் ஸாகித்யாவை அன்று அப்படி கவனித்ததால் தானே என் கவனம் அவனிடம் சென்றது.. என்று இப்போதும் தப்பு தவறுமாக யோசித்தவளுக்கு பளிச் என்று ஒரு எண்ணம் உதித்தது..





உடனே அத்வைத்தை அழைத்தாள். இந்த முறை அவளின் போனை கட் செய்யாது அதை ஏற்றவன்…



“ நானே ஏற்கனவே ஸாகித்யாவை அவனோடு அப்படி பார்த்ததில் கடுப்பில் இருக்கேன்.. இதில் நீ வேறு… என்னை ஏதாவது பேசி வெறுப்பு ஏத்தாதே ..” என்று கத்தியனின் வாயை அடைப்பது போல் மந்ரா..



“ நான் மட்டும் என்ன குளு குளு என்றா இருக்கேன்.. நானும் நேத்ரனோடு ஸாகித்யா அப்படி இருந்ததை பார்த்து பத்தி கிட்டு தான் புலம்பி கொண்டு இருக்கேன்..” என்று தன் வயிற்று எரிச்சலை கூறியவள்..



பின் அதை அணைக்கும் வழியாக… “ ஸாகித்யாவை கடத்திடலாம்..” என்று சொன்னவளின் பேச்சை அத்வைத் மறுக்கவில்லை..



“ கடத்தி..” என்று அவன் இழுத்து நிறுத்திய அத்வைத்துக்கு மந்ரா..



“ ஓட்டலில் என் கிட்ட என்ன என்று சொல்லி புலம்பினே… அவள் என்னுடையள் என்று தான் நான் அவளை தப்பா தொடுவது என்ன பார்த்தது கூட இல்லை என்று தானே சொன்ன..”



மந்ரா போகும் பாதை அத்வைத்துக்கு புலப்பட்டது தான் இருந்தும்.. அதை தெளிவு படுத்த வேண்டி..



“ அதற்க்கு..” என்று அத்வைத் கேட்டதும்..



மந்ரா அத்வைத் நினைத்த… “ அதை இரண்டையும் இப்போதும் செய்து விடு… நான் உன்னோடு இருந்தேன் என்று தானே என்னை ஒதுக்கி விட்டு அவளை கட்டி இருக்கான்..

இப்போது அவன் என்ன செய்ய போகிறான் என்று நான் பார்க்கனும்.. நான் தனியா இருப்பது போல் தான் அவனும் தனியா இருக்க வேண்டும்..” என்று மந்ரா வெறிக் கொண்டு கத்த..



அடுத்த இரண்டு நாட்களில் இருவரும் திட்டமிட்டு… ஸாகித்யாவை கடத்தி விட்டனர்.. என்ன ஒன்று,, இருவரும் போட்ட திட்டம் அல்லவா.. அதனால் கூடவே பேபி ஸாகியையும் சேர்த்து இரண்டு ஸாகித்யாவையும் கடத்தி விட்டனர்…
 
Top