அத்தியாயம்….1
“நேத்ரன், இந்த அத்வைத் ஏன் இந்த இடத்தை செலக்ட் செய்தான்…?” என்ற கேள்வி கேட்ட மந்ராவுக்கு பதில் வராது போக.. தன் பக்கத்தில் அமர்ந்திருந்த , தன் கணவன் நேத்ரனை திரும்பி பார்த்தாள்..
அவனோ அவன் கை பேசியில் மூழ்கி இருந்தவனை கண்டவள் கடுப்புடன், அவன்
என்ன பார்க்கிறான் என்று அவன் கை பேசியை எட்டி பார்க்கும் போது, நேத்ரன் தனக்கு வந்திருந்த நின் அஞ்சல்களுக்கு பதில் அளித்துக் கொண்டு இருந்தான்…
இதனை பார்த்த மந்ராவுக்கு ஏக கடுப்பாகி போய் விட்டது.. எப்போதும் இவனுக்கு இதே வேலை தான்.. குடும்பத்துடன் வெளியில் வந்தாலுமே, இவனுக்கு இவன் தொழில் தான் முக்கியம்..
கேட்டால் இதை ஒன்றை சொல்லி விடுவான்… என்னை பற்றி தெரியாமலா என்னை திருமணம் செய்து கொண்டாய் என்று..
தெரியும் தான்.. அவனை பற்றி அனைத்தும் இல்லை என்றாலும், ஒரளவுக்கு தெரியும்… காதல் திருமணம் கிடையாது… காதலோடு மேலான நட்பு இவர்களுக்குள் கல்லூரியில் ஏற்ப்பட்டது.. இவர்கள் நட்பு வட்டத்தில் இதோ தன் மூன்று வயது பெண் குழந்தையை தூக்கி வைத்து கொண்டு, வெளியில் யார் வரவையோ..
யார்..? வரவையோ என்ன..? அவன் வருங்கால மனைவியின் வருகையை எதிர் பார்த்து காத்து கொண்டு இருக்கும் இந்த அத்வைத்தும் அடக்கம்…
பின் கல்லூரி வாழ்க்கை முடிந்த பின், அவர் அவர் வேலையை, அவர் அவர் பார்க்க ஆரம்பித்து விட்டனர் தான்.
பின் எபோதாவது ஒரு போன் கால்… நேத்ரனோ அழைத்தால் மட்டும் பேசுவான்.. சில சமயம் இவர்கள் செய்த கால் மிஸ்ட் கால் லிஸ்ட்டில் சேர்ந்து விடும் தான்..
அதை அவன் அப்படியே விட்டு இருந்தால், இவள் இவர்கள் நட்பை விட்டு இருப்பாளோ என்னவோ… தன் ஒய்வு நேர்த்தில் நேத்ரனே இவளை அழைத்து பேசுவான்..
இவர்களை இல்லாது, இவள் என்று சொன்னால் அது சரியாக இருக்கும் … ஏன் என்றால், அத்வைத்தை தான் அவன் தொழிலின் பங்குதாரராய் கூடவே வைத்து கொண்டு இருக்கிறானே…
அழைத்து என்ன விசயம்…? என்று கேட்டு விட்டு வைத்து விடுவான்.. அவ்வளவே…
அதுவும் நேத்ரன் எப்போதும் அவனே அழைத்து, இவளிடம் பேசியது கிடையாது….
ஆனால் அத்வைத் அப்படி கிடையாது… தான் நீண்ட நாட்கள் கை பேசியில் அழைக்காது விட்டு விட்டால், அவன் அழைத்து விடுவான்..
“ என்ன மந்தம் அழைக்கவே இல்லை..” என்று…
“ நீ என்னை மந்தம் என்று கூப்பிடுவதால், நான் எப்போதும் மந்தமா வீட்டிலேயே உட்கார்ந்துட்டு இருக்கேன் என்று நீயும் உன் பிரண்டும் நினச்சிட்டிங்களா…?” என்று அவள் கோபத்திற்க்கு உண்டான காரணம் அவள் பேசும் போதே அத்வைத்துக்கு தெரிந்து விடும்…
“ அவன் வேலையில் பிஸியா இருக்கான் பா…” என்று சொல்லி மந்ராவை சமாதானம் செய்வான்…
“ இந்த சமாளிப்பு எல்லாம் என் கிட்ட வேண்டாம்…” என்று அத்வைத் தன் கோபத்தை குறைக்க தான் பேசுகிறான் என்று தெரிந்து, அவன் பேச்சை ஆரம்பிக்கும் போதே மந்ரா முடித்து வைத்து விடுவாள்..
“ இல்லேப்பா..” என்று அத்வைத் திரும்பவும் பேச்சை ஆரம்பிக்கும் போதே..
“ இந்த பா என்று கூப்பிடாதே..” என்று இன்னும் சத்தம் போடுவாள்.. அத்வைத் எப்போதும் மற்றவர்களை சமாதானம் படுத்தும் போது, இப்படி தான் பா போட்டு அழைப்பான்..
மற்றவர்கள் என்ன மற்றவர்கள்.. கல்லூரியில் படிக்கும் போதும் சரி.. இதோ இப்போது இவர்கள் பேச்சிலும் சரி, அத்வைத் அந்த பா என்ற அழைப்பை உபயோகப்படுத்துவது மந்ராவிடம் மட்டுமே…
“ மந்தம் உனக்கே தெரியும் அவன் எவ்வளவு பிஸி என்று..”
அவளுக்கு புரிய வைக்கும் நோக்குடன், தன்மையுடன் தன் பேச்சை அத்வைத் ஆரம்பித்தால், மந்ராவும் தன் கோபத்தை கொஞ்சம் குறைத்து கொண்டவளாக..
“ நீயும் தானேடா அவனோடு பிஸினஸ் செய்யிற…?” என்று கேட்க,
அத்வைத் ..” மந்தம் என்று கூப்பிட்டா மட்டும்.. நானும் உங்களோடு தான்.. m.b.a பண்ணேன்.. நானும் தான் என் அப்பா பிஸினஸை பார்த்து கொள்கிறேன் என்று சொல்ல வேண்டியது..
எனக்கு அவன் கூய பார்ட்னரா இருக்கும் இந்த தொழில் மட்டும் தான்… ஆனால் அவனுக்கு…? இருக்கு அது ஏகப்பட்டதுக்கு..
எல்லாத்துக்கும் ஆளை வைத்து பார்த்து கொண்டாலும், அவனும் பார்க்கனும்… இந்த வேலையிலும், உன் அழைப்பு விடுப்பட்டாலும், உன் நட்பை மதித்து நேரம் கிடைக்கும் போது கூப்பிடுகிறான் தானே…
இது எல்லாம் நீ யோசிக்க மாட்டியா…? ஆனால் நீ ஒரு மங்குனி என்று நேத்ரனுக்கு என்ன உன் அப்பாவுக்கு கூட தெரியாது..
இல்லேன்னா உன் கிட்ட அவர் பிஸினஸை தூக்கி கொடுப்பாரா…?” என்று அவன் கேட்டால், அவள் கோபம் குறைந்து சிரித்து விடுவாள்..
அத்வைத்துக்கு எப்போதும் நகைச்சுவை உணர்வு அதிகம்.. தன் பேச்சாலேயே மற்றவர்களை கவர்ந்து விடுவான்.. அதோடு கேரிங்க்… இதோ இப்போது கூட தங்கள் குழந்தை ஒரு இடத்தில் அமராது ஓடி கொண்டு இருந்தவளை தூக்கி வைத்து கொண்டு, தன் வருங்கால மனைவியின் வருகைக்கு காத்து கொண்டு இருக்கும் அத்வைத்தை பார்த்தாள்..
பின் தன் கணவனை பார்க்க.. இப்போது தன் கையில் கை பேசி விடு பட்டு, தன் முன் இருக்கும் டேபில் மீது தன் சின்ன மின் கனிணியில் ஏதோ வேலை பார்த்து கொண்டு இருப்பவனை பார்த்து அவளுக்கு மிக கடுப்பாக ஆகி விட்டது…
“ நேத்ரா.. என்ன இது வந்த இடத்திலும் இதை கொண்டு வருவீங்கலா..?” என்று கோபத்துடன் கேட்கும் மனைவிக்கு பதில் அளிக்காது அவளை திரும்பி ஒரு பார்வை பார்த்த நேத்ரன்..
தான் முடிக்க வேண்டிய வேலையை முடித்த பின்.. தன் மடி கனிணியை மூடி வைத்து விட்டு..
“ இப்போ சொல்..” என்பது போல் சாவுகாசமாக திரும்பி தன் மனைவி மந்ராவை பார்த்தான்..
“ என்ன சொல்றது…?”
தான் இவ்வளவு கோபப்பட்டு பேசுகிறோம்.. அப்போது கூட அவன் முடிக்க வேண்டிய வேலையை முடித்து விட்டு, தான் தன்னிடம் பேசுகிறான்.. அதுவும் எதுவும் நடவாதது போல் மிக சாதரணமாக..
அதில் இன்னும் அவள் கோபம் அதிகரித்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும்…
தன்னையே கோபத்துடன் முறைத்து கொண்டு இருக்கும் மனைவியின் பார்வை அவனுக்கு சாதாரண பார்வையாக தெரிந்தது போல..
அதனால் …” இல்ல நீ என்னவோ சொன்ன.. அது தான் என்ன என்று கேட்டேன்..?” என்று பேசும் கணவனை எந்த வகையில் சேர்ப்பது என்று தெரியாது மந்ரா தான்..
“ வெளியில் வரும் போது கூட இது என்ன..?” அவன் முன் இருக்கும் கனிணியை சுட்டி காட்டி கேட்டாள்…
நேத்ரன் ஒரு நிமிடம் எதுவும் பேசவில்லை… அவன் கோபம் அதிகம் பட மாட்டான்.. அதிகம் பட மாட்டான் என்பதை விட, அதை வெளியில் காண்பித்து கொள்ள மாட்டான் என்று சொன்னால் சரியாக இருக்கும்…
அதிகம் கோபத்தை காண்பித்து கொள்கிறவர்கள்.. செயலில் முடியாதவர்கள் என்பது தான் அவன் எண்ணம்… அவன் எப்போதும் தன் கோபத்தை செயலில் தான் காண்பிப்பான்…
இப்போது அவனை கோபப்பட செய்வது அவன் மனைவி.. அதனால் தன்னை கட்டுப்படுத்திவனாக..
“இப்போது எல்லாம் நமக்குள் இது போல் பிரச்சனை அதிகம் வருவது போல் இருக்கு டியர்… அதுவும் என்னை பற்றி எல்லாம் தெரிந்தும்…
நம்ம கல்யாணத்துக்கு முன்… நாம் ஏற்கனவே அறிமுகம் ஆனவர்களாக இருந்தும்.. நான் என்னை தெளிவு படுத்திய பின் தான் நம்ம கல்யாணம் நடந்தது…
கல்யாணம் ஆன நான்கு ஆண்டுகள் கடந்த பின், இப்போ என்ன இது போல் பிரச்சனையை கொண்டு வர்ற என்று எனக்கு சுத்தமா புரியல…
இது போல் இனி ஒரு முறை பொறுமையா உன்னிடம் பேசுவேனா என்று எனக்கு தெரியல..” என்று தன் பேச்சை முடித்து கொண்ட நேத்ரன்.. தன் நண்பன் அத்வைத்திடம் சென்று விட்டான்…
இங்கு மந்ரா தான் தலை மீது கை வைத்து அமர்ந்து விட்டாள்.. தன் கணவன் பேச்சுக்கு அவளாள் எதிர் பேச்சு பேச முடியாத போது.. அதன் தாக்கம் தலைவலியாக வெளிப்பட்டது..
நேத்ரன் சொல்வது அனைத்துமே சரி எனும் போது அவளாள் என்ன செய்ய முடியும்.. .?
கல்லூரியில் மூன்று பேரும் நட்புக்களாக தான் அந்த கல்லூரி வளாகத்தையே சுற்றிக் கொண்டு வந்தனர்..
அந்த கல்லூரியின் நாயகன் நேத்ரன்.. அழகு… படிப்பு… இரண்டும் ஒரு சேர இருந்து விட்டால் திமிர் தன்னால் வந்து விடுமா..? இல்லை ஒரு சில விசயங்களை தவிர்க்க அவன் திமிர் என்ற முக மூடியை பூசிக் கொண்டானோ… தெரியாது… மொத்ததிற்க்கு அவன் திமிராக தான் அலைவான்…
அனைவரையும் தூரம் விலக்கிய நேத்ரனின் நட்பு என்ற வட்டத்துக்குள் சேர்ந்து கொண்டது.. மந்தராவும். அத்வைத்தும் மட்டுமே..
இதனால் அத்வைத்துக்கு ஒரு பிரச்சனையும் கிடையாது.. ஆனால் மந்ராவுக்கு… அவனிடம் காதலை சொல்ல முடியாத நேத்ரனின் விசிரிகள் இவளிடம் தான் உதவி கேட்டு வருவார்கள்…
இவள் சொல்லி விடுவாள்..
“ இது போல் விசயத்துக்கு தூது கூடாது..” என்று..
தூது போனால் அவன் ஏற்க மாட்டான் என்பதும் அவளுக்கு தெரியுமே…
அப்படி கல்லூரியே கொண்டாடிய ஒருவன்.. தனக்கு தன் தந்தை மணமகனாக கொண்டு வந்து அவன் போட்டோவை காட்டிய போது..
அவள் முதலில் தன் தந்தையிடம் கேட்டது..
“டாட் நேத்ரன் ஒத்துக் கொண்டானா..?” என்பது தான்..
அவள் தந்தை ..” உன்னிடம் பேசி முடிவு சொல்றேன் என்று அவர் டாடியிடம் சொல்லி இருக்கார்..” என்று..
சொன்னது போலவே.. அன்று மாலையே.. இவளை பார்க்க.. தவறு…. தவறு …. பேச வந்து விட்டான்..
வந்தவன் சுற்றி வளைக்கது நேரிடையாக..
“ உன் வீட்டில் என்னை தான் உனக்கு மாப்பிள்ளையாக பார்த்து இருக்காங்க… அது உனக்கு தெரியும் தானே…?” என்பதே..
“ ம் தெரியும்..” என்று மந்ரா.. சொன்னதுமே..
நேத்ரன் இவளிடம்.. “ உனக்கு என்னை பிடித்து இருக்கா என்று எல்லாம் கேட்கவில்லை…
“ என்னை பற்றி உனக்கு புதுசா சொல்ல எதுவும் இல்ல தான்.. ஆனாலும் ஒரு சிலதை உன்னிடம் தெளிவு படுத்த நினைக்கிறேன்..
என் ஏஜ் .. சாரி சாரி.. நம்ம ஏஜ் டுவெண்டிசிக்ஸ் … லேடிஸ்க்கு இந்த ஏஜ் மேரஜ் செய்ய சரியான வயசா இருக்கலாம். பட் ஜென்ஸ்.. அதுவும் நான் இப்போ தான் புதுசா அத்வைத் கூட இன்னும் ஒரு தொழில் தொடங்கி இருக்கேன்..” என்று சொல்லிக் கொண்டு வந்தவன்..
“ நான் சொல்ல வேண்டிய விசயத்தை விட்டுட்டு உனக்கு தெரிந்த விசயத்தை பேசிட்டு இருக்கேன் பார்..
இப்போ எனக்கு தனிப்பட்ட வாழ்க்கைக்கு நேரம் ஒதுக்க முடியுமா…? தெரியல… இப்போ என்ன எப்போவும் நான் கொஞ்சம் பிஸியா தான் இருக்கும் ஷெடியூல்…
டாட் உன் போட்டோ காட்டி இந்த பெண் தான் உனக்கு பாத்து இருக்கேன் என்று சொன்னதும், சரி கல்யாணம் செய்தால் தான் என்ன..? என்ற அந்த தாட்டால் தான் உன்னிடம் அதை பற்றி பேச வந்தேன் ..” என்ற அவன் பேச்சில் மந்ரா இவனுக்கு என்னை பிடிக்குமா..?
ஆனால் அவன் அப்படி பார்த்ததோ… பேசியதோ… கிடையாதே.. என்று அவள் எண்ணும் போதே.. நேத்ரன்…
“ எப்படி இருந்தாலும் நான் கல்யாணம் செய்துக்க தான் வேண்டும்.. அது என்னை பற்றி தெரிந்த நீயா இருந்தால், என்ன..? என்று தான்..” என்ற அவனின் பேச்சில் மந்ரா சிறிது ஏமாற்றம் அடைந்தாள் ..
பின் அவன் சொன்ன… “ மேரஜ் பின் என்னை நீங்க தான் ஷாப்பிங்க் கூட்டிட்டு போகனும்.. எங்க கூட டைம் ஸ்பெண் பண்ணனும் என்று எல்லாம் நீ கேட்க மாட்டே என்று நீ சொன்னால் நாம் நம் நட்பை அடுத்த ஸ்டெஜுக்கு கொண்டு செல்லலாம்..” என்று தன் நிலை விளக்கத்தை தெளிவு படுத்திய பின் தான் இவர்கள் திருமணம் நடந்தது..
அப்போது எல்லாம் அவன் பேசியது.. எதுவும் குறையாக தெரியவில்லை.. அதுவும் அவள் காலேஜ் பிரண்ஸ் இவளிடம்..
“ ஒ அப்பவே உங்களுக்குள் அது இருந்ததா..? அது தான் நேத்ரன் யாரையும் பார்க்காது விட்டு விட்டானா..?” என்று அவர்கள் கண்ணில் பொறாமை மின்ன கேட்கும் போது, அவள் கொஞ்சம் பெறுமையாக கூட உணர்ந்தால் என்று தான் சொல்ல வேண்டும்..
ஆனால் இப்போது சமீபகாலமாக அவள் மனதில் வெறுமை.. வெறுமை வெறுமை மட்டுமே…
முன் அவள் தந்தை தொழிலை பார்த்தால் தான்.. ஆனால் அவன் தம்பி படித்து முடித்து வந்த பின்.. அதை அவனிடம் ஒப்படைத்து விட்டாள்..
நேத்ரன் கேட்டான் தான்.. “ வேறு ஏதாவது செய்கிறாயா..? என்று..
இவள்.. “ வேண்டாம்..” என்று சொன்னதுமே..
அவன்.. “ உன் இஷ்டம்…” என்றதோடு விட்டு விட்டான்..
“ஏன்..? என்று கேட்கவில்லை… தன் மீது அக்கறை இல்லையோ… இது என்ன யாரோ போல் பேசுவது…
அவன் குணம்… மற்றவர்களின் விருப்பதை அப்படியே ஏற்றுக் கொள்பவன்… தன் விருப்பத்தையோ… அறிவுரையோ சொல்ல மாட்டான்.. அது அவன் இயல்பு கிடையாது..
ஆனால் இப்போது எல்லாம் இவை அனைத்தையும் அவனிடம் இருந்து எதிர் பார்க்கிறாள்…
பழையதை நினைத்ததில், அவள் தலை வலி அதிகமானது தான் மிச்சம்.. இதில் அத்வைத் தன் வருங்கால மனைவியை தங்களுக்கு அறிமுகம் படுத்துக்கிறேன் என்று சொல்லி அவன் இந்த இடத்தை தேர்வு செய்ததில் அவள் ஏகத்துக்கும் கடுப்பு ஆனால்..
அந்த கடுப்பு அவள் முகத்தில் அப்பட்டமாக தெரியும் போது தான்…
தன் குழந்தையை கையில் தூக்கி கொண்டு அத்வைத் சிரித்த முகத்துடன் தன் பக்கத்தில் நடந்து வந்து கொண்டு இருந்த பெண்ணிடம்..
ஏதோ சிரித்து பேசுக் கொண்டு வந்துக் கொண்டு இருந்தவனின் பார்வை தன்னை பார்த்ததும்..
தன்னை சுட்டி காட்டி.. ஏதோ சொன்னவன்… பின் தன் இன்னொரு பக்கத்தில் இருந்த நேத்ரனை காட்டி ஏதோ சொன்னான்..
அவளுக்கு அது எல்லாம் மனதில் படியும் முன்.. அந்த பெண்ணின் முகம் ஆழமாக படிந்து விட்டது…
அழகு.. அவளும் அழகு தான்.. ஆனால் இந்த பெண்… குழந்தை தனம் மாறாத பெண் என்று சொல்வார்களே.. அந்த வார்த்தை இந்த பெண்ணுக்கு பொறுந்தும்..
அதுவும் அத்வைத் ஏதோ சொன்னான் போல்.. அதற்க்கு அவள் சிரித்தாள்… அவள் சிரிப்பை அத்வைத் ரசித்தானோ இல்லையோ.. இவள் ரசித்தாள்…
கன்னத்தில் குழி விழ… அந்த சிரிப்பை பார்க்கும் போது… மந்ரா அந்த பெண்ணின் அழகை ரசிக்கும் முடிக்கும் முன் இவள் அருகில் மூன்று பேரும் வந்து விட்டதால், தன் பார்வையை சாதரணமாக மாற்றி கொண்டாள் மந்ரா…
தன் பக்கத்தில் நேத்ரன் அமர.. எதிர் இருக்கையில் அத்வைத்.. அவன் பக்கத்தில் அந்த பெண் அமர்ந்தாள்..
இப்போது தன் குழந்தை அந்த பெண்ணிடம் மாறி இருந்தது… அந்த பெண்ணின் கவனம் முழுவதும் தன் குழந்தை மீது தான் இருந்தது..
அத்வைத்.. தன்னை காண்பித்து..” இவள் தான் மந்த ம்..” என்றதில் மந்ரா அத்வைத்தை பார்த்து முறைக்க.. அவள் முறைப்பில் பயந்தது போல்..
“ மந்ரா..” என்று அறிமுகம் படுத்த..அந்த பெண்ணின் கவனம், சிறிது நேரம் தன் குழந்தையிடம் இருந்து இடம் மாறி தன்னிடம் வந்து..
“ ஹலோ..” என்று எதோ பெரிய ஆபிசர் வந்தால். எழுந்து நின்று பேசுவது போல் அமர்ந்திருந்த அந்த பெண்.. எழுந்து நின்று தன்னிடம் சொல்ல..
அதுவும் தன் மடி மீது வைத்துக் கொண்டு இருந்த தன் குழந்தையையும் தூக்கிக் கொண்டு சொன்னதில்,
அத்வைத்.. “ உட்கார்ந்தே பேசு டா..” என்று சொன்னதுமே ஒரு மென் புன்னகை அவனை பார்த்து சிந்தியவள்… மீண்டும் அமர்ந்து கொண்டவள்.. தன் முகம் பார்த்தவளை பார்க்க பார்க்க மந்ராவுக்கு அவள் செய்யும் அனைத்து செயல்களுமே அழகாக தோன்றியது..
இது தனக்கு மட்டும் தானா..? என்று நினைத்து தன் பக்கத்தில் இருந்த நேத்ரனை பார்க்க.. அவனோ.. தன் கை பேசியில் ஏதோ மெசஜை தட்டி கொண்டு இருந்தான்…
அத்வைத் தன்னை காண்பித்து..
“ நேத்ராவின் மனைவி.. ப்ளஸ் என் பிரண்ட் ப்ளஸ் என் பாஸ்.. “ என்று சொல்லி தன்னையே சொல்லி கொண்டு வந்தவனை மந்ரா..
“போதும்… போதும்… நிறுத்து இவங்களை எனக்கு யார் என்று சொல்..” என்றவளின் பேச்சில் அத்வைத்..
“ என் அத்தை மகள்..ப்ளஸ் என் பியான்ஸி..” என்று சொல்ல..
“ உன் பியான்ஸிக்கு பெயர் எதுவும் இல்லையா..?” என்று மந்ரா கேட்கும் போதே.. நேத்ரன்..
“ ஸகி பேபி கம் கம்.. என் மடியில் வந்து உட்கார்..” என்ற நேத்ரனின் அழைப்பில், அத்வைத்தின் வருங்கால மனைவி அதிர்ந்து போய் , அனைவரையும் விழி விரிய பார்த்தாள்..
அந்த அவளின் அதிர்வும்.. அந்த பார்வையும் கூட மந்ராவின் கண்ணுக்கு அழகாக தெரிந்தன…
அந்த பெண்ணின் அதிர்ந்த முகத்தில் அத்வைத் சத்தமாக சிரித்து விட்டான்.. இப்போது நேத்ரனின் கவனமும் அந்த பெண்ணிடம் வர..
அத்வைத் அவள் மடியில் இருந்த குழந்தையை காட்டி.. “ இந்த செல்லத்து பேரும் ஸாகித்யா தான்..” என்றதில் மந்ரா..
“ அப்போ இவங்க பேரும் ஸாகித்யாவா..?” என்ற மந்ராவின் கேள்விக்கு பதிலாக இரு ஸாகித்யாவும் ஹய் பைய் கொடுத்து கொண்டனர்..
நேத்ரனுக்கு தான் மிக சங்கடமாகி விட்டது.. ஒரு சங்கோஜத்துடன் நேத்ரன் அந்த பெண்ணை நிமிர்ந்து பார்த்தான்…
அந்த பெண் இதை மறந்தவளாக மீண்டும் குழந்தையுடம் ஆழ்ந்து போய்..
“ பேபியும் ஸாகி தானா..?” என்று பேசிக் கொண்டு இருந்தவளை அத்வைத் தான்..
“ அம்மூ..” என்று அவளின் கவனத்தை தன் பக்கம் திருப்பி தங்களை கண் காட்ட.. அப்போது தான் ஸாகி இவர்களை கவனிக்க ஆரம்பித்தாள்..
அத்வைத்.. “ இவள் என் அத்தை பெண்.. பெயர் ஸாகித்யா… ஊர் காஞ்சிபுரம்.. படிப்பு BE… E.C … போன மாதம் தான் சென்னையில் **** ஐடி கம்பெனியில் வேலை கிடைத்து வந்து இருக்கா..” என்று சொல்ல.. திரும்பவும் எழ போனவளை கை பிடித்து தடுத்து நிறுத்திய அத்வைத்..
“ உட்கார்ந்து கொண்டே பேசு..” என்று சொல்லவும். பின் ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொண்டும் தங்க்களுக்கு பிடித்த உணவை வர வழைத்து சாப்பிட்டும் முடித்தனர்..
போகும் முன் அத்வைத் மந்ராவிடம்..
“ இந்த சுமாரான ஓட்டலுக்கு வந்ததில் உனக்கு கோபம் தானே..?” என்ற கேள்விக்கு.. அந்த ஓட்டலை சுற்றி தன் கண் பார்வையால் வலம் வந்தவள்…
“ ஆமாம்..” என்று சொன்னவளின் செயலில் ஸாகி சிரித்து விட்டாள்.. ஸாகி என்று நான் குறிப்பிடுவது நம் பெரிய ஸாகியை தான்..
அவள் சிரிப்பில் மந்ரா திரும்பி பார்க்க தான் எண்ணினாள். பின் மனது மாறி தன் கவனத்தை அத்வைத்திடம் திருப்பி..
“இப்போ சொல்.. எதுக்கு இந்த இடத்தை செலக்ட் செய்தே..” என்று கேட்டாள்..
அவள் கேள்விக்கு ஸாகித்யாவை சுட்டி காட்டி..
“ இவள் ஹாஸ்ட்டல் இந்த ஓட்டலுக்கு பக்கமா இருப்பதால் தான்..’ என்ற அவன் பேச்சில், நேத்ராவின் கவனமும் இவன் பக்கம் திரும்பியது..
“ இவளுக்கு தனியாக வந்து பழக்கம் கிடையாது… அது தான்..” என்ற உடன் நேத்ரன்..
“ அப்போ ஆபிஸ்..?” என்று தன் பேச்சை முடிக்காது நிறுத்த.. அத்வைத்..
“ அதுவும் பக்கத்தில் இருப்பது போல் தான் அப்பா பார்த்து கொடுக்க சொன்னார்..” என்றதும் நேத்ரன் அடுத்து எதுவும் பேசவில்லை என்றாலும் இப்போது அவனின் கவனம், தன் மனைவியை போல் இருவரின் மீதும் இருந்தன…
அத்வைத் ஸாகிக்கு சிறு குழந்தைக்கு சொல்லி கொடுப்பது போல் சொல்லி கொடுத்து பார்த்து பார்த்து கவனித்து கொள்வது..
ஸாகிக்கு தெரியாத விசயத்தை சொல்லி கொடுப்பது என்று அத்வைத் செயல்களை மந்ரா ஏக்கத்தோடு பார்த்தாள் என்றால், நேத்ரன் எரிச்சலோடு பார்த்து கொண்டு இருந்தான்..
இவன் விட்டால், இந்த பெண்ணுக்கு அடுத்த வேலை உணவை ஊட்டி விடுவான்.. அது தான் சிறிது நேரம் முன் சாப்பிடும் போது.. ஒரு சில உணவை சாப்பிட ஸாகி திணறும் போது அத்வைத்..
“ இல்ல அம்மூ இந்த ஸ்பூனை இப்படி பிடிக்க கூடாது.. இப்படி பிடித்து சாப்பிட்ட வேண்டும்..” என்ற இவன் செயல்களை தான் கவனித்து கொண்டு இருந்தானே…
ஏற்கனவே ஆபிசுக்கு டைம் ஆயிடுச்சி.. தனக்கு மட்டும் கிடையாது.. இவனுக்குமே.. மதியம் முக்கியமான ஒரு மீட்டுங் உள்ளது.. குழந்தை பசி தாங்க மாட்டா என்று லன்சும் முடித்து விட்டு போகலாம் என்று அத்வைத் சொல்ல போகிறான் என்று பயந்தவனாக நேத்ரன்..
“ சரி கிளம்பலாம்…” என்று பொதுவாக சொன்னவன்..
தன் மனைவி பக்கம் பார்வையை திருப்பி.. “ ஒகே பை..” என்று விடை பெறுவது போல் சொன்னான்..
ஆனால் நேத்ரன் பயந்தது போல் தான் அடுத்த நிகழ்வு நடந்தன.. என்ன ஒன்று அத்வைத் அந்த பெண்ணை சாப்பிட வைத்து அனுப்புவான் என்று நினைக்க..
அவனோ.. “ அவளை அவள் ஹாஸ்ட்டலில் விட்டு விட்டு வருகிறேன் ..” என்ற அத்வைத்தின் பேச்சில் நேத்ரனுக்கு கோபம் வந்து விட்டது..
ஆனால் கோபத்தை காட்டாது… “ வந்தவங்களுக்கு போக தெரியும் தானே… “ என்று எரிச்சல் பட்டு கேட்டான்…
என்ன தான் ஸாகியின் ஹாஸ்ட்டல் பக்கம் என்றாலும், அவள் ஹாஸ்ட்டல் இந்த பக்கம்.. தங்கள் ஆபிஸ் இருக்கும் இடம் அதன் மறுப்பக்கம் எனும் போது.. அவளை விட்டு விட்டு வர நேரம் ஆகும் தானே.. அவள் என்ன சின்ன குழந்தையா..? என்ற எரிச்சல்..
அவன் கோபத்தை பேச்சில் காட்டவில்லை என்றாலும், அவன் குரலிலும், அவன் முகத்தில் அது அப்பட்டமாகவே தெரிந்தன..
அதை பார்த்த ஸாகித்யா அத்வைத் பின் மறைந்து கொண்டவளாக தலை குனிந்து நின்று கொண்டு இருந்தவளின் செயல் இன்னும் அவனுக்கு எரிச்சலை தான் கிளப்பியது..
இவளுக்கு நம் ஸகி பேபியே பரவாயில்லை போலவே என்று…
“ அவள் வெளியில் தனியாக அவ்வளவா போனது கிடையாது… இங்கே சரியாக வந்து விடுவாளா..? என்று பயந்து வெளியிலேயே நின்று கொண்டு இருந்தது, எனக்கு தான் தெரியும்.. நான் அவளை விட்டு விட்டே வந்துடுறேன்.. “ என்றவனின் பேச்சில் நேத்ரன் முறைத்து பார்க்க..
அவன் முறைப்பில் அத்வைத்… “ நான் மீட்டிங்கை சரியான டைமில் அட்டண் செய்து விடுவேன்..” என்று சொல்லி ஸாகியின் கை பிடித்து கொண்டு அந்த இடத்தை விட்டு ஓடி விட்டான்..
ஒரு சலிப்போடு நேத்ரன் தன் மனைவியின் பக்கம் பார்வையை திருப்ப.. அவளோ சென்றவர்களின் பக்கமே பார்வையை நிலைத்து விட்டு இருந்தாள்..
நேத்ரன் அதை கவனிக்காது.. “ நீ எப்படி ஆபுசுக்கு வரியா..? இல்ல.. வீட்டுக்கா..?” என்று கேட்டான்…
இப்போது எல்லாம் மந்ரா வீட்டில் போர் அடிப்பதால் எப்போதாவது இவர்கள் ஆபிசுக்கு வந்து போவாள்… அதுவும் மந்ரா வெளியில் வரும் நாட்களில் ஆபிஸ் பக்கமும் கொஞ்சம் தலையை காட்டுவாள்..
அந்த பழக்கத்தில் நேத்ரன் மந்ராவை கேட்க.. “ அவளோ..
“ ஆபிஸோ .. வீடோ.. எங்கு என்றாலும், நானே தானே கார் ஓட்டிட்டு போய் ஆக வேண்டும்..” என்று சொல்லவும்..
ஒரு நிமிடம் கூர்ந்து மந்ராவை பார்த்த நேத்ரன்…
“ அந்த பெண் சின்ன பெண்.. அதுவும் ஊருக்கு புதுசு..” என்று அவன் பேச்சை முழுவதுமாக பேசி கூட அவன் பேசி முடிக்கவில்லை..
மந்ரா.. “ அப்போ எனக்கு வயது ஆகி விட்டது என்று சொல்றிங்களா..?” என்று கோபம் என்பதை விட… அவன் பேச்சில் உண்டான ஒரு அதிருப்தியில் கேட்டாள்..
“ உனக்கும் எனக்கும் ஒரே வயது தானே.. நீ வயது ஆனவள்னா நானும் வயதானவன் தானே…” என்று தன் பேச்சை அத்தோடு முடிக்க தான் நேத்ரன் பார்த்தான்..
ஏன் என்றால் அவனுக்கு ஏகப்பட்ட வேலைகள் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து காத்துக் கொண்டு இருக்கின்றன..
ஆனால் மந்ராவுக்கு இன்று என்ன ஆகி விட்டதோ…
“ ஏன் உங்க வயதுடையவளா இருந்தால் என் மீது கேரிங்கா இருக்க மாட்டிங்களா..?” என்ன இது புது பேச்சு என்பது போல் தான் நேத்ரன் மந்ராவை பார்த்தான்.. அதன் பின் ஒன்றும் சொல்லாது தன்னிடம் இருந்த குழந்தையை அவளிடம் கொடுத்து விட்டு சென்று விட்டவனின், முதுகையே தான் அவள் எவ்வளவு நேரம் தான் பார்த்து கொண்டு இருப்பது..
மனதில் அவனை வைய்த படி குழந்தையை பாதுகாப்பாக அமர வைத்து தானே காரை ஓட்டிக் கொண்டு சென்றவளின் மனது முழுவதும் வெறுமையே..
என் வேலையை நானே பார்த்து கொள்ள வேண்டும்.. இதோ இந்த ஓட்டலுக்கு வரும் போதே, அவன் தனி காரிலும் தான் தனி காரிலும் தான் வந்தது..
அவன் அப்படியே ஆபிஸ் சென்று விட்டால், தான் வீடு வந்து சேர.. இது எப்போதும் நடப்பது தான்….
ஆனால் இன்று.. ஏனோ மற்றவர்கள் தன்னை கேரிங்க் செய்தால் நன்றாக இருக்கும் என்றதில் அவளின் மனநிலை ஒரு நிலையில் இல்லாது அல்லாடியது… …