அத்தியாயம்..12
சென்றதையும், வரப்போவதையும் ஒன்றாக நினைத்து குழம்பி போன ஸாகித்யா, இரவு வெகு நேரம் கழித்து தான் உறங்கினாள்.. அதனால் நேரம் சென்று தான் அவளுக்கு விழிப்பு வந்தது.. அதுவும் அத்வைத் சத்தத்தில்,
கூடவே தன் அறையின் கதவும் தட்டப்பட்டதில், .. “ இதோ வருகிறேன்..” என்று சொல்லிக் கொண்டே ஸாகித்யா அவிழ்ந்திருந்த கூந்தலை ஒரு கோடாலி முடித்து இட்ட வாறு குளியல் அறைக்கு சென்று, அத்வைத்திடம் வாதாட தெம்பு வேண்டும் என்று நினைத்து தன்னை கொஞ்சம் புத்துணார்ச்சியாக்கி விட்டே, தன் அறையை விட்டு கூடத்துக்கு வந்தாள்..
பாவம் அப்போது ஸாகித்யாவுக்கு தெரியவில்லை.. ஒருவருரோடு மல்லுக்கட்டலில் அடங்கி விடாது என்று…
தன் தாய் மாமனை தவிர அனைவரிடமும் தான் மல்லுக்கு நிற்க வேண்டிய சூழ்நிலை வரும் என்று தெரியாது தான் ஸாகித்யா அவர்கள் முன் போய் நின்றது…
அங்கு அவள் எதிர் பார்த்தது போல் தான்.. அத்வைத்தை சுற்றி குடும்ப உறுப்பினர் அனைவரும் இருந்தனர்.. வீட்டில் இவனே விசயத்தை சொல்லி விட்டானா..?
ஒருவர் முகமும் சரியில்லாததை பார்த்தால், சொல்லி விட்டான் என்று தான் தெரிகிறது.. ஆனால் எப்படி இந்த விசயத்தை கூச்சமே இல்லாது இவனால் சொல்ல முடிந்தது..?
ஆனால் அனைவரின் முகமும் கோபத்துடன் தன்னை பார்ப்பது போல் இருக்க… யோசனையுடம் அத்வைத்தை பார்த்தாள்…
அவன் ஏதோ தன்னிடம் பேச வரும் முன் அவள் அம்மா சித்ரா..
“ எதுக்கு அத்வைத்திடம் கூட சொல்லாது நீயே தனியாக இங்கு வந்தே.. உனக்கு அந்த அளவுக்கு தைரியம் வந்து விட்டதா..? என்ன..?” என்ற கேள்வியில்..
‘ஒ விசயம் இவங்களுக்கு தெரியல.. அதோடு தன் மீது கோபமாக இருக்க காரணம் தான் தனியாக வந்தது தான் என்று நினைத்து கொண்டு..
“ அம்மா சென்னையில் என்ன நடந்தது என்று தெரியுமா..? என்று ஒரு வித அருவெருப்போடு பேச்சை ஆரம்பிக்கும் போதே..
அவளின் அத்தை கல்யாணி.. “ இது போல் பேச்சு எல்லாம் குடும்ப பெண் வாயில் இருந்து.. அதுவும் கல்யாணம் ஆகாத வயது பெண் பேச கூடாது..” என்று தான் சொல்ல வருவதை தடுத்து பேசிய கல்யாணி…
அனைவரையும் பொதுவாக பார்த்து..” டிபன் முடித்து விட்டேன்… சாப்பிடுங்க.. சீக்கிரம் ஜோசியரை பார்த்து விட்டு வரலாம்.. நம்ம ஜோசியர் வேண்டாம்.. அவரால் தான் இவ்வளவு வினையும்…
வேறு ஜோசியரை பார்த்து விட்டு, அடுத்து வர நல்ல மூகூர்த்த நாளா குறித்து விட்டு வரலாம்..” என்ற அத்தை கல்யாணியின் பேச்சில்..
“ எதுக்கு அத்தை நாள் குறிப்பது..? என்று ஸாகித்யா தெரியாது தான் கேட்டாள்..
ஊரில் பரம்பரை நிலம் ஒன்று இருந்தது.. அதை இரண்டு வருடம் முன் தான் விற்று.. இங்கு ஒரு இடம் வாங்கி அதில் வீடும் கட்ட தொடங்கி விட்டனர்..
அது முடிந்து விட்டது போல் அதனாலா..? என்ற சந்தேகத்தில் தான் ஸாகித்யா கேட்டது. ஆனால் எப்போதும் பாசத்துடன் அழைக்கும் அத்தை அன்று..
“எதுக்கு நாள் குறிப்பாங்க என்று உனக்கு தெரியாது…? அத்வைத் சொன்னது சரி தான்.. வேலைக்கு சென்ற பின் உன் பழக்க வழக்கம் மாறி இருக்கு.. என்று சொன்னான்..
நான் தான் இருக்காது ..அவள் நான் வளர்த்த பெண் என்று அடித்து இப்போ தான் அத்து கிட்டு சொல்லிட்டு இருந்தேன்..ஆனால் அது இல்லேன்னு கொஞ்ச நேரத்திலேயே புரிய வைத்து விட்ட..” என்று கோபத்துடன் பேசிக் கொண்டு இருந்த அத்தையை…
ஸாகித்யா குழப்பத்துடன் பார்த்து கொண்டு இருந்தாள். தான் என்ன தவறாக கேட்டு விட்டோம் என்பது போல்..
மகளின் முகம் சித்ராவுக்கு என்ன உணர்த்தியதோ…
“ ஸாகி எப்போதும் பெரியவங்க செய்வது சரி என்று தானே இருப்ப.. அதே போல் தான் இப்போ உங்க கல்யாணத்துக்கு நாள் குறிக்க போறாங்க… இப்போ வேண்டாம்.. இன்னும் கொஞ்ச நாள் என்று எல்லாம் சொல்லாது பெரியவங்க சொல் பேச்சு கேட்டு நட..” என்ற அன்னையின் பேச்சும்..
அதற்க்கு அத்வைத் தன்னை பார்த்த அந்த திமிர் பார்வையிலும், ஒரு நிமிடம் கண்ணை மூடிக் கொண்டு தனக்கு தானே தைரியம் சொல்லி கொண்டாள்..
ஏன் என்றால், அவள் வாழ்க்கையில் முதல் முறை தன் வீட்டில் பெரியவர்களை எதிர்த்து பேச போகிறாள்.. அதற்க்கு உண்டான தைரியத்தை வர வழைத்து கொண்டவளாக..
“ அம்மா அத்தானோட கல்யாணம் இப்போ வேண்டாம் என்று எல்லாம் சொல்ல மாட்டேன்..” என்று ஸாகித்யா பேச பேச அங்கு இருந்தர்களின் முகம் அவள் தாய் மாமனை தவிர, அனைவரின் முகத்திலும் ஒரு நிம்மந்தி வந்தது..
அது ஸாகியாவது வீட்டு பெரியவர்களை எதிர்ப்பதாவது என்றதில் வந்த நிம்மதி, ஸாகித்யா அடுத்து சொன்ன…
“ அத்தானோட திருமணம் என்றால், இப்போது இல்லை எனக்கு எப்போதும் வேண்டாம்..” என்று அழுத்தம் திருத்தமாக சொல்லி விட்டாள்…
அவள் பேச்சில் அனைவரும் அதிர்ந்து தான் போய் விட்டனர்.. இது போல் அவள் முகத்திற்க்கு நேராக சொல்வாள் என்று அங்கு இருந்த யாரும் எதிர் பார்க்கவில்லை….
அது தந்த அதிர்ச்சியில் அவள் பேசிய பின்னும் யாரும் பேசாது அவளையே அதிர்ச்சியோடு பார்த்து கொண்டு இருந்தனர்..
முதலில் அதிர்ச்சியில் இருந்து வெளிவந்தது.. கல்யாணி தான்..
“ உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்வது என்றால், என்ன என்று நான் கேள்வி பட்டும் இருக்கேன்.. ஆனால் அதை நான் என் வீட்டில் அதுவும் உன்னிடம் இருந்து நான் எதிர் பார்க்கவில்லை..” என்று ஆவேசத்துடன் கல்யாணி ஸாகித்யாவை பார்த்து கத்த தொடங்கி விட்டார்..
அப்போது கூட ஸாகித்யா அத்தைக்கு விவரம் தெரியவில்லை.. அத்வைத் தன் மீது தப்பு இல்லாத வகையில் சொல்லி இருக்க கூடும்.. மகனை மணக்க மாட்டேன் என்ற கோபத்தில் தான் இப்படி பேசுகிறார்கள் என்று நினைத்து..
“அத்தை அங்கு சென்னையில் ..” என்று ஸாகித்யா ஆரம்பிக்க..
சித்ரா.. “ எல்லாம் தெரியும் ஸாகி..” என்ற மகளை அடுத்து பேசாது அடக்க பார்த்தார்..
என்ன தான் அத்தை பாசம் காட்டினாலும். அன்னை மீது இருக்கும் உரிமை அத்தை மீது இருக்காது தானே.. அந்த உரிமை தந்த கோபத்தில்..
“உங்க மாப்பிள்ளைக்கு கல்யாணமே தேவையில்லை.. ஏன்னா அங்கு சென்னையில் பேரனோ பேத்தியோ வளர்ந்துட்டு இருக்கு..” என்று சொன்னதோடு, அனைத்தையும் சொல்லி விட்டு அனைவரின் முகத்தையும் பார்த்தாள்.
பாவம் இந்த அதிர்ச்சியை பெரியவர்கள் எப்படி தாங்கி கொள்வார்களோ என்று..
ஆனால் பாவம் அவர்கள் இவளுக்கு தான் தன் பேச்சால் அதிர்ச்சி என்பதை விட பேரதிர்ச்சி கொடுத்தார்கள்..
“ ஒரு பெண் இப்படியா இருப்பா..? ஒரு ஆணிடம் மேல வந்து விழுந்து பழகி சீ..’ என்று சித்ரா சொன்னார் என்றால், கல்யாணி அவருக்கும் மேல் சென்று..
“ ஒரு ஆம்பிளை எத்தனை நாளுக்கு தான் மேல விழும் பெண்ணை தள்ள முடியும்.. நீயே சொல்..? என்று அந்த நியாயத்தை கல்யாணி ஸாகித்யாவிடமே கேட்டது தான் கொடுமையிலும் கொடுமை..
அடுத்து ஸாகித்யா அவர்கள் பேசிய பேச்சில்,வாயே திறவாது போனாள்.. அந்த அளவுக்கு அதிர்ச்சி தந்தனர் அவர்கள்…
இதில் நேத்ரனோடு ஆண்மை கொஞ்சம் பேச பட்டது.. அந்த குழந்தையும் வேறு யாரோடவாவது தான் இருக்கும் என்ற பேச்சும் வந்து விழுந்தன… இல்லை என்றால் பார்க்க நல்லா இருக்கான்.. பின் ஏன் மந்ரா ஒதுங்க்கி ஒதுங்கி போன அத்வைத்தின் மீது விழுந்து பழகுவாள்..
இதை எல்லாம் அத்வைத் அங்கு இருக்கும் இருக்கையில் அமர்ந்து காபியை குடித்து கொண்டே ஏதோ நாடகம் பார்ப்பது போல் பார்த்து கொண்டும்… கேட்டு கொண்டும் இருந்தான்..
இதில் பேசாதவர் என்றால் அவள் தாய் மாமன் மூர்த்தி மட்டும் தான்..
பேசி பேசி அவர்களே ஒய்ந்த பின்னும் ஸாகித்யா வாய் திறக்கவில்லை… அவள் அமைதியை பார்த்து தங்கள் பேச்சை ஏற்று கொண்டதாக ஒரு முடிவுக்கு அவர்களே வந்தவர்களாக..
“ சரி ஸாகி.. போனதை விடு.. நீயும் அப்படி பேசி இருக்க கூடாது தான்.. என்ன இருந்தாலும் நீ இந்த வீட்டு மருமகள்.. உன்னை நான் விட்டு கொடுத்து விட மாட்டேன்…” என்று சொன்ன கல்யாணி பெரிய மனது செய்து விட்டு கொடுத்தது போல் பேசியவரின் பேச்சை சட்டை செய்யாது தன் அன்னை முன் வந்து நின்ற ஸாகித்யா…
“ நான் இந்த வீட்டை விட்டு போகலாம் என்று நினைக்கிறேன்.. நீங்க எப்படி என்னோட வர்றிங்களா..? இல்ல இங்கயே இருக்க போறிங்களா..? என்ற அவளின் பேச்சில் காபியை குடித்து கொண்டு இருந்த அத்வைத்து பொரை ஏறியவனாக அதிர்ந்து போய் அவளை பார்த்தான்..
கல்யாணி ஏதோ பேச ஆரம்பிக்க.. அவள் தாய் மாமன் ..” கல்யாணி அவளுக்கு விருப்பம் இல்லாத போது எப்படி..? வேண்டாம் விட்டு விடு..” என்று அவர் சொன்னது தான் தாமதம்.
.
இத்தனை ஆண்டாக கல்யாணியை சாந்த சொரூபமாக மட்டுமே, பார்த்து வளர்ந்த ஸாகித்யா..
அன்று காளி…ம் காளி கெட்டதை வதம் செய்ய தோன்றிய அவதாரம்.. அதனால் அந்த வார்த்தை வேண்டாம்…
ம் இப்படி சொல்லலாம்.. பஜாரி, பிசாசு இது போல் பொருள் படும் வார்த்தைகள் எதை வேண்டும் என்றாலும், போட்டு கொள்ளலாம்.. அப்படி ஒடு தோற்றத்தில் பல்லை கடித்து கொண்டு…
“ இப்போ சொல்வீங்க… சொல்வீங்க.. அன்னைக்கு உன் தங்கை தாலியை அருத்துட்டு நம்ம வீட்டுக்கு வந்த போது, நான் சொல்லி இருக்கனும்…
எனக்கு இவங்களை நம்ம வீட்டில் வைத்து கொள்வதில் விருப்பம் இல்லை என்று.. நான் அன்னைக்கு பாவம் பட்டு வைத்து கொண்டதற்க்கு.. நல்ல கைமாறு செய்யிறிங்க..” என்று ஒரு ஆடம் ஆடி விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்..
ஆனால் இந்த ஆட்டம் ஆடாத முன்னவே ஸாகித்யா இந்த வீட்டை விட்டு போக முடிவு எடுக்க காரணம்.. கல்யாணி பேச்சோடு பேச்சாக..
சொத்து அப்படியே வெளியில் போகவா…? இவ்வளவு நாள் இவங்களை வைத்து பார்த்து கொண்டு இருந்தேன்.. என்ற வார்த்தை அவரையும் மீறி வந்து விட்டது..
அதை இன்னும் தெளிவாக்க அவள் மாமா. .. “ நீ எதுக்கு ஒத்துக் கொண்ட…. ஸாகியை நம் மகனுக்கு கட்டனும்… என்ற நிபந்தனையில் தானே ..என் தங்கையையும் அவள் மகளையும் வீட்டுக்குள் விட்ட..
நான் வயது வித்தியாசம் எனும் போது கூட.. நான் ஏதோ கெட்ட வார்த்தையை சொன்னது போல் தானே.. அன்னைக்கு என்னை அப்படி பேச்சு பேசுன..” என்று மாமனின் வார்த்தையில் தன் அன்னையை திரும்பி பார்த்தாள் ஸாகித்யா..
இந்த வார்த்தை தன் அன்னையை எவ்வளவு புண் படுத்தும் என்று.. ஆனால் எனக்கு இது தெரியும் என்பது போல் தான் மூர்த்தியின் பேச்சை அமைதியாக கேட்டதோடு மட்டும் அல்லாது..
“ அண்ணா என்ன இது..? போனது பத்தி இனி யாரும் பேச வேண்டாம்.. இவள் அறிவு கெட்ட தனமா பேசுனா புரிய வைத்து அத்வைத்தோடான திருமணத்திற்க்கு ஏற்பாடு செய்ங்க..” என்றவரின் பேச்சில், ஸாகித்யா இப்போது அதிர்ந்து எல்லாம் போகவில்லை…
இன்னும் சொல்ல போனால் ஒரு பாரம் இறங்கிய உணர்வு தான் அவளுக்கு ஏற்ப்பட்டது…
தாய் வரவில்லை என்றால், என்ன செய்வது என்று நினைத்து கொண்டு இருந்தவள்… அனைவரையும் பார்த்து…
“ நீங்க எனக்கு நல்லது தான் செய்து இருக்கிங்க… செய்தது கிடையாது… இதோ இப்போ பேசினதால.. எனக்கு வயது இருபத்திரெண்டு வயதாகுது.. கட்டாயப்படுத்தி யாரும் கல்யாணம் செய்ய முடியாது..
முதல்ல அத்தானோட தொழில் என்ன ஆச்சு என்று அதை பாருங்க… ஏன்னா பதினைந்து வருடம் முன்னவே அடுத்து கிடைக்க போகும் சொத்துக்காக கணக்கு பார்த்தவங்க நாளை எதுவும் கொடுக்காது…” என்று சொன்னவளின் பேச்சில் கல்யாணி அதிர்ந்து போய் தான் தன் மகனை பார்த்தார்..
அத்வைத்துக்கும் அந்த எண்ணம் தான்.. தான் முப்பது சதவீதம் தான் பங்குதாரர்.. இருக்கும் கோபத்தில் நேத்ரன் என்ன என்ன செய்வானோ என்று அவனே ;பயந்து போய் தான் இருக்கிறான்..
அது என்னவோ அதோடு முதலில் ஸாகித்யாவோட தன் திருமணம் அதை முதலில் முடித்து விட்டால் நல்லது என்ற எண்ணம் அவனுக்கு…
அத்வைத் சொத்துக்காக எல்லாம் அவளை திருமணம் செய்ய நினைக்கவில்லை.. ஸாகித்யாவை பிடித்து தான் இந்த திருமணத்திற்க்கு அவன் ஒப்புக் கொண்டது…
என்ன ஒன்று ஸாகியை அவன் கிணற்று நீராகவும், மந்ராவை ஓடை நீராகவும் நினைத்து விட்டான்.. மந்ராவின் மீது கல்லூரி காலத்தில் இருந்தே ஒரு பிரம்மை அவனுக்கு, அந்த பிரம்மை அதுவே அவன் கையில் வந்து விழவும்.. விட மனது வராது ஏற்றுக் கொண்டான்..
இதில் தான் மாட்டுவோம் என்று அவன் நினைத்து கூட பார்க்கவில்லை.. அந்த கரு வளராது இருந்து இருந்தால், கண்டிப்பாக மாட்டி இருக்க மாட்டான் தான்..
திட்ட மிட்டது போல் தான் ஸாகித்யாவை மணந்து இருப்பான்.. என்ன செய்வது ஸாகித்யா என்ற பெயரின் பக்கத்தில் வேறு பெயர் இருக்க… இது போலான நிகழ்வு தானே நடக்கும்…
ஆம் ஸாகித்யா வீட்டை விட்டு வெளியேறி விட்டாள்.. சென்னையில் அத்வைத் கார்டியன் என்று போல் தான் ஸாகித்யா தங்கியதால், அத்வைத்தின் திருவிளையாடல் மூலம் ஸாகித்யாவுக்கு அங்கு தங்க முடியாது போக..
நேத்ரனின் உதவியோடு, அவனுக்கு சொந்தமான ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் அவள் தங்க.. அதுவே ஸாகியை நேத்ரனோடு இணைக்க போதுமானதாக இருந்தது..
தவறு தவறு..இதை பற்றி தவறான செய்தி பரப்பிய அத்வைத்தின் பேச்சே இவர்கள் சேர காரணமாக அமைந்து விட்டது என்று சொன்னால் சரியாக இருக்குமோ…