அத்தியாயம்…15
நேத்ரன் மந்ரா விவாகரத்து வழக்கு அன்று தான் நீதிபதியின் முன் விசாரணைக்கு வந்தது.. அதன் முன்னவே இருவரையும் அழைத்து பேச முயல..
மந்ரா ஒன்றும் சொல்லவில்லை.. ஆனால் நேத்ரன்.. “ முடியாது காலம் விரையம் தான்…” என்று தீர்த்து சொல்லி விட்டதால்…
இதோ இன்று நீதி மன்றத்தில் வந்து நிற்கின்றனர்.. நேத்ரன் மந்ராவை பார்த்து சரியாக சொல்வது என்றால், ஆஸ்திரேலியா போகும் முன் பேசியது தான்.. பின் ஆஸ்திரேலியாவில் வந்த அன்று…
“ டையாடா இருக்கு..” என்று சொல்லோடு தன் அறைக்கு சென்று விட்டான்.. பின் அலுவலகம்.. அலுவலத்தில் இருக்கும் போது தான் நேத்ரனின் வீட்டு கார் ஓட்டுனர் அழைத்து..
“ மந்ராவுக்கு உடல் நிலை சரியில்லாததை பற்றி சொல்லியது..”
அதன் பின் நடந்த விசயங்கள் அவன் நியாபக அடுக்கில் இருந்தாலுமே, அதை நினைத்து பார்க்க கூட பிடிக்காதவனாக இருந்தான்.
இன்றும் அதே போல் தான் மந்ரா வந்து இருக்கிறாள் என்று தெரிந்துமே,, அவள் பக்கம் அவன் பார்வையை கூட திருப்பவில்லை…
ஆனால் அத்வைத்தும் நீதிமன்றத்திற்க்கு வந்து இருப்பது தன் தந்தை சொன்னதுமே.. அவன் பக்கம் பார்வை தன்னால் சென்றது..
எப்போதும் டிப் டாப்பாக ஒருக்கும் அத்வைத் இன்று ஏனோ தானோ என்று தான் வந்திருந்தான்… காரணம் இரண்டு நாள் முன் தான் தொழிலில் அவனுக்கு கொடுக்க வேண்டியதை…
கொடுக்க வேன்டியது என்றால், லாபத்தில் கிடைத்த பணம் கிடையாது.. அவர்கள் தொழிலில் நஷ்ட்டத்தில்.. முப்பது சதவீத பங்குதாரர் என்ற வகையில் அத்வைத்தும் அந்த நஷ்ட்டத்தை ஏற்க வேண்டும் என்று ஒரு தொகையை குறிப்பிட்டு இருந்தான்..
அத்வைத் இதை முற்றிலும் எதிர் பார்க்கவில்லை.. லாபத்தில் பாதி தான் கொடுப்பான் என்று அத்வைத் நினைக்க.. முதலுக்கே மோசம் தான் உனக்கு என்று ஓரு கணக்கை நேத்ரன் அவன் முன் நீட்டினால்,ஆடி போய் விட்டான்..
அதுவும் அந்த கணக்கு வழக்கை கூட நேத்ரன் கொடுக்கவில்லை.. தன் அலுவலகத்தில் வேலை செய்பவனிடம் தான் கொடுத்து அனுப்பினான்..
அத்வைத அவனிடம்.. “ நான் யார்..? என்று தெரியுமா..? அங்கு இருந்த எனக்கு தெரியாதா..? என்று எகிறியவனின் பேச்சை அந்த வேலை செய்தவன் கூட சட்டை செய்தது போல் தெரியவில்லை…
ஒரு காலத்தில்.. ஒரு காலத்தில் என்ன.. சில மாதங்கள் முன் கூட அந்த அலுவலகத்தில் தான் முதலாளியாக இருந்தவன்..
தனக்கு இந்த மரியாதையா…..? என்று நினைத்த அத்வைத்.. “ நான் யார்..? என்று தெரியுமா..? என்று மீண்டும் அதே கேள்வியை கேட்டான்..
“ எனக்கு அது எல்லாம் தெரியாது… எங்க சார் இதை உங்களிடன் கொடுக்க சொன்னார்.. இதில் உங்களுக்கு உடன் பாடு இல்லை என்றால், சட்டப்படி பார்த்துக்க சொன்னார்..” என்று சொன்ன சொன்னதை சொல்லி விட்டு அந்த ஊழியன் சென்று விட்டான்..
அத்வைத் நேத்ரன் சொன்னது போல் தான் ஒரு வக்கீலையையும் .. ஆடிட்டர் என்று இருவரையும் ஒருங்கே வர வழைத்து பார்த்ததில்..
“ இதை வைத்து நீங்க ஒன்றும் பண்ண முடியாது.. அத்வைத் சார்… இந்த கணக்கை வைத்து பார்த்தால், என்னை பொறுத்த வரை சாட்சிக்காரன் காலில் விழுவதை விட…
சண்டைக்காரன் காலில் விழுந்து விடலாம் என்று தான் நான் சொல்வேன்..” என்று இருவரும் ஒன்று போல் சொல்லி விட்டு சென்று விட்டனர்..
அவர்கள் சொன்னது போல் சண்டைக்காரன் காலில் விழ நேத்ரன் ஆபிசுக்கு போனால், அவன் காலை காட்ட வேண்டுமே…
தான் ஒரு முதலாளியாக உலா வந்த அதே அலுவலகத்தில், தன்னை பார்த்தால் வணக்கம் வைக்கும் வாட்ச் மேன் தன்னை இழுத்து வெளியில் விட்டவனின் கோலம் பின் இப்படி இருக்காது எப்படி இருக்கும்..
அவன் கோலம் எல்லாம் சரி.. இவன் ஏன் இங்கு வந்தான்.. நேத்ரனுக்கு அது தான் யோசனை.. மந்ராவுக்காக வந்தான் என்று நினைக்க அவன் முட்டாள் கிடையாது…
அத்வைத் நீதிமன்றதிற்க்கு வந்ததை விட, தான் ஸாகித்யாவை இங்கு அழைத்து வந்தது தான் இப்போது அவனுக்கு கவலை கொடுத்தது..
ஆம்.. தன் பேபியையும் இன்று அழைத்து வர வேண்டும் என்று அவன் வக்கீல் சொன்னதால், ஸாகியை அழைத்து வந்தான்..
கூடவே ஸாகித்யாவும்.. இப்போது எல்லாம் குழந்தை ஸாகித்யாவிடம் மிகவும் நெருக்கமாக இருக்கிறாள்…
இது நல்லதிற்க்கா..? கெட்டதிற்க்கா..? அவனுக்கு புரியவில்லை.. ஆனால் தன் பேபிக்கு என்று வரும் போது நல்லவிதமாக தான் இருக்கிறது..
இப்போது எல்லாம் பேபி ஸாகி சிரித்த படி குதுகலத்துடன் தான் இருக்கிறாள்… என்ன என்று எப்போதும் ஸாகித்யா ஆண்டியின் புராணம் இல்லாது அவள் பேச்சு நிறைவு பெறாது…
ஸாகித்யாவிடம் தன் பேபி மிகவும் கம்பர்டபுலாக உணர்க்கிறாள்.. அதனால் தான் இந்த சூழலில் குழந்தை சமாளிக்கும் பொருட்டு, தன் தந்தை சொன்ன…
“ ஸாகித்யாவை கூட கூட்டிட்டு போகலாம் நேத்ரா… இது போல காட்சிகள் அந்த குழந்தை மனதில் எந்த வித பாதிப்பு ஏற்படுத்துமோ…
ஸாகித்யா இருந்தால், குழந்தையின் கவனம் முழுவதும் ஸாகித்யாவிடம் தான் இருக்கும்..” என்று அவர் சொன்னது வேறு ஏதோ ஒரு காரணத்திற்க்கு
அது புரியாது இல்லை நேத்ரனுக்கு, ஆனால் இப்போது தன் தந்தை பேச்சில் இருந்த உண்மையில், குழந்தையின் மனம் எந்த விதத்திலும் பாதிக்கப்பட கூடாது என்று நினைத்து தான் தன் குழந்தையை ஸாகித்யாவிடம் கொடுத்து விட்டு சற்று தள்ளி தான் நேத்ரன் அமர்ந்து இருந்தான்…
இரண்டு வழக்கு முடிந்த தருவாயில், நேத்ரன் மந்ராவின் விவாகரத்து வழக்கு வந்தது…
மந்ரா தான் விவாகரத்துக்கு ஒத்துக் கொள்வதாகவும், ஆனால் குழந்தை தன்னிடம் தான் இருக்க வேண்டும் என்று சொல்ல..
நேத்ரனும்.. எனக்கு விவகாரத்தோடு குழந்தையும் வேண்டும் என்று இருவரும் ஒன்று போல் சொல்ல.. இந்த ஒற்றுமை வாழ்க்கையில் இல்லையே என்று தான் அந்த நீதிபதி நினைத்தார்…
நேத்ரன் வழக்கறிஞ்சர் சுற்றி வளைக்காது விவாகரத்துக்கு உண்டான காரணம் தான் குழந்தை மந்ரவிடம் வளர கூடாது என் கடச்சிக்காரரிடம் தான் வளர வேண்டும்.. குழந்தையின் எதிர்காலத்தின் நலன் கருதி…” என்று சொன்னதோடு…
மந்ரா இப்போது கற்பமாக இருப்பதை மருத்துவ சான்றுதழல் வைத்து விட்டு.. கூடவே நேத்ரனின் பாஸ் போர்ட் காப்பி ஒன்றையும் இணைத்தே நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்…
மந்ரா கருவுற்று இருக்கிறாள் என்று தெரிய.. மருத்துவசான்றிதழ் தேவை இல்லாத வகையில் தான் இப்போது அவளின் தோற்றம் இருந்தது..
ஆனால் எத்தனை மாதம்..? என்று கணக்கிட்டு அறிய அந்த மருத்துவ சான்றிதழ் தேவையாதலால்.. அந்த நீதிபதி சரி பார்த்து விவாகரத்துக்கு உண்டான காரணமும், அவருக்கு விளங்கியது..
பெண் குழந்தை தாயிடம் தான் வளர வேண்டும் என்ற சட்டம் இருக்கும் போது, தந்தை ஏன் கேட்கிறார் என்ற காரணமும் அவருக்கு புரிய..
மந்ரா வழக்கறிஞ்சர் பக்கம் பார்வையை திருப்பிய அந்த பெண் நீதிபதி ..
“ நீங்க உங்க கட்சிக்காரரின் சார்ப்பா இதை பற்றி ஏதாவது பேசனுமா..?” என்ற கேள்விக்கு, உடனே எழுந்து நின்றவர்..
“ ஆம்..” என்று சொன்னவர்.. பின் நீதிபதியை பார்த்து..
“ உங்கள் முன் அவர்கள் சமர்ப்பித்த எதுவும் பொய் என்று நான் சொல்லவில்லை.. ஆம் உண்மை தான். அதை என் கட்சி காரர் மறுக்கவில்லை.
அத்னால் தான் என் கட்சிக்காரர்.. விவாகரத்துக்கு உடனே ஒத்துக் கொண்டு விட்டார்..
எங்கள் வாதம் என்ன என்றால், குழந்தை மந்ராவிடம் வளர்வது குழந்தையின் எதிர் காலத்திற்க்கு நல்லது இல்லை என்று சொன்ன காரணமே..
அவரிடம் இருக்கும் போது, குழந்தை எப்படி நேத்ரன் சாரிடம் கொடுப்பது.. அது தான் என் கேள்வி…”
மந்ராவின் வழக்கறிங்கர் பேச்சை கேட்ட நேத்ரனுக்கு புருவ மத்தியில் ஒரு சுழிப்பு உண்டாக பார்த்தவனின் கண், தன்னால் அத்வைத்தின் பக்கம் திரும்பியது..
அவன் பார்வையோ கொக்குக்கு மீன் ஒன்றே குறி என்பது போல்.. ஸாகித்யாவை பார்த்து கொண்டு இருந்த அந்த பார்வையின் அர்த்தம் புரிந்த நொடி நேத்ரனின் கண் தன்னால் அதிர்ச்சியை காட்டியது..
அவன் நினைத்தது போல் தான்.. மந்ராவின் வழக்கறிஞ்சர்…
“ நேத்ரனுக்கு ஸாகித்யா என்ற பெண்ணோடு உறவு இருக்கிறது.. இப்போது கூட தன் குழந்தையை அவளோடு தான் அழைத்து வந்து இருக்கிறார்..
அவளை பார்க்க கூட..” என்று இன்னும் ஏதோ பேச ஆரம்பித்த வக்கீலின் பேச்சை நேத்ரன்..
“கொஞ்சம் மரியாதையா பேசினா நல்லா இருக்கும்..” ஸாகித்யாவை அவள் இவள் என்று சொல்வதை குறிப்பிட்டு கத்தி விட்டான்…
அதற்க்கும் அந்த வழக்கறிஞ்சர் நீதிபதையை பார்த்து…
“ நீங்களே பார்த்திங்க… இது வரை அமைதியின் திருவுருவாக அமர்ந்திருந்த நேத்ரன் சார்.. குழந்தை தனக்கு கிடைக்குமா..? கிடைக்காதா..? என்ற டென்ஷன் கூட இல்லாது ஏதோ நாடகத்தை பார்ப்பது போல் அமர்ந்திருந்தவர்..
நான் மிஸ் ஸாகித்யாவை பேசிய மரியாதை அற்ற.. வார்த்தை.. அதுவும் கெட்ட வார்த்தைகள் எல்லாம் கிடையாது.. ர்.. என்பதற்க்கு பதில் அந்த இடத்தில் ள் போட்டு விட்டேன்.. அவ்வளவு தான் பார்த்திங்க தானே பொங்கி விட்டார்…
இப்போது என் வாதம் என்ன என்றால், இருவரும் விவாகரத்துக்கு ஒத்துக் கொண்டு விட்டார்கள்..
இங்கு இந்த விவாகரத்து வழக்கில், பிரச்சனை குழந்தை யாரிடம் கொடுப்பது.. எப்போதும் தாயிடம் தான் குழந்தையை சேர்ப்பார்கள்…
இந்த வழக்கை பொறுத்த வரை எதிர் தரப்பு வாதன் முன் வைப்பது.. தாயின் நடத்தை… அதே நடத்தை அங்கும் இருக்க.. எப்போதும் பெண் குழந்தையை தாயிடம் தான் வளர வேண்டும் என்ற முறைப்படி என் கட்ச்சிக்காரரிடம் கொடுக்க வேண்டும் என்பது தான் என் வாதம்..” என்று சொல்லி மந்ராவின் வக்கீல் அமர்ந்து விட்டார்..
நேத்ரனின் வக்கீல் இந்த விவாகரத்துக்கும் சரி.. குழந்தை நேத்ரனிடம் வர வேண்டும் என்று தாக்கல் செய்த மனுவுக்கும் சரி.. மிகவும் கஷ்டப்பட்டு எல்லாம் பாயிண்ஸை தேடவில்லை..
காரணம் மந்ராவின் மருத்துவ சான்றிதழ்.. நேத்ரனின் பாஸ் போர்ட்டின் நகல் கொடுத்தால் போதும்.. என்று நினைத்துக் கொண்டு இருந்தவருக்கு இப்படி ஒரு திருப்பத்தை அவர் எதிர் பார்க்கவில்லை…
அதனால் நேத்ரன் பக்கம் பார்வையை திருப்ப அவனே அதிர்ச்சியில் உரைந்து போய் இருந்ததை பார்த்து..
தானே சமாளிக்கும் வகையாக.. “ மந்ராவின் நடத்தை எப்படி பட்டது என்பதற்க்கு நான் சாட்சி கொடுத்து இருக்கிறேன்..
அது போல் என் கட்சிக்காரர் மீது இந்த அபாண்டமான குற்றத்திற்க்கு சாட்சி இருக்கா..?” என்ற கேள்விக்கு.
“ இருக்கு..” என்று சொன்ன எதிர் கட்சி வக்கீல்..
சாட்சியாக அந்த போலீஸ் காரர்களை வர வழைத்தனர்..
அவர் அந்த நேரத்துக்கு அந்த பெண் நேத்ரனோடு சென்றது.. சொல்லி விட்டு சென்றது..
பின் தன் வாதத்தில்.. “ ஒருவருக்கு தன் அலுவலகத்தில் வேலை கொடுக்கலாம்.. ஆனால் வீடுமா கொடுப்பாங்க… “ என்று சொன்னவர் பின் நேத்ரன் அங்கு சென்று வந்தது என்று அனைத்திற்க்கும் சாட்சி சொன்னதோடு விடாது..
“ என்ன ஒன்று என் கட்சிக்காரர் இந்த உறவில் கருவுண்டாகி விட்டது.. அங்கு அதற்க்கு உண்டான பாதுகாப்போடு..” என்று சொன்னவர் இது பேசுவதே அசிங்கம் என்பது போல் அமர்ந்து கொண்டவனின் வாதத்தில், நேத்ரனின் வக்கீல் வாய்தா வேண்டும் என்று கேட்க மட்டுமே வாய் திறக்கும் படி ஆகி விட்டது..
பார்வையாளர்கள் வரிசையில் அமேந்திருந்த நேத்ரனுக்கே இது அதிர்ச்சி என்றால், ஸாகித்யாவின் நிலை…
பாவம் ஒரிடம் பழி ஒரிடம் என்று அவள் கேள்வி பட்டு இருக்கிறாள்.. ஆனால் இப்போது அவன் தன் வாழ்க்கையிலேயே அது உணரும் போது தான்.. அது எத்தனை வலி உள்ளது என்பதை புரிந்து கொள்ள முடிந்தது..
குழந்தை ஸாகியை கையொல் தூக்கி கொண்டு வெளி வந்தவளின் முகத்தை நேத்ரனால் பார்க்க முடியவில்லை..
என்ன செய்தால், இந்த பெண்… நானாவது திருமணம் செய்து அவளை சரியாக கவனிக்கவில்லை.. அது அவனுக்கே புரிந்தது தான்..
ஆனால் அதை தன்னிடம் அவள் வெளிப்படையாக சொல்லி இருக்கலாம்… இல்லை எனக்கு அத்வைத்தை பிடித்து இருந்தால், அந்த காரணம் சொல்லியே தன்னிடம் இருந்து விவாகரத்து வாங்கி இருக்கலாம்…
தானே விலகி இருப்பேன்.. ஏன் இவர்களின் நட்பு மட்டும் தொடர்ந்து இருக்கும்.. ஆனால் இவர்கள் தனக்கு செய்தது பச்சை துரோகம்..
சரி என் பிரச்சனையோடு இப்போது ஸாகித்யாவின் பிரச்சனை தான் அவன் கண் முன் பெரியதாக தோன்றியது…
அத்வைத் ஸாகித்யாவின் பக்கம் செல்வதை பார்த்து நேத்ரனும் அங்கு விரைந்து சென்றான்……
நேத்ரன் அவர்கள் அருகில் செல்லும் போது அத்வைத் ஸாகித்யாவிடம்.. “ இப்போ கூட கெட்டு போகல.. நமக்கு குறித்த நேரத்தில் நம் கல்யாணம் நடக்கும் என்று நீ சொல்.. நான் எல்லாத்தையும் மாற்றி காட்டுகிறேன்..” என்ற வார்த்தையை கேட்டுக் கொண்டே சென்ற நேத்ரன்…
அத்வைத்தின் சட்டையை பிடித்து விட்டான்.. “ சீ உனக்கு வெட்கமா இல்லை.. இப்படி பேச.. உன் கூட வளர்ந்தவ தானே.. எப்படி அவளை உன்னால் அசிங்கப்படுத்த முடியுது..? என்ற கேள்விக்கு பதில் அளிக்காது..
நேத்ரன் பிடித்து இருந்த தன் சட்டையை குனிந்து பார்த்தவன்.. “ உன் பொண்டாட்டி கூட ******* இருந்த போது கூட நீ என் சட்டையை பிடிக்கல.. நான் என்னவோ பார்க்க கூட தகாதவன் என்பது போல் இருந்துட்ட…
ஆனால் ஸாகித்யாவை சொன்னா.. நீ..” என்று சொல்லி இழுத்து நிறுத்துய அத்வைத்…
“ அப்போ உண்மையிலேயே.. இருக்கா..?” என்று கேட்டவனை நேத்ரன் அடிக்க கை ஓங்கி கொண்டு போனவனை தடுத்து நிறுத்திய ஸாகித்யா..
அங்கு நின்று கொண்டு இங்கேயே வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தவர்களின் பக்கம் பார்வையை செலுத்தி..
“ ப்ளீஸ் ..” என்பது போல் இறஞ்சியவளை இன்னும் அசிங்கப்படுத்த வேன்டாம் என்று நினைத்து ஸாகித்யாவோடு சென்றவனின் பின் அத்வைத் சொன்ன…
“ நானே மந்ராவிடம் போகல.. அவளே வந்தாள்.. அதை நான் ஏற்றுக் கொண்டேன்.. ஆனால் நீ என்னிடம் இருந்து எல்லாம் பிடிங்கிட்ட .. தொழில்… ஸாகித்யா…
உனக்கு உன் குழந்தை கிடைக்காது நேத்ரா..” என்று கத்தி விட்டு சென்றவனின் பேச்சே நேத்ரன், ஸாகித்யாவுக்கு திரும்ப திரும்ப எதிர் ஒலித்து கொண்டு இருந்தது…
“